கொத்து பரோட்டா-26/07/10

சமீப காலமாய் சென்னையின் முக்கிய ரோடுகளில் பாதாள சாக்கடைக்காகவோ, அல்லது வேறு ஏதாவது பிரச்சனைக்காகவோ.. பள்ளம் நோண்டினால், அதை மூடிவிட்டு புதிய ரோடு போடுவதில்லை. நிறைய இடங்களில் ஒரு பாதி ரோடு பள்ளமாகவே இருக்கிறது. ஆனால் சில இடங்களில் அமைச்சர்கள், துணை முதலைமைச்சர் வருகிறார்ரென்றால் உடனடியாக தார் சாலை போடப்பட்டு பளபள ரோடாகிறது. ஒரு காலத்தில் ரோடு போடுவததென்றால் போட்ட ரோடின் மீதே மீண்டும் தார் போட்டு புதுசாக்கிவிடுவார்கள். அது அடுத்த மழை வரைக்கும் தான். ஆனால் இப்போது ஒரு நல்ல விஷயம் செய்கிறார்கள். ஏற்கனவே போட்ட ரோட்டை சுரண்டி எடுத்து, பின்பு பழைய உயரத்துக்கே ரோடு போடுகிறார்கள். மிக நல்ல ஆரோக்கியமான விஷ்யம். ஆனால் என்ன எழவு.. சுரண்டினதை திரும்ப எப்ப போடுவாங்கன்னு தெரியத்தான் மாட்டேங்குது.  பாதி ரோடு சுரண்டியும், பாதி ரோடு மேடு பள்ளமாவும் சென்னையில பல ரோடுகள் இருக்கு.. ஒரு மாதிரி ஜிம்னாஸ்டிக் செஞ்சுதான் வண்டி ஓட்ட வேண்டியிருக்கு. கடவுள் தான் ரோட்டுல போறவுங்களை காப்பாத்தணும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Photo0168 Photo0163 Photo0169
சென்னையில் புதியதாய் மக்களின் புழக்கத்திற்காக திறக்கப்பட்டிருக்கும் புதிய மால் எக்ஸ்ப்ரஸ் அவின்யூ. பிரம்மாண்டமான இந்த மாலில் நான்கு ப்ளோர்களில் சத்யமின் எட்டு தியேட்டர்கள்(அடுத்த மாதம் திறக்கிறார்கள்), குழந்தைகளுக்கான பெரிய Fun City, புட்கோர்டுகள், கடைகள், என்று  ஏற்கனவே திறந்திருக்கிறார்கள்.  இன்னும் பல ஸ்டோர்களும், இந்தியா மற்றும் உலகில் உள்ள சிறந்த ப்ராண்ட்கள் அனைவரும் இந்த மாலில் ஒரு கடையை எடுத்திருப்பதாய் சொன்னார்கள். மால் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. இன்னும் முழுவதுமாய் முடியவில்லை. வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் திறக்கப்பட்ட மால்களில் சற்றே பெரிய விஸ்தீரணத்தை கொண்டதாக எனக்கு படுகிறது. பிக்பஸார் பெரிய ப்ளோரை எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே பார்க்கிங்கில் கொள்ளையடிக்கும் தலைநகரான நம் ஊரில் மீண்டும் பார்கிங் கொள்ளையை ஆரம்பித்திருகிறார்கள். பைக்குக்கு ஒரு மணி நேரத்திற்கு 15 ரூபாயாம். இவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள். விரைவில் எல்லா மால்களிலும் இதையே பாலோ செய்வதை எதிர்பார்க்கலாம்.  
Photo0171  Photo0174
Photo0175 Photo0178
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
போன வாரம் ட்விட்டரிலும், பஸஸிலும் “எழுத ஏதும் தோன்றவில்லை. பணம் நிர்ணையிக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்றோ” என்று எழுதினேன். நூற்றுக்கும் மேற்பட்ட கால்கள், மெயில்கள், சாட்டுகள் என்று நண்பர்கள், வாசகர்களின் அன்பு எனனை திக்கு முக்காட வைத்துவிட்டது. இவர்களுக்கு நான் என்ன செய்யப் போகிறேன்?. அல்லது என்ன செய்துவிட்டேன்?. அத்துனை பேரும் “ஏன்? என்னாச்சு.? என்ன பிரச்சனை?” என்று  கேட்டு ஆறுதல் சொன்னார்கள். என்ன உதவி வேண்டுமானாலும் கேளூங்கள் என்று சொல்லி , என்னை உற்சாகப்படுத்திய அவர்களின் அன்பு என்னை நெகிழச் செய்துவிட்டது. மிக நெருங்கிய நண்பர்களை தவிர மற்றவர்களிடம் என் சந்தோஷத்தை தவிர பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டது இல்லை.. ஆனால் இவ்வளவு பேரின் அன்பினால் என்  மனம் லேசாகிவிட்டது.. நடப்பது நடக்கட்டும். நீங்களெல்லாம் இருக்கையில் எனக்கு என்ன கவலை. 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 
ரெண்டு மாதத்திற்கு மேலிருக்கும் என்று நினைக்கிறேன். விஜய் டிவி நீயா நானாவில் கலந்து கொண்டு. அப்துல்லா, நர்சிம், மணிஜி, பட்டர்ப்ளை சூர்யா ஆகியோருடன், நானும் கலந்து கொண்டேன். அவர்களின் வழக்கம் போல ஏழு மணிக்கு வரச் சொல்லி, சுமார் பன்னிரண்டு மணிக்கு நிகழ்ச்சியை ஆரம்பித்து அடுத்த நாள் விடியற்காலை முடித்த கதை தான் உங்களுக்கு தெரியுமே. நிகழ்ச்சிக்கு பங்கு பெறுவதற்காக ஒரு முறைக்கு பத்து முறை கூப்பிட்டு  காக்க வைத்து, பங்கு பெற பேசிய நிகழ்ச்சி அமைப்பாளர்கள்.  இரண்டு மாதம் ஆகிவிட்டது. எங்களுக்கு அப்புறம் எடுத்த நிகழ்ச்சியையெல்லாம் போட்டுவிட்டார்கள். ஆனால் அன்று ஷூட் செய்த நிகழ்ச்சியை இதுவரை போடவில்லை. ஏன் போடவில்லை என்பதுக்கான காரணம் எங்களுக்கு புரிந்தாலும், அட்லீஸ்ட் ஒரு கர்டஸிக்காகவாவது, நிகழ்ச்சிக்கு வரச் சொல்ல, பத்து முறை போன் செய்தவர்கள். வெளியாகாது என்று தெரிவிக்க ஒரு போனாவாது செய்திருக்கலாம் அல்லாவா..?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார தத்துவம்
கடல் எல்லாருக்கும் பொதுவானது. சில பேர் முத்துக்களூம், சில பேர் மீன்களையும், சிலபேர்கள் கால்களைமட்டும் நினைத்து கொண்டும் வருவார்கள். அது போலத்தான் வாழ்க்கையும், எல்லாமே இருக்கிறது நீ தான் முடிவெடுக்க வேண்டும் எதை எடுப்பது  என்று.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
நட்புக்கும் காதலுக்கும் என்ன வித்யாசம்?
வீட்டிலேர்ந்து டாஸ்மாக்குக்கு கூட்டிட்டு போறது காதல். டாஸ்மாக்கிலேர்ந்து பத்திரமா வீட்டிற்கு கூட்டிட்டு போறது நட்பு.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஜோக்
பிச்சைகாரன்1 : நான் நேத்து ராத்திரி தாஜ் ஹோட்டல்ல அருமையான டின்னர் சாப்பிட்டேன்
பிச்சைக்காரன்2: எப்பூடி?
பிச்சைக்காரன்1 : ஒரு ஆளு எனக்கு 100 ரூபாய் பிச்சைப் போட்டான். நான் அதை எடுத்துட்டு போயி 5000 ரூபாய்க்கு சமமான சாப்பாட்டை ஆர்டர் பண்ணி சாப்பிட்டு பில் வந்தவுடனே காசில்லைன்னு சொன்னேன். அவங்க போலீஸுக்கு போன பண்ணி வரச்சொல்ல, அவன் வெளியே கூட்டிட்டு ஸ்டேஷனுக்கு போற வழியில கையில இருந்த 100 ரூபாவ கொடுத்தேன் அவன் விட்டுட்டான். வாழ்க போலீஸ்..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
தமிழ் மூலம் ஹிந்தி கற்பது எப்படி?
Duniya me koyi nahi
உலகத்தில கோழி இல்லை.
Koyi baath nahi
கோழி குளிக்கிறது இல்லை.
Tumbi mere saath aao
தும்பி செத்துருச்சு.
uthar pakdo
பக்கோடா அங்க இருக்கு.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார விளம்பரம்
ஒரு பியருக்கான விளம்பரம். நிச்சயம் கடைசியில் சிரிக்காமல் இருக்க மாட்டீர்கள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார குறும்படம்
உருகுவே நாட்டிலிருந்து கேன்ஸில் பங்கு கொண்ட படம். மனித உறவுகள் எவ்வளவு நுட்பமானது அதை கம்ப்யூட்டர் எப்படி ஆக்கிரமிக்கிறது என்பதை பற்றிய படம்.. வசனமேயில்லாமல் வெறும் காட்சிகளாலேயே ஒரு வெறுமையை உணர வைத்திருப்பது டச்சிங்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஏ ஜோக்
சொர்க்கத்தின் வாசலில் மூன்று இளைஞர்கள் நின்றிருக்க, வாசலில் நின்றிருந்தவர், “உங்களில் யார் மிகவும் நல்லவராக உங்கள் மனைவியிடம் நடந்து கொண்டிருக்கிறீர்களோ அவர்களுக்கு ஒரு சிறந்த வாகனம் தரப்படும் என்றார்.
நம்பர்1 : நான் இதுவரை என் மனைவிக்கு துரோகம் செய்ததே இல்லை என்றான். அவனுக்கு ஒரு ரோல்ஸ்ராயஸ் காரை கொடுத்து போகச் சொன்னார்.
நம்பர்2 : நான் மிகவும் குறைந்த முறையே என் மனைவிக்கு துரோகம் செய்திருக்கிறேன் என்றான். அவனுக்கு ஒரு ஹோண்டா சிட்டி காரை கொடுத்து போகச் சொன்னார்.
நம்பர்3 : நான் என் மனைவிக்கு நிறைய முறை துரோகம் செய்திருக்கிறேன் என்றவுடன் அவனுக்கு ஒரு ஸ்கூட்டரை கொடுத்து போக சொன்னார்.
அடுத்த நாள் ஸ்கூட்டரில்  ரோல்ஸ் ராயஸ் வைத்திருப்பவன் அழுது கொண்டே வந்து கொண்டிருக்க, அவனை பார்த்த தேவன் “ஏன் அழுகிறாய்? உனககுதான் நல்ல அருமையான கார் கொடுத்தேனே? என்று கேட்க, “என் மனைவியை இங்கு ரோலர் ஸ்கேட்டரில் பார்த்தேன்.” என்றான்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Comments

கொத்து அருமை கேபிள்ஜி....
கலக்கல் ஜோக்ஸ்..
முக்கியமா நட்புக்கும் காதலுக்கும் என்ன வித்யாசம்?
அற்புதம்.....
iniyavan said…
//ஏன் போடவில்லை என்பதுக்கான காரணம் எங்களுக்கு புரிந்தாலும்,//

என்ன காரணம் கேபிள்? உங்களுக்கு தெரிந்தால் போதுமா? எங்களுக்கு தெரிய வேண்டாமா?
அந்த புது மால் எந்த ஏரியா?
@சீனு
நன்றி

@என்.உலகநாதன்
இருங்க விரைவில் சொல்றேன்.. தலைவரே..

@ரமெஎஷ் ரொம்ப நல்லவன்
ராயப்பேட்டை மணிகூண்டுக்கு அருகில்.
தராசு said…
அடப் பாவிகளா, ரோட்டையும் சுரண்டறாங்களா......
Unknown said…
//சென்னையில் புதியதாய் மக்களின் புழக்கத்திற்காக திறக்கப்பட்டிருக்கும் புதிய மால் எக்ஸ்ப்ரஸ் எஸ்டேட் //

கேபிள், அது எக்ஸ்ப்ரஸ் அவன்யு.. எக்ஸ்ப்ரஸ் எஸ்டே இல்ல...
Unknown said…
இந்த சுரண்டிய சாலைகளில் விழாமல் வண்டியோட்டும் சாகசம்.. ஒரு திரிலான அனுபவம்..

குறும்படம் மாற்று விளம்பரம் வழக்கம்போல் ரசித்தேன்...

ரோலர் கோஸ்டர் கணவனுக்கு என் அனுதாபங்கள்...
@ezhil

அதன் பழைய பெயர் எக்ஸ்பிரஸ் எஸ்டேட்தான் அதான் பழக்க தோஷத்தில் எழுதிவிட்டேன். மாற்றியாகிவிடட்து எழில் நன்றி.
a said…
பிச்சைக்காரன் ஜோக் அருமை....

//
ஏன் போடவில்லை என்பதுக்கான காரணம் எங்களுக்கு புரிந்தாலும்
//
எங்களுக்கு புரியல கேபிள்ஜி,.....
கொத்து சூப்பர் டேஸ்ட்.
அண்ணே... சூப்பரோ சூப்பர்...
அருமையான தொகுப்புகள்.
ரோடு - நம்ம ஊர்ல அவ்வளவு சீக்கிரமா திருந்திடப்போறாங்க?

பணம் - என்ன பிரச்சனை?

நீயா! நானா! - என்ன ஆச்சு?

தத்துவம், வித்தியாசம், ஜோக் - எல்லாம் சூப்பர்.

மொத்த்தில் சுவை. :-)
Chandru said…
நீங்கள் பங்கு பெற்ற நீயா நானாவின் தலைப்பு என்னங்க?
@chandru

அதெல்லாம் எங்க சொன்னாங்க.. அது தெரிஞ்சா ஒழுங்கா ப்ரோக்ராம் போட்டிருக்க மாட்டாங்களா?
Chandru said...
நீங்கள் பங்கு பெற்ற நீயா நானாவின் தலைப்பு என்னங்க?

//


”கணிணி தொழில்நுட்பம் மனிதனை அடிமையாக்குகிறதா?”
அண்ணே.. உங்களூக்கு புரிஞ்சது.. அவங்களுக்கு புரியலை போலருக்கு..:)
Cable sir ellam super , But "DATE" than edikuthu kojam chk pannuga.
@சிவகுமார்
நன்றி சிவகுமார்..சரி செய்துவிட்டேன். மிக்க நன்றி
// Cable Sankar said...

அண்ணே.. உங்களூக்கு புரிஞ்சது.. அவங்களுக்கு புரியலை போலருக்கு..:)

//


ஹா..ஹா..

கேபிள் அண்ணே, அவங்க நடத்துன நிகழ்ச்சியை வச்சு தலைப்பு இப்படித்தான் இருக்கும்னு நானா முடிவு பண்ணிக்கிட்டேன் :))
யாசவி said…
அடப்பாவிங்களா தலைப்ப கூட சொல்லாமாத்தான் நிகழ்ச்சி நடத்தறாங்களா?
Paleo God said…
தலைவரே கொத்து சூப்பர்னு சொல்ல முடியல..

பிரச்சனைகள் வரும் போகும், விடுங்க எல்லாம் சீக்கிறம் சரியாக எல்லா வல்ல இறைவன், இயற்கை, செயற்கை, சைன்ஸ்னு எல்லார்கிட்டயும் வேண்டிக்கிறேன்! :))
Jana said…
அடடா..நீயா நானாவும்!!!!!! அப்படித்தானா????
முதலில் உங்க பேரை பஸ்ஸில் கேபிள் சங்கருன்னு மாத்துங்க, ரொம்ப கொழப்பமா இருக்கு, பாதி நாள் நீங்கன்னு நினைச்சு வேறு ஒரு சங்கர் நாராயணன் கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்:(((


அப்புறம் அந்த குறும்படத்தில் சாம்பலை ஒரு குறீயிடாகவும், நெருப்பை ஒரு குறீயிடாகவும்.நெருப்பில் போட்ட பழங்களை ஒரு குறீயிடாகவும் பார்த்தேன்..:)))மிகவும் அருமையாக இருந்தது. இப்பொழுது நான் எந்த ஸ்டேஜில் இருக்கேன்?
Sukumar said…
டுடே... நைஸ் கொத்து...
அப்போ சத்யம் தியேட்டர் இடம் மாறுகிறதா...
Jokeil aetho oru confusion iruppathaga padukirathu enakku... appadiya???
Kolipaiyan said…
ட்புக்கும் காதலுக்கும் ...
அற்புதம்!!!
பி.வி.ஆர்ரே இப்ப தான் போனேன்...
எக்ஸ்பிரஸ் அவன்யு போக இன்னும் நாளாகும்...
தியேட்டர் தொறந்த ட்ரை பண்ணலாம்....
ஹிந்தி கத்துக்கிட்டேன் தல!! விழுந்து விழுந்து சிரித்ததில் மறந்து போச்சு!! soooper அசத்துங்க>>
Ŝ₤Ω..™ said…
அண்ணே.. இந்த கொத்து போதலயோன்னு தோணுதுண்ணே..
ஏ ஜோக் பகுதியில் இந்த வாரம் ஏஜோக் வரலயே ஏன்???
சுவையான கொத்து பரோட்டா தலைவரே!
dearbalaji said…
வீட்டிலேர்ந்து டாஸ்மாக்குக்கு கூட்டிட்டு போறது காதல். டாஸ்மாக்கிலேர்ந்து பத்திரமா வீட்டிற்கு கூட்டிட்டு போறது நட்பு.
****SUPER****
க ரா said…
கொத்து அருமை... பிச்சைகாரன் ஜோக் சூப்பர் :)
உலகிலேயே, சென்னையில் தான் பார்க்கிங் கட்டணம் குறைவாம். டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியை பாருங்கள்!!

Chennai is cheapest city in world to park
பழைய சாலையை சுரண்டி எடுத்துவிட்டு புதிய சாலை போடுவதுதான் இங்குள்ள வாடிக்கை. நமது ஊரிலும் அதுபோல செயல்படுத்த முடிவெடுத்திருப்பது நல்ல ஆரம்பம்.

கொத்து பல புதிய செய்திகளோடு மிளிர்கிறது தலைவரே.
antha ad arumai..

pichaikaaran joke ku enna solla .. police dept kannula ratham thaan varum padichaa :)

kothu total kalakal
அருண் said…
வித்தியாசம் சூப்பர்,தலைவா இத இலங்கையிலயும் வைரஸ் மாதிரி பரப்பிடுறேன்.
butterfly Surya said…
கேபிள்,Cool....

நாம் பங்கு பெற்ற நீயா நானா ஆகஸ்டு 22 அல்லது 29 ஒளிப்பரபாகுமாம்.

லூஸ்ல விடுங்க...
R.Gopi said…
சங்கர்ஜி

கொத்து அருமை....

//Sukumar Swaminathan said...
டுடே... நைஸ் கொத்து...
அப்போ சத்யம் தியேட்டர் இடம் மாறுகிறதா... //

இப்போது இருக்கும் தியேட்டர் காம்ப்ளக்ஸ் அப்படியே இருக்க, இந்த எக்ஸ்பிரஸ் மால் அடிஷனல் தானே ஜி?
குசும்பன் said...
//மிகவும் அருமையாக இருந்தது. இப்பொழுது நான் எந்த ஸ்டேஜில் இருக்கேன்?
//

வீட்ல‌ அண்ணி எப்போ பாத்தாலும் க‌ம்ப்யூட்ட‌ர் ல‌ யே உக்காந்து இருக்காங்க‌ளா அண்ணே
@தராசு
சுரண்டறதுன்னு முடிவு செய்த பொறவு.. ரோடாயிருந்தா என்ன? மக்களாயிருந்தாஎன்ன?

@கே.ஆர்.பி.செந்தில்
நன்றி
@வழிப்போக்கனின் கிறுக்கல்கள்
இருங்க அத தனியே ஒரு பதிவு போட்டு சொல்றேன்

@எம்.எம்.அப்துல்லா
நன்றிண்ணே

@இராகவன் நைஜிரியா
நன்றிண்ணே

@பித்தன்
நன்றி

@ரோச்விக்
ஆரம்பிச்சிருக்காங்க
போன்ல சொல்றேன்
அது அவ்வளவுதான்
நன்றி
நன்றியோ நன்றி..
@யாசவி
அத விடுஙக..

2ஷங்கர்
:(

@ஜனா
புரியலை

@குசும்பன்
மாத்திடறேன்

@நாளைப்போவான்
அதெல்லாம் இருக்கட்டும். நாளைக்கு எங்க போவீங்க..?:)

@ஜெட்லி
அடுத்த மாசம் தான் திறக்குது..

@எம்.அப்துல் காதர்
நன்றி
@சென்
அப்படியா.. அவ்வ்வ்வ்

@ரவிச்சந்திரன்
நன்றி

@டியர் பாலாஜி
நன்றி

@இராமசாமி கண்ணன்
நன்றி

தனிக்காட்டு ராஜா
நன்றி
@சாந்தப்பன்
அது கவர்மெண்ட் பார்கிங் பத்தி போட்டிருக்காங்க தலைவரே..

@செ.சரவணக்குமார்
நன்றி

2இரகுராமன்
நன்றி

@ச.அருண்பிரசாத்
நன்றி

@பட்டர்ப்ளை சூர்யா
லூஸ்ல விட்டுத்தானிருக்கோம்

@கோபி
நன்றி

ஆமாம் இது புது காம்ப்ளெக்ஸ் பழசு அப்படியே இருக்கும்
@சிவகாசி மாப்பிள்ளை
காலையில வரைக்கும் நான், மத்யானம் கொஞ்ச நேரம் மீண்டும் நான், நடு ராத்திரிக்கு மேல் நானேதான். மீத நேரத்தில் என் மனைவி, பசங்கள்.
/தமிழ் மூலம் ஹிந்தி கற்பது எப்படி?
Duniya me koyi nahi
உலகத்தில கோழி இல்லை.
Koyi baath nahi
கோழி குளிக்கிறது இல்லை.
Tumbi mere saath aao
தும்பி செத்துருச்சு.
uthar pakdo
பக்கோடா அங்க இருக்கு. /

பாத்து..நிதானமா ஹிந்தி கத்துக்கோங்க!

பக்கொடாவைப் பொட்டலமாப் பேப்பரில் கட்டிக் கொடுத்துவிடப்போகிறார்கள்!
Veeraraghavan said…
Dear Shankar Anna

I've been reading your blogs for an year or so now. I like the Hindi to Tamil jokes, had a good laugh. I shared them in facebook and I did try some telugu to tamil & kannada to tamil. You may like it. Thanks

telugu to tamil for anand swAmi : well, I'm trying :)

aayi poyindhA : aai poneergala ;-) ஆய் போனீர்களா ?! lols

meeru seppandi : neengal seppu pOnra(vargal) manam udayavargal : நீங்கள் செப்பு போன்ற மனம் உடையவர்கள்

ella unnAru : ellu irukkA or ellai(border)enga irukku : எள்ளு இருக்கா ?! OR எல்லை எங்க இருக்கு ?!

nachundhA meekku : ungalukku nachu (visham) irukkA ?! :உங்களுக்கு நச்சு(விஷம்) இருக்கா ?!

nEnu chood lEdhu : nAn soodA illai : நான் சூடா இல்லை !

Let's try kannadA too :D ROTFL

hEl bEk alvA : alvAnu sollanum : அல்வானு சொல்லணும்

yAkkE yEn aayithu : udambukku(yAkkai) enna aachu : உடம்புக்கு(யாக்கை) என்ன ஆச்சு

odi bEdA :udaikka vEnAm : உடைக்க வேணாம்

chennA hidhirA : chennA(chick peas) irukkA ?! OR Chennai irukkA ?! :சென்னை/சென்னா இருக்கா

bEk aayithA : kirukku(bEkku) aayittiyA ?! : பேக்கு ஆயிட்டியா ?! Or loosAppA nee ?!லூஸாப்பா நீ

Oyittu bAnni : vella panni : White pig : வெள்ளை பண்ணி