சென்ற வெள்ளி அன்று காலையிலிருந்து வேறொரு இடத்திலும், இரவு பீச் ரோட் விவேகானந்தா இல்லம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அடுத்த நாள் காலை 5 மணி வரை படப்பிடிப்பு நடந்தது. இரவில் பதினோரு மணிக்கு பிறகு, அங்கு யாருடய வண்டியையும் வைக்க அனுமதிப்பதில்லை, போலீஸார். பீச்சில் படுப்பவர்களை கூட எழுப்பிவிடுகிறார்கள். பீச் மிகவும் அழகாக்கப்பட்டு, நல்ல கொரியன் லாண்ட் ஸ்கேப் எல்லாம், செய்யப்பட்டு, டைல்ஸுகளால் பளபளக்க வைத்திருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு செய்தவர்கள் இருபதடிக்கு ஒரு குப்பை தொட்டியை வைத்திருக்கலாமே..? அன்று இரவில் படப்பிடிப்புக்காக கொண்டு வரப்பட்ட சாப்பாட்டு மிச்சங்கள், டீ, காபி பேப்பர்கள் எல்லாமே குப்பை தொட்டி என்று ஒன்று இல்லாததால் கண்ட இடத்தில் போடப்பட்டது. எங்கள் குழுவினருடன் நான் இதை சொல்லி, வேண்டுமானால் ஒரு கோணிப்பையில் எல்லாவற்றையும் சேகரித்து பின்பு குப்பை தொட்டியை தேடி போடலாமே என்று கேட்ட போது.. “வேலைய பாத்துட்டு போங்க சார்.. கவர்மெண்ட்டுக்கே அக்கறையில்லை.. நீங்க பெருசா கவலைப் பட்டு..”என்றனர். அரசு இவ்விஷயத்தை எடுத்துக் கொண்டு கடற்கரை எங்கும் குப்பை தொட்டிகளை இருபதடிக்கு ஒன்று என்ற விகிதத்தில் நிறுவுமா..?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தெரிந்தே பாழும் கிணற்றில் விழுவது என்பது போல நானும் கே.ஆர்.பியும் நேற்று சென்னையின் புதிய அடையாளமாய் தோன்றியிருக்கும் எஸ்கேப்பில் படம் பார்க்க சென்றோம். பாழும் கிணறு என்று சொன்னது தியேட்டரை அல்ல. எல்லா படங்களும் புல்லாகிவிட்டதால் தேடி வந்த கொம்மரம்புலி சனியனை விலை கொடுத்து வாங்கினோம். எஸ்கேப்பில் பிளேஸ் என்ற அரங்கில் படம் பார்த்தோம். நல்ல ஒளி, ஒலி அமைப்பு, மற்றும் சீட்டிங், ஆளில்லாத ஓப்பன் டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன். ஒவ்வொரு வரிசையிலும், ஒரு கார்னர் மட்டும் இரட்டை சீட்டுகள். கடைசி வரிசை மட்டும் புஷ்பேக் சுவற்றில் முட்டுகிறது. அதனால் ப்ளேஸில் ஏ ரோ கிடைத்தால் போக வேண்டாம். மற்றபடி டிக்கெட் விலையை விட பாப்கார்ன், டிரிங்கின் விலை அதிகமாய் இருக்கிறது. அதை விட அநியாயம் பைக் பார்க்கிங் டிக்கெட்.. 60 ரூபாய். சினிமா விளங்கிடும்.

இணையத்தில் எங்கும் பார்த்தாலும் எந்திரன் ஓடுமா? ப்ளாப் ஆகும் எந்திரன். எந்திரன் வியாபாரம் என்று ஆளாளுக்கு ஒரு எந்திரன் பேர் போட்ட ஒரு பதிவை போட்டு வருகிறார்கள். நம்ம சுரேஷ் கண்ணன் கூட எந்திரன் F.A.Q என்கிற பெயரில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில் சீனிவாசன், மோகன்லால் நடித்த ஒரு படத்தை பற்றி ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார். எது எப்படியோ சன் டிவியை பொறுத்த வரை இப்படத்தை பற்றி, நல்லதாகவோ, கெட்டதாகவோ பேசிக் கொண்டிருந்தால் அவர்களூக்குத்தான் ஆதாயம். நம் ஆட்களும் எந்திரன் தலைப்பிட்டு எழுதினால் ஹிட்ஸ் வரும் என்று ஆளாளுக்கு எழுதி விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.. அதை பற்றி தேவையில்லாம எழுதி எதுக்கு அவஙக்ளுக்கு இலவச விளம்பரம் கொடுக்கணும். அடச்சே.. நானும் இதை பத்தி எழுதி விளம்பரம் கொடுத்திட்டனோ..? ஹி..ஹி..ஹி..
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
சமீபத்தில் வெளியான தெலுங்கு பவர் ஸ்டாரான பவன் கல்யாணின் கொம்மரம் புலி படத்தின் ரிசல்ட் மொக்கை என்று தீவிர பஞ்சுமுட்டாய் கலர் சட்டை போடும் தெலுங்கு ரசிகன் கூட சொல்லிவிட்டாலும் தன் முதல் வார கலெக்ஷன் சுமார் பதினைந்து கோடியாம். இதற்கு முன் வந்த பவன் கல்யாணின் ஜல்சா ஒரு தோல்வி படம் தான் ஆனால் வசூலில் பின்னி எடுத்தது முதல் மூன்று நாட்களில். அப்படம் ரிலீசான போது விஜயவாடாவில் இருந்தேன் அங்கிருந்த மொத்த திரையரங்குகளீல் 70 சதவிகித தியேட்டர்களில் ஜல்சா படம் தான் ஓடியது. பின்பு ஏன் கலெக்ஷன் செய்யாது. இப்போது யோசியுங்கள் எந்திரன் கலெக்ட் செய்யுமா? செய்யாதா? என்று..
###################################################################
இந்த வார தத்துவம்
வாழ்க்கையில ஜெயிக்கணும்னா நண்பன் தேவை.. எப்பவுமே ஜெயிச்சிட்டிருக்கணுமின்னா ஒரு நல்ல எதிரி தேவை.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார குறும்படம்.
ஒரு குட்டி காதல் கதையை மூன்று நிமிஷங்களில் ஒரு சிகரெட்டின் வாழ்நாளில் சொல்லி முடித்திருக்கிறார்கள்.

இந்த வார விளம்பரம்
இப்படத்தில் வரும் பாடலை தமிழில் நீங்கள் எங்காவது கேட்டிருந்தால் அதற்கு இந்த விளம்பர இசையமைப்பாளர் பொறுப்பல்ல..
###################################################################
அடல்ட் கார்னர்
ஒரு பெண்ணின் டீஷர்ட்டில் எழுதப்பட மிக இண்ட்ரஸ்டிங்கான வாசகம்
எக்ஸ்க்யூஸ்மி.. என் முகம் மேலேயிருக்கிறது.
ஒழுங்காக படிக்காத பெண் மார்க் வாங்குவதற்காக தனியே ப்ரொபசர் ரூமுக்கு சென்று.. தயவு செய்து நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன் எப்படியாவது என்னை பாஸ் செய்துவிடுங்கள் என்றாள். அதற்கு ப்ரொபஸர் சிரித்தபடி.. அவளை அருகே அழைத்து.. முகத்தை மிக அருகில் இழுத்து, அவள் காதில் “ஒழுங்கா புக்கை எடுத்து படி” என்றாள்.
சர்தாருக்கு ப்ளட் டெஸ்ட் எடுத்த நர்ஸ் ரத்தத்தை எடுத்தவுடன் விரலை வாயில் வைத்து சப்பினாள். சர்தார் மகிழ்ச்சியில் டான்ஸ் ஆட, ஏன் டான்ஸ் ஆடுகிறாய் என்று நர்ஸ் கேட்டாள். சர்தார் குஷியாக.. அடுத்து எனக்கு யூரின் டெஸ்ட். என்றான்.

கேபிள் சங்கர்

Comments
எல்லாம் நல்லாயிருக்கு கேபிள்ஜி...!
கடற்கரை ல குப்பை தொட்டி வைச்ச ...பிறகு சுத்தம் செய்றோம் ன்னு சொல்லி காசு அடிக்க முடியாதுல ...அதான் வைக்க வில்லையோ என்னமோ
(வழக்கம் போல் இந்த தடவையும் நான் சின்ன வயசில் கேள்வி பட்ட ஜோக்கை தான் நீங்க போட்டு இருக்கீங்க ..பிறகு ஏன் அதற்கு அடல்ட் கார்னர் ன்னு பெயரு ???)
வாழ்க்கையில ஜெயிக்கணும்னா நண்பன் தேவை.. எப்பவுமே ஜெயிச்சிட்டிருக்கணுமின்னா ஒரு நல்ல எதிரி தேவை. //
தத்துவம் சூப்பர் :)
i m also see film in escape and the parking charge rs.50. Any one stop this ??
அந்த ஹாஷ்பிட்டல் அட்ரெஸ் கெடைக்குமா சார் ...
//அங்கிருந்த மொத்த திரையரங்குகளீல் 70 சதவிகித தியேட்டர்களில் ஜல்சா படம் தான் ஓடியது. பின்பு ஏன் கலெக்ஷன் செய்யாது. இப்போது யோசியுங்கள் எந்திரன் கலெக்ட் செய்யுமா? செய்யாதா?
எங்க ஊருல(அருப்புகோட்டை) மொத்தம் நாலு தியேட்டர் .. அதுல மூணு தியேட்டர்ல எந்திரன் ரிலீஸ் ஆக போகுதாம் .. ஒரு பத்து நாளைக்கு அருப்புகோட்டையிலும் அதை சுற்றி இருக்கும் ஊரிலும் வாழும் சினிமா ரசிகன் எந்திரந்தான் பார்த்தாக வேண்டும் ...(அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் )
Arumaiyana Thathuvam..
---------
நேற்று, நீங்களும் எஸ்கேபா??? அச்சச்சோ தெரியாம போச்சே.. நானும் அங்கன தான சுத்திட்டு இருந்தேன்.. பார்க்கிங்க்கு மட்டுமே சுழையா 130 ரூபா அழுதேன் நேற்று..
---------
எந்திரன் டிரெய்லரில் பார்த்த ஒரு டயலாக்:: என்னை நல்ல வழிக்கு பயன்படுத்துனா நான் நல்லது செய்வேன்.. தப்பான வழியில பயன்படுத்தினா.. (ரஜினி வாய்ஸில் சிரிப்பு)
இது ஊடகத்துக்கும் பொருந்தும்..
---------
தத்துவம் சூப்பர்ண்ணா..
---------
ஆனா கடைசியில் உங்கள் A joke வர வர நாட்டியா போகுது
விளம்பரம் ரசித்தேன்.
Nice post.
I don't know how to write comments using Tamil font.
When I tried the older links "Cinema Vyabaram", it says "Page Cannot be displayed"
Please resume the links.
Thanks......Bala
//தீவிர பஞ்சுமுட்டாய் கலர் சட்டை போடும் தெலுங்கு ரசிகன் கூட சொல்லிவிட்டாலும்// சரியான விமர்சனம்.
கொ.பொ. is good.