ஆறு லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி மேலும் என்னை ஆதரிக்கும் என் அன்பு பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும்.. நன்றி..நன்றி..நன்றி
டிஸ்கி: ஈரோடு பதிவர் சந்திப்பு சென்று திரும்புவதால் கொத்து பரோட்டா நாளை வெளியாகும்..
தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் குத்துங்க எசமா.. குத்துங்க
நிழற்குடையில்லா
நிறுத்தத்தின் வெயில்
உச்சத்தில் இறங்கி வியர்த்துவழிய
பிய்ந்த செருப்பினுடே
சூடேறுவதை கூட உணராமல்
கடந்து போகும்
மனைவியை பார்க்கிறான்
வேறொருவன் காரில்.
Technorati Tags: கவிதை,எண்டர் கவிதைகள்
டிஸ்கி: ஈரோடு பதிவர் சந்திப்பு சென்று திரும்புவதால் கொத்து பரோட்டா நாளை வெளியாகும்..
தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் குத்துங்க எசமா.. குத்துங்க
Comments
‘வியர்துவழிய’ ????
:-)
என் தமிலிஷ் ல சேக்கல??
parotta illaiyaaa???
enakku pasikkuthe......
hot spot la padathai mathunga thala... malikka padathai podunga
அடடா ...அப்ப நீங்க இலக்கியவாதி ஆகிடிங்க ன்னு சொல்லுங்க
கேபிளோட கம்ப்யூட்டர்ல இருந்து எண்டர் கீயக் கழட்டிட்டு வர்றவங்களுக்கு எதாவது விருது கொடுக்கப்படும்//
அப்புறம், என்டர் இல்லாத Endless கவிதைகள், அண்ணன் எழுதுவார்
கேபிளோட கம்ப்யூட்டர்ல இருந்து எண்டர் கீயக் கழட்டிட்டு வர்றவங்களுக்கு எதாவது விருது கொடுக்கப்படும்//
அப்புறம், என்டர் இல்லாத Endless கவிதைகள், அண்ணன் எழுதுவார்
கேபிளோட கம்ப்யூட்டர்ல இருந்து எண்டர் கீயக் கழட்டிட்டு வர்றவங்களுக்கு எதாவது விருது கொடுக்கப்படும்"
பிறகு அதற்கு பெயர் SPACE BAR கவிதை ன்னு ஆகிடும்
மிக அழகு..
சண்முகத்தின் வேட்டி
இடுப்பில் இறங்கி உருவி ஓட
அறுந்த அரைஞான்கயிருனூடே
எறும்பு ஏறுவதை கூட உணராமல்
முடியப் போகும் பிட்டுப்
படத்தைப் பார்க்கிறான்
வேறொருவன் மொபைலில்.
by
கேபிள் சங்கர் கொலைவெறிப்படை
(அரசி அங்கீ”காரம்” பெற்றது..ஸ்வீட் இல்லை.)
ஹா..ஹா..
கலக்குறீங்களேப்பா..
என்ன வேட்டைக்காரனுக்கு 42 மார்க்.கேபிளின் கவிதைக்கு ஒரு மார்க்கா? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
தங்களை இந்த சந்திப்பில் தான் முதலில் நேரிடையாகப் பார்த்தேன்..
கூட்டமாக இருந்ததால் உரையாட முடியவில்லை.
தாங்கள் விவாதத்தில் நன்றாக உரையாற்றினீர்கள்.
ராஜுவின் கீபோர்ட்
அலறிக் கொண்டே ஓட
உடைந்த கீக்களினூடே
எறும்பு ஏறுவதை கூட உணராமல்
எதிர்கவுஜையை
பின்னூட்டத்தில் போடுகிறான்
கேபிளாரின் பதிவில்.
By,
ராஜு ஓம் சாந்தி சாந்தி படை,
(பதிவு பெற்றது.பின்னூட்டமல்ல)
நீங்க கவிஞர் என்று
நடக்காது.. நானும் ஒரு கவிஞனா ஃபார்ம் ஆகாம விடவே மாட்டேன் கேபிளாரை.
இனி யாரும் கேலி பண்ண முடியாதுல்ல......
பதிவர் சந்திப்பில் உங்களிடம் பேசியது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
எப்ப ஊரு போய் சேர்ந்தீங்க.....எப்ப கவிதை எழுதினீங்க......?
வருகைக்கும் எங்களோடு பல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி
அன்புடன்
ஆரூரன்
முனியாண்டிவிலாஸின் போட்டி
டேபிளில் கொட்டி உருகி ஓட
கொதிக்கும் ஆட்டுக்கால் சூப்பினூடே
மிதக்கும் ஈ யைக் கூட உணராமல்
உறிஞ்சி உறிஞ்சி பெரும்
சத்தத்தோடு குடிக்கிறான்
வேறொருவன் காசில்.
by
கேபிள் சங்கர் கொலைவெறிப்படை
(அரசி அங்கீ”காரம்” பெற்றது..ஸ்வீட் இல்லை.)
இதுவும் நல்லாயிருக்கு....
டேபிளில் கொட்டி உருகி ஓட//
ராசூ, முனியாண்டிவிலாஸ் போட்டி என்ன ஐஸ்க்ரீம் மாதிரியா இருக்கும்? ஒரு மனுஷன் எப்போடா எண்டர் கவிதை எழுதுவாருன்னு காத்திருந்து கவிதை மழையா கொட்டுற மாதிரி தெரியுது!!
மிகவும் ரசித்தோம். நண்பர் கேபிளின் நடனம் அருமை....//
நான் கிளம்புவரை காத்திருந்து இத்தனையும் செய்ததை , நான் வன்மையாக கண்ணடிக்கிறேன்.
அந்த காரில் ஏ.சி. உண்டு தானே...
எதனால இந்த கொலை வெறி!
‘கம்பாஸிடர் கவிதை’ என்று பெயர் கொடுத்து எழுதினார் சோ. அந்த அளவுக்கு மலிவாகப் போய்விட்டது, யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற பொருளில். நீங்கள் ‘எண்டர் கவிதை’ என்று புதுப்பெயர் கொடுத்திருக்கிறீர்கள். அதாவது எண்டர் பட்டனைத் தட்டித் தட்டிக் கம்போஸ் செய்தால் அது ஒரு கவிதை ஆகிவிடும் என்று. சபாஷ்! அருமையாக உள்ளது உங்களின் எண்டர் கவிதை!

//
மிகக் நன்றி ரவிசார்..ஒரு வழியா இதை கவிதைன்னு ஒத்துகிட்டீங்களே.. (எப்படி சாமார்த்தியமா..பாஸிட்டீவா எடுத்துகிட்டேன் பாத்தியளா..?)
கவிதைக்கு ஏற்றார்போன்று தேடி ஏடுத்தீர்களா அல்லது படத்தைப் பார்த்ததும் கவிதை தோன்றியதா?
சண்முகத்தின் வேட்டி
இடுப்பில் இறங்கி உருவி ஓட
அறுந்த அரைஞான்கயிருனூடே
எறும்பு ஏறுவதை கூட உணராமல்
முடியப் போகும் பிட்டுப்
படத்தைப் பார்க்கிறான்
வேறொருவன் மொபைலில்.
ஹிஹிஹி!இது நல்லாருக்கே.
கொஞ்ச வரிகள்ள
கொஞ்சுற மாதிரியும்
கெஞ்சுற மாதிரியும்
மிஞ்சுற மாதிரியும் - பல
நெஞ்சங்கள் அதுலே
நஞ்சுர்ற மாதிரியும் இருந்தா - அது
பிஞ்சு தமிழ் கவிதை தானே!
வி
தை
ந
ல்
லா
இ
ரு
க்
கு.
(இதுக்கு பேரு என்டர் பின்னூட்டம்)
aathi.. அது ஒரு அவிழ்த்து வைக்கப்பட்ட திருமண மோதிரத்தின் க்ளோஸ் அப்