கவுண்டர் காலத்திலிருந்தே நிறைய பழைய படங்களை கிண்டலடித்து காட்சிகள் வ்ந்து பார்த்திருப்பீர்கள், அதன் பிறகு விவேக், வடிவேலு கூட அவ்வப்போது காமெடி காட்சிகளாய் பழைய படங்களிலிருந்து காட்சிகளை உல்டா பண்ணி ரசித்திருப்போம். ஒரு படம் முழுக்க முழுக்க தமிழ்படங்களை கிண்டலும், கேலியும் செய்து வந்ததில்லை என்றே நினைக்கிறேன். ஆங்கிலத்தில் ஒரு பெரிய படம் ஹிட்டானால் அதை வைத்து உடனேயே ஒரு ஸ்பூப் படம் வெளிவந்துவிடும்.
சினிமாக்காரன்பட்டி என்னும் கிராமத்தில் ஆண்பிள்ளைகள் பிறந்தவுடனேயே கள்ளிபால் அதுவும் டெட்ரா பேக்கில் வரும் பாலை கொடுத்து கொலை செய்யும்படி நாட்டாமை உத்தரவால், மீண்டும் பிள்ளையாய் பிறந்த சிவாவை கொல்ல ஆயா டெட்ரா பேக்கை திறக்க, அங்கேயிருந்து ஆரம்பிக்கிறது படம். அதன் பிறகு சிவா, வெ.ஆடை.மூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா அடிக்கும் கூத்துகள் உங்கள் வயிற்றை பதம் பார்க்காமல் போகாது.
படத்தில் வரும் ஆரம்ப காட்சியாகட்டும், நீங்கள் பார்த்து ரசித்த பல படங்களின் ஹிட் காட்சியை இவர்கள் ஸ்பூப் செய்திருக்கும் முறையை பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. படத்துக்கு ஒரு சின்ன லைனை வைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு கலாய்த்திருக்கிறார்கள். முக்கியமாய் அபூர்வ சகோதரர்கள் டெல்லிகணேஷ் காட்சி, சிவா பெரியவனாகும் சைக்கிள் காட்சி, ரன் படத்துக் காட்சியை பற்றியெல்லாம் சொன்னால் நிச்சயம் உங்களால் தியேட்டரில் போய் ரசிக்க முடியாமல் போய்விடும். இந்த காட்சியில் எல்லாம் வயிற்று வலி வரும் அளவுக்கு சிரிப்பு பின்னி எடுக்கிறது.
நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான அளவு இருக்கிறது. ரெட் ஒன்ல் எடுக்கப்பட்ட டிஜிட்டல் படம். கண்ணனின் பாடல்கள் இண்ட்ரஸ்டிங்.. அதிலும் அந்த ஓ..மகசீயா பாடல் அட்ட்காசம்.முக்கியமாய் லாலாக்கு டோல் டப்பிமா என்ற வரி வரும் போது தியேட்டரே அதிர்கிறது
சிவா மிக அழகாய் செட் ஆகிறார் இந்த படத்திற்கு. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே நடித்திருப்பார் போலிருக்கிறது. ஹீரோயினுக்கு தமிழ்பட வழக்கம் போல் டூயட் பாடுவதற்கு பிறகு வேறு வேலையில்லை. படத்தில் வரும் சின்ன, சின்ன கேரக்டர்கள் கூட நச் என்று செய்திருக்கிறார்கள். குறிப்பாய் தேவாவாக வரும் மம்மூட்டி சாயல் ஆளும், அவர் தவறுதலாய் போய் மன்னிப்பு கேட்கும் ரமணாவும், கூடவே வரும் நடிகர் பரத்வாஜும் படத்தை பாருங்கள் அட்டகாசம்.
இயக்குனர் சி.எஸ்.அமுதனின் இயக்கத்தில் க்ளைமாக்ஸ் வரும் போது ஒரு பத்து நிமிஷம் மொக்கை கொஞ்சம் ஜாஸ்தியாகி சோதிக்கிறாரே தவிர. மற்ற இடங்களில் அட்டகாசம் அதிலும் என்னதான் ஸ்பூப் பண்ணினாலும், சில இடங்களில் காட்சிகளை முடிக்கும் வகையில் நச். முக்கியமாய் அந்த குடும்ப பாட்டு மேட்டர் அடி தூள், இப்படி பல விஷயஙக்ளை சொல்லிக் கொண்டே போகலாம். இனிமேல் ஏதாவது பெரிய ஹீரோ ஓப்பனிஞ் சாங் வைக்கவே யோசிப்பார்கள். அப்படி கலாய்த்திருக்கிறார்கள். குறிப்பாய் ஹீரோயின் எஸ்.ஜெ.சூர்யா, டி.ராஜேந்தர் ரசிகை என்பதும், பரதநாடிட்யதை கற்றுக் கொள்ள பாக்கியராஜின் நடன டிவிடியை ஓட விடுவதும்.. ஒரே பாட்டில் ஒரு காபி எடுத்து வருவதற்குள் பணக்காரனாவது, சிவாஜி ரஜினி சீன், அப்பப்பா. ரொம்ப நாளாச்சு இப்படி சிரிச்சு.சீன்களை சொன்னால் படம் பார்க்கும் போது இண்ட்ரஸ்ட் குறையும் என்பதால் நிச்சயம் வெள்ளித்திரையில் காண்க
தமிழ்படம் – நிச்சயம் ஒரு நான் ஸ்டாப் எண்டர்டெயினர்.. டோண்ட் மிஸ்.
தமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் உங்க ஓட்டை குத்துங்க எசமான் குத்துங்க..
Comments
அதகளம் பண்ணியிருப்பார்கள் போலும்.கண்டிப்பாய்ப் பார்க்க வேண்டுமென ஆவல் மேலிடுகின்றது.
Awaiting for this movie in Dubai. Goa is only released here
it was one hr program and it was a good laughter one.
பிரபாகர்.
அவருதான்.. நம்ம வயித்தெரிச்சலை கிளப்பறதுக்குன்னே.. இப்படி எழுதறாருன்னா.. நீங்களுமா?? :) :)
நம்மூர்ல எங்கிங்க இது வரப் போகுது?
வெளங்காத வேட்டைக்காரனைத்தான் போடுவாங்க.
மொத்த பதிவுலகமும்.. கோவா படம் எழுதும் போது, குரு மட்டும் தமிழ்ப்படம் எழுதறார்!! :) :)
--
அண்டர்வேர்!!! :)
டொரண்ட்ஸ்ல் வரும்போதுதான் பார்க்கமுடியும்.
அவருடை பதிவுகளை படிக்க
http://www.indieshd.com
என்ன.. பீட்டர்ல இல்லாம.. தமிழ்ல இருந்தா நல்லாயிருக்கும்.
அய்யோ கசின் கல்யாணத்த ஃபிப்ரவரில வச்சிருக்கக்கூடாதா?
இந்த டீமோட ஒரு ப்ளாக்கர் மீட் ஏற்பாடு பண்ணுங்க கேபிள். கலக்கலாம்!
-தினா
நமக்கு(வட அமெரிக்கா) எப்ப கொடுப்பினைனு தெரியலை.
-தினா
//
ஹ்ம்ம்..நானும் அத தான் நெனச்சு கிட்டு இருந்தேன்..
டொரண்ட்ஸ்ல் தானா?
ஒரு படத்த பாத்து இவ்ளோ சிரிச்சதா(உயிர் போற அளவுக்கு) நியாபகம் இல்ல.
:))))))))))))))))))
Repeatuuuuuuu........
நீங்களும் அந்த ரேப் சீனை உட்டிங்களே....
படம் ஆரம்பத்திலேயே சிரிக்க ஆரம்பிச்சி கடைசி சீன் வரைக்கும் சிரிச்சி சிரிச்சி அடப்போங்கப்பா முடியல....
இதுல என்ன highlightனா விஷயம்னா தியேட்டர் housefullஆகி standingல படம் பார்த்தாங்க....
பரவாஇல்லை இந்த முறை கேபிளுக்கு கவர் நிச்சயம்! அண்ணே அப்படியே எனக்கும்......
படம் நல்லா இருக்கா பாஸ்..பார்க்கணும்
இரண்டாம் பாதி முழு மொக்கை..படம் ஓடுவது சந்தேகம் தான்..
இந்த படத்துக்கு போயி ஏன் இவ்வளவு சிலாகிப்புகள்..கவர் வாங்கிட்டீங்களா :)
இந்த படமாவது நல்லா ஓடணும்.ஓட வைங்க மக்களே.
பூ படத்த எல்லாரும் பாராட்டினார்கள். படம் ஓடவில்லை.
இப்படி இருந்தா இந்த மாதிரி படங்களை தயாரிக்க எந்த தயாரிப்பாளர் தைரியமாக முன்வருவார்?
அன்புடன்
அத்திரி
வாழ்த்துகள். வாழ்த்துகள்.
ஆமாம்
@ராஜு
அப்படியா.. நன்றி
@சுதர்
விரைவில்வந்திரும் துபாய்ல
@சுதர்
ஆமாம் சுதர் படம் நல்ல மார்கெட்டிங் செய்யப்பட்ட படம்
@சங்கர்
பாவம் ஜெட்லிதான் நொந்துட்டார் போலருக்கு
@பிரபாகர்
ஆமாம்ணே நிச்சயம்பாருங்க
@வெற்றி
பார்த்திருங்க
@க.ராமசாமி
ஓகே
@ஹாலிவுட் பாலா
அது சரி
உள்குத்தை கண்டுபிடிச்சிட்டீங்க போலருக்கே. முதல்ல பார்த்தது கோவாதான். அப்புறம் பார்த்ததுதான் தமிழ்ப்படம்
@கல்ப் தமிழன்
அப்படியில்லையே உ.போ.ஒ, ஈரம் எல்லாம்பாஸிட்டிவ்தான்
@அரவிந்தன்
ஆமாம் நண்பரே..
@
வீமர்சனம் படம் பார்க்கத் தூண்டுகிறது - பாத்துடுவோம்
ஓட்டு ஓட்டு போட்டோம்ல
500க்கு நல்வாழ்த்துகள் - பார்ட்டி எப்போ
எந்த ஊரு நீங்க
@பரிசல்
ட்ரை பண்ணுவோம்
@தினா
அது சரி..
@தாராபுரத்தான்
அதுதான் படத்தோட ஸ்பெஷாலிட்டி
@ராதாகிருஷ்ணன்
நிச்சயம் பாருங்க சார்..
@புலவன் புலிகேசி
பாருங்க
@
வேற வழியில்லைன்னா என்ன செய்யறது?
2செல்வகுமார் இனியன்
:)
@சாம்ராஜ்யப்ரியன்
:)
@டம்பிமேவி
உடனே
@நாடோடி
நிச்சயம்
:)
@எறும்பு
பரிசலுக்கு சொன்ன மேட்டர் ரிப்பீட்டு
@அன்பு
பார்த்திருங்க
@முரளிக்குமார் பத்மநாபன்
வேணும்னுதான் சொலல்லை
@ஆர்.கே.சதீஷ்குமார்
நிச்சயம்
@
எந்த ஊரு
@மயில்ராவணன்
பார்த்திருங்க
@வெள்ளிநிலா
என்ன சொல்லவர்றீங்க..?
@நர்சிம்
:)
@தண்டோரா
நானும்தான்
:)
@
என்ன தேங்க்ஸ்
@இராகவன் நைஜிரியா
நன்றிங்கண்ணா..நீங்க சொல்லி த்தான தெரியும்
@சஞ்செய்காந்தி
ந்ன்றி
@நாய்க்குட்டி மனசு
நன்றி
@ஷங்கர்
ஆமாம்
@வெற்றி
கொடுத்தாலும் வாங்க மாட்டேன்
@ரமேஷ் ரொம்ப நல்லவன்
:0
@கைலாஷ்
அப்படியெல்லாம் ஆ.ஓ மாதிரி கெஞ்ச வேண்டிய அவசியமேஇல்லை..
@அத்திரி
ஏன்..?
@நெகமம்
நன்றி
நன்றி
@நேசமித்ரன்
நன்றி தலைவரே
@சீனா
கொடுத்துட்டா போச்சு.. நன்றி
தூத்துக்குடி
உங்க வயிறுவலிக்கு கேரண்டி...
டெல்லி கணேஷ் சீன் செம கலக்கலா இருக்கும்....
வில்லன் ஹீரோயின சுடும்போது ஹீரோயின சிவா னு ஹீரோ பேர சொல்லி கத்தும்போது வந்து காப்பாத்துவாரு பாருங்க.... அதகளமா இருக்கும் சீன்!
அடிச்சி தூள் கெளப்பிட்டாங்க.....
தமிழ்படம் பார்ட் 2 க்கு வெயிட்டிங் :)
(பின்ன எவ்வளவோ இருக்கு இல்ல இன்னும்)
சுத்தமானது....
சுகாதாரமானது....
thanks radaan