Thottal Thodarum

May 10, 2010

கொத்து பரோட்டா –10/05/10

போன வாரம் சுஜாதா அவார்ட்ஸ் விழாவுக்கு போயிருந்தோம். நல்ல கூட்டம். பிரபல எழுத்தாளர்கள் பலரும் வந்திருந்தார்கள். விருது கொடுக்க வந்த விழாவில் விருது பெற்றவர்களை பற்றி பெரிதாய் பேசாமல், எல்லோரும் சுஜாதாவை பற்றி மட்டுமே பேசியது கொஞ்சம் ஓவர் என்று சுஜாதா வெறியனாகிய எனக்கு கூட தோன்றியது. அதே போல மனுஷ்யபுத்திரனுக்கும், உயிர்மைக்கும் பி.ஆர் வேலை செய்வதையே சிலர் கடமையாய் செய்தார்கள். சாரு பேசினார். அவரை பற்றி சொல்ல ஏதுமில்லை. வழக்கம் போல். இவர்களில் உச்சம் தமிழச்சி தங்க பாண்டியனின் பேச்சு. உயிர்மை சுஜாதா புத்தகங்களை வெளியிட்ட பிறகுதான் சுஜாதா பரவலாய் போய் சேர்ந்தார் என்பதுதான் உச்சபட்ச் காமெடி. அங்கு வந்திருந்த கூட்டத்தில் எல்லா வயதினரும் வந்திருந்தார்கள் நிச்சயம் அவர்கள் எல்லாம் உயிர்மை வெளியீட்டிற்கு பிறகு சுஜாதாவை அறிந்தவர்களாய் இருக்க மாட்டார்கள் என்பது திண்ணம். முன்னாடியெல்லாம் முப்பது, நாப்பது ரூபாய்க்கு சுஜாதா புக்கு கிடைக்கும், இவங்க புக் போட ஆரம்பிச்சதும் குறைந்தது முன்னூறு ரூபா இல்லாம வாங்க முடியறதில்லை என்றார்  வாசகர் ஒருவர். எனக்கு உயிர்மை பதிப்பகம் என்ற ஒன்றே சுஜாதா புத்தகத்தை வெளியிட்டதால்தான் நிறைய தெரியும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
avar-cinema நேற்று பதிவர் செல்வகுமார் இயக்கும் ”அவர்” என்கிற படத்தின் துவக்க விழா நடைபெற்றது. விழாவை வழக்கம் போலில்லாமல் வித்யாசமாய் டிஜிட்டல் சினிமா எடுப்பதை பற்றிய ஒரு கருத்தரங்கமாய் ஆரம்பித்திருந்தார்கள். பேப்பர் விளம்பரம் ஏதுமில்லாமல், வெறும் பேஸ்புக், ப்ளாக், ட்வீட்டர் தளங்களில் விளம்பரபடுத்தியே
சென்னையின் ஒரு கோடியான வளசரவாக்கதில் நடந்த கருத்தரங்குக்கு ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வரவழைத்திருந்தது சந்தோஷமாயிருந்தது. டிஜிட்டல் சினிமா கேமரா பற்றி அவர்கள் தேடி கற்றதை அங்கே பகிர்ந்து கொண்டார்கள். நானும் எனக்கு தெரிந்ததை பற்றி அங்கே கலந்துரையாடினேன். மிகவும் அருமையான இண்டராக்டிவாக இருந்தது கலந்துரையாடல். தயாரிப்பாளர் சங்கர்நாராயணனுக்கும் இயக்குனர் செல்வகுமாருக்கும் அவர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம். இதைத்தான் முப்பதாயிரத்தில் படமெடுக்கும் முயற்சியில் நான் முயன்று வருகிறேன். இதுவரை வந்திருக்கும் ஆதரவு நம்பிக்கையூட்டுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
செவிக்கினிமை
சென்ற வாரம் நேசமித்ரன் அவரின் பதிவில் ஏ.ஆர்.ரஹ்மானின் “ஆரோமலே” பாடல் பிங்க் ப்ளாயிடின் பாடலிருந்து காப்பி என்று குற்றம் சாட்டியிருந்தார். கூடவே டேவ் மாத்யூ பாண்ட் வழங்கிய பாடல் ஒன்றையும் கொடுத்திருந்தார். எனக்கென்னவோ.. டேவ் மாத்யூவின் ஆரம்ப கிடார் மட்டுமே கொஞ்சம் சிங்க் ஆன மாதிரி தெரிகிறது. அதே போல அவரது கரகரப்பான குரல். மற்றபடி ட்யூன் வேறாக தான் தெரிகிறது. எதுக்கும் நீங்களும் கேட்டுச் சொல்லுங்களேன்.
இத்தனையும் கேட்ட பிறகும் என்னுடய பேவரைட்டிலிருந்து “ஆரோமலே” போகவில்லை. அப்படி பார்த்தால் பிங்க் ப்ளாயிடின் பேக்ரவுண்ட் கிடார் ஸ்கோர், கொஞ்சம் லீட் கிடார் ஸ்கோரக டேவ் மாத்யூவின் பாடலில் கூடத்தான் இருக்கிறது. இப்படியெல்லாம் தேடினால் உலகில் எல்லா இசையமைப்பாளர்களிடம் இம்மாதிரியான மிக லேசான ஒப்புவமைகள் இருக்கத்தான் செய்யும் என்பது என் கருத்து.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தியேட்டர்
சமீபத்தில் சாந்தம் தியேட்டரின் சீட்டுகள் எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறார்கள். சீட்டுக்கள் என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. வாங்குகிற காசுக்கு சரியான வசதிகள் செய்வதில் இவர்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் முன்பிருந்த லெதர் ஃபோம் சீட் வசதி இதில் இல்லை அதுவும் தலை வரை உள்ள சீட்டுகள் புஷ்பேக் மிகவும் பின்னால் போகாமல் முன் புறம் அழுத்துவதால், கொஞ்சம் முன் பக்கம் வரிசை கிடைத்துவிட்டால் படம் பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது. கழுத்து வலிக்கிறது. அவர்களுக்கும் ஒரு மெயில் அனுப்பியிருக்கிறேன். என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார தத்துவம்
ஓவர் பிரிட்ஜுல முன்னாடி போற பஸ்ஸோட பிரேக் பிடிக்கும்ங்கிற நம்பிக்கையிலதான் பின்னாடியே நாமளும் போறோம். அது போலத்தான் வாழ்கை. ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் வாழ்கையே ஓடுது.. சொன்னவர்.. ஹி..ஹி.ஹி.. போங்க சார் எனக்கு வெட்கமாயிருக்கு 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார கண்டுபிடிப்பு

காதலில் தோற்பது ஒரு பெரிய விஷயமே இல்லை.. ஆனால் ஒரு முறை ஜெயித்துப்பார் அப்போது தெரியும் தோல்வியே பரவாயில்லைன்னு.. ங்கொய்யால..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார குறும்படம்
மெலிதான நகைச்சுவையுடன் உறுத்தாமல் நீதி சொல்லும்படியாக எடுக்கப்பட்டிருக்கும் ப்ரெஞ்ச் குறும்படம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார டச்சிங் விடியோ
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார விளம்பரம்
இந்த விளம்பரத்தை தடை செய்யுமளவுக்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை? ஆனால் ஸோ.. க்யூட்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜோக்
உன்னை ஏண்டா எல்லா பஸ்சுல அந்த அடி அடிச்சாங்க..?
பாக்கெட்டுல இருந்த என்னோட போட்டோ ஒரு பொண்ணு கால் கீழே விழுந்திருச்சு, அதான் அவங்க கிட்ட போட்டோ எடுக்கணும் காலை தூக்குங்கன்னு சொன்னேன் அதுல என்ன தப்புன்னு தெரியலையே..?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எக்கனாமிக் ப்ரொபசர் : ஒரு ப்ரொபஷனலின்  தொழில் முறை தோல்வியை பற்றி ஒரு உதாரணம் சொல்லுங்கள்
மாணவன் :  கர்பமான ப்ராஸ்ட்ட்டிடுயூட்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஏ ஜோக்
முதலிரவில் மனைவியிடம் கணவன் “கண்ணே உனக்கு எங்கே போக வேண்டும் நிலவுக்கா? அல்லது நட்சத்திர மண்டலத்துக்கா?” என்றதும
ம்னைவி : முதல்ல உன் ராக்கெட்ட காட்டு அதுக்கப்புறம் முடிவு பண்ணலாம் எங்க போறதுன்னு.. என்றாள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்
Post a Comment

43 comments:

Unknown said...

Me d first..

Unknown said...

Saadha jokeum A-joke pola iruppadhan karanam ennavo.. He he..:-)

karthic said...

இவங்க எப்பவுமே இப்படி தான் பாஸ்..விட்டு தள்ளுங்க,நம்ம அளுங்க அடிக்கிற சிங்கி ரொம்ப சவுண்ட் அதிகம்.சுஜாதா இல்லைனா இவங்க பொழப்பை இருக்காது.

Unknown said...

இந்த வார பரோட்டா க்ரிஸ்பியா இருக்கு அண்ணே ..

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

:) this is for the first kothu...

Rajesh V Ravanappan said...

SANKAR JI!!... "AVAR' - PRODUCER SANKARA PANDIAN not SANKARNARAYANAN..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

koththu prottaa nalla kaaram

சைவகொத்துப்பரோட்டா said...

மூன்று ஜோக்கும் ஹா.....ஹா........

க.பாலாசி said...

//எனக்கு உயிர்மை பதிப்பகம் என்ற ஒன்றே சுஜாதா புத்தகத்தை வெளியிட்டதால்தான் நிறைய தெரியும்.//

இது நச்...

தலைவரே அந்த முதல் ஜோக் நான் அஞ்சாவது படிக்கும்போதே பிரபலம்....

Thamira said...

உயிர்மைக்கென்று தனி மரியாதை உண்டென்றாலும், தமிழச்சி சொன்னதெல்லாம் நெம்ப ஓவரு ஆமா.!

அப்புறம் ஏஜோக்கும் கொஞ்சம் ஓவருதான்.

pichaikaaran said...

"அவரை பற்றி சொல்ல ஏதுமில்லை"

சில கோமாளிகளை பற்றி பேசாமல் இருக்கும் நீங்கள் , விரைவில் தமிழ்நாடு முழுதும் பேசப்படும் ஒருவராக உருவெடுப்பீர்கள்.. அந்த தகுதி உங்களுக்கு உள்ளது...

கோமாளிகளை பற்றி வியந்து போற்றும் கோமாளி பதிவர்களை பற்றியும் நீங்கள் அதிகம் பேசாதது , பாராட்டுக்கு உரியது... ( இந்த பேச்சை ரசித்து ஒரு பதிவையும், பிறகு படித்ததில் பிடித்தது என இந்த பதிவுக்கு எழுத்லரையும் இணைப்பையும் எதிர்பார்த்து லுக் விட்டேன்... அனால் , எனக்கு லக் இல்லாததால், அப்படி எதுவும் நடக்க வில்லை )

" உயிர்மை சுஜாதா புத்தகங்களை வெளியிட்ட பிறகுதான் சுஜாதா பரவலாய் போய் சேர்ந்தார் என்பதுதான் உச்சபட்ச் காமெடி "

கோமாளி கூட்டம் அப்படித்தான் இருக்கும்... ... ஐயோ ..ஐயோ

Santhappanசாந்தப்பன் said...

ஹா.. ஹா.....

நல்லாயிருக்கு பாஸ்!!

iniyavan said...

தல,

அந்த காண்டோம் விளம்பர கிளிப்பிங் ஏற்கனவே ஜாக்கி போட்டுட்டாருனு நினைக்கிறேன்.

எம் அப்துல் காதர் said...

சார் இதுமாதிரி எல்லாமே சேர்ந்த மாதிரி கொத்தும் பரோட்டா தான் நல்லா இருக்கு. மூன்று பதிவுகளில் நீங்கள் தனி தனியாய் போட்டதைவிட!!!

நேசமித்ரன் said...

அட கொத்துல நானுமா ?! ம்ம் :)

ஸ்பெஷாலிட்டின்னு சொல்ற ஒரு விஷயம் சின்க் ஆகும்போது அதை சாயல்ன்னு சொல்றதுதானே தலைவரே !

தயாரிப்பாளர் சங்கர்நாராயணனுக்கும் ?

Unknown said...

//முன்னாடியெல்லாம் முப்பது, நாப்பது ரூபாய்க்கு சுஜாதா புக்கு கிடைக்கும், இவங்க புக் போட ஆரம்பிச்சதும் குறைந்தது முன்னூறு ரூபா இல்லாம வாங்க முடியறதில்லை என்றார் வாசகர் ஒருவர்//

ரிப்பீட்டிக்கிறேன்.

ஆதி சொல்றாருன்னு ஏ ஜோக்ல மசாலாவைக் குறைச்சிடாதிங்க. ஓவரா இருந்தா தான் அது ஏ ஜோக், இல்லைன்னா வெறும் ஜோக்.

anujanya said...

நான் நேசன் இடுகையைப் பார்த்து, அந்த மூன்று பாட்டுகளையும் கேட்டேன். நிச்சயம் சாயல் இருக்கிறது. அப்பட்டமான காப்பி என்றெல்லாம் சொல்ல முடியாது. யாரும் (நேசன் உட்பட) சொல்லவும் இல்லை. குற்றம் சாட்டுகிறார் என்பதெல்லாம் ஓவர் கேபிள்ஜி. In any case, a vastly overrated song. Talk about 'Hosana'. We can rave about it for hours. A real gem. Thats my two pence ofcourse :)

அனுஜன்யா

பின் குறிப்பு: நேசமித்ரன் அருமையான கவிதைகளும் எழுதி இருக்கிறார். கொஞ்சம் அதைப்பற்றியும் எழுதலாம் :)

நா.இரமேஷ் குமார் said...

//காதலில் தோற்பது ஒரு பெரிய விஷயமே இல்லை.. ஆனால் ஒரு முறை ஜெயித்துப்பார் அப்போது தெரியும் தோல்வியே பரவாயில்லைன்னு.. ங்கொய்யால.//

குசும்பன் said...

// கொஞ்சம் முன் பக்கம் வரிசை கிடைத்துவிட்டால் படம் பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது. கழுத்து வலிக்கிறது. //

அட விடுங்க பாஸ் அவன் அவன் படம் பார்த்துவிட்டு தலைவலிக்குது, உடம்பு வலிக்குது அய்யோ அம்மான்னு அனத்துறாங்க உங்களுக்கு கழுத்துவலிதானே விடுங்க பாஸ்....


//அவர்களுக்கும் ஒரு மெயில் அனுப்பியிருக்கிறேன். என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். //

பாஸ் நாங்க என்ன செய்யனும் அதையும் சொல்லுங்க:)))))

குசும்பன் said...

//டேவ் மாத்யூ பாண்ட் வழங்கிய பாடல் ஒன்றையும் கொடுத்திருந்தார்//

நமக்கு எல்லாம் ஜேம்ஸ் பாண்ட், ரப்பர் பாண்ட் தான் தெரியும் எங்கிருந்து இந்த பேரை எல்லாம் புடிப்பாங்களோ? :)))

க ரா said...

கொத்துபரோடா நல்லாருக்கு. ‘ஏ’ ஜோக் ஹா. ஹா. ஹா.

venkit_Raj said...

ஜோக் நம்பர் 1 கலக்கல் தல...
என்னை அறியாம சிரிக்க வெச்சு.. சீனச்சி, முறைச்சிட்டு போற மாறி பண்ணீட்டீங்க.. ஹா..ஹா

movithan said...

கொத்து சூப்பர் .

ஜோக்ஸ் ஹஹஹஹஹ.....

ஜோசப் பால்ராஜ் said...

என்னாச்சுங்ணா உங்களுக்கு?
அந்தக் குழந்தையின் சுட்டித்தனத்த மட்டும் பார்த்தீங்களா அந்த விளம்பரத்துல?
குழந்தைங்கன்னா சுட்டித்தனம் செய்யத்தான் செய்வாங்க.
இப்டியெல்லாம் சுட்டித்தனம் பண்றக் குழந்தைக்கள பெத்துக்கிறதுக்கு ஆணுறை அணிவது மேல் அப்டின்னு ஒரு மட்டித்தனமான , கீழ்த்தரமான சிந்தனைய சொல்ற விளம்பரத்த ஏன் தடை செஞ்சாங்கன்னு கேட்கிறீங்க?

இந்த கான்செப்ட்ட சொல்லி விளம்பரம் எடுத்தானே அந்த அதிபுத்திசாலி அவன பெத்த அப்பன் உண்மையிலயே ஆணுறை அணியாதது தான் தப்பு.
நல்லா எடுக்குறாய்ங்க விளம்பரம்.

sriram said...

தத்துவம் நம்பர் பத்தாயிரத்து ஒண்ணு சூப்பர், ஜோக் மூணும் சூப்பரோ சூப்பர் யூத்து
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பாலா said...

இந்த இ.கோ.மு.சி, ஆ.ஓ மாதிரியான டொக்கு படத்துக்கெல்லாம் சப்போர்ட் பண்ணிகிட்டு வர்றவங்களை கொஞ்சம் கொத்துங்களேன் சங்கர்.

படிக்கும்போது பத்திகினு வருது.

சரண் said...

'ஆராமலே' கண்டிப்பாகக் காப்பி என்று சொல்லமுடியாது.. அந்த வகையில் தமிழில் பாடல் கொண்டு வர ஏ.ஆர்.ரகுமான் முயற்சி செய்திருக்கிறார் என்றுதான் கருதுகிறேன்.. அப்படிப்பாத்தா எனக்கு ‘ராக்' பாடல்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும்..

அந்தக் காண்டம் விளம்பரம் முன்னாடியேப் பாத்திருக்கிறேன்.. எனக்கு மிகவும் பிடித்த விளமபரங்களில் ஒன்று.. ஜோசப்-பின் கருத்திலிருந்து மாறுபடுகிறேன்.. இதில் அந்த ஆண் தனியாக வந்ததிலிருந்து அவன் மனைவியிடம் இருந்து பிரிஞ்சு வாழ்கிறான் என்று வைத்துக்கொண்டால்.. குழந்தைப் பெத்துக்கொண்டு பிரிந்து வாழ்வதைக் காட்டிலும் காண்டம் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளாமல் இருக்கலாம் - என்றக் கருத்தைச் சொல்வதாக எனக்குத் தோன்றியது..

கடைசியாக.. அந்த ‘டச்சிங்' காணொளி.. உருக வைத்தது.. நன்றி..

கொத்துப்பரோட்டா வழக்கம்போல அருமை..

vinthaimanithan said...

எப்பவும்போல இப்பவும் தூள். சாப்பாட்டுக் கடைய பார்க்காததுதான் கொஞ்சூண்டு கஷ்டமாருக்கு.

ஏ ஜோக்... ஏ ஒன் ஜோக்

கீப் ராக்கிங்

நாடோடி இலக்கியன் said...

ரொம்ப நாள் கழித்து கொத்து பரோட்டா எல்லாமே அசத்தலான தொகுப்பாய்.

Ramesh said...

உன் ஏ ஜோக்குக்கு நான் அடிமையப்பா... அடிமை.(பாலைய்யா ஸ்டைலில் படிக்கவும்)

ISR Selvakumar said...

//நமக்கு எல்லாம் ஜேம்ஸ் பாண்ட், ரப்பர் பாண்ட் தான் தெரியும்//

குசும்பனின் இந்த ரைமிங் கமெண்ட் நல்லா இருக்கு.

Thenammai Lakshmanan said...

எனக்கு உயிர்மை பதிப்பகம் என்ற ஒன்றே சுஜாதா புத்தகத்தை வெளியிட்டதால்தான் நிறைய தெரியும்.
//
செம நச் சங்கர் ஜி

Thenammai Lakshmanan said...

தயாரிப்பாளர் சங்கர்நாராயணனுக்கும் இயக்குனர் செல்வகுமாருக்கும் அவர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம். இதைத்தான் முப்பதாயிரத்தில் படமெடுக்கும் முயற்சியில் நான் முயன்று வருகிறேன். இதுவரை வந்திருக்கும் ஆதரவு நம்பிக்கையூட்டுகிறது//

எங்களி அன்பு நண்பர் செல்வாவுக்கு வாழ்த்துக்கள்.. கேபிள்ஜி உங்க முயற்சியும் வெற்றி பெறட்டும்...

Thenammai Lakshmanan said...

உண்மை டேவ் மாத்யூவின் ஆரம்ப இசை மட்டுமே ஒப்புமையா இருக்கு

Thenammai Lakshmanan said...

தியேட்டர்களிலும் லக்ஸுரிய்ஸ் பஸ்களிலும் இப்படிதான் வசதி செய்கிறேனென்று கழுத்தைப் பதம் பார்த்து விடுகிறார்கள்

Thenammai Lakshmanan said...

தத்துவம் சொன்னவருக்கு வாழ்த்துக்கள் .. வெட்கப் பட வேணாம் சங்கர்ஜி..ஹஹஹா
கண்டுபிடிப்பு அருமை

விடீயோ பார்க்க நேரம் கிடைக்கல பார்த்துட்டு சொல்றேன்

Thenammai Lakshmanan said...

குரும்படம் அருமை...

“சலத்தாற் பொருள் செய்தே மார்த்தல்
பசுமட்கலத்துள் பெய்திரீ இயற்று...”

என்ற குறள் ஞாபகம் வந்தது சங்கர் ஜி...டிட் ஃபார் டாட்....ரைட்

Thenammai Lakshmanan said...

இரண்டு தவறுகள் முதல் கமெண்டில்
குறும்படம்
பசுமட்கலத்துள் நீர்

மரா said...

koththu super

ரவிஷா said...

சாரே! காப்பி அடிப்பது வேற இன்ஸ்பையர் ஆவது வேற! ரஹ்மான் straight lift செய்து இருக்கிறார்!

ருத்ர வீணை® said...

என்னது.. ரொக்கெட்டா... அப்போ பின்னாடி பொக வருமா?

ரோஸ்விக் said...

அனைத்தும் கலக்கல். :-)

Victor Suresh said...

"எனக்கு உயிர்மை பதிப்பகம் என்ற ஒன்றே சுஜாதா புத்தகத்தை வெளியிட்டதால்தான் நிறைய தெரியும்."

எனக்கும் அப்படியே.

எழுத்தாளர்களெல்லாம் அரசியல்வாதிகள் பாதையில் போகிறார்கள். எழுத்தாளனுக்கும் அரசியல்வாதிக்கும் வித்தியாசம் என்னவென்றால் அரசியல்வாதி தான் வாழும் சூழலை ஒரு போதும் குறை சொல்லிக் கொள்வதில்லை.