Thottal Thodarum

Sep 30, 2010

தமிழ் சினிமாவும் வரி விலக்கும்.

தமிழ் சினிமாவிற்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று ஒரு சட்டம் நம் மாநிலத்தில் இருக்கிறது. இதை பற்றிய நிறைய ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்கள் இருக்கத்தான் செய்கிறது.  என்ன தான் தமிழ் சினிமாவை வாழவைப்பதற்காக தமிழக முதல்வர் அவர்கள் செய்த பெரும் உதவி என்று திரைத்துறையினர் பாராட்டினாலும். நிஜத்தில் வரி விலக்கு என்று வரும் போது யாருக்கு அனுகூலம் ஆகியிருக்க வேண்டும்?.

வருடத்திற்கு சுமார் 50 கோடி ரூபாய் வரை அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறது இச்சட்டத்தின் மூலம். ஒரு காலத்தில் காந்தி, காமராஜ், மற்றும் தேசபக்தியை பறைசாற்றும் திரைப்படங்கள், நல்ல சமூதாய சீர்திருத்த கருத்துகள் சொல்லும் படங்களுக்கு வரிவிலக்கு கொடுப்பார்கள். அப்படி கொடுக்கப்படும் வரிவிலக்கானது பத்து ரூபாய் டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வரி என்றால் வரிவிலக்கு பெற்ற படத்தின் விலை ஒன்பது ரூபாய்க்கு மக்களுக்கு அளிக்கப்படும். அதாவது வரிவிலக்கின் முழு அனுகூலம் படம் பார்க்கும் பொது மக்களுக்கு அளிக்கப்படுவதால் மேலும் பலர் திரையரங்குக்கு வந்து படம் பார்ப்பார்கள். சிறந்த கருத்துகளும் மக்களீடையே சென்று சேரும் என்றும் தான் வரி விலக்கு கொடுக்கப்பட்டது.

ஆனால் இன்றைய கால கட்டதில் அப்படியா நடக்கிறது. தமிழ் படங்களுக்கு  தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்றவுடன் தமிழிலேயே அகராதி வைத்து புரிந்து கொள்ளும்படியான பெயர்களை வைத்துக் கொண்டு முழு வரிவிலக்கு பெற்ற படங்களின் வரி அனுகூலங்கள் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தான் போகிறதே தவிர, படம் பார்க்கு பொது மக்களாகிய நமக்கு எந்த விதமான பலனும் கிடையாது. முன்பு இருந்ததைவிட பத்து மடங்க விலை ஏறித்தான் விட்டது.

இந்த ஐம்பது கோடி வருமானம் கூட, டிசிடிஓவுக்கு ரெகுலர் கட்டிங் கொடுத்து அரைகுறையாய் கொடுத்த வரிதான். அதுவே அப்படியிருக்க.. ஒழுங்காக கட்டினால் இன்னும் பல கோடிகள் நிச்சயம் அரசுக்கு வருமானம் கிடைக்கும். வெறும் டாஸ்மாக்கை வைத்துக் கொண்டு ஜல்லியடிக்க வேண்டாம். அது எப்படி ஏமாற்றுவார்கள் என்று தெரிந்து கொள்ள வழக்கம் போல சினிமா வியாபாரம் புத்தகம் படியுங்கள்..ஹி..ஹி..

அட்லீஸ்ட் சின்ன பட்ஜெட் படங்களுக்கு வரிவிலக்கு கொடுத்தாலாவது இவர்களுக்கு படத்தை வெளியிடுவதற்கு உதவியாய் இருக்கும். மேலும் பல பார்வையாளர்களை தியேட்டரின் உள்ளே அழைத்து வர ஏதுவாகவும் இருந்திருக்கும். நூறு கோடி, இருநூறு கோடிக்கு படம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏன் வரி விலக்கு தேவை?. அப்படியே  வரி விலக்கு கொடுத்தாலும் ஐம்பது ரூபாய்க்குதான் டிக்கெட் விற்க வேண்டும் என்ற சட்டத்தையே கண்டு கொள்ளாமல் எல்லா திரையரங்குளில் எல்லா நூறு, இருநூறு, ஐநூறு என்று வாய்க்கு வந்ததை விலை வைத்து விற்கிறார்கள். இதை தட்டிக் கேட்க யாருமேயில்லையா? நல்ல காலத்திலேயே யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கும் போது.. இப்போது கேட்கவா வேண்டும்.

Sep 28, 2010

Dabangg

dabangg-movie-wallpaper05 வித்யாசமான படங்கள் இந்தியில் வந்து கொண்டிருக்கும் காலத்தில் கஜினி, ஹிந்தி போக்கிரியான வாண்டட் வந்து மீண்டும் ஒரு மசாலா மார்கெட்டை ஓப்பன் செய்த்து என்றால் அதை இன்னும் ஃபோர்ஸாக அடித்து சொல்லியிருக்கிறது தபங்..

தபங் படத்துக்கு போகும் போது ரெண்டு டிக்கெட் வாங்கி போங்கள் ஒன்று உங்களுக்கு, இன்னொன்று உங்கள் மூளைக்கு என்று நம்ம விஜயை கிண்டல் செய்கிறார் போல தொடர் எஸ்.எம்.எஸுகளால் கிண்டல் செய்யப்பட்ட படம் முதல் வாரத்திலேயே சுமார் நூறு கோடியை தட்டியிருக்கிறது.

வழக்கமாய் நல்லவன்/ கெட்டவன், ப்ரச்சனை, நல்லவன் ஜெயிப்பது என்ற வரைமுறைக்குள் வரும் கதை என்றாலும் ஆர்டிஸ்ட் ப்ரெசென்ஸ் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் உணர்த்தும். சும்மா பூந்து விளையாடியிருக்கிறார் சல்மான் கான். ஆரம்ப சண்டைக் காட்சியிலிருந்து, கடைசி க்ளைமாக்ஸ் காட்சிவரை அவர் ராஜ்ஜியம் தான். ஒரு மாதிரியான அரகன்ஸ், நடை, டயலாக் டெலிவரி எல்லாவற்றையும் பார்த்தால் அவர்கள் சீரியஸாகத்தான் படமெடுத்திருக்கிறார்களா? இல்லை தமிழ் படம் போல கிண்டல் செய்திருக்கிறார்களா? என்ற சந்தேகம் நிச்சயம் வரத்தான் செய்யும் அந்தளவுக்கு நிஜமாகவே சீரியஸாய் ஒரு பக்கா மசாலா படத்தை கொடுத்திருக்கிறார்கள்.
Dabangg-Movie-Wallpapers-1சல்மானுக்கு ஒரு வளர்ப்பு அப்பா, அந்த அப்பாவின் மூலம் தன் தாய்க்கு பிறந்த தம்பி, அப்பா எப்போது அவர் மூலம் பிறந்த பிள்ளைக்கு முன்னுரிமை கொடுக்க, அப்பாவுக்கும் மகனுக்கு பிரச்சனை. சல்மான் ஒரு கரப்டட் போலீஸ் ஆபீஸர். கொள்ளையடிப்பவர்களை எல்லாம் தேடி பிடித்து பந்தாடிவிட்டு, அவர்களீடமிருந்து பிடிங்கிப் போகும் பணத்தை லவுட்டி, தேவையிருக்கும் ஆட்களுக்கு உதவுபவர். அதனால் அவரை எல்லோரும் சல்புல் பாண்டே என அழைப்பதற்கு பதிலாய் ராபின்ஹூட் பாண்டே என்றழைக்கும் அளவுக்கு பிரபலம். அவரின் தம்பியோ சோம்பேறி..  ஒரு கட்டத்தில் தாய் இறந்துவிட, குடும்பம் இரண்டாய் பிரியகிறது, இதன் நடுவில் சல்மானின் காதல், தம்பியின் காதல், வில்லன், வில்லனிடம் தம்பி வேலை செய்ய அதனால் பிரச்சனை என்று தொடர் விஷயங்களால் பரப்ரப்பான ஒரு திரைக்கதை அமைய.. அப்புறம் என்ன க்ளைமாக்ஸில் தன் தாயை கொன்ற வில்லனை கொன்று பழிவாங்குகிறார். ஆஸ்துமா நோயாளியான அம்மாவை மூச்சடைக்க வைத்து கொன்ற வில்லனை கொல்லும் ஐடியா.. அடங்கொன்னியா.. சூப்பரப்பூ..
salman_khan_dabangg_movie_Wallpaper13 இப்படி படம் பூராவும் பக்கா மசாலா எண்டர்டெயினரை கொடுத்திருக்கும் இயக்குனருக்கு சரியான தைரியம் வேண்டும். படத்தின் முக்கிய ப்ளஸ் பாயிண்ட் சல்மான் தான். சரியான இடங்களில் பாடல்களை நுழைத்து அதிலும் ஒரு அயிட்டம் சாங், முதல் சண்டை காட்சியும், ஹீரோயினுடனும், அவளின் குடிகார அப்பாவுடன் இருக்கும் போது கொலை முயற்சி செய்யும் வில்லன் ஆட்களை போட்டு பந்தாடும் சண்டைக் காட்சியும் அடிதூள்.

க்ளைமாக்ஸில் சண்டையில் சட்டை புஐ புடைப்பில் கிழிந்து தொங்கி பாடி காட்டும் காட்சியில் தியேட்டரில் விசில் ஆச்சர்யமாக இருக்கிறது. ரொம்பவும் புத்திசாலித்தனமான, யோசிக்க வைக்கக்கூடிய படங்களுக்கு மத்தியில் ஒரு பக்கா மசாலாவும் தேவையாயிருக்கிறது மக்களுக்கு என்று கரெக்டாக தெரிந்தடித்திருக்கிறார்கள்.

தபாங் – A Masala potpouri

டிஸ்கி: தமிழில் எடுத்தால் பாராட்டுவீர்களா? என்று சில பேர் கேட்பார்கள். நிச்சயம் இதற்கு முன் தமிழில் வந்த போக்கிரி போன்ற படங்கள் மசாலா படங்களே.. ஒரு இண்ட்ரஸ்டிங் நேரேஷன் இருந்தால் யார் பார்க்க மாட்டேனென்பார்கள்?

கேபிள் சங்கர்

Sep 27, 2010

கொத்து பரோட்டா – 25/09/10

priya photo இந்த  குழந்தைக்கு வயது ஒன்பது. இவள் பெயர் ப்ரியா  இவளுக்கு பிறந்ததிலிருந்து சரியாக காது கேட்டதில்லை. இவளுடய மாமா என்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர். அவர் பெயர் கணேசன்.  ப்ரியா ஒரு மாற்று திறனாளிகள் பள்ளியில் படித்து வருகிறாள். இவளுக்கு Cochlear Implantation Surgery  செய்தால் நிச்சயம் கேட்கும் திறன் வந்துவிடும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான எலலா மருத்துவ சான்றிதழ்களையும், மருத்துவர்கள் பரிந்துரைகளையும் பார்த்தேன். இக்குழந்தைக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இந்த அறுவை சிகிச்சையை செய்யாவிட்டால் பின்பு எப்போதுமே செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட ரூபாய் ஒன்பது லட்சம். இவர்கள் முதல்வர் செல்லுக்கும் உதவி கோரியிருக்கிறார்கள். நாமும் நம் பங்கிற்கு உதவலாமே என்ற எண்ணத்தில் உங்களின் பார்வைக்கு வைத்திருக்கிறேன். எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு நம் பதிவுலகம் முன்னுதாரணமாய் இருந்திருக்கிறது. மேலும் இக்குழந்தையின் மருத்துவ சான்றிதழ்கள், மருத்துவர்களின் பரிந்துரை வேண்டுவோர்கள் என்னை தொலைபேசி எண்ணிலோ.. அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். உங்கள் உதவியால் ஒலி பெறப் போகும் ஒரு சிறுமிக்காக..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ஊரெங்கும் எந்திரன் பீவர் ஆரம்பமாகிவிட்டது. முதல் நாளே அங்கே புல் இங்கே புல் என்று சொன்னார்கள். சாரு வேறு என்னிடம் தான் டிக்கெட் கேட்க வேண்டும் என்று அவர் பதிவில் எழுதியிருந்தார். நான் இன்னும் டிக்கெட் வாங்கவில்லை. ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் டிக்கெட்டுக்காக முயலவில்லை. எப்படியும் யாராவது கொடுத்துவிடுவார்கள். எந்திரன் மூலம் மீண்டும் அரசின் விதிமுறையை மிக எளிதாக மீறியிருக்கிறார்கள். சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஏரியாக்கள் மட்டும் சுமார் 80க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் எந்திரன் வெளியிடப்படுகிறது. டுபாக்கூர் தியேட்டரில் எல்லாம் குறைந்த பட்ச டிக்கெட் விலை நூறு, நூற்றி ஐம்பது என்று கொள்ளையடிக்க  ஆரம்பித்துவிட்டார்கள்.  அரசு இதை கண்டு கொள்வதேயில்லை. ம்ஹும்.. எந்திரன் ஃபீவர் பற்றி படிக்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ராம் கோபால் வர்மா டைரக்டர்னு தெரியும். இப்போ பாடகரா அவதாரம் எடுத்திருக்கிறார். நம்ம சூர்யா நடிச்சு விரைவில் வெளிவர இருக்கும் ‘ரத்த சரித்ரா”வில் அவர் தெலுங்கு வர்ஷனில் பாடியிருப்பதாய் தகவல். பார்போம்.. சே.. சாரி.. கேட்போம்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ககாமினி சிறுகதை போட்டிக்கான கடைசி தேதி வருகிற அக்டோபர் பதினைந்தாம் தேதியோடு முடிகிறது. ஏற்கனவே பல கதைகள் வர ஆரம்பித்திருப்பது மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. மேலும் பல சிறந்த கதைகளை அனுப்பி நடுவர்கள் மண்டையை பிய்த்துக் கொள்ள வைப்பீர்கள் என்று நம்புகிறேன். கமான்…ஸ்டார்ட்.. மியூசிக்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீபத்தில் செய்திதாளில் பார்த்த செய்தி கொஞ்சம் கல் மனசையும் உருக்கத்தான் செய்யும். ஒரு தாய் பிறந்து பத்தே நாளான இரண்டு பெண் குழந்தைகளை பால் கொடுக்க போகும் போது ஒரு குழந்தையை கழுத்தை அறுத்தும், அவளுடய தாய் ஒரு குழந்தையை சுவற்றில் அடித்தும் கொன்றிருகிறார்கள். அதற்காக அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளித்திருக்கிறது கோர்ட். அமெரிக்காவில் தன் கணவனின் இன்ஷூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக, கூலிப் படை வைத்து, அவர்களை மயக்க, அவர்களுடன் உடல் உறவு கொண்டும், தன் பதினாறு வயது மகளை அவர்களுடன் உடல் உறவு கொள்ளச் செய்தும், அவர்கள் மூலமாக் தன் கணவனையும், மகனையும் கொலை செய்திருக்கிறாள். அவளுக்கு அமெரிக்காவின் கோர்ட் விஷ ஊசி கொடுத்து மரண தண்டனை கொடுத்து நிறைவேற்றியிருக்கிறது. அவளின் மரண தண்டனையை நிறைவேற்ற கூடாது என்று அமெரிக்கா எங்கும் மரண தண்டனையை எதிர்க்கும் ஆதரவாளர்கள் போர்கொடி ஏந்தினாலும். சென்ற வியாழன் அன்று நிறைவேற்றப் பட்டது. என்னை பொறுத்த வரை இவர்களை கொல்வது தப்பில்லை என்றே தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார தத்துவம்
வெற்றிக்கு பிறகு ஓய்வெடுக்காதே. ஏனென்றால் உன் அடுத்த செயல் தோல்வியடைந்தால், உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் என்று விடுவார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார விளம்பரம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார குறும்படம்
இன்ட்ரஸ்டிங்கான ஒரு சிறுகதை போன்ற குறும்படம். சில காட்சிகளில் டெப்த் இல்லாமல், நடிப்பவர்கள் சொதப்பியிருந்தாலும், டெக்னிக்கலாகவும், ரிச்சாகவும் எடுக்கப்பட்டிருக்கும் படம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
முதலிரவில் மனைவி கணவன் கொண்டு வந்த காண்டம் பாக்கெட்டை பார்த்து வெட்கத்துடன் “ இது எவ்வளவு விலைங்க” என்று கேட்டாள். கணவன்.. தன் மனைவி இவ்வளவு வெகுளியாக இருகிறாளே என்று பெருமையுடன்.. இதுல மூணு இருக்கும், பனானா வாசனையோட.. விலை இருபத்தியந்து ரூபா என்றான். அதற்கு மனைவி அடக் கொடுமையே எனக்கு தெரிந்து என் பதினைந்து வயசில இது நாலணாவாயில்லை இருந்திச்சு என்றாள்.

Santa Singh, woke up after the annual office Diwali bash party with a pounding headache, cotton-mouthed and utterly unable to recall the events of the preceding evening.

After a trip to the bathroom, he made his way downstairs, where his wife put some breakfast in front of him.

'Jaswinder' he moaned, 'tell me what happened last night. Was it as bad as I think?'

'Even worse,' she said, her voice oozing scorn. 'You made a complete ass of yourself. You succeeded in antagonising the entire board of directors and you insulted the president of the company, right to his face.'

'He's an asshole,' Santa Singh said. 'Piss on him.'

'You did,' came the reply. 'And he fired you.'

'Well, screw him!' said Santa Singh.

'I did. You're back at work on Monday.'

சில விஷயங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தால் வேலைக்காகாது.. அதனால்.
கேபிள் சங்கர்

Sep 26, 2010

எந்திரன் ஃபீவர்

en22 தமிழ்நாடெங்கும்.. அல்ல.. உலகமெங்கும் எந்திரன் ஜுரம் ஆரம்பித்துவிட்டது. சாதரணமாகவே ரஜினியின் படங்களுக்கு வெளிவருவதற்கு முன் ஏகப்பட்ட ஹைப் இருக்கும் அதை விட ஏகப்பட்ட ஹைப்பை சன் டிவியின் தயாரிப்பு என்பதால் மேலும் எகிறிக் கொண்டிருக்கிறது. எந்திரன் போஸ்டர் ஒட்டினால் கூட அதற்கு ஒரு நிகழ்ச்சி தயாரித்து விளம்பரப்படுத்துகிறது.

இதெல்லாம் இப்படியிருக்க, சென்னை மற்றும் அதன் சப்பர்ப்ஸ் எனப்படும் செங்கல்பட்டு மாவட்ட ஏரியாக்களில் மட்டும் சுமார் என்பதுக்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. (அது என்ன செங்கல்பட்டு ஏரியா என்று கேட்பவர்களுக்கு உடனே சினிமா வியாபாரம் புத்தகம் வாங்கி படியுங்கள்.. சும்மா ஒரு விளம்பரம்தான்.. ஹி..ஹி..) சுற்றிச் சுற்றிப் பார்த்தால் ஒரு வாரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் எல்லோரும் படம் பார்த்துவிடுவார்கள்.

சுமார் இருநூறு கோடியளவில் இந்தியாவிலேயே அதிக செலவு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டிருக்கும் படம் என்பதால் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மட்டுமல்ல, உலகமெங்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சன் டிவி தன் கோட்டையான தெற்கில் முக்கியமாய் தமிழ்நாட்டில் இப்படத்தின் வியாபாரத்தை பற்றி பெரிதாக அலடிக் கொள்ள வில்லை. ஆந்திராவில் இப்படத்தின் தெலுங்கு உரிமையை ஒரு நேரடிப்படத்துக்கு என்ன விலை கிடைக்குமோ அதை விட அதிகமாய் விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். வடநாட்டில் வெளியிட பிரபல விநியோகஸ்தர்களான ஷிங்கார் பிலிம்ஸ் மூலமாய் வெளியிடுகிறார்கள். அமெரிக்காவில் தெலுங்கு வர்ஷனான ‘ரோபோ” வுக்கு இப்போதே இரண்டு வாரங்களுக்கு புல்லாம். நிச்சயம் முதல்  மூன்று நாட்களுக்கு எல்லா தியேட்டர்களில் ஃபுல்லாகத்தான் ஓடும்.

இவ்வளவு செலவு செய்தால் எப்படி சம்பாதிக்க முடியும்? அதற்கான மார்கெட் இருக்கிறதா என்று பல பேர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்படி சிவாஜி, தசாவதாரம் காலத்தில் அந்த படங்களை பார்த்தாச்சா? என்று யாரை பார்த்தாலும் கேட்டார்களோ.? அதைவிட மூன்று மடங்கு எதிர்பார்ப்பு இருக்கும் பட்சத்தில், சிவாஜியை விட தசாவதாரத்தை விட அதிக தியேட்டர்களில் ஒரே நேரத்தில் வெளியிடப்படப் போகும் படமாய் எந்திரன் அமையப் போகிறது.

ஒரு கணக்குக்காக : சுமார் 2500 திரையரங்குகளில் எந்திரன் உலகமெங்கும் வெளியாகப் போகிறது. ஒவ்வொரு தியேட்டரிலும் சிறப்பு காட்சிகளை கணக்கில் கொள்ளாமல் நான்கு காட்சிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு திரையரங்கிலும் சுமார் 500 சீட்டிங்க் கெப்பாசிட்டி என்று வைத்துக் கொள்வோம். தமிழகத்தில் பெரும்பான்மையான திரையரங்குகளில் 700-800 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அரங்குகள் தான் அதிகம் என்றாலும் ஆவரேஜாக 500க்கு குறைந்த பட்சம் ரூ நூறுக்கு ஒர் டிக்கெட் விற்றால் வரக்கூடிய கணக்கு

ஒரு நாளைக்கு 2500 தியேட்டர்கள் X டிக்கெட் விலை 100 X இருக்கைகள் 500 = 12,50,00,000  ஒரு காட்சிக்கு என்று கணக்கிட்டால் ஒரு நாளைக்கு எவ்வளவு என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். நிச்சயம் சன் டிவியை பொறுத்தவரை இது ஒரு வெற்றிப் படம் தான். இதைத்தவிர, இவர்கள் ஆடியோ, வீடியோ, சாட்டிலைட், வெளிநாட்டு உரிமை என்று பல விதங்களில் கல்லா கட்டியிருப்பார்கள். படத்தை தங்கள் திரையரங்குகளில் வெளியிட பெரிய எம்.ஜி கொடுத்து போட்டிருக்கும் திரையரங்க உரிமையாளர்கள் லாபமடைந்தார்களா? என்பதை பொறுத்திருத்துதான் பார்க்க வேண்டும். அதுதான் ஒரு நாளில் இவ்வளவு வசூல் ஆகிறதே என்று கேட்பவர்களுக்கு ( மீண்டும் ஒரு சின்ன விளமப்ரம்: சினிமா வியாபாரம் படியுங்கள் புரியும்.)
 சிவாஜி மிகப் பெரிய வெற்றிப் படம்தான் ஆனாலும் கை கடித்துக் கொண்ட சில திரையரங்கு உரிமையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஹி..ஹி.. நானும் ஒரு குட்டி சன் டிவி தான்..
டிஸ்கி: நேற்றிரவு டபங் பார்க்கும் போது எந்திரன் டிரைலர் பார்த்தேன். ….
கேபிள் சங்கர்

Sep 24, 2010

எண்டர் கவிதைகள்-13

Sorrow_by_Diet_Kirk இன்றென்ன காட்சி

என்ற புதுமுகத்திடம்

ஹீரோ ரேப் என்றேன்

அவள் தெலுங்கில்

முகத்தில் மென் சோகத்துடன்

சிரித்தபடி சொன்ன

 வார்த்தைக்கு

அர்த்தம் கேட்டேன்

திரும்பவுமா?

என்றத்தமாம்.
கேபிள் சங்கர்

Sep 22, 2010

எண்டர் கவிதைகள்-12

dancing_girl_by_Nizira_Hathor
ஆறு வயதில்

உடை மாற்ற வேண்டுமென்றால்

தனியறைக்கு போ என்றடித்தவள்

பதினாறு வயதிலும்

அதையே சொன்னாள்

நானும் கதவடைத்து

உடை மாற்றினேன்

இன்று நூறு பேர்

முன்னிலையில் குதித்தாட

உள்கச்சை வேண்டாமென்றாள்

காரவன் வாசலில் காவல் காக்கும்


 என் அம்மா அந்த

உதவி இயக்குனனிடம் சொன்னாள்

“பேபி.. டிரஸ் மாத்துதென்று

அவளுக்கு நான் இன்னமும்

பேபி தான்.

Kommaram Puli

komaram_puli_heroine_nikesha_patel_wallpapers_03

சில வருஷங்களாய் தெலுங்கு சினிமா கொஞ்சம் நன்றாக இருந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை. சமீப காலமாய் நொந்து நோகடித்துக் கொண்டிருக்கிறது. அந்த லிஸ்டில் இந்த படம் கொம்மரம் புலி. இந்த புலிக்கு சொந்தக்காரர் எஸ்.ஜே.சூர்யா. புலியாக வருபவர் ஆந்திர பவர் ஸ்டார் பவன் கல்யாண். இவரது பெயிலியர் படமே கோடிக்கணக்கில் வசூல் கொடுக்கும் நடிகர்.

இரண்டு வருடஙக்ளுக்கு ஒரு முறையோ, மூன்று வருடஙக்ளுக்கு ஒரு முறையோ ப்டம் வெளியிடுபவர். மொத்த ஆந்திர தேசமே.. காத்துக் கொண்டிருந்த படம். எனக்கு ட்ரைலர் பார்த்த போதே ஒரு பி கிரேட் படம் இதை விட பெட்டராக இருக்கக்கூடும் என்று நினைத்திருந்தேன். அதை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது படம்.

ரொம்ப வருஷங்களுக்கு முன் வந்த பனிஷர் என்கிற படத்தின் உட்டாலக்கடியாக ஆரம்பித்து, அப்புறம் தேவையில்லாமல் அய்யப்ப தரிசனம் படமாய் ஆரம்பித்து அவ்வப்போது பக்தி, நாட்டுபற்று ஜல்லியடித்தால் தேறிவிடும் என்று எந்த நம்பிக்கையில் எஸ்.ஜே.சூர்யா நம்பினார். மகாநடிகன் என்கிற படத்தில் ஒரு காட்சி வரும் அதில் இரண்டு இயக்குனர்கள் சத்யராஜுக்கு கதை சொல்வார்கள். அதில் ஒருவர் ஹீரோவுக்கு ஹீரோயினை விட ஒரு வயசு குறைவு.. என்று ஏற்றிவிடுவார். இன்னொருவரோ.. பிறக்கும் குழந்தையே நீங்கதான் சார் என்றதும் பட வாய்ப்பை பெறுவார். அது போல சூர்யா கதை சொல்லியிருப்பார் போலிருக்கு.
pawan_kalyan_komaram_puli_photos_wallpapers_stills_01 முதல் காட்சியில் புலியின் அம்மா காட்டு கோயிலில் என் புருஷனை கண்டு பிடித்து கொடு, என்னை போன்ற போலீஸ்காரன் பொண்டாட்டிக்கே இந்த கதி என்றால் மக்களுக்கு என்ன கதி என்று தனியாய் காட்டில் இருக்கும் அய்யப்பனிடம் கேட்க, உடனே அங்கிருந்து லைட் வர, அம்மா வாந்தியெடுக்க, வயிற்றில் கருவாய் உதிக்கும் புலிக்கு அய்யப்பன் ஆதரவு அளிப்பதாய் ஆரம்பித்த காட்சியை சொல்லும் போது உங்களூக்கு புரிந்து போயிருக்கும் புலி எப்படி கலக்கியிருப்பான் என்று.
pawan_kalyan_komaram_puli_photos_wallpapers_stills_03 கொஞ்சம் கூட கற்பனை இல்லாத காதல் காட்சிகள், நல்ல பாடல்கல் தனியாக் கேட்கும் போது இருக்கும் சுகம் கொஞ்சமும் இல்லாத படமாக்கல். தெளிவில்லாத ஸ்கிரீன் ப்ளே, மூன்றாம் தர சி.ஜி.வேலைகள். மீடியோகேர் ஒளிப்பதிவு, என்று இவ்வளவு மைனஸ் இருந்தும், கொஞ்சம் நேரமாவது உட்கார முடிவதற்கு காரணம் ஒரே ஒரு விஷயம். நான் பார்த்த எஸ்கேப் தியேட்டரின் ஆம்பியன்ஸும், பவன் கல்யாணின் ஒரு சில காட்சிகளீன் பர்பாமென்ஸும்தான். அது கூட என்னை போன்ற பவன் ரசிகரால் தான் ரசிக்க முடியும் மற்றவர்களுக்கு .. வேண்டாம் ஏதும் சொலல் விருப்பமில்லை.

நல்ல வேளை விஜய் இந்த கதையை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். க்ரேட் எஸ்கேப்.

kommaram puli – எலி.

கேபிள் சங்கர்

Sep 20, 2010

கொத்து பரோட்டா 20/09/10

சென்ற வெள்ளி அன்று காலையிலிருந்து வேறொரு இடத்திலும், இரவு பீச் ரோட்  விவேகானந்தா இல்லம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அடுத்த நாள் காலை 5 மணி வரை படப்பிடிப்பு நடந்தது. இரவில் பதினோரு மணிக்கு பிறகு, அங்கு யாருடய வண்டியையும் வைக்க அனுமதிப்பதில்லை, போலீஸார். பீச்சில் படுப்பவர்களை கூட எழுப்பிவிடுகிறார்கள்.  பீச் மிகவும் அழகாக்கப்பட்டு, நல்ல கொரியன் லாண்ட் ஸ்கேப் எல்லாம், செய்யப்பட்டு, டைல்ஸுகளால் பளபளக்க வைத்திருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு செய்தவர்கள் இருபதடிக்கு ஒரு குப்பை தொட்டியை வைத்திருக்கலாமே..? அன்று இரவில் படப்பிடிப்புக்காக கொண்டு வரப்பட்ட சாப்பாட்டு மிச்சங்கள், டீ, காபி பேப்பர்கள் எல்லாமே குப்பை தொட்டி என்று ஒன்று இல்லாததால் கண்ட இடத்தில் போடப்பட்டது. எங்கள் குழுவினருடன் நான் இதை சொல்லி, வேண்டுமானால் ஒரு கோணிப்பையில் எல்லாவற்றையும் சேகரித்து பின்பு குப்பை தொட்டியை தேடி போடலாமே என்று கேட்ட போது.. “வேலைய பாத்துட்டு போங்க சார்.. கவர்மெண்ட்டுக்கே அக்கறையில்லை.. நீங்க பெருசா கவலைப் பட்டு..”என்றனர். அரசு இவ்விஷயத்தை எடுத்துக் கொண்டு கடற்கரை எங்கும் குப்பை தொட்டிகளை இருபதடிக்கு ஒன்று என்ற விகிதத்தில் நிறுவுமா..?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தெரிந்தே பாழும் கிணற்றில் விழுவது என்பது போல நானும் கே.ஆர்.பியும் நேற்று சென்னையின் புதிய அடையாளமாய் தோன்றியிருக்கும் எஸ்கேப்பில் படம் பார்க்க சென்றோம். பாழும் கிணறு என்று சொன்னது தியேட்டரை அல்ல. எல்லா படங்களும் புல்லாகிவிட்டதால் தேடி வந்த கொம்மரம்புலி சனியனை விலை கொடுத்து வாங்கினோம். எஸ்கேப்பில் பிளேஸ் என்ற அரங்கில் படம் பார்த்தோம். நல்ல ஒளி, ஒலி அமைப்பு, மற்றும் சீட்டிங், ஆளில்லாத ஓப்பன் டிஜிட்டல் ப்ரொஜெக்‌ஷன். ஒவ்வொரு வரிசையிலும், ஒரு கார்னர் மட்டும் இரட்டை சீட்டுகள். கடைசி வரிசை மட்டும் புஷ்பேக் சுவற்றில் முட்டுகிறது. அதனால் ப்ளேஸில் ஏ ரோ கிடைத்தால் போக வேண்டாம். மற்றபடி டிக்கெட் விலையை விட பாப்கார்ன், டிரிங்கின் விலை அதிகமாய் இருக்கிறது. அதை விட அநியாயம் பைக் பார்க்கிங் டிக்கெட்.. 60 ரூபாய். சினிமா விளங்கிடும்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இணையத்தில் எங்கும் பார்த்தாலும் எந்திரன் ஓடுமா? ப்ளாப் ஆகும் எந்திரன். எந்திரன் வியாபாரம் என்று ஆளாளுக்கு ஒரு எந்திரன் பேர் போட்ட ஒரு பதிவை போட்டு வருகிறார்கள். நம்ம சுரேஷ் கண்ணன் கூட  எந்திரன் F.A.Q  என்கிற பெயரில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில் சீனிவாசன், மோகன்லால் நடித்த ஒரு படத்தை பற்றி ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார். எது எப்படியோ சன் டிவியை பொறுத்த வரை இப்படத்தை பற்றி, நல்லதாகவோ, கெட்டதாகவோ பேசிக் கொண்டிருந்தால் அவர்களூக்குத்தான் ஆதாயம். நம் ஆட்களும் எந்திரன் தலைப்பிட்டு எழுதினால் ஹிட்ஸ் வரும் என்று ஆளாளுக்கு எழுதி விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.. அதை பற்றி தேவையில்லாம எழுதி எதுக்கு அவஙக்ளுக்கு இலவச விளம்பரம் கொடுக்கணும். அடச்சே.. நானும் இதை பத்தி எழுதி விளம்பரம் கொடுத்திட்டனோ..? ஹி..ஹி..ஹி..
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
சமீபத்தில் வெளியான தெலுங்கு பவர் ஸ்டாரான பவன் கல்யாணின் கொம்மரம் புலி படத்தின் ரிசல்ட் மொக்கை என்று தீவிர பஞ்சுமுட்டாய் கலர் சட்டை போடும் தெலுங்கு ரசிகன் கூட சொல்லிவிட்டாலும் தன் முதல் வார கலெக்‌ஷன் சுமார் பதினைந்து கோடியாம். இதற்கு முன் வந்த பவன் கல்யாணின் ஜல்சா ஒரு தோல்வி படம் தான் ஆனால் வசூலில் பின்னி எடுத்தது முதல் மூன்று நாட்களில். அப்படம் ரிலீசான போது விஜயவாடாவில் இருந்தேன் அங்கிருந்த மொத்த திரையரங்குகளீல் 70 சதவிகித தியேட்டர்களில் ஜல்சா படம் தான் ஓடியது. பின்பு ஏன் கலெக்‌ஷன் செய்யாது. இப்போது யோசியுங்கள் எந்திரன் கலெக்ட் செய்யுமா? செய்யாதா? என்று..
###################################################################
இந்த வார தத்துவம்
வாழ்க்கையில ஜெயிக்கணும்னா நண்பன் தேவை.. எப்பவுமே ஜெயிச்சிட்டிருக்கணுமின்னா ஒரு நல்ல எதிரி தேவை.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார குறும்படம்.
ஒரு குட்டி காதல் கதையை மூன்று நிமிஷங்களில் ஒரு சிகரெட்டின் வாழ்நாளில் சொல்லி முடித்திருக்கிறார்கள்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார விளம்பரம்
இப்படத்தில் வரும் பாடலை தமிழில் நீங்கள் எங்காவது கேட்டிருந்தால் அதற்கு இந்த விளம்பர இசையமைப்பாளர் பொறுப்பல்ல..
###################################################################
அடல்ட் கார்னர்
ஒரு பெண்ணின் டீஷர்ட்டில் எழுதப்பட மிக இண்ட்ரஸ்டிங்கான வாசகம்
எக்ஸ்க்யூஸ்மி.. என் முகம் மேலேயிருக்கிறது.

ஒழுங்காக படிக்காத பெண் மார்க் வாங்குவதற்காக தனியே ப்ரொபசர் ரூமுக்கு சென்று.. தயவு செய்து நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன் எப்படியாவது என்னை பாஸ் செய்துவிடுங்கள் என்றாள். அதற்கு ப்ரொபஸர் சிரித்தபடி.. அவளை அருகே அழைத்து.. முகத்தை மிக அருகில் இழுத்து, அவள் காதில் “ஒழுங்கா புக்கை எடுத்து படி” என்றாள்.

சர்தாருக்கு ப்ளட் டெஸ்ட் எடுத்த நர்ஸ் ரத்தத்தை எடுத்தவுடன் விரலை வாயில் வைத்து சப்பினாள். சர்தார் மகிழ்ச்சியில் டான்ஸ் ஆட, ஏன் டான்ஸ் ஆடுகிறாய் என்று நர்ஸ் கேட்டாள். சர்தார் குஷியாக.. அடுத்து எனக்கு யூரின் டெஸ்ட். என்றான்.
###################################################################
கேபிள் சங்கர்

Sep 18, 2010

20 தேதி போராட்டம்


இருபதாம் தேதி முதல் எல்லா பெட்ரோல் பங்குகளும் வேலை நிறுத்தம் செய்யப் போகிறார்கள். இவர்களுடய கமிஷன் தொகையான   ஏற்றி கொடுக்க வேண்டும் என்றும், புதிதாக பெட்ரோல் பங்குகளை திறக்க அனுமதிக்க கூடாதென்றும் பெட்ரோல் பங்க் வைத்திருப்போர் சங்கம் முடிவெடுத்து, வருகிற 20ஆம் தேதி காலை 6 மணி முதல் எல்லா பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையங்களிலும், கொள்முதலும், விற்பனையையும் நிறுத்தி வைக்கப் போகிறார்கள்.

இவர்களுடய கோரிக்கைக்காக போராடுவதில் தவறில்லை. ஆனால் அது பொது மக்களை பாதிக்கும் என்று இருக்கும் போது அதற்கான எதிர்விளைவுகளை யோசித்து இவர்கள் போராட்டத்தை நடத்த வேண்டும். ஒரே ஒரு நாள் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் இல்லையென்றால் எவ்வளவு விஷயங்கள் பாதிக்கும். ஒரே நாளில் எவ்வளவு பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும், பொது மக்களுக்கு எவ்வளவு விதமான கஷ்டங்கள்.

சக்கரம் கட்டி சுழலும் காலத்தில் மொபிலிட்டி என்பது எவ்வளவு முக்கியம் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படியிருக்க இப்போராட்டம் இந்தியாவின் மொபிலிட்டியை முடக்கும் விஷயமாகவே தெரிகிறது. நமது மத்திய அரசும், இவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களுடய கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும், என்றும் பொது மக்களுக்கு இடர்பாடு விளைவிக்க வேண்டாமென்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அரசு இவர்களுடய முக்கிய கோரிக்கையான கமிஷன் பிரச்சனையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது. மொத்த விற்பனையில் குறைந்த பட்சம் ஐந்து சதவிகிதமாகவது கொடுக்க வேண்டும் எனறு கேட்கிறார்கள் பங்கு உரிமையாளர்கள். ஆனால் அப்படி கொடுத்தால் அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஐம்பதாயிரம் கோடி நஷ்டம் வரும் என்கிறார் முரளி தியோரா.

போன வாரம்தான் அரசு இவர்களுடய கமிஷனை 9 பைசா லிட்டருக்கு பெட்ரோலுகும், 8 பைசா லிட்டர் டீசலுக்கும் ஏற்றியது. இதன் இம்பாக்ட் தான் சென்ற வார பெட்ரோல் விலை உயர்வு. இது இப்படியிருக்க, இவர்களுடய இன்னொரு கோரிக்கைதான் அநியாயமாக இருக்கிறது. புதிதாக எங்கும் பெட்ரோல் பங்க திறக்க அனுமதிக்க கூடாது என்பதுதான். இந்தியாவில் இன்றும் பெட்ரோல் பங்குகளுக்காக சிறு சிறு ஊர்களில் இருப்பவர்கள் கிலோ மீட்டர் கணக்கில் பயணித்து பெட்ரோல் போடுபவர்கள் இருக்கிறார்க்ள் இன்னும் நிறைய இடங்களில் பெட்ரோல் பங்குகள் திறக்க வேண்டியுள்ளது. அப்படியிருக்க ஒவ்வொரு ஏரியாவிலும் மோனோபாலியாக இருப்பதற்கு அரசை மிரட்டி பணியவைப்பது போல கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்ன நியாயம்? மார்க்கெட்டின் தேவையை நிர்ணையிக்க இவர்கள் யார்?

அரசு சார்ப்பு நிறுவனங்கள் வேண்டுமானால் அவர்களது பங்குகளை திறந்து வைக்கலாம். எத்துனை பேருக்கு இவர்களால் சப்ளை செய்ய முடியும்?. கொஞ்ச காலத்துக்கு முன்னால் தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்த சில நாட்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது. இப்பிரச்சனைக்கு அரசு உடனடியாக தலையிட்டு, பொது மக்களை பாதிக்கும், அரசின் பொருளாதாரத்தை பாதிக்கும் எந்த விதமான போராட்டங்களுக்கு இரும்புக் கை கொண்டு அடக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

Sep 16, 2010

பின்னூட்டம் வாங்கி பிரபல பதிவராவது எப்படி?

பதிவெழுதி பின்னூட்டம் வாங்குறதுன்னு எப்படின்னு யோசிச்சி, யோசிச்சி நிறைய பேர் மண்டை காஞ்சி போய் அலையுறது தான் மிச்சம்.. ஏதோ நமக்கு தெரிஞ்ச விஷத்தை உங்களுக்கு சொல்லலாமேன்னு நான் ஓரு ஆராய்ச்சி போல செய்ய ஆரம்பிச்சேன் அப்பத்தான் ஓரு விஷயத்தை கண்டுபிடிச்சேன். தினமும் பதிவெழுதறவங்க, பின்னுட்டமிடறவங்க எல்லோரும் சனி, ஞாயிறு கிழமைகளில் ஆன்லைனில் வருவதில்லை. 

ஏண்டான்னு யோசிச்ச போது பெரும்பாலும் பல பதிவர்கள் தங்கள் அலுவலகத்திலிருந்தே பதிவெழுதுகிறார்கள். கம்ப்யூட்டர் சம்மந்தபட்ட தொழிலில் இருப்பவர்கள் அத்னூடயே இருப்பதால் வேலைக்கு நடுவே (செஞ்சாத்தானே.. என்று கேட்கும் பதிவ்ர்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது.) பின்னூட்டமிடுவது, பதிவு எழுதுவது என்று பிசியாய் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தேன்.எப்போதாவது பதிவெழுதுபவர்க்ள் சொந்தமாய் கணினியும், இண்டர்நெட் இணைப்பு வைத்திருப்ப்வர்கள் என்றும் தெரிகிற்து.

பதிவெழுதியே பெரிய பதிவர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள், பின்னூட்டமிட்டே பெரிய பின்னூட்டமானவர்களும் இருக்கிறாரிகள்.. சமிபகாலமாய் சில பெரும் பெயர் பெற்ற பதிவர்கள் அவர்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு பதிலப்பதே இல்லை. மற்ற பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதில்லை.

சரி அவங்க நாமளாவது பின்னூட்டமிடுவோம்னு அவங்க பதிவ படிச்சிட்டு ஏதோ நாம அப்ரண்டீஸாக இருப்பதினால்.. சூப்பர்.. நல்ல பதிவுன்னு போட்டா.. டெம்ப்ளேட் பின்னூட்டம்னு   பதிவெழுதி நம்ம மானத்தை வாங்குறாங்க..

பதிவுகளில் பொதுவாக அதிகம் படிக்க படுவது சினிமா சம்மந்தபட்ட பதிவுகள் என்பதும் தெரிகிறது.பல பதிவர்கள் விமர்சனம் எழுதுவதற்காகவே முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டு, லேப்டாப்பில் இண்டர்வெலிலேயே விமர்சனமெழுத ஆரம்பித்துவிடுகிறார்கள்.  சமீப காலமாய் ஏதோ கேபிள்,வயர் என்ற பெயரில் கிறுக்கி வரும் அவரின் விமர்சனங்களுக்கு வாசகர்களிடம் பெரிய வரவேற்ப்பை வைத்து ஹிட்ஸ் வர ஆரம்பித்திருப்பதே.. சாட்சி.

செக்ஸ் சம்மந்தமாய் எதாவது பதிவிட்டாலும் வெகுவாக மக்களிடம் போய் சேருகிறது.. ஆனால் பார்த்துவிட்டு பின்னூட்டம் தான் இடமாட்டார்கள். கிட்டத்தட்ட பிட் படம் பார்க்க போய்விட்டு உள்ளுக்குள் கிளுகிளுப்பதை போல், படித்துவிட்டு போய்விடுகிறார்கள்.. பின்னூட்டமிட்டால் வந்து படிச்சது தெரிஞ்சிருமோ..?

சரி எதையாவது எழுதி தொலைத்தோம்னு வச்சிக்க்கங்க.. அதுக்கு தலைப்பை பிடிக்கறதுக்குள்ளே அவனவன் படற அவஸ்தை இருக்கே.. ஸ்...அப்பா.. நினைச்சாலே கண்ணைகட்டும்.. பரங்கிமலை பத்தி எழுதணும்னா “பரங்கிமலை போல நிற்கும் ஜோதின்னு” தலைப்பை போட்டாதான் உள்ளேயே வராங்க..

அப்புறம் ஒரு முக்கிய விஷயம். புதுசு புதுசா வர்ற எல்லா திரட்டிகள்ளேயும் இணைச்சுட்டு, சகட்டு மேனிக்கு பதிவை விட பெருசா பக்கம் புல்லா ஓட்டுப் பெட்டியை மட்டுமே போட்டிருக்காங்க. அது அத்தனைக்கும் நீங்க ஒரு அக்கவுண்டை ஓப்பன் பண்ணி சிரத்தையா ஓட்டுப் போட்டா.. உங்களுக்கு வந்து ஓட்டு போடுவாங்க.

இப்படி கஷ்டப்பட்டு , வேதனைப்பட்டு பதிவெழுதறவங்களை பத்தி நான் என்னனு சொல்ல.. அதெல்லாம் ஓரு தவம்ன்னு தெரிய வருது.. அதனால நான் சொல்ல வரது என்ன்னனா..? நீங்க பாட்டுக்கு எழுதுங்க.. நல்லாயிருந்தா கண்டிப்பா பின்னூட்டம் வரும்னு ஐன்ஸ்டைன் ரேஞ்சுக்கு, சிந்தனையை சிதறவிட்ட்டா ஒண்ணும் பேராது. நிதம் குறைஞ்சது 30 பதிவுகள் படிச்சி, டெம்ப்ளேட் பின்னூட்டமாவது போட்டாத்தான் ஒரு பத்து பர்சண்ட் திரும்ப நமக்கு ஓட்டும் பின்னூட்டமும் கிடைக்கும். ஆமா ஞாபகம் வச்சிக்கங்க.

கொஞ்சம் பிரபலமவனும்னா ஒண்ணும் பெரிய விஷயமில்லை.. ஆணாதிக்கம், பதிவரசியல், போபால், என்று இந்திய பிரதமருக்கு கூட விளங்காத ஒரு சில விஷயங்களையெல்லாம் தினம் ஒரு கட்டுரை எழுதினா.. நாமளும் பிரபல பதிவராவது உறுதி. என்ன சீ..தூ.னுஎல்லாம் பதிவுல திட்டு வாஙக் வேண்டியிருக்கும்

அப்புறம்.. அவ்வளவுதாங்க.. என்னத்தை எழுதறதுன்னு யோசிச்சி, யோசிச்சி பாத்தப்போ.. தான் புரிஞ்சுது தினம் எதையாவது எழுதறது எவ்வளவு கஷ்டம்னு.. எதோ என்னோட இன்னைய கடமை முடிஞ்சது. ஓரு மொக்கை பதிவை ரி எடிட் பண்ணி பப்ளிஷ் பண்ணிட்டேன். எவ்வளவு கஷ்டம்டா சாமி...படிக்கிறவங்க எல்லோரும் தயவு செஞ்சு பின்னூட்டம் போட்டுறுங்க.. இல்லேன்னா தலைப்ப வச்சு உள்ளே வந்தவங்க நாக்க பிடிங்கிக்கிற மாதிரி பேசுவாங்க..
கேபிள் சங்கர்

Sep 15, 2010

கல்வியா? செல்வமா? தெய்வமா?

எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு உடனே ஏற்படுவதில்லை. முக்கியமாய் மக்களுக்கு பயன்படும் விஷயஙக்ளுக்கான முடிவுகள் எப்போதும் உடனே நடந்துவிடுவதில்லை. ரேஷன் கடையில் ரேஷன் சாமான்கள் கிடைப்பதிலிருந்து, தினசரி மின்சார வெட்டு, டாஸ்மாக் எம்.ஆர்.பிக்கு மேல் வாங்கு கொள்ளை, விலைவாசி, அடிப்படை வசதிகள் என்று லிஸ்ட் போட்டுக் கொண்டே போனால் அது நீண்டு கொண்டேயிருக்கும்.

ஆனால் ரொம்ப நாளாய் மக்கள் தங்கள் மனதில் மட்டுமே பொங்கியெழுந்துக் கொண்டிருந்த விஷயம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின், கல்விக் கட்டணம். அரசு அமைத்த கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரைத்த தொகையை எல்லா மெட்டிரிகுலேஷன் பள்ளிகளும் எதிர்த்தது.  மீண்டும் அவர்கள் பரிந்துரை செய்த தொகையை ஏற்க முடியாது. அதை மீண்டும் நன்கு ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் என்று எல்லா பள்ளிகளும் கோரிக்கை வைத்தனர்.

இதனால் பள்ளி முதலாளிகள். ஆம்.. முதலாளிகள் தான்.. கல்வியை வியாபாரமாய் நடத்தும் இவர்களை பின் எப்படி அழைப்பது?.. பெரும்பாலான பள்ளிகள் அரசின் பிரஷரின் காரணமாய்  தங்கள் அமெளண்ட்டை குறைத்தும் கொண்டது. சில பள்ளிகளோ.. இப்போது கட்டணத்தை கட்டுங்கள் நாங்கள் கேஸ் போட்டிருக்கிறோம் அதில் மாற்று தீர்ப்பு வந்தால் நிச்சயம் அடுத்த வருடம் சரி செய்து கொள்கிறோம் என்றும்  சொன்னார்கள். இன்னும் சில பேர் இப்படிப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபட தங்கள் பள்ளிகளை சிபிஎஸ்.சியாக மாற்ற முயற்சி செய்துவருகிறார்கள்.

இதெல்லாம் இப்படியிருக்க, அரசு எந்த பள்ளியாவது அதிக கட்டணம் வாங்கினால் உடனே தெரியபடுத்தவும் என்று அறிவிக்க, இதன் விளைவாக ஆங்காங்கே அரசுக்கு புகார் வந்தாலும், பெரும்பாலும் தங்கள் குழந்தைகள் அந்த ஸ்கூலில் படிப்பதால் பின்பு தங்கள் பிள்ளைகளுக்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்று பயந்து கொண்டிருந்தார்கள். சிலர் தைரியமாய் எதிர்த்து போராட.. முன்வரும் வேளையில் பள்ளித்தலைமை அவர்களை தனியாக கூப்பிட்டு ரிவிட்டும் அடித்திருக்கும் சம்பவமும் சமீபத்தில் நடந்தேறியிருக்கிறது.

தெய்வம் பாவப்பட்ட மக்களுக்கு எதையாவது செய்கிறதோ இல்லையோ? பணக்காரங்களூக்கு எதாவது ஒரு வழியில் வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கிறது. இப்போது ஐகோர்ட் கோவிந்தராஜ் கமிட்டி பரிந்துரைத்த அமெளண்டை பின்பற்ற தேவையில்லை என்றும், அதற்கான இடைக்கால தடையை கொடுத்துவிட்டது. மீண்டும் எல்லா பள்ளிகளும் கோலகலா கொண்டாட்டம் ஆட ஆரம்பித்துவிடும் அபாயம் இருக்கவே இருக்கிறது. சில விஷயங்களுக்கு பதிலே இருப்பதிலை.

இனி மீண்டும் இவர்கள் கமிட்டி அமைத்து, ரிவிய்யூ செய்து, அதை இம்ப்ளிமெண்ட் செய்வதற்குள்.. விடிந்தது போ.. 

பா.வே.படங்கள்- சத்யா

satya-wallpaper
ராம்கோபால்வர்மா தன் முத்திரையை பாலிவுட்டில் பதித்த படம். இந்தியாவில் பல மாநிலங்களில் கேங்ஸ்டர்கள் படம் வருவதற்கு காரணமான படம் இது என்று சொன்னால் மிகையில்லை. மிக சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, மாபெரும் வெற்றியையும், படம் வெளிவந்த நேரத்தில் எல்லாரையும் ஹா.. என்று வாய்பிளக்க வைக்கும் மேக்கிங் கொண்ட படம் சத்யா.
சத்யா ஒரு சாதாரணமானவன். வாழ்வில் காயம் பட்டவன், அநாதை. ஹைதராபாத்திலிருந்து  வேலை தேடி வருபவனை பம்பாய் வசீகரித்துக் கொள்ள, சர்வராய் வேலை செய்யும் இடத்தில் ஒரு லோக்கல் தாதா சத்யாவை அடிக்க, பதிலுக்கு முறைக்க, என்று ஆரம்பிக்கும் படம், தாதாவின் அல்லக்கை கையில் கத்தியை வைத்து மிரட்டும் போது, சரக்கென அவன் முகத்தில் அவன் கையினாலேயே கோடு போடுமிடத்திலிருந்து ஏற ஆரம்பிக்கும் கிராப் அப்புறம் இறங்கவே இறங்காது.

லோக்கல் தாதாவால் ஜெயிலில் அடைக்கப்படும் சத்யா அங்கேயும் முரட்டுத்தனமான அமைதியுடன் இருக்க, அங்கே ஒரு கொலை கேஸுக்காக ஜெயிலில் இருக்கும் பீக்கு மாத்ரே என்ற தாதாவுடன் சண்டையில் ஆரம்பித்து நட்பாக மாறி அவன் வாழ்க்கையை மாற்றுகிறது. அதன் பிறகு அவனது வாழ்க்கையை பீக்கு மாத்ரேதான் தீர்மானிக்கிறான். இதனைடையில் எதிர் வீட்டு வித்யாவுடனான காதல், அவளுக்கான பாடல் பாடும் வாய்ப்பு, அண்டர் வேர்ல்ட் பீக்கு மாத்ரேவின் அரசியல் அன்னதாதா, கல்லு மாமா, அந்த குண்டு ரவுடிப் பையன், எப்போதும் சிரிக்கவே சிரிக்காத அடியாள். பிச்சைக்காரனை போல அலையும் வக்கீல், எதிர் கோஷ்டி தாதாக்கள் என்று கண் முன் திரியும்  நிஜமான நிழலுலக தாதாக்கள், கொஞ்சம் ஆரம்பத்தில் வயிற்றில் புளியை கரைத்தாலும் மெல்ல, மெல்ல அவர்களுடனான வாழ்கையை வாழ ஆரம்பித்துவிடுகிறோம். கல்லுமாமாவின் தீடீர் வில்லத்தனத்தையும், அவனின் குழந்தைத்தனமான பேச்சையும், அந்த குண்டு பையனின் இன்னொசென்ஸையும், சத்யாவின் அழுத்தமான அமைதியையும், பீக்கு மாத்ரேவின் ஆரவாரமான அட்டகாசமான சிரிப்பையும், அவனின் மனைவியின் காதலையும், ஊடலையும் ரசிக்கத்தான் செய்வோம்.

அதே போல தாதா குழுக்களுக்கான பிரச்சனைகள், அவர்களின் அரசியல், அரசியல் காரணமான் நெருக்கமாய் பழகியவர்களை சிரித்துக் கொண்டே, நொடிகளில் நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொல்லும் குரூரமும், நம்மை அதிரத்தான் செய்கிறது. இம்மாதிரியான தீவிரமான அடிதடி, கொலை, கதைகளில் காதல் கொஞ்சம் லேக்கான விஷயமான் இருந்தாலும், க்ளைமாக்ஸுக்கான டெப்த் அதில் தானிருப்பதால் பொறுத்துக் கொள்ளலாம். கமிஷனர் தன் பொறுப்பில் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, தாதாக்களை அடக்க, என்கவுண்டர் செய்ய, இதை தடுக்க என்ன வழி என்று யோசிக்கும் போது, கமிஷனரையே கொல்லுமிடம், அதிர்ச்சி. ஆனால் அதுவே அவர்களின் இறுதியாத்திரைக்கான ஆரம்ப இடம் எனும் போது.. கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு.. என்ற விஷயம் நிச்சயமாகிறது.

படத்தின் முக்கியமான பலம் திரைக்கதையும், மேக்கிங்கும், வசனங்களும், அதில் இருக்கும் நேர்மையும்தான். சும்மா பில்டப்புக்காக தாதாகக்ள் எல்லாம் பஞ்ச் டயலாக் பேசாமல், நிதர்சன வாழ்க்கையை பிரதிபலிக்க வைத்த இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு ஒரு சல்யூட்.
Satya- A Must Watch Film
கேபிள் சங்கர்

Sep 13, 2010

திருப்பூர்

Tirupur-Movie-Posters-stills  பழனியில் மெக்கானிக் கடை வைத்திருக்கும் ஆதிக்கும் ஊரில் பணக்கார பசங்களான மூன்று பேருக்கும் ஆதி. ஆதி  நண்பர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய துணிபவன்.. முக்கியமாய் கேசவனுக்கு ஒன்றென்றால் விட மாட்டான். அடித்து துவைத்து விடுவான். அவ்வளவு பாசக்காரன். கேசவன் அபரஞ்சி எனும் ஒரு டாக்டர் பெண்ணை பழனியில் ஒரு ஹாஸ்பிடலில் சந்திக்க, காதலாக மலர்கிறது. காதல் விஷயம் அவளுடய அப்பாவுக்கு தெரிய, என் ஊரான திருப்பூருக்கு வந்து பாரு என்று சொல்லிவிட்டு போகிறார். ஆதி தன் நண்பர்களுடன் திருப்பூருக்கு போய் அந்த பெண்ணை தூக்கி வர, திருமணம் செய்யும் நேரத்தில் ஒரு ரவுடிக் கும்பல் வந்து ப்ரச்சனை செய்து பெண்ணை அப்பாவிடம் ஒப்படைக்கிறது. ரவுடிக்கும்பல் ஏன் உள்ளே வந்தது? ஆதி காதலர்களை சேர்த்து வைத்தானா?, அபரஞ்சியின் அப்பா ஒத்துக் கொண்டாரா? என்பதையெல்லாம் வெள்ளித்திரையில் காண்க.

முதல் பாதி முழுவதும், ஆதி, கேசவன் மற்றவர்களுக்குள்ளான நட்பு எப்படி? என்பதற்கான காட்சிகளே மேலோங்கியிருப்பதால்  கொஞ்சம் மெதுவாகத்தான் போகிறது. அதிலும் பல காட்சிகள் பத்து வருஷ பழசு. விக்ரமன படம் பார்க்கிறோமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு. பின்னாடி லா..லா.லா..  என்று பாடாததுதான் குறைவு. அதிலும் அபரஞ்சி, கேசவன் காதல் காட்சிகளில் கற்பனை பஞ்சம் அதிகம். இப்படியாக போகும் முதல் பாதியை பார்த்துவிட்டு தொய்வடைந்திருந்த வேளையில் தீயாய் பறக்கும் ரெண்டாவது பாதி நம்மை பரபரக்க வைத்துவிடுகிறார்கள். சமீபத்தில் வந்த நாடோடிகள் படத்தை ஞாபகப் படுத்தினாலும். குறை சொல்ல முடியாத மேக்கிங்.

tirupur190210_1
படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கும் ஒரு சிலரை தவிர  அத்துனை நடிகர்களும் புதியவர்கள் தான். கேசவனாக நடித்திருப்பவரும், ஆதியாக நடித்திருப்பவரும் ஏதோ ஒரு படத்தில் பார்த்ததாய் ஞாபகம். அபரஞ்சியாய் நடிக்கும் அம்மணிக்கு படம் முழுவதும் ஓடுவதே வேலையாய் இருப்பதால் நடிப்பதற்கு பெரிதாய் இடமில்லை. வில்லனாக வரும் நடிகருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நல்ல கண்ட்ரோல்டு ஆக நடித்திருக்கிறார். இயக்கியிருப்பவர் எம்.சி. துரைசாமி. புதுமுகமான இவரின் முதல் பாதி கொஞ்சம் ஓவர் செண்டிமெண்டாக இருந்தாலும். அந்த குறைகள் எல்லாவற்றையும் இரண்டாம் பாதியில் சரி செய்துவிட்டார். பரபரவென துரத்தல்களும், அதன் விளைவாக வரும் நிகழ்வுகளும், என்று நம்மை திரையில் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்கள். ஒளிப்பதிவாளர் எஸ்.பாலா, எடிட்டர் சதீஷ், இசையமைப்பாளர் சாஹு என்று எல்லோரும் கை கோர்த்து வடம்பிடித்திருக்கிறார்கள்.

டிஜிட்டல் கேமரா என்பதால் பல விதமான கோணங்களில் நம்மை பார்க்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஆனால் ட்ராலிக்கு பதிலாய் நிறைய இடங்களில் லெப்ட் டூ ரைட்.. ரைட் டு லெப்ட் என அடுத்தடுத்து ஒரே விதமான ஷாட்டுகள் முதல் பாதியில் வருவதை தவிர்த்திருக்கலாம். ஆனால் அக்குறையை எல்லாம் இரண்டாம்பாதியில் சரி கட்டியிருக்கிறார்கள்.  அந்தமானில் வரும் ஒரு பாடலும், சேஸிங் டைமில் வரும் பாடல் நாடோடிகள் படத்தை ஞாபகப்படுத்தினாலும் படத்துக்கு நிறையவே உதவியிருக்கிறது. பின்னணி இசையும், பாடல்களும். மிக குறைந்த பட்ஜெட்டில் பல நண்பர்களிடமிருந்து உதவி பெற்று ஒரு இண்ட்ரஸ்டான கதையை கொடுத்திருக்கும் இக்குழுவினர்களிடமிருந்து மேலும் நல்ல படைப்புகள் வரும் என்று நம்புவோம் 
திருப்பூர் – நட்பின் அடையாளம்.
கேபிள் சங்கர்

கொத்து பரோட்டா- 13/09/10

நண்பர் பரிசல்காரன் தன் வலைப்பூவில் சிறுகதைச் சவால் ஒன்றை விடுத்திருக்கிறார்.
கீழே உள்ள மூன்று வாக்கியங்களைப் படியுங்கள்:
1) டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
2) “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
3) “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்
.
இந்த மூன்று வாக்கியங்களும் மேலே கொடுத்திருக்கும் வரிசைப்படியேவருகிற மாதிரி ஒரு சிறுகதை எழுதுங்கள். விதிகள் இரண்டு:
கதையில் கனவோ, ப்ளாஷ்பேக்கோ வரக்கூடாது.
காமினியைக் கெட்டவராக சித்தரிக்கக் கூடாது.
இறுதித் தேதி: அக்டோபர் 15.
கதைகளை உங்கள் வலைப்பூவில் போட்டுக் கொள்ளலாம். தலைப்பில் நீங்கள் கதைக்குக் கொடுக்கும் தலைப்புக்கு அருகிலேயே “சவால் சிறுகதை” என்று குறிப்பிட வேண்டியது அவசியம். ஆனால் பதிவில் போட்டாலும் அவரது (kbkk007@gmail.com) மின்னஞ்சலுக்கு முழுக்கதையையும் அனுப்ப வேண்டும்.பரிசு? உண்டு! போட்டி பற்றிய மேலதிக விபரங்களை நாளை அவரது பதிவில் காணலாம். நானெல்லாம் கலந்துக்கலாம்னு நினைச்சிருக்கேன். பார்ப்போம். சொக்கா.. அது எனக்கில்லை.. எனக்கில்லை..
##################################################################
பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் நிஜம் என்று நம்பும் மக்களின் சதவிகிதம் நிறைய.. அதான் பேப்பர்லயே போட்டுட்டானே என்று அழிச்சாட்டியமாய் நம்புபவர்கள் இருக்கும் நாட்டில். தினத்தந்தி வெள்ளிமலரில் ஒரு செய்தி. நடிகர் முரளி நடிக்கும்  என்று ஒரு படத்தின் செய்தியை போட்டிருந்தார்கள். ஒரு வேளை முரளி வியாழன் இரவு இறந்து போய், தவிர்க்க முடியாத காரணத்தினால் அடுத்த நாள் அந்த செய்தியை வெளியிடப்படுவதை தடுக்க முடியாமல் போனால் பரவாயில்லை. அவர் இறந்து இரண்டு நாள் கழித்து இவர்கள் முரளி நடிக்கும் என்று செய்தி போடுவது என்ன கொடுமைங்க.. எடிட்டோரியல்னு ஒரு டிபார்ட்மெண்ட் அங்க வச்சிருக்காங்களா இல்லையா?
###################################################################
சமீப காலமாய் பெண் பதிவர்களில் சிலர்  டீச்சர் என்னை அடிச்சிட்டான்., அவன் என்னை பேசிட்டான்னு ஆவூன்னா “பைத்தியக்காரத்தனமா” அவங்களே எதை எதையோ தப்பு தப்பா யோச்சிட்டு,  தேவையான நேரத்தில ஆளாளுக்கு ஒரு பதிவு போடறதும், உடனே ஊருல இருக்கிற ஆண் பதிவர்கள் எல்லாம் இதுக்கு சப்போர்ட் பண்ணலைன்னா.. நம்மை ஆட்டத்தில சேத்துக்க மாட்டாங்களோன்னு நாமளும் சீ…ச்தூ… நாய்களே.. பேய்களேன்னு, தலை குனிகிறேன்னு பதிவு எழுதி போடுறதும். வழக்கமா போச்சு.. இதுல் இருக்கிற பிரச்சனையே ஒன்னுத்தையும் கிழிக்கக் காணோம்.. இதுல இந்த மாதிரி பஞ்சாயத்துக்களையெல்லாம் வேற செஞ்சி.. ஏதோ இணைய போலீஸ் மாதிரி சீன்.. இதெல்லாம் போர் அடிச்சி போன பழைய சீன்.. வேற எதாச்சும் புதுசா பண்ணுங்கப்பா..
###################################################################
இந்த வார விளம்பரம்
இசையோடு பாருங்கள்..  இண்ட்ரஸ்டிங்
###################################################################
இந்த வார தத்துவம்
வெற்றிக்கான வழி..
உனக்கு நீ வேலை செய்யுமிடத்தின் சட்ட திட்டங்கள் பிடிக்கவில்லையென்றால், அதனை தொடரு, முதல் நிலைக்கு வா, பின்பு மாற்று.
###################################################################
சோகம்
போன வாரம் தான் முரளி சட்டென மறைந்தார் என்றால். நேற்று மதியம் பாடகி சுவர்ணலதா மறைந்தது அதை விட அதிர்ச்சி. என்னா..குரல்?. மத்தவங்களை சந்தோஷப்படுத்துறவங்க கலைஞர்கள். அவர்கள் வாழ்வு இப்படி சீக்கிரமே முடிவது.. வருத்தமாகத்தான் இருக்கிறது. ”மாலையில் யாரோ மனதோடு பேச” பாட்டு மனதில் ரீங்காரமிடுகிறது. அவர் மறைந்தாலும்.. அந்த ஸ்டிரிங் குரல் எக்காலத்திலும் நம் மனதை விட்டு மறையாது.. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.
####################################################################
இந்த வார குறும்படம்.
நிறைய பேருக்கு பிடித்த படம். ஆனால் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் முதல் நிலைக்கு வராத படம். ஆனால் வெகு ஜன ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த படம். எதிர்காலத்தில் நிச்சயம் ஒரு நல்ல இயக்குனர் வர இருக்கிறார் என்பதை கட்டியம் கூற அவார்ட் வாங்கத் தேவையில்லை என்பதை கூறும் படம். இந்த மிட்டாய் வீடு.
###################################################################

ஏ ஜோக் 
பெண்: ஆ.. ஸ்… ரொம்ப டைட்டா இருக்கு..
ஆண்:  ஓகே..ஓகே.. நா ஸ்லோ பண்ணிக்கிறேன்.
பெண்: நல்லா உள்ள தள்ளு..
ஆண்:  முடியலையே…
பெண்:  ஆ.. வலிக்குது..
ஆண்:  சரி..விடு.. கரெக்டு சைஸுல வேற ஒரு வெட்டிங் ரிங் வாங்கிக்கலாம்..


பையனும், பெண்ணும் டீச்சரிடம்

பையன்: டீச்சர் எங்க வயசு பசங்க குழந்தை பெத்துக்க முடியுமா?
டீச்சர் : நோ.. நெவர் முடியவே முடியாது

பையன்: பெண்ணை பார்த்து.. நான் அப்பவே சொன்னேனில்லை.. என்றான்









###################################################################



கேபிள் சங்கர்

Sep 11, 2010

பாஸ் (எ) பாஸ்கரன்

Boss-Engira-Baskaran
சிவா மனசில் சக்தியின் லைனிலேயே பெரியதாய் கதைக்காக எந்தவிதமான மெனக்கேடும் இல்லாமல், சந்தானத்தை மட்டுமே நம்பி எடுத்திருக்கும் ராஜேஷுன் அடுத்த படம். படத்திற்கு கதாநாயகன் சந்தானம் என்றால் தப்பேயில்லை. டிபிகல் சீரியல் அம்மா, கல்யாணமாகாத வெட்டினரி டாக்டரான 35 வயது அண்ணன், காம்பியரர் மாடுலேஷனில் பேசி அலையும் தங்கை என்ற குடும்பத்தில், ஐந்து வருஷமாய் அரியர் வைத்து முடிக்காமல் வெட்டியாய் அலையும் வெட்டி ஆபீஸ்ர் தான் பாஸ் என்கிற பாஸ்கரன். இத்தனை களேபரத்தில் இவருக்கு பார்த்த மாத்திரத்தில் காலேஜ் லெக்சரரான நயன் மேல் காதல் வேறு வந்து தொலைத்துவிடுகிறது. இருந்திருந்து அண்ணனுக்கு ஒரு பெண் அமைய, நயன் அவரது தங்கையாகவே இருக்க, காதலை இன்னும் வலுப்படுத்த முயற்சி செய்யும் போது, அண்ணியிடம் பெண் கேட்க சொல்லும் போது, அண்ணி ஒண்ணுமில்லாத வெட்டிபயலுக்கு யார் பெண் தருவார்கள்? என்று கேட்க, அதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் போது, தன் தங்கை கல்யாணத்தையும்,  தன் காதலையும் ஜெயித்து காட்டிவிட்டுதான் வீட்டிற்கு வருவேன் என்று சவால் விட்டுவிட்டு வெளியேறுகிறார். அவர் ஜெயித்தாரா? இல்லையா? என்பதை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்து பாதி ஜெயித்திருக்கிறார்கள்.

படம் ஆரம்பித்ததிலிருந்து சந்தானத்தின் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. அதிலும் முதல் பாதி முழுவதும், அவரது ராஜ்ஜியம்தான். மனுஷன் கிடைக்கிற கேப்பில் எல்லாம் கிடா வெட்டுகிறார். காதலிக்க ஐடியா கொடுக்குமிடம், அதற்கு பழைய சினிமா பாணியை எல்லாம் போட்டு கிண்டலடிக்கும் காட்சிகள் எல்லாம் ரணகளம். நண்பனுக்காக கடன் பத்திரத்தில் கையெழுத்து போட போகும் நேரத்தில் வேறு ஒருவன் போடாதீங்க.. என்று அலறியடிக்க, அந்த  நேரத்தில் அவரின் ரியாக்‌ஷனும், கடையை எல்லாம் இழந்து நடுத்தெருவில் நிற்பது போல நினைத்து கலங்கும் காட்சி.. அட்டகாசமோ.. அட்டகாசம்.

boss-engira-baskaran-movie-review
ஆர்யா முதல் முறையாக காமெடி முயற்சி செய்திருக்கிறார். அவர் மிக சாதாரணமாக பேசினாலே அவருடய மாடுலேஷனுக்கு செட்டாகிவிடுகிறது.  நயன் தாரா வாடி வதங்கி போயிருக்கிறார். ஒரு காலத்தில் அவரை ஸ்கிரினில் பார்ப்வர்களையெல்லாம் வாடி வதங்கச் செய்தவர். ம்ஹும்.. ஆர்யாவின் அண்ணனாக் வரும் பஞ்சு அருணாசலத்தின் மகனின் நடிப்பும், அவரது மனைவியாக வரும் அந்த பெண்ணின் நடிப்பும் அருமை.

பிட்டு அடிக்க எழுதி வைத்த பேப்பரை பஸ்சில் தொலைத்துவிட்டு கண்டுபிடித்து தரும் நயனே, தனக்கு லெக்சராய் வருவதும், பக்கத்தில் ஐந்து வருஷமாய் தொடர்ந்து தன்னுடன் பரிட்சை எழுதி வரும் அரியர் ப்ரெண்ட் சுவாமிநாதன், “தயவு செஞ்சு பாஸ் ஆயிடாதீங்க பாஸ்” என்று வேண்டிக் கொள்வது செம கலாட்டா. இப்படி முதல்
பாதி முழுவதும் கண்ணில் நீர் வர சிரிப்பதற்கான காட்சிகள் பல.

சக்தி சரவணனின் ஒளிப்பதிவில் ஸ்பெஷலாய் சொல்ல ஏதுமில்லை. யுவனின் இசையில் இரண்டு, முன்று பாடலக்ள் அருமை. முக்கியமாய் யார் அந்த பெண் தான் என்று கேட்டேன், மாமா மாமா போன்ற பாடல்கள் நிச்சய ஹிட்.. ரெண்டுமே பழைய இளையராஜாவின் ரீமேக்.. அதனால் ஸ்யூர் ஹிட். நா.முத்துகுமாரின் பாடல் வரிகள் பல பாடல்களில் பளிச்.Boss-Engira-Baskaran-wallpapers-postersராஜேஷ்.எம் எழுதி இயக்கியிருகிறார். கொஞ்சம் கூட முந்தைய வெற்றி பார்முலாவை கைவிடாமல் ஆர்டிஸ்டை மட்டுமே மாற்றி ஆட்டம் ஆடியிருக்கிறார். முதல்பாதி போன ஸ்பீடுக்கு, செகண்ட் ஹாப் தீயா பறக்கும் போலன்னு நினைச்சிருந்தா, காத்தா கூட இல்லாம போனது வருத்தம், அதுவும் ஆர்யாவும், சந்தானமும் டுடோரியல் காலெஜ் ஆரம்பிக்கிறோம்னு கிளம்பினதும், அதுக்கு அப்புறம் என்ன செய்யறது தெரியாம அவங்க விழிக்கிறா மாதிரியே திரைக்கதையும் விழிக்கிது. ரமணா, ஷகிலா, கண் தெரியாத பெண் டீச்சர், அந்த ரவுடியின் பையன், அவன் பாஸாவது என்று நிறைய டெம்ப்ளேட் காட்சிகள், பார்பவர்களை சோர்வடைய வைக்கிறது. காமெடி படத்துக்கு இது போதும் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். படத்தின் க்ளைமாக்ஸில் தன்னையே ஒரு கேரக்டராய் சேர்த்து போனில் பேசும் காட்சி இண்ட்ரஸ்டிங் என்றாலும் பெரும்பாலும், ஒரு டிவி ஸ்லாப்டிக் ஷோவாகத்தான் இருக்கிறது இந்த திரைப்படம்.  ஒரு நகைச்சுவை படத்துக்கான அத்துனை விஷயங்களும் சரியான விகிதங்களில் சி.ம.சயில் ஆர்யா க்ளைமாக்ஸில் வருவார். இதில் ஜீவா வருமிடம் பரபரப்பு. சந்தானத்தின் பலத்தை முழுக்க, முழுக்க பயன்படுத்தியிருக்கிறார். ஆர்யாவை விட இப்படத்தின் ஷோ ஸ்டீலர் சந்தானம் தான். “நண்பேண்டா”

பாஸ்(எ)பாஸ்கரன் – நகைச்சுவை விரும்பிகளுக்கு,,,
கேபிள் சங்கர்

Sep 9, 2010

முரளி

Murali_335198248 காலையில் ஷூட்டிங்கில் இருந்த போதுதான் மெசேஜ் வந்தது. சட்டென.. ஒரு மாதிரியானது.. ஆளாளுக்கு .. செய்தி பரவி.. ஷூட்டிங்கில் ஒரு சில நிமிடங்கள் எல்லோர் வேலையையும், ஸ்தம்பிக்க வைத்து, முரளி பற்றிய பேச்சும், எண்ணமுமாய் போய்க் கொண்டிருந்தது.

இன்னொரு ரஜினியாக ஒருத்தர் வந்துவிட்டார் என்று விகடன் இவரது முதல் படமான பூவிலங்குக்கு விமர்சனம எழுதி வரவேற்றது. தொடர்ந்து பல ஹிட் படங்கள். என்பதுகளில் மீடியம் பட்ஜெட் படநாயகன் என்றாலே முரளிதான் என்று ஒரு விஷயம் ஓடிக் கொண்டிருந்தது. காலேஜ் ஹீரோ கேரக்டர் என்றால் அதுக்கு கேள்வி கேட்காமல் முரளியை தான் ஆப்ஷனாக வைக்குமளவுக்கு தமிழ் திரையுலகில் நிரந்தர யூத்தாக வலம் வந்தவர். சமீபத்தில் அவரது மகன் நடித்து வெளியான பாணா காத்தாடி படத்தில் கூட மருத்துவ கல்லூரி மாணவராக வந்து கலகலப்பு ஏற்படுத்தியவர்.

இப்படி ஒவ்வொரு டெக்னீஷியன்களுக்கும் ஒவ்வொரு நினைவுகள் முரளியை பற்றி. எங்கள் படப்பிடிப்பு நடக்குமிடத்தின் ஒரு சில கிலோ மீட்டர்கள் அருகிலேயே தான் அவரது வீடு இருந்ததால் பல பேர் மாற்று ஆட்களை வைத்துவிட்டு அவருக்கு அஞ்சலி செய்துவிட்டு வந்தார்கள்.

ஒரு வெளிப்புற படப்பிடிப்பு முடிந்து எல்லாரும் பேக்கப் ஆகிவிட்ட்ட பிறகு இயக்குனரும், முரளியும் ஹோட்டல் அறையில் உட்கார்ந்து அடுத்த கட்ட காட்சிகளை பற்றி பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். பேச்சு சுவரஸ்யமாய் போக சரி ஊருக்கு கிளம்பலாம் என்று வெளியே வந்து பார்த்தால் எல்லாரும் கிளம்பி போய்விட்டிருக்க, மேனேஜருக்கு போன் செய்தால்.. ஹீரோவும் நீங்களும் ஷூட்டிங் முடிந்த பின் காரில் கிளம்பி போய்விட்டதாக சொன்னார்கள்.. நாங்களும் பேக்கப் செய்து கொண்டு வந்துவிட்டோம் சுமார்.. 200 கிலோ மீட்டர் வந்தாகிவிட்டது. வேண்டுமானல் உடனே ஒரு வண்டியை மாற்றி அனுப்புகிறோம் என்று சொல்ல.. விஷயம் தெரிந்த முரளி.. டைரக்டரிடம் எதுக்கு வேஸ்டா அவங்க வண்டிய அனுப்பி, அது இங்க வர்ற வரைக்கும் நாம வெயிட் செய்யறது.. பேசாம பஸ்சுல போயிறலாம் என்று சொல்லி, கிளம்பிவிட்டாராம் சென்னைக்கு. பஸ்சில் அப்போதைய பிரபல ஹிரோவுடம் பயணம் செய்வதில் மக்கள் ரொம்பவே சந்தோஷமடைந்தார்களாம். அப்படிப் பட்ட அருமையான மனிதர்.. என்று முரளியின் மரணம் குறித்து கண்களில் தளும்பிய நீருடன்  நினைவோடிக் கொண்டிருந்தார் எங்களுடன் இணைந்து பணியாற்றும் மஞ்சுவிரட்டு என்கிற அப்படத்தின் இயக்குனர்.

சமீபத்தில் கூட ஒரு டிஸ்கஷனில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது.. “இன்னைக்கும்  காலேஜ் ஸ்டூடண்ட் கேரக்டர்ல முரளின்னு சொன்னா நம்புறா மாதிரி இருக்கிற ஒரே ஆள் என்றார் நண்பர் ஒருவர்.  மக்கள் மனதில் மிகவும் யூத்தான் ஒரு கெட்டப்பிலேயே இருந்ததினால் என்னவோ.. மிகவும் யூத்தான வயதில் இறந்துவிட்டார் என்ற எண்ணமும் ஓடிக் கொண்டிருந்துதான் இருந்தது.
கேபிள் சங்கர்

Sep 7, 2010

எண்டர் கவிதைகள்-11

bonfires_by_ineedchemicalx-d2y7rcr

இருண்டவானம்
ஆகாசக் கனவுகள்
மிளிர்ந்த பிறைநிலா
கருப்பு நட்சத்திரம்
ஆலிலை அபாயம்
துவர்க்கும் உதடுகள்
நுனிநாக்கில் உப்பு

Sep 5, 2010

கொத்து பரோட்டா –06/09/10

நான் இணை இயக்குனராக வேலை செய்யும் படத்தின் ஷூட்டிங் இன்று ஆரம்பிக்கிறது. தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு ஷூட்டிங் இருப்பதால் எழுத நேரம் கிடைக்குமா? என்று தெரியவில்லை! அதனால் ஐய்யா.. ஜாலி என்று சந்தோசப் படுபவர்களுக்கு ஒர் எச்சரிக்கை.. திடீர்னு நடுவுல நாலு எழுதி போட்டாலும் போடுவேன். சாக்குரதை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆர்டிஸ்ட் செலக்‌ஷன் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஒருவர் மிக நீட்டான உடையணிந்து உட்கார்ந்திருந்தார். நான் யார் என்று கேட்ட போது இயக்குனரை பார்க்க வேண்டும் என்றும், தான் ஒரு தயாரிப்பாளர் என்று சொன்னார். இயக்குனர் வர மாலை ஆகும் என்பதால் என்ன விஷயம் சொல்லுங்கள் நான் சொல்லிவிடுகிறேன் என்றதும், பையிலிருந்து ஒரு போட்டோவை கொடுத்துவிட்டு, நான் தான் வின்னர் பட தயாரிப்பாளர், அவரை பற்றி பட உலகில் இருப்பவர்கள் எல்லாருக்கும் தெரியும். வின்னர் படம் வெற்றிப் படமாய் இருந்தும் அதனால் எந்த விதத்திலும் பெரியதாய் லாபம் சம்பாதிக்காதவர். அதே நடிகரை வைத்து அடுத்து பட தயாரிப்பு வேலையில் இறங்கி, அதனால் ஆன ப்ரச்சனை காரணமாய் நொடித்து போன கதை குமுதத்தில் வந்திருக்கிறது. இப்படத்தில் அவருக்கு நிச்சயம் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று இயக்குனர் முதற்கொண்டு குழுவினர் அனைவரும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளோம். அதெப்படி ஒரு தயாரிப்பாளர் வெற்றிப் படத்தை கொடுத்துவிட்டு பணம் சம்பாதிக்காமல் இருக்க முடியும் என்று கேட்பவர்களுக்கு விடை..விளம்பரம்: சினிமா வியாபாரம் புத்தகத்தில் இருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நேற்று நண்பர் முத்துப்பாண்டி என்னிடம் சிந்து சமவெளி படத்துக்கெல்லாம் விமர்சனம் எழுதுகிறீர்களே? என்று பெங்களூரிலிருந்து ஒரு மணி நேரம் பேசினார்.  நீண்ட வாக்குவாதம் எங்களுக்குள். மிக ஆரோக்கியமாக.. இது போல பல முறை எங்களிடையே நிகழ்ந்துள்ளது. ஏன் எழுதினால் என்ன என்று கேட்டேன். இம்மாதிரியான படங்களை பார்த்து எதிர்காலத்தில் மருமகள்கள் எல்லாம் மாமனாரை கரெக்ட் செய்ய பழகிவிடுவார்கள். சமுதாயத்தை கெடுத்துவிடும் படங்களை எடுக்கவே கூடாது என்றார். இப்படி படமெடுப்பவர் ஏன் நாளை அண்ணன் தங்கை உறவை வைத்து கொச்சைபடுத்தி படமெடுக்க மாட்டார் என்று கேட்டார். பல நண்பர்கள் உலக படங்களில் வரும் காட்சிகளையெல்லாம் பார்த்துவிட்டு, அற்புதமான கதை என்று சொல்வார்கள் அதையே தமிழில் எடுத்தால் கலாச்சாரம் கெட்டுப் போய்விட்டது. என்று கூக்குரலிடுவது. சினிமா என்ற ஊடகம் வரும் முன்னரே இம்மாதிரியான கதைகள் நடக்கத்தான் செயிதிருக்கிறது. இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கிறது. என்பது தினசரிகளை பார்த்தாலே தெரிகிறது. இப்படியிருக்க, இம்மாதிரியான படங்களின் வெற்றி இப்படத்தை பற்றி பேசுவதில் தான் அடங்கியிருக்கிறது. தேவையில்லாத படமென்று நீங்கள் நினைத்தால் அதை இக்னோர் செய்யுங்கள். தானாகவே அதன் முன்னுரிமை இழந்து தவிர்க்கப்பட்டுவிடும். நானாவது படம் பார்த்துவிட்டு எழுதினேன்.  நண்பரோ.. அந்த படத்தை பார்க்காமலேயே ஒரு மணி நேரம் பேசினார். இதான் அப்படத்துக்கு கிடைக்கும் பப்ளிசிட்டி.  வெற்றி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ இந்த வார தத்துவம்
உன்னுடய அர்பணிப்பு கடலை விட ஆழமாக இருந்தால், உன்னுடய குறிக்கோள் மலையை விட உயரமானதாய் இருக்கும், உன்னுடய எதிர்காலம் சூரியனை விட பிரகாசமானதாய் இருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ இந்த வார குறும்படம்
மிகவும் சர்காஸ்டிக்கான ஒரு சின்ன குறும்படம்.. கார்த்திக் சுப்பாராஜுடையது. இந்த இரண்டு சொச்ச நிமிட குறும்படத்தில் நச்சென விஷயத்தை சொல்லியிருக்கிறார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார விளம்பரம்
சிகரட் பிடிப்பதினால் வரும் பிரச்சனைகளை குறித்து இந்தியன் கேன்சர் அசோசியேஷன் எடுத்த விளம்பரம். நச் விளம்பரம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
டைட்டானிக் ஜாக் செத்தான், ரோஸ் எஸ்கேப், காதல் பரத் பைத்தியமானான், சந்தியா எஸ்கேப், சுப்ரமணியபுரம் ஜெய் செத்தான், சுவாதி எஸ்கேப், லேட்டஸ்டா பாருங்க நித்யானந்தா மாட்டினாரு, ரஞ்சிதா எஸ்கேப். மாரல் ஆப் த ஸ்டோரி என்னன்னா..? எப்பவுமே பொண்ணுங்க உசாரு.. எஸ்கேப்பாயிடுறாங்க..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ ஏ ஜோக்
ராஜா ஒரு வேலைக்காகதவன். ஆனால் ராணிக்கு எந்நேரமும் செக்ஸ் வேண்டும் எனவே நிறைய ஆட்களுடன் தொடர்பு வைத்திருந்தது தெரிந்த ராஜா, வேட்டைக்கு புறப்படும் முன் தன் அரசவை மேஜிக் நிபுணரிடம் ஒரு கருவி செய்ய சொல்கிறான். அவனும் யார் கண்ணுக்கும் புலப்படாத ஒரு ஸ்பெஷல் கருவியை ராணியின் இடுப்பில் கட்டி விடுகிறான். அக்கருவி. ராணியின் இடுப்பின் கீழ் நீட்டமாக எது வந்தாலும் கட் செய்துவிடும். வேட்டை முடிந்து வந்து எல்லா மட்ட ஆட்களையும் செக் செய்ய எல்லோருடய லுல்லாவும் துண்டாகியிருந்தது. கடைசியாய் இருநத மந்திரியை செக் செய்ய அவருடய லுல்லா மட்டும் அப்படியே இருக்க, சந்தோசப்பட்ட ராஜா இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கேட்க, மந்திரி “பே…பே..”என்றார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்

உங்கள் பக்கம்

1) பாதை பயணம் நான் …
பாதை முடியும் இடம்
தேடிய பயணம் எனது
தேடிமுடித்தேன்


பாதை முடியவில்லை
தேடல் மட்டும் முடிந்ததாய் தோன்ற
பாதை நீள்கிறது

நான் எங்கே?
____________________________________________________________________________________

2) நான் மரணிக்கிறேன்
இந்த சப்தவெளியின் கதறல்கள்
துண்டு துண்டாய் கிழிக்கிறது
என்னையும் என்னுள்ளிருக்கும் என்னையும்

விடுபட்டு ஓடத்துடிக்கும் என்னை
கட்டிப்போடுவது
என்னுள்ளிருக்கும் நான்தான்

ஒருமுறை மரணித்துப் பார்
சப்த கதறல்கள் ஒன்றுமில்லாமல் போகும்
நான் மரணிக்கப் போகிறேன்.
_________________________________________________________________________________________________________
3) காற்று வீசுகிறது
சொட்டு சொட்டாய்
சேகரித்த
கோப்பைத் தேநீர்
உடைந்து நொறுங்கியது கோட்டை
நா வறண்டது
கடல் அலை
அடித்துக் கொண்டேயிருக்கிறது.
_____________________________________________________________________________________________________
-- 
என்றும் அன்புடன்
தமிழினியன்.சுப
www.thamiziniyan.com

Sep 4, 2010

சிந்து சமவெளி

sindhu340 நல்லதை மட்டுமே பார்ப்பவர்கள், நல்லதை மட்டுமே பேசுபவர்கள், நல்லதை மட்டுமே கேட்பவர்கள் தயவு செய்து, கலாச்சார காவலர்கள், இந்த விமர்சனத்தையும், படத்தையும் பார்க்காமல் வேறு ஏதாவது உருப்படியான வேலை எதுவும் பார்க்கலாம். இன்னும் சில நாட்களுக்கு, பத்திரிக்கைகளுக்கும், பதிவுகளிலும், சும்மா பின்னி பெடலெடுக்கப் போகும் அவலாய் இப்படம் இருக்கப் போகிறது. அதையும் மீறி நிச்சயமாய் நீங்கள் 18 ப்ளஸ் ஆளாகவும், மன முதிர்ச்சியுடைவராகவும் இருந்தவர்களானால் தொடரவும்.

ப்ளஸ் டூவில் முதல் மாணவனாக வரும் அன்புவின் தந்தை ஒரு இராணுவ வீரன். நாட்டுக்காக எல்லைப் பகுதியில் போராடும் வேளையில் காலில் குண்டடிப்பட்டு வி.ஆர்.எஸ் வாங்கிக் கொண்டு திரும்ப ஊருக்கு வருகிறார். மகன் மேல், மனைவி மேல்மிகவும் பாசமுள்ள ஒரு அன்பான தகப்பனாய் வாழ்கிறார். என்னதான் அன்பான அப்பாவாக இருந்தாலும், இளமைக் காலத்தை இராணுவத்திலேயே செலவிட்டு, மீண்டும் வந்து வசந்த காலத்தை பார்க்க முயலும் போது மனைவி பாம்பு கடித்து இறக்கிறார். அப்பாவும் பிள்ளையும் தனிமரமாகிறார்கள்.

அன்புடன் படிக்கும் சுந்தரியிடம் காதல் பிறக்க, பள்ளி படிப்பு மட்டுமே முடித்திருக்கும் அன்புவின் காதலை பார்த்து, அவனின் தந்தை அவர்களின் காதலை புரிந்து திருமணம் செய்து வைக்கிறார். அதற்கு இன்னொரு காரணம் அவருக்கு இதன் நடுவில் ஆக்சிடெண்ட் ஆகி ஆறு மாசத்திற்கு நடக்க முடியாமல் போய்விட்டதால் வீட்டை பார்த்துக் கொள்ளவும் மகனின் காதலை நிறைவேற்றவும் திருமணம் நடக்க, நான்கு நாட்களில் அது முடிந்ததும் அன்புவின் அம்மா சொன்னபடி டீச்சர்ஸ் ட்ரைனிங் படிக்க போய்விடுகிறான்.

அதன் பிறகு மாமனாரின் உணர்வுகளை தூண்டும் விதமாய் நிகழ்வுகள் நடக்க, தன்னை கட்டுப் படுத்த முடியாமல் தள்ளிப் போட்டு, தள்ளிப் போட்டு ஒரு கட்டுப்படுத்த முடியாமல் நட்ட நடுக் கடலில் எது நடக்கக்கூடாதோ அது நடந்தேறி விடுகிறது. இதன் பிறகு நடக்கும் விஷயங்கள் அத விட அதிர்ச்சி. மருமகளே ஒரு கட்டத்தின் தன் உடலின் வேட்கையை தாங்க முடியாமல் மாமனாருடன் உறவு கொள்ள, ஒரு கட்டத்தில் இருவரும் கணவன் மனைவியாகவே காமமும், காதலுமாய் கொழிக்க, மகன் திரும்பும் போது அவனுக்கு சந்தேகம் வருகிறது.  பிறகு என்ன ஆனது என்பதுதான் கதை.

கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக காட்டினால் பிட்டு படமாகிவிடக்கூடிய ஒரு கதைக் களன். ஆனா அந்த கதைக் களன் தான் ஆபாச, வக்கிர உணர்வுகளின் உச்சமாய் இருப்பதால் காட்டினாலும் காட்டாவிட்டாலும் மேற்சொன்ன உணர்வுகள் எழாமால் இருக்க முடியாது.  ஆனால் முடிந்த வரை காட்சிகளில் ஆபாசம் இல்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் சாமி.

எடிபஸ் காம்ப்ளெக்ஸ், போன்ற பல விஷயங்களை விஷுவலிலும், காட்சிப்படுத்துதலிலும் முயன்றிருக்கிறார்.ஆனால் என்னதான் முயன்றாலும், கதைப் போக்கும், அதற்கான காட்சிகளும், மிகவும் திணிக்கப்பட்டதாகவே இருக்கிறது. உதாரணமாய் மகனுக்கு பதினெட்டு வயதில் திருமணம் செய்து வைப்பது, அந்த யாருமேயில்லாத ஒரு கடலோர தனி வீடு, நடுராத்திரி யானை, என்று விதியோ, அல்லது சதியோ, மருமகளுக்கும், மாமனாருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் இயல்பில்லை. எப்போது வரும் சீன் என்று காத்திருப்பவர்களுக்கான காட்சிகளாகவே இருக்கிறது. என்ன தான் முடிவில் நீதி சொன்னாலும், இம்மாதிரி திணிக்கப்பட்ட காட்சிகளால் படத்துடன் ஒட்டவே முடியாமல் போகிறது. க்ளைமாக்ஸ் காட்சி இன்னும் அதிர்ச்சியோ அதிர்ச்சி.

புதுமுகம் அனயா கருப்பாக இருந்தாலும் களையாய் இருக்கிறார். அழும் காட்சிகளில் தான் பாவம் கொடுமையாய் இருக்கிறார். அப்பாவாக வரும் கஜினிக்கு அவரது மிலிட்டரி உடற்பயிற்சி உடல் போலவே நடிப்பும் கெட்டியாய், கல்லு போல் இருக்கிறார்.ஹரீஷுகு ஒன்று பெரிதாய் சொல்லிக் கொள்கிறார் போன்ற ஒரு கேரக்டர் இல்லை.  ஆரம்பத்தில் ரெண்டு பாட்டு பாடி, கட்டிலில் புரண்டு, கடைசி காட்சியில் நீதி வழங்கிவிட்டு போவதுதான். சுந்தர் சி. பாபுவின் இசை ரொம்பவும் இறைச்சலாய் இருக்கிறது. ஒரு வேளை நான் பார்த்த ஏவி.எம்.ராஜேஸ்வரி தியேட்டர் காரணமாய் இருக்கலாம். அதனால் ஒன்றுமே புரியவில்லை.ஒளிப்பதிவு ஓகே. திரும்ப திரும்ப, வீட்டை ஒரு ரவுண்ட் நாலைந்து எபெக்டுகளில் சுற்றி காட்டுவது முதலில் நன்றாக இருந்தாலும், சலிப்படைய வைக்கிறது. தோட்டா தரணியின் அந்த வீட்டு செட் அட்டகாசம்.

படத்தில் வரும் கஞ்சாகருப்பு காமெடிக் காட்சி படு மொக்கை. ஆனால் அவரை வைத்து கிருஸ்துவ பாதிரியார்கள் செய்யும் கில்மா வேலைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முதல் பாதி அரைகுறையாய் ஏதோ ஒட்ட வைத்த காட்சிளுடனே நகர்ந்து எப்படா கதைக்கு வருவார்கள் என்று ஆகிவிடுகிறது.

இம்மாதிரியான கதைகளை செக்ஸுவலான காட்சிகள் இல்லாமல் பழைய மலையாள இயக்குனர்கள் பத்மராஜன், பரதன் போன்றவர்கள் மனித உணர்வுகளின் ஊடே கலந்து அதன் பிரச்சனைகளை கொண்டு படமெடுத்திருக்கிறார்கள்.

அதிகம் பேர் செக்ஸ் காமெடி, செக்ஸுவலான காட்சிகள், நடனங்கள் என்று வக்கிரத்தை படமாக்கி யூ சர்டிபிகேட்டில் படமெடுக்கும் நேரத்தில் தைரியமாய் யாரும் எடுக்க யோசிக்கும் கதைக்களனில் பயணித்து, சாதாரண படங்களில் வரும் க்ளிவேஜ் காட்சிகள் கூட இல்லாமல் மிக மன உணர்வுகளையும், அதன் பிரளயங்களையும், முக்கியமாய் சுந்தரி தன் மாமனாரிடம் ஈடுபாடு கொள்வதற்கான காட்சிகள் நிஜமாகவே நன்றாக படம்பிடித்திருக்கிறார். தொடர்ந்து இம்மாதிரியான கதைக் களன்களில் பயணிக்க இயக்குனருக்கு தைரியம் தான்.

தினமும் தினசரிகளில் நாம் பார்க்கிற கள்ளக்காதலுக்காக மகனையும், கணவனையும், கொல்லும் பெண்களை பற்றியும், மகளையும், மனைவியையும் கொல்லும் ஆண்களை பற்றியும் வருகிற, மற்றும் முறை தவறுகிற உறவுகளை பற்றியும் நாம் படிக்கும், நடக்கும் விஷயங்களை தான்
நிச்சயம் வருகிற வாரங்களுக்கு மீண்டும் சொல்கிறேன் இப்படம் எல்லோருக்கும் அவலாய் மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தர போகிறார்கள். பதிவர்களும், பத்திரிக்கையாளர்களும், இதை ஆதரித்தும், எதிர்த்தும், போராட்டங்கள் நடக்கப் போகிறது. இதனால் நிச்சயம் இப்படம் தயாரித்தவர்களுக்கு லாபம் தான். இதை ஆதரிக்ககூடாது என்று நினைக்கும் நண்பர்கள், கலாச்சார காவலர்கள் எல்லோரும் தயவு செய்து புறக்கணீக்க வேண்டுமென்றால் இதை பற்றி யாரும் பேசாமல், எழுதாமல்  இருந்தால் தான் நல்லது. இந்த விமர்சனத்தை எழுதியதற்காக என்னையும் சேர்த்து வக்கிரம் பிடித்தவன் என்று திட்டுபவர்களுக்கு தயவு செய்து முதல் பாராவை படித்துவிட்டு செல்லவும்.


சிந்து சமவெளி – நிச்சயமாய் 18+ மற்றும் முதிர்ச்சியடைந்த மனநிலை உள்ளவர்களுக்கு மட்டும்.
கேபிள் சங்கர்

Sep 3, 2010

பா.வே.படங்கள் –Trade(2007)

220px-Tradeposter உலகின் புராதான தொழிலான விபச்சாரத்தை பற்றித்தான் படம். ஆனால் ஆரம்பித்த கணத்திலிருந்து முடிவு வரை பதை பதைக்க வைக்கும் லைவ்வான திரைக்கதையால்  படம் நெடுக அதிச்சியடைய வைக்கிறார்கள்.

பிரேசிலில் ஒரு ஏழ்மையான் தந்தையில்லாத குடும்பம். பதிமூணு வயது தங்கை அட்ரினா, வெளிநாட்டு டூரிஸ்டுகளிடம் செக்ஸியான பெண் வேண்டுமா என்று தனியாய் அழைத்துப் போய் பணம் பிடுங்கும் ஜேர்கே எனும் பையன். ஒரு நாள் தன் தங்கையின் பிறந்த நாளுக்காக ஒரு புத்தம் புதிய சைக்கிளை வாங்கிக் கொடுக்கிறான். தனியாக போகாதே என்று அச்சுறுத்தப்பட்ட பெண் தாயின் சொல்லை மீறி தனியாக சைக்கிள் ஒட்ட கிளம்ப, பின்னால் காரில் துரத்தி வரும் ஆட்களால் கடத்தப்படுகிறாள். அதே கும்பலால் வெரோனிகா என்கிற திருமணமாகி தனியாய் குழந்தையுடன் போலந்தில் வாழும் ஒரு பெண்ணை வேலை வாங்கித்தருவதாய் மோசடி செய்து, ஏர்போட்டிலிருந்து கடத்துகிறார்கள். இரண்டு பேர்களை மட்டுமில்லாமல் மேலும் சில சிறுமிகள் பெண்களை கடத்தி ஒரு கண்டெயினர் லாரி மூலம் வேறு இடத்திற்கு கொண்டு சென்று ஏலத்தில் விட தயாராகிரார்கள். இவர்களை தவிர ஒரு தாயலாந்து சிறுவன் ஒருவனும் இருக்கிறான்.

தன் தங்கையின் சைக்கிளை போன்றே ஒரு சிறுவன் ஓட்டி வருவதை பார்த்து அவனை பிடித்து எங்கே எடுத்தாய் என்று கேட்க, அவன் அந்த சைக்கிள் ரோட்டில் கிடந்த இடத்தை காட்ட, தன் தங்கை யாராலோ கடததப்பட்டிருகிறாள் என்று தெரிந்து கொண்டு, லோக்கல் மாப்பியாவை தன் நண்பர்கள் மூலம் தொடர்பு கொள்கிறான். அவனோ அவர்கள் பெரிய ஆட்கள் அவ்வளவு சீக்கிரம் பிடிக்க முடியாது என்றும், மாட்டினால் ஆள் காலி என்று மிரட்ட, என்ன செயவதென்று தெரியாமல். அவர்கள் எங்கு கூடுவார்கள என்று தெரிந்து அங்கே போக, அங்கே தன் தங்கையை கணடெயின்ர் லாரியில் ஏற்றுவதை பார்த்து காரில் பின் தொடர்கிறான். ஒரு இடத்தில் பார்டர் கிராஸ் செய்யும் போது அங்கிருக்கும் போலீச் காரர்கள் கண்டெயினரில் இருக்கும் பெண்களை அனுபவித்துவிட்டு காசும் வாங்கிக் கொண்டு அனுப்பிவிடுகிறார்கள். பின்பு அங்கேயே அவனுடய தங்கைக்கு கவர்ச்சியான உடைகளை போட்டுவிட்டு படமெடுத்துக் கொள்கிறார்கள். பின்பு வண்டியை அங்கிருந்து கிளப்ப, ஜேர்கேவின் கார் பெட்ரோல் காலியாகிவிட, கண்டெயினரை மிஸ் செய்கிறான். அப்போது ஒரு இடத்தில் மறைந்து கொள்ளும் போது ஒரு ஆளின் வண்டியின் டிக்கியில் படுத்துக் கொள்ள, அவர் ஒரு இன்சூரன்ஸ் ப்ராட் இன்வெஸ்டிகேட்டர். அவர் மூலம் காரில் டிக்கியில் படுத்தபடியே அமெரிக்காவை தாண்ட, அந்த பெண்களை கடத்தும் கும்பலும் அமெரிக்காவுக்கு திருட்டுதனமாய் உள்நுழைய, அவர்கள் போலீஸில் பிடிபடுகிறார்கள். திரும்பவும் அவர்கள் மெக்ஸிக்கோவுக்கு திரும்ப அனுப்பப்பட, மறுபடியும் அவர்கள் ரோடு மார்க்கமாய் அமெரிக்காவில் நுழைந்து அங்கே அந்த பெண்களை இண்டெர்நெட் மூலம் ஏலம் விடப்படுவதை கணடு பிடிக்கிறார்கள். அந்த இன்சூரஸ் பராட் ஏஜண்டின் வாழ்க்கையில் ஒரு சோகம் தன் முதல் மனைவியின் மூலம் பெற்ற பெண்ணை அவளே ப்ராததல் வீட்டில் விற்றுவிட்டு போய்விட பதது வருடங்களுக்கு மேலாக தேடிக் கொண்டிருக்க, ஜேர்கேவுக்கு உதவுகிறார்.

க்ளைமாக்ஸில் ஆட்ரினாவை ஜேர்கே கண்டுபிடித்தானா? ரே தேடிவந்து கொண்டிருக்கும் பெண் கிடைத்தாளா? என்ற போன்ற கேள்விகளுக்கு திரைப்படத்தில் விறுவிறுபபாக் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு நெகிழ்வான நிகழ்வுகளுடன்.

ஆரம்ப காட்சியில் ஏர்போர்டிலிருந்து பெண்களை நைச்சியமாய் பேசிக் கொண்டு வரும் போது, ஒருத்தி திமிற தப்பி ஓடும் போது அவளை ஒரு கார் அடித்து தள்ளிவிட, அதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல வெரோனிகாவை ஏற்றி போகும் போதும், வீட்டில் வந்து ப்ரச்சனை பண்ணும் வெரோனிகாவை கடத்தும் ஆள் எல்லோர் முன்னிலையிலும் அவளை ரேப் செய்வதும், அந்நிகழ்வு கொடுக்கும் பய அதிர்வுகள் அட்ரினாவுக்கு மட்டுமல்ல நமக்கும் தான். அதே போல் போகிற வழியில் போலீஸ்காரர்களுக்கு கன்னிப் பெண்ணாக அட்ரினாவை தவிர யாரை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளச் செய்வதும், மீண்டும் அவள் வன்புணர்வ செய்யப்படுவதும், காடுகளின் மத்தியில் டைம் க்ளாக் வைத்து பெண்களை சல்லாபத்திற்கு விடும் காட்சியும், வெறும் ப்ளோ ஜாபுக்காக அட்ரினாவை அனுப்பும் காட்சியும், ஜஸ் கத்தி ஜில்லிப்பு. சொருகல்.

வெரோனிகா, அட்ரினா, தாய் சிறுவன், மற்றும் சிலரை அமெரிக்காவுக்கு கடத்த கூட வரும் ஒரு ட்ரக் ட்ரைவரும், அந்த அஸிஸ்டெண்டும் நல்ல தேர்வு. அதிலும் கொஞ்சம இரக்கமுள்ள அந்த அஸிஸ்டெண்ட் கேரக்டர் அருமை. வெரோனிகாவை கதற,கதற ரேப் செய்யப்பட்டவுடன் தனியே வந்து அவளுக்கு பெயின் கில்லர் கொடுப்பதாகட்டும், அவள் மலை உச்சியிலிருந்து குதிக்கும் முன் “இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்” என்று சொல்லி குதிக்கும் போது அடையும் அதிர்ச்சியும், க்ளைமாக்ஸில் அட்ரினாவை காப்பாற்ற ரே அவளை ஏலத்தில் எடுக்க, அவளை அங்கேயே புணர்ந்தால்தான் அவளை அனுப்புவேன் என்று சொல்ல, என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் வேளையில் அவர்களை செக் செய்ய வரும் அஸிஸ்டென்டை ஏமாற்ற அட்ரினாவே சுயமாகவே கன்னித்தன்மையை சிதைத்து கொண்டு, பெட்டில் ரத்தத்தை தடவி, அந்த அக்காவின் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார் எனும் காட்சியெல்லாம் பார்பதற்கு நெஞ்சில் உரம் இருக்கிறவர்கள் மட்டும் ட்ரை செய்யவும்.

படத்தில் சில விஷயங்கள் பெரிதாய் விளக்கவே படவில்லை. முக்கியமாய் அந்த அமெரிக்க வீரர்கள் அவர்களை பாடர் கிராஸ் செய்த காரணத்தால் கைது செய்து மீண்டும் மெக்ஸிகோவுக்கு அனுப்பி வைக்கப்பட, எப்படி மீண்டும் உள் வந்தார்கள் என்ற தெளிவும், வெரோனிகாவும், அட்ரினாவும் ஈஸியாக தப்பிக்க கூடிய சான்ஸ் இருந்தும் மிக மொக்கையாய் மாட்டிக் கொள்ளும் இடம் போன்ற சிற்சில விஷயங்கள் தவிர ஸ்டன்னிங் பிலிம்.


டிஸ்கி: இந்த படத்தின் இன்ஸ்பிரேஷன் தான் தமிழில் “விலை” என்கிற பெயரில் வந்திருக்கும் படம். ரே கேரக்டரில் சரவணனும், அண்ணன் ஜேர்கே கேரக்டரில் நாடோடிகள் பரணியும் நடித்திருக்கிறார்கள்.
கேபிள் சங்கர்

Sep 2, 2010

பா. வே. படங்கள் - Company (2002)

company1 ரொம்ப நாளுக்கு பிறகு திரும்பவும் இந்த படத்தை பார்க்க நேர்ந்தது. படம் வெளியான போது இப்படத்தை திறந்த வாய் மூடாமல் பார்த்ததாய் ஞாபகம்.  அந்த மேக்கிங்கும், கதை சொல்லும் நேரேஷனும். ஏற்கனவே ராம் கோபால் வர்மா மொக்கையாக படமெடுத்தாலும் ஒரு தடவைக்கு நாலு தடவை  பார்க்கும் ரசிகன் என்பதால் இப்படத்தை எத்தனை முறை பாத்திருப்பேன் என்று தெரியவில்லை.

மும்பையின் கல்லியில் சின்ன சின்ன சில்லுண்டி வேலைகள் செய்து அலையும் சந்து கொஞ்சம் கொஞ்சமாய் மாலிக் பாயிடம் சேர்ந்து அவனது வலது கையாய் மாறி மிகப்பெரிய உயரத்துக்கு போகும் நேரத்தில் ஒரு சின்ன தவறான புரிதலால் இருவரும் எதிரியாகிறார்கள். மும்பையே அல்லோலகல்லோல படுகிறது. ஒரு கட்டத்தில் சந்து போலிஸிடம் சரணடைய, மாலிக் பாயும் கொல்லப்படுகிறான். அண்டர் வேர்ல்ட் கேங்குகளின் தாதாக்களை பற்றிய கதை. நிறைய தெரிந்த கேங்ஸ்டர்கள் பற்றிய விஷயஙக்ள் எல்லாம் புகுத்தி சும்மா தட்டி விட்ட குதிரை போல பரபரக்கும் திரைக்கதையில் அட்டகாசமான கம்பெனி.

கதையாய் சொன்னால் ஏற்கனவே பல படங்களில் பார்த்த கதையாய் தெரிந்தாலும் மனுஷன் ஸ்கிரீன் ப்ளேயில் பின்னி பெடலெடுத்திருப்பார். அதில் படத்தில் வரும் டயலாக்குகள்.. மிக ஷார்ப். முக்கியமாய் ஒரு இடத்தில் மோகன் லால், சந்துவிடம் “எதுக்காக இந்த தொழில்? பணத்துக்காகவா? அப்படி பணத்துக்காகன்னா.. நீ செலவு செய்யறதுக்குள்ளே நீ செத்துருவே..?” “நம் வியாபாரத்தில் ஒரு வாட்டி தப்பு பண்ணிட்டான்னு மன்னிக்கிறது பெரிய தப்பு”  அதே போல் போட்டியாளரை தவறுசெய்யும் வரை காத்திருந்து தனியா அவனை கொலை செய்ய முடிவு செய்து அவனது காரில் நுழைய சம்பந்தப்பட்டவன் ‘என்னை வேணுமின்னா கொன்னுடு.. என் தம்பியை விட்டுரு.. குடும்பத்தை பாக்குறதுக்கு ஒருத்தனாவது வேணும் என்று கெஞ்ச சரி என்று இதயத்தின் நேர் பின்பக்கம் சத்தமில்லாமல் சுட்டுவிட்டு, தம்பி கதறி அழும் போது அவனையும் கொல்லும் போது சந்து ஏன் கொன்றீர்கள் என்று கேட்பான். மாலிக் “அவன் சாகும் போது சந்தோஷமா செத்திருப்பான். தம்பியை கொல்ல மாட்டோம்னுதான் நினைச்சிட்டு செத்திருப்பான். ஆனா தம்பி உயிரோட இருந்தா பழிவாங்க காத்திருப்பான். எப்பவுமே மிச்சம் விட்டு வைக்க கூடாது.” இப்படி  படம் பூராவும் நச் நச் வசனங்கள்.

சின்ன சின்ன கேரக்டர்கள் ஆர்ஜிவியின் படங்களில் ஆக்கிரமித்து கொள்ளும் அளவுக்கு டெம்ப்தாக இருக்கும். மாலிக்கின் கன்சல்டண்ட் பண்டிட்ஜி, அவனது இன்னொரு அல்லக்கை, டிரைவர் கேரக்டர், மனைவி சரோஜா, சந்துவின் அம்மா சீமா பிச்வாஸ், அவனது சர்தார்ஜி நண்பன், அந்தராமல்லி, என்று படம் நெடுக கேரக்டர்கள் கேரக்டர்கள் கேரக்டர்கள்.

எனக்கு இப்படத்தை பார்பதற்கு முன் அஜய் தேவ்கனை அவ்வளவாக பிடிககாது இதற்கு பிறகு தீவிரமாக ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். அப்படி ஒரு பெர்மாமென்ஸ். சந்துவாக வரும் விவேக் ஓப்பராயின் நடிப்பும்  கச்சிதமாய் இருக்கும். படம் முழுவதும் மனிஷாவின் பாடிலேங்குவேஜ் அட்டகாசமாய் இருக்கும். நிறைய டபுள் வைட்டில் ஷாட்டுகள் வைக்கப்பட்டிருக்கும். மிக முக்கியமான காட்சிகளில் கூட சிங்கிள் ப்ரேமில் நம்மை அறியாமல் படத்தினுள் ஊடுருவ விட்டிருப்பார் இயக்குனரும், நடிகர்களும், ஒளிப்பதிவாளரும். இப்படத்தில் வரும் கல்லாஸ் பாடல் ஒரு காலத்தில் ஹிட் லிஸ்ட்டில் இருந்த பாடல். இஷா கோபிகர் ஈஷிக்கொள்ளும் அழகோடு இழைந்து இழைந்து நடந்து வருவதை பார்ப்பதே ஒரு அழகுதான்.

படம் முழுவதும் எந்த வித மான முஸ்தீப்பும் இல்லாமல் டப்பு டுப்பென சுட்டு கொல்வது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கும். மோகன் லால் ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருப்பார். கொஞ்சம் கொஞ்சமாய் பேசிப் பேசியே சந்துவை சரியான் நிலைக்கு கொண்டு வரும் போது மாலிக் பாயிடம் பேசவேண்டும் என்று சந்து சொல்ல போன் போட்டு தரும் மோகன்லால் அவர் பேசி முடித்ததும், மாலிக்கிடம் கன்வின்சிங்காக இந்த தொழிலை விட்டு விடு என்று சொல்ல அதற்கு மாலிக் ‘கமிஷனர் சார்.. நான் சந்து இல்லை.. மாலிக் பாய்.. வேண்டுமென்றால்  உங்களுக்கு ஒரு சான்ஸ் தருகிறேன். என் பக்கம் வருவதற்கு என்று சொல்ல ஒரு அழுத்தமான புன்னைகையுடம் பதில் சொல்லி வைக்குமிடம் சூப்பர்ப்பாக இருக்கும்.. சந்தீப் செள்தாவின் பிண்ணனி இசை வரும் ஒரு கோரஸ் பாடல் செம பெப்.. முன்னர் பார்த்தது போல க்ளைமாக்ஸ் வரைக்கும் வாய் பிளந்து பார்க்க முடியவில்லை. க்ளைமாக்ஸ் கொஞ்சம் நீளம்தான். இருந்தாலும் மீண்டுமொரு பரபரப்பான ஹைஃபை கேங்ஸ்டர் படம் பார்பதானால் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.
டிஸ்கி: பா.வே. படங்கள் என்றால் பார்க்க வேண்டிய படங்கள்
கேபிள் சங்கர்

Sep 1, 2010

சென்னை மால்கள்

ஒரு பக்கத்தில் சிங்களில் ஸ்கிரீன் தியேட்டர்கள் எல்லாம் பெரிய படங்களின் ஓப்பனிங் வரை தாக்கு பிடித்துவிட்டு காற்றாடிக் கொண்டிருக்க, மால்களில் அமைக்கப்பட்டிருக்கும் உயர்தர சொகுசு மல்ட்டிப்ளெக்ஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டேயிருக்கிறது. சென்னையில் மட்டுமில்லாமல் தமிழகம் எங்கும் நிறைய காம்ப்ளெக்ஸ் தியேட்ட்ர்கள் மல்ட்டி ப்ளெக்ஸாக மாற்றப்பட்டு வருகிறது. சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் எல்லாம் இரண்டு தியேட்டர் மாறி வருகிறது. இப்படி மாற்றம் ஏற்படுத்தாத தியேட்டர்கள்  சீக்கிரமே பிட்டு பட தியேட்டராகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகிற நிலையில். சென்னையின் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டரான ஐடிரீம்ஸ் கிட்டத்தட்ட சத்யமின் பாதி அளவு வசதியுள்ள அரங்காக இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை. நிலைமை இப்படியிருக்க ,சென்னையில் விரைவில் வரப்போகும் திறக்கப்பட்டிருக்கும், படப்போகும் மல்ட்டிப்ளெக்ஸுகளும், மால்களும்

1.எக்ஸ்ப்ரஸ் அவுன்யூ
சவுத் இந்தியாவிலேயே மிகப்பெரிய மால் இது. எக்ஸ்பிரஸ் அவின்யூ. சமீபத்தில் தான் திறந்திருக்கிறார்கள். பெரிய புகழ்பெற்ற பிராண்டட் கடைகள் இங்கே நிரம்பியிருக்கிறது. உத.. ஹார்ட் ராக் கேப்,  TGIF, சத்யமின் 8 ஸ்கீரின் கொண்ட ஏஸ்கேப், மிகப்பெரிய பஃன் சிட்டி, புட்கோர்ட்  என்று அட்டகாச பேக்கேஜ் இருக்கிறது. இது ராயப்பேட்டை மணிக்கூட்டின் இடதுபக்கம் அமைந்திருக்கிறது.
2. சந்திரா மால்.
இது பழைய விருகம்பாக்கம் நேஷனல் தியேட்டரை இடித்துவிட்டு கட்டப்பட்டு வரும் மால். சுமார்1.35 ஏக்கர் இடத்தில் பேஸ்மண்டில்லாமல் நான்கு தளங்களை கொண்டது. பத்தாயிரம் ஸ்கொயர் பீட்டில் இரண்டாவது தளத்தில்  ஒரு புட்கோர்ட்டும், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது தளங்களில் 5 மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்களும், ஐந்தில் இரண்டு தியேட்டர்கள் 328 சீட்டுகளும், மீதி இரண்டு 244 சீட்டுகளும்,  ஒரு தியேட்டர் 63 சீட்டுகளூம் அடங்கியதாய் இருக்குமாம். இதில் 63 சீட் தியேட்டர் ஒரு எக்ஸிக்யூடிவ் கோல்டன் க்ளப் தியேட்டராக முழுதாக படுத்துக் கொண்டே படம் பார்க்கும் வசதி, வைப்பரேட்டர் மசாஜ் வசதி, மற்றும் ஆன் கால் வெயிட்டர் சர்வீஸ் போன்றவை இருக்கும் என்கிறார்கள் மொத்தமாக1415 இருக்கைகள் கொண்ட மல்ட்டிப்ளெக்ஸாக  இருக்கும் என்கிறார்கள்.  இந்த தியேட்டர் வந்தால் நிச்சயம் கக்கூஸ் போல ஏஸியும் இல்லாமல், உட்காரும் வசதி கூட சரியில்லாமல் தியேட்டர் நடத்தும் தேவி கருமாரி காம்ப்ளெக்ஸுக்கு இருக்கிறது சரியான போட்டி.. இது நடிகர் விஜய் வாங்கி கட்டுவதாகக்கூட வதந்தி...
3.  பெர்காமோ லக்ஸரி மால்.
பெர்காமோ என்பது இத்தாலியின் புகழ் பெற்ற ஒரு இடம். உலகில் உள்ள பணக்காரரகள் எலலாரும் ஷாப்பிங் செய்யும் இடம். அப்படி பட்ட பெயருடன் சென்னை காதர் நவாஸ்கான் ரோடில் சுமார் 40,000 ஸ்கொயர் பீட்டில் 24 உலக புகழ் பெற்ற ப்ராண்டுகல் கடை விரிக்க போகிறது அநேகமாய் இது சென்னை பணககாரர்களின் மிகப்பெரிய டெஸ்டினேஷனாக மாறாக் கூடிய இடமாக ஆகலாம்.
பெர்காமோ மால் டெல்லி, மும்பை, பெங்களூரில் உள்ளது போல ஒரு சிறந்த பீரிமியம் வகை லக்ஸரி ப்ராடெக்டுகளுக்கான ஒரு மாலாக நிச்சயம் திகழம் என்று நம்புகிறார்கள்.

4. மெரினா க்ராண்ட்
பழைய மகாபலிபுரம் ரோடில் கட்டப்பட்டுவரும் பல மால்களில் ஒன்று..
5. ஜங்ஷன் மால் 
இதற்கு முன்னால் இதற்கு ரிவர்ஸைட் மால் என்று பெயரிட்டிருந்தாரக்ள். சென்னையில் ஆற்றோரமாய் கட்டப்பட்டுள்ள ஒரே மல்டி ப்ளெக்ஸ் மால் இதுவாகத்தான் இருக்கும்.  இது காரப்பாக்கம் பழைய மகாபலிபுரம் ரோட்டில்  ஐ.டி பார்க்கின் அருகில் வருகிறது.
இந்த மால் சுமார் 7.26லட்சம் ஸ்கொயர் பீட்டுகளில் கட்டப்படுகிறது. அநேகமாய் வருகிற 2011ல் மத்ய ஆண்டில் திறக்கப்படும். இதில் லைப்ஸ்டைல் போன்ற முக்கிய் கடைகளும், பிவிஆரின் மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களும் வருகிறது.

இதை தவிர சென்னையில் கமலா திரையரங்குக்கு முன்னால் கீரீன் பார்க்குக்கு பக்கத்தில் கட்டப்படும் ஒரு மாலில் சுமார் எட்டு தியேட்டர்கள் பிக் சினிமாஸ் வரப்போகிறது என்கிறார்கள். அது மட்டுமில்லாமல் வடபழனி பிக்பஸாரின் மேல் கூட தியேட்டர்கள் வரப்போவதாய் பேச்சு.. இப்படி வடபழனி ஏரியாவை சுற்றியே சுமார் பதினைந்து தியேட்டர் மல்ட்டி ப்ளெக்ஸ் வர இருக்கிறது..