சென்ற வருடம் டிசம்பரில் ஆரம்பித்து இந்த டிசம்பர் வரை ஏகப்பட்ட புத்தகங்கள் வாங்கியாகிவிட்டது. அது மட்டுமில்லாமல், புத்தகமெல்லாம் வெளியிட்டிருப்பதால் நம்மையும் லைட்டாக இலக்கியவாதிகள் எல்லாரும் தங்கள் புத்தக வெளியீட்டு விழாவுக்கெல்லாம் அழைப்பதாலும், சில சமயம் நானாகவே ஆஜராகி நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என்று நிருபிக்க வேண்டிய கட்டாயத்தால் இம்மாதிரி கூட்டங்களுக்கு போய் வரும் போது வாங்கிய புத்தகங்கள். நம்மை மதித்து படிக்க சொல்லி கொடுத்த புத்தகங்கள், அப்புறம் கிழக்கு வருஷம் பூரா போட்ட கழிவு விலை புத்தகங்கள் என்று ஏகப்பட்டது சேர்ந்துவிட்டது. அவைகளில் எத்தனை புத்தகங்களை படித்திருக்கிறேன் என்று திரும்பிப் பார்க்க ஒரு வாய்ப்பாய் இந்த கட்டுரை அமையும் என்ற எண்ணத்தில்தான் எழுதப்படுகிறதே தவிர என்னை பெரிய படிப்பாளி என்று காட்டிக் கொள்ள விழைய அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆங்கிலத்தில் இந்த வருடம் சேத்தன் பகத் தான் டாப் ப்ரியாரிட்டி
1.One Night @ call centre -சேத்தன் பகத்
நான் படித்த முதல் புத்தகம். வழக்கமாய் வாய் சுளுக்கிக் கொள்ளும் ஆங்கிலமாய் இல்லாமல் மிக சுவாரஸ்யமாய் சொல்லப்பட்ட கதை. க்ளைமாக்சில் மட்டும் சினிமா பாணியை வைத்திருந்தார். பட் சுவாரஸ்யமான கேரக்டர்கள், அவர்களின் உறவுகள், அதனால் ஏற்படும் குழப்பங்கள் என்று நம் நண்பர்களுடன் பயணித்தார் போல இருந்த நாவல்.
2. 2 states The story of My Marraige- சேத்தன் பகத்
முதல் புத்தகம் படித்த இம்பாக்டில் வாங்கிய புத்தகம். ஒரு சவுத் இந்தியன் பெண்ணுக்கும் நார்த் இந்தியன் பையனுக்குமான காதல் கதை. படு ஃபிலிமியாய் இருந்தது. ஆனால் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை. அவர்களுக்கிடையேயான ரொமான்ஸ், காதல், ஊடல், காதலுக்கான போராட்டம், க்ளைமாக்ஸ் எல்லாம் படு சினிமாவாக இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தது.
3. Revolution 2020 - சேத்தன் பகத்
கோபால், ராகவ், ஆர்த்தி ஆகியோர் சிறு வயது முதல் நெருங்கிய நண்பர்கள். கோபால் வறுமையில் இருப்பவன். ராகவ் புத்திசாலி வசதியானவன். ஆர்த்தி இலக்கில்லாத ஒர் அழகிய இந்தியப் பெண். இவர்கள் மூன்று பேருக்குமிடையேயான காதல், வன்மம், துரோகம், தியாகம் பற்றியது. எனக்கு இக்கதையின் க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை.
4. Three mistakes of my life- சேத்தன் பகத்
அஹமதாபாத்தில் இருக்கும் மூன்று நண்பர்களைப் பற்றிய கதை. கிரிகெட், குஜராத் பூகம்பம், இந்துத்துவா, மதவாதம் என்று பல விஷயங்களை தொட்டிருப்பார். மிக இயல்பான நடையில் இம்ப்ரசிவான எழுத்து. ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பான கதை.
Five points to some one- சேத்தன் பகத் த்ரீ இடியட்ஸின் மூலம். இன்னும் முடிக்கவில்லை..
And Thereby Hangs a Tale -Jeffrey Archer இன்னும் முடிக்கவில்லை.
தமிழில்
தினமும் தினத்தந்தி படிக்காமல் இருப்பதில்லை.
1. வெட்டுபுலி – தமிழ்மகன் – உயிர்மை
அருமையான புத்தகம். அரசியலையும் சினிமாவையும் தமிழர்களின் வாழ்க்கையிலிருந்து பிரிக்கவே முடியாத ஒரு விஷயம் என்பதை ஒரு நூற்றாண்டு கதையாய் சொன்னதில் என்னை அடித்துப் போட்டவர். நிச்சயம் படித்தே தீர வேண்டிய புத்தகம்
2. மாதொருபாகன் – பெருமாள்முருகன் -ஆழி
இதுவும் ஒரு பீரியட் நாவல். குழந்தையில்லாத தம்பதிகளைப் பற்றிய கதை. குழந்தைக்காக மனைவியை ஊர் திருவிழாவில் சுற்றியலையும் சாமியின் உருவமாய் அன்று மட்டும் பூஜிக்கப்படும் இளைஞர்களிடம் விட்டு குழந்தை பெற விழையும் கதை. ஒரே மூச்சில் படித்து மிரண்டு போனக் கதை. அதுவும் க்ளைமாக்ஸ் அட்டகாசம். இதுவும் படித்தே தீர வேண்டிய நாவல்.
3. பணம் –கே.ஆர்.பி. செந்தில் – ழ பதிப்பகம்
கே.ஆர்.பி.செந்தில் எழுதிய புத்தகம். வெளிநாட்டில் போய் சம்பாதிக்க துடிக்கும் ஒவ்வொருவரும் படித்தே தீர வேண்டிய புத்தகம். ஒரு த்ரில்லர் நாவலுக்குரிய அத்துனை அம்சங்களோடு எழுதப்பட்ட நிஜ வாழ்க்கை நான் -பிக்ஷன்.
4. ஏவி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம் –முற்றம்.
தமிழ்மகன் எழுதிய நாவல். சினிமாவில் புகழ் பெற எல்லாவற்றையும் இழந்து ஜெயிக்கும் நாயகியின் கதை. இன்றைய டர்ட்டி பிக்சரை நினைவுப்படுத்தினாலும் பெரிதாய் பாதிக்காத நாவல்.
5. உலோகம் – கிழக்கு
5. உலோகம் – கிழக்கு
ஜெயமோகனின் மொக்கை நாவல். துப்பாக்கி குண்டு சுடுவதையே ஆறு பக்கம் எழுதி தாலியறுத்த புத்தகம். சினிமாவுக்கு ஏற்றார் போல எழுதுகிறேன் பேர்விழி என்று சொதப்பு, சொதப்பு என்று சொதப்பிய நாவல்.
6. தேகம் – உயிர்மை
சாரு நிவேதிதாவின் நாவல் எனும் மொக்கை. டார்ச்சர், கிகிலோ, என்று ஜல்லியடித்த டார்ச்சர். ஏண்டா படித்தோம் என்று யோசிக்க வைத்த புத்தகம்.
7. உள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன்
அற்புதமான புத்தகம். நம்மையே ஒரு முறை உள்ளுக்குள் திரும்பிப் பார்க்க வைக்கும் புத்தகம்.
8. உணவின் வரலாறு – பா.ராகவன்
உணவைப் பற்றிய படு சுவாரஸ்யமான புத்தகம்.
9. திரைச்சீலை – ஓவியர் ஜீவா
தேசிய விருது வாங்கிய புத்தகம். இவரின் ரசிப்பனுபவமும், அதை எழுதிய விதத்திற்காகவும் படிக்க வேண்டிய புத்தகம்.
10.எளியகுறள் – கமலாபாலாதிருக்குறளுக்கு ரெண்டு வரியில் எளிமையான விளக்கவுரை கொண்ட நூல்.
11.ராயர்ஸ் காபி கிளப் – இரா.முருகன்
இரா.முருகனின் சுவாரஸ்யமான திண்ணைப் பேச்சு போன்ற ஒரு புத்தகம்.
12.தமிழ் சினிமா சொல்ல மறந்த கதைகள் –ஜெ.பிஸ்மி
தமிழில் அவர் பார்த்த சிறந்த குறும்படங்களைப் பற்றிய தொகுப்பு.
நம்ம படங்கள் பத்தியும் அதில இருக்கு.
13.நீங்களும் இயக்குனர் ஆகலாம் – கே.பி.பி. நவீன்
சினிமாவில் உதவி இயக்குனராய் நுழைய விழையும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
14.சாமானியனின் கதை- உலகநாதன்
பதிவர் உலகநாதனின் வாழ்வனுபவகள். நான் - பிக்ஷன்
15.உளவுக் கோப்பை – தரணி
படு மொக்கையான நாவல். நல்ல வேளை கிழக்கு 50 ரூபாய்க்கு புத்தகம் போடுவதை நிறுத்தி வைத்திருக்கிறது.
16.என்னைச் சுற்றி சில நடனங்கள் – பாலகுமாரன்
வழக்கமான பாலகுமாரன்
17.ரப்பர்- ஜெயமோகன்
ஆரம்பத்தில் டயலாக்குகள் மனதினுள் ஏறாமல் இருந்தது ஆனால் போகப் போக கட்டிப் போட்ட நாவல்.
18.கலைவாணி- ஒரு பாலியல் தொழிலாளியின் கதை- ஜோதி நரசிம்மன்
சுவாரஸ்யமான புத்தகம் என்றாலும் மனது கனக்க வைக்கும் புத்தகம்.

19.அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள்
இது நாள் வரை சுஜாதா தான் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் என்றும், ஷார்ட் அண்ட் ஷார்ப்பாக கதை சொல்பவர் என்று எண்ணியிருந்தவனுக்கு முகத்தில் அடித்தார் போன்ற ஒரு அதிர்ச்சி. என்னா ஒரு ரைட்டிங்.. எவ்வளவு ஷார்ப்பான வசனங்கள். சூப்பர்ப் நாவல்.
20.பதவிக்காக – சுஜாதா
21.பாரதி வாழ்ந்த வீடு – சுஜாதா
22.இரயில் புன்னகை – சுஜாதா
23.கனவுத் தொழிற்சாலை- சுஜாதா
24.கடவுள்களின் பள்ளத்தாக்கு- சுஜாதா
25.சின்னக்குயிலி- சுஜாதா
26. ஜன்னல் மலர்- சுஜாதா
27.கம்ப்யூட்டர் கிராமம்-சுஜாதா
28.சிவந்த கைகள்-சுஜாதா
29.கரையெல்லாம் செண்பகப்பூ-சுஜாதா
30.உள்ளம் துறந்தவன்-சுஜாதா
31.கை- சுஜாதாமேலுள்ள புத்தகங்கள் எல்லாம் மீள் வாசிப்பு.. சுஜாதா ஆல்வேஸ் ராக்ஸ்
32.நீங்கதான் சாவி- சுரேகாபதிவர் சுரேகாவின் தன்னம்பிக்கை கட்டுரைகள். சினிமாவில் வரும் காட்சிகளை வைத்து எழுதிய விதம் சுவாரஸ்யம்.
33.ஸ்ட்ராபரி –ஸ்ரீசங்கர் தொகுப்புபாலியல் சம்பந்தப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நூல். எல்லாக் கதைகளும் சிறப்பு என்று சொல்வதற்கில்லை. ஓகே புத்தகம்.
34. அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்
பாதி படித்த நிலையில் உள்ள புத்தகங்கள்
ஆண்பால் பெண்பால்- தமிழ்மகன் லேட்டஸ்ட் -படு சுவாரஸ்யமாய் போய்க் கொண்டிருக்கிறது அநேகமாய் இன்னும் ரெண்டு நாளில் முடித்து விடுவேன்.
இடாகினி பேய்களும்… கோபி கிருஷ்ணன்- இது பத்து பக்கம் வந்திருக்கிறது.
அலகிலா விளையாட்டு - பா.ராகவன் - என்னவோ தெரியலை படு பயங்கர ஸ்டார்ட்டிங் ட்ரபிளாக இருக்கிறது.
ஆயில் ரேகை – பா.ராகவன் - ஆரம்பிக்கவேயில்லை
ஜி.நாகராஜனின் மொத்த தொகுப்பு.- பாதி படித்துவிட்டேன். என்ன எழுத்தாளண்டா.
புதுமைபித்தனின் முழு தொகுப்பு- இதுவும் பாதி.. முடிந்த நிலையில் இருக்கு.
வயது வந்தவர்களுக்கு மட்டும் – கி.ராஜ நாராயணன் - இன்னும் ஆரம்பிக்கவேயில்லை.
சீனா விலகும் திரை – பல்லவி அய்யர் - இதுவும் பாதி படித்த நிலையில்
சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன். இன்னும் ஆரம்பிக்கவேயில்லை.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
???
’ஆங்கில’ - மிஸ் ஆகிடுச்சோ?
2. கே.பி. செந்திலா கே ஆர் பி செந்திலா?
(குத்தம் சொல்லீட்டே இருங்கடான்னு திட்டறது கேட்குது!)
நம்பவே மாட்டேன். ஆரம்பிச்சா வைக்க முடியாது கோபி கிருஷ்ணன் எழுத்து. அதும் இந்த புக்... சான்ஸே இல்ல!
அஞ்சாவது புக் முடிஞ்சதும், ஆறாவதா ’கேபிள் டிக்ஷனரி’ன்னு ஒரு புக் போடுய்யா. புண்ணியமாப் போகும்.
ஆர். விட்டுருச்சு ஹி..ஹி..
கோபி கிருஷ்ணன் புத்தகம் அருமையாத்தான் இருக்கு.. ஆனால் என் பழக்கம் என்னவென்றால் புத்தகம் படிக்கும் போது சட்சட்டென வேற வேற புத்தகத்துக்கு போய்விடுவேன்.
பதிவுக்கும் சிக்னேச்சருக்கும் போதிய இடைவெளி விடுய்யா.. சூடிய பூ சூடற்க-ன்னு நாஞ்சில் நாடன் சார் பேரும் போடல. நீ எழுதினதுன்னு வருது லே அவுட்ல..
:)
//நான் படித்த முதல் புத்தகம்.//
அப்ப இதும் தப்பா?
’இந்த வருடத்தில்’ மிஸ் ஆகிடுச்சு சரியா?
திருந்துங்கய்யா.. போட்டி போட்டுட்டு எழுத்துப் பிழை, வாக்கியப் பிழைன்னு கொல்றீங்க..
குட் நைட்டு!
:))
சத்தியமா கும்புட்டுக்கறேன். நமக்கெல்லாம் டேல் கார்னிகி மட்டும்தான். அப்பறம் இந்த கவுண்ட் ஆஃப் மாண்டிகிறிஸ்டோ, எம்பது நாள்ல ஊரைச்சுத்தி வந்த கதைன்னு ஒண்னு ரெண்டு.இதுல ஐயன்ராண்ட், டான் ப்ரவுன் பேரெல்லாம் இப்பதான் கேள்விப்படறேன்.
டான் பரவுன் ஏதோ இங்கிலீஷ் பட ஹீரோ மாதிரில்ல இருக்கு. நெசமா சொல்றியா? ரைட்டர்தானா அவரு?
இங்கதான் கேபிள் நீங்க நிக்கிறீங்க...
வூட்ல அடுக்கி வெச்சிருந்த புக்கையெல்லாம் கலைச்சுப் போட்டதுக்கு வூட்டம்மிணி திட்டப் போவுது. எல்லாம் கம்ப்யூட்டர் டேபிள்ல கன்னா பின்னானு கெடக்குது பாரு. மறுக்கா ஒழுங்கா எடுத்து அடுக்கி வை.
இங்கதான் கேபிள் நீங்க நிக்கிறீங்க.//
‘யே’ மிஸ்ஸிங்.
”இங்கயேதான் கேபிள் நிக்கிறீங்க” - இப்படி வரணும்.
அதுல படிக்கல. ஆனா கேபிள் எப்படி எழுதினாலும் படிக்கறப்ப நீ மனசுக்குள்ள சரியாத்தான் படிச்சுக்கணும்னு எங்கப்பத்தா சொல்லுச்சு. (என்று சொன்னால் மிகையாகாது)
பத்தி இல்ல. சூடம்.
பெரிய பட்டியல் , ஆனா என்ன உங்க எழுத்தில படிச்ச இம்பேக்ட் தெரிவதில்லை! :-))
(எலக்கியமா எழுதலைனு சொல்ல வந்தேன்)
சாருவுக்கும் சேத்தன்னுக்கும் என்ன பெரிய வித்தியாசம், இவர் டமில் மொக்கை அவர் இங்கிலிபீசு மொக்கை :-))
//சினிமாவுக்கு ஏற்றார் போல எழுதுகிறேன் பேர்விழி என்று சொதப்பு, சொதப்பு என்று சொதப்பிய நாவல்.//
ஜெமோ செய்கிற அதையே தான் சேத்தன் செய்கிறார், சினிமாவுக்காக சினிமாடிக்காக எழுதுவார்.(அந்த குறை சுஜாதாவிடமும் உண்டு) என்ன பண்ண அப்போ எல்லாம் சுஜாதாவ நம்பி படிச்சேன்.
//5. உலோகம் – கிழக்கு
ஜெயமோகனின் மொக்கை நாவல். துப்பாக்கி குண்டு சுடுவதையே ஆறு பக்கம் எழுதி தாலியறுத்த புத்தகம்.//
இதப்பாருங்க,
அலிஸ்டர் மக்ளீன் , கோல்டன் ரான்டேவு(golden rendezvous) என்ற நாவலின் அதி ஆரம்பத்தில் பேஸ்மேக்கர் கோல்ட் என்ற துப்பாக்கியை விவரமாக வர்ணிக்கிறார்,அது எப்படிபட்ட கைவேலைக்கலைஞர்களால் ஒரு கலைப்பொருள் போல செய்யப்பட்ட துப்பாக்கி,எப்படி அதில் சுட்டு குண்டுப்பட்டால் குண்டு சுழண்டு சுழண்டு உள்ளுக்குள் ரத்த மலர் பொங்கும் என ஆற அமர நிதானமாக வர்ணித்துவிட்டு அடுத்த வரி "such a gun was pointed at me" எதற்காக துப்பாக்கியை இவ்வளவு விவரமாக வர்ணிக்கிறான் என ஆர்வத்தைக்கிளப்பிவிட்டு உடனே கதையை டாப் கியருக்கு மாற்றுவது , இந்த்அ திறமை மேநாட்டு பெஸ்ட் செல்லர் எழுத்தாளர்கள் அத்தனைப்பேருக்கும் கை வந்த கலை.
இப்படி சொன்னது சாட்சாட் சுஜாதா தான், இதெல்லாம் படிச்சுட்டு தான் ஜெமோவும் முயற்சி செய்திருப்பார், ஆனால் மொக்கை சொல்லிட்டிங்களே :-))
ஆங்கிலத்தில் டான் பிரவுன் போன்றவர்களும் இப்படி தான் அதி விவரமாக வர்ணிப்பார் அதை திரை வடிவம் ஆக்கும் போது ஒரே ஷாட்ல வரும்.
//19.அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள்
இது நாள் வரை சுஜாதா தான் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் என்றும், ஷார்ட் அண்ட் ஷார்ப்பாக கதை சொல்பவர் என்று எண்ணியிருந்தவனுக்கு முகத்தில் அடித்தார் போன்ற ஒரு அதிர்ச்சி. என்னா ஒரு ரைட்டிங்.. எவ்வளவு ஷார்ப்பான வசனங்கள். சூப்பர்ப் நாவல்//
அசோகமித்திரனை முதன் முறையாக இப்போ தான் படிக்கிறிங்களா, அப்புறம் எப்படி அதுக்குள்ள சுஜாதா தான் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் முடிவுக்கு போனிங்க! நல்ல வேளை நீங்க பி.டி.சாமி மட்டுமே படித்திருந்தா அவர் தான் தமிழின் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் என்று எழுதி இருப்பீங்க போல :-))
//12.தமிழ் சினிமா சொல்ல மறந்த கதைகள் –ஜெ.பிஸ்மி
தமிழில் அவர் பார்த்த சிறந்த குறும்படங்களைப் பற்றிய தொகுப்பு.
நம்ம படங்கள் பத்தியும் அதில இருக்கு.//
வண்ணத்திரைல கிசு கிசு போல எழுதுவார் இவர் , அதையே புத்தகாம போட்டாரா, இல்லை குறும்படங்கள் கதையா. அவர் எழுதினா படிக்க வேண்டிய புத்தகம் தான் :-))
பெரிய பட்டியல் , ஆனா என்ன உங்க எழுத்தில படிச்ச இம்பேக்ட் தெரிவதில்லை! :-))
(எலக்கியமா எழுதலைனு சொல்ல வந்தேன்)
நான் படிப்பதையெல்லாம் எலக்கியமா நினைக்கிறது இல்லை.
சாருவுக்கும் சேத்தன்னுக்கும் என்ன பெரிய வித்தியாசம், இவர் டமில் மொக்கை அவர் இங்கிலிபீசு மொக்கை :-))
இப்போதைக்கு பிடிக்குது.. நாளைக்கு பிடிக்காம போகலாம்.
//சினிமாவுக்கு ஏற்றார் போல எழுதுகிறேன் பேர்விழி என்று சொதப்பு, சொதப்பு என்று சொதப்பிய நாவல்.//
ஜெமோ செய்கிற அதையே தான் சேத்தன் செய்கிறார், சினிமாவுக்காக சினிமாடிக்காக எழுதுவார்.(அந்த குறை சுஜாதாவிடமும் உண்டு) என்ன பண்ண அப்போ எல்லாம் சுஜாதாவ நம்பி படிச்சேன்.
சுஜாதா எழுதுகிற காலத்தில் சினிமாவை மனதில் வைத்து எழுதியது இல்லை.
//5. உலோகம் – கிழக்கு
ஜெயமோகனின் மொக்கை நாவல். துப்பாக்கி குண்டு சுடுவதையே ஆறு பக்கம் எழுதி தாலியறுத்த புத்தகம்.//
இதப்பாருங்க,
அலிஸ்டர் மக்ளீன் , கோல்டன் ரான்டேவு(golden rendezvous) என்ற நாவலின் அதி ஆரம்பத்தில் பேஸ்மேக்கர் கோல்ட் என்ற துப்பாக்கியை விவரமாக வர்ணிக்கிறார்,அது எப்படிபட்ட கைவேலைக்கலைஞர்களால் ஒரு கலைப்பொருள் போல செய்யப்பட்ட துப்பாக்கி,எப்படி அதில் சுட்டு குண்டுப்பட்டால் குண்டு சுழண்டு சுழண்டு உள்ளுக்குள் ரத்த மலர் பொங்கும் என ஆற அமர நிதானமாக வர்ணித்துவிட்டு அடுத்த வரி "such a gun was pointed at me" எதற்காக துப்பாக்கியை இவ்வளவு விவரமாக வர்ணிக்கிறான் என ஆர்வத்தைக்கிளப்பிவிட்டு உடனே கதையை டாப் கியருக்கு மாற்றுவது , இந்த்அ திறமை மேநாட்டு பெஸ்ட் செல்லர் எழுத்தாளர்கள் அத்தனைப்பேருக்கும் கை வந்த கலை.
இப்படி சொன்னது சாட்சாட் சுஜாதா தான், இதெல்லாம் படிச்சுட்டு தான் ஜெமோவும் முயற்சி செய்திருப்பார், ஆனால் மொக்கை சொல்லிட்டிங்களே :-))
முயற்சி வெற்றியடையவில்லை. ஏனென்றால் துப்பாக்கிய வைத்தான் என்றவுடன் அதற்கு பிறகு வரும் சம்பவங்களும், மற்ற விஷயங்களும் நம்மை ஈர்த்த அளவிற்கு. இதில் ஏதும் இல்லை.
ஆங்கிலத்தில் டான் பிரவுன் போன்றவர்களும் இப்படி தான் அதி விவரமாக வர்ணிப்பார் அதை திரை வடிவம் ஆக்கும் போது ஒரே ஷாட்ல வரும்.
//19.அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள்
இது நாள் வரை சுஜாதா தான் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் என்றும், ஷார்ட் அண்ட் ஷார்ப்பாக கதை சொல்பவர் என்று எண்ணியிருந்தவனுக்கு முகத்தில் அடித்தார் போன்ற ஒரு அதிர்ச்சி. என்னா ஒரு ரைட்டிங்.. எவ்வளவு ஷார்ப்பான வசனங்கள். சூப்பர்ப் நாவல்//
அசோகமித்திரனை முதன் முறையாக இப்போ தான் படிக்கிறிங்களா, அப்புறம் எப்படி அதுக்குள்ள சுஜாதா தான் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் முடிவுக்கு போனிங்க! நல்ல வேளை நீங்க பி.டி.சாமி மட்டுமே படித்திருந்தா அவர் தான் தமிழின் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் என்று எழுதி இருப்பீங்க போல :-))
வவ்வால். அதைத்தான் சொல்லியிருக்கிறேன். நான் படித்ததில்லை. படித்த பின் சொல்கிறேன். என்னை பொறுத்த பி.டி.சாமி எந்த விதத்திலும் மாற்று குறைந்தவராக எனக்கு தெரியவில்லை.
//12.தமிழ் சினிமா சொல்ல மறந்த கதைகள் –ஜெ.பிஸ்மி
தமிழில் அவர் பார்த்த சிறந்த குறும்படங்களைப் பற்றிய தொகுப்பு.
நம்ம படங்கள் பத்தியும் அதில இருக்கு.//
வண்ணத்திரைல கிசு கிசு போல எழுதுவார் இவர் , அதையே புத்தகாம போட்டாரா, இல்லை குறும்படங்கள் கதையா. அவர் எழுதினா படிக்க வேண்டிய புத்தகம் தான் :-))
அப்புறம் ஒரு முக்கிய விஷயம். நான் ஒரு சில புத்தகங்களைத்தான் படித்தே ஆக வேண்டிய புத்தகம் என்று சொல்லிய்ருக்கிறேன். மற்றவைகளை எல்லாம் நான் படித்தது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.
அப்புறம் நான் இலக்கியமா எழுதினா நீங்க எல்லாம் என்னை எங்க படிக்க வருவீங்க?:))
S. Ananth
www.astrologicalscience.blogspot.com
புத்தகத்தின் லிஸ்டை படித்தவுடன் ஏறக்குறைய ஒத்துப் போவதால் நீங்கள் என்னுடைய “alter ego" வா என்று சந்தேகம் வந்துவிட்டது.
ஆனாலும், தமிழ் எலக்கிய இருப்பெரும் ஆளுமைகளை மொக்கை என்று விமரசனம் செய்ததற்கு எனது கடுமையான கண்டனம்!!(சாருவை மொக்கை என்று சொல்வதற்கு கொஞ்சம் தில் வேண்டும்)
இந்த வருடத்தின் நான் முதலில் படித்த புத்தகம் நம்ப மாட்டீர்கள் “சினிமா வியாபாரம்”. (seriously speaking it is good fantastic info-racing book. worth more than its money). படித்தவுடன் பாரட்டவேண்டும் என நினைத்தேன், ஆனால் உங்களுக்கு தலைகணம் ஏறிவிடும் என்பதால் பாராட்டவில்லை.
கோபிக்கிருஷ்ணா என்பவர் யார்???
//அலிஸ்டர் மக்ளீன் , கோல்டன் ரான்டேவு(golden rendezvous) என்ற நாவலின் அதி ஆரம்பத்தில் பேஸ்மேக்கர் கோல்ட் என்ற துப்பாக்கியை விவரமாக வர்ணிக்கிறார்//
அது golden rendezvous என்ற புத்தகத்தில் வரவில்லை “when eight bells toll" என்ற புத்தகத்தில் வந்திருப்பதை எனது பதிவில் http://narenpaarvai.blogspot.com/2011/11/blog-post_28.html குறிப்பிட்டுள்ளேன். என்னால் டமில் எலக்கியத்துக்கு முடிந்தது அவ்வளவுதான்.
உங்கள் “நான் ஷ்ர்மி வைரம்” புத்தகம் எப்போ வரும்????
புத்தகத்தின் லிஸ்டை படித்தவுடன் ஏறக்குறைய ஒத்துப் போவதால் நீங்கள் என்னுடைய “alter ego" வா என்று சந்தேகம் வந்துவிட்டது.
:)))
ஆனாலும், தமிழ் எலக்கிய இருப்பெரும் ஆளுமைகளை மொக்கை என்று விமரசனம் செய்ததற்கு எனது கடுமையான கண்டனம்!!(சாருவை மொக்கை என்று சொல்வதற்கு கொஞ்சம் தில் வேண்டும்)
அவர்களை மொக்கை என்று சொல்லவில்லை. அந்த புத்தகத்தை சொன்னேன். அதற்கு தில்லெல்லாம் தேவையில்லை. நினைப்பதை சொல்லும் நேர்மை இருந்தால் போதும். என்று நினைக்கிறேன்.
இந்த வருடத்தின் நான் முதலில் படித்த புத்தகம் நம்ப மாட்டீர்கள் “சினிமா வியாபாரம்”. (seriously speaking it is good fantastic info-racing book. worth more than its money). படித்தவுடன் பாரட்டவேண்டும் என நினைத்தேன், ஆனால் உங்களுக்கு தலைகணம் ஏறிவிடும் என்பதால் பாராட்டவில்லை.
நன்றி.. பாராட்டெல்லாம் வேண்டாம். ஏனென்றால் ஏற்கனவே நான் கொஞச்ம் கனம் கொண்டவன் தான்.:)
கோபிக்கிருஷ்ணா என்பவர் யார்???
//அலிஸ்டர் மக்ளீன் , கோல்டன் ரான்டேவு(golden rendezvous) என்ற நாவலின் அதி ஆரம்பத்தில் பேஸ்மேக்கர் கோல்ட் என்ற துப்பாக்கியை விவரமாக வர்ணிக்கிறார்//
அது golden rendezvous என்ற புத்தகத்தில் வரவில்லை “when eight bells toll" என்ற புத்தகத்தில் வந்திருப்பதை எனது பதிவில் http://narenpaarvai.blogspot.com/2011/11/blog-post_28.html குறிப்பிட்டுள்ளேன். என்னால் டமில் எலக்கியத்துக்கு முடிந்தது அவ்வளவுதான்.
பாருங்க தலிவரே.. கொஞ்சம் ஏமாந்தா என்னை ஏமாத்த பாத்தாங்க.. நல்ல வேளை நீங்க என்னை காப்பாத்திட்டீங்க
உங்கள் “நான் ஷ்ர்மி வைரம்” புத்தகம் எப்போ வரும்????//
எழுதி முடித்தவுடன்.:)
நன்றி, சொக்காவ புடிக்காம விட்டதுக்கு :-))
//பெரிய பட்டியல் , ஆனா என்ன உங்க எழுத்தில படிச்ச இம்பேக்ட் தெரிவதில்லை! :-))
(எலக்கியமா எழுதலைனு சொல்ல வந்தேன்)
நான் படிப்பதையெல்லாம் எலக்கியமா நினைக்கிறது இல்லை.//
//அப்புறம் நான் இலக்கியமா எழுதினா நீங்க எல்லாம் என்னை எங்க படிக்க வருவீங்க?:))//
ஹி..ஹி நான் எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ளும் குப்பைத்தொட்டிப்போல :-)) கைல சிக்கினத எல்லாம் படிப்பேன்!
அப்புறம் 10 வருஷம் யு.எஸ்ல இருந்து ரிடர்ன் ஆனேன்னு ஒருத்தர் சொல்லும் போது உங்களைப்பார்த்தா அப்படித்தெரியவே இல்லைன்னு சொன்னா , அவங்கள கிண்டல் செய்வதாக எடுத்துக்கொள்ளக்கூடாத்உ, இன்னும் நம்ம ஊர்க்காரர் போல யதார்த்தமாக இருக்கார்னு சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டும், அப்படி நினைத்து தான் உங்கள சொன்னேன். எலக்கியவியாதியாகலையேனு,!
//இப்போதைக்கு பிடிக்குது.. நாளைக்கு பிடிக்காம போகலாம்.//
உண்மைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது, அஞ்சு வயசில தந்தியின் கன்னித்தீவு கவர்ந்தது என்னை , இப்போ கன்னிகள் மட்டுமே :-))
//சுஜாதா எழுதுகிற காலத்தில் சினிமாவை மனதில் வைத்து எழுதியது இல்லை.//
சுஜாதாவும் அப்படித்தான் சொல்லிப்பார் ஆனால் வாசகனுக்கு தானே தெரியும் இது அப்படியாகப்பட்டதுனு :-))
//என்னை பொறுத்த பி.டி.சாமி எந்த விதத்திலும் மாற்று குறைந்தவராக எனக்கு தெரியவில்லை.//
ஆமாம் . ஆனா இத்தனை நாளாகனு நீங்க சொல்லிக்கிட்டதால் ரொம்ப லேட் ஆக முடிவு மாறி இருக்கேன்னு சொன்னேன்.(ஏன்னா நீங்க எலக்கியத்தில நீச்சல் அடிக்கிறவர் என்பதால்)
நானும் குறைவாக சொல்ல எண்ணவில்லை, ஒரு ஒப்பீடு என வரும் போது அளவுகோலாக அவரைக்கொண்டு வர முடியாதில்லையா, பி.டி கத்திரிக்காவுக்கு முன்னர் பி.டிக்கு பெருமை சேர்த்தவர் ஆச்சே சாமி, அவரோட கதைகளில் தான் ஆவி காதல் செய்யும்! :-))
//மற்றவைகளை எல்லாம் நான் படித்தது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.//
நீங்க படிச்சதுன்னு சொன்னா மற்றவர்களுக்கு எல்லாம் படித்தே ஆக வேண்டிய புத்தகம் அல்லவா அத தான் சொன்னேன் :-))
////அலிஸ்டர் மக்ளீன் , கோல்டன் ரான்டேவு(golden rendezvous) என்ற நாவலின் அதி ஆரம்பத்தில் பேஸ்மேக்கர் கோல்ட் என்ற துப்பாக்கியை விவரமாக வர்ணிக்கிறார்//
அது golden rendezvous என்ற புத்தகத்தில் வரவில்லை “when eight bells toll" என்ற புத்தகத்தில் வந்திருப்பதை எனது பதிவில் http://narenpaarvai.blogspot.com/2011/11/blog-post_28.html குறிப்பிட்டுள்ளேன். என்னால் டமில் எலக்கியத்துக்கு முடிந்தது அவ்வளவுதான்.
பாருங்க தலிவரே.. கொஞ்சம் ஏமாந்தா என்னை ஏமாத்த பாத்தாங்க.. நல்ல வேளை நீங்க என்னை காப்பாத்திட்டீங்க//
நரேன், மற்றும் கேபிள், அப்படி மேற்கோள் காட்டி சொன்னது சுஜாதா தான் ஜூ.வி 16.4.86 ல வந்த சுஜாதாவின் பேட்டிய மறுபதிவாகா ஜூவியின் பழசு இன்றும் புதுசு பகுதியில் 30.11.2011 ஜூவி இதழில் போட்டு இருக்காங்க, அதை அப்படியே எடுத்து நான் போட்டுள்ளேன் ,அவ்வளவே!
(ஒரு பின்னூட்டம் போட ரெபெரன்ஸ் எல்லாம் தேடிப்படிக்க வேண்டியதாக இருக்கு எனக்கு)
பிழை எனில் சுஜாதாவ வைகுண்டம் போய் தான் கேள்விக்கேட்கணும் :-))
தி.ஜா.வெல்லாம் படிச்சாச்சு. இந்த வருஷம் படிச்சது ஒண்ணை விட்டுட்டேன்.
படிச்சத சொல்லுங்க...
இந்த ஆண்டு பிளாக் எழுதுவுதால் நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்....
புத்தக கண்காட்சியில் சந்திப்போம்...
அப்படியே குட்டியா ஒரு ட்ரீட்...
ரெடியாயிருங்க கேபிள்...
Philosophy Prabhakaran said...
// தினமும் தினத்தந்தி படிக்காமல் இருப்பதில்லை //
இங்கதான் கேபிள் நீங்க நிக்கிறீங்க...
/////////
உட்கார்ந்து படிக்கறதா நான் கேள்விப்பட்டேன்...
Appdiye intha books ellam chennai la entha books shop la kidaikkum sollidunga.
நல்ல யோசனையாகப்பட்டது.. இந்தவருஷம் என்ன படிச்சோம்னு தெரிந்தது..!!
என் புக்கையும் படிச்சதுக்கு நன்றி தலைவரே!