Thottal Thodarum

Jan 30, 2010

தமிழ் படம் - திரை விமர்சனம்

மீண்டும் குறுகிய நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை வழக்கி என்னை உற்சாகப்படுத்தி ஏழு லட்சம் ஹிட்ஸுகளை வழங்கிய வாசக அன்பர்களுக்கும், பதிவர்களுக்கும் என் இதயம் கலந்த நன்றி.. நன்றி..நன்றி


tamil-padam-movie-posters கவுண்டர் காலத்திலிருந்தே நிறைய பழைய படங்களை கிண்டலடித்து காட்சிகள் வ்ந்து பார்த்திருப்பீர்கள், அதன் பிறகு விவேக், வடிவேலு கூட அவ்வப்போது காமெடி காட்சிகளாய் பழைய படங்களிலிருந்து காட்சிகளை உல்டா பண்ணி ரசித்திருப்போம். ஒரு படம் முழுக்க முழுக்க தமிழ்படங்களை கிண்டலும், கேலியும் செய்து வந்ததில்லை என்றே நினைக்கிறேன். ஆங்கிலத்தில் ஒரு பெரிய படம் ஹிட்டானால் அதை வைத்து உடனேயே ஒரு ஸ்பூப் படம் வெளிவந்துவிடும்.

சினிமாக்காரன்பட்டி என்னும் கிராமத்தில் ஆண்பிள்ளைகள் பிறந்தவுடனேயே கள்ளிபால் அதுவும் டெட்ரா பேக்கில் வரும் பாலை கொடுத்து கொலை செய்யும்படி நாட்டாமை உத்தரவால், மீண்டும் பிள்ளையாய் பிறந்த சிவாவை கொல்ல ஆயா டெட்ரா பேக்கை திறக்க, அங்கேயிருந்து ஆரம்பிக்கிறது படம்.  அதன் பிறகு சிவா, வெ.ஆடை.மூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா அடிக்கும் கூத்துகள் உங்கள் வயிற்றை பதம் பார்க்காமல் போகாது.

படத்தில் வரும் ஆரம்ப காட்சியாகட்டும், நீங்கள் பார்த்து ரசித்த பல படங்களின் ஹிட் காட்சியை இவர்கள் ஸ்பூப் செய்திருக்கும் முறையை பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. படத்துக்கு ஒரு சின்ன லைனை வைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு கலாய்த்திருக்கிறார்கள்.
tamil-padam-03 முக்கியமாய் அபூர்வ சகோதரர்கள் டெல்லிகணேஷ் காட்சி, சிவா பெரியவனாகும் சைக்கிள் காட்சி, ரன் படத்துக் காட்சியை பற்றியெல்லாம் சொன்னால் நிச்சயம் உங்களால் தியேட்டரில் போய் ரசிக்க முடியாமல் போய்விடும். இந்த காட்சியில் எல்லாம் வயிற்று வலி வரும் அளவுக்கு சிரிப்பு பின்னி எடுக்கிறது.

நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான அளவு இருக்கிறது. ரெட் ஒன்ல் எடுக்கப்பட்ட டிஜிட்டல் படம். கண்ணனின் பாடல்கள் இண்ட்ரஸ்டிங்.. அதிலும் அந்த ஓ..மகசீயா பாடல் அட்ட்காசம்.முக்கியமாய் லாலாக்கு டோல் டப்பிமா என்ற வரி வரும் போது தியேட்டரே அதிர்கிறது
Thamizh-Padam-Stills-035.jpg_940

சிவா மிக அழகாய் செட் ஆகிறார் இந்த படத்திற்கு. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே நடித்திருப்பார் போலிருக்கிறது. ஹீரோயினுக்கு தமிழ்பட வழக்கம் போல் டூயட் பாடுவதற்கு பிறகு வேறு வேலையில்லை. படத்தில் வரும் சின்ன, சின்ன கேரக்டர்கள் கூட நச் என்று செய்திருக்கிறார்கள். குறிப்பாய் தேவாவாக வரும் மம்மூட்டி சாயல் ஆளும், அவர் தவறுதலாய் போய் மன்னிப்பு கேட்கும் ரமணாவும், கூடவே வரும் நடிகர் பரத்வாஜும் படத்தை பாருங்கள் அட்டகாசம்.

இயக்குனர் சி.எஸ்.அமுதனின் இயக்கத்தில் க்ளைமாக்ஸ் வரும் போது ஒரு பத்து நிமிஷம் மொக்கை கொஞ்சம் ஜாஸ்தியாகி சோதிக்கிறாரே தவிர. மற்ற இடங்களில் அட்டகாசம் அதிலும் என்னதான் ஸ்பூப் பண்ணினாலும், சில இடங்களில் காட்சிகளை முடிக்கும் வகையில் நச். முக்கியமாய் அந்த குடும்ப பாட்டு மேட்டர் அடி தூள், இப்படி பல விஷயஙக்ளை சொல்லிக் கொண்டே போகலாம். இனிமேல் ஏதாவது பெரிய ஹீரோ ஓப்பனிஞ் சாங் வைக்கவே யோசிப்பார்கள். அப்படி கலாய்த்திருக்கிறார்கள். குறிப்பாய் ஹீரோயின் எஸ்.ஜெ.சூர்யா, டி.ராஜேந்தர் ரசிகை என்பதும், பரதநாடிட்யதை கற்றுக் கொள்ள பாக்கியராஜின் நடன டிவிடியை ஓட விடுவதும்.. ஒரே பாட்டில் ஒரு காபி எடுத்து வருவதற்குள் பணக்காரனாவது, சிவாஜி ரஜினி சீன், அப்பப்பா. ரொம்ப நாளாச்சு இப்படி சிரிச்சு.சீன்களை சொன்னால் படம் பார்க்கும் போது இண்ட்ரஸ்ட் குறையும் என்பதால் நிச்சயம் வெள்ளித்திரையில் காண்க

தமிழ்படம் – நிச்சயம் ஒரு நான் ஸ்டாப் எண்டர்டெயினர்.. டோண்ட் மிஸ்.
தமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் உங்க ஓட்டை குத்துங்க எசமான் குத்துங்க..
Post a Comment

69 comments:

Raju said...

\\குறிப்பாய் ஹீரோயின் எஸ்.ஜே.சூர்யா, டி.ராஜேந்தர் ரசிகை என்பதும், பரதநாடிட்யதை கற்றுக் கொள்ள பாக்கியராஜின் நடன டிவிடியை ஓட விடுவதும்..\\

அதகளம் பண்ணியிருப்பார்கள் போலும்.கண்டிப்பாய்ப் பார்க்க வேண்டுமென ஆவல் மேலிடுகின்றது.

Raju said...

First On net தலைவரே..!

Raju said...

First On net தலைவரே..!

Sudhar said...

Dayanidhi will get a confidence that unlike Udhayanidhi, he can bet on good movie can run well instead of taking with big star and big budget. Hats off to Dayanidhi for a bold move when he can easily get dates for big star and producer.

Awaiting for this movie in Dubai. Goa is only released here

Sudhar said...

have you seen the Pongal special of making of Tamilpadam in one of the TV channels, that itself they have made good spoof of all making of movies etc.

it was one hr program and it was a good laughter one.

சங்கர் said...

சிரித்து சிரித்து வாய் வலித்து உக்கார்ந்திருக்கிறேன்

பிரபாகர் said...

அந்த அளவுக்காண்ணா இருக்கு, இங்க ரிலீஸ் ஆயிருக்கான்னு தெரியலயே? ஆனா பாத்துட வேண்டியதுதான்!

பிரபாகர்.

வெற்றி said...

நாளைக்கே பார்த்துட வேண்டியதுதான்..

க ரா said...

படத்தோட பாட்ட கேக்கும்போதே தோணுச்சு படம் இந்த மாதிரித்தாம் இருக்கும்னு. சிக்கிரம் பார்கனும் .

பாலா said...

இராமசாமி..

அவருதான்.. நம்ம வயித்தெரிச்சலை கிளப்பறதுக்குன்னே.. இப்படி எழுதறாருன்னா.. நீங்களுமா?? :) :)

நம்மூர்ல எங்கிங்க இது வரப் போகுது?

வெளங்காத வேட்டைக்காரனைத்தான் போடுவாங்க.

பாலா said...

ஜோக் என்னன்னா..

மொத்த பதிவுலகமும்.. கோவா படம் எழுதும் போது, குரு மட்டும் தமிழ்ப்படம் எழுதறார்!! :) :)

--

அண்டர்வேர்!!! :)

gulf-tamilan said...

ரொம்ப நாள் கழித்து பாசிடிவ்வான விமர்சனம்!!!
டொரண்ட்ஸ்ல் வரும்போதுதான் பார்க்கமுடியும்.

அரவிந்தன் said...

நம்ம நண்பர் டெக்னாலஜி பதிவர் பாலாஜி அவர்கள் தான் தமிழ் படத்திற்க்கு ரெட் ஒன் கண்சல்டண்ட்
அவருடை பதிவுகளை படிக்க
http://www.indieshd.com

பாலா said...

நன்றிங்க அரவிந்தன். ஃபேவரிட்ல போட்டுகிட்டேன்.

என்ன.. பீட்டர்ல இல்லாம.. தமிழ்ல இருந்தா நல்லாயிருக்கும்.

Unknown said...

பாக்கணும்னு ஆசதான்.. ஆனா இங்க ரிலீஸ் ஆகணுமே...

அய்யோ கசின் கல்யாணத்த ஃபிப்ரவரில வச்சிருக்கக்கூடாதா?

பரிசல்காரன் said...

சான்ஸே இல்ல கேபிள்.. செம படம்! லாஜிக்காடா கேக்கறீங்க லாஜிக்குன்னு கொன்னெடுத்துட்டாங்க! (அது சினிமாபட்டி. சினிமாக்காரன் பட்டி இல்ல!)

இந்த டீமோட ஒரு ப்ளாக்கர் மீட் ஏற்பாடு பண்ணுங்க கேபிள். கலக்கலாம்!

நீர்ப்புலி said...

நமக்கு(வட அமெரிக்கா) எப்ப கொடுப்பினைனு தெரியலை.
-தினா

தாராபுரத்தான் said...

படத்தை பார்த்துவிட்டு விமர்சனத்தை படிக்கும் போதே சிரிப்பு வருதே..

T.V.ராதாகிருஷ்ணன் said...

பார்த்துட வேண்டியதுதான்

புலவன் புலிகேசி said...

தல இன்னைக்கு புக் பன்னிருக்கேன். போயிட்டு வரேன்..

செந்தில் நாதன் Senthil Nathan said...

//Dhina said...
நமக்கு(வட அமெரிக்கா) எப்ப கொடுப்பினைனு தெரியலை.
-தினா
//
ஹ்ம்ம்..நானும் அத தான் நெனச்சு கிட்டு இருந்தேன்..
டொரண்ட்ஸ்ல் தானா?

Selvakumar Iniyan said...
This comment has been removed by the author.
Selvakumar Iniyan said...

அப்பாடி முடியலைடா சாமி,Night show பாத்துட்டு வீட்டுக்கு போனா நைட் புல்லா தூக்கத்துல கூட சிரிக்க வச்சுட்டானுங்கடா.

ஒரு படத்த பாத்து இவ்ளோ சிரிச்சதா(உயிர் போற அளவுக்கு) நியாபகம் இல்ல.

தினேஷ் ராம் said...

படம் பார்க்கனும் என்று நினைத்திருந்தேன்.. இனி பார்த்தே ஆகனும் என்று முடிவு பண்ண வச்சுட்டீங்க. உங்க வலைப் பக்கம் வந்தாலும் புத்தக கண்காட்சிக்கு போற மாதிரி செலவு உறுதி ஆகுது. ;)

மேவி... said...

appadiya...innaikku poi parthu vidugiren

நாடோடி said...

சிரிக்க கேரண்டி சொல்லீட்டீங்க..பார்த்துட வேண்டியதுதான்..

விக்னேஷ்வரி said...

இன்னும் இங்க ரிலீஸ் ஆகலை. உங்க பட விமர்சனம் பார்த்து வயிறெரிய மட்டுமே முடியுது :(

எறும்பு said...

Same Happiness...

:))))))))))))))))))

எறும்பு said...

//இந்த டீமோட ஒரு ப்ளாக்கர் மீட் ஏற்பாடு பண்ணுங்க கேபிள். கலக்கலாம்!//

Repeatuuuuuuu........

Anbu said...

இன்னிக்கு பார்க்கணும் அண்ணா

அன்பேசிவம் said...

தல இங்க வந்து பரிசலை வழிமொழிகிறேன்.

நீங்களும் அந்த ரேப் சீனை உட்டிங்களே....

Anonymous said...

சீன்களை சொன்னால் படம் பார்க்கும் போது இண்ட்ரஸ்ட் குறையும் என்பதால் நிச்சயம் வெள்ளித்திரையில் காண்க//இது நல்லாருக்கே..

guru said...

படம் நேற்று night show பார்க்க போனேன்..

படம் ஆரம்பத்திலேயே சிரிக்க ஆரம்பிச்சி கடைசி சீன் வரைக்கும் சிரிச்சி சிரிச்சி அடப்போங்கப்பா முடியல....

இதுல என்ன highlightனா விஷயம்னா தியேட்டர் housefullஆகி standingல படம் பார்த்தாங்க....

மரா said...

சபாஷ் கேபிள். ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல தமிழ்ப்பட விமர்சனம். அவசியம் பாத்துப்புடுறேன்.

மரா said...

அப்பிடியே நம்ம பிளாக்ல ‘கெட்ட ஆட்டம்’ போட்டுருக்கேன். அங்கிட்டு வந்துட்டு போங்க.....

வெள்ளிநிலா said...

இந்த படத்தை பற்றி கேள்வி படும் பொழுது எப்படி இருக்க வாய்பிருக்கோ அப்படி இருக்கும்னு நினைக்கிறேன்.
பரவாஇல்லை இந்த முறை கேபிளுக்கு கவர் நிச்சயம்! அண்ணே அப்படியே எனக்கும்......

நர்சிம் said...

அழகிரின்னா அந்தப் பயம் இருக்கட்டும் ஹஹஹா..

படம் நல்லா இருக்கா பாஸ்..பார்க்கணும்

மணிஜி said...

இயக்குநர் அமுதன் ஒரு விளம்பரபட இயக்குனர். சண்டேன்னா ரெண்டு என்கிற தினமலர் விளம்பரம் இவர் எடுத்ததுதான். நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர். சந்திச்சு ரொம்ப நாளாச்சு!!(அவரை)

Ashok D said...

தேங்க்ஸ்ங்ணா..

இராகவன் நைஜிரியா said...

இந்த இடுகை உங்களின் 500 வது இடுகை. வாழ்த்துகள்.

Sanjai Gandhi said...

500 அடிச்சதுக்கு வாழ்த்துகள் கேபிள்..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

"தமிழ்ப்படம்" படம் பார்த்து மற்ற படங்கள் நினைவு வந்ததை விட இனி எந்த தமிழ்ப்படம் பார்த்தாலும் "தமிழ்ப்படம்" தான் நினைவு வரும்னு நினைக்கிறேன்.

Paleo God said...

எல்லா விமர்சனமும் பாஸிடிவாவே இருக்கு ஆச்சர்யம்தான்..:))

வெற்றி said...

தலைவரே படம் முதல் பாதி தூள் கிளப்பியிருக்கிறார்கள்..

இரண்டாம் பாதி முழு மொக்கை..படம் ஓடுவது சந்தேகம் தான்..

இந்த படத்துக்கு போயி ஏன் இவ்வளவு சிலாகிப்புகள்..கவர் வாங்கிட்டீங்களா :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிரித்து சிறிது வயிறு வலி பாஸ். ரொம்ப வருடத்துக்கு பிறகு ஒரு உருப்படியான தமிழ் படம்

kailash,hyderabad said...

ரொம்ப நாளக்கி அப்புறம் வலையுலகில் பாராட்டு வாங்கும்படியாக ஒரு படம்.
இந்த படமாவது நல்லா ஓடணும்.ஓட வைங்க மக்களே.
பூ படத்த எல்லாரும் பாராட்டினார்கள். படம் ஓடவில்லை.
இப்படி இருந்தா இந்த மாதிரி படங்களை தயாரிக்க எந்த தயாரிப்பாளர் தைரியமாக முன்வருவார்?

அத்திரி said...

கோவா விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்

அன்புடன்
அத்திரி

பாலா said...

படம் பர்க்க ஆவலாக உள்ளது....நன்றி

சி.வேல் said...

வலையுலகில் பாராட்டு வாங்கும்படியாக ஒரு படம்.

நேசமித்ரன் said...

500 வது இடுகை!!!!!!!

வாழ்த்துகள். வாழ்த்துகள்.

Cable சங்கர் said...

@ராஜு
ஆமாம்

@ராஜு
அப்படியா.. நன்றி


@சுதர்
விரைவில்வந்திரும் துபாய்ல

@சுதர்
ஆமாம் சுதர் படம் நல்ல மார்கெட்டிங் செய்யப்பட்ட படம்

@சங்கர்
பாவம் ஜெட்லிதான் நொந்துட்டார் போலருக்கு

@பிரபாகர்
ஆமாம்ணே நிச்சயம்பாருங்க

@வெற்றி
பார்த்திருங்க

@க.ராமசாமி
ஓகே

@ஹாலிவுட் பாலா
அது சரி

Cable சங்கர் said...

@ஹாலிவுட் பாலா
உள்குத்தை கண்டுபிடிச்சிட்டீங்க போலருக்கே. முதல்ல பார்த்தது கோவாதான். அப்புறம் பார்த்ததுதான் தமிழ்ப்படம்

@கல்ப் தமிழன்
அப்படியில்லையே உ.போ.ஒ, ஈரம் எல்லாம்பாஸிட்டிவ்தான்

@அரவிந்தன்
ஆமாம் நண்பரே..

@

cheena (சீனா) said...

அன்பின் கேபிள்

வீமர்சனம் படம் பார்க்கத் தூண்டுகிறது - பாத்துடுவோம்

ஓட்டு ஓட்டு போட்டோம்ல

500க்கு நல்வாழ்த்துகள் - பார்ட்டி எப்போ

Cable சங்கர் said...

@முகிலன்
எந்த ஊரு நீங்க

@பரிசல்
ட்ரை பண்ணுவோம்

@தினா
அது சரி..

@தாராபுரத்தான்
அதுதான் படத்தோட ஸ்பெஷாலிட்டி

@ராதாகிருஷ்ணன்
நிச்சயம் பாருங்க சார்..

@புலவன் புலிகேசி
பாருங்க

@

Cable சங்கர் said...

@செந்தில்நாதன்
வேற வழியில்லைன்னா என்ன செய்யறது?

2செல்வகுமார் இனியன்
:)

@சாம்ராஜ்யப்ரியன்
:)

@டம்பிமேவி
உடனே

@நாடோடி
நிச்சயம்

Cable சங்கர் said...

@விக்னேஷ்வரி
:)

@எறும்பு
பரிசலுக்கு சொன்ன மேட்டர் ரிப்பீட்டு

@அன்பு
பார்த்திருங்க

@முரளிக்குமார் பத்மநாபன்
வேணும்னுதான் சொலல்லை

@ஆர்.கே.சதீஷ்குமார்
நிச்சயம்

@

Cable சங்கர் said...

@குரு
எந்த ஊரு

@மயில்ராவணன்
பார்த்திருங்க

@வெள்ளிநிலா
என்ன சொல்லவர்றீங்க..?

@நர்சிம்
:)

@தண்டோரா
நானும்தான்
:)

@

Cable சங்கர் said...

@அசோக்
என்ன தேங்க்ஸ்

@இராகவன் நைஜிரியா
நன்றிங்கண்ணா..நீங்க சொல்லி த்தான தெரியும்

@சஞ்செய்காந்தி
ந்ன்றி

@நாய்க்குட்டி மனசு
நன்றி

@ஷங்கர்
ஆமாம்

@வெற்றி
கொடுத்தாலும் வாங்க மாட்டேன்

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
:0

@கைலாஷ்

அப்படியெல்லாம் ஆ.ஓ மாதிரி கெஞ்ச வேண்டிய அவசியமேஇல்லை..


@அத்திரி
ஏன்..?

@நெகமம்
நன்றி

Cable சங்கர் said...

@சி.வேல்
நன்றி

@நேசமித்ரன்
நன்றி தலைவரே

@சீனா
கொடுத்துட்டா போச்சு.. நன்றி

guru said...

//எந்த ஊரு//

தூத்துக்குடி

சுரேகா.. said...

சொல்ல வந்து , சொல்ல வந்து...சொல்லாமலேயே எல்லாக் காட்சிகளின் மீதும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறீர்கள். கேபிள் ஜி கணக்கில் மினிமம் ஆயிரம் டிக்கட் கேரண்ட்டி துரை தயாநிதி ஜி!

சுரேகா.. said...

500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஜி!

யோ வொய்ஸ் (யோகா) said...

பார்க்கனும் தல ஆனால் இலங்கையில் இன்னும் ரிலீஸ் ஆகல

Anonymous said...

சான்ஸே இல்ல.....

உங்க வயிறுவலிக்கு கேரண்டி...

டெல்லி கணேஷ் சீன் செம கலக்கலா இருக்கும்....

வில்லன் ஹீரோயின சுடும்போது ஹீரோயின சிவா னு ஹீரோ பேர சொல்லி கத்தும்போது வந்து காப்பாத்துவாரு பாருங்க.... அதகளமா இருக்கும் சீன்!

அடிச்சி தூள் கெளப்பிட்டாங்க.....

தமிழ்படம் பார்ட் 2 க்கு வெயிட்டிங் :)

(பின்ன எவ்வளவோ இருக்கு இல்ல இன்னும்)

Unknown said...

super fil pa full of comedy nis... shiva acting.....

DR said...

தமிழ் படம் - பெரிய திரையில் ஒரு லொள்ளு சபா...

Thamira said...

செமத்தியான படம். Good Review.

Marimuthu Murugan said...

கேபிள் அண்ணன் விமர்சனம்
சுத்தமானது....
சுகாதாரமானது....

PRIYA said...

padaththai paththi comments paarththaachchi.Padaththai theatre-la paarththuda veyndiyadhudhaan.

thanks radaan