Thottal Thodarum

Oct 8, 2010

ராமி, சம்பத்,துப்பாக்கி

முன்குறிப்பு: இது ஒரு சீரியஸான பின்நவினத்துவ சிறுகதை.(ஹி.ஹி.) அந்த அலர்ஜி இருப்பவர்களுக்கு “அ” முதல் ”ஊ”  வரை எண்ணப்படும்  உடனே இங்கிருந்து ஓடிவிடவும்.
****************************************************************************************
Origins___Snapshots_In_Time_70_by_BlueDragoness
அவள்  மீது சீராய் ஒரே வேகமாய் இயங்கி கொண்டிருந்தான். அவனின் இயக்கத்திற்கு ஏற்றார் போல் கீழே டான்ஸ் பாரிலிருந்து ‘திடும்’ திடும்’ என்று அதிர்ந்தது ஒத்து போக,   அவளுக்கு  ரொம்ப நாளுக்குபின் ஆர்கஸம் ஏற்பட்டிருக்க வேண்டும்.  அவளின் முனகலின் உச்சத்திலேயே தெரிந்தது.   மடேலென வாயால் மூச்சுவிட்டபடி அவள் மேல் வியர்வையுடன் சரிய, பக்கத்திலிருந்த ஒரு டவலை எடுத்து அவன் முதுகை துடைத்துவிட்டாள்.   பக்கத்தில் சரிந்து படுத்தபடி “ உன் பெயர் எனன்?” என்றான்.

“ ராமி..” என்றாள் ராமலஷ்மி என்கிற பெயரை சொல்ல விரும்பாமல். “உன் பெயர்..? “ என்று கேட்டபடி அவள்  உடைகளை எடுத்து மாட்டிக் கொண்டாள். ”கழட்டும் போது ஈஸியாய் இருக்கிறது. என்றபடி ஜீன்ஸை இழுத்து இடுப்பில் ஏற்ற,.  அவன் “சம்பத்’ என்றான்

“என்ன ஒரு  தமாஷ் பார்த்தாயா? இருவரும் எதற்கு பிறகு பேரை கேட்கிறோம்?’ சிரித்தான் “அந்த நேரத்தில் போதையின் உச்சத்தில் கேட்க தோன்றவில்லை. சரி என்ன செய்கிறாய்?” 

அவள் அவனை நேராய் பார்த்தாள். சிறிது யோசித்தது போல் தெரிந்தது.
”நான் ஒரு  எஸ்கார்ட் தற்சமயம். எதிர்காலத்தில் சினிமாவில் நடிகையாகவோ, மாடலாகவோ,  முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, சிகரட்டை எடுத்து வாயில் வைத்து பற்ற வைக்க லைட்டரை தேடி கைப்பையை நோக்கி போக, அதற்குள் அவன் பற்ற வைக்க, அவள் சொன்னதை கேட்டு  அதிர்ந்து, “என்ன எஸ்கார்டா.? யூ மீன் ப்ராஸ்டிடூயூட்..? ஓ.. காட்.. ஐ ஹாட் செக்ஸ் வித் ப்ராஸ்.. நீ ஏன் முதலிலேயே சொல்ல்வில்லை” என்று கத்தினான்.

அவளுக்கு  அவனின் ரியாக்‌ஷன் புரியவில்லை.. “ சம்பத்.. ஏன் கத்துகிறாய்.. நீ கேட்கவுமில்லை.. நானும் சொல்லும் நிலையிலில்லை.? ஸோ..வாட்..? நீ எனக்கு பணம் கொடுக்க தேவையில்லை. ஐ எஞ்ஜாய்ட் இட். சொல்லப்போனால் ரொம்ப நாளைக்கு பிறகு உச்சநிலை இன்றுதான்.”என்றாள்

“சே.. போயும் போயும் ஒரு ப்ராஸுடனா. ஹய்யோ.. முட்டாள்.. முட்டாள்..என்று அவன்  தன்னையே  அடித்து கொண்டு “ சே.. காண்டம் கூட யூஸ் செய்யவில்லை. நீ சேஃப் தானே..  மெடிக்கல் செக்கப் செய்திருக்கிறாய் அல்லவா.?”

“ஓ.. ஷிட்.. கட் தட் க்ராப் சம்பத்.. இதோ பார். பாரில் பார்த்தோம், குடித்தோம், ஆடினோம்,   … த்தோம் அவ்வளவுதான். அதற்காக என்னை கீழ்தரமாய் பார்க்காதே. நிச்சயமாய் இதுவரை நீ என்னை போன்றவளிடம் படுத்ததில்லை  என்றால்  வேறு எவளிடம் படுத்திருக்கிறாய்  கண்ணகியிடமா.? இதுதான் முதல் முறை  என்று சொன்னால் நம்பிவிடும் அளவிற்கு வெகுளியா நீ..? , முதல் முறை போல நடிப்பவர்கள் நிறைய.. உங்களையெல்லாம் ஏமாற்றுவது மிகச் சுலபம்”  என்று சிகரட்டை தரையில் போட்டு நசுக்கியபடி அவனை பார்க்க,

சம்பத் கொஞ்ச நேரம் அங்கும் இங்கும் அலைந்தான்,  ரெஸ்ட்லெஸாக இருந்தான். ராமி டேபிளில் மிச்சமிருந்த, ட்ரிங்கை எடுத்து ஊற்றி கொடுத்தாள்.  அவனை பார்க்க பாவமாய் இருந்தது. ட்ரிங்கை ஒரே மடக்கில் குடித்துவிட்டு, அவளை பார்த்தான். “நீ சொல்வதும் சரி தான் நான் கேட்கவில்லை.. என் மேலும் தப்பு இருக்கிறது. கேட்டிருக்க வேண்டும், கேட்டிருக்க வேண்டும்..” என்று திரும்ப திருமப் சொல்லிக் கொண்டேயிருந்தான். தலையை ஆட்டிக் கொண்டான். அருகில் இருந்த ஸோபாவில் பொத் என விழுந்து உட்கார்ந்தான், சிறிது நேர அமைதிக்கு பிறகு,

” உன் தொழிலை பற்றி கேட்கிறேன் என்று தவறாய் நினைக்காதே..  கேங்க் பேங், எல்லாம் பாத்திருக்கிறாயா..? உன்னை மீறி ஏதாவது பிரச்சனையென்றால் என்ன செய்வாய்..?”

ராமி தன் கைப்பையிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து, அவனை குறிபார்க்க, அவன் அதிர்ந்து போய், இரண்டு கைகளையும் தூக்கியபடி வியர்த்து நிற்க, “டுஸ்யாங்..டுஸ்யாங்” என்றாள் ராமி வாயால். “ பார்த்தாயா.. காட்டியதற்கே பயந்துவிட்டாய். சுடவேண்டாம் காட்டினாலே போதும்” என்று ராமி சிரிக்க, சம்பத் மேலும் பயந்து போய் “ரா..ரா. ராமி என்னை மன்னித்துவிடு, சாரி தெரியாமல் கேட்டுவிட்டேன்.. என்னை விட்டு விடு, சாரி.. இனிமேல் உன்னை பற்றி கேட்க மாட்டேன்.’ என்று பதட்டத்துடன் அவனின் ஜெர்கினை எடுத்து கிளம்ப  எத்தனிக்க,  அவசர அவச்ரமாய் அவன் முன் நின்று மறித்த ராமி அவனை அணைத்து,

“சம்பத.. என் அழகிய வளர்ந்த முட்டாளே.. இவ்வளவு வெகுளியா நீ..? நான் சொன்னதெல்லாம் பொய். பொய்யை தவிர வேறில்லை. நன்றாக என்னை பார்.. என்னை பார்த்தால் ப்ராஸ் போல இருக்கிறேனே.. எவளாவது  இலவசமாய் படுப்பாளா..? எல்லாம் லூல்லூல்லாயிக்கு.  நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை வரவிலலையென்றால் உன் கையை என் நெஞ்சில் வைத்து பார். அது துடிப்பதை. “ என்றபடி அவனின் கையை எடுத்து தன் மார்பகங்களின் நடுவே வைத்து அழுத்திக் கொள்ள,  சற்று ரிலாக்ஸாகிய சம்பத்.. அசட்டுத்தனமாய் சிரித்தபடி

“எனக்கு முன்பே தெரியும், ராமி.. நீ விளையாடுகிறாய் என்று..  நீ புதியவள் எனக்கு தெரியாது.. எத்தனை முறை..  என்று. சிரித்தபடி.. அவளின் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்து “ அப்ப இது என்ன..?” என்று கேட்க.. ராமி அவனின் சிரிப்பினூடே அவளும் சிரித்தபடி.” சிகரெட் லைட்டர் நன்றாக இல்லை?” எனறவுடன்  சம்பத மேலும் சத்தமாய் சிரித்தபடி. “சிகரெட் லைட்டர்…. லைட்டர்..” என்று மறுபடி, மறுபடி சொல்லிக் கொண்டே. துப்பாக்கியை தன் முகவாயின் அருகில்  வைத்து, வாயில் சிகரட்டை பொருத்தி  “ எப்படி சுடுவாய் . டுஸயாங்” என்று சொல்லியபடி டிரிக்கரை அழுத்த.. “டுமில்” என்று வெடித்தது.
Technorati Tags: 


Post a Comment

23 comments:

எல் கே said...

தலைப்புல 18+ சேருங்க

bogan said...

அற்புதம் .கொஞ்சம் சுஜாதா வாசனை அடித்தாலும்..

ம.தி.சுதா said...

கதை ரொம்ப நல்லாயிருக்கு...

Kiruthigan said...

இப்பிடியெல்லம் கூட நடக்குமா...!!!

பிரபல பதிவர் said...

thala...
i will be at chennai on 14 and 15. pl confirm your convinient time to meet. Pl parcel one copy of cinema viyabaram.......
oru nalla sappatu kadai plan pannunga nonveg..

Unknown said...

நல்லா இருக்கு தல!
ஆனா இப்படியான கதைகளில் முதலிலேயே கடைசி வசனத்தை வாசிக்கத் தூண்டுகிறது...!
உங்ககூட முகப் புத்தகத்தில joint பண்ணதுக்கு தேங்க்ஸ் தல! :)

Unknown said...

மீள் பதிவு..

pichaikaaran said...

superb..

Thamira said...

மீள் கதை. போய்யா யோவ்..

VISA said...

மீள் பதிவு மீள் பதிவு போயா போயா போய்கிட்டே இருய்யா....

முதல் இரண்டு வரி படித்து கண்டு பிடித்துவிட்டேன். கடைசி இரண்டு வரி படித்து கன்பார்ம் செய்துகொண்டேன்.

பொன்கார்த்திக் said...

:)

வால்பையன் said...

வெளியே சொல்லிறாதிங்க, இது பின்நவீனத்துவம்னு, முக்கியமா ஜ்யோவ்கிட்ட

ரவுண்டு கட்டி அடிப்பார்! :)

அருண் said...

நல்லாயிருக்கு,ஆனால் டைட்டில் எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கு.

Radhakrishnan said...

ஓடிவிட்டேன். ;)

விநாயக முருகன் said...

இ‌து பின்நவீனத்துவம் இல்லை சங்கர்.

Cable சங்கர் said...

அப்ப இதுவும் இல்லை..யா..? விநாயகமுருகன்

Cable சங்கர் said...

@arun
நிச்சயம் கேள்வி பட்டிருப்பீங்க.. ஏன்னா.. இது மீள் பதிவு..:)

Vidhya Chandrasekaran said...

தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_09.html

சாஷீ said...

இதல்லவா கதை {climax :தொப்பி தொப்பி!! }

ரமேஷ் வைத்யா said...

sujju..... :-)))))))))

'பரிவை' சே.குமார் said...

நல்லா இருக்கு அண்ணா.

Kesavan Markkandan said...

Sir, Most of your 18+ jokes are telecasted in Jaya TV "Sabash sariyana comedy" program.

gopituty said...

pinnitiga cable ji