Thottal Thodarum

Oct 16, 2012

தமிழ் சினிமா ரிப்போர்ட் - ஆகஸ்ட் 2012

ஆகஸ்ட் மாதம் வழக்கம் போல் புற்றீசலாய் பல சிறிய படங்கள் வெளிவந்தாலும், குறிப்பாய் மதுபானக்கடை, ஆச்சர்யங்கள் போன்ற கவனிக்கதக்க படங்களும் வெளிவந்தது. பனித்துளி, பெருமான், எப்படி மனசுக்குள் வந்தாய்?, 18 வயசு போன்ற படங்களும் வந்தன.


மதுபானக்கடை
தமிழ் சினிமாவில் க்ளிவேஜைக் காட்டிக் கொண்டு ஆடும் படங்கள், ஆபாச வசனங்கள் கொண்ட படங்கள், டாஸ்மாக்கில் குத்து பாடல் கொண்ட படங்களுக்கு எல்லாம் “யு” சர்டிபிகேட் கொடுத்து வரவேற்கும் நம் சென்சார் போர்டு முழுக்க, முழுக்க, டாஸ்மாக்கிலேயே படமெடுத்திருப்பதால் இப்படத்திற்கு “ஏ” சர்டிபிகேட் கொடுத்தது. இதனால் இப்படத்திற்கு வசூல் ரீதியாய் கிடைக்க வேண்டிய சாட்டிலைட் ரைட்ஸ் கூட விற்க முடியாமல், ரிலீஸ் செய்ய தியேட்டர் கிடைக்காமல் பல போராட்டங்களுக்கிடையே ரிலீஸ் ஆனது. பத்திரிக்கையாளர்களாலும், விமர்சகர்களாலும் கவனிக்கப்பட்டு பாராட்டுப் பெற்ற படம் வழக்கம் போல கமர்ஷியல் தோல்விப் படமாய் அமைந்தது.]

அட்டக்கத்தி
சுமார் ஒன்னேமுக்கால் கோடி ரூபாயில் தயாரான இந்த சிறிய படம் ஸ்டியோ க்ரீன் எனும் நிறுவனம் வாங்கியதால் உடனடியாய் மீடியாவில் உள்ள அனைவராலும் கவனிக்கப்பட்ட படமானது. இரண்டு கோடி ரூபாய் வரை விளம்பரங்களுக்காக செலவு செய்யப்பட்டது என்கிறார்கள்.அந்த விளம்பரம் வாங்கிய ஸ்டூடியோக்ரீன் நிறுவனத்திற்கும் ஓரளவுக்கு தியேட்டர்களிலிருந்து எம்.ஜியாகவும், அட்வான்சாகவும் கலெக்‌ஷன் ஆக, தியேட்டர்காரகளுக்கும் பெரிய தொகையாக இல்லாததால் யாருக்கும் கையைக் கடிக்காத படமாய் அமைந்துவிட்டது. மதுரை போன்ற டவுன் சவுத் ஏரியாக்களில் மட்டும் சரியாய் போகவில்லை என்கிறது ரிப்போர்ட். சுமார் ஆறிலிருந்து எட்டு கோடி வரை வசூல் செய்திருக்கும் இப்படத்தின் மூலமாய் பல புதிய சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை எனும் ஆக்சிஜனை கொடுத்திருக்கிறது. நிறைய சின்னப் படங்களை வாங்கி வெளியிட கார்பரேட் நிறுவனங்களும், விநியோகஸ்தர்களும் வரத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. ஒரு சின்னப் படம் தயாரித்த தயாரிப்பாளர் தொடங்கி, விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் அனைவருக்குமே லாபம் தரக்கூடிய படமாய் அமைந்தது சந்தோஷ விஷயமே.

நான்
அட்டகத்தியோடு சத்தமில்லாமல் ரிலீஸாகி கவனத்தை ஈர்த்த இன்னொரு படம் நான். விஜய் ஆண்டனியின் நடிப்பில், தயாரிப்பில், இசையில் வெளியான ஒரு த்ரில்லர். ஒரு ஆங்கிலப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாய் இருந்தாலும் அதே படத்தை தழுவி எடுக்கப்பட்ட எப்படி மனசுக்குள் வந்தாய்? கொடுக்காத இம்பாக்டை இந்தப் ப்டம் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். ரிலீஸான முதல் வாரத்தில் பெரிய அளவிற்கு இம்பாக்ட் இல்லாவிட்டாலும் ஏ செண்டர்களில் எல்லாம் மெல்ல பிக்கப் ஆகி ஓரளவுக்கு வசூல் செய்தது என்றாலும் அவர்கள் செலவிட்ட மூன்று கோடியை கவர் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் இந்த அளவிற்கு பெரிய விளம்பரம் இல்லாமல், புது நடிகர் நடித்த படம் கண்டெண்ட் ஒன்றுக்காக மட்டுமே மக்களால் கவனிக்கப்பட்டது ஒரு சந்தோஷமான விஷயமே.

முகமூடி
யுடிவி, மிஷ்கின், ஜீவா தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படம் என்று பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படம் தான் என்றாலும் முதல் நாள் காட்சியிலேயே அத்துனை எதிர்பார்ப்பையும் படம் காலி செய்த காரணத்தினால் சமீபத்திய பிக் பட்ஜெட் டிசாஸ்டராக இப்படம் அமைந்தது. சுமார் இருபத்திரெண்டு கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் அதில் பாதியை வசூல் செய்திருக்குமா என்ற சந்தேகிக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

ஆகஸ்டு மாத ரிப்போர்ட்
அபவ் ஆவரேஜ் : அட்டகத்தி


Post a Comment

5 comments:

ARASU said...

tamil cinemavin ramana engal thalaivar kebil...

G.Ragavan said...

மதுபானக்கடையின் ஒரிஜினல் டிவிடி கடைக்கு வந்துவிட்டது. விலையும் ரூ75. இதையே எல்லாரும் செய்தால் ஒரிஜினல் டிவிடிக்கு நல்ல வரவேற்பு இருக்கும். நண்பன் ஒரிஜினல் டிவிடியும் ரூ.60க்குக் கிடைக்கிறது.

வவ்வால் said...

கேபிள்ஜி,

// “ஏ” சர்டிபிகேட் கொடுத்தது. இதனால் இப்படத்திற்கு வசூல் ரீதியாய் கிடைக்க வேண்டிய சாட்டிலைட் ரைட்ஸ் கூட விற்க முடியாமல்,//

இப்படி எல்லாம் சொல்வது அறியாமை என்பதா அல்லது , மற்றவர்கள் அறியாதவர்கள் என்ற எண்ணத்திலா?

ஏ சான்று பெற்றால் சாட்டலைட்ஸ் ரைட்ஸ் விற்பனையாகாது என யார் சொன்னார்கள், முன்னரே இதனை சொல்லியாச்சு ,மீண்டும் நீங்கள் பிடித்த முயல் 3 கால் என்பதால் சொல்ல வேண்டியதாகிறது,

மீண்டும் ஒரு சான்றிதழுக்கு விண்ணப்பித்து யூ அல்லது யூ/ஏ என வாங்கி தொலைக்காட்சியில் வெளியிடலாம்.

ஏ சான்று படமென்று பொல்லாதவன் படமோ, சுப்ரமணியபுரமோ தொலைக்காட்சி ரைட்ஸ் விற்பனையாகமலா போய்விட்டது?

தொலைகாட்சி உரிமம் விற்பனையாகாமல் இருக்க படத்தின் சான்று ஒரு காரணமல்ல, படம் நல்லா இருக்காது ,அதிக விளம்பரம் கிடைக்காது, புதுமுக நடிகர்கள் என்பது போன்ற எண்ணங்களே.

Cable சங்கர் said...

எல்லாம் தெரிந்த அதிகப் பிரசங்கி என்பதை மீண்டும் மீண்டும் தன்னை அறிவாளி என்று காட்டிக் கொள்ளவும் ஏன் இத்தனை பிரயத்தனம். ஏற்கனவே இதற்கு முந்தைய பதிவுகளில் ஏன் இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கிடைத்து. அதை டிவிக்கு கொடுக்க முடியாமல் யு/ஏ வாங்க முடியாத ப்ரச்சனையை பற்றி எழுதி விட்டேன். ஒண்ணு அதை படிக்கணும். அல்லது ஏன்னு மரியாதையா கேக்கணும். தெரிஞ்சா மாதிரி பேசக்கூடாது. என்ன தம்பி.. புரியுதா.. போய் வீட்டுல பெரியவங்க யாராச்சையும் கூட்டிட்டு போய் பழைய பதிவ படிச்சிட்டு வா.. போ....

Ivan Yaar said...

கமல் , சூர்யா படங்களில் ஒரு சீன் foreign படத்தில் இருந்து எடுக்க பட்டாலும் அவரது படத்தை கிழி கிழி என கிழிக்கும் வலை உலக சினிமா விமர்சகர்கள், ரஜினி படங்களில் 90 % தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் படங்களில் இருந்து copy அடிக்கப்பட்டு வந்தாலும் அதை கண்மூடி தனமாக ஆதரிப்பது வியப்பாக உள்ளது.