Thottal Thodarum

Dec 14, 2009

கொத்து பரோட்டா-14/12/09

நீண்ட நாள் உயிர் வாழ ஒரு ரகசியத்தை வெளிநாட்டு அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்களாம். கேட்டாலே துள்ளி குதிக்க வைக்கும் ரகசியம் அது. வேறொன்றுமில்லை பெண்களின் மார்பகங்களை சும்மா பார்த்து கொண்டிருந்தாலே உடலில் ரத்த ஓட்டம் சீராகி பிபி எல்லாம் நார்மலாகி ப்ரெஷாகி விடுகிறார்களாம். செக்ஸுவல் உணர்வுகள் அவர்களின் ரத்த ஓட்டத்தை சரி செய்யப் படுவதனால் புத்துணர்வு ஏற்பட்டு சந்தோசம் பொங்குதாம். இது அவர்களின் ஆராய்ச்சியில் புரூவ் செய்யப்பட்டிருக்கிறதாம். இப்போது தான் ஒன்று புரிந்தது மனிதன் எல்லோருக்கும் அதிக நாள் உயிர் வாழ ஆசை அதனால் தான் ஆதாம் ஏவாள் காலம் தொட்டே ஆம்னாட்டிகள், பொம்மனாட்டியின் மார்பகங்களை பார்த்து கொண்டு வருகிறார்களோ? அது சரி பெண்களுக்கு என்று கேட்பவர்களுக்கு அவ்வளவு பக்கத்தில உக்காந்து பாக்க விட்டா அப்புறம் என்ன? நடக்குறது ரெண்டு பேருக்கும் தானே.. என்னா ஒரு கண்டுபிடிப்புப்பா.. ஐ லைக் திஸ் இன்வென்ஷன்..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
செவிக்கினிமை
”பையா” வின் பாடல்கள் தாளம் போட வைக்கிறது. ஹரிசரணின் ‘துளி துளி துளி மழையாய் வந்தாளே” கேட்ட ட்யூனாய் இருந்தாலும் நைஸ். ராகுல் நம்பியாரின் “அடடா மழைடா” தாஸ் படத்தில் வரும் ஏதோ கண்ணாலே என்று வரும் பாடலின் ரிஹர்சல். பாடல்களின் ஹைலைட் யுவனின் “என் காதல் சொல்ல நேரமில்லை” நிச்சயம் ஹிட்லிஸ்டில் வரும்.

தெலுங்கில் ஆர்யா-2 என்கிற படத்தின் தேவி ஸ்ரீபிரசாத்தின் பாடல்கள் எல்லாம் ஹிட். அதிலும் “உப்பினந்த” என்கிற பாடல் நல்ல ரிதமும் மெலடியும் கலந்த பாடல், “ரிங்கா ரிங்காவும்” சும்மா அதிர வைக்கும் அந்திர மிளகாய்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சாப்பாட்டுக்கடை
ஆற்காடு பஸ்ஸ்டாண்டுக்கு போகும் வழியில் பழைய ஜோதி தியேட்டருக்கு எதிரில்(இப்போது அந்த தியேட்டர் இல்லை இடித்து விட்டார்கள்) ஆற்காடு பிரியாணி கடை ஒன்று இருக்கிறது. காலை சுமார் 10 மணிக்கு ஆரம்பித்து மதியத்துக்குள் காலியாகிவிடும். பெங்களூர் போகிறவர்கள் கூட ஊருகுள்ளே வ்ந்து பார்சல் வாங்கிக் கொண்டு போவார்கள். பிரபல அரசியல்வாதிகளிலிருந்து நடிகர்கள் வரை யார் அந்த ஏரியாவை க்ராஸ் செய்தாலும் ரெண்டு பார்சல் இல்லாமல் போக மாட்டார்கள். அவ்வளவு சுவை. பார்சல் கட்டும் போது, மசாலாவோடையா? என்று கேட்டால் நீங்கள் மசால பிரியர் என்றால் ம்ம்..என்று சொல்லிவிடுங்கள். அவ்வளவு சுவையாய் இருக்கும். ம்ம்ம்..ரெண்டு மாசம் ஆச்சு.. அங்க போயி.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
குறும்படம்
ரொம்ப நாட்களுக்கு முன்னால் என்னுடய இணையதளத்தில் வெளியிட்டிருந்த படம். ஒரு குட்டி த்ரில்லர் குறும்படம். கிடைத்த வசதிகளை வைத்து சிறப்பான மேக்கிங்கில் வ்ந்த படம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார பதிவர்
தோழி சமிப காலமாய் தான் நிறைய எழுதுகிறார். கவிதைகள் மட்டுமே எழுதுகிறார். பெண்ணின் மன உணர்வுகளை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டும் விதமான கவிதைகள். சமீப காலமாய் கொஞ்சம் ரொமாண்டிக்கான கவிதைகளையும் எழுத ஆரம்பித்திருக்கிறார். நிச்சயம் கவனிக்க பட வேண்டிய ஒரு பதிவர்.. http://naanum-matrum-neeyum.blogspot.com
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ரொம்ப நாளாக கடலூரில் இருந்து இரண்டு நண்பர்கள் என்னுடய பதிவுகளை படித்துவிட்டு தொடர்ந்து படித்து வருவதாகவும், நிதர்சனை கதைகள் ஆகட்டும், கொத்து பரோட்டாவாகட்டும். விமர்சனங்களை வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு கணக்காய் பிரித்து மேய்ந்துவிடுவார்கள் அவர்கள் பொன்.பாஸ்கரும், கோவிந்தராஜன் என்கிற நண்பரும். அவர்கள் சென்னைக்கு இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்க வ்ந்திருந்த நேரத்தில் என்னை சந்திக்க வேண்டும் என்று சொன்னவுடன் மதியம் அங்கேயே வந்து சந்திப்பதாய் சொன்னேன். வாங்க உங்க வாசகர்கள் எங்களைப் போல இன்னும் சிலர் இருக்காங்க என்று கூறினார் கோவிந்தராஜ். முதலில் நம்பிக்கையில்லாமல் போனவுடன் தான் தெரிந்தது நம்மளையும் இவ்வளவு பேர் படிக்கிறாங்களா..? நேரில் போய் பார்த்தவுடன் அவர்களின் அன்பினால் நெகிழ்ந்துவிட்டேன். நிச்சயமாய் என்னை பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்ள எழுதியது அல்ல.. அவர்களால் நான் பெருமையடைந்ததை தெரிய படுத்த வேண்டும் என்கிற விஷயத்துகாக இந்த புகைப்படம்.
IMGA0212 IMGA0214படத்தில் கருப்பு சட்டை போட்டு நிற்பவர் பொன்.பாஸ்கர், இடது ஓரத்தில் கையை முன் பக்கமாய் வைத்து நிற்பவர் நண்பர் கோவிந்த ராஜ். மற்றும் நண்பர்கள்.. மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது நண்பர்களே.. வந்திருந்து சந்தித்தற்கு நன்றி.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஏ –ஜோக்
ஒருவன் மனைவியை அருகில் வைத்துக் கொண்டு தனக்கு ஒரு இமெயில் அட்ரஸை கிரியேட் செய்ய, அப்போது அவன் பாஸ்வேர்டாக “பெனிஸ்” என்று அடிக்க, மனைவி மானிட்டரில் வந்த விஷயத்தை பார்த்து தரையில் விழுந்து, புரண்டு சிரிக்க ஆரம்பித்தாள். கம்ப்யூட்டர் மானிட்டரில் வந்த செய்தி “PASSWORD IS NOT LONG ENOUGH”
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
டிஸ்கி: கவிதை எழுதலாம்னு பார்த்தேன்.டைம் இல்லை.. அதனால அடுத்தபதிவு கவித.. சாக்குறதை சொல்லலைன்னு சொல்லப்படாது..தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் குத்துங்க எசமா.. குத்துங்க
Post a Comment

53 comments:

mayilravanan said...

கடலூர் நண்பர்கள் விஷயம் அவசியம் பதியபடவேண்டிய ஒன்று....ஆற்காடும் அசைவ ஜோக்கும் சூப்பர் பாஸ்

KaveriGanesh said...

சாரு நிவேதிதாவின் 10 நூல்களின் வெளியீட்டின் தொகுப்பும் , புகைப்படங்களூம்

http://kaveriganesh.blogspot.com/2009/12/10.html

தராசு said...

அசைவ ஜோக்குல ஒரு ரேஞ்சுலதான் போயிட்டிருக்கீங்க....,

ஆமா, அதென்னஆரம்பமும் முடிவும் ஒரே மாதிரியான மேட்டரு...

ஜெட்லி said...

பார்த்து தலைவரே கவிதை எழுதறேன்னு சொல்லி
என்டர் பட்டனை உடைச்சுராதிங்க....
வழக்கம் போல் கொத்து சூப்பர்..

கார்க்கி said...

கவிதை எழுதும் போது கூடவே 108 எண்ணில் முக்கியத்துவத்தையும் பி.கு.வில் போடுங்க. உதவியா இருக்கும்..

Sangkavi said...

இந்த வார கொத்தில்.....

சாப்பாட்டுக்கடை, கடலூர் நண்பர்கள் நச்....................

டம்பி மேவீ said...

anne..... pagirvukku nantri...

time kidaicha kummi adikkiren vanthu ....

en kadhai padichu comment podunga boss...

naanu ilakkiyavathi aga vendamaa

Cable Sankar said...

/naanu ilakkiyavathi aga vendamaa//

ம்க்கும்.. அது ஒண்ணுதான் குறைச்சல்

டம்பி மேவீ said...

A joke sema ragalai

Cable Sankar said...

அப்பாடி மைனஸ் ஓட்டு வந்தாச்சு.. இனிமே நிம்மதியா வேலைய பாக்க போயிருவேன்..

புலவன் புலிகேசி said...

பரோட்டா நல்லா இருக்கு...பையா பாடல்கள் இனிமைதான் தல..குறும்படம் வீட்டுல போய்தான் பார்க்க வேண்டும்..பாத்துட்டு அடுத்த பின்னூட்டத்துல சந்திக்கிறேன்...

KaveriGanesh said...

தலைவரே,

போற போக்க பார்த்தா திங்கள் அன்று வெளியாகும் கொத்து புரோட்டாவுக்கு பெரிய வாசகர் கூட்டம் வரும் போல இருக்கு.

அதி பிரதாபன் said...

போட்டோல உங்க முகத்துல ஒரு மிரட்சி தெரியுதே?

குறும்படம்: நானும் ரெண்டு நிமிசமா பாத்துட்டு இருக்கேன், இன்னும் படம் ஆரம்பிக்கல...

ஏ ஜோக்கு சூப்பர்.

pappu said...

“PASSWORD IS NOT LONG ENOUGH”////

தெறிச்சுட்டேன்...

உங்க ட்ரைனிங்கில் ஆதி கமெண்டில் ஒரு கவித எழுதிட்டேன்! :)

க.பாலாசி said...

//Cable Sankar said...
அப்பாடி மைனஸ் ஓட்டு வந்தாச்சு.. இனிமே நிம்மதியா வேலைய பாக்க போயிருவேன்..//

உங்களுக்கும் இதுலத்தான் நிம்மதி கிடைக்குதா??...

கொத்துபுரோட்டா கொஞ்சம் டேஸ்ட் கம்மி..அரசியல இந்தவாரம் டச் பண்ணல.???

சைவகொத்துப்பரோட்டா said...

எரர் சரியான டெர்ரர், மனதை பிசைகிறது. நல்லா இருக்கு பிரகாஷ்

அந்த password - "ஏ" கிளாஸ்.

D.R.Ashok said...

first matteru 2 நாள்முன்னாடி தினத்தந்தில போட்டோவோட போட்டுட்டான்..ஜி.. ;)

கொத்து நல்லாவே இருந்துச்சு

பலா பட்டறை said...

நான் அடுத்த பதிவுக்கே 'என்ட்டர்' ஆயிடுறேன்...:))

ராஜகோபால் (எறும்பு) said...

அண்ணே உங்க போட்டோ இங்க இருக்கு


http://yerumbu.blogspot.com/2009/12/blog-post_09.html

butterfly Surya said...

கொத்து ஒ.கே.

இன்னும் சுவை சேர்த்திருக்க்கலாம்.

நர்சிம் said...

கெத்துப் பரோட்டோவா இருக்கே தல..கெத்தா. சூப்பர்

கார்க்கி said...

//கெத்துப் பரோட்டோவா இருக்கே தல..கெத்தா. சூப்ப//

என்ன தல மிஸ்டு கால் தறீங்க?

ஸ்ரீ said...

சுவாரசியமான இடுகை தலைவரே.

வந்தியத்தேவன் said...

அண்ணாசி முதல் மேட்டர் கொஞ்சம் ஆதாரத்துடன் அல்லது அதன் லிங்கை இடுங்கள். பலருக்கு பிரயோசனமாக இருக்கும்.

என். உலகநாதன் said...

//ஆற்காடு பிரியாணி கடை ஒன்று இருக்கிறது//

முன்பு அந்தக் கடையின் பெயர் ஸ்டார் பிரியாணி. நான் ராணிப்பேட்டையில் வேலை பார்த்தபோது ஒவ்வொரு ஞாயிறு அங்கு போவது வழக்கம்.

அது சரி, மெட்ராஸ்லேந்து அப்படியே நகர்ந்து ஆற்காடு வரை வந்துட்டீங்க?

பூங்குன்றன்.வே said...

இந்த வார பரோட்டாவில் மசாலா தூக்கல் அண்ணே .

வெற்றி said...

நல்லா இருந்தது பதிவு...
அதை விட கார்க்கியின் இந்த கமெண்ட் அருமை...:-)
//கார்க்கி said...

//கெத்துப் பரோட்டோவா இருக்கே தல..கெத்தா. சூப்ப//

என்ன தல மிஸ்டு கால் தறீங்க?//
:-) :-)

அக்பர் said...

நாங்களும் உங்களை தொடர்ந்து படிக்கிறோம் பாஸூ,

எல்லாமே உங்க பாணியில் நல்லா வந்து இருக்கு. முக்கியமா அந்த முதல் பாரா.

வரதராஜலு .பூ said...

எனக்கு அசைவம் புடிக்காது, ஆனா உங்க அசைவ ஜோக்ஸ அப்படி சொல்ல முடியல.
:))

அன்புடன்-மணிகண்டன் said...

கேபிள்..
அண்ணா நகர் புதிய புஹாரி ட்ரை பண்ணீங்களா?
அங்க கொத்துபரோட்டா சாப்பிடும்போது உங்க நெனப்பு தான் போங்க...

நாஞ்சில் பிரதாப் said...

அண்ணோ, டாப்பு... பாஸ்வேர்டு ஜோக் ஏ ஒண்....

நாடோடி இலக்கியன் said...

கலக்கல் கொத்து பரோட்டோ.

சூர்யா - மும்பை said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு வலை பூ பக்கம் வருகிறேன்.

சுவராசயமான வலைப் பூ.

வாழ்த்துக்கள்.

அன்புடன் சூர்யா

சங்கர் said...

//கவிதை எழுதலாம்னு பார்த்தேன்.டைம் இல்லை.. அதனால அடுத்தபதிவு கவித.. சாக்குறதை சொல்லலைன்னு சொல்லப்படாது..//

அய்!! அண்ணன் கவித மழை பொழியப்போறாரு, எல்லாரும் நனையலாம் வாங்க

ஸ்ரீநி said...

இப்படில்லாம் பதிவுகள் போடலாம்ன்னு வழிகாடுரதுக்கு நன்றி !!!!
உங்கள் பதிவுகளை பின்னோட்டம் போடா நான் இன்னும் வளரனும்

ஷண்முகப்ரியன் said...

Interesting,Shankar.

பரிசல்காரன் said...

//நர்சிம் said...

கெத்துப் பரோட்டோவா இருக்கே தல..கெத்தா. சூப்பர்
11:46 AM
கார்க்கி said...

//கெத்துப் பரோட்டோவா இருக்கே தல..கெத்தா. சூப்ப//

என்ன தல மிஸ்டு கால் தறீங்க?
//

எல்லாரும் ஃபார்ம்ல இருக்கீங்க ஃப்ரெண்ட்ஸ். கலக்குங்க!

தண்டோரா ...... said...

mmmmmm...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Cable Sankar said...

/எல்லாரும் ஃபார்ம்ல இருக்கீங்க ஃப்ரெண்ட்ஸ். கலக்குங்க!
//

ennathu..நான் பாக்குறது கனவா.? பரிசல்காரன்னு போட்டிருக்கு.. கண்ணை தொடைச்சிட்டு பாருங்கப்பா.. அட நிசமாவே பரிசல்தான்.. நண்பரே சவுக்கியமா..?

Romeoboy said...

தல நானும் அந்த கடையை பத்தி கேள்விபட்டு இருக்கிறேன், அசைவ ஜோக் ஜூப்பர்........

வெயிலான் said...

நல்லாருந்தது தலைவரே!

தோழி - நிச்சயம் கவனிக்க வேண்டிய பதிவர் தான்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஏ மேட்டரும், ஏ ஜோக்கும் இந்த முறை நன்றாகயிருந்தது. வாசகர்கள் வந்து போட்டோக்கள் எடுத்துக்கொள்ளுமளவில் எழுத்துலகைப்போல பதிவுலகையும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தியுள்ளீர்கள். :-))

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//பெண்களின் மார்பகங்களை சும்மா பார்த்து கொண்டிருந்தாலே உடலில் ரத்த ஓட்டம் சீராகி பிபி எல்லாம் நார்மலாகி//

தல! தகவல் குற்றம் இருக்கிறது.... பிபி அதிகம் தானே ஆகும் ??????

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

தல இதுவும் சூப்பர்

Cable Sankar said...

@மயில்ராவணன்
நன்றி பாஸ்

@காவேரிகணேஷ்
பார்த்துட்டேன்

@தராசு
ஏன் நல்லாயில்லியா..?

@ஜெட்லி
அதுக்குத்தான் ரெண்டு மூணு கீ போர்ட் வாங்கிவச்சிட்டேனே

@கார்க்கி
உடனடியா கவிதை வெளீயான உடனே நீங்க ஒருபதிவ போட்டுருங்க

@சங்கவி
நன்றி

Cable Sankar said...

@புலவன் புலிகேசி
நிச்சயம்

@காவேரிகணேஷ்
ஏதோ உங்களை நீங்க மனசுல நினைக்கிறது நடந்தா சரி..தலைவரே

@அதிபிரதாபன்
என் முகத்தில .. மிரட்சி.. /

@பப்பு
சரி..சரி வெளீய சொல்லக்க்கூடாது..

Cable Sankar said...

@க.பாலாசி
அடுத்த வாரம் சேர்த்துடலாம்

@சைவ கொத்து பரோட்டா
நன்றி

@அசோக்
அலோவ்..நான் கண்டுபிடிச்சேன்னா சொன்னேன்.சொல்லியிருக்காஙக்னுதானேசொன்னேன். இதுக்கு முன்னாடி நான் வேற ஏதோ பத்திரிக்கையில் படிச்சிருக்கேன்

@பலாபட்டறை
அவ்வளவு தைரியம் ஆயிருச்சா

2ராஜகோபால் எறும்பு
பார்த்துட்டேன் நன்றி

Cable Sankar said...

@பட்டர்ப்ளை சூர்யா
நன்றி
@நர்சிம்
நன்றியோ நன்றி

@கார்க்கி
ஓகே ரைட்டு

@ஸ்ரீ
நன்றி தலைவரே

2வந்தியத்தேவன்
இதுக்கெல்லாம் ஆதாரம வேற வேனூமா..?

@என்.உலகநாதன்
அட ஆமாம் சாரே.. மறந்து போயி.

காரணம் ஆயிரம்™ said...

அய்யோ அந்த குறும்படம்!!!

பயங்கரப்படங்களைவிட அதிர்ச்சியை உண்டாக்குகிறது... நீண்ட நேரம் நினைவில் அகலாமல் இருந்தது...

சமீபத்தைய கௌதம் படங்களின் சாயல் இருந்தாலும், சிம்ப்ளி சூப்பர்ப்!

கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com

Cable Sankar said...

@பூங்குன்றன்.வே
நன்றி

@வெற்றி
நன்றி..:):)

@அக்பர்
நன்றி நிச்சயமா

2வரதராஜுலு
அப்படியா..:))

@அன்புடன் - மணீகண்டன்
இன்னுமில்லை

Cable Sankar said...

@சூர்யா மும்பை
மிக்க நன்றி மும்பை சூரியா.. வழக்மான வாருங்கள்

@சங்கர்
ஏதோ உங்க ஆசிர்வாதம்

@ஸ்ரீ நி.
அப்படியெல்லாம் ஒன்ணூமில்லை ஜி

Cable Sankar said...

2ஷண்முகப்பிரியன்
நன்றி சார்.

@தண்டோரா

என்ன ம்ம்ம்ம்ம்

2ரோமிபாய்
நன்றி

@வெயிலான்
நன்றி தலைவரே..

@நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்

நன்றி
2கார்த்திகேயனும்
நன்றி..

Kabi said...

கொத்து first மேட்டரு சுப்பர், அருமையான கண்டுபிடிப்பு, இத சொன்ன அடிக்க வராங்க all ரசனைகேட்ட ஜென்மம்ஸ்...