Thottal Thodarum

Nov 23, 2009

Kurbaan – Hindi Film Review

kurbaan

முழுக்க, முழுக்க ஹாலிவுட் பாணி பாதிப்பில் எடுத்திருகிறார்கள். நடிகர்கள் மட்டும் ஹிந்தியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  சாயிப் ஒரு பி.எச்டி. லெக்சரர், அவரும் கரீனாவும் ஒரே காலேஜில் ப்ரொபஸராய் வேலையில் இருக்க, காதல் வசப்படுகிறார்கள். வீட்டில் சொல்லி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அந்த சமயத்தில் கரினாவுக்கு நியூயார்க்கின் ஒரு யூனிவர்சிட்டியில் வேலை வாய்ப்பு வர, அவருக்காக தன் வேலையை துறந்து கரினாவுடன் அமெரிக்காவுக்கு போகிறார் சாயிப். வேலைக்கு போய் சேர்ந்ததும், அங்கேயே இந்தியர்கள் வசிக்கும் ஏரியாவில் போய் ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு செட்டில் ஆக, பக்கத்திலிருக்கும் ஓம்பூரியின் குடும்பத்திலிருந்து, கரினாவுக்கு பிரச்சனை ஆரம்பிக்கிறது.
kareena-hot-bollyupdatescom-kurbaan-moviestills-10

ஓம்பூரியின் வீட்டில் இருக்கும் மருமகள் ஒருத்தி தன்னை காப்பாற்றும் படி சொல்ல, அவளின் கணவன் அடிப்பதை பார்த்த கரீனா அவள் கொடுத்த ஒரு இந்திய முஸ்லீம் இளைஞன் வேலை செய்யும் நியூஸ் சேனலுக்கு போகிறாள்.  அடுத்த நாளிலிருந்து அவளை காணாமல் இருக்க, அவளை தேடி வீட்டிற்குள் திருட்டுத்தனமாய் நுழைய, அங்கே அவள் காணும் காட்சி, அதிர்ச்சியின் உச்சம்,  அவளின் கணவனே ஒரு தீவிரவாதி என்பதுதான். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.
kareena-hot-bollyupdatescom-kurbaan-moviestills-09

ஆரம்பத்தில் சாயிப், கரீனாவின் காதல் காட்சிகள் படு காமெடி, அவ்வளவு மெச்சூர்டான ஆட்களிடையே ஏற்படும் காதலை ஏன் இவ்வளவு சிறுபிள்ளைதனமான காட்சிகள் என்றே புரியவில்லை. ஆரம்ப காட்சியிலேயே அவர்கள் இருவரும் காதலர்கள் என்று சொல்லியிருக்கலாமே. ஏன் என்றால் அவர்களீடையே உள்ள காதல் தான் பட்த்தின் உயிர்நாடி என்று இயக்குனர் நினைத்து அந்த காட்சிகளை வைத்திருந்தால். .. சாரி இயக்குனரே. 

பக்கத்து வீட்டில் உள்ள முஸ்லீம் குடும்பம் மொத்தமுமே, தீவிரவாதிகளாய் இருப்பதும், அதற்கான எந்த விதமான முகாந்திரமும் இல்லாத சாதாரண குடும்பமாய் அலைவதும், ப்ளைட்டுக்கு சூசைட் பாமரை அனுப்பி ப்ளாஸ்ட் செய்ததும், உடனடியாய் அடுத்த விஷயத்துக்கு  ரெடியாவதும், சொல்வதற்கும், படிப்பதற்கும் இண்ட்ரஸ்டாய் இருப்பதை போல் இருந்தாலும், படம் ஆமை  ஸ்லோ. அவர்கள் மிகப்பெரிய த்ரில்லிங் தருணம் என்று நினைத்தது எடுத்தது  எல்லாம் புஸ்ஸாகி போய் விடுகிறது. kareena-hot-bollyupdatescom-kurbaan-moviestills-03 ஒரு பக்கம் கணவனே தீவிரவாதியாய் ரயில்வே ஸ்டேஷனில் பாம் வைக்க அலைவதும், இன்னொரு பக்கம் பத்திரிக்கையாளரான விவோக் ஓபராய் அமெரிக்க முஸ்லிமாய் அதை முறியடிக்க அவர்களுடனே பழகி ஒரு தீவிரவாதியாக மாறி, கரினாவை காப்பாற்ற முயல்வதும், போலீஸுக்கு தகவல் சொல்லி ப்ளாஸ்டை தடுக்க முயலும் நலல் முஸ்லிமாக் வருகிறார். பாவம் சும்மா அங்கும் இங்கும் ஓடுவதை தவிர வேறு ஏது வேலையில்லை.

முஸ்லிம் இளைஞனை திருமணம் செய்த ஹிந்துப் பெண்ணான  கரீனாவாவது ஏதாவது செய்து அங்கிருந்து தப்பித்து விடுவார் என்றால் அதுவும் இல்லை. சாயிப்பால் கர்பமாகி, ஆவூவென்றால் அழுகிறார். கடைசி காட்சியில் அழுகிறார். படு சொதப்பலான கேரக்டர்.

அதே போல சாயிப்பின் கேரக்டரும், ஒன்று நல்வனாக காட்டவேண்டும், அல்லது கெட்டவனாக காட்ட வேண்டும், தன் மனைவி கர்பமாய் இருப்பதால், அவளின் மேல் காதல் கொண்டிருக்கும் நல்ல கணவனாகவும், இன்னொரு பக்கம் சதக், சதக், டுமீல்,டுமில் என்று குத்தியும், சுட்டும் கொல்லும் வில்லனாகவும் அவரை பார்க்க, ஒரு எமோஷன் எழவும் எழ மாட்டேன் என்கிறது. படத்தில் சர்சைக்குண்டான விஷயங்கள் நிறைய இருக்க, கரினாவின் வெறும் முதுகை போட்டு பிரட்டி எடுத்த அரசியல்வாதிகளே, நீங்கள் செய்த கலாட்டாவை  பார்த்துவிட்டு படத்துக்கு போன ஆட்கள் நொந்து போய் தியேட்டரில்  கரீனாவின்  முன் பக்கத்தை சாயிப் மட்டுமே பாக்கிறத்துக்கு நாங் எதுக்குடா தியேட்டருக்கு வரணும் என்ற கூச்சல் உங்களுக்கு கேட்கலியா.?

படம் பூராவும் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாய் அலைவதற்கான காரணங்களை, இந்தியா பற்றி சொல்லாமல் ஆப்கானிஸ்தான், ஈரான் , ஈராக் என்று உட்டாலக்கடி அடிப்பது போல் கிரோன் கர் வசனம் பேசுவதும், அதை எதிர்பதாக விவேக், மற்றும் கரினா பேசும் வசனங்கள் டெம்ப்ளேட் டயலாக்குகள். வசனம் அனுராக் காஷ்யப்.
kareena-hot-bollyupdatescom-kurbaan-moviestills-05 அவன் ஆறு வயது குழந்தையை கொன்னான், அதனால நான் அமெரிக்கா காரன் நாட்டை அழிக்கணும்னு அல்லாவின் ஆணை என்று அடிக்கடி சொல்லும், கிரோன், அதை எதிர்க்கும் மருமகளை கொலை செய்ததை பெரிஅய் விஷயமாய் எடுத்துக் கொள்ளாத கிரோன் கேரக்டரும், சொதப்பல். என்ன ஒரு வித்யாசமான விஷயம் என்னவென்றால் பெண்களையும் தீவிரவாதிகளாய் காட்டியிருப்பதுதான்.

அதே போல் சும்மாவாச்சும் நானும் அமெரிக்க நடவடிககைகளை எதிர்க்கிறவன் என்று சொன்னதாலேயே விவேக்கை வா வீட்டிற்கு சாப்பிட போகலாம் என்பதுபோல் பாம் வைக்க சேர்த்து கொள்வதும்,  தீவிரவாதிகளை விடுதலை புலிகள் போல சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள வைத்திருப்பதும்,  ஓடுகிறா ரயிலில் ஆளுக்கு ஆள் சுட்டுக் கொள்வதும், ரோட்டில் சேஸிங்கில் மிக ஈஸியாய் அமெரிக்க போலீஸ் இடமிருந்து தப்பிப்பதும்  படு காமெடி.
kareena-hot-bollyupdatescom-kurbaan-moviestills-08

படத்தின் விளம்பரத்தில் எல்லாம் ஒரு வயலண்ட் லவ் ஸ்டோரியாய் பில்டப் செய்துவிட்டு, மிக தீவிரமாய் தீவிரவாதிகளை பற்றி எடுத்திருக்கிறார்கள். பல இடங்களில் தீவிரவாதத்தை ஞாயப்படுத்தியிருக்கிறார்கள்.  குரானில் எங்கேயும் தீவிரவாதத்தை ஆதரித்து, சொன்னதில்லை என்று விவேக் ஓபராய் மூலமாய் சொன்னாலும், திவிர பண்டமெண்டலிஸ்டான ஓம்பூரி. அல்லாவின் ஆணைப்படி தான் எல்லாம் நடக்கிறது என்றே சொகிறார். அதையே அவரது மனைவியும் வழிமொழிகிறார்.  என்.ஆர்.ஐ மார்கெட்டை மட்டுமே இலக்காய் வைத்துக் கொண்டு எழுதப்பட்ட, எடுக்கப்பட்ட படமாய்தான் தோன்றுகிறது.

அருமையான எடிட்டிங், ஒளிப்பதிவு, தரமான மேக்கிங் எல்லாம்  இருந்தும், காதல் கதையாகவும் இல்லாமல்,  த்ரில்லராகவும் இல்லாமல், தீவிரவாதிகளை பற்றியும் இல்லாமல்,  இலக்கில்லாத, ரெண்டும் கெட்டான் திரைக்கதையாலும்,  தெளிவான கேரக்டரைஷேசன் இல்லாததாலும்,  ஒரு நல்ல நாட்டை வேஸ்ட் செய்து விட்டார்கள்.

Kurbaan -  Aimless

Technorati Tags: ,



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

44 comments:

shabi said...

me the 1st

shabi said...

படம் உங்கள பாடா படுththiருச்சா

Romeoboy said...

ஓவர் பில்ட் அப் உடம்புக்கு ஆகாதுன்னு இவங்களுக்கு தெரியாது போல. அப்ப படம் ஊத்திகிச்சுன்னு சொல்லுங்க .

பேரு ஸ்டான்லீ ங்க.. said...

ஹைய்யா... அப்போ படம் ஊத்திக்கிச்சா.. சூப்பர்.
ரொம்ப சீன் போட்டானுங்க... ஊத்தனும்ன்றதுதான் என் எதிர்பார்ப்பு.
உங்களுக்கு 4 வதாக பின்னூட்டம் போடா இடம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

Kabi said...

Good review, decided not to watch the movie...

Cable sir, please continue... "isaiyenum raaja vellam"

moe said...

it's getting repetitive to see the "me the first" comments. Joke is dead. so drop it.

nandri nanbargalae..

Starjan (ஸ்டார்ஜன்) said...

உள்ளேன் ஐயா

இராகவன் நைஜிரியா said...

aimless - மொத்த படத்தைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லிட்டீங்க..

பிரபாகர் said...

அண்ணே, அப்போ இந்த படத்த கழட்டி விட்டிடுவோம்! ரொம்ப நல்ல்லா அலசியோருக்கீங்க!

பிரபாகர்.

Nat Sriram said...

நீங்க சொல்றத பார்த்தா நியுயார்க்னு வெந்தும் வேகாததுமா ஒரு அசுர மொக்கை படம் வந்துது. அந்த டைப்னு நெனைக்கறேன்.

Cable சங்கர் said...

/நீங்க சொல்றத பார்த்தா நியுயார்க்னு வெந்தும் வேகாததுமா ஒரு அசுர மொக்கை படம் வந்துது. அந்த டைப்னு நெனைக்கறேன்.//

அது ஒர் அளவுக்கு நன்றாக செய்யப்பட்ட ஸ்கிரிப்ட்.. http://cablesankar.blogspot.com/2009/07/newyork-hindi-film-review.html

மேவி... said...

அப்ப கூடுத்த காசுக்கு கரீனா ஒன்னும் காட்டவில்லை ன்னு சொல்லுங்க ......

சலிப் க்கு ஓசி ல ஒரு ஹனி மூன் flim shooting என்ற பெயரில் போயிட்டு வந்து இருக்கிறார் என்று தெரிகிறது......

எல்லாம் மணிரத்தினம் பண்ணின வேளை..... இப்ப அவன் அவன் கதை இல்லாமல் கிளம்பிட்டாங்க

அன்பேசிவம் said...

அப்ப வடை போச்சா....அவ்வ்வ்....

புலவன் புலிகேசி said...

தல அப்ப படம் பாக்க வேணாம்னு சொல்றீங்க...குர்பானுக்கு குட்பை...

Raju said...

என்னா தல, திரை விமர்சனத்துக்கு கூட மைனஸ் ஓட்டு..!

thiyaa said...

தல அப்ப படம் பாக்க வேணாம்னு சொல்றீங்க

Cable சங்கர் said...

/என்னா தல, திரை விமர்சனத்துக்கு கூட மைனஸ் ஓட்டு..!
//
நான் வளர்கிறேனே.. ராஜு..

மணிஜி said...

ooooooo.kkkkkk

தராசு said...

அடடா, வடை போச்சே.

தமிழ்ல வந்திருந்தா, சிறுபான்மையினரின் அவமதிப்பு, இந்துத்துவாவின் அகங்காரம், திரையுலகத்தினரின் வக்கிர பார்வை, கதாசிரியர்களின் மனப் பிறழ்வு, மத வெறியர்களின் வெறியாட்டம்னு உன்னைப் போல் ஒருவன் மாதிரி கொஞ்ச நாள் கும்மி அடிச்சிருக்கலாம்.

Beski said...

நன்றி.
இதையே கமல் தமிழில் ரீமேக் பண்ணினால் பிச்சுக்கிட்டு போகும் என நம்பலாமா?

pudugaithendral said...

அதீதம்- இது ஹிந்தி சினிமாவில் நிறைய்ய. சில சமயம் அதுவே அவர்களுக்கு பாதகமாகிடுது. நான் பாக்க வேணாம்னு முடிவு செஞ்சது நல்லாதாச்சு.

மீ த வெயிட்டிங் ஃபார் “பா” :))

Ashok D said...

விமர்சனத்தையும் கரெக்டா தான் தொட்டுயிருக்கீங்க... :)

ramtirupur said...

விமர்சனம்- பிரிச்சு மேஞ்சுட்டிங்க போங்க..

Unknown said...

ஓவரா சீன் போட்ற படமெல்லாம் இப்டி தான் ஆகுது,,, வாட் டு டூ...

மதுரகாரைங்க said...

Film is watchable... not boring . BGM , dialogues are good one (some of them inspired from ARRahman).Ofcourse this movie mixed of Fanaa and Newyork but they presented in a good way. Thank GOD this movie made in Hindi and escaped from tamil bloggers shit.

பித்தன் said...

ஊத்துன படத்தையும் முழுசாப் பாக்குறீங்க..... கலக்கல் தல...

செ.சரவணக்குமார் said...

ரைட்டு தல.

ஜெட்லி... said...

எனக்கு ஹிந்தி தெரியாது அதனால ஹிந்தி படமெல்லாம்
தப்பிச்சுது.... நல்ல விமர்சனம் தலைவரே...

பின்னோக்கி said...

arlington road படத்துலயிருந்து சுட்ட மாதிரி இருக்கு

விக்னேஷ்வரி said...

படத்தின் விளம்பரத்தில் எல்லாம் ஒரு வயலண்ட் லவ் ஸ்டோரியாய் பில்டப் செய்துவிட்டு, மிக தீவிரமாய் தீவிரவாதிகளை பற்றி எடுத்திருக்கிறார்கள். //
நிஜமாவே விளம்பரம் பார்த்திட்டு நான் படத்துக்குப் போகணும்னு நினைச்சேன். காப்பாத்திட்டீங்க கேபிள் சார்.

சிவகுமார் said...

Escape .................

சிவகுமார் said...

Escape .................

ஊடகன் said...

விமர்சனத்திற்கு நன்றி...........

Cable சங்கர் said...

@shaabi
அட ஆமாங்க.. நன்றி

@ரோமிபாய்
ஆமாம்

@பேரு ஸ்டான்லிங்க
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

@கபி
நிச்சயம்.. கொஞச்ம் வேலை இருக்கு அதனாலதான் நிறுத்தி வைத்திருக்கிறேன்.

@மோ
:(

@ஸ்டார்ஜான்
நன்றி

Cable சங்கர் said...

@நைஜீரியா இராகவன்
வேற என்ன சொல்றதுன்னே தெரியல.. அதுனால்தான்

2பிரபாகர்
நன்றி



@

Cable சங்கர் said...

@டம்பிமேவி
அட ஆமாங்க அந்த காண்டு வேற..

எதுக்கு மணிரத்னத்தை வம்புக்கு இழுக்கிறீங்க..?

@முரளிகுமார் பத்மநாபன்
வருத்தபடாதீங்க.. ஊசி போன வடை
@புலவன்புலிகேசி
ஆமாம்

Cable சங்கர் said...

@தியாவின் பேனா
ஆமாம்

@தண்டோரா
நன்றி

@தராசு
இதிலேர்ந்து தெரிஞ்சிக்கங்க.. நம்ம ஆட்களுடய காழ்புணர்ச்சியும், ஒன்சைட் பேச்சுககளூம்
@புதுகை தென்ற்ல
ஆமாம்

@அதி பிரதாபன்
:)

Cable சங்கர் said...

@அசோக்
நன்றி

@ராம்திருப்பூர்
நன்றி

2பேநா மூடி
:(

@அனுப்பனடி பையன்
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ரசனை

@பித்தன்
உள்ளே போயாச்சு வேற வழி

@செ.சரவணக்குமார்
நன்றி

@ஜெட்லி
நன்றி

@பின்னோக்கி
ஆமாம் தலைவரே.. கொஞ்சம் அப்படித்தான் இருக்கு.

@விக்னேஷ்வரி
போயிராதீங்க

@சிவகுஅமர்
நன்றி

@ஊடகன்
நன்றி

பூங்குன்றன்.வே said...

அண்ணா..என்னுடைய இந்த பதிவை பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.நான் சொல்வது சரி என்றால் என் அண்ணன் என்கிற முறையிலும், மூத்த பிரபலபதிவர்
என்கிற முறையிலும் எனக்கு உங்களின் ஆதரவு தாருங்கள்.. நன்றியுடன், உங்கள் அன்பு தம்பி, பூங்குன்றன்.

பூங்குன்றன்.வே said...

மன்னிக்கணும்..லிங்க் அனுப்ப மறந்துட்டேன்.
http://poongundran2010.blogspot.com/2009/11/blog-post_24.html

ஜியா said...

இந்த படத்தோட ரிவிவ நான் நேத்தே எதிர்பாத்தேன்... நான் முந்தாநாள் தான் படம் பாத்தேன். சூப்பர் ரிவிவ்... ஆனா, மேக்கிங் செம ரிச்சா பண்ணிருக்காங்க... நீங்க சொன்ன மாதிரி எக்கச்சக்க லாஜிக்கல் சொதப்பல்..

Thamira said...

விமர்சனமே இவ்வளவு கொளப்பமா இருக்குதே.. அப்ப படம் எப்படி இருக்கும்.? ஹிஹி..

வஜ்ரா said...

பாலிவுட்டை என்னைக்கு தாவூத் விலைக்கு வாங்கினானோ அன்னிக்கே அது வெளங்காம போயிடுச்சு.

பிச்சைக்காரனுக்கு லாட்டரி அடிச்சா தங்கத்துல திருவோடு செய்வான். அது மாதிரி தான் தீவிராவாதிகள் கிட்ட பணம் வாங்கி படம் பண்ணுனா தீவிரவாதி தான் படத்துல ஹீரோவா வருவான்.

Unknown said...

Good review sankar ;))