நான் வலைப்பூ 2006 அக்டோபர்ல.. மொத்தமா அந்த வருஷத்துல ஒரு 16 பதிவுதான் போட்டிருந்தேன். அதே போல 2007லேயும் மொத்தமே எட்டு பதிவுகள் தான். இப்படி சொங்கி போன லெவல்ல போயிட்டிருந்த என்னுடய வலைப்பயணம்,
திடீர்னு ஒரு நாள் 2008 ஆகஸ்ட் மாசம் மீண்டும் பதிவெழுதலாம்னு ஆரம்பிச்சேன். ஞாயமா சொல்லப் போனா இப்பத்தான் எழுதவே ஆரம்பிச்சேன்னா (அதுவும் மொக்கையா) அது மிகையாகாது. அந்த ஆகஸ்ட் மாசத்துக்கு அப்புறம் நோ லுக்கிங் பேக்.. சும்மா விறுவிறுன்னு ஜூரம் கணக்கா நம்ம பதிவுகளும் ஏறிச்சி, நம்ம பதிவ வந்து படிக்கிறவஙகளும் அதிகமாயிட்டேயிருந்தாங்க. நாளைக்கு நூறு ஹிட்ஸே வர்றாதுக்கு மூக்கால தண்ணி குடிக்கவேண்டியிருந்த காலத்தில, சும்மா 100, 200. 300ன்னு ஏறி மாசத்துக்கு 10, 000 ஹிட்ஸ், ஜஸ்ட் லைக் தட் ஒரு லட்சம் ஹிட்ஸ்செல்லாம் தாண்டியிருச்சு.
என்னடா இவன் இப்படி தற்பெருமை பேசுறானேன்னு நினைக்கிறீங்களா..? தற்பெருமை இல்லைங்க.. சந்தோஷம். இதுக்கெல்லாம் காரணம் யாரு.. நீங்க தான். வாசகர்கள், பதிவர்களாகிய நீஙக்தான்.
முதல்ல பின்னூட்டம் வாங்கிறதே குதிரை கொம்பா இருந்த காலத்துலேர்ந்து என்னை ஊக்குவிச்சவர், ஜூர்கேன் க்ருகேர், என்பவரும், ராஜ் என்கிற வாசகரும்தான். அதே சமயத்துல பின்னூட்டமிட்டவஙக கோவிச்சிக்க வேணாம். லிஸ்ட் போடணும்னா ஒரு பதிவு பத்தாது.
எல்லார் பதிவிலேயும் தொடர்பவர்கள்னு ஒண்ணு இருக்கும் நம்மதுல யாருமே இல்லைன்னு ஏங்கிட்டிருந்தப்போ.. முதல் தொடர்பவர் ஜூர்கேன் க்ருக்கர் என்பவர்தான். அதுக்கு அப்புறம் கடந்த எட்டு மாசத்துல 101 தொடர்பவர்களை பெற்றிருக்கிறேன். எனக்கிருக்கும் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. நாம எழுதறாதையும் 101 பேர் தொடர்ந்து படிக்கிறாங்க என்பது எவ்வளவு பெரிய விஷயம்.
இந்த பதிவுலகத்துக்கு வந்ததில இன்னொரு சந்தோஷமான விஷயம். நட்புகள். அருமையான நட்பு வட்டாரம் ஒன்று உருவாகிவிட்டது. காலேஜ் காலங்களில் எந்தவிதமான பெரிய எதிர்பார்புகளும் இல்லாம ஒரு இறுகிய நட்பு இருக்கும் பாருங்க அந்த மாதிரியான ஒரு நட்பு.
பதிவுலகில் என் முதல் நண்பராகிய லக்கிலுக், முரளிகண்ணன், உண்மைதமிழன், நர்சிம், கார்க்கி, ரமேஷ்வைத்யா, பரிசல், அக்னிபார்வை, அதிஷா, ஹாலிவுட் பாலா, ராஜ், நவநீதன், புருனோ, டோண்டு, தாமிரா, ஷண்முகப்பிரியன், குகன்,அத்திரி, ஸ்ரீ,அப்துல்லா, என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்,
இப்படி பட்ட நட்புகளையும், சந்தோஷங்களையும் கொடுத்து என்னை திக்கு முக்காட செய்யிற இந்த வலைப்பூ உலகத்துக்கும், உங்க எல்லாத்துக்கும் என்ன சொல்றதுன்னே தெரியல.. நன்றி அது இதுன்னு சொன்னா நெருக்கம் கெட்டுருமோன்னு தோணுது. With Moist Eyes – கேபிள் சஙக்ர்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
முதல் வாழ்த்துக்கு நன்றி வால்பையன்.
அது சரி...எழுதறதுக்கு மேட்டர் கிடைக்கலன்னா..உடனே இப்படி ஒரு மொக்க போட்டு்டனுமா....சமீபத்துலதானே இந்த மாதிரி ஒரு வாட்டி நெஞ்ச நக்கினீங்க
:))
நன்றி அத்திரி
மிக்க நன்றி வித்யா.. உஙக்ள் வாழ்த்துக்கும், கருத்துக்கும், வருகைக்கும்.
:))//
எண்ணன்னே இப்படி சொல்லீட்டீங்க.. ஏதோ லிஸ்டுல விட்டுறுச்சு அதுக்காக இப்படியா.. லிஸ்ட்ல போடாட்டா நீங்க என் நண்பர் இல்லையாணணே.. மிக்க நன்றிண்ணே..
இதுக்குதான் உங்கள மாதிரி ஆட்கள் வேணுங்கிறது.. (சரி.. சரி.. நாம தனியா பேசிப்போம்)
மிக்க நன்றி ஷண்முகப்பிரியன் சார்.. வினோத்கவுதம்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
/*என்னன்னு சொல்றது..? */
ஒன்னும் சொல்லவேண்டாம்.
சும்மா சும்மா இப்படி கண்ணீரும் கம்பலையுமா நிக்காம, அடிச்சு ஆடு ராசா....( சரக்கடிச்சுட்டு ஆட சொல்லவில்லை ராசா..) மற்ற வேலைகளை நாங்க பார்த்துப்போம். "வாழ்க எங்கள் அண்ணன் கேபிளார்."
***********************************
(இருங்க... இருங்க... எங்களோட பேரை வேணுமென்றே உட்டுட்டு சால்ஜாப்பா.... இருடி, நான் புடுங்குன ஒரு ஆணியை நீ உக்கார்ற இடத்திலே வைக்கிறேன்....)
ஹி..ஹி..ஹி..
//
மிக்க நன்றி நைனா..
//இருங்க... இருங்க... எங்களோட பேரை வேணுமென்றே உட்டுட்டு சால்ஜாப்பா.... இருடி, நான் புடுங்குன ஒரு ஆணியை நீ உக்கார்ற இடத்திலே வைக்கிறேன்....)//
ஆணிய வச்சீங்கண்ணா.. எப்படி பதிவெழுதறது..நைனா பார்த்து வலிக்குது..
அப்ப ஆதிமூலகிருஷ்ணன் அந்தப் பேரை வைக்கும்போது நீங்க சொல்லியிருக்கலாமே???
எனிவே.. வாழ்த்துகள். நீங்க சொன்ன எல்லா மேட்டருக்கும் கொண்டாட்டம் இருக்கு!!!
ஹாட் ஸ்பாட்-ல சானியா-மிர்சாவை ஏன் எடுத்துட்டீங்க??
எல்லாம் ஒரு சந்தோஷம் தான். லக்கி
நன்றி இராதா கிருஷ்ணன் சார்.
அப்படியா சிவக்குமார்.. தெரியல.. கண்டிப்பா பாக்கிறேன்.
நன்றி நர்சிம், உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும்..
அப்ப ஆதிமூலகிருஷ்ணன் அந்தப் பேரை வைக்கும்போது நீங்க சொல்லியிருக்கலாமே???
எனிவே.. வாழ்த்துகள். நீங்க சொன்ன எல்லா மேட்டருக்கும் கொண்டாட்டம் இருக்கு!!!//
அட ஆமாமில்ல.. தாமிரா என்கிற் ஆதி மூல கிருஷ்ணன் கிட்ட சொல்லியிருக்கலாம்தான் மறந்துட்டேன். கொண்டாட்டத்தை ஆரம்பிக்கலாம்..
சானியா முடிஞ்சி போச்சி.. புதுசு நல்லாயில்லையா அன்பு?
உங்களின் சூப்பர் டூப்பர் ஹிட்ஸ்-களுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்!
போன மாசம் (Feb 1st) உங்க ப்ளாகின் மொத்த Followers, 42. ஒன்னரை மாசத்துல.. 101! :-)
பின்னீட்டீங்க..! சீக்கிரம் 1001 ஆகட்டும்.
சானியா முடிஞ்சி போச்சி.. புதுசு நல்லாயில்லையா அன்பு?\\\
நன்றாகத்தான் இருக்கிறது அண்ணா..இருந்தாலும் ஓவர் கிளாரமா இருக்கிறது
ரொம்ப சந்தோசம். :))
தொடந்து எழுது கண்ணு. . . .
வாழ்த்துக்கள் பா. . ..
வரட்டா. . .
ரிப்பீட்டேய்
நன்றி.. அனானி.. யாருங்க நீங்க.. கொஞ்சம் சொன்னீங்கண்ணா நல்லாருக்கும்.. மெயில் பண்ணுங்க தல..
அப்படின்னா சொல்றீஙக்.. யோசிப்போம்.. லக்கி நன்றி