Thottal Thodarum

Jun 22, 2013

Raanjhanna

சில படங்களை ட்ரைலர் பார்த்த மாத்திரல் பிடிக்க ஆரம்பித்துவிடும். சிலதை நாலு பேர் சொல்லி அப்புறம் பார்க்க விரும்பம் ஏற்படும். இந்தப் படம் முதல் வகை. அதற்கு காரணம் முதல் முறையாய் தனுஷ் ஹிந்தியில். அடுத்தது ஏற்கனவே ஹிட்டடித்த தனு வெட்ஸ் மனுவின் இயக்குனர் இயக்கியது. மூன்றாவது காரணம் ஏ.ஆர்.ரஹ்மான்.


தமிழ் நாட்டிலிருந்து இடம் பெயர்ந்த பிராமண குடும்பம் குந்தனுடயது. குந்தனுக்கு ஜோயாவுக்கு பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துவிடுகிறது. அதுவும் மிகச் சிறிய வயதில். அந்த வயதில் வந்த க்ரஷ், பருவ வயதிலும் குந்தனுக்கு தொடர்கிறது. குந்தனின் கன்ஸிஸ்டென்சியினால் ஜோயா ஈர்க்கப்பட, ஒரு நெருக்கத் தருணத்தில் அவன் பிராமணன் என்று தெரிய வருகிறது. காதல் புட்டுக் கொள்ள, மீண்டுமொரு பகீரத பிரயத்தனத்தினால் இருவரும் நெருக்கமாக, ஜோயாவின் வீட்டில் விஷயம் அடுத்த நாளே தெரிய வருகிறது. முஸ்லிம் பெண்ணான அவளுக்கு இந்து பிராமண பையனுக்குமான உறவை பிடிக்காத அவளின் அப்பா, அவளை டெல்லிக்கு படிக்க அனுப்பி விடுகிறார். எட்டு வருடங்களுக்கு பானாரஸ் வரும் ஜோயாவிற்கு இவனைப் பற்றிய நினைவேயில்லை. ஆனால் குந்தனோ அவளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான். பின்பு என்ன கதை என்று ஏதாவது ஒரு மல்டிப்ளெக்ஸ் திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.
வாரணாசியில் சிறுவனாய் குந்தன் அறிமுகமாகிறான். குந்தனாக தனுஷ். சிவன் வேஷம் போட்டுக் கொண்டு, தோழர்களுடன் பணம் வசூலித்துக் கொண்டிருக்கும் போது, ஜோயாவின் அப்பாவிடம் பணம் வாங்கும் போது பார்க்கிறான். அப்போது அவனுக்கு வயது சுமார் 6 அல்லது ஏழு இருக்கும். அந்த வயதில் ஜோயாவை பார்த்த மாத்திரத்தில் பிடித்ததற்கான காரணம் என்ன என்று விளக்கம் தேடாவிட்டாலும், அதன் பிறகு அவளுக்கும் அவனுக்குமான நெருக்கம் அவள் ஒன்பதாவது படிக்கும் போது வரை தொடர்கிறது. அவளை தன் இதயத்தில் வைத்து பூஜிக்கிறான். வாரணாசியும், குந்தனின் வாழ்க்கை நிலையும், கூடவே வளர்ந்து அவனது காதலும், கவிதைக்கு பக்கத்தில். அதிலும், ஜோயாவிடம் ப்ரபோஸ் செய்தவுடன், ஜோயா அவனை அடிக்க, தொடர்ந்து ஒவ்வொரு முறையும் அவள் அடிக்க, அதற்காக வருத்தப்படாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் க்யூட்.  எட்டு வருடம் கழித்து அவளை பார்க்க, ஸ்டேஷனுக்கு பொக்கேவுடன் போகும் காட்சி, பின்பு அவள் அவனை கண்டு கொள்ளாமல் அவளின் வீட்டிற்கே  போய் அவளை பார்குமிடத்தில் அவர் முகத்தில் தெரியும் ஆர்வம். அப்படியும் கண்டு கொள்ளாமல் வீட்டின் வெளியே அவளுக்கு சைகையாலேயே உணர்த்தும் விதம் கொஞ்சம் கமல்தனமாக இருந்தாலும் நச். இப்படி பல காட்சிகளில் இவரது நடிப்பையும், சின்னச் சின்ன ரியாக்‌ஷன், பாடிலேங்குவேஜில் பல விஷயங்களை பேசாமலேயே புரிய வைக்க செய்திருக்கும் முயற்சி என்று குந்தனை நம்முள்   படர விட்டு விடுகிறார் தனுஷ். முக்கியமாய் க்ளைமாக்ஸின் போது சோனம் கபூர் பேசும் காட்சியில் அவர் காட்டும் ரியாக்‌ஷன் க்ளாஸ். தனுஷ் மிக சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்.

சோனம் கபூர் மிக அழகாய் இருக்கிறார். அடலசண்ட் வயதில் அவர் உடல் மொழியில், முகத்தில் தெரியும் குறுகுறுப்பும், தனுஷை தனியாய் வரச் சொல்லிவிட்டு, அவர் கார்டு கொடுத்ததும், சிரித்தபடி, நெருங்க, தனுஷ் கவிதையொன்றை சொல்லி, பாதி மறக்க, அதை முடித்துவிட்டு, நெகிழ்ந்து நிற்கும் காட்சியில் அந்த வயதின் ஆர்வத்தை மிக அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார். அதன் பின் வரும் காட்சிகளில் பெரியதாய் இம்ப்ரெஸ் செய்யாவிட்டாலும் போகப் போக, ஒரு பொலிட்டிக்கல் லீடராய் மாறும் போதும் அவரது க்ரே ஷேட்டை மிக அநாயசமாய் வெளிப்படுத்தி, தனுஷை உபயோகப்படுத்துமிடங்களில் மெருகேறுகிறார்.  சிறு வயது முதல் தனுஷுடனேயே வளைய வரும் அவரது தோழி, தோழன், ஆகியோரின் நடிப்பு க்ளாஸ். கூட சுற்றும் செவ்வாழையாய் வரும் நண்பர் கிடைத்த இடத்தில் எல்லாம் இம்ப்ரெஸ் பண்ணுகிறார். அந்த தோழி பெண் எப்படியெல்லாம் தனுஷை கவராலாம் என்று முயற்சிப்பதும், பின்னாளில் கொஞ்சம் கொஞமாய் அவன் சோனமிடம் தான் போகப் போகிறான் என்று புரிந்தும் விட்டுக் கொடுக்க முடியாமல் பரிதவிக்குமிடத்தில் அவர் கண்களில் தெரியும் சந்தோஷமும் துக்கமும் வாவ்.. கவனிக்கப்பட வேண்டியவர். சோனமின் காதலராய் வரும் அபய்டியோலின் அறிமுகம் இருந்த அளவிற்கு பின்னால் ஏதுமில்லாததால் மனதில் நிற்க வில்லை. ஒரு திருப்பத்திற்காக மட்டுமே பயன் பட்டிருக்கிறார்.

நம்மூர் நட்ராஜ் சுப்ரமணியம், மற்றும் விஷாலின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். அதுவும்  காசியையும், அதன் குறுகிய சந்துக்களையும், அந்த ஹோலி கலர்களையும் வாவ்.. அழகு.. என்றால் அழகும் கண்ணிலேயே நிற்கிறது ப்ரேம்கள். இசை ஏ.ஆர். ரஹ்மான். ஹோலி பாடலும், சில இடங்களில் வரும் பின்னணியிசையைத் தவிர பெரிதாய் இம்ப்ரஸ் செய்யவில்லை.  வாட் ஹேப்பண்ட் ரஹ்மான். எடிட்டிங் , மற்றும் டெக்னிக்கல் விஷயங்கள் குவாலிட்டி. நிறைய இடங்களில் வசனங்கள் தான் ராஜாவாக இருக்கிறது. மிக இயல்பான யதார்த்தமான வசனங்கள். அதே இரண்டாம் பாகத்தில் தனுஷ் சோனமை பார்க்க சுவர் ஏற, அதை பார்த்த கட்சிகாரர்கள் யார் நீ என்று கேட்க, தனுஷ் தான் ஒரு திருடன் என்று சொல்கிறார். அவரை போலீஸிடம் பிடித்துக் கொடுக்காமல் கட்சிக்காரர்கள் உட்கார்ந்து கொண்டு நாட்டில் ஏன் இப்படி திருடி அதிகமாகிறது என்று தனுஷுக்கு சமோசாவும் டீயும் கொடுத்துவிட்டு அரசியல் பேசுவது செம. இப்படி படம் நெடுக வசனங்களால் திடுக் திடுகென வெடிக்க வைக்கிறார்கள்.

சுவாரஸ்யமான பல விஷயங்கள் படத்தில் இருந்தாலும், மொத்த திரைகக்தையாய் முதல் பாகமும், இரண்டாம் பாகமும் கொஞ்சம் கூட இணையில்லாமல் ஓடுவதால் இது காதல் படமா? அல்லது அரசியல் படமா? என்ற குழப்பத்தை கதை, திரைக்கதையாசிரியர் ஹிமன்ஸு ஷர்மா ஏற்படுத்திவிட்டார். இயக்கம் ஆனந்த் எல் ராய். பனாரஸ் எபிசோடுகளில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாமே குட்டிக் குட்டி ஹைக்கூ.. இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள் எல்லாம் நெடும் தார்சாலை நடை. எங்கே போகிறது கதை என்று தேட வேண்டியிருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் அரசியல் காட்சிகளில் தனுஷ் தன் முயற்சியால் செய்து முடிக்கும் காட்சிகள் எல்லாம் செம காமெடி. நம்ப முடியாதவை. தனுஷை எட்டு வருஷம் கழித்து பார்த்து அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்பதை கூட நம்பிவிடலாம். ஆனால் தன் காதலனாய் வரும் அபய்டியோல் ஒரு முஸ்லிம் என்று பொய் சொல்லி கல்யாணம் வரை வந்துவிட்ட நிலையில் குடும்பத்தில் யாரும் அவரின் பின்புலம் பற்றி விசாரிக்க மாட்டார்களா? கதை முழுவதும் ஏகப்பட்ட லாஜிக் கேள்விகள். பாபி டியோலின் வீட்டிலிருந்து வெளியே வந்து வாந்தி எடுத்து அழும் தனுஷ் அப்புறம் சோனம் கபூரை பார்க்கவேயில்லையே ஏன்?  குந்தன் ஜோயாவுக்குமிடையே ஆன உறவில் குந்தனின் ஒரு தலைக் காதல் தான் இருக்கிறதே தவிர, ஜோயாவுக்கு அவனிடம் காதலே இல்லை. அதுவும்க ஜோயா குந்தனுக்கு தன் மேல் இருக்கும் பிரேமத்தை பயன்படுத்திக் கொள்கிறாளே தவிர, வேறொன்றும் செய்யவில்லை என்று குந்தனுக்கு தெரிந்தும் அவள் பின்னால் அலையும் போது குந்தன் எப்படி அவளின் பின்னால் அலைவான்?   இப்படி கேள்வியாய் நிறைய விஷயங்கள் லாஜிக் ஓட்டைகளோடு கேட்டுக் கொண்டே போகலாம். ஆனால் இப்படி ஏகப்பட்ட கேள்விகளும், ஒட்டாத இரண்டாம் பாதியையும்  மீறி மனதில் அலையாய் ஓடும் பனாரஸ் காட்சிகளுக்காகவும், தனுஷின் சிறந்த நடிப்பிற்காகவும், சோனமின் க்யூட்னெஸுக்காகவும் பார்க்கலாம் என்று நினைத்தால் ஹேவ் ஏ ட்ரை
கேபிள் சங்கர்


Post a Comment

9 comments:

gayathri said...

Who is that Bobby deol ? Its Abhay Deol.

குரங்குபெடல் said...

"பின்பு என்ன கதை என்று ஏதாவது ஒரு மல்டிப்ளெக்ஸ் திரையில் பார்த்துக் கொள்ளுங்கள். "


"தனுஷின் சிறந்த நடிப்பிற்காகவும், சோனமின் க்யூட்னெஸுக்காகவும் பார்க்கலாம் என்று நினைத்தால் ஹேவ் ஏ ட்ரை "

Suresh Ram said...

Story line similar to Revelotion 2020 by chetan bhagat

k.rahman said...

//இசை ஏ.ஆர். ரஹ்மான். ஹோலி பாடலும், சில இடங்களில் வரும் பின்னணியிசையைத் தவிர பெரிதாய் இம்ப்ரஸ் செய்யவில்லை//

??? perhaps you are the only one to say this.

Anonymous said...

பார்த்து விட்டால் போச்சு. முஸ்லிம் பெண்ணை இந்துப் பையன் டாவடிப்பதை மதக் கட்சிகள் களத்தில் இறங்கி கவிழ்க்கும் முன் பார்த்திட வேண்டுமய்யா !

Unknown said...

ungalukku isai rasanaye ilaa

arul said...

thanks for sharing

மர்மயோகி said...

படம் பார்க்கவில்லை....அனால் உங்களது விமர்சனத்தை பார்க்கையில் ஏக் துஜே கே லிய மற்றும் டார்லிங் டார்லிங் டார்லிங் போன்ற படங்களை காப்பி அடித்து உட்டாலக்கடி செய்ததது போல இருக்கிறது..அதற்க்க இவ்வளவு பாராட்டு?

Anonymous said...

அம்பிகாபதி இப்போதுதான் பார்த்தேன்... படம் பார்த்தவர்களின் மனநிலை இரண்டாம் பாதியில் பெரும்பாலும் இப்படித்தானிருந்தது. அருமையான விமர்சனம்.. நன்றி...