Thottal Thodarum

Apr 3, 2010

பையா – திரை விமர்சனம்

 paiya-movie-wallpapers-posters-02 அகஸ்மாத்தாய் காணக்கிடைக்கிற பெண்ணின் மீது காதல் வந்து, சந்தர்ப்பவசத்தால் அவளுக்கு லிப்ட் கொடுத்து உதவ வரும் சான்ஸை மிஸ் செய்யாமல் அவளுடன் பயணிக்கும் கதாநாயகனுக்கு அந்த பயணத்தில் அவளை துரத்தும் ஒரு தெலுங்கு ரவுடி கும்பலிடமிருந்து அவளை காப்பாற்ற முயன்று பம்பாய்க்கு பயணமாக, இடையே அவனுடய முந்தைய பம்பாய் விசிட்டின் போது பாதிக்கப்பட்ட மிலிந்த் சோமனின் ஆட்களால் இன்னொரு பக்கம் துரத்தப்பட, இதிலிருந்து எல்லாம் எப்படி கதாநாயகியை காப்பாற்றினான்? அவனை துரத்தும் ஆட்களிடமிருந்து எப்படி தப்பினான் என்பதுதான்  படத்தின் கதை.
paiya-wallpaper (2) மேலே சொன்ன பாராவை படித்ததும், தூள் பரக்க ஓடும் படம் என்று நினைத்தீர்களானால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ரன், சண்டைக்கோழி, என தன் எல்லா படத்திலேர்ந்தும் ரீமேக் செய்திருக்கிறார் வேறு வேறு நடிகர்களை வைத்து. ஆரம்ப காட்சியில் ஹீரோ அறிமுக காட்சியில் அவருக்காக அவரது நண்பர்கள் பஸ்சில் ஏறி காத்திருக்க, எல்லோரும் ஹீரோவை கூப்பிட்டு கொண்டிருக்க, அவனது நண்பன் சொல்கிறான் “அவன் எப்பவும் நிக்கிற பஸ்சுல ஏறமாட்டானாம்” என்று. பஸ் ஸ்டார்ட் ஆகி ஓடியதும் ஓடி வந்து ஏறுகிறார் கார்த்தி. என்னா ஒரு அறிமுகக் காட்சி. இதற்கு பிறகு அடுத்த சில ஷாட்டிலேயே கதாநாயகியை பார்த்துவிட, உடன் காதல், மீண்டும் மீண்டும் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கிறார் தமன்னா. சந்தர்ப்ப சூழ்நிலையில் தமன்னா அவர் காரில் ஏறியதும் கதையும் பரபரவென பறக்க ஆரம்பிக்கிறது. பயணத்தின் நடுநடுவே தன் காதலை பற்றி நண்பர்களிடம் போன் பண்ணி புலம்புவது, தமன்னாவை துரத்தும் தெலுங்கு வில்லன் கோஷ்டி என்று வரும் வரை நல்ல ஸ்மூத் ஹைவே ட்ரைவ்.
Paiya-Karthik-Sivakumar-Latest-wallpapers-Photo-Gallery-Stills-Pics-Images-01 அதன் பிறகு தான் லிங்கு தன் வழக்கமான வேலையை காட்டிவிட்டார்.பழைய ஸ்கிரிப்டையெல்லாம் தூசி தட்டி கார்த்தியை துரத்தும் வில்லன் கோஷ்டி ஒன்றை நடுவே புகுத்தி, அதற்கான பிளாஷ்பேக்கை சொன்னதும் படம் புஸ்ஸென பயணத்தின் போது பஞ்சர் ஆன வண்டியை போல தடுமாறுகிறது. முக்கியமாய் க்ளைமாக்ஸில் கார்த்தியின் காதலை வெளிப்படுத்தும் இடம் ம்.. படு ……….ர்
கார்த்தில் பேண்ட் போட்ட பருத்திவீரனாகவே பேஸ் வாய்ஸில் பேசிக் கொண்டு, மதுரை ஸ்லாங் இல்லாமல் அவ்வப்போது துள்ளி, துள்ளி குதித்துக் கொண்டு துறுதுறுவென இருக்க முயன்றிருக்கிறார். ஒட்டு மொத்தமாய் இருபது முப்பது பேரை கையினாலேயே அடித்து துவம்சம் செய்கிறார். விரைவில் நல்ல மொக்கை மசாலா ஹீரோ கதைகளை கொடுப்பார் என்கிற நம்பிக்கை தெரிகிறாது. 
 paiya-de26-2008 தமன்னாவுக்கு நடிக்க ஏதும் பெரிய வாய்ப்பில்லாவிட்டாலும், ஹோட்டலில் சாப்பிடும் காட்சியில் ரசிக்க வைக்கிறார். பாடல் காட்சிகளில் இறுக்கமான் உடையணிந்து, மழையில் நினைந்து உடலோடு உடை ஒட்டி, பிருஷ்டஙக்ள் அதிர ஆடும் போது நன்றாகத்தான் இருக்கிறார். மிலிந்சோமன் பாவம். பம்பாய் தாதாவாம்,  அவரது ஜெயிலுள்ள எதிரிகளை காலி செய்ய யாராவது ரோடில் போகிற ஒருவனை வெட்டி அவரது அடியாளை ஜெயிலுக்குள் அனுப்பி எதிரியை காலி செய்ய ஐடியா செய்கிறாராம். பயங்கர ஐடியா மணி வில்லன்.

ஹாப்பி டேஸ் சோனியா இதில் கொஞ்சம் குண்டடித்திருக்கிறார்.  பம்பாயில் நண்டு மட்டும் கொஞ்சம் ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கிறார்.
படத்தின் மிகப் பெரிய பலம் யுவன், ஒளிப்பதிவாளர் மதி, எடிட்டர் ஆண்டனி. யுவனின் பாடல்களில் இதுவரை மிஸ்ஸாகியிருந்த துள்ளலெல்லாம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. என் காதல் சொல்ல தேவையில்லை பாடல் டாப் களாஸ். அதே போல் சேஸிங்க் காட்சிகளிலும், க்ளைமாக்ஸ காட்சி பின்னணி இசையிலும் அட்டகாசம்.
paiya-wallpaper என் இனிய நண்பர் மதியின் ஒளிப்பதிவு சும்மா தூள் பறக்கிறது என்றால் அது எலலாம் சாதாரண வார்த்தைதான். ஒவ்வொரு சேசிங் காட்சியாகட்டும், பாடல் காட்சிகளாகட்டும் சண்டை காட்சிகளாகட்டும் மனுஷனின் உழைப்பு தெரிகிறது. இவரது ஒளிப்பதிவை இன்னும் ஒரு படி மேலே சென்று சிறக்க செய்பவர் எடிட்டர் ஆண்டனி. சேசிங், சண்டைக்காட்சிகளில் இவரது கட்டிங்கும், ஒளிப்பதிவும் படத்தின் டெக்னிகல் தரக் கொடியை மேலே பரக்க செய்திருக்கிறார்கள்.
வசனம் பிருந்தா சாரதி. பயணத்தின் போது இருவரும் பேசும் காட்சிகள் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கலாம்.  கதை திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் லிங்குசாமி. இரண்டாவது பாதிக்கு பிறகு அவரது பழைய படங்களிலிருந்து அவியலாய் பல காட்சிகளை சேர்த்து கொதிக்க விட்டிருக்கிறார். மிகவும் சலிப்பாக இருக்கிறது. இதன் காட்சிகளை குழந்தைகள் கூட சொல்லிவிடும். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் சுமார் முப்பது பேர் கார்த்தியை இரும்பு ராடால் அடித்தும், அவ்வளவு பேரையும் அடித்து துவம்சம் செய்து தமன்னாவை காக்கிறார் கார்த்தி. படு மொக்கையான ச்ண்டை காட்சி. மிக அழகாய்.  சொல்லியிருக்கக்கூடிய கதை களம்தான். மொக்கையான திரைக்கதையால் கோட்டை விட்டு விட்டர்ர் இயக்குனர். ஒளிப்பதிவாள்ர், எடிட்டர், இசையமைப்பாளர் என்ற டெக்னீஷியன்கள் பட்டாளம்  கூடுதல் பலம் சேர்க்கவில்லை என்றால் இன்னும் பயணம் கிளப்பியிருக்கவே முடியாது. கிருஷ்ணா டாவின்ஸி போன்ற பத்திரிக்கையாள்ர்கள், எழுத்தாளர்கள் டிஸ்கஷனில் இருந்தும் மீண்டும் அதே வழக்கமான திரைக்கதையை எப்படி முடிவெடுக்கிறார்கள்.?
பையா- வளரவேண்டியவன்
கேபிள் சங்கர்
Post a Comment

42 comments:

K.S.Nagarajan said...

me first :)

Indian said...

me second?

துபாய் ராஜா said...

me 3rd...

۞உழவன்۞ said...

நல்ல ஆக்கம் வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

//பையா- வளரவேண்டியவன்//

ஹா.......ஹா..........

vinthaimanithan said...

ப்பூ...! இதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பா? இந்த சினிமாக்காரங்க ரவுசு தாங்க முடியலப்பூ

vinthaimanithan said...

தயாநிதி அழகிரி கூடிய சீக்கிரம் இந்த படத்துக்கும் ஒரு ஸ்பூஃப் தயாரிக்கப் பிரார்த்திக்கிறேன்

எறும்பு said...

Me 8th

karthic said...

அப்புறம் டப்பிங்,அந்த friend'அ வர பொண்ணு bubble gum மென்னுக்கிட்டு இருக்கு இவங்க ஏதோ பேசுறாங்க...
சரியான மொக்கை,
சங்கர்ஜி உங்க விமர்சனம் போயிருக்கனும்.first day,first show ரொம்ப தப்பு!
அட போங்கப்பா பேசமா வீட்ல படுத்து தூங்கிருக்கலாம்!

Unknown said...

நல்லவேளை காசு மிச்சம்...

guru said...

இப்படி ஏமாத்திட்டாங்களே...

//யுவனின் பாடல்களில் இதுவரை மிஸாகியிருந்த துள்ளலெல்லாம் மீண்டும் கிளம்பியிருக்கிறது.//

சரி, யுவனுக்காக ஒரு தடவை பார்த்திட வேண்டியதுதான்...

Krishna said...

nandri Ezaman

You saved my time, money and the high expectation I had for watching a Lingusamy movie. Wanted to see it this weekend.

U saved Me
nandri Ezaman

ஆர்வா said...

பயங்கர எதிர்பார்ப்புடன் போய் ஏமாற்றத்துடன் திரும்பினேன். சரியான மொக்கை, இது போல ஒரு
அமெச்சூர்தனமான நண்பர்கள் பட்டாளத்தை தமிழ்சினிமாவில் இதற்கு மேல் நீங்கள் பார்த்திருக்கவே முடியாது.

யுவனும், ஆண்டனியும் இல்லை என்றால் நம் நிலமை படு திண்டாட்டம்தான். ஹாப்பி டேஸ் சோனியாவை ரொம்பவும் எதிர்பார்த்து சென்றேன்.ஏமாற்றி இருக்கிறார்கள். நயன்தாரா இப்போது சந்தோஷப்பட்டு கொண்டு இருப்பார். ரசிகனின் மனநிலையை அப்படியே
பிரதிபலித்திருக்கிறீர்கள் சங்கர். (கொஞ்சம் எழுத்துக்கள்'ல இருக்கிற பிழைகளை மட்டும் சரி பார்த்துக்குங்க)

தினேஷ் ராம் said...

படம் 'படு' மொக்கை எல்லாம் இல்லை. என்னளவில் ரொம்ப சுமார் அவ்வளவே!! http://3.ly/uHQ5

// பையா- வளரவேண்டியவன்//

இயக்குனர் லிங்குசாமியை சொல்கிறீர்களா? :P

Ganesan said...

வசனம் பிருந்தா சாரதியா
இவர் மதுரைகாரர் ஆச்சே.
பிருந்தா சாரதி விரைவில் நல்ல படம் இயக்குங்கள்.

வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

கே.எஸ்.நாகராஜன்ஜி..

நீங்களுமா..? ஆச்சரியமா இருக்கு..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சோனியா இருக்காங்களா? happy days படத்தை அவங்களோட cute, Hair style ,bubble cum தின்னுக்கிட்டே பேசுற அழகு, ஜூனியரை அலைய விட்டு காதலிப்பது இதற்காகவே பாக்கலாம். அவங்க பையா ல எப்டி இருக்காங்க பிரதர்...

butterfly Surya said...

சரியான மொக்கையாதான் இருக்கும் போல இருக்கு..

இன்னும் இதே அரைத்த மாவையே அரைக்க போறாங்க..


விடு ஜீட்...

நன்றி கேபிள்.

Anonymous said...

உங்க வழக்கமான விமர்சனத்தில் இருக்கும் பெப் இதில் இல்லை,அவசரம் இல்லாமல் ரசித்து எழுதவும்,ஒரு மொன்னை படத்துக்கு இப்படியா கொஞ்சி கொஞ்சி எழுதுவது?

வடலிக்கூத்தன் said...

பருத்திவீரனாய் பார்த்த எதிர்பார்ப்புகளெல்லாம் வெறும் பருத்திப் பஞ்சாய் பறந்துவிடும்போல் தோன்றுகிறது. பையா... வெறும் பொய்யா..?? பொறுத்திருப்போம்.. கார்த்தி இதே வழியில் சென்றால் தொலைவது நிட்சயம்.

கோவை தமிழன் said...
This comment has been removed by the author.
கோவை தமிழன் said...

நானும் படத்தை பார்த்தேன் ....
முதல் நாள் படத்துக்கு போக வேண்டாம்னு சொன்னேன் , என் நண்பர்கள் கேக்கல ....
பட்டாதான் திருந்துவார்கள் போல .....
படம் முடித்து வெளியில் வந்தவர்கள் , தங்கள் தவறை ஒப்பு கொண்டனர் .. முதல் நாள் எந்த படத்துக்கும் போக கூடாதுன்னு ....
பில்ட் அப் தான் ஓவரா பண்றாங்க .... படத்துல ஒன்னையும் காணவில்லை ....
படம் முழுக்க பயங்கர ஹீரோஇசம் , தேவையே இல்லாமல் வரும் பாடல் காட்சிகள் , இருக்கனுமேனு சொல்லி சண்டை வச்சா கூட பரவல ....
இரண்டாம் பாதி முழுக்க சண்டை காட்சிகள்ன எப்படிங்க ????
இருந்தாலும் பாடல்கள் கேக்கவும் , பார்கவ்ம் அருமைய இருக்கு .... அதுக்காக வேனும்ன போய் படத்த பாருங்க ....

மணிஜி said...

உனக்கு படம் விமர்சனம் எழுத தெரியலையே..பார்த்து கற்றுக்கொள்...சரவணா ஸ்டோர் சம்சாவிற்கும், பெங்களூரு எம்.டி.ஆர் சமோசாவிற்கும் வித்தியாசம் இருக்குடா மகனே !

Ahamed irshad said...

யாரு இப்ப கதை வேனும்னு படம் பார்க்க போறா, பொழுதுபோக்க படம் பார்க்கிறோம். இதுல விமர்சனங்கிற பேர்ல அடிக்கிற கூத்த பதிவர்கள் எப்பதான் விடப்போறாங்களோ தெரியல....

Anonymous said...

நானும் படத்தை பார்த்தேன் ....
முதல் நாள் படத்துக்கு போக வேண்டாம்னு சொன்னேன் , என் நண்பர்கள் கேக்கல ....
பட்டாதான் திருந்துவார்கள் போல .....
படம் முடித்து வெளியில் வந்தவர்கள் , தங்கள் தவறை ஒப்பு கொண்டனர் .. முதல் நாள் எந்த படத்துக்கும் போக கூடாதுன்னு ....
பில்ட் அப் தான் ஓவரா பண்றாங்க .... படத்துல ஒன்னையும் காணவில்லை ....
படம் முழுக்க பயங்கர ஹீரோஇசம் , தேவையே இல்லாமல் வரும் பாடல் காட்சிகள் , இருக்கனுமேனு சொல்லி சண்டை வச்சா கூட பரவல ....
இரண்டாம் பாதி முழுக்க சண்டை காட்சிகள்ன எப்படிங்க ????
இருந்தாலும் பாடல்கள் கேக்கவும் , பார்கவ்ம் அருமைய இருக்கு .... அதுக்காக வேனும்ன போய் படத்த பாருங்க ....

1:55 PM
Blogger மணிஜீ...... said...

உனக்கு படம் விமர்சனம் எழுத தெரியலையே..பார்த்து கற்றுக்கொள்...சரவணா ஸ்டோர் சம்சாவிற்கும், பெங்களூரு எம்.டி.ஆர் சமோசாவிற்கும் வித்தியாசம் இருக்குடா மகனே !//

இதை சொல்ல எல்லா தகுதியுமே உனக்கு இருக்கு மணிஜி,அத்னால சும்மா போறேன்.

Anonymous said...

hi...hi..hi

ஸ்ரீ.... said...

சரியான விமர்சனம். (படத்தப் பாக்கலாமா? வேணாமா?)

ஸ்ரீ....

Kumky said...

கடமையே கண்ணாயிரம்...

நன்றிங்னோவ்...

கோவி.கண்ணன் said...

பையா திரா..பையா ?

எனக்கு பிடித்திருந்தது.
:)

rajasundararajan said...

கொழுந்தியா மகன் நுழைவுத் தேர்வு எழுத மதுரையில் இருந்து வந்திருந்தான். 'பையா' பார்த்தாக வேண்டும் என்று துடித்தான். "'அங்காடித் தெரு' பார்க்கலாம்டா" என்றேன். "போங்க பெரியப்பா அந்த மாதிரிப் படங்கள்லாம் நான் பார்க்கிறதில்ல". எனக்குப் புரிந்தது. "'விண்ணைத் தாண்டி வருவாயா?' பார்த்தியா?" "சூப்பர் படம் பெரியப்பா!" சரிதான் என்று கறுப்பில் டிக்கெட் வாங்கிப் போனால், சரியான மொக்கை.

ஹிந்தியில் 'The Road' என்றொரு படம் இருக்கிறது. ராம் கோபால் வர்மாவின் உதவியாளர்களில் ஒருவர் இயக்கியது. அதையெல்லாம் பார்த்திருக்க வேண்டாமா திரு.லிங்குசாமி.

இங்கே இயக்குநர்கள், இணைந்து பணியாற்றும் டெக்னீஷியன்களால் பிழைக்கிறார்கள் என்பதற்கு 'பையா'வும் சாட்சி.

இதில் உதயம் தியேட்டரில் கரென்ட் செலவு மிச்சம் பிடிக்கிறார்களாம். ஏ.சி. போட்டு நிறுத்தி விடுகிறான். வேர்த்துப் புழுங்கியதில் இப்போது மூக்கு ஒழுகுகிறது.

கொடுமையான உலகமப்பா இது!

Prabhu said...

சியர்ஸ்! ரெண்டு பேர் பார்வையும் கிட்டதட்ட ஒரே மாதிரி. மிலிந்த் சோமன் என்ன மாதிரி ஆளு, அவர வேஸ்ட் பண்ணதுதான் வருத்தம்.

Cable சங்கர் said...

@k.s.nagarajan
நன்றி


@இந்தியன்
ஆமாம். நன்றி

@துபாய்ராஜா
உங்களுக்கும் நன்றி

@உழவன்
நன்றி

@சைவக்கொத்துபரோட்டா
:)

@விந்தைமனிதன்
ம்க்கும்

@எறும்பு
ஒகே வந்தாச்சா

@கார்திக்
:)

@கே.ஆர்.பி.செந்தில்
:)

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் அண்ணே!

பெசொவி said...

//தமன்னாவுக்கு நடிக்க ஏதும் பெரிய வாய்ப்பில்லாவிட்டாலும், ஹோட்டலில் சாப்பிடும் காட்சியில் ரசிக்க வைக்கிறார். //

அந்த ஹோட்டல் மெனு பத்தி ஏதாவது உங்க கொத்து பரோட்டாவில் வருமா?

ஏதோ, நீங்க இருக்கீங்க, நாங்க மொக்கைப் படத்துக்குப் போகாம தடுக்கறதுக்கு. நன்றி, தல!

பனித்துளி சங்கர் said...

படம் பார்க்க வாய்ப்புகள் அமையாத சில நேரங்களில் உங்களின் விமர்சனம் அதை நிவர்த்தி செய்துவிடுகிறது . மிகவும் அருமை .

kanagu said...

படத்த இன்னைக்கு தான் அண்ணா பாத்தேன்... நீங்க சொன்ன மாதிரி இரண்டாவது பாதில ஏற்கனவே குழம்புன குட்டைய தான் கலக்கி இருக்காங்க... :(

ஆனா பாட்டெல்லாம் சூப்பர்.. அதுக்க்கே பாக்கலாம் :)

Mugilan said...

Perfect Review!

Unknown said...

karthi sir film enagu pudichirugu romba thanks romba nall kalichu oru nalla love story patha feel thanks lingu sir and very thanks tamanna

Unknown said...

karthi your look this film very different but i like it tamanna pair with very perfect please continue this idea ok i like this film lingu sir

Unknown said...

karthi&tamanna your pair is very beautiful

pichaikaaran said...

ஒட்டு மொத்தமா, வலை பதிவுலகம் படத்தை பத்தி என்ன சொல்லுது.. இங்கே பாருங்க

http://pichaikaaran.blogspot.com/2010/04/blog-post_821.html

Suthershan said...

கேபிள் சார், நீங்க சொல்கிற அளவுக்கு படம் மோசம் இல்லை.. நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம். ஹிந்தி படத்தை விடுங்க சார்.. தமிழ் ரசிகர்களுக்கு இந்த பயணம் நிச்சயம் பிடிக்கும்..