Thottal Thodarum

Dec 21, 2009

எண்டர் கவிதைகள் -3

ஆறு லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி மேலும் என்னை ஆதரிக்கும் என் அன்பு பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும்.. நன்றி..நன்றி..நன்றி

enter photo

நிழற்குடையில்லா

நிறுத்தத்தின் வெயில்

உச்சத்தில் இறங்கி வியர்த்துவழிய

பிய்ந்த செருப்பினுடே

சூடேறுவதை கூட உணராமல்

கடந்து போகும்

மனைவியை பார்க்கிறான்

வேறொருவன் காரில்.டிஸ்கி: ஈரோடு பதிவர் சந்திப்பு சென்று திரும்புவதால் கொத்து பரோட்டா நாளை வெளியாகும்..

தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் குத்துங்க எசமா.. குத்துங்க
Post a Comment

61 comments:

க‌ரிச‌ல்கார‌ன் said...

மைன்ட் புளோயிங்

அண்ணாமலையான் said...

ஒக்கே சார்..

பாலா said...

ஹையா... நான் இதை ப்ரீவியூ’ல கேட்டுட்டேனே! :)

‘வியர்துவழிய’ ????

sathishsangkavi.blogspot.com said...

அப்படியா கேபிள் ஜீ...........

அன்பேசிவம் said...

தல எப்ப வந்திங்க? அதுக்குள்ள இரு எண்டர் டெரரா?

:-)

Prabhu said...

ஜூப்பரு!

ஜெட்லி... said...

நடத்துங்க....

Paleo God said...

கலக்கிட்டீங்க கேபிள் ஜி.... ::))
என் தமிலிஷ் ல சேக்கல??

மேவி... said...

wow...semaiya irukku..kalakkalss thaan cable ji...


parotta illaiyaaa???

enakku pasikkuthe......


hot spot la padathai mathunga thala... malikka padathai podunga

மேவி... said...

" டிஸ்கி: ஈரோடு பதிவர் சந்திப்பு சென்று திரும்புவதால் கொத்து பரோட்டா நாளை வெளியாகும்.."


அடடா ...அப்ப நீங்க இலக்கியவாதி ஆகிடிங்க ன்னு சொல்லுங்க

Unknown said...

கேபிளோட கம்ப்யூட்டர்ல இருந்து எண்டர் கீயக் கழட்டிட்டு வர்றவங்களுக்கு எதாவது விருது கொடுக்கப்படும்

CS. Mohan Kumar said...

அட நல்லா இருக்கு தல

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கிட்டீங்க

சங்கர் said...

//முகிலன் said...
கேபிளோட கம்ப்யூட்டர்ல இருந்து எண்டர் கீயக் கழட்டிட்டு வர்றவங்களுக்கு எதாவது விருது கொடுக்கப்படும்//

அப்புறம், என்டர் இல்லாத Endless கவிதைகள், அண்ணன் எழுதுவார்

சங்கர் said...

//முகிலன் said...
கேபிளோட கம்ப்யூட்டர்ல இருந்து எண்டர் கீயக் கழட்டிட்டு வர்றவங்களுக்கு எதாவது விருது கொடுக்கப்படும்//

அப்புறம், என்டர் இல்லாத Endless கவிதைகள், அண்ணன் எழுதுவார்

தராசு said...

எண்டர் கவிதைகள்ல கூட இந்த ரகம் தானா???????

Chitra said...

என்டர்....... கவிதையில் சோக ரசம் வழியுது..........

மேவி... said...

" முகிலன் said...

கேபிளோட கம்ப்யூட்டர்ல இருந்து எண்டர் கீயக் கழட்டிட்டு வர்றவங்களுக்கு எதாவது விருது கொடுக்கப்படும்"

பிறகு அதற்கு பெயர் SPACE BAR கவிதை ன்னு ஆகிடும்

கமலேஷ் said...

வாழ்த்துக்கள்..
மிக அழகு..

பரிசல்காரன் said...

ஈரோட்டுலேர்ந்து உம்மை உயிரோட விட்டோம்ல... அது எங்க தப்புதான்!

பரிசல்காரன் said...

ஆமா, உங்க எண்டர் கவிதைகளெல்லாம் ஒரு மார்க்கமாவே இருக்கே.. அது ஏன்?

Raju said...

உள்ளாடையில்லா
சண்முகத்தின் வேட்டி
இடுப்பில் இறங்கி உருவி ஓட
அறுந்த அரைஞான்கயிருனூடே
எறும்பு ஏறுவதை கூட உணராமல்
முடியப் போகும் பிட்டுப்
படத்தைப் பார்க்கிறான்
வேறொருவன் மொபைலில்.

by

கேபிள் சங்கர் கொலைவெறிப்படை
(அரசி அங்கீ”காரம்” பெற்றது..ஸ்வீட் இல்லை.)

Cable சங்கர் said...

@raaju

ஹா..ஹா..

கலக்குறீங்களேப்பா..

கார்க்கிபவா said...

//கவிதைகளெல்லாம் ஒரு மார்க்கமாவே இருக்//

என்ன வேட்டைக்காரனுக்கு 42 மார்க்.கேபிளின் கவிதைக்கு ஒரு மார்க்கா? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது நண்பரே..
தங்களை இந்த சந்திப்பில் தான் முதலில் நேரிடையாகப் பார்த்தேன்..
கூட்டமாக இருந்ததால் உரையாட முடியவில்லை.
தாங்கள் விவாதத்தில் நன்றாக உரையாற்றினீர்கள்.

கார்க்கிபவா said...

ஸ்பேஸ்பாரில்லா
ராஜுவின் கீபோர்ட்
அலறிக் கொண்டே ஓட
உடைந்த கீக்களினூடே
எறும்பு ஏறுவதை கூட உணராமல்
எதிர்கவுஜையை
பின்னூட்டத்தில் போடுகிறான்
கேபிளாரின் பதிவில்.

By,

ராஜு ஓம் சாந்தி சாந்தி படை,
(பதிவு பெற்றது.பின்னூட்டமல்ல)

aazhimazhai said...

ரொம்ப அருமையா இருக்கு

Ganesan said...

ஒத்துக்குறேன்.

நீங்க கவிஞர் என்று

Raju said...

கார்க்கிண்ணா,
நடக்காது.. நானும் ஒரு கவிஞனா ஃபார்ம் ஆகாம விடவே மாட்டேன் கேபிளாரை.

ஈரோடு கதிர் said...

நிஜம்ம்ம்ம்ம்ம்மா நல்லாயிருக்கு

ஆரூரன் விசுவநாதன் said...

எண்டர் கவிதைகள் அல்ல இவை....என்கவுண்டர் கவிதைகள்....

இனி யாரும் கேலி பண்ண முடியாதுல்ல......


பதிவர் சந்திப்பில் உங்களிடம் பேசியது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.

எப்ப ஊரு போய் சேர்ந்தீங்க.....எப்ப கவிதை எழுதினீங்க......?

வருகைக்கும் எங்களோடு பல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி

அன்புடன்
ஆரூரன்

Kumky said...

நல்லாத்தான போய்க்கிட்டிருக்கு...

Raju said...

உப்பேயில்லா
முனியாண்டிவிலாஸின் போட்டி
டேபிளில் கொட்டி உருகி ஓட
கொதிக்கும் ஆட்டுக்கால் சூப்பினூடே
மிதக்கும் ஈ யைக் கூட உணராமல்
உறிஞ்சி உறிஞ்சி பெரும்
சத்தத்தோடு குடிக்கிறான்
வேறொருவன் காசில்.

by

கேபிள் சங்கர் கொலைவெறிப்படை
(அரசி அங்கீ”காரம்” பெற்றது..ஸ்வீட் இல்லை.)

பூங்குன்றன்.வே said...

ரெடி...ஜூட்.. :)

Unknown said...

கவித கவித....

creativemani said...

வாவ்... கவிதைகளின் மூலமும் சின்னதாய் ஒரு நிதர்சனக் கதை... :)

மணிஜி said...

அடங்க மாட்டீங்களா அன்பரே !

அமுதா கிருஷ்ணா said...

"கேபிளோட கம்ப்யூட்டர்ல இருந்து எண்டர் கீயக் கழட்டிட்டு வர்றவங்களுக்கு எதாவது விருது கொடுக்கப்படும்"

இதுவும் நல்லாயிருக்கு....

Unknown said...

//முனியாண்டிவிலாஸின் போட்டி
டேபிளில் கொட்டி உருகி ஓட//

ராசூ, முனியாண்டிவிலாஸ் போட்டி என்ன ஐஸ்க்ரீம் மாதிரியா இருக்கும்? ஒரு மனுஷன் எப்போடா எண்டர் கவிதை எழுதுவாருன்னு காத்திருந்து கவிதை மழையா கொட்டுற மாதிரி தெரியுது!!

புலவன் புலிகேசி said...

கவிதை கவிதை..பின்னிட்டீங்க தல

அன்பேசிவம் said...

நேற்றைய பதிவர் சந்திப்பின் மகுடமே நீங்களும், அப்துல்லாவும் இணைந்து நடத்திய "ஜுகல்பந்தி" தான்......

மிகவும் ரசித்தோம். நண்பர் கேபிளின் நடனம் அருமை....//

நான் கிளம்புவரை காத்திருந்து இத்தனையும் செய்ததை , நான் வன்மையாக கண்ணடிக்கிறேன்.

VISA said...

//வேறொருவன் காரில். //

அந்த காரில் ஏ.சி. உண்டு தானே...

க.பாலாசி said...

அசத்தல் கவிதை....கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டீர்கள்...

நிலாரசிகன் said...

வேர்த்து வழிய என்றிருந்தால் கூடுதல் அழகு. கலக்குறீங்க கேபிள்ஜி :)

தினேஷ் ராம் said...

ஹைய்யோ.. மனப் புழுக்கமும் சேர்ந்துடுச்சா?

இராஜ ப்ரியன் said...

நல்லாயிருக்கு தலைவரே............

வெற்றி said...

கவித புரியவே இல்ல..:-)

Raj said...

ஆவ்வ்வ்வ்வ்.........இதுக்கு பேரு கவிதையா!!!!!!!!!!

எதனால இந்த கொலை வெறி!

ungalrasigan.blogspot.com said...

அந்தக் காலத்தில் ஆனந்தவிகடனில்
‘கம்பாஸிடர் கவிதை’ என்று பெயர் கொடுத்து எழுதினார் சோ. அந்த அளவுக்கு மலிவாகப் போய்விட்டது, யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற பொருளில். நீங்கள் ‘எண்டர் கவிதை’ என்று புதுப்பெயர் கொடுத்திருக்கிறீர்கள். அதாவது எண்டர் பட்டனைத் தட்டித் தட்டிக் கம்போஸ் செய்தால் அது ஒரு கவிதை ஆகிவிடும் என்று. சபாஷ்! அருமையாக உள்ளது உங்களின் எண்டர் கவிதை!

Cable சங்கர் said...

/அந்தக் காலத்தில் ஆனந்தவிகடனில்
‘கம்பாஸிடர் கவிதை’ என்று பெயர் கொடுத்து எழுதினார் சோ. அந்த அளவுக்கு மலிவாகப் போய்விட்டது, யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற பொருளில். நீங்கள் ‘எண்டர் கவிதை’ என்று புதுப்பெயர் கொடுத்திருக்கிறீர்கள். அதாவது எண்டர் பட்டனைத் தட்டித் தட்டிக் கம்போஸ் செய்தால் அது ஒரு கவிதை ஆகிவிடும் என்று. சபாஷ்! அருமையாக உள்ளது உங்களின் எண்டர் கவிதை!
//

மிகக் நன்றி ரவிசார்..ஒரு வழியா இதை கவிதைன்னு ஒத்துகிட்டீங்களே.. (எப்படி சாமார்த்தியமா..பாஸிட்டீவா எடுத்துகிட்டேன் பாத்தியளா..?)

Kabi said...

ஒன்னும் சொல்லரது இல்ல...சூப்பர்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-))))))))))

Beski said...

கவிதை சூப்பர். அதை விட அதற்கு ஏற்றார்போன்ற படம் (கல்யாண மோதிரத்தை கழற்றி வைத்த மாதிரியான படம் - சரிதானே?).

கவிதைக்கு ஏற்றார்போன்று தேடி ஏடுத்தீர்களா அல்லது படத்தைப் பார்த்ததும் கவிதை தோன்றியதா?

Ravikumar Tirupur said...

உள்ளாடையில்லா
சண்முகத்தின் வேட்டி
இடுப்பில் இறங்கி உருவி ஓட
அறுந்த அரைஞான்கயிருனூடே
எறும்பு ஏறுவதை கூட உணராமல்
முடியப் போகும் பிட்டுப்
படத்தைப் பார்க்கிறான்
வேறொருவன் மொபைலில்.

ஹிஹிஹி!இது நல்லாருக்கே.

Romeoboy said...

என்னத்த சொல்லுறதுன்னு தெரியல பாஸ்.. மனசு வலிக்குது ..

யாத்ரா said...

கலக்கறீங்க தலைவரே, ஆமா நண்பர்கள் கேட்டது போல ஏன் ஒரு மார்க்கமாவே இருக்கு உங்க எண்டர் கவிதைகள்

ரோஸ்விக் said...

அண்ணே! இதுக்குப் பேறு தான் கவிதை. பாருங்க படிச்ச உடனே எல்லாருக்கும் அர்த்தம் புரியுது.
கொஞ்ச வரிகள்ள
கொஞ்சுற மாதிரியும்
கெஞ்சுற மாதிரியும்
மிஞ்சுற மாதிரியும் - பல
நெஞ்சங்கள் அதுலே
நஞ்சுர்ற மாதிரியும் இருந்தா - அது
பிஞ்சு தமிழ் கவிதை தானே!

பெசொவி said...


வி
தை

ல்
லா

ரு
க்
கு.
(இதுக்கு பேரு என்டர் பின்னூட்டம்)

Thamira said...

கவிதை கிடக்கட்டும் ஒரு பக்கம். அதென்ன போட்டோ, ஒண்ணும் புரியலையே..

chosenone said...

enna koduma saar??

shortfilmindia.com said...

/கவிதை கிடக்கட்டும் ஒரு பக்கம். அதென்ன போட்டோ, ஒண்ணும் புரியலையே//

aathi.. அது ஒரு அவிழ்த்து வைக்கப்பட்ட திருமண மோதிரத்தின் க்ளோஸ் அப்