Thottal Thodarum

Sep 26, 2011

கொத்து பரோட்டா-26/09/11

udanzTV
யுடான்ஸ் தொலைகாட்சி www.tv.udanz.com. யுடான்ஸ்(www.udanz.com) பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் தமிழ் வலைப்பதிவு திரட்டியின் ஒரு அங்கம். வலைப்பதிவர்களுடனான கலந்துரையாடல்கள், பிரபலங்களின் நேர்க்காணல்கள், தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ் ட்விட்டர்கள் சந்திப்பு, பதிவர்களின் குறும்படங்கள், பதிவர்கள் கலந்துக் கொண்ட சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை யுடான்ஸ் தொலைகாட்சியில் வெளியிடப்படும். வாரம் அல்லது மாதம் ஒரு சிறப்பு குறும்படம் ஒளிபரப்பவும் திட்டமிட்டிருக்கிறோம்.பதிவர்கள் தங்களின் விடியோ படங்களை யூட்யூபில்  (YouTube), ஏற்றிவிட்டு, அதற்கான இணைப்பையும் விடியோ பற்றிய தகவல்களையும் udanztv@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பினால், யுடான்ஸ் குழுவால் பரிசீலிக்கப் பட்டு யுடான்ஸ் டிவியில் வெளியிடப்படும். பதிவர் சந்திப்புகள், ட்விட்டர் சந்திப்புகள், இலக்கிய கலந்துரையாடல்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பும் இடம்பெறும். உங்கள் அனைவரின் ஆதரவையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். விரைவில் யுடான்ஸிலிருந்து பதிவர்களுக்கான போட்டிகளை விரைவில் எதிர்பாருங்கள்.
##########################################


கடந்த ஒரு வாரமாய் த்ரோட் இன்பெக்‌ஷனால் ஜுரம், உடல்வலி, சளி என்று ஏகப்பட்ட தொல்லைகள். சத்தமாய் பேசக்கூட முடியவில்லை.  பேசினால் தொண்டை எரிந்தது. வீட்டில் ரெஸ்ட் எடுக்கச் சொன்னார் டாகடர். வேலையேதுமில்லாமல் இருந்தால் கூட வீட்டில் இருந்துவிடலாம் போலிருக்கிறது. ஆனால் ரெஸ்ட் எடுங்க என்று சொன்னவுடன் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் படு போர் அடிக்கிறது. சரி இணையத்தில் உலாவலாம் என்றால் உட்கார முடியவில்லை. தொடர்ந்து டைப்ப முடியவில்லை. புத்தகம் ஏதாவது படிக்கலாம் என்றால் கண்களிலிருந்து தண்ணீராய் கொட்டுகிறது. போன் பேசலாம் என்றால் தொண்டை ப்ரச்சனை. வேறு வழியில்லாமல் கஞ்சி குடித்துவிட்டு தூங்கினேன். ரெண்டு பெங்காலி படங்கள் பார்த்தேன் கண்கள் தளும்ப தளும்ப. ரெஸ்ட் ரொம்ப கஷ்டமப்பா..ஆனாலும் முடியலை.. ம்ஹும்
#####################################################
ஆளாளுக்கு தனியே நிக்கிறேன் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். உள்ளுக்குள் ஜுரம் இருந்தாலும் வீரம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாம நடிக்கிறது என்று கமல் சொன்னது போல வீரர்களாய் திரிகிறார்கள். கம்யூனிஸ்ட் நாங்கள் தனித்து நிற்க தயார். ஆனாலும் பேச்சு வார்த்தைக்கு போய் வருவோம் என்கிறார்கள்.  விஜயகாந்த் போனால் கேவலப்பட்டு விடுவோம்னு ஆள் அறிவிச்சிட்டாரு. ப.ம.க. போன்ற ஜாதிக் கட்சிகள் கூட ஆளாளுக்கு தனியே நான் நிக்கிறேன்னு சொல்றதும், வேணுமின்னா அவங்களோட சேர்த்துக்கங்க. இவங்களோட சேர்ந்திக்கங்க என்று பக்கத்து இலைக்கு பாயசம் கேட்க்குறாப்புல அறிக்கை விட்டிட்டு இருக்கிற விடுதலை சிறுத்தைகளைப்  பார்த்தா.. “நான் நிக்கிறேன்.. நான் நிக்கிறேன்.. நான் நிக்கிறேன்னு” புலாசுளாக்கி சொல்றது ஞாபகத்துக்கு வருது.
#####################################################
பிரியாணி என்கிற சிறுகதை எழுதியவுடன் அதை குறும்படமாக்குங்கள் என்று ஒரு சிலரும், அதற்கு என்னாலான உதவிகளை செய்கிறேன் என்று பதிவர் சிவாவும் சொன்ன நேரமோ என்னவோ, நேற்று பிரியாணி கதை பதிவர் கார்க்கியின் நடிப்பில், செல்வகுமார் மற்றும் சில நடிகர்களின் கைவண்ணத்தில் குறும்படமாகியது. என்னுடய கதையை செல்வகுமார் திரைக்கதை வசனமெழுதி இயக்கியிருக்கிறார். விரைவில் உங்கள் பார்வைக்கு வரும் மனசு. ஆம் மனசுதான்  பிரியாணியின் குறும்பட டைட்டில்.

#################################
When u fully trust a person without any doubt,u will get one result from these two results!"A person for life" or "A lesson for life":) டிவிட்டரில் பாடகர் நீல் முகேஷ் சொன்னது.

தனிப்பட்ட சிந்தனை வெற்றியை கொடுக்கும். குழுவின் சிந்தனை வரலாறு படைக்கும். எனவே எப்போதும் குழுவிலேயெ இரு. அப்போதுதான் வரலாறு தப்பா போச்சின்னா எனக்கென்ன தெரியும்னு “கும்பல்ல கோவிந்தா’ போடலாம்..ஹி..ஹி..

வாழ்வின் கஷ்ட காலம் வாஷிங் மெஷின் போல, நம்மை முறுக்கி, திருப்பிப் போட்டாலும், வெளியே வரும் போது சுத்தமாக, பளிச்சென்று துணிகளை தருவது போல நம்மை புடம் போட்டு வெளிக் கொணரும்.

ஒரு பெரிய விஷயத்தை சாதிக்க நாம் செயல்படுவது மட்டுமில்லாமல் கனவு காணவும் வேண்டும். அதற்கான திட்டமிடுவது மட்டுமில்லாமல் அதன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
#######################################
சூப்பர் சிங்கர்3யின் கிராண்ட் பினாலே லைவை சுமார் ஒரு மணி நேரம் லேட்டாக லைவினார்கள். ஆம் அங்கு நடந்த நிகழ்ச்சிக்கும் இங்கே ரிலே ஆனதற்கும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வித்யாசம்.  சாய்சரண் வெற்றி பெற்றதை பற்றிய சர்ச்சைகள் இப்போதே களை கட்ட ஆரம்பித்துவிட்டது.  என்னைப் பொருத்த வரை சாய் சரணை விட சத்யபிரகாஷின் ஓமனப் பெண்ணே க்யூட். ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், எல்லோரும் தங்கள் திறமைகளை காட்ட இரண்டாவது ரவுண்டில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை தேர்வு செய்ததுதான். முதல் ரவுண்ட் எழுபதுகளின் பாடல்களும், இரண்டாவது ரவுண்டில் 2000க்கு பிறகான பாடல்களையும் தேர்ந்தெடுத்திருந்தது, ஏ.ஆர்.ரஹ்மான் பெருசுகள் லிஸ்டில் சேர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை காட்டுகிறதா?
#####################################
ப்ளாஷ்பேக்
அட்னன் சாமி. இப்போது துரும்பாய் இளைத்து இருக்கிறார். ஆனால் இவர் வந்த போது இந்த குண்டு உடம்பிலிருந்து வரும் குரலை கேட்டால் உருக்கும். வெண்ணையாய் வழிந்தோடும் குரலும், இவரது முகமும் இந்தப் பாடலும் என்றும் மறக்க முடியாது. இவரின் மெத்து விரல்களினால் பியானா வாசிக்கும் அழகே தனி.
#####################################################
சமீபத்தில் சில படங்களை விநியோகத்திற்காக பார்க்க நேர்ந்தது. சினிமாவிற்கு டிஜிட்டல் டெக்னாலஜி ஒரு வரபிரசாதம் என்று ஒரு பக்கம் மனம் சந்தோசப்பட்டாலும், இன்னொரு பக்கம் பல அடாசு படங்களுக்கு இந்த டெக்னாலஜி ஒரு காரணமாய் இருப்பது கண்டு வருத்தமும் பட வேண்டியிருக்கிறது. நேற்று பார்த்த அந்த படத்தை ஒரு அரை மணி நேரம் கூட பார்க்க முடியவில்லை. அமெச்சூர்தனத்தின் உச்சம்.
############################################################
அடல்ட் கார்னர்
ஒரு சோல்சரின் மனைவி தன் இரண்டு கால்களையும் விரித்து வைத்தபடி நிர்வாணமாய் போஸ் கொடுத்து ஒரு போட்டோவை எடுத்து அதன் பின்னால் “உனக்காக நீ வரும் வரை இப்படி காத்திருக்கிறேன்’ என்று எழுதி அனுப்பினாள்.  அதற்கு கணவன் “எல்லாம் சரி. இந்த போட்டோவை எடுத்தது யாரு?’ என்று பதில் அனுப்பினான்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

20 comments:

முஹம்மது யூசுப் said...

சூடான, சுவையான பரோட்டா!!

Guru said...

உடம்பை நல்ல கவனிச்சுகோங்க தல. பதிவு அப்புறம் போடலாம்..

"James Cameron" சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது உங்க டிஜிட்டல் டெக்னாலஜி பத்தின கருத்து.

Guru said...

சூப்பர் சிங்கர் எனக்கு லேட் ஒளிபரப்பு பற்றி டவுட் இருந்தது.. சந்தேகம் தீர்த்தமைக்கு நன்றி...

எல்லாரும் தனியா நிக்கலாம் தப்பில்லே.. தண்ணியாத் தான் நிக்கக்கூடாது. நிக்கவும் முடியாது...

மனசை சீக்கிரம் வெளில விடுங்க.. மனசை பார்ப்போம்..

Dhamu said...

Take care Ji!
Get well soon!

ம.தி.சுதா said...

யுடான்ஸ் ரீவியை எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல்...

மனசு குறும்படத்திற்கும் காத்திருக்கிறோம்...

அது சரி அண்ணாச்சி போன பரோட்டவிலும் கேட்டேன் யுடான்சின் விளக்கம் பற்றி.. காரணம் சிர இடத்தில உடான்ஸ் என்றும் பாவிக்கிறார்கள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

ம.தி.சுதா said...

////ரெஸ்ட் ரொம்ப கஷ்டமப்பா..ஆனாலும் முடியலை.. ம்ஹும்////

பாடின வாயும் ஆடின காலும் சும்மா இருக்காது என்ன செய்வது சுவரை கவனியுங்கள் சித்திரம் நல்லாய் வரணுமல்லவா

Philosophy Prabhakaran said...

உடான்ஸ் தொலைகாட்சி முயற்சி கேட்கவே புதுமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது... வெற்றி பெற வாழ்த்துக்கள்...

IlayaDhasan said...

உலக இணையத் தொலை காட்சிகளில் முதல் முறையாக அப்பிடின்னு இனி அடிக்கடி படம் பார்க்கலாம்?
உடான்சு டிவி கு வாழ்த்துக்கள்.

உனக்கு பெரிய "ரஜினி" ன்னு நெனப்பா?

சுரேகா.. said...

நேத்து அதான் மேட்டரா? சூப்பர்! கலக்குங்க!

யுடான்ஸ் டிவிக்கு வாழ்த்துக்கள் ஜி!

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அண்ணாச்சி,

பதிவர்களின் திறமைகளை மேலும் மேலும் மெருகேற்றும் வண்ணம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் உடான்ஸ் தொலைக்காட்சிக்கு சிறியேனின் வாழ்த்துக்கள்.

கொத்துப் பரோட்ட சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கு.

உங்களின் உடல் நிலையினையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

SURYAJEEVA said...

பரோட்டா நல்லா தான் இருக்கு ஆனா அந்த கடைசி பாராவில் வரும் கொத்து தான் சகிக்கல

Unknown said...

யுடான்ஸ் டிவிக்கு வாழ்த்துக்கள்...

aotspr said...

சூப்பர் கொத்து........
வாழ்த்துக்கள்...

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Anonymous said...

Recover soon sir!

'பரிவை' சே.குமார் said...

கொத்துப் பரோட்டா கலக்கல்.
மனசு குறும்படம் பார்க்க ஆவல்.

Anonymous said...

////யுடான்ஸ் தொலைகாட்சி www.tv.udanz.com. யுடான்ஸ்(www.udanz.com) பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் தமிழ் வலைப்பதிவு திரட்டியின் ஒரு அங்கம். பதிவர் சந்திப்புகள், ட்விட்டர் சந்திப்புகள், இலக்கிய கலந்துரையாடல்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பும் இடம்பெறும். ////

அட இது புதுமையான முயற்சியாய் இருக்கிறதே.. வாழ்த்துக்கள் நண்பரே!

##########################################

/////////கடந்த ஒரு வாரமாய் த்ரோட் இன்பெக்‌ஷனால் ஜுரம், உடல்வலி, சளி என்று ஏகப்பட்ட தொல்லைகள். சத்தமாய் பேசக்கூட முடியவில்லை. //////

க்ளைமேட் மாற ஆரம்பித்தாலும் ஆரம்பித்தது... தொண்டை சளி, காய்ச்சல் என்று பலரும் அதன் பிடியில்....

Take Care

#####################################################

///ஆளாளுக்கு தனியே நிக்கிறேன் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். //

இப்ப தெரிஞ்சிடும்ல... யார் யாருக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்குதுன்னு

#####################################################

///மனசுதான் பிரியாணியின் குறும்பட டைட்டில்.//

'மனசு' மயங்கவைத்திடும் என்று நம்புகிறேன்..

#################################

////வாழ்வின் கஷ்ட காலம் வாஷிங் மெஷின் போல, நம்மை முறுக்கி, திருப்பிப் போட்டாலும், வெளியே வரும் போது சுத்தமாக, பளிச்சென்று துணிகளை தருவது போல நம்மை புடம் போட்டு வெளிக் கொணரும்.////

அட போறபோக்குல வெகு இயல்பா சொல்லிட்டீங்களே ஒரு வாழ்வியலின் தத்துவத்தையே...

#######################################

//சூப்பர் சிங்கர்3யின் கிராண்ட் பினாலே லைவை சுமார் ஒரு மணி நேரம் லேட்டாக லைவினார்கள்.//

ஒரு ஷிப்ட் கணக்குக்கு வேலை செஞ்சிருக்காங்க . 6:30 to 1:30..

விஜய் டிவி கொஞ்சம் யோசிக்க வேண்டும்... இப்படியா அதிகாலை வரை இழு.......ப்பது

#####################################

ப்ளாஷ்பேக்
///அட்னன் சாமி.//

அட்னன் சாமி ஃபோட்டோ கூகிள்ல் சர்ச் செய்யனும்

#####################################################

//நேற்று பார்த்த அந்த படத்தை ஒரு அரை மணி நேரம் கூட பார்க்க முடியவில்லை. அமெச்சூர்தனத்தின் உச்சம்.//

அந்தப்படம் என்னன்னு சொல்லிடக்கூடாதா... மக்கள் உஷாராகிடுவாங்க இல்ல :)

############################################################

அடல்ட் கார்னர்

////“எல்லாம் சரி. இந்த போட்டோவை எடுத்தது யாரு?’ என்று பதில் அனுப்பினான்.//

செம கார்னர் தான்..

வெங்கி said...

அட்னன் சாமி சுவிஸ் ரேடியோ நடத்திய ஒரு கண்காணிப்பில். உலகத்திலேயே ஹார்மோனியும் வேகமாக வாசிப்பவர் என்று தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். கின்னஸ் புத்தகத்தில் இது ஒரு சாதனையும் ஆகும்.

இளம் பரிதி said...

get well soon sir.....

Anonymous said...

///ஆளாளுக்கு தனியே நிக்கிறேன் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்./// இதுல இருக்குற அரசியல் ஒன்னுமே புரியல.. ஆனா நம்ம டவுட்டு என்னன்னா.. நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களின் நிலைமை???
அத பத்தி விரிவா போட்டு இருக்கோம்!!
ஏழாம் அறிவு, அஞ்சலி, காஜல், பவர் ஸ்டார்: கும்ப்ளிங் கும்ப்ளிங்

ponsiva said...

நன்றி கேபிள் சார்
பிரியாணியை குறும்படமாய் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்..
தயவு செய்து எனக்கு சீடி அனுப்பும்,