Thottal Thodarum

Dec 24, 2009

கந்தகோட்டை –திரை விமர்சனம்

ஆறு லட்சம் ஹிட்ஸுகளையும், 550 பாலோயர்களையும் தந்து என்னை மேலும் ஊக்குவிக்கும் என் அன்பு வாசகர்களுக்கும்,பதிவர்களுக்கும் நன்றி.. நன்றி..நன்றிங்கோ..

Kandha-Kottai-movie-poster-stills காதலை வெறுக்கும், காதலிப்பவர்களை பிரிக்கும், அல்லது போட்டு கொடுக்கும் ஹீரோ, யார் காதலாய் இருந்தாலும் எப்பாடு பட்டாவது அவர்களை சேர்த்து வைப்பதற்காக போராடும் கதாநாயகி. ஒரு கட்டத்தில் கதாநாயகியின் கஸின் ஒரு பெண்ணை காதலிக்க, அவனின் காதலை சேர்த்து வைப்பதற்காக சென்னை வருகிறாள். வந்த இடத்தில் கதாநாயகனை சந்திக்கிறாள். அவனுடய தங்கையை தான் தன் கஸின் காதலிப்பதை அறிந்து அவனுடன் பிரெண்டாக முயல, அதே நேரத்தில் வேறு ஒரு காதல் ஜோடியின் உண்மை காதலை கண்டு உணர்ந்து கதாநாயகன் திருந்திவிட, ஒரு கட்டத்தில் கதாநாயகியை காதலிக்க ஆரம்பிக்கிறான். அவளும் ஊருக்கு போய் காதலை ஒப்புக் கொள்ள, அவளால் ஹீரோவுடன் சேர முடியவில்லை. மிக பெரிய பிரச்சனை அவர்களின் காதலுக்கு இருக்க, எப்படி அவன் பிரச்சனையிலிருந்து மீண்டு கதாநாயகியை அடைக்கிறான் எனபதை. சும்மா.. சுறு சுறுவென பட்டாசு போன்ற காட்சியமைப்பால் சொல்லியிருக்கிறார்கள்.
kandha-kottai-nakulan-poorna

காதலே பிடிக்காத நகுல். ஏனென்றால் தன்னுடய அம்மா, அப்பா காதலித்து திருமணம் செய்தாலும் எப்பப்பார் சண்டை போட்டுக் கொண்டு இருப்பதால் காதல் என்பதே ஒரு பம்மாத்து என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதால் அவர் காதலை பிரிக்கும் காட்சிகள் இன்ரஸ்டிங். அதே போல சந்தானத்தின் காதலை உடைக்கும் போதெல்லாம் குபீர் நகைச்சுவை. பாடல் காட்சிகளில் நடனமும், பூர்ணாவுடனான கெமிஸ்டிரியும் நன்றாக இருக்கிறது. சண்டைக்காட்சிகளில் வேகம் கூடியிருக்கிறது. அதுவும் க்ள்மைமாக்ஸில் வில்லனிடம் மூன்று நாட்கள் புரோக்ராம் சொல்லி, அதை முறியடித்து அவனை வெறி கொண்டு அலையவைக்கும் காட்சிகள் எல்லாம் பரபர சுருசுரு சரவெடி. முடிந்த வரை நகுல் நன்றாகவே செய்துள்ளார்.

பூர்ணா.. ஒரு பக்கம் பார்த்தால் அசின் போல இருக்கிறார். பெரிதாய் நடிப்பதற்கு வாய்பில்லை என்றாலும், படம் பூராவும் துருதுருவென அலைகிறார். நிறைய காட்சிகளில் மேக்கப் ஒவர். இரண்டாம் பாதியில் அழுது வடியும் தோற்றத்தை கொடுப்பதற்காக போடப்பட்டிருக்கும் டல் மேக்கப் க்யூட். அதில் பூர்ணா அழகாய் இருக்கிறார்.
kandha-kottai26

வழக்கப்படி சந்தானமும், நண்பர்குழாமும், படத்திற்கு வலுவூட்டியுள்ளனர். படம் நெடுக கவுண்டர் மாதிரி சந்தானம் அடிக்கும் நக்கல் நையாண்டிகள் தூள் பறக்கிறது.

வில்லனாய் சம்பத், இறந்து போன மகனுக்காக வெறி கொண்டு அலையும் தகப்பனை காட்ட முயன்றிருக்கிறார். அவரை டேட் வைத்து கலாய்க்கும் போது இவர் டென்ஷனாகி அலையும் காட்சிகள் தூள்.
kandha-kottai29 தினாவின் இசையில் இரண்டு பாடலகள் நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு குறையொன்றும் இல்லை. இயக்கம் புதிய இயக்குனர் எஸ்.சக்திவேல். ஒரு பக்கா கமர்ஷியல் ஸ்கிரிப்டை வைத்து நல்ல மசாலா தடவி மொறு மொறு வென படைத்திருக்கிறார். முக்கியமாய் க்ளைமாக்ஸ் காட்சிகளில் ஒரு மாஸ் ஹீரோவுக்கான காட்சிகள். நிச்சயம் இந்த படத்தின் கதையை விஜயை வைத்து பண்ணியிருந்தால் வேறு கலரும் கிடைத்திருக்கும் விஜய்க்கும் ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல எண்டர்டெயினர் கொடுத்த திருப்தி கிடைத்திருக்கும். இருந்தாலும் நகுலை வைத்து கொஞ்சம் கூட உறுத்தாமல் ஒரு மாஸ் ஹீரோவுக்கான பில்டப்பையும் இண்ட்ரஸ்டாய் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
kandha-kottai படத்தில் குறைகள் என்றால் நகுலின் சேட்டு தமிழும், ஆங்காங்கே ஏற்கனவே சொன்னது போல மாஸ் ஹீரோவுக்கு செய்ய வேண்டிய காட்சிகளை நகுலை முன்வைத்து பார்க்கும் போது ஏற்படும் சில சறுக்கல்களும், ஹீரோயின் வீட்டில், ஹீரோ வீட்டில் என்று எல்லா இடங்களிலும் ஆளாளுக்கு காதல் செய்ய , அனுமதிக்கும் காட்சிகளும், வில்லனுக்கான காட்சிளில் கொஞ்சம் பழைய தெலுங்கு பட வாசனை மட்டும் தான் என்று சொல்ல வேண்டும்.
கந்த கோட்டை – கமர்ஷியல் கோட்டை

டிஸ்கி : மிஸ் பண்ணிட்டீங்களே விஜய்.. நிச்சயம் இதை கிண்டலுக்காக சொல்லவில்லை. இந்த படத்தில் அருமையான ஒரு மாஸ் ஹீரோவுக்கான சப்ஜெக்ட் இருக்கிறது. திரைக்கதை இருக்கிறது. விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோ நடித்திருந்தால் ஒரு திருப்தியான படம் கிடைத்திருக்கும் ரசிகர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும்.தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் குத்துங்க எஜமான் குத்துங்க..
Post a Comment

38 comments:

Valaimanai said...

நெசமாத்தான் சொல்றீங்களா.... நகுல் படம் நல்லா இருக்கா ? நம்பவே முடியல

எறும்பு said...

இவங்க வேற சன் பிச்சர்ஸ் மாதிரி எல்லா சானேல்லையும் நொடிக்கு நூறு ட்ரைலர் காமிச்சாங்க... அத பாத்தே கடுப்பா ஆயிருச்சு... அப்ப பாக்கலாம் ?

Kodees said...

//நெசமாத்தான் சொல்றீங்களா.... நகுல் படம் நல்லா இருக்கா ? நம்பவே முடியல//

கூடவே சன் பிக்சர்ஸ் படம் நல்லா இருக்கா ? நம்பவே முடியலயும் சேர்த்துக்குங்க!

Cable சங்கர் said...

@valaimanai

நிஜமாவே இண்ட்ரஸ்டிங்

@ராஜகோபால்
வேற வ்ழியில்ல எறும்பு.. விளம்பரம் பண்ணித்தான் ஆக வேண்டிய நிலமை இப்ப..

@ஈரோடு கோடீஸ்
தலைவரே இது சன் பிக்சர்ஸ் படமல்ல..

இராஜ ப்ரியன் said...

oh ........... appa padam pakkalaam

அன்பேசிவம் said...

தல நம்பவே முடியலை.......

ஐயோ இந்த பையன் சுக்வீந்தர் சிங் தமிழில் பாடுறமாதிரியில்ல பேசுவான். எப்படி படம் நெடுக கேக்குறது?

Unknown said...

அப்போ இது மௌனம் பேசியதே ரீமேக் இல்லையா...

வெண்ணிற இரவுகள்....! said...

சங்கர் நான் படம் பார்த்தேன் அருமை .........................
ஆனால் காதலின் வலி இருவருக்குள் நடக்கும் ஊடல் என்று படம் செல்லும்
என்று எதிர்பார்த்தேன்.முதல் பாதி சர வெடி ....
இரண்டாம் பாதி காதலன் காதலியை தவிர இன்னொரு வில்லன் அது minus என்று நினைக்கிறன் ...................
இரண்டாவது பாதியில் விஜய் விஷால் படங்கள் போல் சண்டை போட்டு ஜெய்க்க வேண்டும் என்று சொல்லிருக்க என்று
தோன்றியது ......

கதை காதலன் காதலி ஊடல் காதல் இந்த வரியிலேயே செல்ல வேண்டும் ..............கூடவே வில்லன் என்று வரும்
போது கட்டாயம் மாஸ் தேவை தான என்று தோன்றுகிறது நண்பரே ....
இருந்தாலும் நான் ரசித்தேன்

Ganesan said...

அப்போ அடுத்த இளைய தளபதி
நகுலா ?

ettana said...
This comment has been removed by the author.
butterfly Surya said...

KaveriGanesh @அப்போ அடுத்த இளைய தளபதி நகுலா ?/// அவ்வ்வ்வ ... இன்னொரு தள(ல)பதியா..??

ettana said...

சங்கர் சார்,
இது என் முதல் பின்னூட்டம்.
உங்கள் எழுத்துக்களை பல நாட்களாக வாசித்து வருகிறேன்.
வாழ்த்த வயதில்லை.
உங்கள் சேவைக்கு நன்றி.
இந்தப்பட தயாரிப்பாளரை பற்றி சொல்லுங்களேன்..

butterfly Surya said...

Valaimanai said..நெசமாத்தான் சொல்றீங்களா.... நகுல் படம் நல்லா இருக்கா ? நம்பவே முடியல////

இது நெசமாத்தான் சுகுமாரோட கமெண்டா..?? நம்ம முடியல..

சென்னையிலத்தான் இருக்கீங்களா..??

Prathap Kumar S. said...

அண்ணே விமர்சனம் டாப்பு...அதுல கடைசியா சொன்ன டிஸ்கி அதைவிட டாப்பு... அது விஜய் பண்ண
தப்புல்லண்ணே...எஸ்ஏசி பண்ணதப்பு...

Guru said...

/பாடல் காட்சிகளில் நடனமும், பூர்ணாவுடனான கெமிஸ்டிரியும் நன்றாக இருக்கிறது./

தல, நீங்களும் கெமிஸ்ட்ரி பொரபசரா? சொல்லவே இல்ல ! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

/மிஸ் பண்ணிட்டீங்களே விஜய்../
விடுங்க அண்ணே ! இந்த படத்த விஜய் நடிச்சிருந்தா 100 பன்ச் டயலாக்,மொக்கை காமெடி இதெல்லாம் சேர்க்க சொல்லி இயக்குனர பாடாபடுத்தி இருப்பார். கௌதமோட விகடன் பேட்டி தான் நினைவுக்கு வருது..

பூங்குன்றன்.வே said...

//கந்த கோட்டை – கமர்ஷியல் கோட்டை//


அப்படின்னா நக்கல் என்னொரு ரவுண்ட் வருவான்னு சொல்லுங்க :)

sathishsangkavi.blogspot.com said...

தலை நகுல நம்பி தியேட்டருக்கு போகலாம்னு சொல்றீங்க......

கலையரசன் said...

அப்ப..
கந்த கோட்டை – கலெக்ஷன் வேட்டை

சிவகுமார் said...

ook right ..........!!!!!!!!!!!!!1

ஜெட்லி... said...

// நகுலின் சேட்டு தமிழும்//


கரெக்ட்....
நகுலனுக்கு நடிக்க வருதா?? தலைவரே....
அவர் சோக சீன் கூட சிரிக்கிற மாதிரியில்ல இருக்கும்

Beski said...

Thanks.

க.பாலாசி said...

ரைட் நல்ல விமர்சனம். நான் நல்லாயிருக்காதுன்னே நினைச்சேன்.

Prabhu said...

உங்க ‘கலை’ கண்ணுக்கு தெரியுறது விஜய்க்கு தெரியலையே!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல விமர்சனம்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பாக்கலாமா?!!!!!!!!

பரிசல்காரன் said...

இந்தப் பதிவுக்கு இதுவரைக்கும் நான் ஒரு பின்னூட்டமும் போடலைங்கறத இப்பத்தான் பார்த்தேன்.

ஸாரிங்க சங்கர்ஜி.

Dhivya Reddy said...

நகுல் படம் நல்லா இருக்கா? நான் கண்டிப்பா நல்லா இருக்காதுன்னு நினைச்சேன்.இந்த குறும்படம் பாருங்களேன்.நல்லா இருக்கு.
http://www.youtube.com/watch?v=T1Es6yVlpjs&feature=related

Ravikumar Tirupur said...

பயனுள்ள விமர்சனம்.
எனக்கேனோ இந்த நகுல்,ல புடிக்கவே மாட்டேங்குது.
எதாவது நல்ல உருக்கமான படத்துல நடிக்கட்டும் பார்க்கலாம்.
மத்தபடி இந்த கதைல ஹி..ஹி..ஹி... விஜய் நடுச்சா
பாவம் சக்திவேல் விஜய்காக பில்ட அப் சீன் வெச்சே கதைய கோட்டை விட்டிருவாரு.
புதுப்பேட்டைல போஸ்டர் ஒட்ட போன இடத்துல நடக்கற சண்டைல வசமா மாட்டிகிட்ட தனுஷ்ச “இனி அவ்வளவுதான் டைம் முடுஞ்சுது வாங்கடா போலாம்”,னு சொல்லுவாங்களே அது மாதிரி விஜய் ... முடுஞ்சுதுஞ்ணா... நீங்க ஐடியா குடுத்தா மட்டும்....!?

creativemani said...

நம்பினா நம்புங்க..
இந்த விமர்சனம் பார்த்ததுக்கு அப்புறம் இந்த படத்த பாக்குறமோ இல்லையோ.. படத்து மேல நல்ல அபிப்ராயம் வந்திருக்கு..
அவ்வளோ நல்லா எழுதியிருக்கீங்க.. :)

கார்க்கிபவா said...

:))

knitcity saran said...

unga pecha nambi padam paarkalama?

Manoj (Statistics) said...

பாஸ்.... நானும் நேற்றுதான் ரெண்டு படத்தையும் (வேட்டைக்காரன் (6.00 p.m show), கந்தகோட்டை (9.30 p.m show )) பார்த்தேன் .. ... நிஜமா சொல்றேன் , வேட்டைக்காரன் பாதியிலேயே தூங்கிட்டேன்... ஆனா கந்தகோட்டை அந்த நடுராத்திரியிலும் சுறுசுறுப்பாக பார்த்தேன் ... கந்தகோட்டை அவ்வளவு நல்லா இருந்துச்சு

கலகலப்ரியா said...

அருமையான விமர்சனம்... ஆனா படம் எப்டின்னு நான் பார்த்துட்டுதான் சொல்ல முடியும்... =))

Romeoboy said...

வெத்துவேட்டுகாரன் சாரி வேட்டைக்காரன் ஹி ஹி ஹி ... பார்ப்பதை விட இந்த படத்தை பார்க்கலாம்ன்னு சொல்லுரிங்க .. .
ரைட் பார்த்துடலாம்

Anonymous said...

அப்போ அடுத்த இளைய தளபதி நகுலா ?/// அவ்வ்வ்வ ... இன்னொரு தள(ல)பதியா..??

தலைவலி?? :))

Raghu said...

இன்னொரு த‌ள‌ப‌தியா?????அவ்வ்வ்வ்வ்...அப்ப‌ 2015 தேர்த‌ல்ல‌ ந‌குலுக்கு சான்ஸ் இருக்குன்னு சொல்லுங்க‌!

Cable சங்கர் said...

@rajapriyan
ஆமாம்

@முரளிகுமார் பத்மநாபன்

நல்லாவே பாடியிருக்கான் முரளி

@பேநாமூடி
இல்லை

@வெண்ணிர இரவுகள்
நன்றி
@காவேரி கணேஷ்
இதுவேற்யா..?

@பட்டர்ப்ளை சூர்யா
ஏன் இந்த கொலைவெறி..?

@ரமேஷ்
புரியலை

@நாஞ்சில் பிரதாப்
அஹா..ஆஹா..

@குடு
நானும் டிவி பாப்பேன்ல்ல..

@பூங்குன்றன் .வே
ஆனாலும் ரொம்ப்த்தான் நக்கல் உங்களுக்கு

@சங்கவி
நிச்சயம் எக்ஸ்படேஷன் எதுவுமில்லாமல் போனால் நிச்சயம் ரசிகக்லாம்

@கலையரசன்
நிச்சயம்


@ஜெட்லி
இன்னும்பாக்கலியா.?

2அதிபிரதாபன்
நன்றி

@க.பாலாசி
நானும் அப்படி நினைச்சுதான் பாக்க போனேன்

@பப்பு
அதானே

@டி.வி.ராதாகிருஷ்ணன்
நன்றி

@ஸ்ரீ
பார்க்கலாம்

@பரிசல்காரன்
சரி நானும் நன்றி சொல்லலை.. நன்றி

@திவ்யாரெட்டி
நன்றி.. உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

@ரவிகுமார் திருப்பூர்
என்ன செய்யறது ரவி..

@அன்புடன் மணிகண்டன்
போய் பார்த்துட்டு சொல்லுங்க

@கார்க்கி
என்ன சிரிப்பு வேண்டியிருக்கு

@சரண்
நம்புங்க

ஸ்@ட்டாஸ்டிங்
பாருஙக்.. நான் எழுதினது சரியா போச்சா..

2கலகலப்பிரியா
நன்றி

@ரோமிபாய்
பார்த்துடுங்க

@மயில்
ஏன்?

@குறும்பன்
:))

@

Dhivya Reddy said...

// @திவ்யாரெட்டி
நன்றி.. உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

ஹாங்….தலைவரே…நான் ரொம்ப காலமா உங்க பதிவை ஃபாலோ பண்றேன். பின்னுட்டம் போட்டதில்லை அவ்ளோ தான்.