Thottal Thodarum

Dec 11, 2011

கொத்து பரோட்டா – 12/12/11

என்னுடய புதிய புத்தகமான “தெர்மக்கோல் தேவதைகள்” வெளியாக இருக்கிறது. இதற்கு முன் வெளியான எனது நான்கு புத்தகங்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவை இப்புத்தகத்திற்கு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. புத்தக வெளியீடு குறித்தான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
###################################

முல்லைப் பெரியாறு அணை ப்ரச்சனை கொழுந்துவிட்டெறிய முக்கிய காரணம் இரு மாநில அரசியல்வாதிகள் தான் என்ற குற்றச்சாட்டு ஒரு விதத்தில் உண்மைதான் என்று தோன்றுகிறது. அணையின் கொள்ளவை 120 அடியாய் குறைக்க நேற்று கேரள அரசாங்க சட்டம் இயற்றியிருக்கிறது. காய்கறி, பால், மாமிசம் என்று எல்லாவற்றிக்கும் தமிழகத்தை நம்பியிருக்கும் கேரளாவினருக்கு அனுப்ப தடை செய்ய போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். எனக்கு தெரிந்த பல மலையாளிகள் நல்ல தமிழ் பேசிக் கொண்டு, மிகச் சிறந்த மனித நேயர்களாகவும் இருக்கிறார்கள். அதே சமயம் கேரளாவில் அரசு சார்ந்த அலுவர்கள் தமிழர்களை எவ்வளவு கேவலமாய் நடத்துகிறார்கள் என்பதை நான் அனுபவித்தவன். அதையெல்லாம் மீறி இரண்டு மாநிலங்களுக்கிடையே அமைதி திரும்ப, இரண்டு மாநில அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லை பெரியாறு ப்ரச்சனையை பற்றி சமீபத்தில் படித்த அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரையை படிக்க 
################################
நேற்று ஒரு குறும்படத் திரையிடலுக்காக என்னை அழைத்திருந்தார்கள். வஞ்சம் என்ற அந்த திரைப்படம் பழிவாங்குதலை நியாயப்படுத்துவதாக அமைந்த குறும்படம். இன்றைய இளைஞரகளின் மனதில் இருக்கும் வன்மம், வக்கிரத்தை அப்படியே வெளிக்காட்டியது. கவுதம் மேனனின் படங்கள் இவர்களை பெரிதும் பாதித்து இருக்கிறது. அதே போன்ற கேமரா, ஆங்கிள்கள், அசைந்து கொண்டேயிருக்கும் ஷாட்டுகள். நைட் எஃபெக்ட், அது இது என்று சட்டென பார்த்தால் டெக்னிக்கலாய் நன்றாக இருந்தாலும். ஒரு இயக்குனராய், கதாசிரியராய், வசனகர்த்தாய் அதை இயக்கிய இயக்குனர் தோல்வியடைந்துவிட்டார் என்றே சொல்வேன். படு அமெச்சூர்தனமான திரைக்கதை. நான்கைந்து ஐடி இளைஞர்கள் சேர்ந்து ஒரு துப்பாக்கி வாங்கி அவர்கள் ஏரியா கவுன்சிலர் உள்பட ஐந்து பேரை கொல்கிறார்கள். காரணம் கதையின் ஹீரோவான கந்தாவின் தங்கையை கடத்தி, கற்பழித்து கொன்றதால். படு ப்ரொபஷனலாய் செய்வதாய் நினைத்து இவர்கள் கொலை செய்யும் இடமெல்லாம் படு காமெடியாய் இருக்கிறது. இதயெல்லாம் விட வந்திருந்த விருந்தினர் ஒருவர் படத்தை பற்றி கருத்து சொல்லும் போது இம்மாதிரியான பழிவாங்கும், வன்மத்தை கொண்டாடும், கொடூரமான படங்களுக்கு பதிலாய் நல்ல கருத்துக்களை, நல்ல கதைகளை சொல்லலாமே என்று சொன்னதற்கு, உடனடியாய் அந்த இளைஞர்கள் குழு எங்களுக்கும் வஞ்சம் தான் சரி. அப்படித்தான் எடுப்போம் என்று பதில் சொன்னார்கள். ஆட்டிட்டியூட்.
###########################
நிறைய கண்டுபிடிப்புகளுக்கு காரணமான விஷயங்களை பற்றிய செய்திகளை கேட்டால் சிரிப்பாக இருக்கும். பல கண்டுபிடிப்புகள் வேறு ஏதோ ஒரு விஷயத்தை கண்டு பிடிப்பதற்கான முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்டதாயிருக்கும். சிலதில் எமோஷனலான தருணங்களில் ஏற்பட்ட ஐடியாக்களாய் இருக்கும் அது போலத்தான் இந்த கண்டுபிடிப்பும். தன் மனைவிக்கு பரிசு கொடுக்க, பணம் எடுப்பதற்காக பேங்க் க்யூவில் நின்றவரின் வரிசை வருவதற்குள் டைம் முடிந்துவிட, வேறு வழியில்லாமல் தன் மனைவிக்கு மாலில் இருக்கும் சாக்லெட் வெண்டிங் மிஷினிலிருந்து சாக்லெட்டுகளை வாங்கிச் சென்றாராம். தன் மனைவிக்கு பரிசளிக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவர் மனதில் ஓடிக் கொண்டேயிருக்க, பேங்க் கவுண்டரும், சாக்லெட் வெண்டிங் மிஷினும் அவரின் மனதினுள் ஓட, அதனால் உருவான ஐடியாதான் நாம் இப்போது பயன்படுத்தும் ஏ.டி.எம் மிஷின். அதை கண்டுபிடித்தவர் ஸ்காட்லேண்டை சேர்ந்த  ஜான் ஷெப்பர்டு பரோன். பல மனைவிகளுக்கு கணவர்கள் ஏ.டி.எம் மிஷினாக இருப்பது வேறு விஷயம்.
##############################
ஹெல்மெட் போடுவதால் நிறைய உபயோகமிருந்தாலும்,சில பல பாதகங்கள் இருக்கத்தான் செய்கிறது. நெல்லையில் ஒரு பெட்ரோல் பங்கில் நிறைய பேர் பெட்ரோல் போட்டுக் கொண்டிருக்க, அதில் ஒருவர் பெட்ரோல் போட்டுவிட்டு, ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு தன் மனைவியை ஏறச்சொல்ல, கணவன் ஆழைத்ததும் ஏறி போய்விட்டார். ஆனால் அங்கே வேறொருவர் தன் மனைவியை காணவில்லை என்று போன் அடிக்க, வண்டியில் போன பெண் தான் வேறு ஒருவரின் வண்டியில் ஏறிவிட்டது தெரிந்து அதிர்ந்து போயிருக்கிறார். வைஸ்வர்சா அந்த வண்டி ஓட்டுனரும். மீண்டும் பங்குக்கு வந்து தம்தம் ஜோடிகளை ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இருவரின் ஹெல்மெட்டும் ஒரே டிசைன் என்பதால் வந்த குழப்பம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
#################################
தத்துவங்கள் என் ட்வீட்டிலிருந்து
உன் மனம் நோகடித்தவர்களை, துன்புறுத்தியவர்களை மன்னித்துவிடு, அதற்கு முன்னால் அவர்கள் அப்படி உன்னை செய்ய அனுமதித்த உன்னை நீ மன்னித்துக் கொள்

எதிர்த்து பேசுகிறேன் என்று குற்றம்சாட்டும்பெற்றோர்களுக்கு ஏன் புரிய மாட்டேனென்கிறது நான் அவர்கள் கேள்விக்கு விளக்கமளிக்கிறேன் என்று.

பெண்கள் போலீஸ் போல அநேக நேரங்களில் தன் துணை பற்றிய உண்மைகள் தெரியுமென்றாலும் அவன் வாயிலிருந்து வருவதற்காக காத்திருப்பார்கள்

பொது அறிவு இருப்பது நமக்கு வரமன்று, சாபம். ஏனென்றால் பெரும்பாலும்அது இல்லாதவர்களுடன் டீல் செய்ய வேண்டிய கட்டாயமிருப்பதால்

எல்லா காதல் கதையிலும் அம்மா ஓகே சொல்லி அப்பா மறுக்கறாரு.ஏன்னா அம்மாவுக்கு காதல்னா என்னான்னு தெரியும்.அப்பாவுக்கு பையனுங்களை பத்தி தெரியும்
##############################
சாருவின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன். அம்மாம் பெரிய மேடையில் வெறும் மூன்று பேர் உட்கார்ந்திருக்க, ஒரு மாதிரி வெறுமையாய் இருந்தது. சாருவே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கோட்டு சூட்டெல்லாம் போட்டிருந்தார். எழுத்தில் இல்லாத நகைச்சுவை பேச்சில் இருந்தது.  மற்றவர்களை திட்டுவதை முன்னைக்கு இப்போதுவிட்டுவிட்டார் போல. ஜெயமோகனை லைட்டாகத்தான் திட்டினார். வந்திருந்த இ.பா, வாலி ஆகியோர் சாருவே வெட்கப்படும் அளவிற்கு பாராட்டி தள்ளினார்கள். நடுவே வந்த மதன் வேறு வீட்டில் நின்று கொண்டே படித்தேன். உக்கார்ந்து கொண்டே படித்தேன். உச்சா போகாமல் படித்தேன் என்றெல்லாம் பில்டப் ஏற்றிவிட்டு போனார். உடன் புத்தகம் வாங்கும் ஆவல் எழுந்தாலும், இணையத்தில் அந்த புத்தகத்தின் சில பக்கங்கள் உலாவிக் கொண்டிருக்க, அதை பார்த்ததிலிருந்து ஒரு செகண்ட் தாட் ஓட ஆரம்பித்திருக்கிறது.
###############################
150 கோடி ரூபாய் ரோடுகளை செப்பனிடுவதற்காக ஒதுக்கியுள்ளதாய் பத்து நாட்களுக்கு முன் அம்மா அறிவித்திருந்தார். வெறும் அறிவிப்பை மட்டுமே ஒதுக்கியிருக்கிறார் போல.. இன்னும் அதே குண்டும் குழியுமான ரோட்டில் தான் போய் வந்து கொண்டிருக்கிறேன். நீங்க ரோடு போட்டு கட்டிங் கூட அடிச்சிக்கங்க..ரோட்டை மட்டும் போட்டுறுங்க.. முடியல
###############################
ப்ளாஷ்பேக்
அட்னன் சாமி. இந்த பாடல் ஒரு சில வருடங்களுக்கு முன் இந்திய மியூசிக் சேனல் அத்துனையிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்ட பாடல். உலகின் மிக வேகமான பியானோ ப்ளேயர், அற்புதமான பாடகரான இவரின்  உற்சாகம் பாடல்களில் மட்டுமல்ல இவரின் இந்த குண்டு உடம்புக்குள் இருப்பது ஆச்சர்யமான ஒன்று. சமீபத்தில் படு மோசமாய் இளைத்து மீண்டும் பழைய சைஸுக்கு வந்துவிட்டார். 
######################################
யுடான்ஸ் கார்னர்
பரிசல்+ஆதி+யுடான்ஸ் இணைந்து நடத்திய சிறுகதை போட்டி வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா வருகிற டிசம்பர் 18 ஞாயிறன்று, டிஸ்கவரி புக் பேலஸில் மாலை 6 மணிக்கு நடக்கவிருக்கிறது. பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் யுடான்ஸின் விழாவில் பதிவர்கள் அனைவரும் வெற்றி பெற்றவர்களை பாராட்ட வந்திருந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
###############################
பிரியாணி (எ) மனசு
இந்த சிறுகதை என் வலைப்பதிவில் வெளிவந்த போது பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதில் நண்பர் ஒருவர் நீங்கள் இதை குறும்படமாய் எடுப்பதாய் இருந்தால் என்னாலான உதவியை செய்கிறேன் என்று சொல்லுமளவுக்கு இந்தக் கதை வாசகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதை நண்பர் செல்வகுமார் குறும்படமாக எடுக்க விரும்பி என்னிடம் கேட்டார். பிரியாணி என்கிற கதைக்கு மனசு என்று டைட்டில் கொடுத்து, அதை குறும்படமாக்கி முடித்துவிட்டார். பிரியாணி மனசானது பற்றி ஒரு சின்ன பதிவு அவர் எழுதியிருக்கிறார். அந்த குறும்படத்திற்கு இசையமைத்ததைப் பற்றியும் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதை அவரின் பதிவில் சென்று படிக்கவும்.  அதற்கு முன் அந்தக் குறும்படத்துக்கான தீம் மியூசிக்கை கேளுங்கள்

#########################################
மெகா டிவியில் ஒவ்வொரு நிகழ்ச்சியின் ஆரம்பத்திற்கு முன் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது மெகாடிவி என்று ஒரு விளமபரம் வரும். அந்த விளம்பரத்தில் முதலில் காங்கிரஸின் சின்னமான கை சின்னம் வரும். அது தங்கபாலு தலைவராக இருந்த வரை. ஆனால் அவர் எப்போது தலைவர் பதவியிலிருந்து தூக்கப்பட்டாரோ அன்றிலிருந்து இப்போதெல்லாம் கை வருவதில்லை. வெறும் மெகாடிவி என்று மட்டுமே வருகிறது. அடுத்த சான்ஸ் நிச்சயமாய் இல்லை என்று முடிவாக தெரிந்துவிட்டதோ?.
############################
அடல்ட் கார்னர்
பெண்: டாக்டர் எனக்கு ஒரு ப்ராப்ளம். அதை என் உடைகளை கழட்டித்தான் காட்ட வேண்டும்.என்று சொல்ல, டாக்டர் அறைக்குள் சென்ற கழட்ட சொன்னார். இப்போது அவள் நிர்வாணமாய் இருக்க, உள்ளே சென்ற டாக்டரிடம். “டாக்டர்..என் இரண்டு தொடைகளில் இடுக்கிலும் பச்சையாய் இரண்டு ரவுண்ட் வளையம் போல ஏற்பட்டிருக்கிறது? ஏதாவது சீரியஸான வியாதியா? என்றாள். டாக்டர் அவளின் தொடையிடுக்கில் இருக்கும் இரண்டு வளையங்களையும் பார்த்துவிட்டு.. “உன் காதலன் காதில் வளையம் போடுபவனாக இருந்தால் அவன் போட்டிருப்பது ஒரிஜினல் இல்லை என்று சொல்” என்றார்

Post a Comment

20 comments:

Anonymous said...

வன்மத்தை கொண்டாடட்டும் அல்டிமேட் படைப்பாளிகள். ரிசல்ட்டை மக்கள் தருவார்கள்.

Anonymous said...

//உடன் புத்தகம் வாங்கும் அவல் எழுந்தாலும்//

படிக்காமயே அவர் புத்தகத்தை போட்டு 'அவல்' வாங்கப்போவதை சூசகமாக சொல்லிட்டீங்க. தெர்மக்கோல் வியாபார உள்குத்து!!

masiyaan said...

I am first

Anonymous said...

மனசு குறும்படத்தோட பில்ட் அப் எந்திரனை மிஞ்சிடும் போல இருக்கே. நீங்க படம் எடுத்தா மினிமம் 25 டீசர் ட்ரெயிலர் போட்டு சில்வர் ஜூப்ளி பாப்பீங்களோ!!

ISR Selvakumar said...

மனசு,
இந்த வாரம் சென்சாருக்குப் போகிறது சங்கர். அது முடிந்தவுடன், நண்பர்களுக்காக ஸ்பெஷலாக திரையிடுவோம்.

துளசி கோபால் said...

ஆஹா..... புதுப்புத்தகமா!!!!!!

இனிய வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும் கேபிளாரே!

CS. Mohan Kumar said...

புது புத்தகம் தலைப்பு, அட்டை எல்லாமே நல்லா இருக்கு. இந்த வருட கோட்டா இந்த புத்தகமா? வாழ்க ! வாழ்த்துகள் !

ஷர்புதீன் said...

அவரின் adnan sami குரலுக்குள் இருக்கும் வெண்ணைக்கு ஈடு இணை வேறு எவரின் குரலிலும் இல்லை என்பேன்!

balaji said...

வர வர உங்கள் எழுத்துக்கள் "என்னால் மட்டும் தான்" என்ற தலைகண தோற்றத்தை உண்டாக்குவதை தவிர்க்கமுடியவில்லை. கொஞ்சம் மாற்றி கொள்ளலாம்.

சுபா said...

பாஸ்.. அந்த ஜான் ஷேப்பெர்ட் இந்தியாவுல பொறந்தவராம்.

roshaan said...

ராஜபாட்டை' திரைப்படத்தின் அத்தனை பாடல்களையும் யுகபாரதியே எழுதியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை..
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம்.
நேற்று கேட்டேன்.. ம்ம்ம் ரசிக்கலாம்.

அவற்றுள் ஒன்று "பனியே... பனிப்பூவே.." என்று ஆரம்பிக்கும் காதல் பாடல்.



இந்தப் பாடலில் கவிஞர் யுகபாரதியின் கவித்துவம் சும்மா அப்படிப் புகுந்து விளையாடி இருக்கிறது..

பாடலின் இரண்டாவது சரணத்தில் நாயகன் பாடுவதாக இரு வரிகள்...

"முள் வேலிக்குள்ளே வாடும் தமிழ் ஈழம் போல் ஆனேனே....
அன்பே உன் அன்பில் நானே தனி நாடாகி போவேனே."

நான் அறிந்தவரை தமிழ் ஈழம் என்ற சொல் ஒரு தென்னிந்தியத் திரைப்பாடலில் பயன்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென நினைக்கிறேன்.

ஆனால்...
தமிழ் ஈழம் என்பது ஒரு வெறும் வார்த்தை அல்ல..
அது ஒரு உணர்வு, ஒரு நீண்ட காலக் கனவு என்பது அறியாத ஒரு தமிழ்க் கவிஞரா யுகபாரதி?

யுகபாரதி,

உங்கள் காதல் போதைக்குத் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் உவமையா தமிழ் ஈழம்?

முள்வேலிக்குள் வாடும் மக்களின் வேதனையும் காதலில் உருகும் நாயகனின் இன்ப வேதனையும் ஒன்றா?

தனிநாட்டுக் கோரிக்கை பலியெடுத்த இத்தனை மக்களின் சோகங்களும் இன்றுவரை எம்மவர் பலர் அனுபவிக்கும் வேதனைகளும் நாயகன் காதலில் உருகுவதொடு ஒப்பிடப்படுவது அபத்தமாக இல்லையா?

காதலுக்கு என்று தான் காலாகாலமாக நிலா, காற்று, நதி, மேகம் என்று உயிரற்ற உவமைகள் இருக்கையில் எம் மக்கள் இரத்தத்தோடு தான் காதல் விளையாடக் கிடைத்ததா உங்களுக்கு?

அதுவும் தமிழ் ஈழம் என்ற சொல்....

இந்த தமிழ் ஈழம் என்பது கிடைக்காமலே போகட்டும்.. ஆனால் அது தந்த வடுக்களும், தமிழ் ஈழம் என்பதற்காக தம் உயிரை ஈந்த எம்மவரின் நினைவுகளும் மறந்துவிடக் கூடியவையா?

என்னை விட, எம்மவரில் சிலரை விட ஈழம், ஈழத் தமிழ் மக்களை, அவர் தம் சோகங்கள் + உணர்வுகளைப் புரிந்துகொள்வோர் வாழும் தமிழகத்தில் அண்மைக்காலத்தில் அரசியலுக்காகவும், சினிமாவுக்காகவும் எங்கள் தமிழ் உணர்வுகள் விற்கப்படுவது கண்டு கொதிப்பு வருகிறது.

ஏழாம் அறிவில் எனக்கு வந்த கோபத்துக்கான காரணமும் அதுவே...
"ஒருவனை ஒன்பது நாடுகள் சேர்ந்து கொன்றதே" வசனம் மட்டும் விளம்பரமாக எத்தனை தடவை தொலைக்காட்சித் திரைகளில் சென்றது என்று ஞாபகப்படுத்திப் பாருங்கள்.

இந்த இடத்தில் தான் எனது முன்னைய பதிவொன்றும் ஞாபகம் வருகிறது.

அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்!
எமக்காகக் குரல் கொடுப்பது, இரக்கப்படுவது வேறு.. அப்படியில்லாவிட்டாலும் பரவாயில்லை.
ஆனால் செத்த பிணங்களின் மேலும், சாகாத உணர்வுகளோடும் தங்கள் வர்த்தகக் கோட்டைகளை அமைப்பதை சகிக்க முடியாமல் உள்ளது.

அதுசரி, மகாகவி பாரதியே "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்று தானே பாடிவைத்தான்.
ம்ம்ம்ம்ம்ம்.....

தமிழ் ஈழம் என்ற வரிகளைத் தணிக்கை செய்து ஒலிபரப்பிய காலமும் உண்டு..
டைலாமோ பாடல் வந்த நேரம் என்ற வரிகளைத் தணிக்கை செய்யவேண்டுமா என்று யோசித்து பின் அப்படியே ஒலிபரப்பிய ஞாபகம். (அப்போது நான் சூரியன் FM இல்)
இப்போது தணிக்கை செய்யவேண்டி வருமோ (தகவல் திணைக்களம் உத்தரவிட்டால்)தெரியாது. ஆனால் அவ்வாறு தணிக்கை செய்தாலும் சந்தோஷமே..
காதலனின் சோகத்தைத் தமிழ் ஈழத்துடன் ஒப்பிட்டதனால்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்...

ஏழாம் அறிவு எங்களைப் பற்றிப் பேசுது என்று உணர்ச்சிவசப்பட்டு காவடி தூக்கிய எம்மில் பலரைப் போல, தமிழ் ஈழம் பற்றி விக்ரமின் படத்தில் பாட்டு வந்திருக்கு என்று இந்தப் பாட்டை எங்களவர்கள் ஹிட் ஆக்கத தான் போகிறார்கள்..
நானும் விடியலில் நேயர்கள் கேட்டதற்காக வேண்டாவெறுப்பாகப் போடத் தான் போறேன்....
(நீயும் சினிமாக்காரன் மாதிரித் தானே என்று உங்களில் சிலரும் திட்டத் தான் போகிறீர்கள். ஆனாலும் ஏழாம் அறிவின் எல்லோலமா பாடல் எவ்வளவு தான் ஹிட் ஆகியும் ஸ்ருதி ஹாசனின் உச்சரிப்புக் கொலையினால் இன்றுவரை நான் விடியலில் ஒலிபரப்பியதே இல்லை.)

ம்ம்ம்ம்ம்ம்

எல்லாம் எங்கள் தலைவிதி..

thanks http://www.arvloshan.com/2011/12/blog-post_11.html

Anonymous said...

ஆட்டிட்டியூட் - even we show more arrogance then those directors..but we call it as CONFIDENCE ..

N.H. Narasimma Prasad said...

இந்த வார கொத்து பரோட்டா கலக்கல் அண்ணே. பகிர்வுக்கு நன்றி.

நாய் சேகர் said...

http://tasmacdreams.blogspot.com/2011/12/12122001.html

நாய்சேகரின் பிராந்திக்கடை 12122001

R. Jagannathan said...

/ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு தன் மனைவியை ஏறச்சொல்ல, கணவன் அழைத்ததும் ஏறி போய்விட்டார்./ அது சரி, மனைவிதான் ஹெல்மெட்டைப் பார்த்து கணவனின் ‘ஏறச் சொன்ன’ குரலை சந்தேகப் படாமலும் அவன் போட்டிருந்த சட்டையையும் பார்க்காமல் ஏறினார்; கணவன் எதைப் பார்த்து இன்னொருவன் மனைவியை தன் வண்டியில் ஏறச் சொன்னார்? கொஞ்ஜம் கதை மாதிரி இல்லை? - ஜெ.

R. Jagannathan said...

மெகா டி வி யில் உதய சூரியன் எங்காவது தென்படுகிறதா என்று பார்க்கவும்! - ஜெ.

யுவகிருஷ்ணா said...

//பரிசல்+ஆதி+யுடான்ஸ் இணைந்து நடத்திய சிறுகதை போட்டி வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா வருகிற டிசம்பர் 18 ஞாயிறன்று, டிஸ்கவரி புக் பேலஸில் மாலை 6 மணிக்கு நடக்கவிருக்கிறது. பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் யுடான்ஸின் விழாவில் பதிவர்கள் அனைவரும் வெற்றி பெற்றவர்களை பாராட்ட வந்திருந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.//

பதிவர்களுக்காகவே பதிவர்கள் உடான்ஸ் நடத்துவது பாராட்டுக்குரியது.

ஆனால், பதிவர்களுக்காக பதிவர்களே ஈரோட்டில் பதிவர் சங்கமம் நடத்தும் நாளிலேயே பதிவர்களுக்காக பதிவர்கள் நடத்தும் உடான்ஸ் திரட்டியின் நிகழ்வு நடைபெறுவது வருத்தத்துக்குரியது. இங்கிருந்து யாரேனும் ஈரோடு சந்திப்புக்கு செல்வதற்கு மனத்தடை ஏற்படுத்தக்கூடியது.

ஒரே நாளில் பதிவர்கள் தொடர்பாக இருநிகழ்வுகள் இருவேறு இடங்களில் நிகழ்ந்தால் எதில்தான் கலந்துக் கொள்வது?

யுவகிருஷ்ணா said...

//பரிசல்+ஆதி+யுடான்ஸ் இணைந்து நடத்திய சிறுகதை போட்டி வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா வருகிற டிசம்பர் 18 ஞாயிறன்று, டிஸ்கவரி புக் பேலஸில் மாலை 6 மணிக்கு நடக்கவிருக்கிறது. பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் யுடான்ஸின் விழாவில் பதிவர்கள் அனைவரும் வெற்றி பெற்றவர்களை பாராட்ட வந்திருந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.//

பதிவர்களுக்காகவே பதிவர்கள் உடான்ஸ் நடத்துவது பாராட்டுக்குரியது.

ஆனால், பதிவர்களுக்காக பதிவர்களே ஈரோட்டில் பதிவர் சங்கமம் நடத்தும் நாளிலேயே பதிவர்களுக்காக பதிவர்கள் நடத்தும் உடான்ஸ் திரட்டியின் நிகழ்வு நடைபெறுவது வருத்தத்துக்குரியது. இங்கிருந்து யாரேனும் ஈரோடு சந்திப்புக்கு செல்வதற்கு மனத்தடை ஏற்படுத்தக்கூடியது.

ஒரே நாளில் பதிவர்கள் தொடர்பாக இருநிகழ்வுகள் இருவேறு இடங்களில் நிகழ்ந்தால் எதில்தான் கலந்துக் கொள்வது?

Cinema Virumbi said...

கேபிள் சார்,

>>அத்னான் ஸாமி . சமீபத்தில் படு மோசமாய் இளைத்து மீண்டும் பழைய சைஸுக்கு வந்துவிட்டார். <<

ரொம்பக் காஸ்ட்லியான ட்ரீட்மென்டுக்குப் பிறகுதான் இளைத்திருக்கிறார் ! இல்லாவிட்டால் இன்னொரு அம்ஜத் கான்தான்! படுத்தால் புரண்டு படுக்க முடியாதாம்! (பழையபடி குண்டாகி விட்டாரா என்று தெரியவில்லை)

நன்றி!

சினிமா விரும்பி

Cable சங்கர் said...

@Ramesh
cofidence is also a attitude only.