Thottal Thodarum

Dec 25, 2011

கொத்து பரோட்டா –26/12/11


மேலே நீங்கள் காணும் படங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்தது அல்ல. நேற்று மாலை சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு சப்வேயில் நடந்த ஒரு விபத்தின் போது எடுத்தபடம். சப்வேயின் மேலேயிருந்து விழுந்து இறந்து போய்விட்டதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.விபத்து நடந்து கிட்டத்தட்டஅரை மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கும். ஆனால் விசாரணைக்கு ஒரு பெரிய போலீஸ் படையே அங்கே வந்திருந்தும். ஒரு துணியை வைத்து போர்த்தி அந்த உடலை மறைத்திருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் ரோடெங்கும் வழிந்தோடும் ரத்தத்தைப் பார்த்து குழந்தையுடன் வந்த ஒர் நடுத்தர வயது பெண் அதிர்ந்து போய் கிட்டத்தட்ட மயங்கிப் போகும் நிலைக்கு வந்து குடுகுடுவென ஓடிப் போய் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். போலீஸார் கொஞ்சம் கவனிக்கலாமே..?
#################################

வருடம் முடியப் போகிறது. ஆளாளுக்கு இந்த வருடத்திய சூப்பர்ஹிட் பாடல்கள், படங்கள், அரசியல் நிகழ்வுகள் என்று லிஸ்ட் போடும் நேரம். ஹலோ எப்.எமிலிருந்து என்னிடம் பேட்டி எடுத்தார்கள். இந்த வருடத்திய தமிழ் சினிமாவைப் பற்றியும், அவர்கள் லிஸ்ட் செய்திருந்த படங்களைப் பற்றி, நடிகர், நடிகைகள் பற்றி, தமிழ் சினிமாவின் வளர்ச்சி எப்படி இருக்கும், இருக்க வேண்டும் என்ற என் ஆசைகளைப் பற்றியும் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினேன். வருகிற வாரத்திலிருந்து ஹலோ எப்.எம். தமிழ்நாடு முழுவதும் என் கருத்து தினமும் பாடல்களுக்கிடையே ஒளிபரப்பாகும் என்று சொன்னார்கள். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லவும். இந்த வாரம் புதிய தலைமுறையிலும் என் பேட்டி வந்திருக்கிறது.
##########################
செவிக்கினிமை
சமீபத்தில் கேட்டவுடன் பிடித்தது வேட்டை படத்தின் “பப்பபபா பப்பரப்பா” என்கிற பாடல் தான். நா. முத்துகுமார் எழுதி, யுவன் இசையமைத்து ப்பாடியிருக்கிறார். பாடல் விஷூவலாய் எப்படி இருக்குமோ தெரியவில்லை. சமீபத்திய ஸ்டைலான மேக்கிங் வீடியோவும் அதை எடுத்திருந்த விதமும் இண்ட்ரஸ்டிங். செம ரேஸியான யூத்துகளுக்கான பாடல். முத்துகுமார் கூட ஒரு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.  அந்த வீடியோவில்.
##############################
வர வர பேப்பரை திறந்தாலே தூக்கி வாரிப் போடுகிறது. விலைவாசி உயர்வு, அரசியல் எல்லாவற்றையும் விட, கவலைக்குள்ளாக்கும் விஷயம் அப்பா – மகன், கணவன் – மனைவி, குடும்பம் என்ற வார்த்தைகளுக்கெல்லாம் செண்டிமெண்டான அர்த்தம் இல்லாமல் போய்விடும் போலிருக்கிறது. அப்பா தன் மகனையும், மகன் தன் அப்பாவையும் ஆள் வைத்து கொள்ள முடிவு செய்து, இருவரும் ஒரே ஆளை நியமித்திருக்கிறார்கள். அந்த பெயிட் கில்லரோ, இரண்டு பேரையும் கொன்றுவிட்டு, அவர்களின் சொத்தையும் ஆட்டையை போட்டுவிட்டிருக்கிறான்.  அப்பா மகனுக்கு என்ன ப்ரச்சனை என்றால் மருமகள் மீது மாமனாருக்கும், கணவருக்கும் நடத்தையின் மேல் சந்தேகம் வந்து, அவளை நிர்வாணமாக்கி எரித்து கொன்றிருக்கிறார்கள். அந்தக் கேஸில் இருவரும் கைதாகி ஒரே ஜெயில் அறையில் இருந்த வேளையில்தான் மகன் தன் மனைவியின் சாவுக்கு தன் அப்பாதான் காரணம் என்று நினைக்க, அவர் மகன் தன் மீது பழி போடுகிறான் என்று காண்டாகி, அதே அறையில் இருந்த இன்னொரு கைதியிடம் சொல்லி, தனித்தனியாய் பேசி, முறையே அப்பா மகனையும், மகன் அப்பாவையும், கொல்லச் சொல்லியிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் என்னவென்றால் மனைவி தன் கணவனை சொத்துக்காக மகன்களின் உதவியோடு கொன்றிருக்கிறார். இன்னொரு ஊரில் தன் மகள் 5 பள்ளி மாணவர்களுடன் வைத்துக் கொண்ட செக்ஸ் காட்சிகளை மொபைல் போனில் வெளிவந்ததால் அவமானத்தில் தூக்கு மாட்டிக் கொண்டாள் என்றும், அதற்கு காரணமான ஐந்து மாணவர்களை கைது செய்து பிணத்தை வைத்துக் கொண்டு நடு ரோட்டில் ப்ரச்சனை பண்ணிய தாயை பற்றி வந்த அடுத்த நாள் செய்தி வேறு மாதிரி இருக்கிறது. கணவரின் தம்பியுடன் கள்ள உறவு, தன் மகளுக்கு எப்படி திருமணம் செய்து வைக்க முடியும் என்றும், அவளை கொன்று விடு என்று சொன்னதே தாய் தானாம். இதை கொலை செய்த சித்தப்பாவே சொல்லியிருக்கிறார். இனிமே செண்டிமெண்ட், குடும்ப உறவுகளின் மேன்மை போன்றவற்றை சினிமாவில் மட்டுமே பார்கக் முடியும் போலிருக்கிறது.
#############################
இந்த வருட புத்தக கண்காட்சிக்கு என்னுடய புதிய புத்தகமான “தெர்மக்கோல் தேவதைகள்” சிறுகதை தொகுப்பு வெளிவருகிறது என்று சொல்லியிருந்தேன் அல்லவா.. இப்புத்தகத்துடன் “உ” பதிப்பகம் என்.உலகநாதன் எழுதிய “நான் கெட்டவன்” என்கிற குறுநாவலும், யுவகிருஷ்ணா எழுதிய “அழிக்கப் பிறந்தவன்” நாவலையும் வெளியிடுகிறது. டிஸ்கவரி புக் பேலஸின் மூலம் நேரிலோ.. அல்லது ஆன்லைனிலோ வாங்கிக் கொள்ளலாம். புத்தகங்கள் வெளியாவதற்கு முன்பே.. ஆன்லைனிலும்.. நேரிலுமாய் நூற்றுக்கும் மேலான ஆர்டர்கள் கொடுத்து ஊக்குவிக்கும் வாசக நண்பர்களுக்கு நன்றிகள் பல. எல்லாப் புத்தகங்களையும் மொத்தமாகவோ, தனித்தனியாகவோ, வாங்குபவர்களுக்கு, பத்து சதவிகித கழிவுடன், தமிழகம் முழுவதும் இலவச டெலிவரியும் செய்யப்படும்.
 thermacol devathaikal Web Set 4
##############################
விரைவில் நம் சென்னை வலைப்பதிவர்கள், டீவீட்டர்கள், பேஸ்புக் நண்பர்கள் இணைந்து சென்னையில் குழு அமைத்து விழாவாக கொண்டாட இருக்கிறோம். அதற்கான கலந்துரையாடல் சனிக்கிழமை அன்று பதிவர் சந்திப்புடன், சிறப்பாய் நடந்தது. வருகிற பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி நடத்தலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். இந்த குழுவிற்கு ஒரு நல்ல பெயரை நீங்களும் ஆலோசனை கொடுக்கலாம். வருகிற புதன் குழுவின் பெயர் முடிவு செய்யப்படும். விழாவுக்கான பட்ஜெட், நிகழ்வுகள் போன்ற விஷயங்களை விரைவில் உங்களுக்கு அப்டேட் செய்கிறேன். உடன் உங்களுக்கு பிடித்தமான பெயரை தெரிவியுங்கள்.
#############################
உலகப்பட விழா சிறப்பாக நிறைவுற்றது. ஆடுகளத்திற்கு விருதும், எழுத்தாளர் பாஸ்கர்சக்திக்கு விருதும், சாகித்ய அகாடமி விருது பெற்ற.. சா. வெங்கடேசனுக்கு பாராட்டும் அளித்து கெளரவித்திருக்கிறார்கள். அதை விட இன்னொரு நெகிழ்வான விஷயம் எழுத்தாளர் பாஸ்கர்சக்திக்கு டிஸ்கவரி புக் பேலஸில் தனியே இயக்குனர்கள், எழுத்தாளர்கள், சேர்ந்து அளித்த பாராட்டு விழா. நான் தான் மிக லேட்டாய் போனேன் விழா முடிந்தவுடன். இருந்தாலும் வண்டியில் பின் தொடர்ந்து போயாவது அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டேன். மீண்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள் சார்..
###############################
சென்ற வாரம் இன்னொரு நிகழ்ச்சி. தன் மனைவியை டைவர்ஸ் செய்வதற்கு ஒரு நூதன வழியை கண்டு பிடித்தார் ஒருவர். மனைவி கணவனைப் பிரிந்து வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்க, மனைவியின் பெயரில் வேறு ஒரு பெண்ணை கொண்டு வந்து காட்டி, மீச்சுவல் கன்சர்னில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். இந்த விஷயம் கடைசி நேரத்தில்தான் மனைவிக்கு தெரிந்து ப்ரச்சனை உண்டாகியிருக்கிறது. அதற்கு முன் கோர்ட் விவாகரத்து கொடுத்துவிட, கணவர் வெளிநாட்டிற்கு எஸ்கேப் ஆகிவிட்டார். இதற்கு உடந்தையாக இருந்த வக்கீல்கள், மற்றும், மனைவியாக நடித்த பெண்ணை தேடி பிடித்திருக்கிறார்களாம். இந்த அகுடியா மட்டும் நிறைய பொண்டாட்டிக ஃபாலோ பண்ண ஆரம்பிச்சாங்க.. ஆம்பளைங்க பாடு அவ்வளவுதான்.
#################################
என் ட்வீட்டரிலிருந்து
ஒரு பெண் தன் காதலுனுடனான வாழ்க்கையை பற்றி யோசிப்பது சாதாரணம். அதே ஒரு ஆண் தன் காதலியுடனான வாழ்கையை பற்றி யோசிப்பது சீரியஸான விஷயம்.

ஒரே கல்பில் அடிக்காதே.. டிரிங்க் ஒரு பெண்ணுடன் சரசமாடுவதைப் போல, மெல்ல, மெல்ல ஃபோர்ப்ளேயுடன் ஆரம்பிக்க வேண்டும்.
ஆழ்மனதில் ஒரு கனவிருந்தால் அதை வெளியே விட்டுவிடாதே ஏனென்றால் கனவுகள் தான் அழகான நாளையை உருவாக்குகிறது.

உன் எண்ணத்தின் வண்ணத்தை மாற்று உன் வாழ்க்கை சிறக்கும்

எல்லா இதயங்களிலும் வலி இருக்கிறது சிலர் அதை கண்களுக்குள்ளும், சில புத்திசாலிகள் சிரித்தும் வெளிப்படுத்துகிறார்கள். 
###########################
ப்ளாஷ்பேக்

மிகப் பிரபலமான பாடல். வசீகரிக்கும் ட்யூனோ, அல்லது குரலோ, வீஷுவலோ இல்லாத இந்தப்பாடலில் அப்படி என்னதான் இருந்தது என்று சொல்ல முடியாவிட்டாலும், இப்போது கேட்டாலும் சுவாரஸ்யமாய் இருப்பது நிச்சயம். கே.ஜே.ஏசுதாஸின் முதல் பாடல் என்று சொல்கிறார்கள். எஸ்.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த பொம்மை படத்திலிருந்து

#################################
அடல்ட் கார்னர்
ஏழ்மையின் உச்சம்.
ஆணுறையை மீண்டும் மீண்டும் துவைத்து உபயோகிப்பது.

அறியாமையின் உச்சம்.
பரு என்று நினைத்து முலை காம்பில் பேர் அண்ட் லவ்லி தேய்ப்பது.

லட்சியத்தின் உச்சம்.
ஒரு எறும்பு யானையை கற்பழிக்கும் நோக்கத்தோடு அதன் காலில் ஏறுவது.

வேலை இல்லா திண்டாட்டம்...
ஒரு விலைமகளின் தொடை இடுக்கில் சிலந்தி கூடு கட்டுவது.

பொறுமையின் உச்சம்
ஒரு கணவன் தன் மனைவியுடன் படுப்பதற்கு நீண்ட வரிசையில் காத்து நிற்பது..

தேசபக்தியின் உச்சம்:
கதர் காண்டம் அணிவது

சோம்பேறிதனத்தின் உச்சம்
உறவுக்கு தயாராகி, நிலநடுக்கத்திற்கு காத்திருப்பது

போட்டியின் உச்சம்
நீர்வீழ்ச்சியைஎதிர்த்து ஒன்னுக்கு அடிப்பது
###################################
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

20 comments:

காவேரிகணேஷ் said...

நள்ளிரவு 12.30 க்கு தொடர்ந்து கொத்து புரோட்டாவை வாரம்தோறும் தவறாமல் பதிவிடுவதை வாழ்த்துகிறேன்...

காவேரிகணேஷ் said...

கேபிள், யுவா, உலகநாதன் தங்களின் புத்தக படைப்பிற்கு வாழ்த்துக்கள்...

Advocate P.R.Jayarajan said...

// ஆனால் விசாரணைக்கு ஒரு பெரிய போலீஸ் படையே அங்கே வந்திருந்தும். ஒரு துணியை வைத்து போர்த்தி அந்த உடலை மறைத்திருக்கலாம். //
மனித நேயம் குறைந்து விட்டது.

பிரபல பதிவர் said...

nice

Lakshman said...
This comment has been removed by the author.
Lakshman said...

அந்த வீடியோ என்ன ஒரு புது ஐடியா! இந்த மாதிரி ஸ்டூடியோவில் மியூசிக் டைரக்டர், ஹீரோ, டைரக்டர் வச்சு முன்னாடி பார்த்ததே இல்லை. கொலைவெறி போங்க.

Rekha raghavan said...

குழுவிற்கான பெயர் பரிந்துரை: " பதிவர் முக கீச்சு விசைகள் "

Anonymous said...

சென்னை பதிவர் சந்திப்பு..தலைப்பு: தெர்மக்கோல் தேவர்கள்! :-)

Unknown said...

கேபிள், யுவா, உலகநாதன் தங்களின் புத்தக படைப்பிற்கு வாழ்த்துக்கள்...

நெல்லை கபே said...

அடல்ட் கார்னரில் வந்தவைகளை ஒவ்வொன்றாக தனித்தனி பதிவுகளிலேயே போட்டிருக்கலாம் போல...எட்டும் அருமை...

என் வலையில்'
மாயன் : அகமும் புறமும்: திருச்சி துவாரகையில் இருந்து ரொம்ப தூரமோ?
மாயன் : அகமும் புறமும்: ஒஸ்தி

CS. Mohan Kumar said...

புது புத்தகத்துக்கு வாழ்த்துகள். சனி கிழமை ஊரில் இல்லை. எனவே தான் வரலை. பதிவர் விழா கலக்கிடலாம்.

யுவகிருஷ்ணா said...

தோழர்!

சினிமா வியாபாரம் தொடர்பான உங்கள் பேட்டியை புதிய தலைமுறை இதழில் வாசித்தேன். நன்றாக இருந்தது.

வாழ்த்துகள்!

KARTHIK said...

வாழ்த்துக்கள் தலைவரே :-)))

Darren said...

//வேலை இல்லா திண்டாட்டம்...
ஒரு விலைமகளின் தொடை இடுக்கில் சிலந்தி கூடு கட்டுவது//

Super

R. Jagannathan said...

இந்த மாதிரி accident விக்டிம்களை முதலில் பார்க்கும் ட்ராஃபிக் போலீசோ அல்லது மற்ற போலிசோ உடனே விடியோ / ஃபோட்டோ எடுத்துவிட்டு, ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்ல வேண்டாமா? அவர்கள் தானே உயிர் இருக்கிறதா, கோமாவில் இருக்கிறாரா என்று பார்த்து சர்டிஃபை செய்யவெண்டும்?

பதிவர்/ FB / twitters சந்திப்புக்கு என் தலைப்பு: “வலை வீசும் மீன்கள்”! கன்சிடர் செய்யவும்!

-ஜெகன்னாதன்.

Prem S said...

//பொறுமையின் உச்சம்
ஒரு கணவன் தன் மனைவியுடன் படுப்பதற்கு நீண்ட வரிசையில் காத்து நிற்பது..//ஹா ஹா ஹா கலக்கல்

Ponchandar said...

Hight of noise
Two skeleton f*@#ing on a tin roof

பிரபல பதிவர் said...

டெஸ்ட் பின்னூட்டம்

பிரபல பதிவர் said...

டெஸ்ட் பின்னூட்டம்

by... ex சிவகாசி மாப்பிள்ளை....

and now the பிரபல பதிவர்

chinnathambi said...

சத்யம்மூர்த்தி பவண் பக்கம் சொல்ல வ்வேண்டியது
”தேசபக்தியின் உச்சம்:
கதர் காண்டம் அணிவது”

அருமை
அருமை

வயிறு புண்ணாச்ச்சு