குறும்படம்- அப்துல்லா, சிவா, டேனியல்

அப்துல்லா சிவா டேனியல். நான் சிறுகதையாய் எழுதி கல்கியில் வெளிவந்தது. பின்பு மீண்டும் ஒரு காதல் கதை தொகுப்பிலும் வெளியானது. அதை குறும்படமாய் தன்னுடய கால் இறுதி போட்டிக்கு எடுக்க கேட்டார் ரவிக்குமார். சிறுகதையை திரைக்கதையாய் மாற்றி எழுதிக் கொடுத்தேன். மிக அருமையாய் படமாக்கி கால் இறுதியில் வெற்றி பெற்றிருக்கிறார் ரவி. உங்கள் பார்வைக்காக.

அப்துல்லா சிவா டேனியல் சிறுகதையை படிக்க
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Comments

Ashok D said…
சூப்பர் தலைவரே
Suthershan said…
சூப்பர் கதை. இதை நான் சிறுகதையாய் படித்திருக்கிறேன். திரையிலும் நல்ல முறையில் படமாக்கி இருகிறார்கள். நீங்களே நேரடியாக இயக்கும் நாட்களை எதிர் பார்த்து இருக்கிறோம். வாழ்த்துக்கள்.
iniyavan said…
தலைவரே,ரொம்ப சூப்பரா எடுத்து இருக்காங்க. எடுத்த விதம் ரொம்ப அழகு அதைவிட அந்த பெண் ரொம்பவே அழகு.
Xavier said…
This comment has been removed by the author.
pozhuthupoku said…
பைக்ல அவர் ஏறுவதற்கு முன்பே பைக் மூவ் ஆகர சவுண்ட் வருது எப்டி..ஆனா கேமரா சூப்பர்..
a said…
நல்லாருக்கு தல....
Prabu M said…
மேக்கிங் நல்லா இருக்கு....
சிவா செத்துக்கிடப்பதைப் பார்க்கும் டேனியல் "ஜீஸஸ்" என்று சொல்லிவிட்டு ஏதோ செய்கிறாரே என்ன அது??!!
கத்தோலிக்கர்கள் சொல்லும் பிதாசுதன்.... மந்திரத்தைப் பார்த்து சரியாக செய்யச் சொல்லிக்கொடுத்திருக்கலாம்‍! அதுசரி அந்த கேரக்டர்தான் "டேனியல்"னு புரியவைக்கத்தானே அந்த ஒரு ஷாட்! :-)
Rajkumar said…
Hello Sir,

இந்த மாதிரி மொக்க கதையினால... என்ன யூஸ்? ஒன்னுமில்ல...
டைம்தான் வேஸ்ட்....
VISA said…
படமாக்கிய விதம் அசத்தல்.
Sahasrara yoga said…
இறுதி காட்சியில் ஒரு விபத்து நடந்த பரபரப்புக்கிடையில் ஒரு இரு சக்கர வாகனம் ஒன்று கடந்து செல்கிறது, ஆனால் இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் யார் என்றாலும் சாதாரணமாக விபத்தை சற்று நின்று பார்த்து சென்றிப்பார்கள் .. அதை இயக்குனர் ஏன் கவனிக்க தவறி விட்டார் ???
பிரமாதமாக எடுத்திருக்கிறார்கள். கதையையும் முன்பே படித்திருக்கிறேன். என்ன முடிவில் டேனியல் பணத்துடன் போகும்போது 'ஏன்?' அப்படிங்கிற கேள்வி வருது. அதை மட்டும் ஜஸ்டிஃபை செய்திருந்தா சூப்பரா இருந்திருக்கும்.
சூப்பராக எடுத்திருக்கிறார்கள்.
INFOSHAAN said…
The way of making is very Good. God bless them ,, Nice future is there...
Annai Thanthai said…
டிக்கி தொரந்திருக்கரத சொல்றதுக்கு 160 கிமீ வேகத்தில துரத்திக்கிட்டு வர்ரானா?? என்ன லாஜிக்... என்ன ட்விஸ்ட்... தாங்க முடியலடா சாமி!
அருண் said…
சிறுகதையும் சூப்பர்,ஒரு குறும் படமாய் இதை எடுத்திருக்கும் விதமும் அசத்தல்.
சே.கு. said…
இன்னும் எத்தனை தமிழ் படத்துலதாங்க இந்த மாதிரி கிறிஸ்தவங்களோட சிலுவை அடையாளத்தை தப்பு தப்பாபோடுவீங்க? சரி அதைவிடுங்க. ஆக்சிடென்ட்க்கு அப்புறம் பைக்ல தப்பிச்சு போற டேனியல்கிட்ட அந்த டாலர் இருக்குற பை இருக்குறதை பார்த்துட்டு வழியில நிக்கிற ரீனா டேனியல்கிட்ட லிஃப்ட் கேட்டு போறமாதிரி முடிச்சிருந்திருக்கலாம்.