உலக சினிமா - காஞ்சீவரம்

kachivaram-tamil-movie எவ்வளவு நாட்களுக்குதான் நாம் வேற்று மொழி படங்களையே பார்த்து உலக் சினிமா என்று பெருமைபட்டு கொண்டிருப்பது. இதோ இப்போது நம் மொழியில், நம் தமிழ் மொழியில். ஊருக்கெல்லாம் பட்டு சேலை நெய்யும் ஒரு நெசவாளியின் வாழ்கை போராட்டத்தை உள்ளம் உருக, நெகிழ்வாக சொல்லியிருக்கிறார்கள்.

வேங்கடம் ஜெயிலிலிருந்து பரோலில் வருவதிலிருந்து ஆரம்பிக்கிறது படம். பெரும் மழையினூடே ஓடும் அந்த கால பஸ்ஸில் தன் வாழ்கையை நினைத்து பார்க்கிறான் வேங்கடம்.
kanchivaram-02

தனக்கு பெண் குழந்தை பிறந்த நாளில்  அவளின் திருமணத்துக்கு பட்டு புடவை தருவதாய் சொன்னதை ஊரே பேராசை என்று சொல்லும்போதே அந்நாளைய நெசவாளர்களின் வாழ்கை நிலையை கண் முன்னே விஸ்தாரமாய் விரிகிறது.
Kanchivaram-new-stills_03

குறைந்த கூலி, அந்நாளின் வேலை செய்யும் முறை. முதலாளிகளீன் அடக்குமுறை. ஏழை நெசவாளிகளின் வாழ்க்கை. என்று ஒவ்வொரு காலகட்டத்தையும் விரிக்கிறார்கள் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும். 

தன் பெண்ணின் பட்டுபுடவைக்காக வைத்திருக்கும் பணம் தன் தங்கையின் வாழ்க்கை பிரச்சனைக்கு செலவாகி போக, வேறு வழியில்லாமல்  தறியிலிருந்து வாயினுள் பட்டு நூலை அடக்கி வருடங்களாய் கொஞ்சம், கொஞ்சமாய் சேர்த்த பட்டு நூலை கொண்டு அவன் தன் மக்ளுக்காக நெய்ய ஆரம்பிக்கிறான். kanchivaram-stills04

இதன் நடுவே கம்யூனிஸ்ட் கட்சிகளின்பால் ஈடுபாடு ஏற்பட்டு, அதனால் ஏற்படும் நெசவாளர்களின் உரிமை பிரச்சனை, தெரு நாடகம், போன்றவற்றில் ஈடுபாடு, கம்யூனிஸ்ட் கட்சியின் லோக்கல் தலைவராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டம் நடக்கையில், தன் பெண்ணின் திருமணம் நிச்சயம் செய்யப்பட,  மகளுக்கான சேலையை நெய்வதற்க்கு பட்டு நூல் வேண்டும் என்பதற்காக, மூன்று மாதமாய் நடந்த போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்புவதும், வெளியே வரும் போது தன் நண்பனாலேயே பேச முடியாமல் திருட்டில் மாட்டி கொள்வதும்,  அதன் பிறகு நடக்கும் நிகழ்வுகள் நிதர்சனம்.
Kanchivaram-new-stills_03

தான் நெய்த சேலை தன் மகளின் பிணத்துக்கு கூட முழுசாய் மூட முடியாத அளவிற்க்கு இருப்பதை தன்நிலை மறந்த நிலையில் மறுபடி, மறுபடி  மூட எத்தனிக்க,  டயம் ஆச்சு கிளம்பலாம் என்று குரலை கேட்டு மனம்பிறழ்ந்த ஒரு சிரிப்போடு படம் நிறைவடைகிறது.

வேங்கடமாய் வாழ்ந்திருக்கிறார் ப்ராகாஷ்ராஜ்,  இதைவிட அவரை பாராட்ட வார்த்தையிருக்குமா என்று தெரியவில்லை. ஸ்ரேயா ரெட்டி குறையொன்றுமில்லை. அளவான நடிப்பு, முதலாளியா வரும் அந்த குண்டு மனிதர், துபாஷாக வருபவர், வேங்கடத்தின் நண்பன், அந்த கம்யூனிஸ்ட் தோழர், என்று எல்லோரும் த்ங்கள் பங்குக்கு நிறைவாய் செய்திருக்கிறார்கள்.

திருவின் அருமையான ஒளிப்பதிவு, படம் முழுவதும் விரவியிருக்கும் செமி செபியா டோன் நம்மை அந்த நாட்களுக்கே இட்டு செல்கிறது.

சாபு சிரிலின் ஆர்ட் டைரக்‌ஷனுக்கு ஒரு சலாம், அந்த கால மனிதர்களின் உடை, சைக்கிள், கார், வீட்டு சாமான்கள், தறி, உடைகளின் வண்ணங்கள் என்று மனுச்ன பின்னியிருக்கிறார்.

எம்.ஜி.ஸ்ரீகுமரின் இசையில் ஒரு பாடல், அருமை, பிண்ணனி இசை யை தேவையான இடத்தில் மட்டும் பயன்படுத்திவிட்டு மற்ற இடங்களில் எபக்டுகளிலேயே நகர்த்தியிருப்பது அருமை.
 kanchivaram-stills02

இயக்குனர் ப்ரியதர்ஷன் படம் முழுவதும் நிற்கிறார். முக்கியமாய் கொள்கையின் பால் ஈடுபாட்டுடன் தொழிலாளர் ஒற்றுமை குறித்தது பேசும் காட்சியிலாகட்டும், அதே மனிதன் ஒரு கம்யூனிஸ்ட் தகப்பனாய் யோசிக்கும் போது, தன் கொள்கையை இழக்கும் காட்சியில், அவர் பேசும் வசனங்களாகட்டும், தன் மகளுக்கு கல்யாண பரிசாய் பட்டு புடவைக்காக சேர்த்து வைத்திருந்த காசை தன் தங்கையின் வாழ்கை பிரச்சனைக்காக கொடுத்தவுடன், அதை சமாளிக்க அவர் பொய் சொல்வதும், கணவன் மனைவி இருவரும் அந்த சமயத்தில் பேசிக் கொள்ளும் காட்சிகளின் வசனம், அந்த இயல்பு, அதே போல் தன் மகள் பிறந்தவுடன் தன் கையாலே பால் சோறு கொடுக்கும் தகப்பன் கையாலேயே, எலிபாஷாண சோறு கொடுகும் காட்சியில் பால் சோறு கொடுக்கும் போது போடப்பட்ட பாடலை மறுபடி உபயோகப்படுத்தி நம் மனதை நெகிழ வைக்கிறார். . நிஜமாகவே உலக தரத்தில் ஒரு நெசவாள தமிழனின் வாழ்கையை காட்டியிருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன். ஹாட்ஸ் ஆப் ப்ரியதர்ஷன்

உலகம் முழுவதும் இது வரை முன்று இண்டர்நேஷனல் படவிழாக்களில் பங்கு பெற்றிருகிறது.

காஞ்சிவரம்  -  உலக சினிமா இந்தியாவிலிருந்து.

பார்த்ததில் பிடித்தது.


என்ன வாய்ஸ்பா.. சூப்பர்ப்….  கேட்டு பார்த்து என் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.  உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாய் பின்னூட்டமிட்டு, பாராட்டுங்கள். இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பாவம், கேட்டால் உருகாதவர்கள் இருக்கமாட்டார்கள்.. அதிலும் இரண்டாது சரணத்தில்  என்ன அழகான மாடுலேஷன், பின்னீட்டே அனாகா.. வாழ்த்துக்கள்





Blogger Tips -நிதர்சன கதைகள் -6- ஆண்டாள் படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Comments

உடம்பு சரியில்லேன்னா ஆடாம, அசையா படுத்திருக்கணும்.. இப்படியெல்லாம் ஆடுனா உடம்பு திரும்பி படுத்திரும்..!

யார் உம்மை இப்ப இதுக்கு விமர்சனம் எழுதச் சொன்னது..?

எல்லாத்தையும் நீரே எழுதிட்டா, அப்புறம் நாங்கள்லாம் என்னதான் எழுதுறது..?!
ஆஹா.. இன்னிக்கு நான்தான் பர்ஸ்ட்டா..?

அதுனால ரெண்டாவதா ஒரு பின்னூட்டத்தையும் போட்டிருவோம்..!
\\காஞ்சிவரம் - உலக சினிமா இந்தியாவிலிருந்து.
\\

அழகா சொன்னீங்க ...
படம் பார்க்க தூண்டி விட்டீர்கள் :)
உளறலில் ரவி அறிமுகப்படுத்தியதில் இருந்து தினமும் அனகாவின் பாட்டை கேட்கிறேன்

prodigy என்ற சொல்லின் அர்த்தம் புரியாதவர்கள் இந்த பாடலை கேட்டு தெரிந்து கொள்ளலாம்
//உளறலில் ரவி அறிமுகப்படுத்தியதில் இருந்து தினமும் அனகாவின் பாட்டை கேட்கிறேன்

prodigy என்ற சொல்லின் அர்த்தம் புரியாதவர்கள் இந்த பாடலை கேட்டு தெரிந்து கொள்ளலாம்///

நீங்கள் சொன்னது சரி புருனோ. நிஜமாகவே pordigy தான்.. ஒரிஜினல் பாட்டை கேட்ட போது உருகியதைவிட திரும்ப, திரும்ப, கண்களில் உற்சாக கண்ணீர் வழிய வைக்கிறாள் இவள்.
//அழகா சொன்னீங்க ...//

நன்றி ஜமால். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
//யார் உம்மை இப்ப இதுக்கு விமர்சனம் எழுதச் சொன்னது..?

எல்லாத்தையும் நீரே எழுதிட்டா, அப்புறம் நாங்கள்லாம் என்னதான் எழுதுறது..?!//

நீங்க எழுதிட போறீங்க்ண்னுதான் நான் முந்திகிட்டேன்.
இந்த வீடியோவிலிருந்து ஓலியை மட்டும் தனியாக பிரித்து MP3 கோப்பாக மாற்ற முடியுமா

யாராவது உதவுங்கள் :) :)
பிரியதர்ஷன், பிரகாஷ்ராஜை வாழ்த்த வயதில்லை. எனவே நன்றி.

அனாகாவுக்கு வாழ்த்துக்கள்.
//இந்த வீடியோவிலிருந்து ஓலியை மட்டும் தனியாக பிரித்து MP3 கோப்பாக மாற்ற முடியுமா
//

இதையேத்தான் நானும் கேட்கணும்னு நினைச்சேன். நீங்க கேட்டுட்டீங்க.. யாராவது உதவுங்களேன்.
//பிரியதர்ஷன், பிரகாஷ்ராஜை வாழ்த்த வயதில்லை. எனவே நன்றி.

அனாகாவுக்கு வாழ்த்துக்கள்.//

தலைவரே.. வெறும் வாழ்த்துக்கள் மட்டும் போதாது தலைவரே.. நீஙக் ரசிச்ச அனுபவத்தை சொல்லுங்க.. நிஜமாகவே மைண்ட் ப்ளோயிங்.
Anonymous said…
இசை ஒரு போதை என்பதை இப்போது நம்புகிறேன்.
http://www.dvdvideosoft.com/guides/dvd/convert-YouTube-to-MP3.htm

மேலே சொன்ன இணைப்பிலிருந்து சாப்ட்வேரை டவுன்லோட் செய்து கொண்டு எந்த வித மான யூடியூப் வீடியோ ஆடியோவையும் எம்.பி3 ஆக மார்றி கொளள முடியும். நான் மாத்திட்டேன்.
//உடம்பு சரியில்லேன்னா ஆடாம, அசையா படுத்திருக்கணும்.. இப்படியெல்லாம் ஆடுனா உடம்பு திரும்பி படுத்திரும்..!//

ஆடாம அசையாம படுத்திருக்கிறதுக்கு நான் என்ன உங்கள மாதிரி வயசானவனா..யூத்துண்ணே..
Raju said…
பிரகாஷ்ராஜ்னா சும்மாவா....?
Ganesan said…
ஆடாம அசையாம படுத்திருக்கிறதுக்கு நான் என்ன உங்கள மாதிரி வயசானவனா..யூத்துண்ணே.



இந்த மாதிரி வார்த்தையெல்லாம் நாங்க கேட்கனும்னு விதி இருந்தா யாரு என்ன செய்யமுடியும்.அடிச்சு ஆடுங்க அப்பு.
Anonymous said…
இந்த காஞ்சிவரம் படத்தை சிபிஎம் கட்சியினர் எதிர்த்தனர் என்று கேள்விப்பட்டேன், அவர்களை பேன்ற டுபாக்கூர் கம்யூனிஸ்டுகள் எதிர்க்கும் போதே முடிவு செய்தேன் இது நல்ல படமாகத்தான் இருக்கும். (அவர்கள் அன்பே சிவம் என்ற கம்யூனிச அவதூறு படத்தை சிலாகித்து எழுதியது இங்கு நினைவு கூற தக்கது) உங்கள் விமர்சனம் என் எண்ணத்தை உறுதி செய்துவிட்டது.
Anonymous said…
//prodigy என்ற சொல்லின் அர்த்தம் புரியாதவர்கள் இந்த பாடலை கேட்டு தெரிந்து கொள்ளலாம்//

உண்மைதான்,நல்ல குரல் வளம். இதில் இளையராஜாவின் பாடலை பாடியிருந்தால் அபாரமாக இருந்திருக்கும் இந்தப் பாடலே வெகு சுமார் ரகம் என்பதால் இவ்வளவு அருமையான குரலில் ஒரு நல்ல பாடலை கேட்க முடியவில்லை என்ற ஆதங்கமே மிஞ்சியது. எப்படித்தான் மலையாள மண் இப்படிப்பட்ட பாடகர்களை உற்பத்தி செய்கிறதோ?
Anonymous said…
படத்தின் ஊடே இழையோடும் காவலரின் தொப்பி நகைச்சுவை அருமை.

அவர் (காவலர்) பெயர் தெரியுமா கேபிளாரே?
butterfly Surya said…
Thanx Cable.

சென்ற வருட பல இந்திய உலக திரைப்படவிழாவிக்களில் திரையிடப்பட்டது.

அப்போது பார்க்க இயலவில்லை.

கண்டிப்ப்பக பார்க்கவேண்ண்டும்.

தலை சொல்வது போல உடம்பையும் பாருங்கோ...

{சும்மா போட்டு தாக்கதிங்க}
நான் இன்னும் படம் பார்க்கவில்லை.ஆனால் உங்கள் தரமான விமர்சனம் படத்தையும் தரமான பாடம் என்றே சொல்கிறது.வெகு நன்று ஷங்கர்.
//இந்த மாதிரி வார்த்தையெல்லாம் நாங்க கேட்கனும்னு விதி இருந்தா யாரு என்ன செய்யமுடியும்.அடிச்சு ஆடுங்க அப்பு.//
யாருப்பா அது.. உண்மைதமிழன் காவேரி கணேஷ விட்டு எழுத சொல்லியிருக்காரு..இத நா வன்மையா கண்டிக்கிறேன்.
/நான் இன்னும் படம் பார்க்கவில்லை.ஆனால் உங்கள் தரமான விமர்சனம் படத்தையும் தரமான பாடம் என்றே சொல்கிறது.வெகு நன்று ஷங்கர்.//

நிச்சயமாய் மிக நல்ல படம் சார். கண்டிப்பாய் பாருங்கள்.
//உண்மைதான்,நல்ல குரல் வளம். இதில் இளையராஜாவின் பாடலை பாடியிருந்தால் அபாரமாக இருந்திருக்கும் இந்தப் பாடலே வெகு சுமார் ரகம் என்பதால் இவ்வளவு அருமையான குரலில் ஒரு நல்ல பாடலை கேட்க முடியவில்லை என்ற ஆதங்கமே மிஞ்சியது//

மருத்துவரே. இளையராஜாவின் பாடலை பாடியிருக்க முடியாது. ஏனென்றால் அந்த வாரம் ரஹ்மான் சிறப்பு வாரம் அதனால் அதைத்தான் பாட வேண்டும். இளையராஜாவின் பாடலையும் பாடியிருக்கிறார். யூடியூபில் போய் பார்க்கவும்.
இளையராஜாவை உயர்த்துவதற்காக, இந்த பாடலை சுமார் பாடல் என்று சொல்வதை மட்டும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. சார்.
/தலை சொல்வது போல உடம்பையும் பாருங்கோ...

{சும்மா போட்டு தாக்கதிங்க}///

மிக்க நன்றி வண்ணத்து பூச்சியாரே.. எவ்வளவு நேரம்தான் வீட்டிலேயே உட்கார்ந்து கிடக்கிறது..
அனஹாவின் பாட்டைக் கேட்டு...சரஸ்வதியை மிஞ்சிய தெய்வம் இல்லை என்று அவ்வப்போது அவள் நிரூபித்துக் கொண்டிருக்கும் கணங்கள் இவை.இந்தப் பாட்டில் அவள் பரிபூரணமாய் ஏ.ஆர்.ரஹ்மானின் மீதும் அனஹாவின் மீதும் இறங்கித் தரிசனம் தந்திர்ருக்கிறாள்.நனறி ஷங்கர்,நன்றி.
Anonymous said…
சுஹாசினி சொல்வது போல குறை கூற ஆரம்பித்தால் கூறிக்கொண்டே போகலாம் எல்லாவற்றிர்க்கும்.

ஆனால் என் எண்ணம் ஏஆர் அல்லது இசைஞானி இசையமைத்திருந்தால் பிரம்மிப்பு இன்னும் இரட்டிப்பாயிருக்கும். ஒருவேளை அவர்கள் இல்லாமலும் இவ்வுலகம் வாழும் என்ற பிரியதர்ஷனின் ஈகோ காரணமோ?

ஷ்ரேயா திறமையானவர். அவரை ஏய்..ஆய்..என்று கத்தவிட்டவர்களுக்கு மத்தியில் பிரியதர்ஷன் பாராட்டப்பட வேண்டியவர்.
Anonymous said…
//இளையராஜாவை உயர்த்துவதற்காக//

நானெல்லாம் பின்னூட்டம் போட்டு உயர்த்துகின்ற நிலையில் அவர் இல்லை. என்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன் அவ்வளவே. ஒருவரை மட்டம் தட்டுவதர்காகவே பின்னூட்டம் இட்டுக்கொண்டிருப்பவர் பதிவுலகில் இருப்பதாக கேள்வி அது நானில்லை

இப்படி ஒரு நிகழ்ச்சியே உங்கள் பதிவை பார்த்தபிறகுதான் தெறியும். அதற்கு நன்றி மற்ற விவரங்களை நான் யூடியூபில் பார்க்கிறேன்

மேலும் என்னுடைய கருத்து இது நல்ல பாடல் இல்லையென்பது. இதன் இசை, சுவரங்கள், மெட்டு ஆகியவை குழப்பமாக அமைக்கப்பட்டு இருப்பதால் அப்படி உணர்கிறேன். அதே நேரத்தில் ரஹ்மான் ஆனந்த பைரவி ராகத்தில் மெட்டமைத்திருக்கின்ற பாடல்கள் இதை விட மிக மிக அருமையாக இருக்கும்.

என்னுடைய கருத்தை நீங்கள் மிக நாகரீகமாக எதிர்கொண்டதற்கு நன்றி
//எப்படித்தான் மலையாள மண் இப்படிப்பட்ட பாடகர்களை உற்பத்தி செய்கிறதோ?//

திறமையான இசையமைப்பாளர்களின் பாடல்களை தேர்ந்தெடுத்து பாடுவதால்
Anonymous said…
//நானெல்லாம் பின்னூட்டம் போட்டு உயர்த்துகின்ற நிலையில் அவர் இல்லை//

யார் பின்னூட்டம் போட்டாலும் உயர முடியாத நிலையில் தான் இருக்கிறார்.
//ஆனால் என் எண்ணம் ஏஆர் அல்லது இசைஞானி இசையமைத்திருந்தால் பிரம்மிப்பு இன்னும் இரட்டிப்பாயிருக்கும். //

வழிமொழிகிறேன் :)
//ஒருவேளை அவர்கள் இல்லாமலும் இவ்வுலகம் வாழும் என்ற பிரியதர்ஷனின் ஈகோ காரணமோ?//

லேசா லேசா பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை நன்றாகத்தானே இருந்தது !
Anonymous said…
//யார் பின்னூட்டம் போட்டாலும் உயர முடியாத நிலையில் தான் இருக்கிறார்.//

நீர் தானா அது...3க்கு பதிலா 12 ன்னு குடுத்து மொழிவாச பரிசை வாங்கிய நேர்மையின் சிகரமாயிற்றே
காஞ்சிபுரம் பார்த்தேன். தங்கள் விமர்சனம் அருமை.இந்தியாவிலும் உலக தரப் படம் எடுக்க ஆள் உண்டு.அப்பப்போ நிரூபிக்கிறார்கள்.
இச் சிறுமி பற்றி...எனக்கு இப்படியான நிகழ்ச்சிகள் பார்க்கக் கிடைப்பதில்லை. இட்டதற்கு மிக்க நன்றி!
இலட்சத்தில் ஒன்று....இன்றைய சின்னத்திரை இப்படிப் பல திறமைகளை இடைக்கிடை சில நிகழ்ச்சிகளில் வெளிக் கொணர்வது பெரிய ஆறுதல்.
இந்த வயதில் இவ்வளவு உணர்ச்சிபூர்வம்... அபூர்வம்.
அனகா சுப்பர்ப் வாழ்த்துக்கள். காஞ்சிவரம் பார்த்தேன் நீங்கள் கூறியது போல உலக தரப் படம். உங்கள் விமர்சனம் நன்று.
வார்த்தைகளே தேவையில்லை.

மால்குடி ஷுபா, இந்த பாடலை கேட்கும்போது கிட்டத்தட்ட வெய்யில் பட்ட ஐஸ்க்ரீம் போல் உருகியிருக்கிறார். ஜூனியர் ஜேசுதாஸ் மற்றும் ஷுபாவின் முகபாவங்களே போதும் கோடி வார்த்தைகளுக்கு சமானம்.
Anonymous said…
நல்ல விமர்சனம். பார்க்க நினைத்தபடம். தியேட்டரிலிருந்து வெளியேறுவதற்கும் நான் உள்புக வேண்டும். ;)

அனகாவின் குரல் : http://www.writermugil.com/?p=155
This comment has been removed by the author.
//நல்ல விமர்சனம். பார்க்க நினைத்தபடம். தியேட்டரிலிருந்து வெளியேறுவதற்கும் நான் உள்புக வேண்டும். ;)//

கண்டிப்பாக பார்த்துவிடுங்கள் முகில்.. திருட்டு விசிடி கூட வராது. நல்ல படங்கள் ஓடுவதில்லை.. உஙக்ள் வருகைக்கு நன்றி முகில்
//வார்த்தைகளே தேவையில்லை.

மால்குடி ஷுபா, இந்த பாடலை கேட்கும்போது கிட்டத்தட்ட வெய்யில் பட்ட ஐஸ்க்ரீம் போல் உருகியிருக்கிறார். ஜூனியர் ஜேசுதாஸ் மற்றும் ஷுபாவின் முகபாவங்களே போதும் கோடி வார்த்தைகளுக்கு சமானம்.//

ரிப்பீட்ட்ட்டேய்ய்...
நன்றி அறிவிலி
//அனகா சுப்பர்ப் வாழ்த்துக்கள். காஞ்சிவரம் பார்த்தேன் நீங்கள் கூறியது போல உலக தரப் படம். உங்கள் விமர்சனம் நன்று.///
நன்றி மாதேவி.
பாலா said…
படத்தைப்பற்றி
=============

ஒன்னு மட்டும் நிச்சயம் சங்கர்! இந்த உலகப்படம்.. கண்டிப்பா டிவிடி-யில் வராது. அதனால் எனக்கு பார்க்கும் வாய்ப்பு கண்டிப்பா கிடைக்காது. உங்க விமர்சனத்தை வச்சி பார்த்த ஃபீலிங்கை கொண்டு வர வேண்டியதுதான்.


பாடலைப்பற்றி
==============

”ஐந்தாறு... நூற்றாண்டு.. வாழ்வோம் என் வாழ்வே.. வா..”

ஹோ.. மை.. காட்.! இந்த வரியை.. அந்த பெண்.. எப்படி பாடியிருக்கு பார்த்தீங்களா...!!!! வாவ்... வாவ்.. வாவ்....! அங்கே.. ஹரிஹரனோ.. சித்ராவோ.. இருந்திருந்தால்.. நிச்சயம் அழுதிருப்பார்கள்.

தட்.. வாஸ்... எ.. ரியல் ஷோ..!

ஹேட்ஸ் ஆஃப் யு பேபி.!
======

இந்த பாடலை... சுமார்ன்னு... சொல்லுறாங்களே. சரி... விடுங்க.
//காஞ்சிபுரம் பார்த்தேன். தங்கள் விமர்சனம் அருமை.இந்தியாவிலும் உலக தரப் படம் எடுக்க ஆள் உண்டு.அப்பப்போ நிரூபிக்கிறார்கள்.//

ஆமாம் யோகன்.. உங்கள் கூற்று.. உண்மைதான்.. ஆனால் என்ன நாம் தான் அதை ஆதரிக்க மாட்டேன் என்கிறோம்.

//இந்த வயதில் இவ்வளவு உணர்ச்சிபூர்வம்... அபூர்வம்.//
ரிப்பீட்டேய்ய்..
//நீர் தானா அது...3க்கு பதிலா 12 ன்னு குடுத்து மொழிவாச பரிசை வாங்கிய நேர்மையின் சிகரமாயிற்றே//

யாரை எதுக்கு திட்றீங்க, என்னன்னு திட்றீங்கன்னு சொல்லிட்டு திட்டுங்கப்பா.. ஒண்ணுமே புரியல..
//ஒன்னு மட்டும் நிச்சயம் சங்கர்! இந்த உலகப்படம்.. கண்டிப்பா டிவிடி-யில் வராது. அதனால் எனக்கு பார்க்கும் வாய்ப்பு கண்டிப்பா கிடைக்காது. உங்க விமர்சனத்தை வச்சி பார்த்த ஃபீலிங்கை கொண்டு வர வேண்டியதுதான்.
//

அமாம் பாலா.. வேணும்னா ரைட்ஸ் டிவிடி வரலாம்
//ஹோ.. மை.. காட்.! இந்த வரியை.. அந்த பெண்.. எப்படி பாடியிருக்கு பார்த்தீங்களா...!!!! வாவ்... வாவ்.. வாவ்....! அங்கே.. ஹரிஹரனோ.. சித்ராவோ.. இருந்திருந்தால்.. நிச்சயம் அழுதிருப்பார்கள்.//

இரண்டாவது சரணத்தில் அந்த கமகம் சூப்பர்ப்.. நடுவர் ஒருவர் அடுத்த வீடியோவில் அதை மீண்டும் பாடிக் காட்ட சொன்னார்.. எனக்கு ரெண்டு நாளா தூக்கம் வரல.. கண்ல தண்ணிவருது. மெஜாரிட்டி வின்ஸ் பாலா.. கேட்ட எல்லோருக்கும் பிடிச்சிருக்கும் ஒரு சிலரை தவிர.. அது சரி எல்லோரையும் திருப்தி படுத்த முடியுமா என்ன..?
//ஆனால் என் எண்ணம் ஏஆர் அல்லது இசைஞானி இசையமைத்திருந்தால் பிரம்மிப்பு இன்னும் இரட்டிப்பாயிருக்கும். ஒருவேளை அவர்கள் இல்லாமலும் இவ்வுலகம் வாழும் என்ற பிரியதர்ஷனின் ஈகோ காரணமோ?//

விஜயசாரதி.. பிரச்சனை படத்துக்கு இளையராஜா அல்லது ரஹ்மானின் இசை பற்றிய பிரச்சனையில்லை. அது கீழே போடப்பட்டிருக்கும் பாட்டுக்கானது.. படத்தில் இசையமைல்ப்பாளர் எம்.ஜி.ஸ்ரீகுமார். நன்றாகவே இசையமைத்திருக்கிறார்.
//இதன் இசை, சுவரங்கள், மெட்டு ஆகியவை குழப்பமாக அமைக்கப்பட்டு இருப்பதால் அப்படி உணர்கிறேன். //

மருத்துவரே.. திரையிசை பாடல்கள் ராகஙக்ளை அடிப்படையாய் வைத்து அமைக்கபட்டாலும், அதிலிருந்து விலகி வேறு, வேறு அதற்கு இணையான இடங்களில் சஞ்சாரிப்பது வழக்கமே.. அதனால் திரையிசை பாடல்களில் கர்நாடக இசை பற்றிய குறைகாணல் தேவையற்றது என்றே நினைக்கிறேன். இது எல்லா இசையமைப்பாளருக்கும் பொருந்தும்.
//இசை ஒரு போதை என்பதை இப்போது நம்புகிறேன்.//

ஆமாம் அனானி நேத்தைக்கு அடிச்சது.. இன்னும் எறங்கல..
//பிரகாஷ்ராஜ்னா சும்மாவா....?//

நன்றி டக்ளஸ்.. உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும்.
//உண்மைத் தமிழன்(உடம்பு சரியில்லேன்னா ஆடாம, அசையா படுத்திருக்கணும்.. இப்படியெல்லாம் ஆடுனா உடம்பு திரும்பி படுத்திரும்..!

யார் உம்மை இப்ப இதுக்கு விமர்சனம் எழுதச் சொன்னது..?

எல்லாத்தையும் நீரே எழுதிட்டா, அப்புறம் நாங்கள்லாம் என்னதான் எழுதுறது..?!//

ரிப்பீட்டேய்............
//இளையராஜாவின் பாடலையும் பாடியிருக்கிறார். யூடியூபில் போய் பார்க்கவும்//

http://www.youtube.com/watch?v=VrulmmMdajQ

மிக மிக அருமையான பாடல் அது
பாலா said…
இளையராஜா-பாடலுக்கு இந்த பெண்... வேறு பாடலை தேர்ந்தெடுத்திருக்காலம்ம்னு நினைக்கிறேன். எத்தனை 100 பேர் இந்த பாடலை.. ஆர்கெஸ்ட்ராவில் பாடியிருக்காங்க?! ஆனா.. ஜானகி அம்மா மாதிரி... யாராலும் பாட முடியாது.

கங்கை அமரனின், ஆர்கெஸ்ட்ராவில் நடந்தது இன்னும் அப்படியே மனதில் இருக்கு!
Anonymous said…
//நீர் தானா அது...3க்கு பதிலா 12 ன்னு குடுத்து மொழிவாச பரிசை வாங்கிய நேர்மையின் சிகரமாயிற்றே//

//யாரை எதுக்கு திட்றீங்க, என்னன்னு திட்றீங்கன்னு சொல்லிட்டு திட்டுங்கப்பா.. ஒண்ணுமே புரியல..//

சங்கரன்னா,
//யார் பின்னூட்டம் போட்டாலும் உயர முடியாத நிலையில் தான் இருக்கிறார்.//
இந்த பின்னூட்டம் போட்டவர பத்தி, அவரு வாங்குன 3ல செஞ்ச போங்காட்டத்த பத்தி லைட்டா ஹின்ட் பண்ணேன், அவ்ளோதான்னா. அவருக்கு புரிஞ்சிருக்கும்ன்னா...
தல இந்த படத்தை ஒரு மூன்று மாதம் முன்பு பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

உங்கள் விமர்சனம் இந்த படத்திற்கு எதிர்பார்த்து காத்திருந்தேன்..

படம் நல்ல இருக்கு.

ஆனா படம் ரொம்ப Slow.
//ஆனா படம் ரொம்ப Slow.//

நல்ல விஷயங்கள் மெதுவாத்தான் நடக்கும் வினோத்..
//Great Review!//

நன்றி ஜூர்கேன்க்ருகேர்.. மீண்டும் வருகை தந்ததற்கு மிக்க நன்றி..
Gajen said…
காஞ்சீவரம் preview copy வந்தப்பவே பாத்தேன் கேபிள் சார்...ஆனா சில இடங்கள்ல audio இருக்கல..சூப்பர் படம்ன்னு நா சொல்லவா வேணும்..எப்படா இப்புடி ஒரு படம் வரும்ன்னு நெறைய நாளா பாத்துகிட்டே இருந்தேன் சார்..அருமை..ஏன் இந்த மாதிரி படங்கள் mainstream க்கு வர கஷ்டப்படுது?

யப்பாடி..அந்த பொண்ணு என்னம்மா பாடுது..Hats off!!

அதில்ல கேபிள் சார்..உங்க template ல snowflakes மாதிரி விழ ஆரம்பிக்கவும் ஐயையோன்னு அலறிட்டேன்..ஏதோ நம்ம கண்ணுல தான் கோளாறு போலன்னு..கிகிகி..அப்பறம் தான் மேல scroll பண்ணி பாத்தா header கண்ணுக்கு பட்டது.. ;)