Maryada Ramanna

maryadramannareview தெலுங்கு திரையுலகின் கமர்ஷியல் ஹிட் மேக்கர் எஸ்.எஸ்.ராஜ்மெளலியின் படம் என்றாலே பெரிய எதிர்ப்பார்ப்புக்கு ரசிகர்கள் தயாராகிவிடுவார்கள். அதுவும் தெலுங்கு மெஹா ஹிட்டான மகதீராவுக்கு பின் வரும் படம் எனும் போது எதிர்பார்ப்புக்கு குறைவேயிருக்காது. இப்போது முதல் முறையாக காமெடி நடிகர் சுனிலை கதாநாயகனாக்கி ஒரு முழு நீள காமெடி கலந்த செண்டிமெண்ட் படத்தை கொடுத்திருக்கிறார்.

ராமனின் அப்பா ராயலசீமாவில் நடக்கும் ஊர் பிரச்சனையில் கொல்லப்பட, ராமனை காப்பாற்ற ஹைதராபாத்துக்கு வந்து செட்டிலாகிறாள் அவனுடய அம்மா. அம்மாவின் மறைவிக்கு பிறகு மிகவும் கஷ்டப்படும் ராமனுக்கு அவனது கிராமத்திலிருந்து ஒரு நோட்டீஸ் வருகிறது. 5 ஏக்கர் நிலத்தை வந்து பெற்றுக் கொள்ளும்படி வர, சந்தோஷமாய் ரயிலில் ஊருக்கு கிளம்புகிறான். ரயிலில் அபர்னாவை  சந்திக்கிறான், அவளின் அப்பா ராமநீடு ரொம்ப வருஷமாக ராமனை கொல்ல காத்திருக்கிறான். ஏனென்றால் ராமனின் அப்பாதான் ராமநீடுவின் தம்பியை ஊரில் நடக்கும் பிரச்சனையின் போது கொன்றுவிடுகிறார். அதற்கு பழி வாங்க காத்திருக்கிறார் அபர்ணாவின் தந்தையான ராமநீடு. ஊருக்குள் வந்து அபர்ணா விட்டுப் போன புத்தகத்தை கொடுப்பதற்காக அவளின் வீட்டிற்கு வரும் ராமனுக்கு தெரிய வருகிறது தன்னை அவளுடய அப்பா கொல்ல காத்திருக்கிறார் என்று. அவருக்கு ஒரு பழக்கம் தன் வீட்டிற்கு விருந்தாளியாய் வந்தவர்களை எக்காரணம் கொண்டு வீட்டில மனவருத்தம் ஏற்படக்கூடாது என்றும், வீட்டை விட்டு வெளியே கால் வைத்ததும், அவனை வெட்ட ஏற்பாடு செய்திருக்க.. இது தெரிந்த ராமன் வீட்டை விட்டு வெளியேறாமல் பிரச்சனைகளை பெரிதாக்குகிறான். அவன் தப்பித்தானா? அவனுக்கும், அபர்ணாவுக்குமான காதல் என்னாயிற்று என்பதை சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்கள்.
maryadramannareview2 முழுக்க முழுக்க இது ஒரு இயக்குனரின் படம். பெரிய பட்ஜெட் படங்களை மட்டுமே இயக்கி வந்த ஒரு சூப்பர்ஹிட் இயக்குனர். ஒரு காமெடியனை ஹீரோவாக்கி ஒரு முழுப் படத்தை இயக்கியிருப்பது அவரது திறமையையே காட்டுகிறது. படத்தில் கிட்டத்தட்ட, ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஒரு வீட்டை சுற்றியே கதை ஓடினாலும் கொஞ்சம் கூட அலுக்க வைக்காமல், சும்மா விறுவிறுவென நகைச்சுவையுடன் திரைக்கதையமைத்து தூள் பரத்தியிருக்கிறார்.

ss-rajamouli-maryada-ramanna-287x300
ரயில் காட்சியில் ராமனுக்கும், அபர்ணாவுக்கும் இடையே மலரும் நட்பும், லேசாய் துளீர்க்கும் காதலும் க்யூட்.. ஓடும் ரயிலில் ஏற அபர்ணா ஓடிவர, அவரை கைபிடித்து தூக்குகிறேன் என்று கைநீட்டி ராமன் பிளாட்பாரத்தில் கீழே விழுவதில் ஆரம்பித்து, எதையும் கிண்டல் செய்யும் எதிர் சீட்டுக்காரன், இளநீர் வாங்குகிறேன் என்று ரயில் கிளம்பும் சமயம் வரையில் பேரம் பேசிவிட்டு இளநீரை வாங்க, ஜன்னலுக்கு வெளீயே இளநீர் மாட்டிக் கொள்ள உள்ளே இழுக்க அவர் ப்ரயத்தன படும் இடம், என்று  மிக இயல்பான  நகைச்சுவையை தூவிக் கொண்டே சென்றிக்கிறார் இயக்குனர்.

கீரவாணியின் இசையில் தெலுகு அம்மாயி, உட்பட இரண்டு மூன்று பாடல்கள் சுவையான மெலடி. பின்னணியிசையிலும் மனிதர்  ஒரு இம்பாக்டை கொடுத்திருக்கிறார்.

ஒரு படத்தை முழுக்க, முழுக்க தன்னுடய நடிப்பால் ஈடு கொடுத்து நிற்க வைத்திருக்கிறார் சுனில். உடல் இளைத்து, சேசிங் காட்சிகளில் ஓடியும், மிக இயல்பான பயம், கல்வரம், காமெடி என்று பல விஷயஙக்ளை கொடுத்து இயக்குனரின் நம்பிக்கைக்கு ஈடு கொடுத்திருக்கிறார் என்றே சொலல் வேண்டும்.
m1

அபர்ணாவாக சலோனி மிக
அழகான எக்ஸ்பிரஸிவான பெரிய கண்கள், சட் ச்ட்டென முகபாவங்கள் கொடுக்கிறார். தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள அபர்ணாவின் வீட்டில் தங்க போராடும் ராமனை பார்த்து, அவளுடய மாமா அவன் உன்னை காதலிக்கிறான் அதை சொல்லத்தான் என்று அபர்ணாவிடம் சொல்ல, ஒரு கட்டத்தில் அவளின் காதல் அப்பாவுக்கு  என்ற அர்த்தத்தில் அபர்ணா “அப்பாவுக்கு தெரிஞ்சிருச்சு” என்று சொல்ல, ராமன் தான் தான் அவர்களுடய எதிரியின் பையன் என்பது அவளது அப்பாவுக்கு  என்று  புரிந்து கொண்டு “ஆமாம் தெரிஞ்சிருச்சு” என்று சொல்வது, க்ளைமாக்ஸில் காதலை சொல்லி புரிந்து கொண்டு ராமன் பேசும் வசனங்கள் நச்.

வழக்கமான ஊர் பெரியவர், அவரது, ராயலசீமா, கிராம தகராறு, பழிக்கு பழி, லாஜிக் மீறிய காட்சிகள்  என்று ஒரு வித மான டெம்ப்ளேடுக்குள் இருந்தாலும், நகைச்சுவையுடன் கூடிய ஒரு எண்டெர்டெயினரை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜ மெளலி.

தமிழ் சினிமாவின் காமெடியன்களுக்கு ஒரு சரியான படம்..  விவேக்கோ, கருணாஸோ, நிச்சயம் முயற்சிக்கலாம்.
Maryada Ramanna- A Feel good Entertainer.
கேபிள் சங்கர்

Comments

Unknown said…
விவேக்குக்கு ராசியில்லை கருணாஸ் ஓகே..
thamizhparavai said…
போகலாம்னு நினைச்சேன், தில்லாலங்கடிக்குள்ள நுழைஞ்சிட்டேன்... பார்க்கலாம்...ஆவல் தூண்டும் விமர்சனம்...
butterfly Surya said…
தெலுங்கு கொஞ்சம் முன்னேறுதா கேபிள்..? பார்க்கலாம் போல இருக்கே...

என்னுடைய Tamil bloggers forum mails bouncing back. Plz see cable..
Unknown said…
இந்த படம் frame-to -frame சுட்டது என்று தெலுகு தேசமே பேசுதே ராசா ..உங்களுக்கு தெரியாதா?
Original movie IMDB Link http://www.imdb.com/title/tt0014341/ (1923 -இல் வந்த உண்மை கதையை வைத்து எடுத்த படமாம் !!!)
ராஜ்மெளலி தெரிஞ்சே இந்த படம் எடுத்தாரா இல்ல அவருக்கே தெரியாம கதாசிரியர் கவுத்திட்டாரானு தெரியவில்லை .
அம்மாக்கண்ணு.. இது our hospitality என்கிற படத்தை தான் உல்டா செய்திருக்கிறார்கள் என்று தெரியும். என்னை பொருத்த வரை கோழி குருடா இருந்தா என்ன? குழம்பு ருசியா இருக்கான்னுதான் பாப்பேன் ராசா..:)
Jackiesekar said…
அவசியம் பாத்துடறேன்...
பார்க்கணும்... ஆனால் ஏற்கனவே சுனில் ஹீரோவா
ஒரு படம் பண்ணி இருக்கார்னு நினைக்கிறேன்...
ஜெமினி டிவியில் விளம்பரம் பார்த்ததாக நியாபகம்....
King Viswa said…
//ஆனால் ஏற்கனவே சுனில் ஹீரோவா
ஒரு படம் பண்ணி இருக்கார்னு நினைக்கிறேன்...
ஜெமினி டிவியில் விளம்பரம் பார்த்ததாக நியாபக//

சுனில் ஏற்கனவே அந்தாள ராமுடு என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.நான்கு / ஐந்து வருடங்களுக்கு முன்பு வந்த படம் அது.

முக்கியமான மேட்டர்: தமிழில் லிவிங்க்ஸ்டன் நடித்து வந்த சுந்தர புருஷன் படத்தின் தெலுகு ரீமேக் தான் அது.
Anonymous said…
கேபிள் சங்கர் ....அம்மாகண்ணு குடுத்த லிங்க் ஆ போய் பார்த்த அப்புறம் படத்தோட பேர நாங்களும் சொல்லுவோம்...மீசை ல மண் இருக்கான்னு பாரு ராசா.....
@சாமி
அதுக்கு முன்னாடியே தெரியும்.. ஏற்கனவே ஆந்திராவில் வரும் பத்திரிக்கை எல்லாவற்றிலும்.. இணையதளங்களில் பேசப்பட்டு கொண்டிருக்கும் விஷயம் சாமி.. எனக்கு அம்மா கண்ணு சொல்லித்தான் தெரிந்தது என்றால் அதை ஆமாம் என்று சொல்வதில் எந்தவிதமான ஈகோவுமில்லை.. நீங்கள் தான் அம்மாக்கண்ணு என்றால்.. உங்களுக்கு ஒரு இன்பர்மேஷன்..வேணாம் விடுங்க..
Katz said…
லொள்ளு சபா ஜீவா நடிக்கலாம்.
Thala,

Company kedaikkalea inga pakka.
Neenga indha weekend vaanga sendhu povom.
Sollunga enga book panna..PVR,INOX,PALLAVI..?

I'm a very big fan of SUNIL, such a nice and very timing comedies actor.

Thala, suniloda "ANDHALA RAMUDU (Namma oor SUNDHRA PURUSHAN)" pathu irukeengala, Enna ma dance panni iruppar theriyuma. Andha dance-gavea naan DVD vangi vachi irukkean.

Sari Eppo Vareenga...? Ticket Book pannatuma..?

Cheers...
அடடா.......கொல்டி நான் பெல்டி யாடுறேன்....வணக்கம் தல...
சுனில் ஏற்கனவே அந்தாள ராமுடு என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.நான்கு / ஐந்து வருடங்களுக்கு முன்பு வந்த படம் அது.

முக்கியமான மேட்டர்: தமிழில் லிவிங்க்ஸ்டன் நடித்து வந்த சுந்தர புருஷன் படத்தின் தெலுகு ரீமேக் தான் அது.
///

repeattuu,......
nalla vimarsanam..paarthuduren :)
தேடித்தேடிப் பிடிக்கறீங்களே.நல்ல விமர்சனம்
Thamira said…
பாக்க வேண்டிய தமிழ்படங்களே இன்னும் நிறைய இருக்குதே பாஸ்.. என்னைக்கு இதெல்லாம்.?
JS RAMKUMAR said…
ஹாய் கேபிள் அண்ணா

விமர்சனம் மிகவும் அருமை...

ஆனால் ஹீரோவின் அறிமுக காட்சியிலும் , கிளைமாக்ஸ் காட்சியிலும் தூள் பரத்தியிருக்கும் " ஓட்டை சைக்கிள் " ( அதற்கு வாய்ஸ் கொடுத்துருப்பது ரவி தெஜவா ??????) பற்றி ஒரு வார்த்தை குறிப்பிட்டு எழுதி இருந்தால் மிகவும் சந்தோசமாக இருந்திருக்கும்