Thottal Thodarum

Dec 1, 2011

சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கொடுப்பதில்லையா?


கடந்த ரெண்டு நாட்களாய் இணையத்தில் தியேட்டர் கிடைக்காததால் சிறு படங்களை வெளியிட முடியவில்லை என்றும், சமீபத்தில் வெளியான சிறு முதலீட்டு படம் ஒன்றை, பெரிய விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் திரையிட மறுப்பதாகவும், சிலர் வேண்டுமென்றே தடையேற்படுத்த நினைப்பதாகவும் ஆளாளுக்கு படத்தைப் பற்றியோ, இந்த தொழிலைப் பற்றியோ தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்க, படத்தின் இயக்குனர் குழுவினர், யூடூயூப் விடியோவில் அழுதெல்லாம் படத்திற்கு கும்பல்  சேர்க்க முயற்சித்தார்கள். பட் நோ யூஸ்.


சரி நிஜமாகவே சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லையா? மேற்சொன்ன படத்திற்கு பெரிய திரைப்பட நிறுவனங்கள் வேண்டுமென்றே தடையேற்படுத்தியதா? என்று கேட்டால் முதலுக்கு ஆம் என்றும், இரண்டாவதுக்கு அவர்களுக்கு வேறு வேலையில்லையா என்பேன். தியேட்டர் கிடைப்பதில் என்ன ப்ரச்சனை? சென்ற ஆட்சியில் தான் சன் டிவி, தயாநிதி, உதயநிதி போன்றவர்கள் அரசின் ஆதரவோடு தியேட்டர்களை ஆக்கிரமித்திருந்தார்கள். இந்த ஆட்சியில் என்ன? என்று கேட்பவர்களுக்கு சென்ற ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி தியேட்டர் கிடைக்காதவர்கள் சொன்ன பொய்யான கூப்பாடு என்றே சொல்ல வேண்டும். சொல்லப் போனால் பெரிய பட்ஜெட் படங்களே தியேட்டர் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆம் சென்ற தீபாவளி அன்று மொத்தமே இரண்டு படங்கள் தான் வெளியாயின. இதே சில வருடங்களுக்கு முன் குறைந்த பட்சம் நான்கிலிருந்து ஐந்து படங்கள் திபாவளி போன்ற திருநாட்களில் வெளிவரும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. அத்ற்கு காரணம் பெருகிப் போன படங்கள் என்றும் சொல்லலாம். குறைந்த பட்சம் வாரத்திற்கு மூன்று படங்களாவது வெளியாகிறது. தமிழ் நாட்டில் இருப்பதோ எண்ணி ஆயிரத்தி சொச்சம் திரையரங்குகளே.. இதில் புதிய படங்கள் வெளியிட தகுதியானது சுமார் அறநூறிலிருந்து எழு நூறு வரையிலான தியேட்டர்தான். மற்ற தியேட்டர்கள் இரண்டாம் நிலை தியேட்டர்களே.

சினிமாவைத் தவிர வேறு பொழுது போக்கே இல்லாத நாட்களில், சென்னை மாநகரில் சுமார் நான்கிலிருந்து ஐந்து திரையரங்குகளிலும், செங்கல்பட்டு ஏரியாவில் சுமார் எட்டிலிருந்து பத்து தியேட்டர் வரையில் மட்டுமே புதிய படங்கள் திரையிடப்படும். அதன் பிறகு ஷிப்டிங் எனும் முறையில் மற்ற ஏரியாக்களில் வெளியிடுவதற்காக விலை பேசப்பட்டு விற்கப்படும்.  ஆனால் இன்றைய வீடியோ, இண்டர்நெட் பைரஸி காலத்தில்  அத்தனை நாள் எல்லாம் ஒரு சூப்பர் ஹிட் படம் கூட தாங்காது. எனவே அவர்கள் ஒரு யுக்தியை கடைபிடிக்க ஆரம்பித்தார்கள். படம் ஆரம்பத்திலிருந்து, ஆர்டிஸ்ட், டெக்னீஷியன் என்று பெரிய ஆட்களாய் பிக்ஸ் செய்துவிட்டு, தொடர் விளம்பரங்கள் மூலமாய் படத்தைப் பற்றிய ஒர் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, ஒரே சமயத்தில் சென்னையில் இருபது தியேட்டர்களிலும், செங்கல்பட்டு  ஏரியாவில் சுமார் இருபது தியேட்டர்களிலுமாய் வெளியிட்டு, குறைந்த தயாரிப்பு காலத்தில்  படத்தின் வசூலை அடைய ஆரம்பித்தனர்.

ஒரே சமயத்தில் பல தியேட்டர்களில் போட்டு படத்தின் வசூலை எடுப்பது என்பது உலகின் எல்லா மூலையிலும் நடக்கும் சாதாரண சமாச்சாரம். தமிழகத்தில் மட்டுமல்ல உலகின் எல்லா மூலையிலும் சிறு முதலீட்டு படங்களுக்கு அதற்கான வரவேற்பு கிடைப்பது குதிரைக் கொம்புதான். பல சிறு முதலீட்டு படங்களை பெரிய நெட்வொர்க் விநியோகஸ்தர்கள் வாங்கி வெளியிடும் போதுதான் மக்களை சென்றடைய முடிகிறது. சிறு முதலீட்டு படங்களுக்கான ப்ரச்சனை நம் மாநிலத்தில் மட்டுமல்ல இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் இதே நிலைதான். நம்மூரிலாவது பரவாயில்லை சதவிகித அடிப்படையில் படங்களை வெளியிட முடியும். பக்கத்து ஆந்திராவில் சிறு முதலீட்டு படங்களை வெளியிட வாடகைக்கு எடுத்துதான் படம் போடவே முடியும்.

சரி மேட்டருக்கு வருவோம். சமீபத்திய பஞ்சாயத்து படக்குழுவினர் படத்தை தூக்கி விட்டார்கள். அராஜகம், பெரிய நிறுவனங்களின் சதி என்று குய்யோ முறையோ என்று கத்தியது பாவமாய் இருந்தாலும். முதலில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் யாரும் இங்கே புண்ணியத்துக்காக வேலை செய்யவில்லை. இது ஒரு வியாபாரம். லாபம் இல்லாத தொழிலில் யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அது போலத்தான் இந்த சின்னப் படங்களின் நிலையும்.

சமீப காலமாய் பெரிய அளவில்,பெரிய நடிகர்கள் நடித்த படங்களுக்கே தினம் ஒரு விளம்பரம், தொடர் டிவி விளம்பரம் என்று நாலாப் பக்கமும், சூப்பர்ஹிட், மெஹா ஹிட் என்று கூவிக் கூவி விளம்பரம், ப்ரஸ்மீட்  எல்லாம் போட்டுத்தான் முதல் நான்கு நாட்களுக்குள் கல்லா கட்ட வேண்டிய நிலையில். ஒரு கோடியில் தயாரிக்கப்படும் ஒரு படத்திற்கு ஐம்பது லட்சம் கூட விளம்பரங்களுக்காக செலவு செய்யப்படாத படங்கள் எப்படி மக்களிடையே போய்ச் சேரும்?. சரி நல்ல படம் எடுத்திருக்கிறோம் அது ரீச் ஆக லேட் ஆகத்தான் செய்யும் அது வரை காத்திருக்கத்தான் வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அது வரை தியேட்டர்காரர்கள் வருமானமில்லாமல் இருக்க முடியுமா? ஒரு திரையரங்கிற்கு வருமானமே படம் பார்க்க வரும் ஆடியன்ஸ்தான். அவர்கள் நிறைய பேர் வந்தால்தான் அவர்களுடய வியாபாரம். அதுவும் சதவிகித அடிப்படையில் தான் இன்றைய பெரும்பாலான படங்கள் ஓட்டப்படுவதால் ஒரு நாள் தியேட்டரின் ஹோல்ட் ஓவருக்கு குறைந்தால் அவர்கள் வேறு படங்களைப் போட வேண்டிய கட்டாயம் நிச்சயம் வந்துவிடும். அதாவது ஒரு நாளைக்கு தியேட்டர் நட்த்த ஆகும் செலவுக்கான பணம் எப்போது வராமல் போகிறதோ அடுத்த நாளே பட்த்தை தூக்கிவிடுவார்கள். இதற்கு மேலும் ஹோல்ட் ஓவர் என்றால் என்ன என்பதை சினிமா வியாபாரம் வாங்கி படித்து கொள்ளுங்கள்.

ரிலீசின் போது போஸ்டரும், ரெண்டு நாள் டிவி விளம்பரமும், தந்தி,கரனில் விளம்பரமும் கொடுத்துவிட்டால் பப்ளிசிட்டி கொடுத்தாகிவிட்டது. இதுக்கே பத்து லட்சம் ஆகிவிட்டது நல்ல படம் நிச்சயம் ஓடும் என்று ரிலீஸ் செய்தால் வேலைக்காகாது. ஏனென்றால் முதல் நாள் முதல் காட்சியில் தமிழகம் எங்கும் இம்மாதிரி எடுக்கப்பட்ட சிறு முதலீட்டு படங்களுக்கான ஆடியன்ஸ் எவ்வளவு தெரியுமா குறைந்த பட்சம் 13 பேரிலிருந்து மேக்ஸிம்ம் 50 பேர். ஒரு டிக்கெட் விலை 80 ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் முப்பது சதவிகிதம் வரி போக மீதமிருக்கும் பணத்தில் திரையரங்கு உரிமையாளருக்கும், விநியோகஸ்தருக்கோ, அல்லது தயாரிப்பாளருக்கோ ஆளுக்கு ஐம்பது சதவிகிதம் பிரிக்கப்படும். ஒரு டிக்கெட்டுக்கு இருபது சொச்ச ரூபாய் கணக்கில் மொத்தம் ஐம்பது டிக்கெட்டுக்கு ஆயிரத்தி சொச்சம் ஒரு காட்சிக்கு என்று வைத்துக் கொள்ளுங்கள் நான்கு காட்சிக்கு இதே ஐம்பது பேர் வந்தாலும் மொத்தம் நாலாயிரம் ரூபாய்தான் வரும். ஆனால் நான்கு காட்சிகளுக்கான மின்சாரம், வேலையாட்களின் சம்பளம் போன்றவற்றின் செலவு கணக்குபடி பார்த்தால் இன்றைய காலகட்ட்த்தில் குறைந்த பட்சம் எட்டாயிரம் ரூபாய் இல்லாமல் முடியாது. அப்படி எட்டாயிரம் ரூபாய் கூட வருமானம் வராத ஒரு திரைப்படத்திற்கு பதிலாய் உடனடியாய் வேறு படத்தை போட வேண்டிய கட்டாயத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் இருக்கிறார்கள்.

இன்னொரு குற்றச்சாட்டு எங்கள் படத்தை தூக்கிவிட்டு ஆங்கிலப்படத்தை போட்டிருக்கிறார்கள். தமிழ் படங்களை அழிக்கிறார்கள் என்ற கூப்பாடு. அதுவும் நிஜமல்ல. சமயங்களில் அம்மாதிரி படங்களுக்கும் கூட்டம் வராமல் அடுத்த ரெண்டாவது நாளில் வேறொரு பிட்டு படத்தை போட்டு தியேட்டர் நடத்தி வருவதும் நடப்புக்குரியதே.

சமீபத்தில் ஒரு தியேட்டரில் “சசி காத்திருக்கிறாள்என்கிற செக்ஸ் பட்த்தை வெளியிட்ட தியேட்டருக்கு நான் சென்றிருந்த போது சுமார் இருநூற்று சொச்ச ஆடியன்ஸ் பட்த்தின் மூன்றாவது நாள் காலைக் காட்சிக்கு கூடியிருந்தார்கள்.  நன்றாக கவனியுங்கள். இம்மாதிரியன படங்களுக்கு வெறும் பேப்பர் விளம்பரம் மற்றும் போஸ்டர் விளம்பரம் மட்டுமேதான். ஆனால் அதே நேரத்தில் வெளியான கொஞ்சம் வெய்யில் கொஞ்சம் மழை என்கிற படத்திற்கு உதயம் காம்ப்ளெக்ஸில் வெறும் முப்பதுபேர் தான். இப்போது சொல்லுங்கள். எந்தப் பட்த்தை தியேட்டர்காரர்கள் ஓட்டுவார்கள்.

ஒரு விஷயத்தை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். ஒரு சிறு முதலீட்டு படம் குறைந்த ஆடியன்ஸுடன் முதல் காட்சியை ஆரம்பித்து, படம் நன்றாக இருந்து அடுத்தடுத்த காட்சிகளில் மிக சொற்பமான ஆடியன்ஸ் வரவு ஏறிய படத்தை  நிச்சயம் எந்த தியேட்டர்காரர்களும் எடுக்க மாட்டார்கள். ஏனென்றால் நிச்சயம் நல்ல படம் என்ற ரிப்போர்ட் இருந்தால் ஆடியன்ஸ் ஏறுவார்கள் என்று அவர்களுக்கு தெரியும். சின்ன படங்களுக்கு மட்டும் இல்லை சமீபத்தில் வெளியான முகம் தெரிந்த நடிகர்களான சேரன், ப்ரசன்னா, யுடிவி போன்ற பெரிய நெட்வொர்கில் வெளிவந்த முரண், வாகை சூட வா போன்ற படங்களுக்கு நல்ல தியேட்டர்களில்  இடம் கிடைத்தும், மார்கெட்டிங் இருந்தும், சில நாட்களில் எடுக்கப்பட்டது. அவர்கள் நினைத்திருந்தால் யுடிவி படத்தை ஓட்ட வைத்திருக்க முடியும். அனால் முடியாது. மக்களில்லாம திரையரங்கை நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று. இன்று நல்ல படமோ, மொக்கை படமோ ஒரு பெரிய பட்ஜெட் பட்த்திற்கு முதல் நாள் அலைமோதும் ஆன்லைன் புக்கிங்கிற்கு ரெடியாய் இருக்கும் மக்களில் எத்தனை பேர் சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டரில் போய் பார்த்திருக்கிறீர்கள்?

இன்னொரு குற்றச்சாட்டு தியேட்டர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கூட்டமேயில்லாத பெரிய படங்களை ஓட்டுகிறார்கள் என்பதுதான். இதற்கு காரணம் ஆடியன்ஸ் தான். சமீபத்தில் நாங்கள் வெளியிட்ட “அரும்பு மீசை குறும்புப் பார்வைஎன்கிற பட்த்தை சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட்டோம். முதல் மூன்று நாட்களிலேயே பாதிக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தூக்கப்பட்டது. காரணம் வசூல் இல்லாமை, விளம்பரம் இல்லாமை, பட்த்தின் தரமில்லாமை. கோவையில் ஒரு முக்கிய காம்ப்ளெக்ஸில் ஒரு தியேட்டரைக் கேட்ட போது அவர்கள் வேங்கை ஓடுகிறது அடுத்த வாரமொரு பெரியபடம் வருது அதுவரைக்கும் இதுவே போகட்டும் என்றார். ஏன் இம்மாதிரி சின்ன படங்களுக்கு அந்த ஒரு வாரம் கொடுக்கலாமே என்ற போது அவர் சொன்னது “சார்.. வேங்கை ஓடலைதான் ஆனால் ஆவரேஜா ஒரு நூறு டிக்கெட் போயிரும். ஆனா சின்ன படங்களுக்கான முத நா ஆடியன்ஸ் பத்து பேரை வச்சிட்டு அடுத்த வாரம் வரைக்கும் தெனம் படத்தை தேடுற கொடுமையை உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது.  பெரிய படங்களின் தொடர் விளம்பரத்தினால் அதை பார்ப்பதற்கு ஓரளவுக்கான ஆடியன்ஸ் இருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் தெரியாமல் பத்து போஸ்டரை அடித்துவிட்டு, பட்த்தை ரிலீஸ் செய்துவிட்டோம் என்று சொல்லி தியேட்டர் கிடைக்கவில்லை என்று சொல்வதை விட, அதற்கான மார்கெட்டிங்கை சரியாக செய்தால் நிச்சயம் நல்ல படம் ஓடும். சதவிகித அடிப்படையில் போடாமல் தமிழ்நாடெங்கும் வாடகை கொடுத்து படம் வெளியிட குறைந்த பட்சம் ஒரு கோடி வேண்டும். அப்படி வாடகை கொடுத்து பட்த்தை விநியோகம் செய்தால் ஒரு வாரத்திற்கு ஆள் வருகிறார்களோ இல்லையோ பட்த்தை தூக்க மாட்டார்கள். சதவிகித அடிப்படையில் போட்டால் வருமானம் இல்லாத திரைப்படத்தை எடுக்கவே செய்வார்கள். தியேட்டரில் டேட் எடுத்து பட்த்தை வெளியிட ஒரு நல்ல மார்கெட்டிங் நெட்வொர்க் வேண்டும். எங்களால் “அரும்புமீசை குறும்புபார்வைபோன்ற படங்களை அறுபதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட வைக்க முடியும். இன்னும் சில படங்களை வெளியிட்ததான் போகிறோம். ஆனால் அதற்கான ஆடியன்ஸை கூட்டிக் கொண்டு வருவது படம் தயாரிக்கும் தயாரிப்பாளரின் கடமை.  


Post a Comment

18 comments:

Unknown said...

ஆஹா...எனக்கே வடை!

நச் என்று இருக்கிறது... உங்கள் கட்டுரை. இந்தக்காலத்தில் படம் எடுத்து ஓட்டுவது மிகச் சிரமம் போலிருக்கிறது.

மதுரை அழகு said...

படங்களை ஓட வைப்பதற்கான யுக்தியெல்லாம் சரிதான்! ஆனால் தமிழில் வெளிவரும் பெரும்பாலான படங்களின் கதைக்களன் பெரும்பாலும் காதல்தான். புதுமையான களத்தில் விறுவிறுப்பான சிறு முதலீட்டுப் படங்களை எடுத்து நல்ல லாபம் பார்க்க முடியும். யாரும் முன்வருவதில்லை.

சிவகுமார் said...

Enna sankar sir oru film release pannathu apparam .ipputu kastama !

சுரேகா.. said...

சரியான நேரத்தில்..சரியான அலசல்!

திரையுலகில் இல்லாதவர்களுக்கும் தெளிவாகப் புரியும் வகையில் உள்ளது. நடுநிலையாகவும் உள்ளது. !

திரையுலகில் உள்ளவர்களும் ஒத்துக்கொள்ளும் வகையில் உள்ளது.

அந்தவகையில்..நான், ஒத்துக்கொள்கிறேன்.!!

வவ்வால் said...

கேபிள்,

நீங்கள் சொல்வது பொதுவாக சரியாகத்தான் இருக்கு, ஆனால் எல்லா நேரமும் அது செல்லுபடியாகிறதா என்பதே கேள்வி?

சதவீத அடிப்படையில் தான் பெரும்பாலான படங்கள் ஓடுகிறதா என்பதே கேள்விக்குறியது, அந்த வகையில் வெளியிட என்றால் ஏன் பெரிய ஹீரோ, டைரக்டர் என எல்லாம் அவர்கள் பின்னால் ஓட வேண்டும் எம்.ஜி யில் தான் பெரிய படங்கள் கொடுக்கிறார்கள். முதல் வார ஒப்பனிங்கில் எப்படியும் 50% தேரிவிடும், பின்னர் டிக்கெட் 20 ரூ என போஸ்டர் போட்டு மேலும் 2 வாரம் ஓட்டிக்கொள்கிறார்கள்.இன்னும் சொல்லப்போனால் தியேட்டர்கார்களே பிளாக் டிக்கெட் விற்கவும், கவுண்டர்களில் கூடுதல் விலைக்கு விற்கவும் செய்து எம்.ஜி ஐ சரிக்கட்டி விடுகிறார்கள்.இது போல செய்ய பெரிய நடிகர் முகம் தேவை!

உதயம் தியேட்டரில் பிளாக் டிக்கெட் எப்படி விற்கிறார்கள், யார் விற்கிறார்கள் என்பதை பார்த்ததே இல்லையா?

மேலும் பெரிய நடிகரின் படத்தை நட்டம் என உடனே தூக்கினால் மீண்டும் அவர் படம் அந்த தியேட்டருக்கு தர மாட்டார்கள்.இதனாலும் கூட்டம் இல்லை என்றாலும் ஓட்ட செய்கிறார்கள்.

நீங்க ஏன் பாலையை மட்டும் உதாரணமாக சொல்றிங்க , படம் நல்லா இல்லை தூக்கிட்டாங்கனு காரணம் சொல்லவா? களவாணி என்ற படம் நல்லா ஓடும் போதே தூக்கினார்களே அதை விட்டுடிங்க :-))

சுப்ரமணிய புரம் படத்துக்கும் இந்த நிலை நடந்தது, ஃபீல்டில் இருப்பவருக்கு தெரியாமலா போச்சு!

Cable சங்கர் said...

kaLavani, subramaniapuram.. தவறான தகவல். இரண்டு படங்களும் முதல் வாரத்திற்கு பிறகு தியேட்டர்கள் அதிகரித்தபடங்கள்.

Cable சங்கர் said...

எம்.ஜி பிஸினெஸ் தனி.. அவர்கள் இபபடி புலம்ப வேண்டிய நிலையேஇல்லை.

யுவகிருஷ்ணா said...

பப்ளிசிட்டி என்கிற வார்த்தையில் சரியான புள்ளியை தொட்டிருக்கிறார் கேபிள்.

சிறு தயாரிப்பாளர்கள் பப்ளிசிட்டியை வீண்வேலை என்று கருதுகிறார்கள்.

‘சேது’ முதல்வாரம் நஷ்டம்தான். பப்ளிசிட்டியால்தான் அப்படத்தை தூக்கி நிறுத்தினார் அதன் தயாரிப்பாளர்.

‘பூவெல்லாம் உன் வாசம்’ தோல்வியடைந்த நிலையில், விளம்பரத்துக்கு பெரும் தொகை முதலீடு செய்து, அதை வெற்றிப்படமாக்கி காட்டினார் ஆஸ்கர்.

செலவே செய்யமாட்டோம். வரும்படி மட்டும் வேண்டுமென்றால் என்ன அர்த்தம்?

யுவகிருஷ்ணா said...
This comment has been removed by the author.
இளம் பரிதி said...

waiting for cinema viyabaram part 2....nalla article... சமீபத்தில் ஒரு தியேட்டரில் “சசி காத்திருக்கிறாள்” என்கிற செக்ஸ் பட்த்தை வெளியிட்ட தியேட்டருக்கு நான் சென்றிருந்த போது.....padam eppidi irunthathu?

Unknown said...

//தியேட்டர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கூட்டமேயில்லாத பெரிய படங்களை ஓட்டுகிறார்கள்//
ஆள் இல்லாத டீ கடையில் யாருக்காக டீ ஆத்துராங்க சார் ?

வவ்வால் said...

கேபிள்,

//kaLavani, subramaniapuram.. தவறான தகவல். இரண்டு படங்களும் முதல் வாரத்திற்கு பிறகு தியேட்டர்கள் அதிகரித்தபடங்கள்.//

முதல் வாரத்தில் தூக்கினார்கள் என்று சொல்லவில்லை, நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் போதே தூக்கினார்கள் என அப்போது செய்திகள் வந்தது.

களவாணியை மைனாவுக்காக தூக்கினார்கள் அல்லது ஏதோ ஒரு உதயநிதி படத்துக்காக தூக்கினார்கள் என செய்தி.

அதே போல சுப்ரமணியபுரம் படத்தை சன் னுக்கு விற்கவில்லை என்பதனாலும், மேலும் அதில் வரும் மாவட்ட செயலார் கொலைச்சம்பவம் தா.கி கொலையை நினைவுப்படுத்துவதாக கருதி படத்தை ஓட விடாமல் தடுத்ததாக செய்தி வந்தது.

சுப்ரமணியபுரம் படம் ஸீ டிவிக்கு விற்கப்பட்டப்போதும் சன் டீவி அடாவடியாக ஸீ டீவி யில் படம் ஓடிய அன்றே குறுக்கு வழியில் போட்டதும் செய்தி!

எனக்கு சரியாக தரவுகள் காட்ட இயலவில்லை, யாராவது பழம்பெருச்சாளிகளைக்கேட்டால் சொல்லக்கூடும்.

நெல்லை கபே said...

ஆக, லோ பட்ஜெட் படம்னா , படம் எடுக்க எவ்வளவு செலவோ அவ்வளவு செலவு விளம்பரத்துக்கும் செலவழிக்க வேண்டியதாயிருக்குது. இவ்வளவு கஷ்டங்கள் இருக்குதா? அதனாலதான் பழம் தின்னு கொட்டை போட்ட ஏ.வி.எம்.மெல்லாம் இப்ப படம் எடுக்காம சும்மா இருக்காங்களா?
'பாலை' விஷயத்துல நடந்தது ஒரு விளம்பர ஸ்டன்ட்தானே. அது சினிமா உலகத்துல சகஜம்தானே!

வவ்வால் said...

//படம் ஆரம்பத்திலிருந்து, ஆர்டிஸ்ட், டெக்னீஷியன் என்று பெரிய ஆட்களாய் பிக்ஸ் செய்துவிட்டு, தொடர் விளம்பரங்கள் மூலமாய் படத்தைப் பற்றிய ஒர் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, ஒரே சமயத்தில் சென்னையில் இருபது தியேட்டர்களிலும், செங்கல்பட்டு ஏரியாவில் சுமார் இருபது தியேட்டர்களிலுமாய் வெளியிட்டு, குறைந்த தயாரிப்பு காலத்தில் படத்தின் வசூலை அடைய ஆரம்பித்தனர்.

ஒரே சமயத்தில் பல தியேட்டர்களில் போட்டு படத்தின் வசூலை எடுப்பது என்பது உலகின் எல்லா மூலையிலும் நடக்கும் சாதாரண சமாச்சாரம்.//

கேபிள்,

அண்ணாத்த , நீங்க சொல்றது சரீனே வச்சுப்போம், இப்போ நீங்க சொன்னாப்போல பெரிய ஆர்ட்டிஸ்ட் , டெக்னிஷியன் என தயாரிக்கிற படங்கள் பெர்சென்டாஜ் ல வருமா? இல்லை எம்.ஜி ல வருமா? அதை சொல்லவே இல்லை. பெரிய ஆட்கள் இருந்தாலே எம்ஜீ, தான் அப்புறம் அவங்களுக்கு என்ன தடை.இப்போ கேள்வியே சின்ன ஆர்டிஸ்ட், சின்ன தயாரிப்பாளர், சின்ன டெக்னியஷன் பத்தி தானே? அவங்க படம் பத்தி யோசிக்க கூட ஆள் இல்லை இங்கே.

இப்போ ஒரு நடிகர் படம் விஜய் னே வச்சுக்கோங்க 5 படம் ஓடலை 6 வது படத்துக்கு எப்படி ஒரே நேரத்தில பல தியேட்டர்கள் கொடுக்க முன்வருவாங்க?(எம்ஜி, பெர்சென்ட்டேஜ் எப்படினு சொல்லுங்க)

அங்கே பெர்செண்டேச்ஜ்க்கு ஓட்ட வருவாங்களா? இல்லை எம்.ஜிக்கு ஓட்ட வருவாங்களா? அல்லது வாடகை முன்னரே வாங்கிட்டு ஓட்ட வருவாங்களா?

நீங்க சினிமால ஓராமாகவோ இல்லை நீங்க தான் தமிழ் சினிமா என்றோ நினைத்துக்கொண்டோ இருக்கலாம் ஆனால் சும்மா நடை முறைக்கு மாற்றாக நான் சினிமாக்காரன் நான் சொன்னா சரியா இருக்கும்னே சொல்லிட்டு இருக்கலாம்னா , சாரி இது இணையக்காலம்.

Cable சங்கர் said...

@வவ்வால்..

நீங்க புதுசா என்னைப் படிக்கிறீங்கன்னு நினைக்கிறேன். நீங்க கேட்டகேள்விகளுக்கு அதாவது, சுப்ரமணியபுரம், டிவி ரைட்ஸ், பெரிய படங்கள் எம்.ஜி. இந்தமாதிரி எல்லாம் ஒரு புத்தகமாகவே எழுதி போட்டாச்சு. என்னை தொடர்ந்து படிக்கிறவங்களுக்கு இங்க இருக்கிற பல விஷயங்கள் ரிப்பீட் தான். ஸோ.. முதலில் புத்தகத்தை வாங்கி படித்துவிட்டு அப்புறம். கேட்கலாம் இந்த இணைய காலத்தில் நல்ல விஷயங்கள் பல இருந்தும் இருக்கிற இன்னொரு மொக்கை மேட்டர் என்னன்னா? கேள்வி மட்டுமே கேட்ட்டு இருக்கிறது.தான்.:)

Jayaprakash said...

Vunga katturai arumai sir

வவ்வால் said...

கேபிள்,

//நீங்க புதுசா என்னைப் படிக்கிறீங்கன்னு நினைக்கிறேன். நீங்க கேட்டகேள்விகளுக்கு அதாவது, சுப்ரமணியபுரம், டிவி ரைட்ஸ், பெரிய படங்கள் எம்.ஜி. இந்தமாதிரி எல்லாம் ஒரு புத்தகமாகவே எழுதி போட்டாச்சு. என்னை தொடர்ந்து படிக்கிறவங்களுக்கு இங்க இருக்கிற பல விஷயங்கள் ரிப்பீட் தான்.//

ஹி..ஹி நான் புதுசா தான் படிக்கிறேன்னு கண்டுப்பிடிச்சிட்டிங்களே :-))

நீங்க சொல்றது பொதுவாக சரியா இருக்குன்னு நானும் சொல்லிட்டேன் , ஆனால் ஒரு குறிப்பிட்ட படத்துக்கு எப்படி வியாபாரம் ஆச்சுனு வச்சு பார்க்கும் போது வேற மாதிரி இருக்குனு தான் சொல்ல வந்தேன்.

குமரிகள் எல்லாம் கிழவிகள் ஆகலாம், ஆனால் கிழவிகள் எல்லாம் குமரிகள் ஆக முடியாது இல்லையா :-))

சரி உங்க புத்தகத்தையும் வாங்கி படிச்சு பார்க்கிறேன், விலை ஒரு 1/4 விலை விட கம்மியா இருந்தா :-))

ஆனாலும் நீங்க பெரிய கில்லாடி தான் ... உங்க புத்தகத்தை விடாம மார்க்கெட்டிங் செய்றிங்க :-))

மாயாஜாலில் களவாணிய நல்லா ஓடும் போதே எடுத்துட்டாங்கனு அப்போ ஒரு அக்கப்போர் படிச்சேன்ன் , மதுரை சோலைமலை தியேட்டர்ல சுப்ரமணிய புரம் படத்த தூக்கினாங்கனு படிச்சேன், எல்லாம் படிச்ச செய்திகள் தான்! இப்படி வெளில ந்யுஸ் வர அளவுக்கூ இருக்குனா , பிரச்சினை இல்லாமலா இருக்கும்னு கேட்டேன். மற்றபடி சும்மா கேள்விக்கேட்டு டைம் பாஸ் செய்ய அல்ல!

சித்திரம் பேசுதடி படம் எப்படி எல்லாம் சிக்கி சின்னாபின்னம் ஆச்சுனு நேரடியாக ஒரு நண்பர் சொல்ல கேட்டு இருக்கேன். ஆஸ்கர் ரவி தான் கடைசில காப்பத்தினார்.ஒரு வாரம் கோபிகிருஷ்ணா, வள்ளலார் நகர் கிரவுன் போன்ற தியேட்டர்களில் ஓடி நட்டம் ஆனப்பிறகே ஆஸ்கர் ரவி வாங்கி மீண்டும் நல்ல தியேட்டர்களில் ஓட்டினார். இந்த தகவல்களை நீங்க கேள்விப்பட்டே இருப்பிங்க.படம் தயாரிச்சவர் கடைசில கடனில் எனக்கேள்வி.

அதனால் தான் சின்ன படங்கள் நல்லதோ கெட்டதோ தியேட்டர்காரர்கள் பாரபட்சம் காட்டுராங்கனு தான் நான் நினைக்கிறேன்.

(ஹி..ஹி அப்புறம் சசி காத்திருக்கிறாளுக்கு விமர்சனம் போடாமல் விட்டுடிங்க, டைட்டிலே கவித்துவமா இருக்கேனு ஒரு ஆர்வத்தில மட்டுமே கேட்டேன் :-))

cos said...

dont want to reply in kothuparota section.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=U1d3dKGb3Eg#!

see this reply song
why this kolaveri da