Thottal Thodarum

Sep 19, 2011

கொத்து பரோட்டா - 19/09/11

நன்றி
பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் யுடான்ஸ் திரட்டியை பற்றிய அறிவிப்பை போன வாரம் கொத்து பரோட்டாவில் அறிவித்திருந்தேன். அதற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. ஒரே வாரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் இணைகக்ப்பட்டு, ஆரம்பித்த மாதங்களில் 20லட்சத்திற்கு மேல் இருந்த அலெக்ஸா ரேங்கிங் கடந்த ஒரே வாரத்தில் 2.50 லட்சத்திற்கு வந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் உங்கள் ஆதரவினால் மட்டுமே. விரைவில் அடுத்த சில வாரங்களில் ஒரு லட்சத்திற்குள் நம் யுடான்ஸை வரவழைத்து விடுவீர்கள் என்று நம்புகிறோம். வருகிற வாரம் முதல் ஸ்டார் ஆப் த வீக் என்ற தலைப்பில் பதிவர்களை தெரிந்தெடுத்து அவர்களுடய பதிவுகளை முன்னிறுத்தவிருக்கிறோம். அப்புறம் ஒரு விஷயம் யுடான்ஸில் யாரும் தனியாய் ரிஜிஸ்டர் செய்யாமல் உங்களுடய ஃபேஸ்புக், டிவிட்டர், கூகிள் ஐடிக்களையே வைத்து இணைய முடியும். தொடர்ந்து உங்கள் ஆதரவை தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு. http://www.udanz.com
####################################################


உள்ளாட்சி தேர்தலில் கூட இருக்கும் அத்துனை கட்சிகளையும் கழட்டி விட்டு தான் யார் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார் மம்மி. இதே இடத்தில் கலைஞர் இருந்திருந்தால் ஆளாளுக்கு போய் பிச்சி பிடுங்கி எடுத்திருப்பார்கள். நம்மாளும் அவங்களை கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்தியிருப்பாரு. ஆ..ஊன்னா லிஸ்டு போட்டு பேசுற விசயகாந்து சினிமால மட்டும்தான் வீரரு போலருக்கு. இன்னும் என்ன கேட்குறது? எப்படி கேட்குறதுன்னு கலந்தாலோசித்துக் கொண்டிருக்கிறாராம்.இவரு கேக்குறதுக்குள்ளே எலக்‌ஷனே முடிஞ்சிரும் போலருக்கு. மம்மிக்கு இருக்கிற தைரியம் திமுகவுக்கு இருந்திச்சுன்னா காங்கிரஸை இன்னைக்கு கழட்டி விட்டா மாதிரி அன்னைக்கே கழட்டி விட்டிருந்தாங்கன்னா.. இவ்வளவு இறங்கி போயிருக்க வேண்டியிருந்திருக்காது.
###################################################
கேளிக்கை வரி
தமிழ் சினிமாவிற்கு வரி விலக்கு என்று போன மாசம் அறிவித்துவிட்டு, இப்போது பதினைந்து சதவிகித வரியை முப்பதாக்கியிருக்கிறார் அம்மா. தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது, நல்ல கருத்துக்களை சொல்லும் கதைகளாகவும், தேவையான இடத்தை தவிர முழுக்க முழுக்க தமிழில் வசனங்கள் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்றும், “யு”சர்டிபிகேட் படங்களுக்கு மட்டுமே வரி விலக்கு என்ற அறிவிப்பே செம காமெடியாய் இருந்தது. இப்படி எல்லா கட்டுப்பாடுகளையும் வைத்துக் கொண்டு தூர்தர்ஷன் சீரியல் கூட எடுக்க முடியாது. ஆனால் நிஜமாகவே “யு” சர்டிபிகேட் பெற்ற படங்களூக்கு கூட வரி விலக்கு அளிப்பதில்லை என்பதுதான் உண்மை. அதற்கான பரிந்துரையை கொடுக்கும் குழுவே இன்னும் அமைக்கப்படவில்லை. ஆனால் இதை எந்த பத்திரிக்கையாளர்களும் எழுதியதாகத் தெரியவில்லை.ம்ஹும்.
#######################################################
அப்பா பெற்ற பிள்ளை
காய் பெண்ணாகப் பிறந்தவர். எமிலி ஆணாகப் பிறந்தவர். இருவருமே தம்தம் பால்களின் எதிர்பாலாய் தன்னை உணர்ந்தவர்கள். காய் தன் உடலுக்கு ஆண்களுக்கான டெஸ்ட்டோஸ்டீரான் எனும் ஹார்மோனை தன் உடலுக்குள் செலுத்திக் கொண்டவர். எனவே டெக்னிக்கலாய் இவர்கள் மலட்டுத்தன்மை கொண்டவராகிவிடுவார்கள். அதே போல் எமில தன்னை பெண்ணாக உணர்ந்து அரவாணியாக யோசித்துக் கொண்டிருந்தவர்.  இவர் பெண் தன்மைக்கான ஹார்மோன்களை தன் பதினாறு வயதிலிருந்தே உடலில் செலுத்திக் கொண்டிருப்பவர். இவர்கள் இருவரும் சந்தித்த மாத்திரத்திலேயே காதல் வர, ஒன்றாய் வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களுக்குள்ளான உடலுறவு மட்டும் வழக்கமாய் ஆண், பெண் முறையிலேயே நிகழ்ந்து வந்தது. இருவருமே குழந்தை பெற தகுதியற்றவர்கள் என்று க்ளினிக்கலாய் தெரியும் ஆதலால் எந்த் விதமான் கருத்தடை சாதனமும் எடுத்துக் கொள்ளவில்லை. காய்யின் வயிற்றில் ஏதோ பெரிய மாற்றம் ஏற்பட்டு, பெரிதானவுடன் தான் போய் பார்த்திருக்கிறார்கள். காய் கருவுற்றிருக்கிறார் என்று. இப்போது இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து அதற்கு இரண்டு மாதம் ஆகியிருக்கிறது. அக்குழந்தைக்கு டாண்டே என்று பெயரிட்டிருக்கிறார்கள். சமீபத்தில் செய்தித்தாளில் படித்தது. கலிகாலம்டா சாமி.
######################################################
நண்பர் ஒருவரின் மகனுக்கு உடல் நலமில்லை. வீல்சேரில்தான் அவரது வாழ்க்கை. சமீபத்தில் அவர் மங்காத்தா படத்தை தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். நண்பரும் எனக்கு போன் செய்து நல்ல வசதியான, ஹாஸ்பிட்டாலிட்டியுடன் கூடிய தியேட்டர் எது என்று கேட்க, நான் சத்யத்தை சிபாரிசு செய்தேன். நீங்கள் தியேட்டருக்கு சென்று அங்கிருக்கும் அட்டெண்டெண்ட் யாரிடமாவது தெரிவித்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கான உதவிகள் நிச்சயம் கிடைக்கும் என்றேன். அதே போல காரிலிருந்து இறங்கியதிலிருந்து தியேட்டர் நுழைவாயிலில் நுழையும் வரை வீல் சேர் தள்ளிக் கொண்டு போக வசதியான வழி. அங்கே போய் நண்பரையும் அவர் பையனையும் பார்த்த ஒரு அட்டெண்டெண்ட் உடனடியாய் வந்திருந்து அவருக்கு உதவி செய்து,  சீட்டில் உட்கார வைக்கும் வரை உதவி செய்துவிட்டு, படம் முடியும் போது அதையே செய்திருக்கிறார். அதற்கு நன்றியாய் நண்பர் பணம் கொடுக்க, அதை மறுத்தவர் இது என் வேலைங்க.. உங்களுக்கு என்னை பாராட்டணும்னு நினைச்சா, எங்க கம்பெனி மெயிலுக்கு என் பெயரை போடடு நான் உங்களுக்கு உதவியாய் இருந்தேன் என்று மெயில் அனுப்புங்க அது போதும் என்றாராம். அந்த இளைஞர். இங்குதான் நிற்கிறது சத்யம் நிறுவனத்தினரின் நிர்வாகம். வாழ்த்துக்கள் சத்யம்.
#######################################################
தத்துவம்
அற்புதமான வாழ்க்கை என்பது ஒரு கற்பனை. ஆனால் நிஜ வாழ்க்கை என்பது ஒரு கற்பனையை விட அழகானது. எனவே வாழ்க்கை உன்னுடயது. அதை வாழ்ந்து, அனுபவித்து கொண்டாடு.

வாழ்ககை என்பது மூன்று பக்கங்களை கொண்டது. பிறப்பு, இறப்பு என்கிற இரண்டு பக்கங்களை கடவுள் ஏற்கனவே எழுதி முடித்து விட்டான். நடுவில் இருக்கும் ஒரு பக்கம் தான் உன்னுடயது . அதை நம்பிக்கையையும், சந்தோஷத்தை மட்டுமே நிரப்பி கொண்டாடு.

பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க சிறந்த வழி மெளனம். பல பிரச்சனைகளை தவிர்க்க மிக சிறந்த ஆயுதம் புன்னகை.
######################################################
கேட்டால் கிடைக்கும் ASK
சென்ற வாரம் பிட்ஸா கார்னரில் சாப்பிட்டோம். பில் 207.58 பைசா வந்தது. கரெடிட் கார்டில் பில் பே செய்த போது அவர் அதே 207.58க்கு ஸ்வைப் செய்தார். வழக்கமாய் இம்மாதிரி ஐம்பது பைசாவுக்கு மேல் வரும் சிறு தொகையை ரவுண்ட் செய்வதற்காக ஐம்பது காசுக்கும், என்பது பைசா என்று வரும் போது ஒரு ரூபாய்க்கும் ரவுண்ட் செய்து வாங்குவதுதான் வழக்கம். எட்டு பைசாவுக்கும் சேர்த்து ஸ்வைப் செய்தவுடன் கடுப்பானது. அதெப்படி நீங்கள் ரவுண்ட் செய்யாமல் வாங்கலாம் என்று கேட்டேன். அதற்கு சார் வழக்கமா ரவுண்ட் செய்து ஒரு ரூபாய் ஆக்கிறுவோம். உங்களுக்குத்தான் ரவுண்ட் ஆககாம செய்திருக்கோம் என்று ஏதொ பெரிய டிஸ்கவுண்ட் கொடுப்பது போல சொல்ல, நான் கடுப்பாகி உங்களுக்கு வர வேண்டிய காசு என்றால் ரவுண்ட் செய்துவிடுவீர்கள். எங்களுக்கு கொடுக்க வேண்டிய காசென்றால் ரவுண்ட் செய்ய மாட்டீர்களா? என்று கேட்டவுடன். எதுவும் பேசாமல் கவுண்டருக்கு போய் எட்டு பைசாவுக்கு பதிலாய் ஒரு ரூபாயை கொடுத்துவிட்டு போனார். கேட்டால் கிடைக்கும்
#######################################################
ப்ளாஷ்பேக்
ஒரு பத்து வருடங்களுக்கு முன் சூப்பர் ஹிட் ஆல்பத்தில் வந்த பாடல். அமிதாப் பாடி நடித்த வீடியோ இது. ராப் போன்ற இப்பாடலின் நடுவில் வரும் டான்ஸ் ஸ்டெப்புக்கள் க்யூட்டாக இருக்கும்.
######################################################
கலிகாலம்
சரக்கடிச்சா நாமதான் தலைகீழா நிப்போம்னு சொல்வாங்க.. இங்க சரக்கே கீழேயிருந்து ஃபில் ஆவுது.

####################################################
அடல்ட் கார்னர்
ஒரு டாக்டர் ரொம்ப மன வருத்தத்தில் இருந்தார். அப்போது அவரோட நண்பர் அவரை பார்க்க வந்து இருந்தார். 

நண்பர்:- ஏன் ரொம்ப வருத்தமா இருக்கே?

டாக்டர்:- என்னோட டாக்டர் தொழில்ல முதல் முதலா நான் ஒரு தப்பு செஞ்சிட்டேன்..மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு..

நண்பர்:- அப்படி என்ன தப்பு செஞ்ச?

டாக்டர்:- எவ்ளோ கண்ட்ரோல் பண்ணியும் முடியாம என்கிட்டே வந்த ஒரு பேஷண்ட் கூட என்னையும் அறியாம செக்ஸ் பண்ணிட்டேன்..

நண்பர்:- ச்சே.ச்சே..இதுக்கு போயா வருத்தபடுறே...எல்லா டாக்டரும் பேஷண்ட் கூட செக்ஸ் பண்ண ஆசை படுவாங்க.. உனக்கு அது நடந்து போச்சி...நல்ல விஷயம் தானே..

டாக்டர்:- லூசு மாதிரி பேசாதடா.. நான் ஒரு வெட்டினரி டாக்டர்..

நண்பர்:- ???????????????????????
###############################################################

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

20 comments:

Sivakumar said...

சென்னையில் சத்யம் ஏன் நம்பர் ஒன்னாக பல ஆண்டுகாலம் இருக்கிறது என்பதற்கான முக்கிய காரணங்களில் நீங்கள் சொன்ன நிகழ்வும் ஒன்று.

போதைதர்மன் said...

vada

Sivakumar said...

AS'KING' Cable....Super!!

ம.தி.சுதா said...

நான் வாசிச்சிட்டு வரும் வரையும் கீழ யாரும் கொமண்ட் போடக் கூடாது கம்முண்ணு இருக்கணும் சரியா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

ம.தி.சுதா said...

சத்தியம் தியட்டர் தான் என்னை இம்முறை அதிகமாய் நச் பண்ணிய இடம்..

தங்கள் திரட்டியில் தொடர்ந்து இணையத் தான் ஆசை ஆனால் வரமொரு பதிவு எழுதுறதே பெரிய பாடாய் இருக்குங்க..

அடுத்தது இன்னொண்று யுடான்ஸ் என்ற பெயரின் தெரிவக்கான விளக்கம் அறியலாமா?

shortfilmindia.com said...

ம.தி.சுதா.. வாரம் ஒரு முறை எழுதினால் என்ன? உடன் இணைந்து உங்கள் ஆதரவை அளியுங்கள். உங்களை போன்றவர்களின் ஆதரவுதான் நம் திரட்டிக்கு தேவை.

யுடான்ஸ்.. பெயர் காரணம். இப்படி கேட்க வைப்பதே..:))

Guru said...

புதுசா சொல்வதிற்கு ஒன்னும் இல்லன்ன. எப்பவும் போல கலக்கல் கொத்துன்னே.

"ASK" is the BEST thing na... This will become a revolution....

IlayaDhasan said...

//ஒரு விஷயம் யுடான்ஸில் யாரும் தனியாய் ரிஜிஸ்டர் செய்யாமல் உங்களுடய ஃபேஸ்புக், டிவிட்டர், கூகிள் ஐடிக்களையே வைத்து இணைய முடியும்.

இந்த வசதி உண்மையிலேயே பதிவை எளிதா பதிய உதவுது. இல்லேன இவ்வோனுக்கும் ஒரு ஐ டீ , முடியல்லே.

படிதீங்களா : மிஸ்டர் பீன் இன் புதிய படம்:Johny English Reborn

CS. Mohan Kumar said...

கொத்து இன்னிக்கு கொஞ்சம் குறைவா இருக்கோ? சில பகுதிகள் இல்லாத மாதிரி பீலிங்

எழிலருவி said...

//வாழ்ககை என்பது மூன்று பக்கங்களை கொண்டது. பிறப்பு, இறப்பு என்கிற இரண்டு பக்கங்களை கடவுள் ஏற்கனவே எழுதி முடித்து விட்டான். நடுவில் இருக்கும் ஒரு பக்கம் தான் உன்னுடயது . அதை நம்பிக்கையையும், சந்தோஷத்தை மட்டுமே நிரப்பி கொண்டாடு.


பிறப்பைத் தேர்ந்தெடுக்கும் இறப்பைத்தேர்ந்தேடுக்கும் உரிமை உன்னிடத்திலில்லை
எண்ணிப் பார்க்கும் வேளையிலே இந்த வாழ்க்கை மட்டும் உந்தன் கையில் அதை வென்று எடு

aotspr said...

//"அற்புதமான வாழ்க்கை என்பது ஒரு கற்பனை. ஆனால் நிஜ வாழ்க்கை என்பது ஒரு கற்பனையை விட அழகானது. எனவே வாழ்க்கை உன்னுடயது. அதை வாழ்ந்து, அனுபவித்து கொண்டாடு."//

மிகவும் அருமையான தத்துவம்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Anonymous said...

///பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் யுடான்ஸ் திரட்டியை பற்றிய அறிவிப்பை போன வாரம் கொத்து பரோட்டாவில் அறிவித்திருந்தேன். /

விரைவில் அடுத்த சில வாரங்களில் ஒரு லட்சத்திற்குள் நம் யுடான்ஸை வரவழைத்து விடுவீர்கள் என்று நம்புகிறோம். ///

வாழ்த்துக்கள் நண்பரே..

####################################################

////உள்ளாட்சி தேர்தலில் கூட இருக்கும் அத்துனை கட்சிகளையும் கழட்டி விட்டு தான் யார் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார் மம்மி. ////

தேர்தலுக்கு தேர்தல் சரவெடிதான் போல

###################################################

கேளிக்கை வரி

//தமிழ் சினிமாவிற்கு வரி விலக்கு என்று போன மாசம் அறிவித்துவிட்டு, இப்போது பதினைந்து சதவிகித வரியை முப்பதாக்கியிருக்கிறார் அம்மா. ///

செம கேலியான வரி போல...

#######################################################

///அப்பா பெற்ற பிள்ளை//

நானும் படித்தேன்..... ரொம்ப ஆச்சரியமாகவும் இருந்தது


######################################################

///அதற்கு நன்றியாய் நண்பர் பணம் கொடுக்க, அதை மறுத்தவர் இது என் வேலைங்க.. உங்களுக்கு என்னை பாராட்டணும்னு நினைச்சா, எங்க கம்பெனி மெயிலுக்கு என் பெயரை போடடு நான் உங்களுக்கு உதவியாய் இருந்தேன் என்று மெயில் அனுப்புங்க அது போதும் என்றாராம். அந்த இளைஞர். இங்குதான் நிற்கிறது சத்யம் நிறுவனத்தினரின் நிர்வாகம். வாழ்த்துக்கள் சத்யம்.///

வழக்கமா காசுவேனும்னு தலைய லைட்ட சொறியறவங்கதான் அதிகம்.... இப்படியும் ஒரு மனிதரா.. உங்களுக்கும் உங்கள் சதயம் நிர்வாகத்திற்கும் வாழ்த்துக்கள்!

#######################################################

///கேட்டால் கிடைக்கும் ASK
உங்களுக்கு வர வேண்டிய காசு என்றால் ரவுண்ட் செய்துவிடுவீர்கள். எங்களுக்கு கொடுக்க வேண்டிய காசென்றால் ரவுண்ட் செய்ய மாட்டீர்களா? என்று கேட்டவுடன். எதுவும் பேசாமல் கவுண்டருக்கு போய் எட்டு பைசாவுக்கு பதிலாய் ஒரு ரூபாயை கொடுத்துவிட்டு போனார். கேட்டால் கிடைக்கும்///


நேற்று ஸ்பென்ஸர் சூப்பர் மார்கெட் சென்றேன்.. 69.60 பில் வந்தது... கவுண்ட்டரில் 70 ரூபாய் வாங்கிக்கொண்டார்கள்.. எனக்கு முன் வாங்கியவருக்கும் இதே நிலைதான்... இப்படி சில்லறையாய் இவர்கள் பார்ப்பது சில ஆயிரங்களை ஒரு நாளில் தாண்டும் என்று நினைக்கிறேன். கடைசியாய் பொருள் போடும்போது கேரி பேக் 2 ரூபாய் என்று அதற்கும் காசு வாங்கிக்கொண்டார்கள்...

இதை எல்லாம் தவிர்க்கனும்னா, இது போனற கடைகளில் கிரடிட் கார்டிதான் பொருட்கள் வாங்கவேண்டும்.. கரன்ஸிலெஸ் இந்தியாவான மாறினால்தான் கரப்ஷன்லெஸ் இந்தியா உருவாகும்

#######################################################

SURYAJEEVA said...
This comment has been removed by the author.
SURYAJEEVA said...

அனைத்தும் அருமை, ஆனால் சத்யம் தியேட்டரில் உதவிய அந்த நல்ல உள்ளத்தை வாழ்த்தாமல் சத்யம் தியேட்டர் நிர்வாகத்தை வாழ்த்தியது உறுத்துகிறது...

த.கணேசன் said...

நேர்மையை எங்கு கண்டாலும் அதை உடனே வெளிப்படுத்தினால் ....
மற்றவர்களுக்கு அது வழிகாட்டியாக இருக்கும்.
அடையாளப்படுத்தின உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

யுடான்ஸ் உடான்ஸின் எதிர்ப்பதமா....

வரிவிலக்கு மானியம் இதெல்லாம் பேசி ஆட்சிகள விமர்சனம் பண்ற நேரத்துல....
ஒரு ஓடற படத்த குடுத்துட்டா இந்த பேச்சுக்கே இடமில்ல.

A Simple Man said...

// பில் 207.58 பைசா வந்தது. கரெடிட் கார்டில் பில் பே செய்த போது அவர் அதே 207.58க்கு ஸ்வைப் செய்தார்.///
I don't see anything wrong here.
It'd be wrong if he swiped 208Rs ..

கே. பி. ஜனா... said...

'சத்யம்' இளைஞர் மனதில் நிற்கிறார்...

Astrologer sathishkumar Erode said...

உடான்ஸ் இணைப்பது வெகு சுலபமாக இருக்கிறது..விரைவில் நல்ல இடத்தை அடையும்....கெடுபுடி காட்டாமல் நம்ம திரட்டி என்ற உணர்வை ஏற்படுத்தினால் சரி

தராசு said...

ஆட்சில இருந்தா யாருமே தனியா நிக்கலாம்ணே, இதே அம்மா ஆட்சில இல்லாதப்போ தில் இருந்தா தனியா நிக்க சொல்லுங்கண்ணே,

இந்த தேர்தல்ல வேலை செய்யறதுக்குத்தான் அத்தனை அரசு அதிகாரிகளும், அரசு இயந்திரங்களும் இருக்கே, அப்புறமென்ன, தனியா என்ன, ஒரு கால்ல கூட மம்மி நிப்பாங்க.

தராசு said...

அண்ணே,

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுல இருந்து உங்க கொத்து புரோட்டா படிச்சுகிட்டிருக்கேன், இது என்னண்ணே, இந்தோனேஷியா மொழில எல்லாம் உங்க பக்கத்துல விளம்பரம் வருது,,, அங்கயுமா கடை போட்டிருக்கீங்க... கலக்கீட்டீங்கண்ணே. ஸ்கிரீன் ஷாட் அனுப்பீருக்கேன் பாருங்க.