Thottal Thodarum

Oct 5, 2010

கொத்து பரோட்டா-05/10/10

போன மாதம் ஒருவர் எங்கள் திரைப்பட அலுவலகத்திற்கு வந்திருந்தார். ப்ரொடியூசர் வந்திருப்பதாக சொன்னார். நம்ம புரோடியூசர் தான் இங்க இருக்காரே.. இவரு யாருன்னு போய் பார்த்தா.. டக்குனு எழுந்து நின்னு.. சார் நான் தான் வின்னர் பட ப்ரொடியூசர்.. நடிக்க வாய்ப்பு இருக்குமா?ன்னு கேட்கலாம்னு வந்தேன் என்றார். என் மனசெல்லாம் வலித்தது. ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு, இந்த நிலையில் இருப்பதை பார்த்து ரத்தக் கண்ணீர் வராத குறைதான். அது எப்படி ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு இவர் லாஸ் ஆக முடியும்? என்ற கேள்விக்கு மீண்டும் நான் சினிமா வியாபாரம் படியுங்கள் என்று சொன்னால் அடிக்க வருவீர்கள். நான் அவருடய போட்டோவை வாங்கி வைத்துக் கொண்டு நிச்சயம் கூப்பிடுகிறோம் என்று அனுப்பி வைத்தோம். எங்கள் இயக்குனர், தயாரிப்பாளர், மேனேஜர், உதவி இயக்குனர்கள் அனைவரும் ஒரு சேர அவ்ருக்காக ஒரு கேரக்டரை செலக்ட் செய்து விட்டோம். பல சமயங்களில் இம்மாதிரி செலக்ட் செய்யப்பட்ட நடிகர்களை கூப்பிடும் நேரத்தில் அவர் வேறு படத்தில் வேலை செய்து கொண்டோ, அலல்து நாங்கள் மறந்து போய் விடக்கூடிய நிலை வந்ததுண்டு. ஆனால் இவர் விஷயத்தில் குறிப்பாய் ஞாபகம் வைத்து கூப்பிட்டோம் வந்தவுடன் நான் அவருடய படத்தை வாங்கிய கதைய பற்றி சொன்னேன். ஏதும் சொல்லாமல் சிரித்தார். கிளம்பும் போது கேட்டார்.. எனக்கு இந்த படத்தில நல்ல கேரக்டர்தானே..? தொடர்ந்து வருமா என்று…?
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
எந்திரன் ரிலிசானதிலிருந்து கலாநிதி மாறனும், ரஜினியும் பேட்டி கொடுத்தார்களோ? இல்லையோ..? நான் பேட்டி கொடுத்த மயமாய் இருக்கிறேன். ஹெட்லைன்ஸ் டுடேவில் கொடுக்க ஆரம்பித்தது. தொடர்ந்து இந்தியாடுடே, டெக்கான் ஹெரால்ட், ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்று நான் பிஸி.. ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது. ஒரு ப்ளாக், ஒரு புத்தகம் எவ்வளவு தூரம் நம்மை கொண்டு செல்கிறது என்று தெரிந்த போது.. ஹிந்துஸ்தான் டைமில் வந்த ஸ்டோரி..http://epaper.hindustantimes.com/PUBLICATIONS/HT/HD/2010/10/02/ArticleHtmls/RAJNI-S-LATEST-The-Robot-leader-takes-it-02102010011009.shtml?Mode=1
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சமீபத்தில் சேட்டன் பகத்தின் 2 ஸ்டேட்ஸ் படித்தேன். புதிதாய் ஏதும் சொல்லாவிட்டாலும், இண்ட்ரஸ்டிங்கான எழுத்தும், டவுன் டு எர்த்தான கேரக்டர்களும் நம்மை உள்ளே இழுத்துவிடுகிறது. கதையை அப்படியே ஒரு என்.ஆர்.ஐ களுக்கான ஹிந்தி படமாய் எடுக்கலாம். க்ளைமாக்ஸ் மட்டும் படு சினிமாத்தனம். அதனால் தான் சினிமா எடுக்கலாம் என்று தோன்றியது.. பட்.. சுவாரஸ்யமான நாவல்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
எந்திரன் பல தியேட்டர்களில் வெளியாகியிருப்பது தெரிந்த விஷயம். ஆனால் ரிலீஸான நாள் அன்று முதல் காட்சியே ஃபுல்லாகாத தியேட்டர்களும் முக்கியமாய் தமிழ் நாட்டில் இருக்கிறது. உதாரணமாய் திருவள்ளூரில் முன்று தியேட்டர்களில் வெளியிடப்பட்டிருக்கும் எந்திரன் படத்திற்கு முறையே 254, 180,90 டிக்கெட்டுகளே போயிருக்கிறது. இப்படி பல தியேட்டர்களில் பெரிய பிரபலமான தியேட்ட்ர்களை தவிர பல தியேட்டர்களில் ஃபுல்லாகமலே ஓடி வருகிறது. இது நான் என்னவோ ரஜினியை பிடிக்காதவன் என்று நினைத்து எழுதுகிறேன் என்று நினைக்காதீர்கள். இதற்கு முக்கிய காரணம் டிக்கெட்டு விலை தான். இதனால் அடுத்த காட்சிக்கே விலை குறைக்க ஆரம்பித்திருக்கும் தியேட்டர்கள் பல. சென்ற ஞாயிறு மாலைகாட்சி திருச்சியில் ஒரு தியேட்டரில் மொத்த ஆடியென்ஸே.. 60 பேர்தான். அதுதான் சொன்னேன்.. படம்சூப்பர் ஹிட்டானாலும் சில தியேட்டர்காரர்கள் அடிபடுவது நிச்சயம் என்று இந்த பதிவில் சொல்லியிருந்தேன்.
###################################################################
சமீபத்தில் ஒரு நாள் பஸ்ஸில் சாருவின் ராஸலீலாவை பற்றி ஒரு பஸ் போட்டிருந்தார் ஒரு பிரபல பதிவர். நானும் அதை படித்து பார்த்துவிட்டு, எங்கேயோ பரிச்சயமான வரிகளாய் இருக்கிறதே என்று தோன்றியது. இருந்தாலும் நல்லாருக்குன்னு அவருக்கு போன் போட்டேன். அவர் என்னிடம் கேட்டார் அது சரி நல்லாயிருந்துச்சா..? ஆமா.. என்றேன். அது நீ எழுதினதுதான்யா.. சும்மா எடுத்து போட்டேன். நீ எழுதினது உனக்கே ஞாபகமில்லையா..? என்று கேட்டு “ஙே” என்று விழிக்க வைத்தார். அந்த பிரபல பதிவர். விட்றா..விட்றா.. சூ..னா..பா…ணா..
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சென்ற வாரம் ஒரு பதிவர் நண்பரின் குழந்தைக்கு பிறந்தநாள். வாழ்த்த போயிருந்தேன்.(அப்படின்னா.. டின்னர் சாப்பிடப்போயிருந்தேன் என்று அர்த்தம்). அப்போது ஆறடி உயரத்தில் ஸ்மார்ட்டான ஒரு இளைஞர் சிரித்த முகத்துடன் நுழைந்து, தானே வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டார். அவர் வந்ததிலிருந்து ஒரு சந்தேகம் இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று. அவர் போனவுடன் தான் நான் கேட்டேன். அவர் தானா இவர் என்று.. அவர் தான் என்று தெரிந்ததும் நொந்து போய்விட்டேன். முகப்புத்த்கத்தில் மூலம் அவரது போட்டோவை பார்த்திருக்கிறேன். என் கற்பனையில் அவரை பற்றிய ஒரு உருவகம் வைத்திருந்ததுதான் ப்ரச்சனையாகிவிட்டது.  என்ன கொடுமை என்றால் அவரை சந்திக்க, அவரிடம் போன் நம்பர் எல்லாம் வாங்கி வைத்து அப்பாயிண்ட்மெண்ட் கேட்க இருந்தேன். அவர் வேறு யாருமில்லை விகடன் ரா.கண்ணன் தான். சாரி சார்.. நிச்சயம் உங்களை மீட் பண்ணனும் எப்ப கூப்பிட..?
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
பதிவர்கள் சிலரோடு வெளியூர் போன போது நான் பேஸ்ட் எடுத்து கொள்ளாமல் போனதால் கூட இருந்த பிரபலபதிவரிடம் கேட்டேன். அவர் எல்லாவற்றையும் சரியாக கொண்டு வந்திருந்தார். அதற்கு அவரை பாராட்டிய போது.. “நான் கல்யாணம் பண்ணிட்டதினால கிடைக்கிற மிகச் சிறிய சந்தோஷத்தில இதுவும் ஒன்ணு” என்றார்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார விளம்பரங்கள்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார குறும்படம்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஜோக்
நீ மட்டும் எனக்கு புருஷனா வந்தே.. உன் சாப்பாட்டுல விஷம் வச்சிருவேன்.
நான் மட்டும் உனக்கு புருஷனா வந்தேன். நிச்சயம் அதை சாப்ட்டுருவேன்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அடல்ட் கார்னர்
இரண்டு கர்பிணி பெண்கள் ஆற்றில் குளிக்க போக, அப்போது முதல் பெண் தன் வயிற்றில் சிங்கக்குட்டி இருப்பதாக சொல்ல, மற்றொருவளோ.. தன் வயிற்றில் புலிக்குட்டியாக இருப்பதாய் சொல்ல, அப்போது அங்கே குளித்துக் கொண்டிருந்த பெரும் தொப்பைகாரனான மளிகைக்கடைக்காரரை பார்த்து “உன் வயித்தில என்ன இருக்கு? “ என்று கேட்க, மளிகைக்கடைக்காரர்  “யானை குட்டி” என்று சொல்ல, அதை எப்படி நம்புறதாம் என்று பெண்கள் கேட்டார்கள். அதற்கு அந்த மளிகைக்காரர் நீ வேண்டுமின்னா தண்ணிக்குள்ள, குனிஞ்சு பாரு.. தும்பிக்கை தெரியும் என்றாராம்.

ஹனிமூன் முடித்து சோர்வாக இருக்கும் தோழியிடம் எப்படியிருந்தது என்று கேட்க, அதற்கு அவள் சொன்னாள். படுபாவி எழுபது வயசான நான் 50 வருஷமா நிறைய சேர்த்து வச்சிருக்கேன்னு சொன்னதை நான் பணம்னு நினைச்சிட்டேன். என்றாள்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


கேபிள் சங்கர்
Post a Comment

29 comments:

THOPPITHOPPI said...

ME THE FIRST

Unknown said...

என்ன கொடுமை இது, Producer கா இப்படி ஒரு நிலைமை,

Truth said...

சேதன் பகத் 3 ஸ்டேட்ஸ் என்று ஒரு புத்தகம் எழுதினாரா? :-) அது 2 ஸ்டேட்ஸாக இருக்கும்.
அது சரி அதிலென்ன சினிமாத்தனம் இருந்தது?

Cable சங்கர் said...

சரி பண்ணிட்டேன் ட்ரூத்.. நன்றி.. டைப்பிங் மிஸ்டேக்.. அம்மாவுக்கு சான்ஸ் வாங்கி கொடுத்து கரெக்ட் செய்வது, வீட்டில் பாடம் சொல்லிக் கொடுப்பது என்பது போன்ற பல விஷயங்கள்..

dondu(#11168674346665545885) said...

என்ன கோயின்சிடன்ஸ் பாருங்கள். இப்பதிவில் எழுதியுள்ளீர்கள், “ஆறடி உயரத்தில் ஸ்மார்ட்டான ஒரு இளைஞர் சிரித்த முகத்துடன் நுழைந்து, தானே வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டார். அவர் வந்ததிலிருந்து ஒரு சந்தேகம் இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று. அவர் போனவுடன் தான் நான் கேட்டேன். அவர் தானா இவர் என்று.. அவர் தான் என்று தெரிந்ததும் நொந்து போய்விட்டேன். முகப்புத்த்கத்தில் மூலம் அவரது போட்டோவை பார்த்திருக்கிறேன். என் கற்பனையில் அவரை பற்றிய ஒரு உருவகம் வைத்திருந்ததுதான் பிரச்சினையாகிவிட்டது. என்ன கொடுமை என்றால் அவரை சந்திக்க, அவரிடம் போன் நம்பர் எல்லாம் வாங்கி வைத்து அப்பாயிண்ட்மெண்ட் கேட்க இருந்தேன். அவர் வேறு யாருமில்லை விகடன் ரா.கண்ணன் தான். சாரி சார்.. நிச்சயம் உங்களை மீட் பண்ணனும் எப்ப கூப்பிட..?”

ஆனால் என்ன வேடிக்கை பாருங்கள், இன்று காலைதான் ஜெயமோகன் பதிவொன்றில் அதே ரா. கண்ணன் பெயரைப் பார்த்தேன். அவர் விகடன் பத்திரிகை தனது தொப்பி-திலகம் கட்டுரை பற்றி விஷமத்தனம் செய்தது பற்றி எழுதியுள்ளார். அவர் எழுதுகிறார்,

//விகடனில் எழுதப்பட்ட அந்த தொடர் வாசகர்களை பெற்றுத்தந்தது. அதைவிட அந்த சர்ச்சை. அந்த சர்ச்சையில் விகடன் செய்தது அல்ல, செய்ய உத்தேசித்ததையே நான் சொல்கிறேன். அங்கே பணியாற்றிய இரு இதழாளர்கள் [கே.அசோகன், ரா.கண்ணன்] அவர்களின் தனிப்பட்ட சாதிப்பற்றில் இருந்து உருவான வெறுப்பு காரணமாக ஒரு வம்பை உருவாக்கி எனக்கு அடிவாங்கி வைக்க முடியுமா என்று பார்த்தார்கள்.//

பார்க்க: http://www.jeyamohan.in/?p=8458

அவரைப் பார்க்க நேர்ந்தால் இது பற்றி விசாரியுங்களேன். அல்லது உங்களுக்கே அதன் பின்புலன் தெரியுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

அண்ணே இன்னைக்கு சந்திப்போம் ...

பிரபல பதிவர் said...

3000 தியேட்டரில் ரிலீஸ் ஆன ஒரு பிராந்திய மொழி படம் மூன்று தியேட்டர்களில் ஃபுல் ஆகாததை நினைத்து சந்தோஷப்படும் வயித்தெரிச்சல் பார்ட்டிகளே.....

உலக நாயகனின் உ.போ.ஒ... மும்பையில் வாங்க ஆளில்லாமல் ஒருவாரம் கழித்து ரிலீஸ் ஆன கதை தெரிந்தால் பதிவாகவோ புத்தகமாகவோ வெளியிடுங்கள்

பிரபல பதிவர் said...

//denim said...
என்ன கொடுமை இது, Producer கா இப்படி ஒரு நிலைமை,

///

பிரசாந்த், கமல் வெச்சு படம் எடுத்தா திருப்பதி வெங்கடாஜலபதிக்கே இந்த நிலைமைதான் ஆகும்... ப்ரொடியூசர்ஸ் எம்மாத்திரம்

Ŝ₤Ω..™ said...

வின்னர் படத்தயாரிப்பாளருக்கே இந்த நிலையா என நினைக்கும் போது கஷ்டமா இருக்கு.. ஹ்ம்ம்ம்ம் “சினிமா வியாபாரம்”ன்னு ஒரு புத்தகம் இருக்குண்ணே.. அதில் இது போல நடக்கறது ஏனென்று விளக்கமா எழுத்தாளர் சொல்லியிருக்காரு.. நீங்களும் படிச்சி பாருங்க..
சூரியனுக்கே டார்ச்..
----------
கலாநிதி மாறனும், ரஜினியும் அவங்க படத்தைப் பற்றி ஆஹா ஓஹோன்னு தான் பேட்டி குடுப்பாங்க.. நீங்க தான் நடுநிலையில பேட்டி குடுக்க முடியும்.. சந்தோஷங்கள்.. வாழ்த்துக்கள்..
----------
//அது நீ எழுதினதுதான்யா.. சும்மா எடுத்து போட்டேன். நீ எழுதினது உனக்கே ஞாபகமில்லையா..? என்று கேட்டு “ஙே” என்று விழிக்க வைத்தார். ///
அண்ணே.. பிரபலமாயிட்டாலே இந்த மாதிரி சங்கடங்கள் வரத்தானே செய்யும்..
----------
விகடன் ரா.கண்ணன் விஷயத்திலும் அதே.. பிரபலமாயிட்டாலே இந்த மாதிரி சங்கடங்கள் வரத்தானே செய்யும்..
----------
பேஸ்டு எடுத்துவந்த அந்த பிரபலப் பதிவர் “அவர்” தானே??? ஹிஹிஹி..
----------
ஒரு மனுஷனோட வேதணையை ஜோக்காக்கிட்டீங்களேண்ணே..
----------
இந்த குறும்படம் பற்றி மிகச்சமீபத்தில் தான் படித்தேன்.. அதே படத்தினை பார்ப்ப்பதற்கு வாய்ப்பளித்ததுக்கு நன்றிண்ணே..

Ahamed irshad said...

அந்த தயாரிப்பாளரின் நிலை ஆச்சரியமில்லை..சினிமாவின் இன்னொரு முகம் அப்படீன்னு ஒரு புத்தகம் எழுதுங்கண்ணே..

வந்தியத்தேவன் said...

சிலருக்கு கமலைத் திட்டாவிட்டால் அன்றைய பொழுது விடியாது. டிக்கெட் விலைக்கு எதிராக ஏன் ரஜனி இதுவரை குரல் கொடுக்கவில்லை.?

Thamira said...

பகிர்வுகள் வழக்கம் போல சிறப்பு.

நான் மூன்றாம் நாள் இரவுக்காட்சி பார்த்தேன் (தாம்பரம்). டிக்கெட் கிடைக்குமா என்ற பயம் வேறு. ஆச்சரியம் யாதெனில் எந்த ஆரவாரமும் இல்லை, முன் வரிசைகள் பல காலியாகவும் கிடந்தன. டிக்கெட் விலைதான் காரணம் என்பதில் சந்தேகமில்லை.

Anand said...

In my home town, film is released in all the five theatres and the rate is 300Rs (normally, 20 rs and for the new film they will charge 50). I knew the theater owner son personally. When I asked him, he told me that this is the amount fixed by SUN pictures.

Unknown said...

நல்லா இருக்குண்ணே!
வின்னர் பட ப்ரொடியூசர்...இப்பிடியும் நடக்குமா? நம்ப கஷ்டமாத்தான் இருக்கு...
ஆமா நீங்க படம் இயக்கும்போது, நான் last assistant அ சேரலாமா? ஓடி வந்திடுவேன் colombo ல இருந்து...
:)

R.Gopi said...

டிக்கெட் விலை குறைப்பு என்பது நடக்காத விஷயம்....

//
வந்தியத்தேவன் said...
சிலருக்கு கமலைத் திட்டாவிட்டால் அன்றைய பொழுது விடியாது. டிக்கெட் விலைக்கு எதிராக ஏன் ரஜனி இதுவரை குரல் கொடுக்கவில்லை.?//

வந்தியத்தேவன்.... டிக்கெட் விலைக்கு எதிராக கமல் குரல் கொடுத்து இருக்கிறாரா... இல்லையென்றால் ஷாருக், அமீர் கான், சல்மான் கான் போன்றோர் கொடுத்து இருக்கிறார்களா??

கேட்கும் விலை கட்டுப்படியானால், வாங்கி பாருங்கள்... இல்லையென்றால், விலை குறையும் வரை காத்திருங்கள்....

R.Gopi said...

டிக்கெட் விலை குறைப்பு என்பது நடக்காத விஷயம்....

//
வந்தியத்தேவன் said...
சிலருக்கு கமலைத் திட்டாவிட்டால் அன்றைய பொழுது விடியாது. டிக்கெட் விலைக்கு எதிராக ஏன் ரஜனி இதுவரை குரல் கொடுக்கவில்லை.?//

வந்தியத்தேவன்.... டிக்கெட் விலைக்கு எதிராக கமல் குரல் கொடுத்து இருக்கிறாரா... இல்லையென்றால் ஷாருக், அமீர் கான், சல்மான் கான் போன்றோர் கொடுத்து இருக்கிறார்களா??

கேட்கும் விலை கட்டுப்படியானால், வாங்கி பாருங்கள்... இல்லையென்றால், விலை குறையும் வரை காத்திருங்கள்....

அருண் said...

வின்னர் பட தயாரிப்பாளர் மீண்டு[ம்] வர வாழ்த்துக்கள்.
இதுவரைக்கும் எந்த படத்துல வொர்க் பண்ணுரிங்கனு சொல்லவேயில்லையே ????
வழக்கம் போல் கொத்து பரோட்டா சூப்பர்.

Srinivas said...

//சென்ற ஞாயிறு மாலைகாட்சி திருச்சியில் ஒரு தியேட்டரில் மொத்த ஆடியென்ஸே.. 60 பேர்தான். அதுதான் சொன்னேன்.. படம்சூப்பர் ஹிட்டானாலும் சில தியேட்டர்காரர்கள் அடிபடுவது நிச்சயம்//

Ticket rate is not at all a matter here...in trichy..quality theatres were very low...Enthiran released in 5 theatres in trichy..

RAMBA , KALAIYARANGAM , OORVASI , CAUVERY n STAR..

RAMBA is too too good..
Kalaiyarangam is a very big theatre
Cauvery - Good

other 2 theatres s not up to the mark compare to above theatres.

Ramba and oorvasi in same complex...

i saw 3rd time last sunday evening in ramba - Huge crowd..huge crowd and also, they want to watch the movie in ramba only and not in oorvasi....

ticket rates same in all theatres...

Box : 300
Rem : 250

ticket is not the only factor....quality of the theatre is very imp:)

charupenline said...

$2.1 million in US in 3 days
http://moviecitynews.com/2010/10/weekend-box-office-report-october-3/

Cable சங்கர் said...

@thoppithoppi
நன்றி உங்கள் முதல் வருகைக்கு

@டெனிம்
ஆமா

@டோண்டு
நிச்சயம் கேட்கிறேன் நேரில்பார்க்கும் போது டோண்டுசார்

@கே.ஆர்.பி.செந்தில்.
இன்னைக்குமா?

@சிவகாசி மாப்பிள்ளை
அலோ.. வியாபாரம் புரியாமல் பேசக்கூடாது.. எந்திரன் என்னதான் ஹிட் படமாக இருந்தாலும் கடைசியில் சில தியேட்டர்காரர்கள் அடிபடப்போவது நிச்சய்ம்.. என்பதுதான் உண்மை.

உ.போ.ஒ.. ஏற்கனவே ஹிந்தியில் வெளியான படம் என்பதால் தான் அந்த மாதிரியான லேட் வெளியீடு.. அதுவும் அந்தஹிந்தி படம் மல்ட்டிப்ளெக்ஸில் தூள் கிளப்பிய படம்.. தெரியுமா..நிச்சயம் இதற்கு மேலும் சில விஷயங்கள் தெரிந்தால் புத்தகமாய் போட நான் ரெடி..பப்ளிஷ் பண்ண நீங்க ரெடியா.. :)

இவ்வள்வு சூப்பர் ஹிட படமான எந்திரன் தமிழகத்தின் ஒரு முக்கிய நகரத்தில் வெளியாகவே இல்லையாம் அது தெரியுமா?:)

Cable சங்கர் said...

@சிவகாசி மாப்பிள்ளை
அவர் பிரசாந்தை வைத்து மட்டுமே படமெடுத்தவ்ர்.. இதுலேர்ந்து தெரியுது. யார் காண்டு பிடிச்சு அலையுறாங்கன்னு..:)

Cable சங்கர் said...

@சென்
நன்றி.. பேஸ்ட் எடுத்து வந்தவர் அவர்தான்..ஹி..ஹி

Cable சங்கர் said...

arshad ahamed
இந்த புத்தகத்திலேயே அதை பற்றி எழுதியிருக்கிறேன் நண்பரே..

@வந்தியத்தேவன்
:))

@ஆதிமூலகிருஷ்ணன்
நிறைய தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்கிறது. கிடைக்கும். நிறைய தியேடடர்களில் வெளியிடுவதில் உள்ள லாபம். அதனால் சில வியாபார நஷ்டஙக்ளும் இருக்கத்தான் செய்கிறது.

@ஆனந்த
சன் நிறுவனம் மட்டுமல்ல.. இன்னும் சில இடங்களில் தியேட்டர் காரர்களே அவர்கள் கொடுத்திருக்கும் எம்.ஜியை நினைத்து ஏற்றி வைத்தே ஆக வேண்டிய சூழ்நிலை.

Cable சங்கர் said...

@ஜீ
வாங்க

@ஆர்.கோபி
:)

@அருண்
பெயர் வைக்கவில்லை இன்னும்

@ஸ்ரீனிவாஸ்
ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமானது முதல் மூன்று நாட்களுக்கு தியேட்டர் பாரபட்ச்மின்றி புல்லாக ஓடும். முதல் வாரத்துகு பிறகுதான்.. தியேட்டர் நிலையை பார்த்து படம் பார்க்கும் மக்களின் பார்வை வரும்.

Srinivas said...

//ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமானது முதல் மூன்று நாட்களுக்கு தியேட்டர் பாரபட்ச்மின்றி புல்லாக ஓடும். முதல் வாரத்துகு பிறகுதான்.. தியேட்டர் நிலையை பார்த்து படம் பார்க்கும் மக்களின் பார்வை வரும்.//

hmm...kandippaaga...

but..60 ppl dhaan trichy la oru theatre la irundhaanngannu neenga sonnadhukku sonnen..

In trichy Ramba theatre...till 70th day, 1st class prebooking 100Rs and counter la 80 and 60Rs for SIvaji the boss.. ran 145 days...

Srinivas said...

Rajni - Box office Baadshaah!!!!!!!

VIRALGAL said...

Neenga enna sonnaalum ivargal thirundha povadhu kidayaadhu. Tamil rasigargalukku therindhadhellaam RAJINI & KAMAL mattumae. Ippodhu varum address illaadha pudhu nadigargal evvalavo nalla nadikiraanga, adhu yaen ivargal kannukku theriyavillai?

தராசு said...

அண்ணே,

என்று ஓயும் இந்த எந்திரன் சர்ச்சை????

Balaji said...

Cable ji,


இவ்வள்வு சூப்பர் ஹிட படமான எந்திரன் தமிழகத்தின் ஒரு முக்கிய நகரத்தில் வெளியாகவே இல்லையாம் அது தெரியுமா?:) ///

antha Oru Karur... today enthiran release in Karur..