Thottal Thodarum

Sep 27, 2010

கொத்து பரோட்டா – 25/09/10

priya photo இந்த  குழந்தைக்கு வயது ஒன்பது. இவள் பெயர் ப்ரியா  இவளுக்கு பிறந்ததிலிருந்து சரியாக காது கேட்டதில்லை. இவளுடய மாமா என்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர். அவர் பெயர் கணேசன்.  ப்ரியா ஒரு மாற்று திறனாளிகள் பள்ளியில் படித்து வருகிறாள். இவளுக்கு Cochlear Implantation Surgery  செய்தால் நிச்சயம் கேட்கும் திறன் வந்துவிடும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான எலலா மருத்துவ சான்றிதழ்களையும், மருத்துவர்கள் பரிந்துரைகளையும் பார்த்தேன். இக்குழந்தைக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இந்த அறுவை சிகிச்சையை செய்யாவிட்டால் பின்பு எப்போதுமே செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட ரூபாய் ஒன்பது லட்சம். இவர்கள் முதல்வர் செல்லுக்கும் உதவி கோரியிருக்கிறார்கள். நாமும் நம் பங்கிற்கு உதவலாமே என்ற எண்ணத்தில் உங்களின் பார்வைக்கு வைத்திருக்கிறேன். எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு நம் பதிவுலகம் முன்னுதாரணமாய் இருந்திருக்கிறது. மேலும் இக்குழந்தையின் மருத்துவ சான்றிதழ்கள், மருத்துவர்களின் பரிந்துரை வேண்டுவோர்கள் என்னை தொலைபேசி எண்ணிலோ.. அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். உங்கள் உதவியால் ஒலி பெறப் போகும் ஒரு சிறுமிக்காக..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ஊரெங்கும் எந்திரன் பீவர் ஆரம்பமாகிவிட்டது. முதல் நாளே அங்கே புல் இங்கே புல் என்று சொன்னார்கள். சாரு வேறு என்னிடம் தான் டிக்கெட் கேட்க வேண்டும் என்று அவர் பதிவில் எழுதியிருந்தார். நான் இன்னும் டிக்கெட் வாங்கவில்லை. ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் டிக்கெட்டுக்காக முயலவில்லை. எப்படியும் யாராவது கொடுத்துவிடுவார்கள். எந்திரன் மூலம் மீண்டும் அரசின் விதிமுறையை மிக எளிதாக மீறியிருக்கிறார்கள். சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஏரியாக்கள் மட்டும் சுமார் 80க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் எந்திரன் வெளியிடப்படுகிறது. டுபாக்கூர் தியேட்டரில் எல்லாம் குறைந்த பட்ச டிக்கெட் விலை நூறு, நூற்றி ஐம்பது என்று கொள்ளையடிக்க  ஆரம்பித்துவிட்டார்கள்.  அரசு இதை கண்டு கொள்வதேயில்லை. ம்ஹும்.. எந்திரன் ஃபீவர் பற்றி படிக்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ராம் கோபால் வர்மா டைரக்டர்னு தெரியும். இப்போ பாடகரா அவதாரம் எடுத்திருக்கிறார். நம்ம சூர்யா நடிச்சு விரைவில் வெளிவர இருக்கும் ‘ரத்த சரித்ரா”வில் அவர் தெலுங்கு வர்ஷனில் பாடியிருப்பதாய் தகவல். பார்போம்.. சே.. சாரி.. கேட்போம்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ககாமினி சிறுகதை போட்டிக்கான கடைசி தேதி வருகிற அக்டோபர் பதினைந்தாம் தேதியோடு முடிகிறது. ஏற்கனவே பல கதைகள் வர ஆரம்பித்திருப்பது மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. மேலும் பல சிறந்த கதைகளை அனுப்பி நடுவர்கள் மண்டையை பிய்த்துக் கொள்ள வைப்பீர்கள் என்று நம்புகிறேன். கமான்…ஸ்டார்ட்.. மியூசிக்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீபத்தில் செய்திதாளில் பார்த்த செய்தி கொஞ்சம் கல் மனசையும் உருக்கத்தான் செய்யும். ஒரு தாய் பிறந்து பத்தே நாளான இரண்டு பெண் குழந்தைகளை பால் கொடுக்க போகும் போது ஒரு குழந்தையை கழுத்தை அறுத்தும், அவளுடய தாய் ஒரு குழந்தையை சுவற்றில் அடித்தும் கொன்றிருகிறார்கள். அதற்காக அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளித்திருக்கிறது கோர்ட். அமெரிக்காவில் தன் கணவனின் இன்ஷூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக, கூலிப் படை வைத்து, அவர்களை மயக்க, அவர்களுடன் உடல் உறவு கொண்டும், தன் பதினாறு வயது மகளை அவர்களுடன் உடல் உறவு கொள்ளச் செய்தும், அவர்கள் மூலமாக் தன் கணவனையும், மகனையும் கொலை செய்திருக்கிறாள். அவளுக்கு அமெரிக்காவின் கோர்ட் விஷ ஊசி கொடுத்து மரண தண்டனை கொடுத்து நிறைவேற்றியிருக்கிறது. அவளின் மரண தண்டனையை நிறைவேற்ற கூடாது என்று அமெரிக்கா எங்கும் மரண தண்டனையை எதிர்க்கும் ஆதரவாளர்கள் போர்கொடி ஏந்தினாலும். சென்ற வியாழன் அன்று நிறைவேற்றப் பட்டது. என்னை பொறுத்த வரை இவர்களை கொல்வது தப்பில்லை என்றே தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார தத்துவம்
வெற்றிக்கு பிறகு ஓய்வெடுக்காதே. ஏனென்றால் உன் அடுத்த செயல் தோல்வியடைந்தால், உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் என்று விடுவார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார விளம்பரம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார குறும்படம்
இன்ட்ரஸ்டிங்கான ஒரு சிறுகதை போன்ற குறும்படம். சில காட்சிகளில் டெப்த் இல்லாமல், நடிப்பவர்கள் சொதப்பியிருந்தாலும், டெக்னிக்கலாகவும், ரிச்சாகவும் எடுக்கப்பட்டிருக்கும் படம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
முதலிரவில் மனைவி கணவன் கொண்டு வந்த காண்டம் பாக்கெட்டை பார்த்து வெட்கத்துடன் “ இது எவ்வளவு விலைங்க” என்று கேட்டாள். கணவன்.. தன் மனைவி இவ்வளவு வெகுளியாக இருகிறாளே என்று பெருமையுடன்.. இதுல மூணு இருக்கும், பனானா வாசனையோட.. விலை இருபத்தியந்து ரூபா என்றான். அதற்கு மனைவி அடக் கொடுமையே எனக்கு தெரிந்து என் பதினைந்து வயசில இது நாலணாவாயில்லை இருந்திச்சு என்றாள்.

Santa Singh, woke up after the annual office Diwali bash party with a pounding headache, cotton-mouthed and utterly unable to recall the events of the preceding evening.

After a trip to the bathroom, he made his way downstairs, where his wife put some breakfast in front of him.

'Jaswinder' he moaned, 'tell me what happened last night. Was it as bad as I think?'

'Even worse,' she said, her voice oozing scorn. 'You made a complete ass of yourself. You succeeded in antagonising the entire board of directors and you insulted the president of the company, right to his face.'

'He's an asshole,' Santa Singh said. 'Piss on him.'

'You did,' came the reply. 'And he fired you.'

'Well, screw him!' said Santa Singh.

'I did. You're back at work on Monday.'

சில விஷயங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தால் வேலைக்காகாது.. அதனால்.
கேபிள் சங்கர்
Post a Comment

10 comments:

அன்பரசன் said...

அந்த விளம்பரம் சூப்பருங்கோ.

அன்பரசன் said...

//அவளின் மரண தண்டனையை நிறைவேற்ற கூடாது என்று அமெரிக்கா எங்கும் மரண தண்டனையை எதிர்க்கும் ஆதரவாளர்கள் போர்கொடி ஏந்தினாலும். சென்ற வியாழன் அன்று நிறைவேற்றப் பட்டது. என்னை பொறுத்த வரை இவர்களை கொல்வது தப்பில்லை என்றே தோன்றுகிறது. //

கண்டிப்பாக கொல்வதில் தவறில்லை.

என்னது நானு யாரா? said...

குறும்படம் கலக்கல்! மரண தண்டனை மேட்டரு, மனசை பாதித்து விட்டது. இப்படியும் மனிதர்களா?

Jegan said...

hold me a ticket too . Just Kidding

Bruno said...

சென்னை அரசு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது

ஒரு முறை விசாரிக்க சொல்லவும்

எம்.எம்.அப்துல்லா said...

பிரிமீயர் ஷோ பாஸ் எனக்கு வந்திருச்சு. வழக்கம்போல ரெண்டுபேரும் போய்ருவோம்.get ready.

அருண் said...

தத்துவமும் விளம்பரமும் கலக்கல்,மொத்தத்தில் சூப்பர்.

pichaikaaran said...

இலக்கியத்துக்கு பாடுபடும் நான் , சக எழுத்தாளர் சாரு போன்றோருக்கு டிக்கட் வாங்கி தருவது உங்கள் கடமை..உடனடியாக இரண்டு டிக்கட் எனக்கு அனுப்பவும்.. ஒன்றை நான் வைத்து கொண்டு இன்னொன்றை சக எழுத்தாளர் சாரு அவர்களுக்கு கொடுத்து விடுகிறேன்

Unknown said...

குழந்தைக்கு தேவையான உதவியை கட்டாயம் செய்வோம் ...

Ashok D said...

//பிரிமீயர் ஷோ பாஸ் எனக்கு வந்திருச்சு. வழக்கம்போல ரெண்டுபேரும் போய்ருவோம்.get ready. //

நல்லாயிருங்க