Thottal Thodarum

Dec 1, 2009

Arya–2- Telugu Film Review

நண்பர்,பதிவர் மங்களூர் சிவாவின் தாயார் காலமானார். அவருக்கும், அவர் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலகள்

arya2review அல்லு அர்ஜூன்,சுகுமார் என்று இதே குரூப் சில வருடங்களுக்கு முன் தெலுங்கு சினிமாவையே கலக்கி போட்ட படம் ஆர்யா. இப்போது அதே குரூப் அதே பெயரில் இரண்டாவது பாகம் என்று வெளியிட்டிருக்கிறார்கள். முதல் படத்தின் கேமராமேன் ரத்னவேலு, இதில் ராஜசேகர். படத்தின் ஹீரோ கேரக்டரின் பேரும், முதல் பாகத்தில் இருந்த புத்திசாலித்தனமான திரைக்கதை உத்தியை தவிர வேறேதும் ஒற்றுமையில்லை.

ஆர்யா ஒரு அனாதை. அவன் தனக்கான ஒரு நண்பனை கண்டுபிடிக்கிறான். அன்பை கட்டாயமாய் கொடுக்கிறான் பெறுகிறான். ஒரு கட்டத்தில் நண்பனுக்கு ஒரு பெரிய பணக்கார குடும்பம் வந்து தத்தெடுத்து போக, இருவரும் பிரிகிறார்கள். அவன் வெளியே போனாலும் இருவரும் தொடர்பில் இருக்க, சில வருடங்களுக்கு பிறகு பெரியவர்களாக வளர்ந்து இருக்க, நண்பனுக்கு ஒன்றென்றால் துடித்து போய் அவனை துவம்சம் செய்வதாகட்டும், ஆனால் அதே நண்பனை ஒரு மாதிரியான சைக்கலாஜிகல் டார்ச்சர் செய்து, அவனுடன் இருக்க சம்மதிக்க வைக்க, நண்பன் வேறு வழியில்லாமல் அவனுடய ஆபீஸிலேயே ஒரு வேலை கொடுத்து தன்னுடன் இருக்க சம்மதிக்கின்றான். ஒரு கண்டிசனோடு.. அவனை பற்றி ஏதாவது தவறான ஒப்பீனியன் வந்ததென்றால் அன்றே உன்னை அங்கிருந்து துறத்தி விடுவேன் என்று.
arya

அங்கிருந்து ஆரம்பிக்கிறது ஆர்யாவின் அட்டகாசம். யாரும் ஒரு குறை சொல்ல முடியாத மிஸ்டர்.பெர்பெக்டாக மாறுகிறான். ஆனால் அவன் செய்யும் எல்லா அட்டகாசங்களும் குறையாமல். அவனே செய்தேன் என்று சொன்னால் கூட யாரும் நம்ப முடியாத அளவிற்கு. ஒரு நாள் கீதாவை ஆர்யாவின் நண்பன் காரில் லிப்ட் கொடுக்க, பார்த்த கணத்தில் அவளை காதலிக்க ஆரம்பிக்கிறான். பின்னாலேயே உள்ள ஆர்யாவும் அவளை காதலிக்க ஆரம்பிக்க, போட்டி ஆரம்பிக்கிறது. சுவாரஸ்யமாய். இவர்கள் இருவரில யாருக்கு கீதா கிடைக்கிறாள் என்பது மீதி கதை.
arya1

வழக்கம போல அல்லு அர்ஜுனின் உழைப்பு படம் முழுவதும். ஒவ்வொரு முறையும் நண்பனை தோற்கடிக்கும் காட்சியிலாகட்டும், லிப்டில் கீதாவுக்கு அழுத்தமான முத்தம் கொடுத்துவிட்டு ஒன்றுமே தெரியாத மிஸ்டர்.பர்பெக்டாய் வலைய வருவதாகட்டும், பாடல்களில் அவர் ஆடும் நடனங்கள் ஆகட்டும், சண்டைக் காட்சிகளில் அவரின் வேகம் ஆகட்டும், அவரின் உழைப்பு ஒவ்வொரு விஷ்யத்திலும் தெரிகிறது.

வழக்கம் போல காஜல் அகர்வால் கீதாவாக, க்யூட் ம்ஹும் பார்த்து கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது. அதிலும் ஒரு காட்சியில் ஒரு மாதிரி டைட்டான உடையை போட்டுக் கொண்டு ஸ்க்ரின் முன்னால் நிற்பாரே. அய்யோ…அய்யோ.. நிமிடத்தில் எட்டு ரியாக்‌ஷனை காட்டுவதில் இன்னொரு ஜோதிகாவாக மாறி வருகிறார். என்ன சொன்னாலும் ஏதும் குறை சொல்ல முடியவில்லை.. மன்னிக்கவும்.. ம்ஹும்.. என்னா க்யூட்டா இருக்குப்பா இந்த பொண்ணு.
arya2நண்பனாக நவ்தீப் பெரிதாய் அர்ஜுனுக்கு ஈக்குவலான கேரக்டர் ஆனால் பெரிதாய் செய்ல் படாத கேரக்டர். க்ளைமாக்ஸுன் போதுதான் எழுந்து நிற்கிறது. இருந்தாலும் நீட் பெர்மாமன்ஸ்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளீப்பதிவு நல்ல தரம். அதே போல் மார்தாண்ட் கே.வெங்கடேஷ்னின் எடிட்டிங்கும் கிரிஸ்ப். தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் வழக்கம் போல இளைஞர்களுக்கானது. பவன் கல்யாணுக்கு ட்யூன் செய்த பாடல்களையே மீண்டும் ரிஹர்ஸ் செய்திருக்கிறார். இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது. அதிலும் அந்த ரிங்காரிங்கா பாட்டும் அந்த பாட்டுக்கு ஆடும் ஹாட்டும் ம்ம்ம்ம் சும்மா அதிரிபோயிந்திரோ…

முக்கியமாய் பாராட்டபட வேண்டியவர் திரைக்கதை அமைத்த வேமாரெட்டியைத்தான். பரபரப்பான இண்ட்ரெஸ்டிங்கான, புத்திசாலிதனமான, தொடர் சம்பவங்களால் நம்மை கட்டி போடுகிறார். பல இடங்களில் லாஜிக் மீறினாலும் அந்த காட்சிகள் தரும் ப்ரெஷ்னெஸ் அருமை. காதல் காட்சிகளாகட்டும், அல்லது கேட் அண்ட் மவுஸ் கேம் சீனாகட்டும் ரொம்பவே மெனக்கெட்டு ப்ரெஷ்ஷாக வெளிபடுத்தியிருக்கிறார்கள். கீதா வீட்டுக்குள் சமையல் செய்யும்போது கரெண்ட் கட்டாக, அவள் மெழுகுவர்த்தி தேட, உடனே அவளுக்கு எஸ்.எம்.எஸ் வருவதும், அடுத்து தீப்பெட்டிக்கு எஸ்.எம்.எஸ் வருவதும். குழம்பி போன கீதா தன் மன பிராந்தி என்று நினைத்து கொண்டு குளிக்க, தன் உடையை கழட்ட, எஸ்.எம்.எஸ்சில் கதவை மூடிக்கொள் என்று வரும் காட்சிகள் செம க்யூட்.

கதை இயக்கும் சுகுமார். ஆர்யாவில் இருந்த் அதே பாரலல் திங்கிங் கதையமைப்பு. முதல் பாதியில் கொஞ்சம் ஆர்யாவின் கேரக்டரை செதுக்குவதில் நேரம் எடுத்து கொண்டது கொஞ்சம் தொய்வு விழுந்தாலும், நடிகர்களின் பெர்பமன்ஸினால் தாக்கு பிடிக்கிறது. இரண்டாவது பாகத்தில் கதை ராயல சீமாக்கு போன பிறகும் கொஞ்சம் முன்னே பின்னே போகிறது.. ஓப்பனிங் காட்சியில் ஆர்யா சிறுவனாய் இருக்கும்போது தன் நண்பனை தேர்தெடுக்கும் சுவிங்கம்மேட்டரும், உதவி செய்யும் மேட்டரும் சூப்பர். அந்த ஒரு காட்சியே ஆர்யாவின் கேரக்டரை தெள்ள தெளிவாக வெளிபடுத்தி விடுகிற போது ஏன் அவ்வளவு சீன்கள்? படத்தில் குறைகளே இல்லையா என்று கேட்டால் இருக்கிறது.

ஆர்யாவின் கேரக்டரைசேஷன். அவனின் நடவடிக்கைகள் ஒரு எக்ஸெண்ட்ரிக்கான சைக்கொ வில்லனை போல காட்டபட்டிருக்க, என்னதான் அவன் தனியனாய் இருந்ததால் இப்படி ஆகிவிட்டான் என்று சொன்னாலும் சில சமயம் அந்த கேரக்டர் மேல் வரவேண்டிய ஸாப்ட் கார்னர் வர மாட்டேன் என்கிறது. ஆர்யா முதல் பாகத்தில் ஆர்யாவின் கேரக்டர் அடமெண்டாய் இருந்தாலும், அவனின் காதல் உண்மையானதாக இருந்தது. எனவே படம் பார்க்கும் ஆடியன்ஸும் அவனின் காதல் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் அழுத்தமாய் இருந்த்து. இதில் ஆர்யாவின் கேரக்டரே கொஞ்சம் முன்னே பின்னே இருப்பதால் அந்த அழுத்தம் மிஸ்ஸிங். கடைசி காட்சிகளில் தான் ஆர்யாவின் கேரக்டர் ஒரு நிலை பெறுகிறது. மற்றபடி படம் அடி தூள்..


இந்த ட்ரைலர் க்யூட் காஜலுக்காக.

Arya-2 – நச்சாவுலே…

Technorati Tags: ,உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

27 comments:

பைத்தியக்காரன் said...

படத்தை பத்தி மிக்ஸட் டாக் இருக்கு... காரணம், 'ஆர்யா' (தமிழ்ல 'குட்டி')வோட இந்த 'ஆர்யா 2'ஐ ஒப்பிட்டு பார்க்கறதுதான். உண்மைல, இரண்டுமே வேற, வேற.

படத்தை பார்க்கும்போது நீங்க அனுபவிச்சதை, ஒரு ரசிகரா, விமர்சகரா, இயக்குநரா வெளிப்படுத்தியிருக்கீங்க...

சுகுமாரை மிஸ்டர்.பெர்பக்ஷனிஸ்ட்டுனு சொல்வாங்க. அது ப்ரேம்ல தெரியுது.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

புலவன் புலிகேசி said...

//அதிலும் ஒரு காட்சியில் ஒரு மாதிரி டைட்டான உடையை போட்டுக் கொண்டு ஸ்க்ரின் முன்னால் நிற்பாரே. அய்யோ…அய்யோ.. நிமிடத்தில் எட்டு ரியாக்‌ஷனை காட்டுவதில் இன்னொரு ஜோதிகாவாக மாறி வருகிறார்.//

தல எனக்கும் காஜல் அகர்வால புடிக்கும்...விமர்சனத்திற்கு நன்றி..

வெற்றி said...

விமர்சனம் நல்லா இருக்கு.....நான் ஆர்யா-1 பார்க்கவில்லை...அதை பார்க்காமல் ஆர்யா-2 பார்த்தால் படம் புரியுமா?

பேநா மூடி said...

குட்டி ரீமேக்கா ... அப்போ குட்டி 2 வரும்.. விமர்சனம் அருமை...

கார்க்கி said...

பார்க்கனும் தல. ஆர்யா 1 என்கிட்ட சிடி இருக்கு. செம படம் அது

Karthik Viswanathan said...

காஜல் அம்மாயிகோச்ரம் ஈ படம் சூடாலி...
ரிங்க ரிங்கா ரிங்க ரிங்கா லே....
வெற்றி said
//விமர்சனம் நல்லா இருக்கு.....நான் ஆர்யா-1 பார்க்கவில்லை...அதை பார்க்காமல் ஆர்யா-2 பார்த்தால் படம் புரியுமா?//

அட தெலுங்கு படத்துல என்னங்க முதல் ரெண்டாவது... எது பாத்தாலும் புரியும்...
மறக்காம மஞ்ச சட்ட பச்ச பேன்ட் போட்டுட்டு போங்க....

Romeoboy said...

இதுக்கு பேருதான் பிரிச்சு மேயுறது .. கலக்குறிங்க தல, விமர்சனம் படிக்கும் போதே படம் பார்க்க வேண்டும் போல இருக்கு.

பிரபு . எம் said...

படம் பார்க்கணும்னு ஒரு ஃபீல் வருது....
படம் பாத்துவிட்ட ஃபீலும் வருது.... துல்லியமான அலசல்... நன்றி

D.R.Ashok said...

தெலுங்கு படங்கள் விமர்சனம் எழுதும்போது மட்டும் ஒரு துள்ளல், ஒரு கலர்பூல், ஒரு சியர்ஸ் வந்துடுது.. உங்ககிட்ட...

நீரு மணவாடா...?

டம்பி மேவீ said...

కేబుల్జి........ తిరైవిమర్సనం నల్ల ఇరుక్కు..... ఇరున్తలుం ఒరు రాసిగానై సోల్లి ఇరున్తాల్ నంత్రగా ఇరున్తిర్కుం..

మత్రపడి కలక్కల్

(தமிகு தான்.... எல்லாம் கூகிள் ஆண்டவரின் கைவரிசை)

ஜெட்லி said...

நாங்கெல்லாம் தமிழன்.. குட்டி ரெண்டு வரட்டும்..

Guru said...

anne, arya 2 parthura vendiyathu thaan.. athukku mudhalla arya 1 vera pakkanum..

apram,malaylathula " Passenger" padam partheengala? athoda vimarsanam eluthina nalla irukkum.. enakennavo kamal sonna "common man" rolekku srinivas than romba suit avaarnu thonuthu.. kamal nammala common man aa paakka mudiyalankarathu ennoda karuthu..

senthilkumar said...

HI Cable ji,

Pls ask unmaitamilan to find virus and clear in his blog. When i visit his blog, it shows "Report attack site"..

Pls ask him to clear. thanks

Senthilkumar M

அத்திரி said...

//என்ன சொன்னாலும் ஏதும் குறை சொல்ல முடியவில்லை.. மன்னிக்கவும்.. ம்ஹும்.. என்னா க்யூட்டா இருக்குப்பா இந்த பொண்ணு.//


தமன்னா போய் காஜல் அகர்வாலா////////////

அம்மாக்கண்ணு said...

தமிழ் படங்கள் எல்லாமே மட்டமா இருக்குன்னு எழுதுறீங்க ஆனா ஒரு மட்டமான தெலுகு படத்தை இப்படி புகழ்ந்து தள்ளுறீங்க ..What is your problem?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//என்ன சொன்னாலும் ஏதும் குறை சொல்ல முடியவில்லை.. மன்னிக்கவும்.. ம்ஹும்.. என்னா க்யூட்டா இருக்குப்பா இந்த பொண்ணு.//
ஆஹா............யூத்து கிளம்பிட்டாருய்யா.....கிளம்பிட்டாரு!

kanagu said...

anne.. kajal agarwal ah pathi ivlo solittu close-up la oru photo kooda podaliye :( :(

indha padam thoda torrent-ku naan wait panna poren :)

nalla vimarsanam... :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணா படம் பார்த்தேன். படம் சூப்பர். காஜல் அகர்வாலை பார்த்துகிட்டே இருக்கலாம். ரிங்கா ரிங்கா பாட்டும் சூப்பர்.

பிரேமானந்தம் செல் போன் உடையுற காமெடிக்கு வயிறு வலிச்சு போச்சு

Cable Sankar said...

@பைத்தியக்காரன்
ஆமாம்ண்ணே..

@புலவன் புலிகேசி
நன்றி

@வெற்றி
ரெண்டுத்துக்கும், சம்மந்தமேயில்லை தாராளமா பார்க்கலாம்

@பேநாமூடி
அது சரி

Cable Sankar said...

@கார்க்கி
மிஸ் பண்ணாத

@கார்த்திக் விஸ்வநாதன்
அவனண்டி, ஆ பாட்டுலோ ஆ அம்மாயி சால பாக சூப்பிஞ்சிதண்டி..
நீங்க சொல்ற மாதிரியான மஞ்ச சட்டை பச்சை பேண்ட் காலமெல்லாம் மலையேறி ரொம்ப நாளாயிருச்சு

Cable Sankar said...

@ரோமிபாய்
நிச்சயம் பாருங்க

@பிரபு.எம்
நன்றி

@அசோக்
என்ன பண்ணுறது.. அங்க அவ்வளவு யூத்புல்லா படம் பாக்குறாங்க

Cable Sankar said...

@டம்பி மேவி
ஒழுங்கா தமிழ்ல எழுதினாலே எழுத்து கூட்டிபடிக்கிறவன் நான் என்னைய போய் ஜாங்கிரி தெலுங்கில படிக்க சொன்னா..?:(

Cable Sankar said...

@ஜெட்லி
நன்றி

@குரு
பாஸஞ்சர் சிடி நாளைக்கு வருது பார்த்துட்டு சொல்றேன்

@செந்தில்குமார்
சொல்லிட்டேன்.

@அத்திரி
யோவ், நாங்க வளர்ற பசங்கய்யா.. அப்படித்தான் மாறிட்டேருப்போம்..

Cable Sankar said...

@அம்மாக்கண்ணு

முதலில் ஒரு விஷயம் தமிழை தவிர மற்ற மொழி படங்களை நான் நன்றாக இருக்கிறது என்று நினைக்கிற படஙகளை மட்டுமே எழுதுகிறேன். அப்படி நான் பார்க்கிற படங்களை எல்லாம் எழுதுவது என்றால் ஒரு நாளைக்கு ஒரு பதிவு போதாது. அதுமட்டுமில்லாமல். நீங்கள் என் பதிவுகளை அரைகுறையாய்படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒழுங்காக படித்திருந்தால் நான் எத்தனை படங்களை பாராட்டி யிருக்கிறேன். எவ்வளவு படங்களை பற்றி குறை சொல்லியிருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும். அப்படியில்லை என்றால் அந்த படங்களுக்கு மக்களீன் அங்கீகாரம் என்ன என்பது ஓடியதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.. நன்றி.

Cable Sankar said...

@பெய்ர் சொல்ல விருப்பமில்லை
நன்றி

@கனகு
அதுக்குதானே ட்ரைலரை போட்டிருக்கேன்


@ரமேஷ் ரொம்ப நல்லவன்
மேலே இருக்கிற அம்மாகண்ணுக்கு சொல்லுங்க இந்த படம் மட்டமான பட்ம்னு சொல்றாரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அம்மாக்கண்ணு முதல்ல ஆர்யா 2 போய் பாருங்க. தமிழ்ல நான் அவன் இல்லை - 2 ரொம்ப மட்டமா இருக்கு. ஆனால் இந்த படம் உண்மையிலையே நல்ல படம். சென்னை காசினோ, ஐநாக்ஸ், சத்யம் ல ஓடுது. மொதல்ல போய் பாருங்க.

pappu said...

இந்தப் படத்துல் 'ரிங்க ரிங்கா'னு ஒரு பாட்டுல வரிகள் எல்லாம் அசிங்க அசிங்கமா இருக்காமே. இதை யூத்துகளுக்காக ஸ்பெஷல் கவரேஜ் செய்யவும்.