Thottal Thodarum

Dec 15, 2014

கொத்து பரோட்டா - 15/12/14

ஆவணப்படம்
சினிமா வியாபாரம் புத்தகத்தை அடிப்படையாய் வைத்து எடுக்கவிருக்கும் ஆவணப் பட வேலைகளை ஆரம்பித்துவிட்டோம். இதைக் குறித்து நிறைய வி.ஐ.பிக்களிடம் பேசிய போது மனம் திறந்து வரவேற்று, உடனடியாய் எனக்கு பேட்டியெடுக்க அனுமதியும் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. சினிமா வியாபாரம் ஆவணப்படமாய் சிறப்பாய் வெளிவருமென்ற நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@கால் டாக்சி
என்ன தான் பாரதியும், பாஸ்ட் ட்ராக்கும் சென்னையின் கால்டாக்ஸி வரலாற்றில் முதன்மையாய் இருந்தாலும் இன்றைய வைட் மார்கெட் உலகில், கார்பரேட் நிறுவனங்கள் எல்லாம் இறங்கியடிக்க, பயனியர்கள் எல்லாம் விழி பிதுங்கிப் போயிருக்கிறார்கள்.  பத்து ரூபாய்க்கெல்லாம் கால்டாக்ஸி வர ஆரம்பிக்க, 18 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் என்ன செய்வது என்று மீட்டருக்கு மேலே கேட்ட ஆட்டோக்காரர்கள் போல முழித்துக் கொண்டிருக்க, ஒரு பக்கம் ஆட்டோக்காரர்கள் ஏற்கனவே மீட்டர் போட்டு, அதில் காட்டும் ரேட்டை வாங்கிக் கொண்டிருப்பவர்களை, ஜிபிஎஸ் போட்டு, மீட்டர் போட்டு காசு வாங்க அரசு வழி வகுக்க வேண்டுமென்று கேட்பது காமெடியென்றால், இன்னொரு பக்கம் பழைய கால்டாக்சி காரர்கள், அரசு தலையிட்டு, மினிமம் ஃபேர் 4கி/மீ 100 ஆக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்த்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, அரசு இதில் தலையிடக்கூடாது. எவ்வளவு தூரம் போட்டியிருக்கிறதோ அவ்வள்வு நன்மை மக்களுக்குத்தானே தவிர, மோனோபாலி, மிக அதிகவிலை, மக்களுக்கான பாதுகாப்பு போன்ற விஷயங்களைத் தவிர உன் வியாவாரத்தை நீ பார்த்துக்கோ மனப்பான்மைதான் மக்களுக்கு நல்லது.
@@@@@@@@@@@@@@@@@@@@
ரொம்ப நாள் கழித்து நண்பர். உதவி இயக்குனர் கென்னடியின் திருமண வரவேற்பின்  மெல்லிசை குழுவில் பாட்டு பாடினேன். வழக்கப்படி ராஜாவின் பாடல் தான். “மன்றம் வந்த தென்றலுக்கு” பாடல். வந்திருந்த விருதினர்கள் அனைவரும் கைதட்டி பாராட்டினார்கள். பரவாயில்லை இன்னும் டச் விட்டு போகலை என்று நினைத்துக் கொண்டேன். நல்ல வேளை நான் பாடி நண்பனின் விழா இடக்கு முடக்காகவில்லை என்பதே பெரிய சந்தோஷம். நண்பர் அருமையான படிப்பாளி, திறமையானவர். அவரின் இல்வாழ்க்கை சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.  என்ஜாய் நண்பா
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கிட்டத்தட்ட 220 படங்கள் வெளியாகியிருக்கிறது நேரடி தமிழ் படங்கள் மட்டுமே. டப்பிங் படங்கள், ஆங்கில, இந்தி, தெலுங்கு படங்களின் லிஸ்ட் தனி. இதில் க்ளைமேக்ஸாய் கிறிஸ்துமஸுக்கு மட்டும் நான்கு படங்கள் போட்டியிட்டிருக்க, பொங்கலுக்கு இப்பவே 5 படங்கள் லிஸ்டில். என்ன நடக்கப் போவுதோ..?
@@@@@@@@@@@@@@@@@@@@
புரிதல் இல்லாத கோபம் எப்படி வன்மம் ஆகிறது என்பதை பார்த்தால் அப்படி வன்மம் கொள்கிறவர்களைப் பார்த்து வருத்தம்தான் பட வேண்டியிருக்கிறது. எவ்வளவு அனுபவமிருந்து என்ன? அப்படியென்றால் கோபமே படக்கூடாதா? என்று கேட்டீர்களானால் அதுவும் தவறு. கோபப்படுவதை கொஞ்சம் நிறுத்தி நிதானித்து,  எதையும் கொஞ்சம் தூர இருந்து பொறுமையாய் அவதானித்து எடுக்கும் முடிவுகள் என்றைக்கும் நம்மை மேலும் ஸ்திரமாய் நிற்க உதவும் #நான் உணர்ந்தது
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சினிமா வியாபாரம்2
புது வருடம் பிறக்க இருக்கிறது. புத்தக கண்காட்சி வேறு ஆரம்பமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா அழைப்புகள் வர ஆரம்பித்துவிட்டது.  எனவே என் பங்கிற்கு உங்களை விரைவில் அழைக்கவிருக்கிறேன் ஒரு புதிய புத்தகத்தோடு. சினிமா வியாபாரம் - பார்ட் 2. மற்ற விபரங்கள் விரைவில்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தொட்டால் தொடரும்
வார இறுதி முழுவதும் தொட்டால் தொடரும் தயாரிப்பாளர் துவார்.ஜி.சந்திரசேகருடன் கழிந்தது. தொட்டால்தொடரும் பட வெளியீட்டிற்கான ப்ளானிங் குறித்தும், அதற்கான பட்ஜெட்டைப் பற்றி பேசி முடிவெடுத்தாயிற்று. ஏற்கனவே நான் சொன்னபடி பெரும் படங்களுக்கு நடுவில் திரையரங்குகளை எடுப்பது என்பது மிக கஷ்டமான காரியமாகும். அதற்கேற்றார்ப் போல தேதி பார்க்கப்பட்டு ஜனவரியில் வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதுதான் லேட்டஸ்ட் அப்டேட்
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
Though some resembles Avva enna enna from V.A. "danga Maari" rocks.
விரைவில் சைதை ராஜ், ஜாபர்கான்பேட்டை விஜயா மல்டிப்ளெக்ஸ் ஆகப்போகிற்தாம். வெல்கம்
வயசானவங்களை கொடுமை படுத்தினா அதுக்கு என்ன பேரு?
Mmmmmm avvvvv
நமக்கு கிடைக்காத பொண்ணுக்கு யார் மாப்ளயா வந்தாலும், அவன் குரங்கு மூஞ்சிதான். அவதானிப்பூஊஊஊஊ
@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Whats 72?
69 with three people watching. 
கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

'பரிவை' சே.குமார் said...

கொத்துப் புரோட்டா கலக்கல்.
பாடகராய் பாடியது சந்தோஷம்...
தொட்டால் தொடரும் எதிர்பார்ப்பில்.. அருமை அண்ணா...