Thottal Thodarum

Nov 23, 2008

VINAYAKUDU - REVIEW


ரொம்ப நாளாகிவிட்டது இவ்வளவு இயல்பான ஒரு காதல் கதை பார்த்து. ஒரு குண்டான இளைஞனுக்கும், ஒரு இளம் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதலை பற்றி தான் படம்.

கார்திக் ஹைதராபாத்துக்கு ஹைடெக் என்னும் விளம்பர நிறுவனத்தில் சேர வருகிறான். அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் கல்பனாவை பார்த்ததுமே விரும்ப ஆரம்பிக்கிறான். இயல்பாகவே ரொம்பவும் சாப்ட் ஸ்போகன் பேர்வழி கார்த்திக். கல்பனாவோ..மிகவும் கோபக்காரி, குண்டான கார்திக்கை பார்த்த முதலே அவளுக்கு பிடிக்கவில்லை. கல்பனாவின் குடும்பம் தங்களுடய தம்பியின் வீட்டு விஷேசத்துக்கு வெளிநாடு செல்ல, கல்பனா தன் தோழியுடன் அவளுடய வீட்டில் தங்குகிறாள்.. கல்பனா,கார்திக்கை முகத்திலடித்தார் போல் எவ்வளவுதான் பேசினாலும், அவன் அதை பற்றி கவலை படுவதில்லை. கல்பனாவின் பெற்றோர் ஊருக்கு போவதற்கு முன் அவளுக்காக ஓரு பையனை பார்த்து, அவ்னுடன் பேசி பார்த்து பிடித்திருந்தால் கல்யாணம் செய்வதாய் ஏற்பாடு செய்துவிட்டு போயிருக்க, கல்பனாவுக்கும், அவளுடய வருங்கால கணவன் ராஜிவுக்கு இடையே காமனான விஷயங்கள் நிறைய இருக்க, கார்திக் தன்னுடய காதலை சொல்ல நினைக்கிறான்.

இதற்கிடையில் கார்திக்கின் நண்பன் அல்டாபுக்கும், கல்பனாவின் தோழி சாண்டிக்கு காதல். அதே சமயத்தில் கல்பனாவுக்கும், ராஜீவுக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிகிறார்கள். ஒரு நாள் அல்டாப் சாண்டியை முத்தமிட்டுவிட அதனால் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனையை சால்வ் செய்ய போகும் கார்திக்கும், கல்பனாவுக்கும் சண்டை வந்து, கார்திக் அவளை பிரிகிறான். அவர்கள் எப்படி ஓன்று சேர்கிறார்கள் என்பதை ஆழகாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சாய் கிரண் அடவி.

கார்திக்காக நடிக்கும் கிருஷ்ணடுவும், கல்பனாவாக நடிக்கும் சோனியாவும் ஏற்கனவே ஹாப்பி டேஸ் படத்தில் ஓன்றாய் நடித்திருந்தார்கள். அவர்கள் இருவரும் மெயின் காரெக்டராய் நடித்திருக்கும் படம் இது.

படம் முழுவதும் சோனியாவை பார்த்து கொண்டேயிருக்கலாம் போலிருக்கு. i’ve never come across a dusky beauty like her in recent time. சூஸி சூஸி சச்சு போத்துன்னானு பாபு... அவருடய பாடிலேங்குவேஜும், அந்த பார்வைகளும், சிம்பிளி சூப்பர்ப். அவருக்காகவே மீண்டும் ஓரு முறை பார்க்க வேண்டும்.

கிருஷ்ணுடுக்கு லட்டு மாதிரி கேரக்டர்.. மிக அழகாய் உணர்ந்து நடித்திருக்கிறார். தன் காதலி தன்னையும், தன் தந்தையையும், குண்டர்கள் என்று கிண்டல் பண்ணியதை நினைத்து, தன் அக்காவிடம் சொல்லி அழும் காட்சியில் கொஞ்சம் டிராமா முயற்சி செய்திருக்கிறார். கல்பனாவை பார்த்தும் மொஹலே ஆசம் பாடல் ஞாபகம் வருவதும், மீண்டும் ஓரு முறை வீட்டில் தனியாய் இருவரும் டிவி பார்க்கும் காட்சியில் அந்த பாடல் டீவியில் வந்ததும், கார்திக் டென்ஷனாவதை பார்த்து கல்பனா உள்ளுக்குள் சிரிப்பதும் அருமை.

ஹாப்பிடேஸ் இயக்குனர் சேகர் கம்முலா வின் அஸிஸ்டெண்ட் இயக்கியிருக்கும் படம், கம்முலாவின் பாணியிலேயே கொஞ்சம் ஸ்லோவாக செல்கிறது படம். ஆனாலும் இயல்பான நடிப்பு, ஷார்பான டைலாக், லாஜிக்கோடு காமெடி, மிக இயல்பான திரைக்கதை என்று படம் முழுவதும் சந்தோச்ஷமும், துள்ளலுமாய் இயக்கி ஓரு ஃபீல் குட் படத்தை அளித்திருக்கிறார் இயக்குனர். எதையும் எதிர்பார்காமல் போய் பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பாய் பிடிக்கும்
ம்.. அப்புறம் அந்த சோனியா இருக்கா....ம்ஹூம் நமக்கில்ல...நமக்கில்ல..
Post a Comment

14 comments:

முரளிகண்ணன் said...

ஓகே பாபு

நேனு தப்பக்கூட சூஸ்தாரண்டி

cable sankar said...

//நேனு தப்பக்கூட சூஸ்தாரண்டி//

தப்பக்கூட லேது.. தப்பகுண்ட சூஸ்தானு லேக்கப்போத்தே...சூஸ்தாரண்டி.

நாக்கு சால சந்தோசமண்டி.. மீ ஜாவாபூ குறிஞ்சி..

நந்து f/o நிலா said...

//படம் முழுவதும் சோனியாவை பார்த்து கொண்டேயிருக்கலாம் போலிருக்கு. i’ve never come across a dusky beauty like her in recent time. சூஸ்தே சச்சி போத்தானுரா பாபு... அவருடய பாடிலேங்குவேஜும், அந்த பார்வைகளும், சிம்பிளி சூப்பர்ப்.
//

ஹேப்பி டேய்ஸ்லயே இந்த பிகர பாத்து அசந்து கெடக்கேன். இந்த படத்துல ஹீரோயின் வேற. படம் பாத்தே ஆகனுமே.

cable sankar said...

புதிய தானை தலைவி சோனியா ஜிந்தாபாத்.. ம்ஹூம்.. நம்க்கில்ல..நம்க்கில்ல..

Subash said...

பார்க்கத்தூண்டும் விமர்சனம். நன்றி.
படங்களுடன் அதன் பெயைரை ஆங்கில எழுத்துக்களுடன் தந்தால் இணையத்தில் தேடவும் வசதியாயிருக்குமே!!!!

( முன்னர் போட்ட ஒரு ஹிந்திப்பட டைட்டிலையும் ஆங்கிலத்தில் தாருங்களேன் - a film like chuck and larry or sumthn)

Indian said...

//i’ve never come across a dusky beauty like her in recent time.//

repeatey!!!!!

ஜுர்கேன் க்ருகேர் said...

கதை சொன்னதுக்கு நன்றி

உங்க ப்ளாக்-ஐ பாலோ பண்ணா, நிறைய பிகர்களையும் தெரிஞ்சிகிட்டு ஜெனரல் நாலேஜ வளர்த்திக்கலாம்

cable sankar said...

//பார்க்கத்தூண்டும் விமர்சனம். நன்றி.
படங்களுடன் அதன் பெயைரை ஆங்கில எழுத்துக்களுடன் தந்தால் இணையத்தில் தேடவும் வசதியாயிருக்குமே!!!!//

கண்டிப்பாக செய்கிறேன். சுபாஷ்.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், மேலும் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.

cable sankar said...

//உங்க ப்ளாக்-ஐ பாலோ பண்ணா, நிறைய பிகர்களையும் தெரிஞ்சிகிட்டு ஜெனரல் நாலேஜ வளர்த்திக்கலாம்//

என் ப்ளாக் ஓரு பிகபீடியாவாக்கும் ஜூர்கேன்..

cable sankar said...

////i’ve never come across a dusky beauty like her in recent time.//

repeatey!!!!!//

நன்றி இந்தியன்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..

Raj said...

தப்பகொண்டா சூஸ்தானு...


//சூஸி சூஸி சச்சு போத்துன்னானு பாபு...//

இதி ஏண்டி பாபு இதி

cable sankar said...

//இதி ஏண்டி பாபு இதி//

அவுனு பாபு.. நிசங்கானே செப்புதானு.. சோனியானே சூசி..சூசி.. நேனு சச்சு போத்துன்னானு..

Anonymous said...

///
அவுனு பாபு.. நிசங்கானே செப்புதானு.. சோனியானே சூசி..சூசி.. நேனு சச்சு போத்துன்னானு..
///

அவுனு, சூசி சூசி சச்சு போத்துன்னாரு, ஃபேமிலி குர்தொச்சி குர்தொச்சி கிந்திகொஸ்துன்னாரு

நா யாருன்னு தான் கண்டுபுடிங்களேன் பாப்போம்....

నన్నెవరు కణపదలేథా

cable sankar said...

//அவுனு, சூசி சூசி சச்சு போத்துன்னாரு, ஃபேமிலி குர்தொச்சி குர்தொச்சி கிந்திகொஸ்துன்னாரு

நா யாருன்னு தான் கண்டுபுடிங்களேன் பாப்போம்....

నన్నెవరు కణపదలేథా//

தெலிலேது மீரு பாபா..? அம்மாயியா..?