Thottal Thodarum

Oct 26, 2010

நிதர்சன கதைகள்-24- தனுகு கொண்டாலம்மா..

Lost_angel_02_by_protogeny
“உங்கள் கதையை படித்துவிட்டு என் மனைவி உங்களை பற்றி திட்டியதை சொன்னால் தூக்கு போட்டுக் கொண்டு விடுவீர்கள்.” என்ற ராஜாராமனின் முகத்தில் தெரிந்த தீவிரத்தை பார்த்து எனக்கு ஆச்சர்யமாகிவிட்டது.

ராஜாராமன் என் நண்பனுடய நண்பன். பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் மிகப் பெரிய பொறுப்பில் இருப்பவர். அவருடய கெஸ்ட் அவுஸில் தான் அன்றைய சாராய, சைட் டிஷ்ஷுகளுடனான இந்த பிரதான சந்திப்பு நிகழ்ந்தது. எடுத்து அடித்த முதல் ரவுண்டிலேயே இப்படி ஆரம்பித்தது எனக்கு பிடித்திருந்தது. சில சமயங்களில் போதையின் போது பாராட்டுதலை விட இம்மாதிரியான கிரிடிஸிசம் நிறைய போதை தரும். ஒரு மிடில் ஏஜ் மாது அவனை விட குறைந்த வயதுடையவனுடன் ஏற்பட்ட உறவிற்கு காதலா? காமமா? என்று குழம்பி, காமத்தில் முடிக்கலாமா? என்று முடித்த கதையை பற்றித்தான் திட்டிக் கொண்டிருந்தார்.

“ஒரு விஷயத்தை படித்தால் அதனால் பல நல்ல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது நம் வாழ்க்கைக்கு வழி காட்ட வேண்டும். ஆனால் உங்கள் கதை என்ன செய்கிறது தெரியுமா? நாம் ஏன் அம்மாதிரி தவறை செய்யக்கூடாது என்று தூண்டுகிறது? இது சமுதாயத்தை கெடுக்காதா..?

”புத்தகம் படித்து ஒருவன் திருந்தி வாழ வேண்டுமென்றால் திருக்குறளை படித்தவன் எல்லாம் நல் வாழ்க்கைதான் வாழ்ந்திருக்க வேண்டும்.”

என்னை கூட்டிப் போன நண்பர் லேசான போதையில் இருந்ததால் கைதட்டி ஆர்ப்பரித்து “அதானே.. தலைவரா.. கொக்கா?’ என்று பெரிதாய் குரல் கொடுத்துவிட்டு இன்னொரு லார்ஜை ஊற்றிக் கொண்டார்.

நான் ராஜாராமனை கூர்ந்து பார்த்தேன். முகத்தில் நிஜமாகவே கோபம் தெரிந்தது. அவரது நாசிகள் இரண்டும் விடைத்து,  பெரிதாய் மூச்சு விட்டார்.

”நான் கதையில் அவள் அவனோடு படுத்தாள் என்று முடிக்கவேயில்லை. படிக்கிறவர்கள் முடிவிற்கு விட்டுவிட்டேன். அப்படியிருக்க அவள் அவனோடு படுத்துவிட்டாள் என்று முடிவெடுத்தது நான் அல்ல.. நீங்கள். இந்த சமூகம்..” என்றதும். ராஜாராமன் “ஸ்மார்ட்” என்று சிரித்தார்.

“இம்மாதிரியான உறவுகள் எல்லாருடய வாழ்க்கையிலும் வரத்தான் செய்யும். நான், என் குடும்பம், என் குழந்தைகள் என்று யோசிக்கும் போது மேலும் இம்மாதிரியான உறவுகள் ஏற்படுத்தப் போகும் சிக்கல்களை நினைத்து பல பேர் ஒதுங்கிவிடுவார்கள்.”

நான் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன். புகையை ஆழ இழுத்து அடைக்கப்பட்டிருந்த அந்த ஏஸி ரூமின் ஜன்னல் கதவினை திறந்து, அதன் வழியே புகையை வெளியிட்டேன். ராஜாராமனும் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டு என்னருகில் வந்தார்.

“என் வாழ்க்கையிலும் இம்மாதிரி ஒரு சிட்சூவேஷன் வந்தது. ஒரு வருஷம் இருக்கும். ஒரு பெரிய ப்ராஜெக்டுக்காக அந்த ஊருக்கு போயிருந்தேன். ஒரு தின்று கொழுத்த ரெட்டியின் சிமெண்ட் பேக்டரிக்கான ஆலோசனை. கிட்டத்தட்ட ஒரு மாதம் நான் அவன் வீட்டின் பின்னால் இருந்த ஒரு கெஸ்ட் அவுஸில் தங்கியிருந்தேன். அப்போதுதான் நான் அந்த தேவதையை பார்த்தேன்”

எனக்கு ராஜாராமனின் ரெட்டி பற்றிய தேவையில்லாத வர்ணனை பிடிக்கவில்லை. அவன் பணக்காரனாக இருப்பதால் தான் இப்படிச் சொல்கிறான் என்று தோன்றியது. இத்தனை பில்டப்பிற்கு பின் ஏதோ ஒரு துரோக கதையிருக்கிறது என்று என்னுள் ஓடும் பல்லி சொல்லியது.

”சொன்னேன் பார்த்தீர்களா ராஜாராமன்? ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இம்மாதிரியான சம்பவங்கள் வந்திருக்கத்தான் செய்யும். என்ன... தப்பு செய்ய சான்ஸ் இல்லாதவன் நல்லவனாக உலா வருவான் அவ்வளவுதான்.”

ராஜாராமனுக்கு கோபம் வந்தேவிட்டது. “ நோ.. இதை நான் ஒரு காலும் ஒத்துக் கொள்ளவே மாட்டேன். நானெல்லாம் நல்லொழுக்கத்தை தவிர எதையும் பின்பற்றியதில்லை எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து” என்று சொல்லியபடி கடைசி பஃபை இழுத்து ஊதிவிட்டு அணைக்க, நான் பார்ப்பதை பார்த்தபடி.. “இது... இந்த சாராயத்தையும் தவிர” என்றான்.

“சரி அதை விடுங்கள்.. கதையை சொல்லுங்கள்” என்று ஆரம்பித்தேன். ராஜாராமனும் ஆர்வத்துடன் ஆரம்பித்தான்.

“அந்த ரெட்டி வீட்டிலிருந்து தினமும் சைட்டுக்கு கிளம்பி போனால் சாயங்காலம் தான் திரும்புவேன். என்னை கவனித்து கொள்ள அனுப்பப்பட்டவனின் மனைவிதான் அவள். என் வாழ்நாளில் இதுவரை எந்த பெண்ணை பார்த்தாலும் அவளை மனதால் கூட அடைய நினைக்காத எனக்கு, அன்று அவளை பார்த்த மாத்திரத்திலேயே அடைய ஆசைப்பட்டது. அவ்வளவு அழகு. பார்த்தவுடன் அப்படியே அள்ளிக் கொள்ளலாம் என்று கை பரபரக்கும். அவளின் அமைதியான சோகம் ததும்பிய கண்களில் முத்தமிட வேண்டுமென்று தோன்றும், அளவான இடுப்பை இழுத்து வளைத்து என் மடிமீது உட்கார வைக்க மாட்டோமா என்று தோன்றும். அந்த செப்பு போன்ற மார்பகங்களை ஆள மாட்டோமா என்றளையும் மனதையும், உடலையும் தடுத்து நிறுத்த நான் பட்ட கஷ்டம் இதுவரை என் வாழ்வில் கண்டதில்லை”

அவளை பற்றி சொல்லும் போது ராஜாராமனின் கண்களில் ஒருவிதமான ஒளி தெரிந்தது. என்னால் அவளுக்கு ஒரு உருவம் கொடுக்க முடிந்தது.

“ஒவ்வொரு முறையும் அவளுக்கும் எனக்கும் ஏதாவது நடந்துவிடுமோ என்ற பயம் எனக்கும் அவளுக்கும் இருந்து கொண்டேயிருந்தது. கொஞ்சம் முயன்றால் நிச்சயம் முடித்துவிடலாம். ஆனால் அவளை தேவதையாய் பூஜிக்கும் அவன் கணவனின் நிலையையையும், என் மனைவியையும் மனதில் நினைத்த போது என்னால் துரோகம் செய்ய முடியவில்லை. நான் கிளம்பும் கடைசி நாள் வரை அவளுக்கும் எனக்குமிடையே எந்தவிதமான ஒரு உடல் ரீதீயான தொடர்பு ஏதுமின்றி என் கார்டை மட்டும் கொடுத்து விட்டு கிளம்பிவிட்டேன்.”

எனக்கு பொசுக்கென ஆகிவிட்டது. “இதற்குத்தான் இவ்வளவா?”. ஒரு வேளை ராஜாராமன் தன்னை நல்லவன் என்று காட்டிக் கொள்வதற்காக பில்டப் செய்கிறாரோ? என்று கூட தோன்றியது. 

”இல்லை பொறுங்கள். பொறுங்கள்.. இதற்கு பிறகுதான் கதையே.. அவளிடமிருந்து போன மாதம் போன் வந்தது. முதலில் சாதாரணமாய் பேச ஆரம்பித்தவள் கொஞ்சம் கொஞ்சமாய் செடக்டிவ்வாக பேச ஆரம்பித்தாள். தன் கணவன் மிக நல்லவன் ஆனால் தன் உணர்வுகளை புரிந்து கொள்ளாதவன். தன்னை தேவதையாக பூஜிக்கிறானே தவிர ஆண்டு ஆள மாட்டேன் என்கிறான். என்னால் முடியவில்லை என்றாள். அதன்பிறகு அவளுக்கு எனக்குமான போன் தொடர்பு அதிகமானது. ஒரு நாளில் சில மணி நேரங்கள் வரை.”

”என்னால் அவளை பேச வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. அவளை இக்னோர் செய்ய முடியவில்லை. அவளின் குரலில் தெரியும் தாபத்தையும், விரகத்தையும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலிருந்தது. நான் ஒரு விதமான போன் செக்ஸ் வக்கிரம் பிடித்தவனோ என்று கூட தோன்றியது. என்னை அவளுக்கு ரொம்ப பிடித்து போனதாக சொன்னாள். அதனால் தான் இவ்வளவு பேசுகிறேன். எனக்கு தெரியும் உங்களுக்கும் என் மேல் அன்பு உண்டென்று. உங்களை தவிர என்னால் இவ்வளவு வெளிப்படையாய் யாரிடமும் என்னால் கேட்க முடியுமா என்று தெரியவில்லை என்றாள்.”

ராஜாராமனின் கண்கள் பளபளவென இருந்தது. நிச்சயம் அதில் காமம் இல்லை என்று சொன்னால் நம்ப மாட்டேன். வேறேதும் கேள்வி கேட்டால் அது ஃப்ளோவை குறைக்குமோ என்றெண்ணி ராஜாராமனையே பார்த்தேன்.

“நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று எனக்கு தெரியும். இவ்வளவுக்கும் பிறகு எந்த கேணயனாவது போனில் பேசிக் கொண்டிருப்பானா என்று தானே?”

நான் அதற்கு ஏதும் ரியாக்‌ஷன் செய்யாமல் இருந்தேன்.

“நான் போனில் தான் பேசினேன். எனக்கும் அவள் மேல் ஆசையிருந்தாலும் என் மனதை சமாதானப்படுத்திக் கொண்டு, இதோ பார் ஏன் இதை பற்றி நீ உன் கணவனிடம் பேசக்கூடாது? மூன்றாவது மனிதனான என்னிடம் இவ்வளவு வெட்கம் விட்டு உன்னை தர விழையும் போது ஏன் உன் உணர்வுகளை உன் உடல், மன தேவைகளை பற்றி அவனுக்கு புரிய வைக்கக்கூடாது?. யோசித்து பார். ஒரு வேளை நான் அங்கு வந்து நமக்குள் ஏதாவது நடந்தாலும் அது பின்னாளில் நம் இருவர் மனதிலும் குற்ற உணர்ச்சியாகத்தான் அலைந்து கொண்டிருக்கும். நிச்சயம் உன்னை தேவதையாய் தாங்கும் உன் கணவன் உன்னை புரிந்து கொள்வான். இதன் பிறகு நீ எனக்கு போன் செய்யக்கூட நேரமிருக்காதுன்னு சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன். அதன் பிறகு அவளிடமிருந்து எந்தவிதமான தகவல்களும் இல்லை. என்னால் ஒரு பெண்ணின் மனம் சஞ்சலம் அடைந்தாலும் அவளை நேர்வழி படுத்தியதை நினைத்து என்ன நானே மெச்சிக் கொண்டிருக்கிறேன். இப்போது சொல்லுங்கள் நான் உங்களுக்கு ஒரு உதாரண புருஷனாக தெரியவில்லை?”

அவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.

“ராஜாராமன் நீங்கள் சொன்ன அந்த பெண்ணின் ஊர் தனுக்கா?”

“ஆமாம்”

“கோதாவரி மாவட்டம். ரங்கராஜ ரெட்டியின் சிமெண்ட் பேக்டரிக்குதான் நீங்கள் வேலைக்கு போனீர்களா?”

“ஆமாம்.. ஏன்?”

“அவள் பெயர் கொண்டாலம்மாவா..?”

“அட.. உங்களுக்கெப்படி தெரியும்?”

“அந்த பெண் போன வாரம் அவளின் கணவனால் உயிரோடு கொளூத்தப்பட்டாள். என்ன காரணம் தெரியுமா? தன் உடல் சார்ந்த ஆசைகளை பூர்த்தி செய்யச் சொல்லி அவள் கேட்டதால் அவளின் மேல் சந்தேகப்பட்டு, அவளை உயிரோடு கொளுத்தியிருக்கிறான் அவள் கணவன்.” என்று நேற்றைய பத்திரிக்கையை எடுத்து ராஜாராமன் முன் போட்டேன்.

ஒரு சின்ன கட்டத்தில் கருகிப் போன ஒரு பெண்ணின் உடலை படமெடுத்து போட்டிருந்தார்கள். பக்கத்தில் அவளுடய பழைய திருமண படத்தையும் போட்டிருந்தார்கள். நிஜமாகவே தனுகு கொண்டாலம்மா.. ஒரு தேவதைதான்.. ராஜாராமன் கண்களில் கண்ணீருடன்..

“நான் அவளுக்கு அந்த அட்வைஸ் செஞ்சிருக்க கூடாதோ  சார்..?” என்றார்.

கேபிள் சங்கர்

Post a Comment

25 comments:

Praveenkumar said...

கதை நல்லாயிருக்கு..!! தனுகு என்றால் என்ன சார் அதுதான் புரியல..!!

Mohan said...

எல்லோருக்கும் பிடித்த மாதிரி எப்போதும் கதை எழுத முடியாதென்றாலும்,ஏனோ தெரியவில்லை;எனக்கு இந்த கதையின் முடிவு பிடிக்கவில்லை கேபிள் சார்.

Selvamani said...

Ithellam Nadanthukondu than ullathu Uzhgathil..

S.Selvamanikandan

Unknown said...

இந்தக்கதையின் முடிவு சரியாக இருக்கிறது ,,, வாழ்வில் முரணான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. சபலம் இருந்தாலும் ஒரு சூழ்நிலையில் நாம் நேர்மையாளனாக மாறுகிறோம் என்பதும் தற்காலிகம் அல்லது செயற்கையாகத்தான் இருக்கும்..

Raj said...

Dear Shankar..
I remember that one time I read an article that saying about the bachelors (who works in Saudi arabia) getting problems while marriage. I forgot where i read.. could you upload the link again.. (coz Im going to marry & I work in saudi arabia)
:-))

vinthaimanithan said...

க்ளைமாக்ஸ் என்னவோ சரிதான். ஆனால் கதையில் ஒரு க்ரிப் இல்லையே தல? நான் ஒருமுறை இந்த கதையை எழுதிப்பார்க்கட்டுமா?

iniyavan said...

கேபிள்,

கதை சொல்லிய பாங்கு மிக அருமை. நல்ல நடை. கதையின் முடிவு??? நினைக்கவே வேதனையாக உள்ளது.

பரிசல்காரன் said...

//ஏஸி ரூமின் ஜன்னல் கதவினை திறந்து, அதன் வழியே புகை வெளியிட ஆரம்பித்தேன்//

உங்கள் ஏ ஸி ரூம் புகையாகிவிடக்கூடாது என்பதற்காக பொதுக் காற்றில் புகையை விட்ட உங்கள் சமூக அக்கறையின்மையைக் கண்டிக்கிறேன்.

இப்படிக்கு
பொறுப்பு பொன்னுச்சாமி.


(கதை பற்றிய கருத்தை ஏற்கனவே சொல்லீட்டேன்ப்பா!)

பரிசல்காரன் said...

அப்பாலிக்கா......

இது நிதர்சனக் கதையா... நிதர்சனக் கதையெல்லாம் ஏன்யா எழுதறன்னு கேட்கறவங்களுக்கு ரிப்ளைக் கதையா?

செம KNOT!

Sendhilkumar AV said...

Intha kadhaya sujatahvin thernthedutha sirukathakal bookla pottiruntha - yaarukkumae therinthirukkadhu ithu avar ezuthalainnu..
good attemp !
Cheers, Saidhaa Sendhil

வெண்பூ said...

செம‌.... வெளியாளா இருந்துட்டு புருச‌ன்ட்ட‌ உன் தேவைக‌ளை சொல்ற‌வ‌னும் ஒரு ஆண், தேவைக‌ளை சொன்ன‌தும் ச‌ந்தேக‌ப்ப‌டுற‌வ‌னும் ஒரு ஆண்.. ந‌ல்ல‌ முரண்..

ஈரோடு கதிர் said...

சூப்பர்!

Unknown said...

Good one!

Unknown said...

கதை சொல்லிய விதம் அருமை. இது அன்றாடம் அனைவர் வாழ்விலும் நடக்கும் சம்பவங்கள். இதனை தாண்டி வெளிவருபவர்கள் மிகச்சிலர்.

venkatapathy said...

நியாயம் செத்து போச்சு! தர்மம் செத்து போச்சு! பெண் மனதை அறிந்தவர் உலகில் இருக்கலாம்... உணர்ந்தவர் எவன் சார் இருக்கான். கதை மனசை பிசையுது.

அமர பாரதி said...

கேபிள், கதை அருமை. இந்த சிறுகதைத் தொகுப்புக்கு அருமையான வரவேற்பு கிடைக்கும் என்பது உறுதி. வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

ஐ... இப்பத்தான் கவனிக்கறேன்..

24 ஆச்சா..!!!

அடுத்த புக் ரெடி!

இன்னொண்ணையும் எழுதுங்க.. அதை ப்ளாக்ல போடாம வெளிடப்போற புக்ல போடுங்க... வெளியிடாத கதையுடன்னு விளம்பரம் பண்ணுங்க..

க்விக்.. க்விக்....

வெண்பூ said...

//
விளம்பரம் பண்ணுங்க
//

ஹி..ஹி.. ப‌ரிச‌ல், யாருகிட்ட‌ என்ன‌ சொல்றீங்க‌.. :))

vinu said...

பரிசல்காரன் said...
அப்பாலிக்கா......

இது நிதர்சனக் கதையா... நிதர்சனக் கதையெல்லாம் ஏன்யா எழுதறன்னு கேட்கறவங்களுக்கு ரிப்ளைக் கதையா?

செம KNOT!


:already sandai pottu mudinchaachu paricall

லதாமகன் said...

செம‌....

ம.தி.சுதா said...

கதை ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது....

sriram said...

”வாவ்” சொல்ல வைத்த கதை கேபிள்..
அருமை

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Selvamani said...

Nice One Cable Sir,


லேட்டஸ்ட் தமிழ் சினிமா படங்களுக்கு

Tamil Movie Gallery

Cable சங்கர் said...

@பிரவீன்குமார்
நன்றி. தனுகு என்பது ஆந்திராவில் உள்ள ஒரு ஊர்

@மோகன்
வாழ்க்கையும் சில சமயம் அப்படித்தான் இருக்கிறது மோகன் என்ன செய்ய..?


@செல்வமணி
ம்

@கே.ஆர்.பி.செந்தில்
:(

@ராஜ்
பார்க்கிறேன்

@விந்தைமனிதன்
அப்படியா..?
@என்.உலகநாதன்
நன்றி.. தலைவரே

@பரிசல்காரன்
வந்துட்டான்யா..

@பரிசல் காரன்
இதுதான் செம நாட்டு

@செந்தில்குமார்
நன்றி

@வெண்பூ
:)

@ஈரோடு கதிர்
நன்றி தலைவரே..

@ராஜேஷ்
நன்றி

@குமரன்
ஆமாம்

@வெங்கடபதி
ம்

@அமரபாரதி
உங்கள் ஆசீர்வாதன்ம்

@பரிசல்காரன்
போட்டுட்டா போச்சு

@வெண்பூ..
அலோவ்... நான் என்ன... அவரா?
:))

@வினு
நீங்க போட்டதெல்லாம் சண்டையா..?

@இராமசாமி கண்ணன்
:))

@லதாமகன்
நன்றி

@ம.தி.சுதா
நன்றி

@ஸ்ரீராம்
நன்றி உங்களுக்காக கவிதை ஒண்ணு எழுதி வச்சிருக்கேன்

@செல்வமணி
நன்றி

Thamira said...

எனக்கு இந்தக் கதை ரொம்பப் பிடித்திருக்கிறது. கொஞ்சம் புதிதாக இருந்ததால் என நினைக்கிறேன். சமீபத்திய உங்கள் கதைகளில் பெஸ்ட் எனச் சொல்வேன். நேரேஷன் இதை நிஜ சம்பவ‌ம் போல உணர வைக்கிறது.