Thottal Thodarum

Apr 2, 2010

Hurt Locker -2008

hl1 வாழ்வின் உன்னதமே வாழ்வதில் தான். ஆனால் தன் உயிரை பணயம் வைத்துத்தான் வாழ்க்கையே வாழந்து கொண்டிருப்பவர்களை பற்றிய படம். ஆறு ஆஸ்காரையும், 73 மற்ற விருதுகளையும், 46க்கும் மேற்பட்ட விழாவில் பரிந்துரைக்கப்பட்ட படம். ஜேம்ஸ்கேமரூனின் அவதாரை ஆஸ்காரில் ஓவர் டேக் செய்த படம் என்று பல பெருமைகள் உண்டு.
hl2 ஜான் இராக்கில் நடக்கும் போரில் பாம் ஸ்குவாடில் சேருகிறான். அவனுடய டீமில் இன்னும் இரண்டு பேர். பாம்களை செயலிழக்க செய்வதில் விற்பனன். பயமில்லாதவன். ரிஸ்கெடுக்க தயங்காதவன். அரகண்ட் என்று பெயரெடுத்தவன். இன்னும் இருக்கும் 30 சொச்ச நாட்களுக்காக இந்த பட்டாலியனோடு சேர்ந்திருக்கும் ஜான் சந்திக்கும் பிரச்சனைகள், பாம்கள், அதன் பாதிப்புகள் என்று படம் நெடுக நம் இதயத் துடிப்பை நமக்கே கேட்கவைக்கிறார்கள்.
hl3 படத்தின் ஆர்ம்ப காட்சியில் ரிமோட் பாம் டி ஆக்டிவேட்ட்ர் வண்டி ஒடைந்து விழுந்ததால், ஒரு பாம் ஸ்குவாட் ஆள் உடைகளை மாட்டிக் கொண்டு அதை சரி செய்ய கிளம்ப, அவர் நடக்கும் ஒவ்வொரு அடியையும் பற்றி பேசியபடி அவர் பாமுக்கு அருகில் போய் நின்று அந்த வண்டியை சரி செய்து பாமை செயலிழக்க செய்யும் இடத்தில் வைத்துவிட்டு திரும்ப, சுற்றி இருப்பவர்களை கவனித்து கொண்டிருக்கும் ஒரு அதிகாரியின் கண்ணில் ஒருவன் அசந்தர்ப்பமாய் பட்டுவிட, பாம் ஸ்குவாட் ஆளை எச்சரித்து குண்டு இருக்கும் ஏரியாவை தாண்ட உடனடி உத்தரவுகள் கொடுக்கப்பட்டு அவன் அந்த உடையின் கனத்தோடு ஓட முடியாமல் ஓடிவர, அசந்தர்ப்பமாய் கண்ணில் பட்ட ஆளை ராணுவம் சுற்றி வளைக்க, அவன் கையில் இருக்கும் செல்போனில் ஒரு பட்டனை அழுத்த.. ப்ப்ப்பூபூம்.
hl4 ஒரு வெடிகுண்டு வெடிக்கும் போது கிடைக்கும் காட்சியாகட்டும், மனதினுள் ஏற்படும் அதிர்வுகளாகட்டும் அத்துனை அதிர்வுகளையும் நம் கண் முன்னே பதிவிட்டிருக்கிறார் இயக்குனர். அதே போல் ஈராக்கிய லோக்கல் கும்பலிடம் பாலைவனத்தில் மாட்டிக் கொண்டு உயிருக்கும் போராடும் காட்சியும், ஒரு ப்ரொபசரை உளவாளி என்ற் சந்தேகித்து அலையும் காட்சியும். மனித வெடிகுண்டான ஒருவனின் குண்டை செயலிழக்க முடியாமல் அவனை சிதறசெய்வதும். அதற்கு முன் அவன் தன்னுயிரை காக்க கெஞ்சும் காட்சியும் மனதை ரணம் செய்யும் காட்சி.
THE HURT LOCKER படத்தின் ஒளிப்பதிவுக்காகவே இன்னொரு முறை பார்க்க வேண்டும். அவ்வளவு இயல்பான ஒளிப்பதிவு. கூடவே அலைகிறது. ரெட் ஒன் கேமராவில் படமாக்க படம். சுமார் ஒன்பது கேமராக்கள் பயன் படுத்தினார்கள் என்று கேள்வி. அதே போல் இப்ப்டத்தின் எடிட்டிங்கை பற்றி சொல்லியே ஆகவேண்டும் அவ்வளவு அற்புதம். நான் ஏற்கனவே சொன்ன ஆரம்ப காட்சியாகட்டும் அதன்பிறகு நடக்கு ஒவ்வொரு பாம் செயலிழப்பு காட்சியாகட்டும் எடிட்டர்களின் பணி அட்டகாசம். அதை நீங்கள் படம் பார்க்கும் போது உங்களது ரத்தத்தில் அட்ரினல் ஏறும் போது உணர்வீர்கள். நிச்சயம் ஆஸ்கர் பர்பாமென்ஸ்தான்.
THE HURT LOCKER அதே போல ஒரு பெண் இயக்குனாராய் இருந்து கொண்டும் போரின் வலிகளையும், இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையே வாழ பழகிப்போன இராக்கியர்களையும், அவர்களின் கோபத்தையும், ஒரு டிவிடி விற்கும் சிறுவன் ஒருவன் அமெரிக்க வீரனுடன் பழகியதன் காரணமாய் கொல்லப்படுவதையும், இராணுவத்தினரின் இயலாமையும், அவர்களது உயிர் பயத்தையும், மிக நுணுக்கமாய் வெளிப்படுத்தியிருக்கிறார் காத்ரீன் பிக்ளோ. ஆஸ்கர் கொடுத்தது செல்லும்.

Hurt Locker - வாழ்க்கை.



கேபிள் சங்கர்
Post a Comment

27 comments:

Arun said...

Thalla,

Iam the first. Trying for this for long time.

பிரபாகர் said...

இதுவரை பார்க்கவில்லை அண்ணா, இப்படி ஒரு அருமையான விமர்சனத்துக்குப்பின் தவற விடுவோமா என்ன?

நன்றிங்கண்ணா...

பிரபாகர்.

Sukumar said...

தல... டி.வி.டி ல வந்துடுச்சா.....

shortfilmindia.com said...

@sukumar
அது வந்து வருஷமாச்சு.. நான்பார்த்தே ஆறு மாசம் ஆச்சு

Unknown said...

பாத்துட்டு சொல்றேன் அண்ணா, ஆமா, பையா பார்க்க போகலியா?

Sukumar said...

// அது வந்து வருஷமாச்சு.. நான்பார்த்தே ஆறு மாசம் ஆச்சு //
ரைட்டு தல... பாத்துருவோம்..

Prathap Kumar S. said...

பார்த்தாச்சுண்ணே...அற்புதமான படம்...

வெண்பூ said...

அருமையான படம் கேபிள்.. உங்கள் விமர்சனமும் வழக்கம் போல அருமை..

//
சிறுவன் ஒருவன் அமெரிக்க வீரனுடன் பழகியதன் காரணமாய் கொல்லப்படுவதையும்,
//
என் புரிதல் என்னவென்றால், அந்த சிறுவன் டிவிடி விற்கும் சிறுவன் அல்ல, ஆனால் ஹீரோ எல்லா இராக்கிய சிறுவர்களும் ஒரே மாதிரி இருப்பதால் அவனை டிவிடி விற்கும் சிறுவன் என்று நினைக்கிறான். மறுநாள் அதே சிறுவன் டிவிடி விற்க வருவான்.

அதேபோல் சிறுவன் கொல்லப்படுவது அமெரிக்கர்களுடன் பழகியதால் அல்ல, சூரியன் படத்தில் காட்டப்பட்டது போல் ஒரு சிறுவ்னைக் கொன்று அவன் உடலுக்குள் பாம் வைத்து, அதை டிஸ்போஸ் செய்ய அமெரிக்கர்கள் வரும்போது வெடிக்க வைக்கும் திட்டம்.. ஹை... ஹாலிவுட்ல கூட நம்ம படத்துல இருந்து சுட்டிருக்காங்க.. :)

எறும்பு said...

Present sir..

appadiye enaku oru DVD parcel...

Paleo God said...

பார்த்துட்டேன் ஜி.

அப்பாடி இப்பத்தான் நான் பார்த்த ஒரு படத்துக்கு உங்க விமர்சனம்..:)

அருமையான படம், பாம் செயலிழக்க வைக்கும் காட்சிகள் மிக அருமை.

GEETHA ACHAL said...

படத்தினை பார்த்திடுவோம்...நன்றி..

ILLUMINATI said...

அருமையான விமர்சனம்,ஜஸ்ட் அஸ் யூசுவல் . :)

Selvamani said...

@ வெண்பூ

அந்த சிறுவன் டிவிடி விற்கும் சிறுவன் அல்ல, ஆனால் ஹீரோ எல்லா இராக்கிய சிறுவர்களும் ஒரே மாதிரி இருப்பதால் அவனை டிவிடி விற்கும் சிறுவன் என்று நினைக்கிறான். மறுநாள் அதே சிறுவன் டிவிடி விற்க வருவான்.

he is the boy which the hero meets and play football. The same.

Nice Movie to see..
Thanks

உண்மைத்தமிழன் said...

டிவிடி ப்ளீஸ்..!

Kumky said...

பாம்...ப்ளீஸ்..

Unknown said...

கதாநாயகன் வெடிபொருட்களைச் செயலிழக்க எடுக்கும் நடவடிக்கைகள் அல்லது காட்டும் வித்தைகள் அர்ஜூன் விஜயகாந்த் வகையறா மொக்கைகளைவிட மரண மொக்கை. சில காட்சிகள்தவிர மற்றக் காட்சிகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு அந்தமாதிரிக் குண்டி கழுவிவிடப்படுகிறது. இந்தப் படத்துக்குத்தான் முதன் முதலாக ஒரு பெண் இயக்குனருக்கு ஆஸ்கர் கொடுத்தார்கள் என்பதுதான் பெண் படைப்பாளிகளுக்கும் அவர்களின் படைப்புகளுக்கும் ஆஸ்கர் செய்த மோசமான அவமதிப்பு.தாவீதும் கோலியத்தும் மோதும்போது தாவீது வெல்லவே பலரும் நினைப்போம். அப்படிக் கிடைத்த ஆஸ்கர் இது. தாவீது கோலியத் மோதல் கிளப்பிய புழுதியில் ப்ரீசியஸ், அப் இன் த எயர் போன்ற படங்கள் மறைக்கப்பட்டது கொடுமை. முக்கியமாக ப்ரீசியஸுக்கு இன்னும் கொஞ்ச விருதுகள் கிடைத்திருக்கவேண்டும். மொனீக் சொன்னார் ‘அரசியல் பண்ணாமல் திறமைக்கு மதிப்பளித்து எனக்கு இந்த விருது தந்ததுக்கு நன்றி' என்று, சிறந்த துணை நடிகை விருது பெற்றபோது. ஆனால் இந்தப் படத்துக்குக் கிடைத்த விருதுகளில் எடிட்டிங் தவிர மற்றவையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நல்ல வேளை அமெரிக்கக் குண்டிகளைத் துடைத்த காரணத்தால் கலை, ஒளிப்பதிவு, இசை , சிறந்த நடிகர், நடிகை (நடிகையா??) என்று எல்லாவற்றையும் அள்ளிக் கொடுக்காமல் விட்டார்களே.

Unknown said...

அதுவும் உங்கள் பதிவில் உள்ள படத்தில் ஆறு ஷெல்களை ஒன்றாக இழுக்கிறாரே மனிதர் அதைப் போல் மிகைப்படுத்தப்பட்ட காட்சி இல்லை என்று இங்கே ஒரு பத்திரிகையில் இராணுவ வீரர் ஒருவர் சொல்லியிருக்கிறார்

shareking said...

நாங்க chennaiku புதுசு இங்க இருக்கற மெஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்க நா ராயபேட்டைல இருகேன் இந்த ஏரியா ல நல்ல மெஸ் ஒன்னு சொல்லுங்க

மணிஜி said...

/Written by Kiruthikan Kumarasamy
6:54 PM
கதாநாயகன் வெடிபொருட்களைச் செயலிழக்க எடுக்கும் நடவடிக்கைகள் அல்லது காட்டும் வித்தைகள் அர்ஜூன் விஜயகாந்த் வகையறா மொக்கைகளைவிட மரண மொக்கை. சில காட்சிகள்தவிர மற்றக் காட்சிகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு அந்தமாதிரிக் குண்டி கழுவிவிடப்படுகிறது. இந்தப் படத்துக்குத்தான் முதன் முதலாக ஒரு பெண் இயக்குனருக்கு ஆஸ்கர் கொடுத்தார்கள் என்பதுதான் பெண் படைப்பாளிகளுக்கும் அவர்களின் படைப்புகளுக்கும் ஆஸ்கர் செய்த மோசமான அவமதிப்பு.தாவீதும் கோலியத்தும் மோதும்போது தாவீது வெல்லவே பலரும் நினைப்போம். அப்படிக் கிடைத்த ஆஸ்கர் இது. தாவீது கோலியத் மோதல் கிளப்பிய புழுதியில் ப்ரீசியஸ், அப் இன் த எயர் போன்ற படங்கள் மறைக்கப்பட்டது கொடுமை. முக்கியமாக ப்ரீசியஸுக்கு இன்னும் கொஞ்ச விருதுகள் கிடைத்திருக்கவேண்டும். மொனீக் சொன்னார் ‘அரசியல் பண்ணாமல் திறமைக்கு மதிப்பளித்து எனக்கு இந்த விருது தந்ததுக்கு நன்றி' என்று, சிறந்த துணை நடிகை விருது பெற்றபோது. ஆனால் இந்தப் படத்துக்குக் கிடைத்த விருதுகளில் எடிட்டிங் தவிர மற்றவையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நல்ல வேளை அமெரிக்கக் குண்டிகளைத் துடைத்த காரணத்தால் கலை, ஒளிப்பதிவு, இசை , சிறந்த நடிகர், நடி///


சங்கத்தலைவர் பதவிக்கு வர்றீங்களா?

shortfilmindia.com said...

@arum
நன்றி

@பிரபாகர்
நிச்சய்ம்பாருங்க தலைவரே

@கே.ஆர்.பி.செந்தில்
வருது..

கேபிள் சஙக்ர்

shortfilmindia.com said...

@நாஞ்சில் பிரதாப்
நன்றி

@வெண்பூ
இல்லை வெண்பூ. அவனுக்கு தெரியும் செத்த பையன் டிவிடி வித்த பையந்தானு. அவனை பற்றி ஏதும் கவலையில்லாமல் மீண்டும் டிவிடி விற்கும் கடைக்காரனிடம் விசாரணைக்காகத்தான் அந்த பைய்ன் எங்கே என்று கேட்பான்.

அமெரிக்கர்களுடன் பழகியதற்கான காரணத்தினால்தான் அவனை ஒரு கருவியாக பயன்படுத்த அவனை கொல்கிறார்கள் என்பது என் புரிதல்..

ஹாலிவுட்டில் சமீப காலமாய் நிறைய செண்டிமெண்ட் சீன்கள் தான் ஹிட் ஆகிறது வெண்பூ

shortfilmindia.com said...

@எறும்பு
வந்திட்டீங்களா..?

2ஷங்கர்
ஒரு வழியா நீங்க பார்த்த படத்துக்கு எழுதிட்டேனா..

@கீதா ஆச்சி
நிச்சயம் பாருங்க. உங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி

shortfilmindia.com said...

@இலுமினாட்டி
நன்றி

2செல்வமணி
நன்றி

@உண்மைத்தமிழன்
கொடுத்தா போச்சு

@கும்க்கி
வாஙக் வக்கிறேன்

@கிருத்திகன் குமாரசாமி
எனக்கென்ன வோ அப்படி தெரியவில்லை தலைவரே.. அப்படியே நீங்கள் சொல்வது போல் இருந்தாலும் சினிமா என்பது சற்றே மிகைபடுத்தப்பட்ட்டு சொன்னால்தான் பார்க்கும் மக்கள்மனதிலேரும். அதனால் எனக்கு தப்பாக தெரியவில்லை

2

shortfilmindia.com said...

@மைஸ்டாக்ஸ்
ராமசாமி மெஸ். கவுடியா மடம் ரோடில் இருக்கிறது.

மேலும் தகவல்களுக்கு என்னுடய பழைய கொத்துபரோட்டாவை படிக்கவும் அதில் சென்னையில் மட்டுமில்லாம் பல இடங்களின் சாப்பாட்டுக்கடை இருக்கிறது..

shortfilmindia.com said...

@மணீஜி

ஏன்..ஏன்?

butterfly Surya said...

ஆஹா. வடை போச்சே..

செல்வ கருப்பையா said...

கிருத்திகனை வழி மொழிகிறேன். இராக்கில் அமெரிக்காவின் அநியாயங்களை நியாயப் படுத்த (அல்லது sensationalise செய்ய) எடுத்த படம் போல இருந்தது (இந்த காரணத்தினாலேயே, சராசரி அமெரிக்கனுக்கு இராக்கில் தமது நாடு செய்வது ரொம்ப சரி என நினைத்துக் கொள்ள, இது அமெரிக்க மீடியாவிலும் அகடமியிலும் உயர்த்திப் பிடிக்கப் பட்டது என் எண்ணம்)- எனது opinion-ல் ஆஸ்கருக்கு சற்றும் தகுதி இல்லாத படம்.

இது போலவே இதே வரிசையில் தீயணைப்புப் படை வீரர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு Joankin Phoenix படம் ஒன்று உள்ளது - Ladder 66. எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது.