நிதர்சன கதைகள் –9- மகாநதி

202 பாலோயர்களுக்கும், மேலும் தொடர்பவர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..

Reality_TV_by_DraculeaRiccy
பாக்யம்மாளுக்கு அழுகை அழுகையாய் வந்தது. ஒவ்வொரு முறையும் மகாநதி படத்தை பார்க்கும் போதெல்லாம் அழுது, அழுது  தலைவலி வருவது நிச்சயம். ஆனாலும் விடாமல் பார்பாள். அதிலும் முக்கியமாய் படத்தில் வரும் சோனாகாஞ்சி காட்சிகளை பார்த்தால் அவ்வளவுதான் .

கமலஹாசன் தன் பெண்ணை விபசார விடுதியில் பார்க்க, தன் தந்தையை பார்த்த மகள் தன் இரு கைகளையும் வைத்து தன்னை மறைத்து கொள்ள,  அதை பார்த்த பாக்யம்மாள்.. “அய்யோ.. தெவுடா.. தெவுடா..” என்று கண்களில் கண்ணீர் வர ஆரற்ற ஆரம்பித்தாள்.

படத்தில் கமலஹாசனை அங்கிருக்கும் பெண்கள் சூழ்ந்து கொண்டு அடிக்க, பூர்ணம் விஸ்வநாதன் தமிழில் அலறும் காட்சியை பார்தவுடன்..  அவளையும் அறியாமல் அந்த பெண்களை பச்சை, பச்சையாய் திட்டினாள். 

அவள் பார்த்து கொண்டிருந்த  சோனாகாஞ்சி காட்சிகளை பார்த்து. “தொங்கசச்சிநோடா..: என்று  நிஐ கோபத்துடன் திட்டிய போது வாசலில் காலிங் பெல் அடித்தது. எழுந்து போய் கதவை திறக்க, வாசலை அடைத்தபடி ஒரு திடகாத்திரன் புகைத்தபடி  நிற்க, அவன் உள்ளே வர  வழியை விட்டு, கதவை சாத்தியபடி,  திடகாத்திரனை பார்த்து

‘என்ன சாரூ.. ஆளையே காணம்..? எத்தினி வாட்டி போன் பண்ணாலும் எடுக்கிறதுல்ல..  சரி. உள்ள போங்க. அம்மா லஷ்மி கஸ்டமர் ஒச்சாரு சூட “ என்று அவ்னை அனுப்பி வைத்துவிட்டு டிவியை  பார்க்க ஆரம்பித்தாள்.





கொத்துபரோட்டா 15/05/09 ஐ படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Comments

Raju said…
முடிவை யூகிக்க முடிகிறது. நிதர்சனம்ன்னாலே அப்பிடித்தானோ..?
ஆரம்பத்திலேயே நெனச்சேன் சார் எதோ உள்குத்து இருக்கனும்னு. சரியாப்போச்சு. சார் உங்களை பாதிச்சது மகாநதி படமா, இல்ல அந்ந...
நன்றாக உள்ளது.
நிதர்சனம் அப்படித்தானே டக்ள்ஸ்..?
//ஆரம்பத்திலேயே நெனச்சேன் சார் எதோ உள்குத்து இருக்கனும்னு. சரியாப்போச்சு. சார் உங்களை பாதிச்சது மகாநதி படமா, இல்ல அந்ந...//

அந்த இடமா என்று கேட்கிறீர்களா.. பாலாஜி..?:)
Raj said…
short and sweet...தொங்கசச்சிநோடா...இங்கேயே உள்குத்து புரிஞ்சுருச்சு
Raj said…
short and sweet...தொங்கசச்சிநோடா...இங்கேயே உள்குத்து புரிஞ்சுருச்சு
இப்படி ஒரு பதிவு போட எதோ ஒன்று தூண்டுகோலா இருந்திருக்கனுமே.. அதான்
butterfly Surya said…
கஸ்டமர் பேரு சாரூ.. இதுக்கு ஏதாவது உள்குத்து இருக்கா..??
நிதர்சனம் முகத்தில் ஓங்கி அறைகின்றது...
தமிழ்மணத்தில் ஓட்டு போடமுடியலீங்க...

ரொம்ப லொள்ளு பண்ணுது. சாரி
இந்த கதையெல்லாம் சொல்லி என் பிஞ்சு மனசை பாடா படுத்தாதீங்க...
மனம் ஒரு பக்கம் உடல் ஒரு பக்கம். மனமில்லாமல் உடலை விற்பதால்தான் " அய்யோ.. தெவுடா.. தெவுடா..” என்று கண்களில் கண்ணீர் வர ஆரற்ற ஆரம்பித்தாளோ???
//short and sweet...தொங்கசச்சிநோடா...இங்கேயே உள்குத்து புரிஞ்சுருச்சு

//

தெலுங்கை வச்சு உள்குத்து இருக்குன்னு தெரிஞ்சிகிட்டீங்களா..?
//மனம் ஒரு பக்கம் உடல் ஒரு பக்கம். மனமில்லாமல் உடலை விற்பதால்தான் " அய்யோ.. தெவுடா.. தெவுடா..” என்று கண்களில் கண்ணீர் வர ஆரற்ற ஆரம்பித்தாளோ???//

நிதர்சன வாழ்க்கையில் இப்படித்தானே.. வாழ்கிறார்கள். பலரும்.
//இப்படி ஒரு பதிவு போட எதோ ஒன்று தூண்டுகோலா இருந்திருக்கனுமே.. அதான்

//

நேற்று பார்த்த மகாநதி.. படம்..
//கஸ்டமர் பேரு சாரூ.. இதுக்கு ஏதாவது உள்குத்து இருக்கா..??

//

வண்ணத்து பூச்சியாரே.. அது சாரூ இல்ல.. இங்கிலீஷ்.. சாரூ..
//நிதர்சனம் முகத்தில் ஓங்கி அறைகின்றது...

//

நன்றி இராகவன். சென்னை வந்தால் தொடர்பு கொள்ளவும்..
//இந்த கதையெல்லாம் சொல்லி என் பிஞ்சு மனசை பாடா படுத்தாதீங்க...//

என்ன நைனா.. :(
kalil said…
குமுதம் ஒரு பக்க கதை படிச்ச திருப்தி தல ...கலக்குங்க தல...
Raj said…
////கஸ்டமர் பேரு சாரூ.. இதுக்கு ஏதாவது உள்குத்து இருக்கா..??

//

வண்ணத்து பூச்சியாரே.. அது சாரூ இல்ல.. இங்கிலீஷ்.. சாரூ..

//

இங்கிலீஷோ....தமிழோ...சாரூ...சாரூதான்.....பாவம் சாரூ...!
கதை ரொம்ப சின்னதா இருக்கே..................
ஒரு படம் பார்த்துட்டு எப்ப்டிப்பா இப்டிலாம் எழுதுனுகீறயோ ..
Bleachingpowder said…
//‘என்ன சாரூ.. ஆளையே காணம்..?//

பேர் பொருத்தம் பிராமாதம் :)
நன்றாக வந்திருக்கு!

@ bleachingpowder சிரிப்பை அடக்க முடியல ;)))
Anonymous said…
வணக்கம் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம். www.tamilmovitime.blogspot.com . பழைய புதிய திரைப்படங்களை பார்த்து மகிழ மற்றும் தமிழ் பழைய புதிய பாடல்கள் , காமெடி என்னும் பல பார்த்து மகிழ இந்த தளத்துக்கு அன்புடன் வரவேற்கின்றோம்

நன்றி
Tamil Movi Time Team