Thottal Thodarum

Nov 30, 2009

கொத்து பரோட்டா –30/11/09

துபாய் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் இந்த முறை. மூன்று தமிழ் படங்களை திரையிட போவதாய் சொன்னார்கள். ஒன்று அவள் பெயர் தமிழரசி என்கிற மோசர்பியர் தயாரிப்பில் கதிரவன் இயக்கதில் இன்னும் வெளிவராத படம், இன்னொரு படம் ஷங்கர் தயாரிப்பில் வெளியாக இருக்கும் “ரெட்டை சுழி”யும், இன்னொரு படம் அமீரின் யோகியும் திரையிடபடுவதாய் சொன்னார்கள். யோகி படம் ஆப்பிரிகக் படமான டிசோஸ்டியின் காப்பி என்று நிருபர்கள் கேட்டபோது அமீர் அந்த படத்தை பார்ககவேயில்லை என்று அப்படி காப்பி அடித்திருந்தால் துபாய் பெஸ்டிவலுக்கு செலக்ட் செய்திருப்பார்களா.. என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனக்கு அதே போல ஒரு கேள்வி எழுகிறது. நிச்சயம் யோகி ப்டத்துக்கு விருது ஏதாவது கொடுத்தால் துபாய் பிலிம் பெஸ்டிவலே ஒரு டுபாக்கூர் பெஸ்டிவல்தானோ என்று கேள்வி எழும்பவே செய்யும். இந்திய சினிமாவில், இந்திக்கு பிற்கு தமிழும், தெலுங்கும் தான் முண்ணனியில் உள்ள துறைகள் எனவே அவற்றை தங்கள் பக்கம் சேர்த்து பெஸ்டிவலுக்கு கலை கட்ட பிரபல இயக்குனர்கள் இயக்கும் படத்தை சேர்த்து மார்கெட்டிங் செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
குறும்படம்
மனதை அறுக்கும் குறும்படம். நிறைய விருதுகளை அள்ளிய படம். பட் சிம்பிள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சாப்பாட்டுக்கடை
அரசு பிஷ்ஷரீஸ் டிபார்ட்மெண்ட் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறது. சென்னையில் அண்ணா சாலையில் உள்ள போயஸ் கார்டனுக்கு திரும்பும் இடத்தில் அந்த உணவகம் இருக்கிறது. இங்கு மதியம் அவர்கள் தரும் மீன் சாப்பாடு ம்ம்ம்.. செம தூள். ஒரு கப் சாதம், ஒரு பொரியல், மற்றும் மீன் குழம்பு, ரசம், மற்றும் மோருடன் நாற்பது ரூபாய்க்கு தருகிறார்கள். எக்ஸ்ட்ராவாக வறுத்த மீன், குழம்பு மீன், மீன் கட்லெட், என்று தனி லிஸ்டே இருக்கிறது. என்ன நின்று கொண்டு சாப்பிட வேண்டும், சரியான சர்வீஸ் கொஞ்சம் கிடைக்காது.. அதை பொறுத்துக் கொண்டு சாப்பிட்டால் நிஜமாகவே ம்ம்ம்ம்ம்..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அரசியல்
சென்னையில் முக்கிய ரோடுகளில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் அதற்கு அனுமதி வாங்குவதற்குள் அந்த திரைப்ப்டத்த்ன் மேனேஜர், நொந்து நூலாகிபோய் விடுவார். அப்படியே போராடினாலும் நடு ராத்திரிக்கு தான் அனுமதி கிடைக்கும். ஆனால் சன் டிவி தயாரிக்கும் எந்திரன் படத்துக்கு, கத்திபாரா மேம்பாலத்தில் காலை ஆறு மணியிலிருந்து பதினோரு மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டிருக்க, அவர்கள் காலை நாலு மணியிலிருந்தே இடத்தை ஆக்கிரமித்து கொள்ள, மேம்பாலம் பூராவும் ட்ராபிக் ஜாம். மேலே போன வண்டியை எல்லாம் கீழே அனுப்ப, ஒரே களேபரம். மதியம் 12 மணிக்குதான் பேக் அப் ஆனார்கள்.. மற்ற படங்களுக்கு மட்டும் சென்னையில் டிராபிக்கை காட்டி அனுமதி மறுக்கும் அரசு. பேரன் படமென்றால் மட்டும் டிராபிக் ஆகாதோ..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
விஷுவல் டேஸ்ட்
என்னுடய நோக்கியா ஸ்லைட் 3600வில் எடுத்தது. போன மாசம் டான்ஸானியா போன போது எடுத்தது.

Image0198 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
டார்க் ஜோக்

டீச்சர் தன் மாணவர்களை பார்த்து, “உங்க நினைவில் இருக்கிற மறக்க முடியாத சம்பவத்தை பற்றி ஒரு கட்டுரை எழுது என கேட்க, வெங்கிட்டு எழுந்து ‘டீச்சர் எங்க அப்பா போன வாரம் கிணத்துல விழுந்திட்டாரு..” என்றான்

டீச்சர் பதறியபடி “ அப்புறம் என்ன ஆச்சு? இப்ப நல்லாத்தானே இருக்காரு.?” என்று கேட்க

வெங்கிட்டு : ‘அப்படித்தான் நினைக்கிறேன். ரெண்டு நாளா ஹெல்ப், ஹெல்ப்புன்னு கிணத்துலேர்ந்து சத்தம் வரலியே..” என்றான்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஏ ஜோக்
ஒரு பெண் அரசு அதிகாரி ஆஸ்பிடல்களுக்கு செக்கிங்குக்கு போக, அங்கே ஒரு பேஷண்ட் சுயமைதுனம் செய்து கொண்டிருப்பதை பார்த்து “ என்ன இது அநியாயம்? “ என்று டாக்டரிடம் கேட்க, “ அவருக்கு ஒரு நாளைக்கு அரைலிட்டர் செமன் பில் ஆகி விடுகிறது, அதை வெளியே எடுக்கவில்லை என்றால் அவர் இறந்துவிடுவார்” என்று சொல்ல, கொஞ்சம் கன்வின்ஸ் ஆன அதிகாரி அடுத்த ரூமுக்கு செல்ல அங்கே ஒரு நர்ஸ் பேஷண்டுக்கு ப்ளோ ஜாப் செய்து கொண்டிருக்க, “இதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று டாக்டரிடம் கேட்க, “இவருக்கு அதே வியாதிதான். பட் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் என்றார்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
பொன்மொழி
விஜய் மல்லையா: உங்கள் கட்டிலில் நிறைய நேரம் செலவழிக்காதீர்கள், ஏனென்றால் விபச்சாரிகளால் மட்டுமே அங்கு பணம் பண்ண முடியும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வாரம் ஒரு பதிவர்
தமிழ்மாங்கனி என்கிற பெயரில் எழுதி வரும் இவர் ஒரு மாணவி. கவிதை, கதை, கட்டுரை, இசை என்று கலந்து கட்டி சுருக்கமாய் எழுதி வருபவர். இன்றைய ”என்” போன்ற யூத்துகளின் நாடியை பிடிக்க.. http://enpoems.blogspot.com/2009/11/9.html
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சமீபத்தில் திருமணமான பதிவர் அக்னிபார்வைக்கு வாழ்த்துக்கள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

39 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

சாப்பாட்டுக்கடை முன்பே நம்ம பெஸ்கி ஒரு முறை எழுதினதா நியாபகம் :))))))))

க‌ரிச‌ல்கார‌ன் said...

//மற்ற படங்களுக்கு மட்டும் சென்னையில் டிராபிக்கை காட்டி அனுமதி மறுக்கும் அரசு. பேரன் படமென்றால் மட்டும் டிராபிக் ஆகாதோ.. //

ப‌ரிச‌லின் ப‌திவிலிருந்து
அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் என்று தனக்குப் பிடித்தமானவர்களாலும் ஏமாற்றப்படும்போது மிகவும் உடைந்துபோய்விடுவார். அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமென்று எண்ணுவார். ஆனாலும், அவர்களை மன்னித்து மீண்டும் அவர்கள் பக்கம் நிற்பார்...உதவி செய்வார். இந்த விஷயத்தில் மனிதத்தை வாழவைத்துக் கொண்டிருப்பது இந்த ‘சோ கால்ட்’ காமன்மேன்தான்.

க‌ரிச‌ல்கார‌ன் said...

//அவள் பெயர் தமிழச்சி என்கிற மோசர்பியர் தயாரிப்பில் கதிரவன் இயக்கதில் இன்னும் வெளிவராத படம் //
அந்த‌ ப‌ட‌ம் "அவள் பெயர் தமிழர‌சி"

பெசொவி said...

ஒரு (மலையாள) கதை.

ஒரு அரசனுக்கு கேசவன் என்றொரு மகன், அவன் ஒரு திருட்டுக் குற்றம் செய்ததாக நிருபிக்கப் பட்டது. அரசன் தீர்ப்பு சொன்னான்,
"கேசவன் உண்டெங்கில் கேவலம், தோஷமில்லை, கேஸ் டிஸ்மிஸ்"

இப்பொழுது எந்திரன் ஷூட்டிங் விஷயத்தை நினைத்துப் பாருங்கள்.

Romeoboy said...

கலக்கல் ஜோக் தல.

மணிஜி said...

கேபிள்..நேத்து நானும் டிராபிக்கில் மாட்டினேன்.அப்புறம் அரசியல் மசாலா நிறைய ”இடிச்சு” சேர்த்தா கொத்து,,சூப்பரா இருக்கும்..

ரமேஷ் வைத்யா said...

பொன்மொழி பிரமாதம்

ஜெட்லி... said...

அந்த மீன் கடை பேரு நெய்தல், நானும் ட்ரை பண்ணி இருக்கேன். ஆனா சர்வீஸ் சுத்த மோசம்.மூணு மாதம் முன்பு பெசன்ட் நகரில் கனிமொழி வந்து இது போன்று
ஒரு மீன் கடையை திறந்து வைத்தார்
ஆனால் இன்னும் அவர்கள் விற்பனையை ஆரம்பிக்கவே இல்லை........

என்ன கொடுமை அண்ணே இது....

கோவி.கண்ணன் said...

//சமீபத்தில் திருமணமான பதிவர் அக்னிபார்வைக்கு வாழ்த்துக்கள்.//

வாழ்த்துகள். அதான் இப்போதெல்லாம் அவரு பதிவே போடுவது இல்லையா ?
:)

இளவட்டம் said...

கொத்து நல்ல இருக்கு தல.

creativemani said...

பொன்மொழியும் விஷுவல் ட்ரீட்டும் அருமை...

Muthusamy Palaniappan said...

அரசியல் - Death Punch

Jana said...

கொத்து நைஸ். செவிக்கினிமையை காணல, அண்மையில் எந்த நல்ல பாட்டும் கேட்கவில்லையோ?

creativemani said...

குறும்படம் மனதை என்னவோ செய்கிறது...

Unknown said...

உண்மையிலேயே மனதை அறுத்த குறும்படம்.. சாப்பாட்டை வேஸ்ட் செய்வதை நிறுத்த வேண்டும்

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

க.பாலாசி said...

முதல் ஜோக் ரசித்தேன்.

தமிழ்மாங்கனி நல்ல அறிமுகம்.

புலவன் புலிகேசி said...

கொத்து பரோட்டா ருசியா இருந்துச்சி..அந்த முதல் ஜோக் நல்லா இருந்துது...

தமிழ்மாங்கனி ஒரு நல்ல அறிமுகம்..நன்றி..

மங்களூர் சிவா said...

nice!

butterfly Surya said...

கொத்து நல்ல சுவை... மணிஜீ சொல்வதையும் கவனிக்கவும்..

குப்பன்.யாஹூ said...

dubai itself is struggling, do u want film festival in dubai. lol

Ashok D said...

உங்கள் அழைப்பிற்கு நான் போட்ட பிடித்த 10 பிடிக்காத 10.

http://ashokpakkangal.blogspot.com/2009/11/10-10.html

Ashok D said...

மல்லையா மொழி, Photo, Dark Joke மற்றும் குறும்படம் சூப்பருஜி.
உணவகம்: உங்க சகிப்புதன்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு :)

Ashok D said...

குறும்படம் சொல்லமுடியாது துயரை கொடுத்தது. :(

T.V.ராதாகிருஷ்ணன் said...

குறும்படம் :-((

மேவி... said...

aana...... sema stylish agittu irukke unga parotta...

enna vishyam...?????

areavukku varatumaa???

sriram said...

//போன மாசம் டான்ஸானியா போன போது எடுத்தது.//
சொல்லவே இல்லை...

//உங்கள் கட்டிலில் நிறைய நேரம் செலவழிக்காதீர்கள், ஏனென்றால் விபச்சாரிகளால் மட்டுமே அங்கு பணம் பண்ண முடியும்.//
இது ஜூப்பர் பொன்மொழி

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

kanagu said...

arasiyal la ithellam saadarnam anna... :) :)

athe maathiri joke-ai rasithen :)

Thamira said...

வேதனையான குறும்படம்.

**

டான்சானியாவுக்கு எப்ப போனீங்க?? சொல்லவேயில்ல.. எங்க உசிலம்பட்டிகிட்டயிருக்கே அதுதானே.! :-))

**

ஏஜோக் கொஞ்சம் ஓவரேய்..

Venkatesh Kumaravel said...

அது என்ன வெங்கிட்டுன்னு ஒரு பேரு? ;)

உண்மைத்தமிழன் said...

அக்னிக்கு கல்யாணமா? சொல்லவே இல்லை..!

நல்லாயிருக்கட்டும்..!

Kabi said...

குறும் படத்தை பார்த்த பின்னாடி மனசு ரெம்ப பாரமய்டுச்சு.

Prabu M said...

குறும்படம் ரொம்ப அருமை.... அந்த சாப்பாடைக் கொடுத்ததற்குக் கடவுளுக்கு நன்றி சொல்லுறதைப் பாத்து மனது இறுகிப் பொயிடுச்சு..... அழகான கலெக்ஷன்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

உள்ளேன் ஐயா

Cable சங்கர் said...

@குறை ஒன்றும் இல்லை
ஆமா

@கரிசல்காரன்
:(

@கரிசல்காரன்
மாத்திட்டேன்

@பெயர் சொல்ல விருப்பமில்லை
இதுக்கு நேரடியா நீங்க கலைஞரை சொல்லியே சொல்லியிருக்கலாம்.:)

@ரோமிபாய்
நன்றி

@தண்டோரா
முயற்சி செய்கிறேன்

@ரமேஷ் வைத்யா
நன்றிண்ணே

@ஜெட்லி
அட ஆமாம் மறந்திட்டேன்

@கோவி.கண்ணன்
ஆமாம்

Cable சங்கர் said...

@இளவட்டம்
நன்றி

@அன்புடன் மணிகண்டன்
நன்றி

@முத்துசாமி பழனியப்பன்
நன்றி

@ஜனா
சமிபத்தில் ஏது இம்ப்ரஸ் செய்யலை

@அன்புடன் மணிகண்டன்
நன்றி
@முகில
நல்ல முயற்சி

Cable சங்கர் said...

@யோஒ
நன்றி

@க.பாலாசி
நன்றி

@புலவன் புலிகேசி
நன்றி

@மங்களூர் சிவா
நன்றி

@பட்டர்ப்ளை சூர்யா
நன்றி.. கேட்கிறேன்

@குப்பன்.யாஹு
நான் ஆசைபடல அவங்களே அங்க நடத்துறாங்க

@அசோக்
பார்த்துட்டேன்
வேற வ்ழி
நன்றி

@ராதாகிருஷ்ணன
நன்றி சார்
@டம்பிமேவி
புரியலையே

@

Cable சங்கர் said...

@ஸ்ரீராம்
நன்றி

@கனகு
நன்றி

@ஆதிமூலகிருஷ்ணன்
ஆமாம் ஆதி

மேலே யாராவது கேட்டாங்களா எப்ப போனேன்ன்னு.. வந்தியளா..? பாத்தியளா..?நல்லாருக்குனு சொல்லிட்டு போனியிளான்னு இல்லாம../?:(

Cable சங்கர் said...

@வெங்கிராஜா
நிச்சயமா உன் பேரை உன்னை கேட்காமா வப்பேனா.. ஒரு ரைமிங்கா வந்திருச்சு..:)

@உண்மைதமிழன்
ஆமா.

@கபி
நன்றி

@பிரபு.எம்
நன்றி

@ஸ்டார்ஜான்
நன்றி