Thottal Thodarum

May 4, 2010

சாப்பாட்டுக்கடை

சரியான பசி நேரத்தில் எதையாவது சாப்பிடுவோம் என்று கிடைத்ததை சாப்பிடுவது ஒரு விதம் அப்படி சாப்பிட்ட பிறகு பசியில்லைனா வாயில் வைக்க வழங்காது என்று சொல்லி பார்த்திருக்கிறோம். ஆனால் எப்போதும் அது போல நாம் சாப்பிடுவதில்லை. மனிதனுக்கு மிகப் பெரிய விஷயமே அதிகமோ, கொஞ்சமோ நல்ல  சாப்பாடு என்பது வாழ்வில் முக்கியமான, இன்றியமையாத விஷயமாகத்தான் இருக்கிறது. சுவையான சாப்பாட்டுக்கான தேடல் ஒவ்வொரு மனிதனுள் இருக்கத்தான் செய்கிறது.

கொத்து பரோட்டாவில் நான் சாப்பிட்டு நன்றாக இருக்கிறது என்று உணர்ந்த சின்ன சின்ன ஹோட்டல்கள், கையேந்திபவன், பெரிய ஹோட்டல்கள் வரை அறிமுகபடுத்தி வந்ததிற்கு மிகப் பெரிய வரவேற்பை கொடுத்து வருகிறீர்கள். பல நண்பர்கள் வெளியூரிலிருந்து சென்னை வந்ததும் சில சமயம் குடும்பத்தோடு நான் சொல்லியிருந்த கடைகளுக்கான வழியை எனக்கு போன் செய்து விசாரித்து போவார்கள். சில பேர் வருகிற போதே ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு வருபவர்களும் உண்டு. சில நண்பர்கள் எனக்கு போன் செய்து ஒருகுறிப்பிட்ட கடையை சொல்லி அது எந்த கொத்து பரோட்டாவில் இருக்கிறது என்று தேடி போயிருக்கிறார்கள். சில சமயம் என் ஞாபக அடுக்குகளிலிருந்து சரியாய் தேடியுமிருக்கிறேன். பல முறை நான் பல நண்பர்களுக்கு போனில் வழி சொல்லியிருக்கிறேன். என்னை பொறுத்தவரை சுவையான உணவுக்கு மீறி வாழ்வில் சந்தோஷத்துக்கு ஏதுமில்லை என்று நம்பிக்கை.

ஒரு முறை கொத்து பரோட்டா வாசகர் ஒருவர் தொடர்ந்து நான் எழுதி வரும் கடைகளில் எல்லாம் முடிந்த வரை சாப்பிட்டுவந்துவிடுபவர். ஒரு முறை ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு குரல் தழுதழுக்க “நீ ..நல்லாருப்பய்யா..என் அம்மா கையில் சாப்பிட்டா பொலருக்கு” என்று கலங்கியது, என்னுள் இன்னும் நம்மால் முடிந்த அளவிற்கு இதை பற்றி இன்னும் எழுத வேண்டும் என்ற எண்ணம் உறுதியாயிற்று.

மொத்தமாய் கொத்து பரோட்டாவில் தேடுவதை விட, தனி தனி பதிவுகளாய், உணவகங்களின் பெயர் மற்றும் சாப்பாட்டுக்கடை குறிப்புடன் எழுதினால் தேடு பொறியில் தேடுவதற்க்கும், சரியான கடைக்கான வழியையும் சுலபமாக தெரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும் என்ற நம்பிக்கையில்.. இனிமேல் தனி பதிவாய் எழுதலாம் என்று இருக்கிறேன். அதற்கான உங்கள் ஆதரவை கொடுப்பீர்கள் என்கிற நம்பிக்கையில்..

இந்த வாரம் DOSA CALLING
Photo0018 
சென்னை அடையாறில் இந்திரா நகரில் லாரன்ஸ் அண்ட் மேயோ கடையின் பேஸ்மெண்டில் இருக்கிறது இந்த தோசா காலிங். சட்டென பார்த்தால் தெரியாது. ஒரு மாதிரி சைடில் ஒரு குட்டி ஓப்பனிங்கில் கதவு இருக்கிறது. உள்ளே இறங்கி சென்றால் மிக அருமையாய் குளிர்பதனம் செய்யப்பட்ட ரெஸ்ட்டாரண்ட். நல்ல இண்டீரியருடன். ஏகப்பட்ட விதமான தோசை லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார்கள்.
Photo0016 நான் ஆர்டர் செய்தது, மைசூர் சில்லி தோசையும், ஒரு செட் தோசையும். நல்ல புளிக்காத மாவில் மைசூர் சிகப்பு மிளகாய் பேஸ்டை மொத்தமாய் ஸ்பெரட் செய்து, பொன் முறுவலாய் தருகிறார்கள். அதற்கு சாம்பார், மற்றும் இரண்டு விதமான சட்னிகளுடன்.
Photo0015 அடுத்து வந்த செட் தோசை எல்லா ஹோட்டல்களில் கொடுக்கும் மஞ்சள் கலரில் இல்லாமல் சாதாரண ப்ளெயின் ஊத்தப்பம் போலவே இருந்தது. இது நாள் வரையில் செட் தோசைக்கு குருமா சாப்பிட்டு பழகி போன என் நாக்குக்கு, அதே சாம்பார், சட்னி வேலைக்காகவில்லை. எனிவே மதியம் மீல்ஸ், மற்றும், கலந்த சாதங்கள் கிடைக்கிறது. மாலை வேளையில் ஸ்நாக்சும் இருக்கிறது. ஹேவ் எ ட்ரை. என்ன ரேட் தான் கொஞ்சம் ஜாஸ்தி.. நான் சாப்பிட்ட ரெண்டுக்கு சுமார் 85 ரூபாய் ஆனது.

டிஸ்கி: நீங்கள் கொடுக்கும் ஆதரவை வைத்துத்தான் இதை கொத்து பரோட்டாவிலேயே எழுதுவதா..? அல்லது இம்மாதிரி தனி பதிவாக எழுதுவதா என்று முடிவெடுக்க  முடியும். எனவே உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
கேபிள் சங்கர்
Post a Comment

84 comments:

Bala said...

ITHU REMBA PUTHUSA IRUKU...

Chitra said...

தனி பதிவுக்கு - புகைப்படங்களுடன் - என் வோட்டு.

Kumaresh said...
This comment has been removed by the author.
Kumaresh said...

புகைப்படங்களுடன் கூடிய தனிப்பதிவு சிறந்ததாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.(உங்கள் பதிவில் எனது முதல் பின்னூட்டம் இது)

Sukumar Swaminathan said...

சாப்பாட்டு கடையை எடுத்த உடன் கொத்து பரோட்டா முழுமையாய் தெரியவில்லை. இதை தனி பதிவாய் எழுதுவது பரவாயில்லை. ஆனால் கொ.ப.வில் வேறு எந்த இடத்தையாவது (தியேட்டர், எக்ஜட்ட்ரா....) சேர்த்தால் நன்றாய் இருக்கும்.

நாடோடி said...

த‌னிப‌திவு ந‌ல்ல‌தாங்க‌ இருக்கு... தொட‌ருங்க‌ள்..

சூர்யா said...

thanipathivuthaan bestu thalai...search panna easya irukkum; konjam thambaram pakkamum vaanga...

விந்தைமனிதன் said...

இது.. இது... இதத்தான் எதிர்பார்த்தேன்

ஸ்ரீ.கிருஷ்ணா said...

த‌னிப‌திவு ......

கார்க்கி said...

நாங்க ஆதரவு தர்றோம். அங்க போய் சாப்பிட நீங்க ஆதரவு தர முடியுமா???? முதல்ல நாங்க பில்ல கட்டிட்டு ரீஃபண்ட் பண்ணாலும் ஓக்கேதான்

பார்வையாளன் said...

Thank u so much for this idea...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

என்னா தல, ஆரம்பமே சைவக் கொக்கா இருக்கு?

:))

தராசு said...

அண்ணே,

கலக்கல்.

முகவரியை தெளிவா, நம்பர் ஆறு, விவேகானந்தர் தெருன்னு எழுதுங்களேண்ணே.....

Baski.. said...

ஆதரவு!!!!!!!!

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே,சுகர் இப்ப உங்களுக்கு எந்த அளவுல இருக்கு???

Sukumar Swaminathan said...

// அண்ணே,சுகர் இப்ப உங்களுக்கு எந்த அளவுல இருக்கு??? //
தல எப்பவும் ஸ்வீட் 16 ங்கிறதுனால .. கொஞ்சம் அதிக அளவுலதான் இருக்குமுண்ணே...

raman- Pages said...

kothu parotavey pothumey....

KVR said...

//மொத்தமாய் கொத்து பரோட்டாவில் தேடுவதை விட, தனி தனி பதிவுகளாய், உணவகங்களின் பெயர் மற்றும் சாப்பாட்டுக்கடை குறிப்புடன் எழுதினால் தேடு பொறியில் தேடுவதற்க்கும், சரியான கடைக்கான வழியையும் சுலபமாக தெரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும் என்ற நம்பிக்கையில்.. இனிமேல் தனி பதிவாய் எழுதலாம் என்று இருக்கிறேன்//

இந்த ஐடியாவைத் தான் நான் கிட்டத்தட்ட ஒரு வருஷம் முன்னே சொன்னேன். ஒவ்வொரு வாரக் கொத்து பரோட்டாவிலும் இருக்கும், படிச்சுக்கோங்கன்னு சொன்னிங்க. இப்போவாவது சாப்பாட்டுப் பிரியர்களின் மனசைப் புரிஞ்சுகிட்டுத் தனி இடுகைக்கு வந்திங்களே, அது வரைக்கும் சந்தோஷம் தான்

வானம்பாடிகள் said...

அங்க இளநீர்ப் பாயசம் ட்ரை பண்ணலையா பாஸ்:)

யுவகிருஷ்ணா said...

//ஒரு முறை கொத்து பரோட்டா வாசகர் ஒருவர் தொடர்ந்து நான் எழுதி வரும் கடைகளில் எல்லாம் முடிந்த வரை சாப்பிட்டுவந்துவிடுபவர். ஒரு முறை ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு குரல் தழுதழுக்க “நீ ..நல்லாருப்பய்யா..என் அம்மா கையில் சாப்பிட்டா பொலருக்கு” என்று கலங்கியது, என்னுள் இன்னும் நம்மால் முடிந்த அளவிற்கு இதை பற்றி இன்னும் எழுத வேண்டும் என்ற எண்ணம் உறுதியாயிற்று.
//

ஒரு மாபெரும் புரட்சியை வழிநடத்துகிறீர்கள் தோழர். வாழ்த்துகள்!

NAGARAJAN said...

Please incorporate all the details of Hotels,etc. published in all earlier Koththu ParOttAs in this post. It would be really helpful for everybody.

If you separate the same into two - one for VEG and another one for NON VEG, it would be really nise.

Raja said...

Pls keep it as a Seperate column in your Blog.. Instead of asking the Suggestions you can Conduct the Polling anna.. Tatz Very Good na..


Regards

Raja

Palay King said...

நல்ல பதிவு நன்றி கார்க்கி!

மோனி said...

பார்ரா ... 10.26-க்கு பதிவுக்குள்ள ஒரு பதிவு..
ம்ம்ம்ம் நல்லா சாப்பிட்டு ஒடம்ப தேத்துங்க மக்கா..

ஆதிமூலகிருஷ்ணன் said...

குட். கீப் இட் அப்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

த‌னிப‌திவு... தொட‌ருங்க‌ள்

வெற்றி said...

நல்ல முயற்சி..தனிப்பதிவாக இடுவதே பயனுள்ளதாக இருக்கும்..பின்னால புக் ரிலீஸ் பண்றச்ச தேட ஈசியா இருக்கும் :)

KaviKutty said...

தனி பதிவுக்கு - புகைப்படங்களுடன் - என் வோட்டு.தனி பதிவுக்கு - புகைப்படங்களுடன் - என் வோட்டு.

இராகவன் நைஜிரியா said...

தனி இடுகையாகவே போடுங்க. என்றாவது ரெஃபர் செய்ய வசதியாக இருக்கும்.

Anonymous said...

பார்சல் சர்வீஸ் உண்டா ? உங்க பேரை சொன்னா கோவைக்கு அனுப்பற மாதிரி ஏற்பாடு பண்ணுங்க :))

செ.சரவணக்குமார் said...

ஆஹா, அருமை தொடருங்கள் தலைவரே.

செந்தழல் ரவி said...

இதுபோன்ற அறிவியல் கண்டுபிடிப்பு சம்பந்தமான விஷயங்களை தொடர்ந்து தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு வழங்குவதன் மூலம் வெள்ளைக்காரன் ஆ என்று வாயை பிளக்கும் வண்ணம் செய்துவிடலாம்.

Ramesh said...

நல்லாதானிருக்கு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சாப்பாட்டுக் கடையை இதுல எழுதிட்டா கொத்து பரோட்டாவுக்கு என்ன பெயர் வைப்பீங்க?

இந்த முதல் பதிவுக்கு எந்த கடையில Treat

Anusha raman said...

வெளி இடத்தில் இருந்து சென்னை வாசம் செய்பவர்கள் அதிலும் விடுதி தங்கி வேலை செய்பவர்கள் நல்ல தகவல் .நான் மதுரை சேர்த்தவர் அங்கு ரோடு கடை கூட டிபன் நல்ல இருக்கும் .ரோடு கடை தொடங்கி இன்று முருகன் இட்லி கடை ஒரு உதாரணம் .அதே போல ஸ்ரீவில்லிபுத்தூர் கதிரவன் கடை ரொம்ப பாமௌஸ் அதை பற்றி ச்ளுலேக்ஹா டாட் கம சொல்லி உள்ளின்.தங்கள் பணி தொடரட்டும்

நேசமித்ரன் said...

ஒரே லேபிளில் இருப்பது ரெப்பர் செய்ய வசதியாக இருக்கும்தானே தலைவரே

கோவை விமல்(vimal) said...

என் வோட்டும் தனி பதிவுக்கே , புகைப்படங்களுடன் கூடிய சாப்பாட்டுக் கடை சூப்பர்.

பழைய கொத்து பரோட்டாவில் உள்ள சாப்பாட்டுக்கடையும் சேர்த்தால் மற்றவர்களுக்கு வசதியாக இருக்கும்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[மனிதனுக்கு மிகப் பெரிய விஷயமே அதிகமோ, கொஞ்சமோ நல்ல சாப்பாடு என்பது வாழ்வில் முக்கியமான, இன்றியமையாத விஷயமாகத்தான் இருக்கிறது. சுவையான சாப்பாட்டுக்கான தேடல் ஒவ்வொரு மனிதனுள் இருக்கத்தான் செய்கிறது.]]]

ஆமாமா.. ரொம்ப அவசியந்தான்..!

எல்லாரும் உன்னை மாதிரியே கோடீஸ்வரனா இருந்து ஒரு வேளை சாப்பாட்டுக்காக அடையாறுக்கு ஓடிப் போய் 85 ரூபாவுக்கு சாப்பிட்டாங்கன்னா உலகம் நல்லாத்தான் இருக்கும்..!

எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும் கேபிளு..! என்ஜாய்..!

KTM Nizar said...

தனி இடுகையாகவே போடுங்க நண்பரே அப்பதான் எளிதில் கண்டு பிடிக்க வசதியாய் இருக்கும்..

வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் இந்த சேவை ..

henry J said...
This comment has been removed by a blog administrator.
சேட்டைக்காரன் said...

சூப்பர் மேட்டர் இது. தரமான, ருசியான தோசை சாப்பிடணுமுன்னு சானட்டோரியத்துலேருந்து வண்டி கிளைப்பிட்டுப்போயி சாப்பிட்டிருக்கிறோம். தோஸா காலிங் மாதிரியே பதிவும் செம ஹிட்!

நானானி said...

//தனிப் பதிவாக எழுதுவதா என்று முடிவெடுக்க முடியும். எனவே உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//

“செய்யூஊஊஊஊஊஊ!!”

நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அடையார் வாசியாகிய நான் முதலில் கூப்பிடு தூரத்திலிருக்கும் டிசிக்கு அதாவது தோசா காலிங்க்-ஐ அட்டெண்ட் பண்ணீட்டு வரேன். சேரியா?

butterfly Surya said...

கேபிள், தனியா பதிவு போடலாம். ஆனால் இனிமே தனியா போய் சாப்பிட கூடாது.. அதான் வேண்டுகோள்..

♠புதுவை சிவா♠ said...

அருசுவை கேபிளுக்கு
நல்ல முயற்சி வாழ்த்துகள்

சாப்பாட்டு கடையைப்பற்றி எழுதும் போது கீழ் உள்ள விபரங்களை தரவும். வெளியூர் நபருக்கு உதவியாக இருக்கும்.

1. கடை பெயர் - சைவம் - அசைவம்
2.கடையின் முகவரி
3.கடையின் தொலைபேசி எண்கள்
4.கடையின் கிளை இருப்பின் அதன் விபரம்
5.கடை இயங்கு நேரம் - காலை - மாலை - இரவு
6.கடையின் விடுமுறை நாள்
7.கடைக்கு செல்ல உதவ கூகுல் மேப் புக் மார்க்
8.கடை ரேட்டிங் 1. சாமானியர் 2. நடுத்தர வகுப்பு 3. வசதியானவருக்கு....
9.குடும்பத்தோடு சாப்பிட ஏற்ற கடையா (அ) நண்பர்களுக்கு மட்டுமா
10.வாரத்தில்| மாதத்தில் ஏதாவது சிறப்பு வகை உணவு செய்வார்களா ?
11. டிப்ஸ் தருவது அவசியாமா | இல்லையா ?
12 கடைக்கு செல்ல உதவும் பஸ் ரூட் 12B - 23C like that..

மிக முக்கியம் - பதிவை ஏரியா வரியாக தலைப்பிடவும்.

சாப்பாட்டு கடை (அ) கொத்து பரோட்டா - ஆழ்வார் பேட்டை
சாப்பாட்டு கடை (அ) கொத்து பரோட்டா - அண்ணா நகர்
சாப்பாட்டு கடை (அ) கொத்து பரோட்டா - மைலாப்பூர்
சாப்பாட்டு கடை (அ) கொத்து பரோட்டா - அசோக் நகர்
சாப்பாட்டு கடை (அ) கொத்து பரோட்டா - கிண்டி

if the shop have any web site means Give it...plz we know more..

இராமசாமி கண்ணண் said...

நல்ல விசயந்தான் அண்ணா. என்சான் உடம்புக்கு வயிறே ஆதாரம் இல்லையா. அத நல்ல படியா கவனிச்சிட்டோம்னா கவலை இல்லை பாருங்க. புது ஹோட்டல் அறிமுகத்துக்கு நன்றி. மீண்டும் ஒரு காதல் கதை - 8 எப்ப வரும்?

செந்தழல் ரவி said...

Free Download File Recovery | Data Recovery | Image Recovery Software
Free Slide Show & Gallery Makers
Learn Typing
CINEMA TICKETS BOOKING Online
Free youtube Video Download
Free Web Design
Free Indian Language Typing Tool
Type anywhere in your language | Google Transliterate | Microsoft Indic Language
Free Download Google Talk | Windows Live Messenger | Skype Messenger | Yahoo Messenger
Learn Basic Maths, Algebra, Trigonometry, calculus
Online Free Ebooks
Free Antivirus Download
Search Rooms, Apartments
Free Health Tips////


அன்புள்ள பேக் லிங்க் ஹென்றி. பேக் லிங்க் கேள்விப்பட்டிருக்கேன். அதுக்காக இவ்ளோ பெருசாவா ? எங்கருந்துடா வரீங்க ?

~~Romeo~~ said...

தனி பதிவே போடுங்க தல ..

naan kadavul said...

please keep it up.., dont worry abt the comments. plus or minus..,

கே.ஆர்.பி.செந்தில் said...

அடுத்த வாரம் முதல் சேர்ந்தே போகலாம், பில்லு எங்க பாசு ராஜாராமன் கொடுப்பாரு ..

PREMKUMAR C said...

தனி பதிவுக்கு - புகைப்படங்களுடன் - என் வோட்டு.

malar said...

தொட‌ருங்க‌ள்..

புதுவை சிவா சொன்ன மாதிரி தகவல் வேண்டும் உங்கள் பதிவில் பார்ததும் எப்போதும் இருக்கிறமாதிரி தெரியனும்.தேடுவது கஷ்டம்...

sriram said...

நாலு பேருக்கு நல்லது பண்ணணும்னா எது வேணா செய்யலாமுன்னு தலைவர் சொல்லியிருக்கார். சாப்பாட்டுக்கடை பகுதி நாலு பேருக்கு உதவியா இருக்கறதால, தனியாவே போடுங்க யூத்து..

லக்கி - பழம் விட்டாச்சா? சொல்லவே இல்ல??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பாட்டாளி said...

தனி பதிவுக்கு - புகைப்படங்களுடன் - என் வோட்டு.அனைவரின் ஏகோபித்த ஆதரவும் .

காவேரி கணேஷ் said...

தலைவரே,

இத தான் ரொம்ப நாளா சொல்கிறேன், தனிபதிவு போடுங்கன்னு.

நிச்சயம் புத்தகமாக வெளிவரும் சாப்பாட்டு கடை.
வாழ்த்துக்கள்

Logan said...

Please

Logan said...

Please

அப்பாவி தங்கமணி said...

ஆஹா... சூப்பர்.... நானும் இப்படி தேடற ஆள் தான்... நல்லா சொன்னிங்க "ஒரு ஜான்" வயத்துக்கு தானே எல்லாமே.... ஆனா எங்க ஒரு மெட்ராஸ் இல்ல.... மெட்ராஸ் வர்றப்ப உங்க reference use பண்ணிக்கறேன். நன்றி

ஷர்புதீன் said...

Blogger butterfly Surya said...

கேபிள், தனியா பதிவு போடலாம். ஆனால் இனிமே தனியா போய் சாப்பிட கூடாது.. அதான் வேண்டுகோள்..


he he he me too said this... :)

டம்பி மேவீ said...

thala...vote potachu ..naan parthu irukkiren aanaal sapitathu illai....


namakku peyarellam mukkiyaMillai. suvai thaan, athu kidaithaal ok thaan

ஹாலிவுட் பாலா said...

கொத்துல.. இதை மட்டும் நான் ஸ்கிப் பண்ணுவேன். படிச்சா வயிறெரியும் அதான்.

இப்ப பதிவையே ஸ்கிப் பண்ண விடுவீங்க போல இருக்கே சங்கர்? :(

ஹாலிவுட் பாலா said...

இந்த ஹென்றி ஜே-க்கு எதுனா.. சாப்பாட்டுக்கு வழி பண்ணுங்களேன். :) :)

affable joe said...

என் வோட்டு தனி பதிவிற்கு அப்படி பழைய கொத்தில் இருபவற்றையும் இந்த மாதிரி தொகுத்தால் நன்றாக இருக்கும் .நன்றிகள் பல தல

கால்கரி சிவா said...

Culinery Critic Wriiting or Review என்பது உங்களது தொழிலாக இல்லாவிட்டால் கூடிய மட்டும் வீட்டு சாப்பாடு சாப்பிடவும்.

அல்சர், சுகர் , பிபி வருவதற்கு ஓட்டல் சாப்பாடு அதுவும் இந்தியாவில் ஓட்டல் சாப்பாடு காரணங்களில் ஒன்று

மணிஜீ...... said...

//யுவகிருஷ்ணா said...

//ஒரு முறை கொத்து பரோட்டா வாசகர் ஒருவர் தொடர்ந்து நான் எழுதி வரும் கடைகளில் எல்லாம் முடிந்த வரை சாப்பிட்டுவந்துவிடுபவர். ஒரு முறை ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு குரல் தழுதழுக்க “நீ ..நல்லாருப்பய்யா..என் அம்மா கையில் சாப்பிட்டா பொலருக்கு” என்று கலங்கியது, என்னுள் இன்னும் நம்மால் முடிந்த அளவிற்கு இதை பற்றி இன்னும் எழுத வேண்டும் என்ற எண்ணம் உறுதியாயிற்று.
//

ஒரு மாபெரும் புரட்சியை வழிநடத்துகிறீர்கள் தோழர். வாழ்த்துகள்!
//

என்ன பின்னூட்டுவது என்று திணறிக்கொண்டிருந்தேன்.நன்றி லக்கி..

முகிலன் said...

தனிப்பதிவா போடுங்க..

வயிறெரிஞ்சாலும் வருசத்துக்கு ஒரு தடவை ரெண்டு மூணு நாள் மட்டும் வரும்போது முடிஞ்ச வரைக்கும் கவர் பண்ண உதவியாயிருக்கும்..

ஈரோடு சுரேஷ் said...

இப்படியே எழுதுங்க. என்னுடைய ஓட்டு கணக்கு பண்ணிகோங்க

Cable Sankar said...

@பாலா

எது இதுவா புதுசா இருக்கு:)

@சித்ரா
நன்றி

@குமரேஷ்
நன்றி..உங்கள் முதல் பின்னூட்டத்திற்கும் ஆதரவுக்கும்

@சுகுமார் சுவாமிநாதான்
ஏதாவது கிடைக்காதா என்ன?

Cable Sankar said...

@பாலா

எது இதுவா புதுசா இருக்கு:)

@சித்ரா
நன்றி

@குமரேஷ்
நன்றி..உங்கள் முதல் பின்னூட்டத்திற்கும் ஆதரவுக்கும்

@சுகுமார் சுவாமிநாதான்
ஏதாவது கிடைக்காதா என்ன?

Cable Sankar said...

@நாடோடி
நன்றி

@சூரியா
நன்றி

@விந்தை மனிதன்
நன்றி

@ஸ்ரீகிருஷ்ணா
நன்ரி

@கார்க்கி
அலோ...அலோஒ..அலோஓஓஓ

Cable Sankar said...

@பார்வையாளன்
நன்றி

@ஷங்கர்
நன்றி

@தராசு
எழுதிருவோம்

@பாஸ்கி
நன்றி தலைவரே.. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

@எம்.எம்.அப்துல்லா
ஓரளவுக்கு கண்ட்ரோல்ல..:)

@

Cable Sankar said...

@ராமன் பேசஸ்
ஓகே.. எல்லோரும் தனியா போடலாம்னு சொல்றாங்களே

2கேவிஆர்
ஓகேண்ணே.. செஞ்சிருவோம்

@வானம்பாடிகள்
சுகர்.. நோ.ஸ்வீட்ஸ்

@யுவகிருஷ்ணா
என்னை பொருத்த வரைக்கும் நாலு பேருக்கு சந்தோஷம்னா.. எல்லாமே புரட்சி தான் தோழரே.. பா.ரா.சொன்ன கடைக்கு போயாச்சா..?

@நாகராஜன்
முயர்சி செய்கிறேன்

@ராஜா
ஷ்யுர்

@

Cable Sankar said...

@பலை கிங்
நன்றி.. நன்றி.. கார்க்கி.

@மோனி
புரியலை..:)

@ஆதிமூலகிருஷ்ணன்
தேங்க்ஸ்

@டி.வி.ராதாகிருஷ்ணன்
நன்றி

@வெற்றி
நன்றி

@

Cable Sankar said...

@கவிக்குட்டி
முதல் பின்னூட்டத்திற்கும், வருகைக்கும் நன்றி

@இராகவன் நைஜிரியா
நன்றிண்ணே

@மயில்
அடுத்து அதை செஞ்சிட்டா போச்சுங்க..

@செ.சரவணக்குமார்
நன்றி

@செந்தழல் ரவி
வெள்ளைக்காரன் கூட பசிச்சா ருசிச்சி சாப்ப்பிடத்தான் செய்வான் ரவி..

@

Cable Sankar said...

@ரமேஷ்
நன்றி

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
வச்சிட்டா போச்சு

@அனுஷா ராமன்
நன்றி

@நேசமித்ரன்
நன்றி

@கோவை விமல்
நிச்சயம் செய்கிறேன்விம.

@உண்மைதமிழன்
வந்தமா படிச்சமா..ன்னு இல்லாமா புலம்பல ஆரம்பிச்சிட்டீங்களா.?

@நிசார்
நன்றி

Cable Sankar said...

@சேட்டைக்காரன்
சாப்டுட்டு சொல்லுங்க

@நானானி
மிக்க நன்றி உங்கள்முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

@பட்டர்ப்ளை சூர்யா
ஓகே

@புதுகை சிவா
நீங்க்ள் சொன்னதை எல்லாம் எழுத முயற்சிக்கிறேன் தலைவரே..

Cable Sankar said...

@ரோமியோ
ஓகே

@நான் கடவுள்
ஓகே

@கே.ஆர்.பி.செந்தில்
அப்படின்னா ரொம்ப சந்தோஷம் பாசு ராசாராமன் வாழ்க..வாழ்க

@பிரேம்குமார்.சி
நன்றி உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

@மலர்
நன்றி

@ஸ்ரீராம்
ஓகே..

@பாட்டாளி
நன்றி

@காவேரி கணேஷ
நிச்சயம் நடக்கும்

@லோகன்
நன்றி

Cable Sankar said...

@அப்பாவி தங்கமணி
ஓகே

@ஷர்புதீன்
ஓகே

@டம்பிமேவி
நிச்சயம் நல்லாருக்கு

@ஹாலிவுட் பாலா
அது எலலாம் சரி.. போன் பண்னூங்க..

@

Cable Sankar said...

@ஹாலிவுட் பாலா
ஆமா பால..இம்சை அதிகமாஇருக்கு

@ஜோ
நன்றி

@காலகரிசிவா
உங்கள் அன்பிற்கு நன்றி தலைவரே..

@மணிஜீ
அவ்வள்வு பிஸியா.. தோழரே..

Cable Sankar said...

@முகிலன்
அஹா..

@ஈரோடு சுரேஷ்
ஓகே. ரைட்..

selvangood said...

ரொம்ப நல்ல இருக்குதுங்க. தயவு செய்து தொடருங்கள்

muthu said...

//என்னை பொறுத்தவரை சுவையான உணவுக்கு மீறி வாழ்வில் சந்தோஷத்துக்கு ஏதுமில்லை என்று நம்பிக்கை.//

muthu said...

//என்னை பொறுத்தவரை சுவையான உணவுக்கு மீறி வாழ்வில் சந்தோஷத்துக்கு ஏதுமில்லை என்று நம்பிக்கை.//

ponsiva said...

நல்ல முயற்ச்சி வாழ்த்துகள்

Jagadeeskumar said...

அற்புதமான முயற்சி