Thottal Thodarum

Dec 7, 2009

கொத்து பரோட்டா -07/12/09

ஐந்தரை லட்சம் ஹிட்ஸுகளையும், 500 பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

குறும்படங்களுக்காக ஒரு நிகழ்ச்சியை கலைஞர் டிவியில் ஆரம்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் ஐந்து பேரின் குறும்படங்களை திரையிட்டு, அதில் ஒரு படத்தை அந்த வாரத்தின் சிறந்த படமாய் தேர்ந்தெடுத்துவிட்டு, ஐந்து பேருக்கு ஒரு கருவை கொடுத்து அதை படமாய் எடுக்க சொல்லி அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறார்கள். சோனிபிக்ஸில் அமிர்தராஜ் சகோதரர்கள் செய்ய ஒரு நிகழ்ச்சியின் பிரதி என்றாலும் நாளைய இயக்குனர்களை அடையாளம் காண உதவியாய் இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல ஆதரவு இருக்கும் என்றே தோன்றுகிறது. நேற்றைய விருந்தினராக கே.எஸ்.ரவிகுமார் வந்திருந்தார். நான் பார்த்தில் எப்படியாவது சினிமா எடுக்கணும் என்கிற படமும், ஸ்டிக் என்ற ஒரு த்ரில்லர் படமும் மிகவும் பிடித்தது. இவர்களும் வழக்கம் போலவே படத்தின் கருத்து என்ன? என்று கேட்டார்கள் வழக்கம் போல இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்கையை ஒரு குழந்தையின் பார்வையில் சொன்ன கதைக்கு சிறந்த படமாய் கொடுத்தார்கள். எவ்வளவு நாளுக்குத்தான் குறும்படம் என்றால் கருத்து சொல்ல வேண்டும் என்று இவர்களாகவே இலக்கியவாதிகளை போல வரையரைக்குள் பேசிக்கொண்டிருப்பார்கள்.? கருத்து சொன்னாத்தான் அது குறும்படமா..?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Hboவில் யாராவது முழு படத்தையும் பார்பவர்களுக்கு திடீர் என படம் முடிந்துவிட்டதை போல தோன்றும். ஆனால் என்ன பிரச்சனை என்றால் இந்த சேனலில் படத்தின் முக்கிய காட்சிகள் கொஞ்சம் ஹாராய் இருந்தாலும் சரி, செக்ஸியாக இருந்தாலும் சரி கொஞ்சம் கூட கவலைப்படாமல் வெட்டி எறிந்துவிடுகின்றனர். இப்படித்தான் போன மாதம் “ஒன் மிஸ்ட் கால்” என்ற படத்தை பார்த்து கொண்டேயிருந்தபோது, திடீரென ஹீரோயின் எதையொ பார்த்து மிரண்டு போய் இருக்க, அடுத்த காட்சியில் பார்த்தால் ஹீரோயின் வேறு லொகேஷனில் இருக்கிறார். என்ன ஆனது ஏது ஆனது? என்று ஒரு எழவும் புரியாமல், வேறு வழியில்லாமல் டிவிடையை எடுத்து சரியாய் எந்த காட்சியில்  அவர்கள் கட் செய்தார்களோ அதிலிருந்து பார்த்தோம் சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல், அதிலும் ஹீரோயினை துரத்தும் அந்த பேய் யார் என்று விளக்கும் காட்சியது. இப்படி  மொட்டை மொட்டையாய் பார்பதற்கு பேசாமல் படமே போட வேண்டாமே..?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
செவிக்கினிமை
“பா” படத்தை தியேட்டரில் பார்த்தேன். ஆடியோவில் கேட்பதைவிட தமிழ் புத்தம் புது காலை பாட்டை ஒரு ஹார்மனி போல குழந்தைகளீன் குரலில் ”ஹல்கேசி போலே” என்று ஆரம்பித்ததும்.. அப்படியே கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆர்ம்பித்து உருக ஆரம்பிக்கிறது. நிச்சயம் நல்ல தரமான ஒலியமைப்பு உள்ள தியேட்டரில் போய் பார்த்து கேட்கவும் இந்த இசையெனும் ராஜ வெள்ளத்தை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சாப்பாட்டுக்கடை
சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் ஜங்ஷனில் புதிதாய் ஒரு வெஜிட்டேரியன் ஓட்டல் திறந்திருக்கிறார்கள். ஹோட்டல் குமார் என்று. மதியம் சாப்பாடு 35 ரூபாய் வழக்கமாய் இம்மாதிரி ஓட்டல்களில், தண்ணீராய் நூக்கோலையும், பெரிய வெங்காயத்தையும் போட்டு சாம்பார் என்று ஒன்றை கொடுப்பார்கள். அபபடியெல்லாம் இல்லாமல் நல்ல கெட்டியாய் சுமாராய் பருப்பு போட்டு சாம்பாரும், கெட்டியாய் வந்தகுழம்பும், சுவையாய் ஒரு தக்காளிரசத்தையும் தந்தார்கள். திவ்யமாய் இருந்தது. மோரும்,பாயசமும் தான் போட்டி போட்டு கொண்டு தண்ணியாய் இருந்தது. நல்ல சுவையான வெஜ் மீல்ஸை ஞாயமான விலையில் விரும்புவர்களுக்கு ..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அரசியல்
இளையராஜாவுக்கு இசையமைக்கவே தெரியாது என்று சொன்ன சாருவின் இசையறிவை பார்த்து ஒரே காமெடியாய் இருக்கிறது. அதிலும் உட்சபட்சம்யாய் பா பாடல்களை ஹிந்தி விமர்சகர்கள், இசை ரசிகர்களும் வழித்து கொண்டு சிரிக்கிறார்கள் என்றிருந்தார். இந்தியாவில் வெளியாகும் அத்துனை பத்திரிக்கைகளின் விமர்சனங்களை பாருங்கள். அதில் ராஜாவை பற்றி எழுதாத பத்திரிக்கைகளே கிடையாது. குறிப்பாக பிண்ணனி இசை பற்றி. ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் படத்தில் பாடல்கள் முழுவதுமா காட்டபடுவதில்லை. சாருவுக்கு ஒரு வேளை இசையை பற்றி எழுதத்தான் தெரியுமோ..?@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வாரம் ஒரு பதிவர்
வெங்கிராஜா.. காலேஜ் ஸ்டூடண்ட், ஆனால் எழுத்தில் அது தெரியாது. மிக மெச்சூர்டான எழுத்து, எளிமையான நடை, சீரியஸான விஷயங்களையும், கதை கவிதை, கட்டுரை என்று மிகுந்த தெளிவுடன் எழுதும் திறமையான இளைஞர், இளைஞர்களுக்கே உரித்தான பல டெக்னாலஜிகளின் மேல் இண்ட்ரஸ்ட், நிச்சயம் ஒரு வித்யாசமான ப்ளாக்கை படித்த எண்ணம் உங்களுக்கு வருவது நிச்சயம் அதுக்கு நான் கேரண்டி. http://paathasaari.blogspot.com
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
சமீபத்தில் இணையத்தில் உலாவிய போது பார்த்த படம், ஏதோ ஒரு கல்லூரி மாணவர் செய்த படம். சினிமாவுக்கு மிக அருகில் நல்ல டெக்னிகல் அவுட்புட்ல் எடுக்கப்பட்ட படம். வழக்கமான சேது டைப் காதல் கதை என்றாலும் நல்ல மேக்கிங். முக்கியமாய் இசையும், அதை படம் பிடித்த விதமும் அருமை. கொஞ்சம் பெரிய படம் தான். Have a try@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஏ ஜோக்
இரண்டு பெண்கள் மீன் பிடிக்க செலல், அதில் ஒருத்திக்கு மட்டும் எப்போதும் தூண்டிலில் மீன் கிடைக்க, அடுத்தவள் “உனக்கு மட்டும் எப்படி எப்போதும் மீன் மாட்டுகிறது? “ என்று கேட்டாள்
அதற்கு அவள் நான் தினமும் தூங்கும் என் கணவனின் லுல்லாவை பார்பேன் அது வலது பக்கமாய் சரிந்திருந்தால், மீன் வலது பக்கம் கிடைக்கும், இடது பக்கமாய் சரிந்திருந்தால் இடது பக்கம் கிடைக்கும். என்றாள் அதற்கு அடுத்தவள் ஒரு வேளை உன் கணவரது லுல்லா நேராக நின்றிருந்தால் எந்த பக்கம் மீன் பிடிப்பாய்?” என்று கேட்க, அதற்கு அவள் “ அது மட்டும் நேராய் நின்றிருந்தால் நான் ஏன் மீன் பிடிக்க வருகிறேன் என்றாள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார கேள்வி
ஒரு ஆர்கியாலஜிஸ்டை எப்படி வெறுப்பேற்ற முடியும்?
ஒரு பழைய உபயோகபடுத்திய காண்டமை காட்டி இது எந்த காலத்தில் உபயோக படுத்தபட்டது என்று கேட்டால்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் குத்துங்க எசமா.. குத்துங்க
Post a Comment

64 comments:

thamizhparavai said...

தலைப்புல மாதத்தைச் சரிபார்க்கவும்...
நீங்க கொஞ்சம் பழைய ஆளுனு தெரியும்,. அதுக்காக இப்படியா?

ஏ ஜோக் சூப்பர்...சாருவோட ஜோக் அதைவிட சூப்பர்.
கொத்துப் புரோட்டா காரம் கம்மி.. தகவல் நெடி அதிகம்...

பாலா said...

வெங்கிக்கு ஜே.....!!!

இப்ப.. ப்லாகை விட்டுட்டு ட்விட்டருக்கு போய்ட்டார். அதுதான் என் கஷ்டம்.

திரும்ப வருவார்.. என்று எதிர்பார்க்கிறேன்.

-----

ஏ ஜோக்.. டாப்பு! :)

பாலா said...

அதானே.... தலைப்பு ஏன் ஜூலைல இருக்கு?

ஸாரி.. நவம்பர்ல இருக்கு?

பா.ராஜாராம் said...

ஏ ஜோக்க முன்ன்னால வாசிச்சு,பிறகு குறும்படம் போனேன்.முற்றிலும் வேறு பாடான மனநிலை.கொத்து பொரட்டா மாதிரி.

ரொம்ப நன்றிஜி.

Prabhu said...

ஆமாங்க Hboல ஒரு சீன் கூட போட மாட்டேங்குறானுங்க :(

ஒரு ஷாட்டுக்கு மேக்கிங் ஜாஸ்தியா இருக்கேன். குட். கதை அரத பழசு.
அந்த லவ் சீன்ல வர்ற BGM கேட்ட மாதிரி இருக்கே. ராஜாவா?

அதெல்லாம் விடுங்க. அந்தப் பொண்ணு கொஞ்சம் அழகா இருக்குற மாதிரி தான் தோணுது. சக யூத்தின் கருத்து?

kanagu said...

குறும்படம் நல்லா இருந்துது அண்ணா...

பா பாட்டு கேட்டேன்.. உங்க காலர் ட்யூன் ரீமிக்ஸ் ஆகி இருக்கு.. சூப்பராவும் இருக்கு அண்ணா...

தமிழ்-லயும் அந்த பாட்ட டவுன்லோட் செஞ்சிட்டேன் :) :)

HBO எல்லாம் பாக்குறது இல்ல அண்ணா... பி.சி-ல இருக்குற படத்தையே பாக்க முடியல.. :(

ஏ ஜோக் சூப்பர் :) :)

Tech Shankar said...

நண்பரே வணக்கம்.

ஒன் மிஸ்ட் கால் - கடந்த வாரம் தான் பார்த்தேன். செம்ம நேர்த்தியான ப்ரிண்ட். டோரண்ட் வாழ்க.

இளையராஜா என்றென்றும் ராஜாதான். அவருக்கு நிகர் அவரே. அவரை விமர்சனம் செய்ய வேண்டும் என்றால், அவரே விமர்சித்துக்கொண்டால்தான் உண்டு.

தமிழில் வெளிவந்த குறும்படங்கள் 300+ ஒரே இடத்தில் தொகுப்பாக வலைப்பூவில் இருந்தபடியே பார்வையிட வசதியாக இணைத்து வருகிறேன்.

முடிந்தால் பார்வையிடவும்


300+ தமிழ் குறும்படங்கள்


யூட்யூப், டெய்லிமோசன்,யாஹூ வீடியோஸ், கூகிள் வீடியோஸ் தளங்களில் கிடைத்த படங்கள் இவை.

நன்றியுடன்,
டெக்‌ஷங்கர்

(நீங்க கேபிள் சங்கரநாராயணன். நான் டெக்‌ஷங்கர் (நேற்றுதான் பேரை மாற்றினேன் - இது எப்படி இருக்கு (!))

சைவகொத்துப்பரோட்டா said...

சாரு ஒரு "காமெடி பீஸ்", ராஜா என்றுமே ராஜாதான், மீன் பிடி ஜோக் நல்லா இருக்கு.

Romeoboy said...

சாருவின் கருத்துகளை நான் கூட ஏற்கவில்லை தல. பா படத்தின் பாடல்கள் தான் இப்பொது கேட்டுகொண்டு இருக்கிறேன். எனது மொபைல் ரிங்டோன் பா படத்தின் தீம் தான் .

Cable சங்கர் said...

@தமிழ் பறவை
நன்றி தலைவரே சரி.. பண்ணிட்டேன்.
அடுத்த பரோட்டாவுல சரி பண்ணிடலாம்

Cable சங்கர் said...

@ஹாலிவுட்பாலா
திரும்ப வர்றதுக்குதானே இந்த அறிவிப்பு

நன்றி

@ஹாலிவுட் பாலா
சாரி.. ஸ்லிப் ஆப் தெ ஃபிங்கர்..

Cable சங்கர் said...

@பா.ராஜாராம்

நன்றி தலைவரே

@பப்பு
அதானே..:(

நான் தான் சொல்லிட்டேனே கதை பழசுதான் ஆனாமேக்கிங், மியூசிக் நல்லாருக்கும்னு

@பின்ன் இல்லாட்டி இந்த படத்த போடுவேனா...:)

Cable சங்கர் said...

@கனகு
நன்றி

ஆமாம் என் காலர் ட்யூன் தான்

நல்ல விஷயம்

நன்றி

Cable சங்கர் said...

@டெக்சங்கர்

நல்ல தொகுப்பு.. இதில் என்னுடய இரண்டு குறும்படங்களூம் இருக்கிறது

பேரு நல்லாருக்கு

Cable சங்கர் said...

@சைவகொத்துபரோட்டா
அப்படியும் சொல்லிவிட முடியாது.. ஆனாலும் இந்த ஸ்டேட்மெண்ட் ஒரு குழந்தையின் டிராயிங் அட்டென்ஷன் சிண்ட்ரோம்..:)

@ரோமிபாய்

சாருவுக்கு நிஜமாகவே இசையை பற்றி எழுதத்தான் தெரியும்..

பூங்குன்றன்.வே said...

//கருத்து சொன்னாத்தான் அது குறும்படமா..? //

அதானே !

//ஹல்கேசி போலே” என்று ஆரம்பித்ததும்.. அப்படியே கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆர்ம்பித்து உருக
ஆரம்பிக்கிறது.//

உங்களுக்கு ரொம்ப இளகிய மனசு தல !

//சாருவுக்கு ஒரு வேளை இசையை பற்றி எழுதத்தான் தெரியுமோ..?//

:)

//வெங்கிராஜா..//

நல்ல அறிமுகம்.

//ஏ ஜோக் //

ஹி ..ஹி..

கார்க்கிபவா said...

//இளையராஜாவுக்கு இசையமைக்கவே தெரியாது என்று சொன்ன சாருவின் இசையறிவை பார்த்து ஒரே காமெடியாய் இருக்கிறது. அதிலும் உட்சபட்சம்யாய் பா பாடல்களை ஹிந்தி விமர்சகர்கள், இசை ரசிகர்களும் வழித்து கொண்டு சிரிக்கிறார்கள் என்றிருந்தார். இந்தியாவில் வெளியாகும் அத்துனை பத்திரிக்கைகளின் விமர்சனங்களை பாருங்கள். அதில் ராஜாவை பற்றி எழுதாத பத்திரிக்கைகளே கிடையாது. குறிப்பாக பிண்ணனி இசை பற்றி. ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் படத்தில் பாடல்கள் முழுவதுமா காட்டபடுவதில்லை. சாருவுக்கு ஒரு வேளை இசையை பற்றி எழுதத்தான் தெரியுமோ//

சகா, பாடல்களை கேட்டு வட இந்தியர்கள் சிரிக்கிறார்களாம். அவ்வளவு கேனைத்தனமா இருக்காம். இல்லையென்று நிரூபித்தால் ஜோக்கர் சார் எழுதுவதை நிறுத்தி தமிழுக்கு சேவை செய்வாராம். கொஞ்சம் ப்ரூஃப் செய்ய முடியுமா என்று பாருங்களேன் :))

thiyaa said...

அருமை

Cable சங்கர் said...

/சகா, பாடல்களை கேட்டு வட இந்தியர்கள் சிரிக்கிறார்களாம். அவ்வளவு கேனைத்தனமா இருக்காம். இல்லையென்று நிரூபித்தால் ஜோக்கர் சார் எழுதுவதை நிறுத்தி தமிழுக்கு சேவை செய்வாராம். கொஞ்சம் ப்ரூஃப் செய்ய முடியுமா என்று பாருங்களேன் :))
//

கார்க்கி..இப்படியே எழுதிக் கொண்டு போனால் நிச்சயம் அவர் எழுதினாலும் படிக்க ஆள் இருக்காது.. இவருக்கு போயா.. புருப் செய்ய வேண்டும். நாம என்ன அவரை போல வேலையத்தவங்களா..?:)

Cable சங்கர் said...

@பூங்குன்றன்.வெ
ந்ன்றி என் கருத்தை ஆமோதித்ததுக்கு

இசை என்னை எப்போதுமே உருக வைத்துவிடும்

நன்றி..

ஏ ஜோக் பிடிச்சிருக்கா..:)

Cable சங்கர் said...

@தியாவின் பேனா
நன்றி

மணிஜி said...

/Cable Sankar said...
/சகா, பாடல்களை கேட்டு வட இந்தியர்கள் சிரிக்கிறார்களாம். அவ்வளவு கேனைத்தனமா இருக்காம். இல்லையென்று நிரூபித்தால் ஜோக்கர் சார் எழுதுவதை நிறுத்தி தமிழுக்கு சேவை செய்வாராம். கொஞ்சம் ப்ரூஃப் செய்ய முடியுமா என்று பாருங்களேன் :))
//

கார்க்கி..இப்படியே எழுதிக் கொண்டு போனால் நிச்சயம் அவர் எழுதினாலும் படிக்க ஆள் இருக்காது.. இவருக்கு போயா.. புருப் செய்ய வேண்டும். நாம என்ன அவரை போல வேலையத்தவங்களா..?:)

8:58 AM//

என் அபிமான சாருவை நக்கல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்

Cable சங்கர் said...

@தண்டோரா

/என் அபிமான சாருவை நக்கல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்
//

அதானே பார்த்தேன் இன்னும் சாருவோட அடிபொடி வரலையேன்னு..:)

அருண் said...

Paa விமர்சனம் எப்போ வரும் Cable sir?

ஜெட்லி... said...

இந்த வார கேள்வி சூப்பர் தலைவரே....
கொத்து செம..

Raju said...

நான் இங்க வரவே இல்ல..எதயுமே படிக்கவும் இல்ல..!
அதுவும் அந்த அரசியல் தலைப்புக்கு கீழ் இருக்குற பார்க்கக் கூட இல்ல.

Kabi said...

Kothu super...

நர்சிம் said...

5க்கு வாழ்த்துக்கள்

வெங்கிராஜாவுக்கு வாழ்த்துக்கள்

butterfly Surya said...

பரோட்டா ஓ.கே.

வெங்கி.. Come back soon.

சாருவையா..?? மைனஸ் ஒட்டுதான் அதிகம் இருக்க போவது தலை..

Ashok D said...

//இலக்கியவாதிகளை போல வரையரைக்குள் பேசிக்கொண்டிருப்பார்கள்.? கருத்து சொன்னாத்தான் அது குறும்படமா..?//
நல்ல கேள்வி

க‌ரிச‌ல்கார‌ன் said...

//சாருவுக்கு ஒரு வேளை இசையை பற்றி எழுதத்தான் தெரியுமோ..?//

அந்த‌ லாஜிக் ப‌டி பார்த்தால் ............ மா??????????

Unknown said...

கொட்டு அருமை.., சாரு மேட்டர் உட்பட

Ashok D said...

என் அபிமான சாருவை நக்கல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்//

Repeat .. இன்னோர் அடிபொடின்னு...வெச்சிக்குங்க...

ஒரு சிறு கேள்வி கேபிள்.. ஏன் மற்ற சாரு எதிர்பாளாகளுக்கும் சேர்த்தேதான்.

நல்லா துறுதுறுன்னு விளையாடிட்டு இருக்கற குழந்தையிக்கு முன்னாடி இளையாராஜாவோட பாட்ட போடுங்க... நல்ல விளையாடிட்டு இருக்கற குழந்தை அப்படியே சோர்ந்துடும் துறு துறு கானமா போயிடும் ஏன்னு தெரிஞ்சவங்க பதில் சொல்லலாம்.
(தெய்வீகநிலைக்கு போயிடும், ஆத்மஅமைதி உள்ள மலருதுன்னு யாரும் காமெடி பண்ணவேண்டாம், சரியான பதிலை சொன்னால் போதும்)

இளையராஜாவுக்கு எதிரானவன் அல்ல நான், தேவையில்லாமல் சாருவை இங்கே வம்புக்கு இழுப்பதுதான் புரியவில்லை.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

படம் சூப்பர் தல

Nat Sriram said...

கேபிள்..சாரு சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. 'பா சாங்க்ஸ் ஆர் எ ஜோக் ' ரக கமெண்டுகள் நெறைய வடஇந்திய ஆன்லைன் மீடியாயக்களில் நான் பார்த்து கொண்டு
தான் இருக்கிறேன். பா பாடல்கள் நல்லா இருக்கு, நல்லா இல்லை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து.
பட், பா பாடல்கள் ஹிட்-ஆ என்று factual ஆக கேட்டால் அதற்கு இல்லை என்பது தான் பதில் என்று ஹிட்/ தோல்வி டிரண்டுகளை துவைத்து காயப்போடும் உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை.
என்னை பொறுத்தவரை, trailer / teaser களில் 30 செகண்டுகளில் பட்டையை கிளப்பிய ராஜா ஆல்பம் லெவெலில் பார்த்தால் அந்த expectation ஐ justify செய்யவில்லை என்பதே என் அவதானிப்பு. That said , பா படத்தின் பின்னணி இசை நன்றாக இருப்பதாக ஒரு டாக் உள்ளது. நான் இன்னும் படம் பார்க்கவில்லை.

இன்னொன்று, ராஜாவை சாரு விமரிசத்ததால், அதற்கு எதற்கு சாருவை திட்ட வேண்டும்? அது சாருவின் கருத்தல்லவா? கேபிளுக்கு பிடித்த படம் நமக்கு பிடிக்கவில்லை என்றால் உடனே judgemental ஆக "கேபிளுக்கு சினிமா பற்றி ஒன்னும் தெரியாது" என்பது போலல்லவா அது?

குசும்பன் said...

ஜோக் செம காமெடி!

சாருவை பற்றி விமர்சனம் செய்தால் கேஸ் போட்டுவிடுவேன் என்று மிரட்டுவார் ஜாக்கிரதை!

Tech Shankar said...

thank you so much dear dude


//@டெக்சங்கர்

நல்ல தொகுப்பு.. இதில் என்னுடய இரண்டு குறும்படங்களூம் இருக்கிறது

பேரு நல்லாருக்கு

Unknown said...

//எவ்வளவு நாளுக்குத்தான் குறும்படம் என்றால் கருத்து சொல்ல வேண்டும் என்று இவர்களாகவே இலக்கியவாதிகளை போல வரையரைக்குள் பேசிக்கொண்டிருப்பார்கள்.//

முன்பு சிறுகதை, கவிதைகளில் கருத்தை எதிர்ப்பார்த்தாங்க, இப்போ குறும்படத்தில். ஒவ்வொருத்தரையும் கருத்து கந்தசாமி ஆக்காம விட மாட்டாங்க போல.

சரி, இலக்கியவாதிகள் எல்லாம் வரையறைக்குள் தான் பேசுவாங்களா?

Ashok D said...

சாருவை பற்றி அவதூறு கிளப்பியதால் பிடியுங்கள் மைனஸ் ஓட்டு

பெசொவி said...

"A" Joke - A 1 Joke

Thamira said...

எல்லாமே வழக்.. கலக்..

ஏ ஜோக் கொஞ்சம் ஓவர்னாலும் ரொம்பப்புதுசு. சிரிப்பை அடக்கமுடியலை..

masiad said...

kurumpadam super

வந்தியத்தேவன் said...

அண்ணாச்சி சாருவுக்கு ஒரு பதிவு போட்டு விமர்சித்திருக்கலாம். பாவம் அவர் பா படப் பாடல்களைக் கேளாமல் இசைராஜாவை திட்டி எழுதியதை அப்படியே எழுதிவிட்டார் போல் தெரிகின்றது. சாருவின் ரசிகர்கள் நிறைந்த கேரளாவிலேயே இசைராஜாவின் ரசிகர்கள் அதிகம். அதிலும் பழசிராஜா இசையை அனைவரும் தூக்கிவைத்துக் கொண்டாடுவதாக வாசித்தேன். பாவம் சாரு இனியாவது தன் காழ்ப்"புணர்ச்சி"யைக் காட்டாமல் இருக்கட்டும்.

Cable சங்கர் said...

/அண்ணாச்சி சாருவுக்கு ஒரு பதிவு போட்டு விமர்சித்திருக்கலாம்//

அப்படி தனியா பதிவு போட்டு எழுதினால் ஹிட்ஸ் வாங்குறதுக்குன்னு எழுதுறாங்கன்னு சொல்வாஙக். அதுனாலதான் கொத்து பரோட்டாவுல எழுதறேன்.

Unknown said...

"எப்படியாவது சினிமா எடுக்கணும்"

me too like that short flim..
the stranger film also good..

Cable சங்கர் said...

/இன்னொன்று, ராஜாவை சாரு விமரிசத்ததால், அதற்கு எதற்கு சாருவை திட்ட வேண்டும்? அது சாருவின் கருத்தல்லவா? கேபிளுக்கு பிடித்த படம் நமக்கு பிடிக்கவில்லை என்றால் உடனே judgemental ஆக "கேபிளுக்கு சினிமா பற்றி ஒன்னும் தெரியாது" என்பது போலல்லவா அது//

இளையாராஜாவின் இசையை ஆராதிப்பவனாக நான் இருந்தாலும் தற்போதைய இளையராஜாவை சமஙக்ளில் பிடிக்காமலும் இருந்திருக்கிறது அதை வெளிப்படையாய் சொல்லியிருக்கிறேன். ஆனால் சாரு பா படத்தின் பாடல்களை மட்டும் கருத்தை சொல்லியிருந்தால் பரவாயில்லை. மொத்தமாய் அவருக்கு இசையமைக்கவே தெரியாது என்று சொல்வது தான் படு காமெடியாய் இருக்கிறது. நிச்சயம் ஒரு ப்டத்தின் பாடலையோ.. அல்லது என் விமர்சனத்தை பார்த்துவிட்டு எனக்கு சினிமா தெரியாது என்று நினைப்பவர்களை பற்றியோ இந்த பத்தி இல்லை. பொத்தாம் பொதுவாய் ஒரு மிக பெரிய ஜீனியஸை அவர் இசையமைக்கவே தெரியாதவர் என்று சொல்வது மிக அநியாய்ம் என்பதால் தான் அவரை திட்டக்கூட செய்யவில்லை. எனக்கும் சாருவின் எழுத்து ப்டிக்கும். ஆனால் எதை எழுதினாலும் பிடிக்காது.

அறிவிலி said...

ஏ சூ

Nat Sriram said...

//இளையாராஜாவின் இசையை ஆராதிப்பவனாக நான் இருந்தாலும் தற்போதைய இளையராஜாவை சமஙக்ளில் பிடிக்காமலும் இருந்திருக்கிறது அதை வெளிப்படையாய் சொல்லியிருக்கிறேன். ஆனால் சாரு பா படத்தின் பாடல்களை மட்டும் கருத்தை சொல்லியிருந்தால் பரவாயில்லை. மொத்தமாய் அவருக்கு இசையமைக்கவே தெரியாது என்று சொல்வது தான் படு காமெடியாய் இருக்கிறது. நிச்சயம் ஒரு ப்டத்தின் பாடலையோ.. அல்லது என் விமர்சனத்தை பார்த்துவிட்டு எனக்கு சினிமா தெரியாது என்று நினைப்பவர்களை பற்றியோ இந்த பத்தி இல்லை. பொத்தாம் பொதுவாய் ஒரு மிக பெரிய ஜீனியஸை அவர் இசையமைக்கவே தெரியாதவர் என்று சொல்வது மிக அநியாய்ம் என்பதால் தான் அவரை திட்டக்கூட செய்யவில்லை. எனக்கும் சாருவின் எழுத்து ப்டிக்கும். ஆனால் எதை எழுதினாலும் பிடிக்காது.
//
I agree கேபிள் ஜி. பொத்தாம்பொதுவாக விமரிசிக்காமல் ஒரு படைப்பின் அளவில் objective ஆக விமரிசிப்பதே பெட்டர். அஷ்டே மேட்டர்..

Karthik said...

வெங்க்கி என்னோட பேவரைட் கூட. :))

A joke.. LOL. :)))

Venkatesh Kumaravel said...

அடடே! நமக்கும் "Come back soon!" எல்லாம் கேக்குது... நன்றி தலைவரே..! உங்கள் அன்பிற்கு நன்றிகள் பல. கதை ஒண்ணு போட்டிருக்கேன். பார்த்துட்டு சொல்லவும்!
நன்றி பாலா!
நன்றி நர்சிம்!
நன்றி சூர்யா!

Cable சங்கர் said...

@அருண்
நாளைக்கு

@ஜெட்லி
நன்றி

@ராஜு

ஏன் ஏன் இவ்வளவு பயம்?

@கபி
நன்றி

@நர்சிம்
நன்றி தலைவரே

@பட்டர் ப்ளை சூர்யா
நன்றி
விழுந்தாலும் அதை பற்றி கவலையில்லை நான் வளர்கிறேனே மம்மி..:)

@அசோக்
நன்றி

Cable சங்கர் said...

@கரிசல்காரன்
புரியலை..?

@பேநா மூடி
நன்றி..

@அசோக்
அடிபொடி அசோக் அவர்களே..
தேவையில்லாமல் அவரை வம்பிழுக்கவில்லை அவர் தான் சொல்லியிருக்கிறார் இளையராஜாவுக்கு இசையமைக்கவே தெரியாது என்று.. நீங்கள் தான் சொன்னீர்கள் அவ்ருக்கு பேங்க் சலான் கூட பில் பண்ண தெரியாது என்று இப்படி பட்டவர் இசையமைப்பை பற்றி எழுத என்ன அருகதை. அதுவும் இளையராஜாவுக்கு இசையமைக்கவே தெரியாது என்று. எனக்கு தெரியும் நீஙக்ள் எவ்வளவு பெரிய இளையராஜாவின் விசிறி என்று.. நீங்கள் சாருவின் அடிபொடி என்று சொல்லிக் கொள்வதினால் உங்களுக்கென்று சுய விருப்பம் இல்லாதவராய் தெரிகிறது.. அப்படி இருக்க எனக்கு விருப்பமில்லை.; எனக்கு சாருவின் எழுத்து பிடிக்கும் என்று உங்களுக்கு தெரியும். அதே போல் அவரின் எழுத்தின் மீது மாற்று கருத்தும் உண்டு..

இவ்வளவு பேசிய சாருவே இளையராஜாவை சிலாகித்து எழுதியிருக்கிறார். மிஷ்கினுக்கு பாதகம் வராமல். என்னவென்று சொல்வது தலைவருக்கு சுய விருப்பு வெறுப்பு என்று ஒன்று இருந்தால்தானே அடிபொடிகளூக்கு வரும்.:)

என்ன கோவிச்சிட்டீங்களா..?

Cable சங்கர் said...

@ஸ்ரீகிருஷ்னா
நன்றி

@குசும்பன்
நன்றி
போட்டா இன்னும் நல்லது..

@டெக்‌ஷங்கர்
நன்றி

Cable சங்கர் said...

@அசோக்
முடிந்தால் இன்னும் ரெண்டு மூணு போடுங்க தலைவரே.. நான் வள்ர்கிறேனே மம்மி..

@ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி

@பெயர் சொல்ல விருப்பமில்லை
நன்றி தலைவரே

@மசையாட்
நன்றி

Cable சங்கர் said...

@அருண்

எனக்கு கூட பிடித்திருந்தது..

@அறிவிலி
யாரை விரட்டறீங்க..?:)

@நட்ராஜ்
புரிந்து கொண்டதற்கு நன்றி
@வெங்கிராஜா
நிச்ச்யம்

சீக்கிரம் ப்ளாகுக்கு வாங்க..

குகன் said...

தல போன வாரம் தான் இந்த படத்த பத்தி பதிவு போட்டேன்.

http://guhankatturai.blogspot.com/2009/12/blog-post_02.html

குறும்படத்தை எடுக்குறத பத்தி ஒரு தொடர் எழுதினா நல்லா இருக்கும்.

கார்க்கிபவா said...

//என் அபிமான சாருவை நக்கல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்//

இப்படியே போனால் அவர் உஙக்ளுடைய ”அபி” குருவாக
மட்டுமே இருப்பார்

@அஷோக்,
சரியா சொன்னிங்க. குழந்தைங்ககிட்ட பிதாமகன் விக்ரமையோ, கஜினி சூர்யாவையோ காட்டினால் போகோவுக்கு சேனல் மாத்துவாங்க. அதுவே விஜய் படத்தை போட்டால் வாயை திறந்து பார்ப்பாங்க. அதனால் விஜயே சிறந்த நடிகர். சரியாங்க?

Ashok D said...

//சாருவே இளையராஜாவை சிலாகித்து எழுதியிருக்கிறார்//
சாரு நல்லாயிருக்குனா நல்லாயிருக்கு எழுதுவார்... நல்லாயில்லன்னா நல்லாயில்லன்னுதான் சொல்லுவார்

//பேங்க் சலான் கூட பில் பண்ண தெரியாது//
இதை அவர் புத்தகத்திலேயே எழுதியிருக்கார்

Ashok D said...

//சாருவின் அடிபொடி என்று சொல்லிக் கொள்வதினால் உங்களுக்கென்று சுய விருப்பம் இல்லாதவராய் தெரிகிறது.. //
நீங்கள் தண்டோராவை அடிபொட்டி என்றதால் அதே வார்த்தையை கொண்டு உள்நுழைந்தேன்.. மத்தபடி சாருவின் வாசகன் கண்டுப்பாக அடிபொடி வேலையை செய்யமாட்டான்.

Ashok D said...

//மிஷ்கினுக்கு பாதகம் வராமல். என்னவென்று சொல்வது தலைவருக்கு சுய விருப்பு வெறுப்பு என்று ஒன்று இருந்தால்தானே அடிபொடிகளூக்கு வரும்//

படம் பார்த்துவிட்டு இதைப்பற்றி விவாதிப்போம். படம் மட்டும் சாரு சொல்லற மாதிரி இருந்தா..உங்க முக்கு!


//நான் வள்ர்கிறேனே மம்மி..//
பின்ன என்ன மாதிரி ஆளுங்க வேலையத்துபோய் உக்காந்துக்குன்னு உங்களுக்கு ஓட்டும் ஹிட்சும் பாலயர்ஸ்ம் ஏத்திக்கின்னு போனா ஏன் வளறமாட்டீங்க

Ashok D said...

//சரியா சொன்னிங்க. குழந்தைங்ககிட்ட பிதாமகன் விக்ரமையோ, கஜினி சூர்யாவையோ காட்டினால் போகோவுக்கு சேனல் மாத்துவாங்க. அதுவே விஜய் படத்தை போட்டால் வாயை திறந்து பார்ப்பாங்க. அதனால் விஜயே சிறந்த நடிகர். சரியாங்க//

என்னோட கேள்வி ‘நல்ல ஆடிட்டு துறுதுறுனு இருக்கற குழ்ந்தைங்க..ஏன் silenta ஆகிடறாங்க?
நல்லா புரிஞ்சிண்டு பதில் சொல்லுங்ண்ணா..

திரும்பவும் கேள்வியை படிக்கவும்.. இதுக்கு பதில் சொல்ல உங்களுக்கு வயசு பத்தாதுன்னு எனக்கு தெரியும்...
நீங்கதான் யூத்தாச்ச.. :P

அரவிந்த் said...

நல்ல பதிவு நண்பரே!!!
\\D.R.Ashok said...
//சரியா சொன்னிங்க. குழந்தைங்ககிட்ட பிதாமகன் விக்ரமையோ, கஜினி சூர்யாவையோ காட்டினால் போகோவுக்கு சேனல் மாத்துவாங்க. அதுவே விஜய் படத்தை போட்டால் வாயை திறந்து பார்ப்பாங்க. அதனால் விஜயே சிறந்த நடிகர். சரியாங்க//

என்னோட கேள்வி ‘நல்ல ஆடிட்டு துறுதுறுனு இருக்கற குழ்ந்தைங்க..ஏன் silenta ஆகிடறாங்க?
நல்லா புரிஞ்சிண்டு பதில் சொல்லுங்ண்ணா..\\

அன்பரே, அது நாம் எந்த பாடலை போடுகிறோம் என்பதை பொறுத்தது.. " டோலு டோலுதான்" பாடலைப் போட்டால் ஆடுவார்கள். அதே சமயம், "உதயா உதயா உருகுகிறேன்" பாடலைப் போட்டால் உருகத்தான் செய்வார்கள்.. தங்கள் கருத்தை தவறாக புரிந்திருந்தால், மன்னிக்கவும்...

அதே போல, தனக்கு பிடித்தது எல்லோருக்கும் பிடிக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால், சாரு ராஜாவைப் பற்றி தவறாக (மன்னிக்க, இது என் கருத்து) எழுதி, அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறார். அதைத்தான் குமுதம் அவருக்கு செய்தது. உடனே, எச்சரிக்கை விடுக்கிறார். அவரைப் பற்றி ஒரு ரசிகர் எழுதிய கடிதத்தை இடுகிறார். அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அரவிந்த்...

Ashok D said...

அரவிந்த்

என் கேள்விக்கு பதில் இல்லையே?

மற்றவர் மனம் புண்படக்கூடாது என்ற எண்ணம் உங்கள் பின்னூட்டத்தில் தெரிகிறது, நன்றாக வருவீர்கள்... :)

Kiruthigan said...

Keep Rocking