Thottal Thodarum

Dec 30, 2010

தென்மேற்கு பருவக்காற்று.

கூடல் நகர் சீனு ராமசாமியின் இரண்டாவது படம். எனக்கு அந்த படத்தின் லவ் ட்ராக் ரொம்ப பிடிக்கும். இப்படத்தின் மெயின் லைனும் காதல் தான். ஆடுகளை மேய்ப்பனுக்கும், அதை திருடி பொழைப்பு நடத்தும் கூட்டத்தின் பெண்ணிற்குமான காதல் கதை.

லைனில் இருக்கும் காண்ட்ராஸ்டான விஷயமே கொக்கி போடத்தான் செய்கிறது. தன் பட்டியில் ஆடுகளை திருட வரும் கும்பலில் ஒருவரை மடக்கி பார்க்கும் போது அது பெண்ணாக இருக்க, முருகையன் அவளின் முகத்தை பார்த்த கணத்தில் காதலாகிறான். அந்த காதலினால் தன் தாய் வீராயி பார்த்து வைத்திருக்கும் முறைப் பெண்ணையும் விலக்கி வைக்கிறான். களவாணிக் குடும்பத்திலிருந்து நிச்சயம் நான் பெண்ணெடுக்க மாட்டேன் அப்படி மீறி அவளை திருமணம் செய்தால் சங்கரத்துவிடுவேன் என்று மிரட்டுகிறாள் வீராயி. முருகையா எங்கே தன்னை காட்டிக் கொடுத்துவிடுவானோ என்று அவனை கொலை செய்ய முயற்சிக்கிறது களவாணிப் பெண்ணின் அண்ணன் கும்பல். அதனால் அவர்களை போலீஸில் காட்டிக் கொடுக்கிறான் முருகையன்.  மேலும் காண்டாகி சுத்தும்  அவர்களிடமிருந்து காதல் ஜோடி ஜெயித்ததா என்பதுதான் கதை. படத்தின் முக்கிய கேரக்டர் என்றால் அது செழியனின் ஒளிப்பதிவுதான். டைட்டில் காட்சியிலிருந்து எண்ட் கார்ட் வரை ஒவ்வொரு ப்ரேமும் அவ்வளவு லைவாக இருக்கிறது. அடை மழையில் ஆடுதிருட வரும் காட்சியாகட்டும், புழுதிக்காட்டில் சண்டையிடும் காட்சியாகட்டும், நம்மை அங்கேயே கொண்டு போய் உட்கார வைத்துவிடுகிறார்.  அடிக்கடி வரும் காலியான வைட் ஷாட் பொட்டல் காடுகளும், பஸ் வழித்தடங்களும் இண்டர்நேஷன்ல் தரம்.
T-DESIGN-01 கதாநாயகனாய் அறிமுகமாகியிருக்கிறார் விஜய சேதுபதி. இவரை அடிக்கடி நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்பாராஜின் குறும்படங்களில் கதாநாயகனாய் பார்த்திருப்பீர்கள். குறை சொல்ல முடியாத நடிப்பு. தண்ணியை போட்டு அது பாட்டுக்கு திரியும் இளந்தாரி கேரக்டர் என்றாலும் “ஏ.. என்னாங்குற?” என்பது போன்ற பருத்திவீரன் பாதிப்பில்லாமல் நடித்தற்கே அவருக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். எமோஷனல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். குரலில் இருக்கும் வீர்யம் பாடி லேங்குவேஜில் இல்லை. இன்னும் கொஞ்சம் முயன்றால் நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கிறது இவருக்கு.

பேராணமை படத்தில் நாயகிகளில் ஒருத்தியாய் வந்த வசுந்தராதான் நாயகி. மிக இயல்பான மேக்கப்பில்லாத முகம். பெரிதாய் நடித்திருப்பதாய் சொல்ல முடியவில்லை. கதையில் முருகையன் மனதை கொள்ளை கொண்ட அளவுக்கு நம் மனதை கொள்ளை கொள்ள்வில்லை என்றே சொல்லவேண்டும். இருந்தும் பழுதில்லை.
என்னதான் காதல் கதையாக இருந்தாலும் அடிநாதமான விஷயமே தாய்பாசம் எனும் போது அதற்கு உயிர் கொடுத்திருக்கும் வீராயி கேரக்டரில் நிச்சயம் வாழ்ந்திருக்கிறார் சரண்யா. நிஜ கிராமத்து தாயை கண் முன்னே வளையவிட்டிருக்கிறார் தன் சிறந்த நடிப்பின் மூலம். தன் மகன் மீது காட்டும் பாசமாகட்டும், அவனுக்காக சண்டையிடும் போது காட்டும் ரெளத்திரம் ஆகட்டும், க்ளைமாக்ஸ் காட்சியிலாகட்டும் மனதை விட்டு அகல மறுக்கிறார். சரண்யா.

படத்திற்கு இசை புதிய இசையமைப்பாளர் ரஹ்நந்தன்.  வைரமுத்துவின் வரிகளில் பல பாடல்கள் கேட்கும் போது பளிச்சிடுகிறது. பாடல்களில் இருக்கும் அளவுக்கு பின்னணியிசையில் கவனம் செலுத்தியிருக்கலாம். அதிலும் ஒரு காட்சியில் திடீரென ஆலாபனை போன்ற ஒரு இடம் வருகிறது. அதை பாடியவர் குரலில் பிசிறு தட்டி அபஸ்வரமாய் போகிறது. கிராமிய படம் அபஸ்வரமாக போகலாம் என்று பதில் சொன்னால்.. சாரி.. அப்படியானால் அங்கே அந்த அளவுக்கான ஆலாபனையே போட்டிருக்ககூடாது.

T-DESIGN-02
எழுதி இயக்கியவர் சீனு ராமசாமி. ஒரு லைவ்வான கிராமத்து படத்தை தர முயன்று அதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இவ்வள்வு தின்னான லைன் என்று முடிவு செய்தபின் இன்னும் சுவாரஸ்யமான திரைக்கதையில் பளிச்சென சொல்லியிருக்க வேண்டாமோ..? ஒரு ஆட்டை திருடும் கும்பல்  மாட்டிக் கொண்டால் ஜெயிலுக்கு போவதை கூட சாதாரணமாய் வாழ்த்தி அனுப்பும் குடும்பத்தில் இருப்பவர்கள் எதற்காக ஆட்டை திருடிய தங்களை முருகையன் காட்டிக் கொடுத்துவிடுவான் என்று கொல்ல முயற்சிக்க வேண்டும்?. கதைக்கு வில்லன்கள் வேண்டுமே என்று சொருகப்பட்ட கேரக்டர்களாகவே தெரிகிறது. முருகையன் மீது கொலைவெறி கொள்ளும் அளவிற்கு ஏதாவது வைத்தால் தான் க்ளைமாக்ஸில் பெப் இருக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ..?. சரண்யா அந்த ஊரில் உள்ள களவாணி பெண்ணை எடுக்க மாட்டேன் என்று சொல்லும் அஜயன் பாலா சரண்யா ப்ளாஷ்பேக் எதற்கு?  அதே போல பல இடங்களில் கண்டின்யூட்டி மிஸ்ஸிங்.. ஜி.

ஒரு கட்டத்திற்கு பிறகு காதலியை போலீஸோடு தேடும் காட்சிகளிலும், ஊருக்கு சமூக சேவை செய்ய வரும் ஸ்கூல் பிள்ளைகளோடு சமையல் வேலைக்கு வருபவளை பார்க்க ஸ்கூல் வாசலில் நிற்கும் காட்சிகளிலும் அலுப்பு தட்ட ஆரம்பித்துவிடுவது கண்டெண்டாக ஏதும் இல்லாததால் வரும் வெறுப்பு என்றே சொல்ல வேண்டும்.

முருகையனின் நண்பராக வரும் தீப்பெட்டி கணேசன் ஆங்காங்கே வ்ந்து கிச்சு கிச்சு மூட்ட முயல்கிறார். ஆனால் இம்மாதிரியான படங்களுக்கு ஏன் டெம்ப்ளேட் மாதிரியான ஒரே ஒரு நண்பன் கேரக்டர்? எல்லா படங்களிலும் ஒரு சிறுவனை போட்டிருப்பார்கள். இதில் உயரம் குறைந்தவர் அவ்வளவுதான்.

இடைவேளைக்கு முன் ஆங்காங்கே பளிச் பளிச்சென வரும் வசனங்களும், ஓவர்லாப்பில் வரும் வசனங்களும் லேசாய் புன்முறுவல் பூக்க வைக்கிறது. கப்பை திருடியவன் வீட்டிலிருந்து கப்பை வாங்க சரண்யா சண்டைபோடுமிடத்தில் அந்த வீட்டுக்கார அம்மா கப்பை எடுத்துக் கொண்டு வந்து இந்தாம்மா உன் கப் இதில குழம்பு கூட ஊத்தி வைக்க முடியாது என்று சொல்லிவிட்டு போவது உதாரணம். எங்கேயிருந்து பிடித்தீர்கள் அந்த கருத்த முறைப் பெண்ணை. அந்த பளீர் சிரிப்பும், வெள்ளந்தியான முகமும்.. இயல்பான வெட்கமும்.. மென் சோகமும். செம க்யூட்.  இனிமேல் உங்க போட்டோவை வச்சிக்க கூடாது என்று திரும்பிக் கொடுக்கும் இடத்தில் அவர் பேசும் வசனம் கைத்தட்டல் பெறுகிறது.

ரத்ததான முகாமில் வந்து பிரச்சனை செய்துவிட்டு, அப்பனில்லாதவனுக்கு எல்லாம் ரத்தம் கொடுப்பாங்கன்னு சொன்னதும் ரத்தம் கொடுக்க போவது, பையன் ஆட்டுக்கிடா போட்டியில் ஜெயித்த கப்பை தட்டி பறித்த எதிர்கோஷ்டியின் வீட்டிற்கே போய் அலப்பறை செய்துவிட்டு கப்பை வாங்கி வீட்டில் தூக்கியெறிந்துவிட்டு மகனை தேடுவது, பையனுக்கு ஒரு கால்கட்டை போட பால்சங்கை வெத்தலைபாக்கை வைத்து தாம்பூலம் மாற்றும் காட்சி, பையனுக்கு முடிவெட்ட ஓடிப்பிடித்து வெட்ட முயலும் காட்சி, க்ளைமாக்ஸ் காட்சியில் குத்துப்பட்ட வயிற்றில் துண்டைக் கட்டிக் கொண்டு பஸ்சேறி அட்மிட் ஆகும் காட்சி, ஜெயிலுக்கு போறதுக்கா புழுதிக் காட்டுல ஒழைசேன்.. என்று புலம்பும் காட்சி, களவாணி குடும்பப் பெண்ணை ஏற்கும் காட்சி  என்று சரண்யாவிற்கான  ஒவ்வொரு காட்சியியும் ஒரு குட்டி சிறுகதையாய் அமைத்திருப்பதையும், ஆனா ஊனா அருவாளை எடுத்துட்டு போய் வெட்டுவது, அதை வீரம் என்பது போன்று பில்டப் செய்வது, பழிவாங்குவது, எல்லாரையும் சாகடித்து படம் எடுத்தால் தான் லைவ்வான படம் என்கிற க்ளீஷேக்களை  கட்டுடைத்து ஒரு கிராமத்து ஃபீல் குட் படத்தை கொடுத்தற்காக இயக்குனரை பாராட்ட வேண்டும்.
தென் மேற்கு பருவக்காற்று- சாரல்…..
அனைவருக்கும் உங்கள் கேபிள் சங்கரின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Post a Comment

27 comments:

Ananth said...

Hmm..Aaana intha mathiri nalla padam ellam US'la release panna matingranga.


Thanks
Ananth,
Chicago

ஜி.ராஜ்மோகன் said...

தலைவா ! இந்த மாதிரி சிறய படங்கள் வரவேற்க்கப்படவேண்டும். சரண்யா தற்போது இருக்கும் அம்மா நடிகைகளில்
மிக அற்புதமாக எல்லாருக்கும் பொருந்துகிறார் . இன்னொருவர் லஷ்மி . தலைவருக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஆர்வா said...

வைரமுத்து இந்தப்படத்தை பத்தி மேடையில பேசினதுக்கு ஒர்த் இருக்கா? புத்தாண்டு வாழ்த்துக்கள் கேபிள்ஜி

சிவகுமார் said...

Eppadi thala ** டைட்டில் காட்சியிலிருந்து எண்ட் கார்ட் வரை ஒவ்வொரு ப்ரேமும் அவ்வளவு லைவாக இருக்கிறது... ,

Happy New Year 2011.

Rishoban said...

அப்ப இது நல்ல படமா?
அப்படீன்னா படம் ஓடாதே? :(

பிரபல பதிவர் said...

இது நீங்க எழுதின விமர்சனம்தானா தல... ஏன்னா கீழ்காணும் வரிகள் மிஸ்ஸிங்....



1) 150 கோடி பட ஒளிப்பதிவை விட இந்த படத்தின் ஒளிப்பதிவு லைவ்வாக அருமையாக இருக்கிறது....

2) 150 கோடி படத்தின் ஹீரோவின் அம்மாவின் நடிப்பை விட சரண்யா அம்மாவாக அட்டகாசமாக நடித்துள்ளார்...

உண்மைய சொல்லுங்க... நீங்களே எழுதின விமர்சனமா இல்ல மண்டபத்திலேர்ந்து வாங்கி வந்து பப்ளிஷ் பண்ணீருக்கீங்களா???

சண்முககுமார் said...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் boss



இதையும் படிச்சி பாருங்க

இருட்டில் கட்டிய தாலி

Unknown said...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Rishi said...

சங்கர் ஜி, அய்யய்யோ..படம் ஓரளவுக்கு நல்ல இருக்குனு சொல்லிட்டீங்களே... கமர்சியலா ஓடுமா..? படம் பார்க்க தூண்டுது உங்க விமரிசனம் ....

உங்க படம் சீக்கிரம் வரட்டும்.. நாங்க எல்லாம் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம்.. விமரிசனம் பண்றோம் னு .. பின்னி பெடல் எடுத்திடுறோம்... Happy new year !

kalil said...

தல, எப்படி இருக்கீங்க ?
எப்பவும் போல உங்க விமர்சனம் சூப்பர் ..
techinical விமர்சனம் நல்ல இருக்கு .ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல கிராம படம் .

நன்றி
கலீல்

வேழமுகன் said...

//ஆனா ஊனா அருவாளை எடுத்துட்டு போய் வெட்டுவது, அதை வீரம் என்பது போன்று பில்டப் செய்வது, பழிவாங்குவது, எல்லாரையும் சாகடித்து படம் எடுத்தால் தான் லைவ்வான படம் என்கிற க்ளீஷேக்களை கட்டுடைத்து///

ரௌடிகளை glorify செய்யும் படங்கள் தான் இப்போது கிராமத்து படங்கள் என்று கொண்டாடப் படுகிறது. வித்தியாசமான இந்தப் அறிமுகத்திற்கு நன்றி.

வேழமுகன்

'பரிவை' சே.குமார் said...

Nalla padaththukku nalla vimarsanam.
Wish u a happy new year to u and ur family members.

அருண் said...

நல்ல விமர்சனம்,எதிர்பார்ப்பை கூட்டியிருக்கு.
-அருண்-

Mohan said...

உங்கள் விமர்சனத்தைப் படித்தவுடன்,படம் பார்க்க வேண்டும்போல் உள்ளது. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Ganesan said...

கவிஞர் யாத்ராவின் “மயிரு ”- கவிதை தொகுப்பு வெளியீடு-புகைப்படங்கள்.

www.kaveriganesh.blogspot.com

Rishoban said...

sivakasi maappillai

உங்களால 150 கோடி Effect ல இருந்து வெளிய வரவே முடியாதா?
இந்த படம் ஏதோ நல்ல படம் மாதிரி தெரியாது இதுக்கு நடுவுலேயும் ஏன் தேவை இல்லாம 150 கோடி கருமத்தையெல்லாம் ஞாகப்படுத்திக்கிட்டு...அட போங்கையா

Unknown said...

இயக்குனர் சீனு ராமசாமியும், ஒளிப்பதிவாளர் செழியனும் பாராட்டப்பட வேண்டியவர்கள் ..

puduvaisiva said...

கேபிளாருக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வரும் 2011 - ல் பல புதிய கொத்து பாரோட்டா சாதனைகள் செய்ய வாழ்த்துகள்.

வினோ said...

அண்ணா புத்தாண்டு வாழ்த்துக்கள்..படம் பார்க்கும் ஆவல் இருக்கிறது இப்பொழுது...

Ba La said...

1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2. படம் பார்க்கும் ஆவல் அதிகரித்துள்ளது

3. மேலே உள்ள "Home, சிறுகதைகள், சாப்பாட்டுக்கடை, கொத்து பரோட்டா' குகளுடன் 'திரை விமர்சனம்' இணைக்கவும்

4. ”மண்டபத்திலேர்ந்து வாங்கி, மண்டபத்திலேர்ந்து வாங்கி” - எங்க சார் இருக்கு அந்த மண்டபம்?

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நல்ல படம்னு தோணுது, பாத்துடுவோம். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

R. Jagannathan said...

Happy New Year! - R. Jagannathan

செங்கோவி said...

பார்க்கத் தூண்டும் விமர்சனம்..பார்த்திருவோம்.

----செங்கோவி
திருவள்ளுவரும் ஹனிமூனில் வாங்கிய தர்ம(பத்தினி) அடியும்

pichaikaaran said...

நீங்களே எழுதின விமர்சனமா இல்ல மண்டபத்திலேர்ந்து வாங்கி வந்து பப்ளிஷ் பண்ணீருக்கீங்களா??

ஹா ஹா ஹா ஹா

Philosophy Prabhakaran said...

படத்தின் உண்மையான நாயகி சரண்யான்னு தான் சொல்லணும்..

a said...

சரண்யா ............. என்ன சொல்வது.......................

புத்தாண்டு வாழ்த்துக்கள் தல................

ராஜ நடராஜன் said...

நான் மேலோட்டமாக படம் பார்ப்பவன் என்பதால் உங்கள் விமர்சன நொள்ளைகள் கண்ணில் தெரியவில்லை:)

ஓரளவுக்கு வித்தியாசப்படுத்துபவர்களை இன்னும் கொஞ்சம் ஊக்குவிப்பதே கத்தி,அருவா சண்டைக் கலாச்சார இயக்குநர்களை பின் தள்ள வழி வகுக்கும்.

சராசரிக்கும்,கொஞ்சம் அதிக ரசனையாளர்களுக்கும் படம் நிச்சயம் பிடிக்கும்.