Thottal Thodarum

Dec 9, 2011

ஒஸ்தி

osthe-complete-gallery-148 குருவி, தெலுங்கு பங்காரத்துக்கு முன் வரை அடித்து தூள் பரத்திக் கொண்டிருந்த இயக்குனர் தரணி. விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கு பிறகு இவரை பிடிக்காதவர்களுக்கும் பிடித்துப் போன நடிகரான சிம்பு. ஏற்கனவே இந்தியாவெங்கும் சூப்பர் ஹிட்டான “தபாங்”கின் ரீமேக் என்பது போன்ற விஷயங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, படத்தின் டெபிஸிட் காரணமாய் நேற்று காலை வெளியாகாமல் மதியத்திற்கு மேல் ஒரு வழியாய் வெளியாகியது.


சிம்பு ஒரு தடாலடி போலீஸ் இன்ஸ்பெக்டர். யாரைப் பற்றியும் கவலைப்படாதவர். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம். இவருக்கும் இவரது வளர்ப்பு தந்தை, தம்பிக்குமான உணர்வுபூர்வமான ப்ரச்சனை ஒருபுறம். ஊரில் எலக்‌ஷனில் நிற்கு அரசியல்வாதி பாக்ஸர் அர்ஜுன் ப்ரசனை ஒருபுறம் என்று ஓட, இவற்றையெல்லாம் எப்படி சமாளித்து எப்படி வெற்றி கொள்கிறான் என்பதுதான் கதை.
 osthe-complete-gallery-166 என்ன தான் எஸ்.டி.ஆர். என்று பெயரை மாற்றிக் கொண்டாலும் சிம்பு தான் பழக்கதிற்கு வருகிறது. இந்தி தபாங்கில் வரும் சல்மான்கானின் அலட்டலை கம்பேர் செய்யவில்லை என்றால் சிம்பு நிஜமாகவே உழைத்திருக்கிறார். சாதாரணமாகவே திரையில் பெரிதாய் அலட்டும் இவரின் மேனரிசங்கள் இப்படத்தின் கேரக்டருக்கு சரியாகப் பொருந்துகிறது. படம் முழுவதும் மனிதர் படா பந்தாவோடு அலைகிறார்.  இவரது உயரத்துக்கு மாச்சோவாக காட்ட நிறைய லோ ஆங்கிள் ஷாட்டுகளை வைத்திருப்பதால் பில்டப் தாங்குகிறது. இவரது திருநெல்வேலி ஸ்லாங்கும் பர்பெக்டாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

மயக்கம் என்னவுக்கு பிறகு ரிச்சாவின் நடிப்பில் வந்திருக்கும் படம். என்னதான் கம்பேர் செய்யக்கூடாது என்று நினைத்தாலும், இந்தி ஹீரோயின் சோனாக்‌ஷியை மீறி மனதில் நிற்க முடியவில்லை. இருந்தாலும் ஓகே. முதல் பாதி முழுவதையும் சும்மா எல்லாரையும் அடா புடாவென அடித்து பிரித்து மேய்ந்திருக்கிறார் சந்தானம். பல இடங்களில் செம நச். வர வர பல படங்களை சந்தானம் தான் காப்பாற்றி வருகிறார். அதில் இதுவும் ஒன்று. ஒரு பாட்டின் நடுவில் சிம்பு மாதிரி டான்ஸு ஆடுகிறார். ஹீரோயினின் குடிகார அப்பாவாக விடிவி கணேஷ். பெரிதாய் ஒட்டவில்லை. சிம்புவின் வளர்ப்பு அப்பா நாசர், தம்பியாக ஜித்தன் ரமேஷ், மயில்சாமி, வில்லன் சோனு சூட், விஜயகுமார் என்று ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நிறைவாக செய்திருந்தாலும். முதல் காட்சியில் ஆரம்பித்து கடைசி காட்சி வரை எதிர் டீமில் இருந்து கொண்டு சிம்புவை புகழ்ந்து கொண்டு அவரிடமும், வில்லனிடமும் அடிவாங்கிக் கொண்டிருக்கும் அந்த ரவுடி கேரக்டர் சூப்பர். அதே போல் மல்லிகா ஷெராவத் பெருசாய் எடுபடவில்லை.
osthe-complete-gallery-135 கோபிநாத்தின் ஒளிப்பதிவு இம்மாதிரியான மசாலா படங்களுக்கு தேவையான எல்லா எபெக்டுகளையும் சரியாய் கொடுத்திருக்கிறது. பரதனின் வசனங்கள், திருநெல்வேலி ஸ்லாங்கில் நச்சென இருக்கிறது. சில இடங்களில் அட போட வைக்கிறது. தமனின் இசையில், வாலியின் வரிகளில் எல்லாமே குத்து பாடல்களாய் அமைந்துவிட்டது. அதற்கான ஆடியன்ஸுக்கு கொடுக்க வேண்டிய இம்பாக்டை சரியாய் கொடுத்திருக்கிறார். பின்னணியிசையில் ஓரளவு இரைச்சல் குறைந்திருப்பது சந்தோஷமாய் இருக்கிறது.
osthe-complete-gallery-157 திரைக்கதை, இயக்கம் தரணி. பெரும்பாலும் இந்தி படத்தை அப்படியே ஒத்தியெடுத்திருக்கிறார். கதைக்கான களமாய் திருநெல்வேலியை எடுத்தது ஸ்மார்ட் மூவ். லாஜிக் பற்றி எந்த ஒரு கவலையில்லாமல் ஒரு மாஸ் படத்தை தர முயன்று அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கேள்வி கேட்க வேண்டும் என்றால் ஒரிஜினல் படத்திலேயே கேட்டிருக்க வேண்டும். ஏற்கனவே வெற்றி பெற்றதை எதற்கு ரிப்பேர் செய்ய வேண்டும் என்று யோசிப்பது சரிதான். ரிச்சாவின் கேரக்டரில் ஒரு சின்ன மென்சோகம் இந்தியில் இருக்கும் அது ரிச்சாவை பார்க்கும் போது வரவில்லை. அதே போல ரிச்சாவின் அப்பா தன் மகளுக்காக சாகும் சீன் இன்னும் உருக்கமாய் அமைந்திருக்கும் அது இங்கு குறைவே.  வில்லன் சோனு சூட் க்ளைமாக்ஸில் சிக்ஸ் பேக்கோடு சண்டைப் போடுவதை தவிர, பெரியதாய் ஏதும் செய்யவில்லை என்றாலும், ஏதோ செய்வது போன்ற் இம்பாக்டை க்ரியேட் செய்யும் திரைக்கதை இண்ட்ரஸ்டிங். மல்லிகா ஷெராவத்தின் பாடல் ஒண்ணும் எடுபடவில்லை. சிம்புவை ஒரு மாச்சோவாக காட்ட எடுத்துக் கொண்ட டெக்னிக்கல் முயற்சி வெற்றி என்றே சொல்ல வேண்டும். சிம்புவின் வளர்ப்பு தந்தை, தம்பி, அம்மாவுக்கிடையே ஆன நெக்ஸஸ் தான் படத்திற்கு முக்கியமான லைன். அதை அப்படியே எடுத்தாண்டு சரியாய் கொடுத்து, படத்தின் முடிவில் சிம்புவுக்கு சிக்கன் லெக் பீஸையெல்லாம் எடுத்து ஊட்டி விட்டு எவ்வள்வு கஷ்டப்பட்டு இப்படத்தை வெற்றிகரமாய் கொடுக்க உழைத்திருக்கிறார் என்பதை டைரக்டோரியல் டச்சாய் வெளிபடுத்தியிருக்கிறார்.
ஒஸ்தி – மசாலா பட விரும்பிகளுக்கு மட்டும்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

21 comments:

அவனே தான்... said...

Yen boss...Mark Podalai...Preview showla paarthaachaa??

Jayaprakash said...

நான் அல்றேஅடி "டபாங்" ஹிந்தி ல பார்த்து அச்சு! சோ தமிழ் ல பார்க்கலாம் நு நெனச்சேன் அது முன்னாடி வுங்க விமர்சனம் படிச்சிட்டேன்!

"வர வர பல படங்களை சந்தானம் தான் காப்பாற்றி வருகிறார்."

நச்சுன்னு சொன்னேங்க சார்!

Anonymous said...

ஓகே தல... பார்த்துடுறோம் :)

வவ்வால் said...

கேபிள்,

ஹி..ஹி அப்போ இந்த படத்திற்கு விமர்சனம் கூட தேவை இல்லை தானே! படத்தை குறை சொன்னா பாயுறாங்கனு பம்மிட்டிங்களோ? :-))

தமிழ் படங்களை வாங்கி இந்தில ரீமேக்குறாங்க, இவர் என்னடான அங்கே போய் கதைப்பிடிக்கிறார்!

Anonymous said...

thala..Simbu ku kadhai soli irukeenga poola ..all the best ..

காவேரிகணேஷ் said...

கொடுமையான மொக்க படம்..

பிரபல பதிவர் said...

மறுபடி மறுபடி உங்க விமர்சன அரசியல புகுத்துரிங்க...

மொக்கை விமர்சகர் ஆனா பரவால்ல
மொக்கை பதிவர் ஆகாம பாத்துக்குங்க
பிரபல பதிவர் எனும் இமேஜ் டேமேஜ் ஆயிட போகுது.

கோவை நேரம் said...

///மல்லிகா ஷெராவத்தின் பாடல் ஒண்ணும் எடுபடவில்லை///
வழக்கம் போல பாடல் காட்சிக்கு வெளியே போய்டீங்களா ..?(ஹி..ஹி ..ஹி ..தம் அடிக்கதானே ..) ஹிட் ஆன பாடல் அது...

Unknown said...

Mm!!!!
Osthi Maame!!
Pathuduvomilla

Regards
M.Gazzaly
(http://greenhathacker.blogspot.com)

Anonymous said...

i am escape...

Unknown said...

ஒசத்தியான மசாலாவோ ?

arul said...

simple and good post

www.astrologicalscience.blogspot.com

அனுஷ்யா said...

படம் இன்னும் பாக்கல அண்ணே..வேணாமுன்னு தோணுது இப்போ...

என் வலைப்பூவில்... அது ஒரு கார்த்திகை மாலை..அன்பே!

pradeep said...

Osthi - waste of time

Unknown said...

ஆன்லைனில் வாங்க!sari on linela varrom!

விச்சு said...

விமர்சனம் சூப்பர். படம் மசாலா பிரியர்களுக்கு என்ற உங்கள் நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு.

Anonymous said...

ஏற்கனவே உங்கள் டபாங் விமர்சனம் படிச்சிட்டு அந்த படத்த பார்த்தேன்.. செம பக்கா மாஸ், சல்மான் கலக்கி இருக்காரு... அது உள்ள லாஜிக் மீறல்களுக்கு எல்லாம் சரியான விளக்கம் கொடுத்துருந்தீங்க... அப்ப கடைசியா //தமிழில் எடுத்தால் பாராட்டுவீர்களா?///னு ஒரு கேள்வியும் கேட்டு அதுக்கு சரியான பதிலாக இந்த விமர்சனத்த எழுதி இருக்கீங்க....
மேலும் காமெடி என்னன்னா சில விமர்சகர்கள் இதுல வரும் சில/பல சீன்களுக்கு டைரக்டர் தரணியிடம் விளக்கம் சந்தேகம் கேக்குறாங்க.(உதாரணத்துக்கு அந்த கண்ணாடிய பின்னாடி போடுற ஸ்டைல்,) அது எல்லாம் அங்க டபாங்கில் பண்ணதுன்னு தெரியாமலே.....
ஆகா மொத்ததுல என்னை உங்களை போன்ற மசாலா விரும்பிகளுக்கு ஏற்ற படம் ஒஸ்தி.....

///வர வர பல படங்களை சந்தானம் தான் காப்பாற்றி வருகிறார். அதில் இதுவும் ஒன்று.////
நன்றி... சந்தானம் ரசிகரா இருக்குறதுல நாங்க பெருமை படுறோம்!!!

இது தமிழ் said...

//ஒஸ்தி – மசாலா பட விரும்பிகளுக்கு மட்டும்

அதே.. அதே.. :-)

- சாம்ராஜ்ய ப்ரியன்.

Sharmmi Jeganmogan said...

இதைப் பார்க்கிற பொறுமை எனக்கில்லைப்பா... பதிவுக்கு நன்றி யூத்!

sweet said...

பதிவுலகின் முக்கிய பதிவர்களான ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்

நானும் படம் பார்த்தேன். மசாலா படம். நல்லா பொழுது போச்சு. உங்கள் விமர்சனமும் நன்றாக இருக்கிறது.

ஆனால் தனுஷ் & ரஜினி ரசிகர்களான அட்ரா சக்க சிபி, அதிஷா, என்வழி வினோ அவர்களது கொலை வெறியை பதிவாக போட்டுள்ளனர்.

பார்க்கலாம். கேபிள் சங்கரோட வசூல் ரிப்போர்ட் என்ன சொல்லுது என்று

கேரளாக்காரன் said...

Jackie and cable mukkiya padhivarnnaa yuvakrishna enna mukkaadha padhivaraa avarum mukkiya padhivar dhaan avarum padam nalla irukkunnu thaan sollirukkaaru......