Posts

கொத்து பரோட்டா -29/04/13

Image
ஃபோரம் மால் வருகிற ஒன்றாம் தேதி முதல் விஜயா ஃபோரம் மால் வடபழனியில் திறக்கப்பட உள்ளது என்று அறிவித்திருக்கிறார்கள். மீண்டும் ஒர் மாபெரும் ட்ராபிக் ப்ரச்சனையை வடபழனி சந்திக்க உள்ளது என்றே தோன்றுகிறது. போனிக்ஸ் மால் திறந்ததில் இருந்து வேளச்சேரியில் நடந்து கொண்டிருக்கும் ட்ராபிக் ப்ரச்சனை பற்றி அறிந்திருப்பீர்கள். ஏற்கனவே எதிர்புறத்தில் உள்ள கமலா தியேட்டர் படம் விடும் போதும் ஆரம்பிக்கும் போது ட்ராபிக் பின்னியெடுக்கும், இப்பொது அதற்கு நேர் எதிரே இந்த மால். அதிலும் பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகள் அமையப் பெற்றிருக்கிறது. அனுமதிப்பதை வடபழனி வழியாகவும், வெளியேறுவதை நூறு அடி ரோடு பக்கமாய் விட்டால் நிச்சயம் பிரச்சனை இருக்காது என்று தோன்றுகிறது. மக்களின் போக்குவரத்துப் பிரச்சனைகளைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல், இவர்கள் பாட்டிற்கு அனுமதி அளித்துவிட்டு, பின்னால் என்ன செய்வது என்று முழி பிதுங்குவதற்கு பதிலாய் முன்னமே கொஞ்சம் யோசித்து அனுமதி அளிக்கலாம். இவ்வளவு யோசனையிலும் ஒர் கிளுகிளூப்பு இருக்கத்தான் செய்கிறது. ஒன்று மொக்கை கமலா தியேட்டருக்கு ஒர் போட்டி. இரண்டாவது நம்ம ஏரியா பக்கத்திலேயே ஒர் ஐ...

யாருடா மகேஷ்?

Image
ட்ரைலர் வெளியீடான அன்றைக்கு பார்த்த மாத்திரத்தில் பற்றிக் கொண்ட படம். தமிழில் ஒரு அடல்ட் காமெடி வரப் போகிறது என்ற நினைப்பே ஆச்சர்யத்தையும், ஆர்வத்தையும் கொடுத்தது. படம் ஏ சர்டிபிகேட் வாங்கியதும் சரி. விட்டு விளையாடியிருக்காங்க போல என்ற நினைப்பை ஏற்படுத்திய படம். அவ்வளவு எதிர்ப்பார்ப்பையும் படம் பூர்த்தி செய்ததா?

நான் ராஜாவாகப் போகிறேன்.

Image
ஹிமாச்சல் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஜீவா தன்னைப் போலவே இன்னொருவர்  ராஜா என்ற பெயரில் சென்னையில் இருப்பதாய் ராணுவத்தில் வேலை செய்யும் சிம்மா மூலம் தெரிய வருகிறது. நம்மைப் போலவே ஒருவன் இருக்கிறான் என்று தெரிந்த பிறகு சும்மா இருக்க முடியுமா? தன்னைப் போல் இருக்கும் ஒருவனை தேட முயன்று அவரது தோழியை கண்டுபிடித்து, சென்னை வருகிறார். ஜீவாவை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது. ஏன்? எதற்கு? என்ன காரணம்? யார் அந்த ராஜா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லியிருக்கிறார்கள்.

சாப்பாட்டுக்கடை - சிம்ரன்ஸ் ஆப்பக்கடை

Image
 தமிழகத்தில் இட்லி, தோசைக்கு பிறகு பிரபலமான அயிட்டம் ஆப்பம். சூடான ஆப்பத்தின் மீது தேங்காய்பாலை விட்டு ஊற வைத்து சாப்பிட்டால் அற்புதமாய் இருக்கும். லீ மெரிடியனில் தேங்காய்ப்பால் கள்ளிப் பாலைப் போல திக்காய் இருக்கும். அதற்காகவே சில பல வருடங்களுக்கு சில நூறு ரூபாய்க்களை செலவு செய்து ஆப்பம் சாப்பிட்ட அனுபவங்கள் எல்லாம் உண்டு. ஆப்பத்துடன் தேங்காய்ப்பால், அல்லது வெஜ் குருமா, அல்லது கடலைக் கறி என்று பல காம்பினேஷன்களில் கிடைக்கிற இடங்களில் எல்லாம் சாப்பிட்டிருக்கிறேன். ஆப்பம் என்பது நல்ல பொன் முறுவலோடு, அப்படியே கவிழ்த்துப் போட்ட சட்டி போல இருந்தால் தான் ஓரத்தில் இருக்கும் முறுகலை அப்படியேவும், மீதியை கிரேவியோடும், பாலோடும் சாப்பிட ஏதுவாக இருக்கும். இப்படி ஆப்பத்தைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருக்கலாம்.  சாதாரணமாய் ஆயாகடைகளில் மட்டுமே கிடைக்கப் பெற்ற அப்படியாப்பட்ட ஆப்பத்தை, இட்லிக்கடை என்று சொல்லி முருகன் இட்லிக்கடை பெயர் பெற்றதை போல நளாஸ் ஆப்பக்கடை என்று வைத்து பிரபலமானதும் வடபழனியில் சிம்ரன்ஸ் ஆப்பக்கடை உதயமானது. ஏற்கனவே துபாயில் எல்லாம் இருக்கிறது என்றாலும் தமிழ்நாட்டில் ஆப்பத...

Gunde Jaari Gallanthaindhe

Image
 பார்த்த மாத்திரத்திலேயே நிதினுக்கு இஷா தல்வாரின் மேல் காதல் வருகிறது. நண்பன் ஆலியின் கல்யாணத்திற்கு வந்தவள் என்பதால் அவளின் நம்பரை மட்டும் வாங்கித் தரச் சொல்கிறார்.  அவர் சொல்லும் நம்பரை சொல்லும் போது நிதின் தவறாக ஸ்டோர் செய்துவிடுகிறார். அந்த நம்பர் நித்யா மேனனின் நம்பராய் இருக்க, எண்டமூரி வீரேந்திரநாத் நாவலில் வருவது போல போனில் மட்டுமே பேசிப்பழகி, பார்க்காமலே காதலிப்பதை விரும்புவர் நித்யா மேனன். இந்த கொள்கையினால் குழப்பத்தினோடு இருவரும் பார்க்காமலேயே காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தான் காதலித்த பெண்ணையே தன் நண்பனுக்கு காதலிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்து செட்டாக்கிவிட்டு விட, இருந்த காதலும் போய் நிஜ காதலி என்று நினைத்து காதலித்த நித்யாமேனின் காதலும் இழந்து நிற்கிறார். பின்பு என்ன ஆனது என்பதை சும்மா ஜாலியாய் சொல்லியிருக்கிறார்கள்.

கொத்து பரோட்டா -23/04/13

Image
இயக்குனர், நடிகர் பார்த்திபன் அழைத்திருந்தார். ஃபேஸ்புக்கில் ஆரம்பித்து தற்கால சினிமாவை வரை மிகச் சுவாரஸ்யமாய் பேசினார். பேச்சின் நடுவே அவருக்கு போன் வர, பேசி முடித்துவிட்டு, எங்கே விட்டேன் என்று நினைவுகளை தட்டிக் கொண்டிருந்த போது எங்கே விட்டேனோ அங்கே சரியாய் ஆரம்பித்தார். செம அப்சர்வேஷன். அவரின் கிறுக்கல்கள் கவிதைகளை ஆடியோ சிடியாய் வெளியிட்டிருக்கிறார். விரைவில் திரைப்படம் இயக்கவிருக்கிறார். சந்தடி சாக்கில் அவரிடம் ஒர் கதை சொன்னேன். நன்றாக இருப்பதாய் சொன்னார். மீண்டும் சந்தித்து பேசுவோம் என்றிருக்கிறார். காத்திருக்கிறேன். மனுஷனுக்கு எங்கேயிருந்துதான் விதவிதமான பொருட்கள் கிடைக்கிறதோ.. அவர் வீட்டில் இருந்த கடிகாரம் அட்டகாசம். சில பேரின் குரலில் இருக்கும் வசீகரம் அவர்கள் எது பேசினாலும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அதுவே சுவாரஸ்யமான விஷயங்களுடனான பார்திபனின் குரலில் என்றால் கேட்கவா வேண்டும். தனிமையான கார் பயணத்திலோ, அல்லது எதையாவது கிறுக்கிக் கொண்டிருக்கும் போதோ மெல்லியதாய் ஒர் இசையை ஒலிக்கவிட்டுக் கொண்டு வேலை செய்பவர்களுக்கு ராஜேஷ் வைத்யாவின் உணர்வுகளை நெகிழச் செய்யும் வீணையிசை மேலும் ...

உதயம் NH4

Image
 இந்தியாவின் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை NH4. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களை இணைக்கும் சாலை தான் கதைக்கு களன். இயக்குனர் வெற்றிமாறனின் தயாரிப்பு, கதை திரைக்கதையில், அவரது உதவியாளர் மணிமாறன் இயக்கி வந்திருக்கும் இந்த படம் ஒர் ரோடு மூவி டைப். பெரும்பாலான ரோட் மூவிக்கள் சுவாரஸ்யமான திரைக்கதையில்லாமல் சொதப்பிவிடுவது உண்டு. அதில் இது எந்த வகை? 

கெளரவம்

Image
 கெளரவக் கொலைகள் அதிலும் காதலுக்காக செய்யப்படும் கொலைகள் புதிதல்ல. ஜாதி எனும் அழுக்கு மனித மனங்களில் படர ஆரம்பித்த காலத்திலிருந்து இருக்கத்தான் செய்கிறது. தீண்டாமை ஒழிப்பு, அது இது என்று ஆயிரம் போராட்டங்கள் வந்தாலும் தீண்டாமையும், ஜாதியும்  இந்தக் காலத்திலும் ஒழியாமல் இருக்கிறது என்பதை எந்த ஊர், எந்த மாநிலம் என்று சொல்லாமல் கதை சொல்லியிருக்கிறார்கள்.ஊரின் பணக்கார வீட்டுப் பெண் அவ்வூரில் காலனியில் இருக்கும் இன்ஜினியர் பையனுடன் ஓடிப் போய்விட, அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை பையனின் கல்லூரித் தோழனான சிரிஷ் கண்டறிய முற்படுவதுதான் கதை.

தமிழ் சினிமா ரிப்போர்ட்- காலாண்டு ரிப்போர்ட் -2013

ஜனவரி  ஸ்டியோ க்ரீனின் வெளியீட்டில், லிங்குசாமியின் தயாரிப்பில், பிரபு சாலமனின் இயக்கத்தில் வருடக் கடைசியில் வெளிவந்து, ஹிட்டடித்த கும்கியோடு சென்ற வருடம் நிறைவுற்றது. ஆனால் அதே நிறுவனத்திடமிருந்து வெளியான படம் அலெக்ஸ் பாண்டியன். இவர்களின் விநியோக ஸ்டாடர்ஜி நன்றாக இருக்கும் படம் வெளிவருவதற்கு பத்து நாட்கள் முன்னமே ப்ரோமோவில் ஆரம்பித்து தியேட்டருக்கு செல்லும் வரை ஒரு முறையையும், படம் வீழ்ந்தாலும் ஜெயித்தாலும் ஒரே விதமான விளம்பரம் ஹைஃபை கொடுக்கும் முறையையும் பாலோ செய்வார்கள். இது சன் டிவியின் டெக்னிக். எல்லா படத்தையும் ரிலீசாகும் முதல் நாள் இரவே சூப்பர் ஹிட் விளம்பரப்படுத்தும் முறை. ஆனால் அதே போன்ற விளம்பரங்கள் எல்லாம் இருந்தும் அலெக்ஸ் பாண்டியன் பெரும் வீழ்ச்சியடைந்தது. அதே பொங்கலுக்கு வெளியான சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா, புத்தகம், சமர் ஆகிய படங்களில் சந்தானம், ராமநாராயணன் மட்டும் நிஜமாகவே ரெண்டாவது, மூணாவது லட்டு எல்லாம் தின்றார்கள். கிட்டத்தட்ட முப்பது கோடிக்கு மேல் வசூல் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். நான்கிலிருந்து ஐந்து கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் க.ல.தி.ஆசையா?. ச...

Swami RaRa

Image
 நிகிலுக்கும் அவனது இரண்டு நண்பர்களுக்கும் தொழில் பிக்பாக்கெட் அடிப்பது. டியூசன் டீச்சரும், ஜர்னலிஸ்டுமான சுவாதிக்கும் நிகிலுக்கும் சுவாதியின் வெஸ்பா ஸ்கூட்டரின்  மூலமாய் கனெக்‌ஷன் வருகிறது. அவளிடம் நிகில் தான் ஒரு சாப்ட்வேர் எஞினியர் என்று பொய் சொல்லி காதலிக்க ஆரம்பிக்கிறான். இதனிடையில் பத்மநாபசாமி கோயிலிருந்து திருடப்பட்ட ஒரு குட்டி விநாயகர் சிலை ஒன்று விற்கப்படுகிறது. சில ஆயிரங்களுக்கு விற்கப்பட்ட அந்த சிலையின் மதிப்பு பத்து கோடி. அந்த சிலை ஒரு கட்டத்தில் சுவாதியிடம் வந்து அதை லவுட்டி நிகில் விற்று விடுகிறார் ஐந்து லட்சத்திற்கு. சிலையை தேடி வந்த கும்பல் சுவாதியை தூக்குகிறது. எப்படி இந்த பிரச்சனையிலிருந்து நிகில் சுவாதியை தப்பிக்க வைத்து தன் காதலில் வெற்றி பெற்றான் என்பதுதான் கதை.