Thottal Thodarum

Aug 17, 2013

கேட்டால் கிடைக்கும் - சரவண பவனும் அதிக விலை எம்.ஆர்.பியும்.

விலைவாசி உயர்வு ஆகும் போது விலையேற்றும் உணவகங்கள் விலை இறங்கியதும் விலை குறைப்பதில்லை. ஆனால் அந்த அதிசயம் இந்த கலியுகத்தில் நடந்தேறிவிட்டது. அதுவும் சரவணபவனில். ஒரு மாதம் முன்பு காபி கொட்டை விலை இறங்கிவிட்டது என்று காபியில் விலை குறைக்க ஆரம்பித்தார்கள். இப்போது பார்த்தால் 40 ரூபாய் விற்ற மசால் பால் முப்பது ரூபாய்க்கு தருகிறார்கள். அறுபது ரூபாய்க்கு டிபன் பொக்கே.. என சரவண பவன் பாஸ்ட் புட் எல்லாவற்றிலும் எங்கு பார்த்தாலும் அதிரடி விலைக் குறைப்பு என பிரிண்ட் செய்து ஒட்டி வைத்திருக்கிறார்கள். இதில் அதிரடியாய் ஆடி விருந்தென்று 95 ரூபாய்க்கு போன மாசம் சாப்பாடு வேறு போட்டார்கள்.  


காபி கொட்டை விலை இறங்கிவிட்டது அதனால் விலை குறைத்தார்கள் ஓகே.. பால் விலை ஏறிக் கொண்டுதானிருக்கிறது. மசாலா பாலின் விலை எப்படி குறையும்?. இப்படி அவர்கள் விலை குறைத்திருக்கும் அயிட்டங்களை கவனித்தால் இன்றளவில் விலை ஏறிக் கொண்டிருக்கும் உணவு வகைகள் தான். இந்த விலை குறைப்புக்கு காரணம் அக்கம் பக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட நல்ல தரமான உணவகங்கள். இவர்களின் வியாபார இழப்புதான் என்று தெரிகிறது.  விலை குறைத்தவர்கள் மசாலா பாலின் அளவை குறைத்துவிட்டது தனிக் கதை. என்ன தான் நல்ல தரமான குவாலிட்டியில் சுவைக்கு குறைவில்லாமல்  இருந்தாலும், அரைக் கரண்டி உப்புமாவை மூக்குக்கும் வாய்க்கும் ஈஷிக் கொள்ளக்கூட பத்தாமல் ஐம்பது ரூபாய்க்கு விற்பார்கள் என்ற குற்றசாட்டோடு வலைய வருபவர்களுக்கு இந்த அளவு குறைவு அவல். ஆனால் ஒரு விஷயம் விலை குறைத்ததால் அள்வு குறைந்தாலும் சுவையிலோ, சர்வீஸிலோ இவர்களிடம் இன்றும் குறையில்லை என்பதை மறுக்க மாட்டேன். 

சரி.. இப்படி எல்லாவற்றிலும் விலை குறைவு என்று ஆரம்பித்தவர்கள், பாட்டில்டு ட்ரிங்குகளுக்கு எம்.ஆர்.பியை விட அதிகமாய் 2 ரூபாய் போட்டு பில் போட ஆரம்பித்திருக்கிறார்கள். சூப்பர்வைசரை கூப்பிட்டு பாட்டில் ட்ரிங்குகளை எம்.ஆர்.பியை விட அதிகம் விற்க கூடாது என்று தெரியாதா? என்று கேட்டதற்கு கூலிங் சார்ஜ் சார். என்றார். அதை பில்லிலும் போட்டுத் தருகிறார்கள்.  பாட்டில் ட்ரிங்குகளை சர்வ் சில்ட் என்று தான் போட்டிருப்பார்கள். நீங்கள் கூலாகத்தான் தர வேண்டும். அதற்காகத்தான் உங்களூக்கு பெப்ஸி காரர்கள் ப்ரிட்ஜ் தருகிறார்கள். உங்களூக்கான லாபத்தில் உங்களது கூலிங்குக்கான மின் கட்டணத்தையும் சேர்த்துத்தான் இருக்கிறது. பின்பு எப்படி நீங்கள் அதிக விலைக்கு விற்க முடியும்? அப்படி விற்பது சட்டப்படி குற்றம் என்று உங்களூக்கு தெரியாதா? என்று தொடர்ந்து கேட்ட கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு மாசமாய் எக்ஸ்ட்ரா போடச் சொல்லி சொல்லியிருக்காங்க சார்..  நீங்க வேணா கம்ப்ளெயிண்ட் பண்ணீக்கங்க.. இல்லாட்டி வாங்காதீங்க என்று கூலாக சொல்லிவிட்டு போய்விட்டார். இத்தனைக்கும் நான் ரெகுலராய் இரவு நேரங்களில் அங்கு சாப்பிடும் கஸ்டமர் என்று தெரியும் அவருக்கு. நான் வேண்டாமென்று வந்துவிட்டேன். விலைகுறைப்பு என்று அதிரடியாய் ஆரம்பித்து இத்தனை வருடங்களாய் சரியான எம்.ஆர்.பியில் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள். திருட்டுத்தனம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் வெளிப்படையாய்.. இன்னும் எப்படி எல்லாம் ஆரம்பிப்பார்களோ..? 
 கேபிள் சங்கர்

Post a Comment

13 comments:

Unknown said...

எம் ஆர் பி விலையைவிட அதிக விலைக்கு விற்கக்கூடாதுஅப்படி விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் அப்படி விற்பவர்கள் எண்ணிக்கை குறையும். ஆனால் அப்படி நடவடிக்கை எடுக்காததால் இது தொடர்கிறது. மற்றவர்களும் இப்படி செய்யத் துவங்கி விடுகிறார்கள். அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

a said...

கூலிங் கட்டிங் இப்போ அதிகமான கடைகளில்

Unknown said...

பொறுமையாக பதில் சொன்ன supervisor வாழ்க ! இதே வேற ஊரா
இருந்தா உங்களுக்கு கெடைக்குர பதிலே வேற மாதிரி இருக்கும் !!!

Unknown said...

Who will pay for the electricity charges for cooling? I think they have a logic behind charging extra for cooled drinks.

'பரிவை' சே.குமார் said...

பரவாயில்லை...

சி.வேல் said...

hotel matrum restaurant sale panra food item and cool drinks ponravaikal MRP Limit varatham , sattam , enna seyya ,

cable ji , onnum seyyamudiyathu ,

Guruprasad said...

One interesting thing about above MRP is that the product manufacturer is conspicuously absent and doesnt seem to care.

சுரேகா said...

பின்னூட்டங்களில் சிலர் நுகர்வோர் உரிமை என்னவென்றே தெரியாமல் பேசியிருக்கிறார்கள்.

கடையில் கூலிங்குக்கு தனியாக காசு கொடுக்கவேண்டும் என்று ஆரம்பித்தால்.. பிறகு ஏன் அதை அவர்கள் வியாபாரம் என்று சொல்லவேண்டும்..?

கடை வாடகைக்கு ஒரு ரூபாய்!
வேலைக்கு ஆள் போட்டதற்கு ஒரு ரூபாய்!
போன் செய்த வகையில் 50 பைசா!
கடையை சுத்தமாக வைத்துக்கொள்ள 25 பைசா!
கடை ஓனர் கடையைப்பார்த்துக்கொள்ள வாங்கும் சம்பளத்துக்கு 1 ரூபாய் !

என்று வாங்க ஆரம்பித்தாலும் சும்மா இருப்பார்களா?

இங்குதான் நம் இயலாமையும், கையாலாகாத்தனமும் வெளியாகிறது.

கூலிங் செய்வதென்பது வியாபாரச் செலவின் ஒரு பகுதி! இதற்கு நுகர்வோரிடம் பணம் வாங்குவது தவறென்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.. ஆனால் நம்மிடம் இருக்கும் அறியாமையையும் , அச்சத்தையும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்..!!

christo said...

Very true.

christo said...

Tasmac la kuda ithey prechanai than cooling'nu solli oru beer ku 10rs extra vanguranga. Government kadailaye ippadi'na ivungalukku sollava venum.

mani sundaram said...

உங்களை போன்ற ஆட்களால் தான் இந்த சரவணபவன் போன்ற ஹோட்டல்கள் விலையை கண்டபடி ஏத்தினார்கள், கொஞ்சூண்டு பொங்கல குடுத்து 54 ரூவா ஆட்டய போட்டார்கள். இவர்கள் இப்போது விளஎதவில்லை எப்பொழுதோ எதிவிட்டர்கள். சம கால கமர்சியல் இல்லாத பல ஹோடேல்களை மூட வைத்தனர், நல்ல சாப்பாடு சரியான விலைக்கு கொடுதுகொண்டிருந்த மெஸ் களையும் காசுபாக்கும் கருவியாக மாற்றினார்கள். இன்று சென்னையில் எங்கு தேடினாலும் சரியான விலை சாப்பாடு கிடைக்கவே கிடைக்காது... அந்த புண்ணியம் எல்லாமே இந்த சரவணபவனிளிருந்துதான் ஆரம்பித்தது...

Entry350 said...

நான் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தியவன் என்ற முறையில் சொல்கிறேன். PEPSI, COKE போன்ற கம்பெனிகாரர்கள் அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை. இந்த ப்ரோடுக்ட்சக்கு அவர்கள் குடுக்கும் லாபம் 10% முதல் 12% மட்டுமே. 9 ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்கணும். எந்த விதத்திலும் work out ஆகாது. நான் விற்பதையே நிறுத்தி விட்டேன். அவர்கள் நம்மை இன்-டைரக்ட் ஆகா above MRP விற்க்க சொல்கிறார்கள். As per consumer laws who is selling it above MRP is the culprit. அவர்கள் Sales Man சிம்பிள் ஆக 10 ருபாய் க்கு பதிலாக 12 ரூபாய்க்கு வித்து கொள்ளுங்கள் என்று கூறுகிறான்.

I made it clear to them, by doing so what you are saying, your company is very safe. But we traders are in great trouble. So either increase MRP and give us decent % of margin or get lost. If every shop follow this and ask them to take back their fridges, they will become alright.

So traders stop selling these products until they give you a proper solution for this

sankar vijayakumar said...

if somebody charges more than than MRP we can complaint to 044-24321438.office at DMS/teynampet.