சமீபத்தில் வசேப்பூர் படம் பார்க்க போயிருந்த போது இப்படத்தின் ட்ரைலரை பார்த்தேன். மிகவும் ஸ்லீக்காக செய்திருந்தார்கள். கேத்தரீனா கைஃப் வேறு இருப்பதால் பார்த்து தொலைத்தே ஆக வேண்டிய பட லிஸ்டில் சேர்ந்துவிட்டதால் பார்த்தாகிவிட்டது.
இந்திய உளவுத்துறையான “ரா”வின் ஏஜெண்டான டைகருக்கும், பாகிஸ்தானிய உளவுத்துறையான “ஐ.எஸ்.ஐ”யின் ஏஜெண்ட் ஸோயாவுக்கும் இடையே ஏற்படும் காதல் தான் கதை. இரண்டு நாட்டின் உளவுத்துறையும் எலியும் பூனையுமாய் இருக்க, ஒரு விஞ்ஞானியை அப்சர்வ் செய்யப் லண்டன் போகும் மிஷனில் ஸோயாவை சந்திக்கிறான். இருவரும் நெருக்கமாகிறார்கள். ஒரு கட்டத்தில் அவளும் உளவுத்துறையை சேர்ந்தவள் என்று தெரியவர, பிரிகிறார்கள். மீண்டும் இஸ்தான்புல்லில் நடக்கும் பீஸ் மீட்டில் இருவரும் சந்திக்க, காதல் பொத்துக் கொண்டு வழிகிறது. இருவரும் தம்தம் உளவுத்துறைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, எஸ்ஸாக, இவர்களை துர்த்துக்கிறது இரண்டு உளவுத்துறைகளும். என்ன ஆனது என்பதுதான் மிச்ச கதை.
சல்மான் வழக்கம் போல சிக்ஸ்பேக்குடன் ரா ஏஜெண்ட் என்றால் நம்பும்படியாய் இருக்கிறார். பரபர ஆக்ஷன் சீன்களில் டூப்போடு கலக்குகிறார். இவருக்கும் கேத்தரீனாவுக்குமான “கெமிஸ்ட்ரி” நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருப்பதால் பார்க்க சுவாரஸ்யமாய் இருக்கிறது. சல்மானின் ரசிகர்களுக்கு அவரது ஸ்கீரின் ப்ரெசன்ஸே போதுமானதாய் இருக்கும் போது, ஸ்லீக்காக எடுக்கப்பட்ட ஆக்ஷன் , காதல் காட்சிகளும் ஆங்காங்கே வரும் சுவாரஸ்ய தருணங்கள் இருக்க, வேறென்ன வேண்டும்.
கேத்தரீனா.. ம்ஹும்.. நமக்கில்லை சொக்கா.. நமக்கில்லை. என்னமாய் இருக்கிறாள்?.சல்மானின் கண்களை ஊடுருவும் போது நம் கண்ணை ஊடுருவது போல் பார்ப்பதால் பார்க்கும் நாம் காதல் வசப்படாமல் இருக்க முடிவதில்லை. ஆக்ஷன் காட்சிகளில் வேறு நடித்திருக்கிறார். ஒரு சில ப்ளாக்குகள் நச்.இவரைத் தவிர, கிரீஷ்கர்னாட், ரன்வீர் படம் முழுக்க வ்ருகிறார்கள்.
படம் முழுக்க, இந்தியா, க்யூபா, ஈரான், இஸ்தான்புல், லண்டன் என்று உலகம் சுற்றுகிறார்கள். தனக்கென எந்தவிதமான கமிட்மெண்டும் இல்லாத சல்மானிடம் ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்கப்படும் போது தான் என்ன வேலை செய்கிறேன் என்று சொல்ல முடியாத இக்கட்டை சொல்லும் காட்சி, ஸோயாவின் வீட்டில் தங்கி சமையல் செய்யும் போது அவள் உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? என்று கேட்க, ‘எடுத்தவுடனேயே கல்யாணம் ஆயிருச்சான்னு கேக்குறியே? கேர்ள் ப்ரெண்ட் இருக்காங்களான்னு கேட்க மாட்டியா?” என்று சல்மான் கேட்க, “அந்த ஸ்டேஜையெல்லாம் தாண்டிவிட்டாய்” என்று சொல்லுமிடம், இரண்டு எதிரி நாட்டு உளவுத்துறையும் சேர்ந்து செயல்படும் ப்ராஜெக்டாய இவர்களை கண்டு பிடிக்கும் ப்ராஜெக்ட் ஆகிவிட்டது, உலகத்தில் இருக்கும் 201 நாடுகளில் உள்ள பெண்களை விட்டு ஏன் பாகிஸ்தான் பெண்ணை காதலிக்கிறாய்? எனும் போது சல்மான் 201 இல்லை 203 என்று புதிய நாடுகளைச் சொல்வது என்பது போன்ற பல வசனங்கள் இண்ட்ரஸ்டிங். அதே போல ஆக்ஷன் காட்சிகளை படம்பிடித்த விதம், சேஸிங், லோகேஷன்கள், மேக்கிங், எடிட்டிங் எல்லாம் நன்றாக இருக்கிறது.
என்ன ஆரம்பத்தில் கொஞ்ச நேரமும், இடைவேளைக்கு பிறகு கொஞ்ச நேரமும் நகர மறுத்துக் கொண்டு திரைக்கதை நொண்டியடிக்கிறது. இரண்டு நாட்டு உளவுத்துறையினர் காதலிக்க கூடாதா? அப்படி காதலிப்பதனால் இரண்டு நாட்டு செய்திகளும் பரிமாறப்பட்டுவிடுமென்று யோசிப்பது படத்தின் சுவாரஸ்யத்துக்கு வேண்டுமானால் உபயோகப்படலாம் நிஜத்தில் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டால் அப்புறம் என்ன? க்யூபா போய்விட்டு, பிழைப்புக்கு படம் வரைந்து ப்ளாட்பாரத்தில் வைத்து விற்று பிழைப்பு நடத்துவது, கேத்ரீனா நடனம் சொல்லி த்ந்து பிழைப்பு நடத்துவது எல்லாம் செம காமெடி. இப்படிப்பட்ட கேள்விகள் எல்லாம் கேட்காமல் இருந்தால் நலம்.
அஸீம் மிஸ்ராவின் ரிச்சான ஒளிப்பதிவும், ஸ்லீக்கான எடிட்டிங்கும், சல்மான், கேத்த்ரீனாவின் கெமிஸ்ட்ரியும், நக்கலான வசனங்களும், பரபரப்பான நான்கு ஆக்ஷன் காட்சிகளும், கொஞ்சம் லாஜிக்கலான சீன்களையும் சேர்ந்ததால், கரம் மசாலா படமாய் அமையவிருந்த லிஸ்டிலிருந்து ரெண்டடி தள்ளி சுவாரஸ்ய மசாலா படமாய் அமைந்திருக்கிறது இந்த ஏக் தா டைகர்.
Comments
शेरनी இல்லையா ???
கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் உண்டா ???
Shankar
காத்ரினாவுக்காக பார்க்கலாம்னு தான் இருக்கேன் , ஹி...ஹி அசின்க்காக ஹிந்தி படம் எல்லாம் பார்க்கிறேன் அப்போ காத்ரினாவ விடுவனா :-))
ஆனாலும் இந்த படம் செம மொக்கையாக எனக்கு இருக்கும் ஏன் எனில், ," the spy who loved me , with love from russia ,and mr and mrs smith "போன்ற படங்களை உல்டா அடிச்சு இந்த காலத்தில் இப்படி ஒரு படமா எனத்தோன்றுகிறது.
எந்த ஒரு ரகசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றாலும் கூட கண்காணிப்பார்கள், அதுவும் இது போல சந்தர்ப்பங்களை எல்லாம் அனுமதிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.
ரா வின் உதவி இயக்குனர் ஒருவர் சிஐஏ கையாளாக மாறி நாட்டை விட்டு ஓடிப்போன உண்மை கதை எல்லாம் இருக்கு.
அவரை காலி செய்ய சி.ஐஏ முயன்றதாக அமெரிக்காவில் இருந்து கொண்டு பேட்டி எல்லாம் கொடுத்தார், இதெல்லாம் 96 காலக்கட்டம் என நினைக்கிறேன், பெயர் என்னமோ சிங்(தேஜெந்தர் சிங் (அ) ராஜிவ் சிங் ஆக இருக்கலாம்) என முடியும் ,சரியாக நினைவில்லை.
திருத்தம், "ரா" முயன்றதாக என வாசிக்கவும்.
இன்று
இந்த செய்திகள் கண்டிப்பாக உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ...
ரா ஏஜெண்ட் சிக்ஸ்பேக்குடன் இருப்பதால் நம்பும்படியாய் உள்ளார் என சொல்வது சரியா?
Veetula Theriuma?????
ஸ்லீக்கான படத்திற்கு ஸ்லீக்கான விமர்சனம் அதற்கு ஸ்லீக்கான ஒரு பின்னுட்டம்.