நிர்ணையிக்கப்பட்ட கட்டணத்தில் ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு இப்போதுதான் புரிகிறது இத்தனை நாளாய் எப்படி நாம் சுரண்டபப்ட்டிருக்கிறோம் என்று. நூறு ரூபாய்க்கும் இருநூறு ரூபாய்க்கு போன இடங்களுக்கு எல்லாம் வெறும் எழுபதுக்கும் என்பதுக்கும் சென்று வருவது மகிழ்ச்சியை தராதா என்ன?. இத்தனைக்கும் காரணம் அரசு எடுத்து வரும் கடும் நடவடிக்கைதான் காரணம். இந்த நடவடிக்கைகளினால் தான் அவர்களும் பயந்து மீட்டர் போட்டு ஓட்டுகிறார்கள். பல ஏரியாக்களில் ஸ்டாண்டுகளில் இருக்கும் ஆட்டோக்காரர்கள் இன்னமும் புதிய கட்டணத்திற்கு மாறாமல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல லோக்கலில் மட்டுமே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது அராஜகம் தாங்காமல் மக்கள் ஒரு நாலடி நடந்து வந்து மெயின் ரோட்டில் ஓடும் மீட்டர் போட்ட ஆட்டோக்களை தேட ஆரம்பித்துவிட்டார்கள். அரசும் ஊருக்குள்ளேயே ஓடும் ஆட்டோக்களை பிடிக்க தனிப்படை அமைத்திருப்பதாய் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சென்னை ஆட்டோக்களில் இருபது சதவிகிதப் ஆட்டோக்கள் தான் புதிய கட்டண அட்டையும், மீட்டரும் பொருத்தியிருப்பதாய் தெரிகிறது. நிஜமாகவே உழைத்து வண்டியோட்டி பிழைக்க நினைக்கும் ஆட்டோக்காரர்கள் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாய் இளைஞர்கள். அவர்கள் வாடிக்கையாளர் கேட்காமலேயே மீட்டர் போட்டு ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு செய்யும் முனைப்போடு, வாடிக்கையாளர்களாகிய நாமும் தொடர்ந்து மீட்டர் போடும் வண்டிகளை மட்டுமே பயன்படுத்தி, அப்படி பயன்படுத்தாத வண்டிகளின் நம்பரை குறித்துக் கொண்டு புகார் அளிக்க பழக வேண்டும். எதையும் கேட்டே பெற்று வரும் சமூகத்தில் வாழ வேண்டியிருப்பதால். கேளூங்கள் கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.
புகையிலை அயிட்டங்களை விற்பது சட்டப்படி குற்றம் என்று சட்டம் இயற்றி மாதங்களாகியும், இன்று வரை எல்லா பெட்டிக்கடைகளிலும் கிடைத்துக் கொண்டுதானிருக்கிறது. என்ன நான்கு மடங்கு விலையில். அவ்வப்போது சோதனையில் இத்தனை லட்சம் புகையிலை பிடிபட்டது என்று செய்திகள் வருவது என்னவோ குறையவில்லை. கடைகளில் கிடைப்பதும் குறைவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சினிமா நூற்றாண்டு விழாவை பெரும்பாலான தயாரிப்பாளர்கள் கண்டு கொள்ளவேயில்லை. காரணம் ஒருவார படப்பிடிப்பு நிறுத்தம்.பல தயாரிப்பாளர்களுக்கு அதுவும் வெளியூர்களில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு ரெட்டை செலவு. ஒரு வார காரம் எல்லாரையும் சும்மா உட்கார வைத்து சாப்பாடு போட்டு, செலவு செய்யவும் முடியாது. அதே நேரத்தில் ஷூட்டிங்கை பேக்கப் செய்து கொண்டு ஒரு வாரத்திற்காக ஊர்திரும்பி, மீண்டும் ஷுட்டுக்கு போகும் செலவு குறைந்த பட்சம் நான்கைந்து லட்சங்களுக்கு மேல் வந்துவிடும். தேவையில்லாத செலவும், இம்சையும் தான் மிச்சம். நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கிறவர்கள் மட்டும் படப்பிடிப்பிலிருந்து அனுமதி வாங்கிக் கொண்டு பங்கு பெற செய்திருக்கலாம். அதிலும் கிட்டத்தட்ட கலைமாமணி விருது போன்ற ஒரு நிகழ்ச்சியாய் இந்த நூற்றாண்டு விழா அமைந்ததில் சினிமாவில் இருக்கும் சினிமாக்காரர்களுக்கு வருத்தமே. நிறைய பேருக்கு என்ன நடக்கிறது என்று கூட தெரியாது என்கிறார்கள். எப்படி கொண்டாட வேண்டிய விழா..? வழக்கம் போல குத்தாட்டம் போட்டு டிவி சேனலுக்கு விற்று அதை காச்சாக்கி பார்க்கும் விழாவாக இதை கொண்டாடியதை விட இதையும் சும்மா கடந்து போக விட்டிருக்கலாம். வாழ்க சினிமா நூற்றாண்டு.

இணையமெங்கும் பாராட்டித் தள்ளப்பட்ட மூடர்கூடம் படம் ரெண்டு நாளைக்கு மேல் சென்னையைத் தவிர மற்ற ஊர்களில் ஆட்களின் வரத்தில்லாமல் தூக்கப்பட்டுவிட, சென்னையில் கொஞ்சம் ஓரளவுக்கு பரவாயில்லை என்று சொல்லிக் கொள்ளும் நிலையில் அடுத்த வாரம் ரெண்டு மூன்று படங்கள் வெளிவந்த நிலையில் ஒரு ஷோவும், கால் ஷோவுமாய் ஆகிவிட்டது. நல்லாருக்கு ஓகே.. ஒரு நடை போய் பார்க்கலாம் என்று நினைத்தாலும் போய் பார்க்க முடியாத நிலை. காரணம் வாரத்திற்கு தொடர்ந்து நான்கைந்து படங்கள் வெளி வந்து கொண்டிருப்பது. அப்படி வெளியிடப்படும் படங்களின் நிலையும் ஒருவாரமோ, ரெண்டு வாரமோதான் என்கிற நிலையில் க்யூவில் வெளியாக தயாராய் இருக்கும் படங்கள் மட்டுமே குறைந்த பட்சம் இருபது படங்களுக்கு மேல் இருக்கிறது. சமயங்களில் வெளியாகி வெற்றிகரமாய் ஓடிக் கொண்டிருக்கும் வருத்தபடாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் வேறு கிடைத்த இடத்தை கெட்டியாய் பிடித்து பவனி வர புதிய படங்களுக்கு டேட் இல்லை. இந்த நிலை சீராக்கப்பட வேண்டிய ஒன்று. புதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் உடன் கவனிக்க வேண்டும்
@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
என் ட்வீட்டிலிருந்து
எத்தனை நாளைக்கு குண்டு சட்டிக்குள்ள வண்டி ஓட்ட முடியும். லோக்கலில் மட்டும் மீட்டர் போடாம ஆட்டோ ஓட்டுபவர்கள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பாண்டி லொக்கேஷன்களை பிக்ஸ் செய்வதற்காக சென்ற வாரம் ஒரு ட்ரிப் அடித்திருந்தோம். ஊரில் உள்ள பாதி படங்கள் அங்கே தான் ஷூட்டிங் நடக்கிறது. அதுவும் ரோடு சம்பந்தப்பட்ட விஷயமாய் இருந்தால் அங்கே தான் கன்பர்மாக நடை பெறுகிறது. காரணம் புதுவை அரசு படப்பிடிப்புகளுக்கு செய்து தரும் வசதிகள். குறைந்த கட்டணம், எல்லா இடங்களிலும் ஷூட் செய்ய வசதியாய் போலீஸ் பாதுகாப்போடு அனுமதிக்கிறார்கள். அதை விட சுவாரஸ்யமான் விஷயம் அங்கே கிடைக்கும் ப்ளாக் & கோல்ட் சரக்கும், கிங்பிஷர் ப்ளூ, அல்ட்ரா வகை பியர்களும். அட அட..அட.... சரக்கிலாகட்டும், ஷூட்டிங் பர்மீஷனாகட்டும் பாண்டி பாண்டிதான்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A married woman's sex life is very like the lottery - same old balls, very little chance of a 69, and it casually ends in a rollover!
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
அதே நிலை ....
One more title for a new film !?
சுவையாகவும் இருக்கிறது
வாழ்த்துக்கள்