Thottal Thodarum

Aug 29, 2012

சாப்பாட்டுக்கடை - மன்சுக்

 மன்சுக்லால் சேட் சுவீட் கடை என்றால் சவுக்கார்பேட்டையில் பிரபலம். அவர்களின் டோக்லா, மற்றும் சமோசா, கச்சோடி, போன்றவை போட்ட மாத்திரத்திலேயே காலியாகிவிடும் அளவிற்கு பிரசித்தி பெற்ற கடை. இவர்களின் உணவகம் கம் ஸ்வீட் கடை ஒன்றை வெகு காலத்திற்கு முன்பே ராமசாமி தெருவில் ஆரம்பித்திருந்தார்கள். இவர்களிடம் மதிய நேரத்தில் சூடான சப்பாத்தி, புல்கா, வெஜ் ப்ரைட் ரைஸ் மற்றும் புலாவ் அயிட்டங்கள் பாஸ்ட் புட் முறையில் வெகு காலத்திற்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் படு சாப்டான சப்பாத்தி மற்றும் புல்காவிற்காகவே கொஞ்சம் காஸ்ட்லியாக இருந்தாலும் அவ்வப்போது சென்று சாப்பிட்டு வருவேன். 


மேலே ஒரு ப்ளோர் கட்டி அதில் லஞ்ச் மற்றும் டின்னர் ஆரம்பித்திருக்க, பல முறை சாப்பிட்டிருந்தும் எப்போதோ கொத்து பரோட்டாவில் எழுதியதாய் ஞாபகம். தனியாய் ஒரு பதிவாய் இக்கடையை அறிமுகப்படுத்த தவறிவிட்டோமோ என்று ஒரு வருத்தம் இருந்து கொண்டேயிருந்தது. அதை சமீபத்தில் இங்கு சாப்பிட்ட போது ஞாபகம் வர இதோ உங்களுக்காக மன்சுக்.
இவர்களிடம் இரண்டு வகையான சாப்பாட்டு பேக்கேஜ் வைத்திருக்கிறார்கள். கீழே பாஸ்ட் புட் போல மேற்ச் சொன்ன அயிட்டங்கள், மேலே ராஜஸ்தானி மற்றும் குஜராத்தி வகை லஞ்ச் மற்றும் டின்னர் தான் ஸ்பெஷாலிட்டி. ராஜஸ்தானி என்பது லிமிட்டெட் வகையைச் சார்ந்தது. ஆனால் அதே குஜராத்தி வகை என்பது அன்லிமிட்டட். போய் உட்கார்ந்தவுடன் ஒரு கூடை நிறைய வடகம் வகை ஒன்றை வைத்துவிடுவார்கள். அதன் பிறகு ஒரு தட்டில்  மூன்று வகையான சப்ஜிகள், கடி எனும் குஜராத்தி வகை அயிட்டம், மற்றும் ஒர் கிரேவி, ஸ்வீட், சாலட், ஊறுகாய் என்று வைத்துவிட்டு, ரெண்டு டோக்லா மஞ்சள் அழகியை நட்ட நடு தட்டில் வைத்துவிட்டு போய் விடுவார்கள். அதற்கு தொட்டுக் கொள்ள புதினா மற்றும் ஸ்வீட் புளிச் சட்னி வேறு வைத்து விட, நாக்கு ஊற ஆரம்பித்துவிடும், அடுத்து பூரியா , சப்பாத்தியா என்று கேட்டு எது வேண்டுமோ அதை கேட்டுக் கொள்ளலாம். சப்பாத்தி என்றால் அப்படி ஒரு சப்பாத்தியை சாப்பிட்டிருக்க முடியாது. மிகவும் மிருதுவான, மேலே ரெண்டு பக்கமும் நெய்யை தடவிக் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள். சப்பாத்தி உள்ளே போவதே தெரியாது. அதன் பிறகு கொஞ்சம் பொங்கல் போன்ற ஒர் அயிட்டத்தை தருவார்கள். முழுக்க முழுக்க, பருப்பு மற்றும் அதன் பலன்களை நமக்கு கொடுக்கும் உணவு. அது முடிந்தவுடன் தயிர் சாதம் வேண்டுமென்றால் புளிக்காத தயிர் சாதம் கிடைக்கும். குறையக் குறைய புளிக்காத மோரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். என்ன இவர்களின் ரேட் மட்டும் கொஞ்சம் அதிகம். 
கேபிள் சங்கர்

Post a Comment

11 comments:

தமிழ் பையன் said...

அனுபவிச்சு எழுதி இருக்கீங்க..

தமிழ் பையன் said...

அயல் நாட்டில் இருப்போர், பசி வேளையில் படிக்கக் கூடாத பக்கங்கள் உங்க "சாப்பாட்டுக் கடை" :-)

Tech Shankar said...

உங்கள் மனதை அவர்கள் திருப்திப்படுத்தி இருப்பதை உணர முடிகிறது.

by

தமிழ்நெஞ்சம்

CS. Mohan Kumar said...

PKP கேட்டது சரிதான். தூங்குவீரா இல்லையான்னு தெரியலை நைட்டு ரெண்டு மணிக்கு பதிவு போடுறீர் :)

திண்டுக்கல் தனபாலன் said...

தகவலுக்கு நன்றி...

rajamelaiyur said...

போட்டோ பாத்ததுமே நாக்கு ஊருது ...

rajamelaiyur said...

இன்று

வாங்க கலர் பார்க்கலாம்

ரமேஷ் வைத்யா said...
This comment has been removed by the author.
Saravanakumar said...

Is this correct?
http://in.openrice.com/chennai/restaurant/photos.htm?shopid=8220&position=1&page=1

தமிழ்வாசி பிரகாஷ் said...

ok ok//


பிரபல பதிவர் கேபிள் சங்கரின் பேட்டி நமது தமிழ்வாசியில் விரைவில் வெளியாக உள்ளது. அவரிடம் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான்.
http://www.tamilvaasi.com/2012/08/cable-sankar-exclusive-interview.html

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

கமெண்டியிருந்தேனே, கிடைக்கவில்லையா?!