Thottal Thodarum

Sep 13, 2010

திருப்பூர்

Tirupur-Movie-Posters-stills  பழனியில் மெக்கானிக் கடை வைத்திருக்கும் ஆதிக்கும் ஊரில் பணக்கார பசங்களான மூன்று பேருக்கும் ஆதி. ஆதி  நண்பர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய துணிபவன்.. முக்கியமாய் கேசவனுக்கு ஒன்றென்றால் விட மாட்டான். அடித்து துவைத்து விடுவான். அவ்வளவு பாசக்காரன். கேசவன் அபரஞ்சி எனும் ஒரு டாக்டர் பெண்ணை பழனியில் ஒரு ஹாஸ்பிடலில் சந்திக்க, காதலாக மலர்கிறது. காதல் விஷயம் அவளுடய அப்பாவுக்கு தெரிய, என் ஊரான திருப்பூருக்கு வந்து பாரு என்று சொல்லிவிட்டு போகிறார். ஆதி தன் நண்பர்களுடன் திருப்பூருக்கு போய் அந்த பெண்ணை தூக்கி வர, திருமணம் செய்யும் நேரத்தில் ஒரு ரவுடிக் கும்பல் வந்து ப்ரச்சனை செய்து பெண்ணை அப்பாவிடம் ஒப்படைக்கிறது. ரவுடிக்கும்பல் ஏன் உள்ளே வந்தது? ஆதி காதலர்களை சேர்த்து வைத்தானா?, அபரஞ்சியின் அப்பா ஒத்துக் கொண்டாரா? என்பதையெல்லாம் வெள்ளித்திரையில் காண்க.

முதல் பாதி முழுவதும், ஆதி, கேசவன் மற்றவர்களுக்குள்ளான நட்பு எப்படி? என்பதற்கான காட்சிகளே மேலோங்கியிருப்பதால்  கொஞ்சம் மெதுவாகத்தான் போகிறது. அதிலும் பல காட்சிகள் பத்து வருஷ பழசு. விக்ரமன படம் பார்க்கிறோமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு. பின்னாடி லா..லா.லா..  என்று பாடாததுதான் குறைவு. அதிலும் அபரஞ்சி, கேசவன் காதல் காட்சிகளில் கற்பனை பஞ்சம் அதிகம். இப்படியாக போகும் முதல் பாதியை பார்த்துவிட்டு தொய்வடைந்திருந்த வேளையில் தீயாய் பறக்கும் ரெண்டாவது பாதி நம்மை பரபரக்க வைத்துவிடுகிறார்கள். சமீபத்தில் வந்த நாடோடிகள் படத்தை ஞாபகப் படுத்தினாலும். குறை சொல்ல முடியாத மேக்கிங்.

tirupur190210_1
படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கும் ஒரு சிலரை தவிர  அத்துனை நடிகர்களும் புதியவர்கள் தான். கேசவனாக நடித்திருப்பவரும், ஆதியாக நடித்திருப்பவரும் ஏதோ ஒரு படத்தில் பார்த்ததாய் ஞாபகம். அபரஞ்சியாய் நடிக்கும் அம்மணிக்கு படம் முழுவதும் ஓடுவதே வேலையாய் இருப்பதால் நடிப்பதற்கு பெரிதாய் இடமில்லை. வில்லனாக வரும் நடிகருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நல்ல கண்ட்ரோல்டு ஆக நடித்திருக்கிறார். இயக்கியிருப்பவர் எம்.சி. துரைசாமி. புதுமுகமான இவரின் முதல் பாதி கொஞ்சம் ஓவர் செண்டிமெண்டாக இருந்தாலும். அந்த குறைகள் எல்லாவற்றையும் இரண்டாம் பாதியில் சரி செய்துவிட்டார். பரபரவென துரத்தல்களும், அதன் விளைவாக வரும் நிகழ்வுகளும், என்று நம்மை திரையில் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்கள். ஒளிப்பதிவாளர் எஸ்.பாலா, எடிட்டர் சதீஷ், இசையமைப்பாளர் சாஹு என்று எல்லோரும் கை கோர்த்து வடம்பிடித்திருக்கிறார்கள்.

டிஜிட்டல் கேமரா என்பதால் பல விதமான கோணங்களில் நம்மை பார்க்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஆனால் ட்ராலிக்கு பதிலாய் நிறைய இடங்களில் லெப்ட் டூ ரைட்.. ரைட் டு லெப்ட் என அடுத்தடுத்து ஒரே விதமான ஷாட்டுகள் முதல் பாதியில் வருவதை தவிர்த்திருக்கலாம். ஆனால் அக்குறையை எல்லாம் இரண்டாம்பாதியில் சரி கட்டியிருக்கிறார்கள்.  அந்தமானில் வரும் ஒரு பாடலும், சேஸிங் டைமில் வரும் பாடல் நாடோடிகள் படத்தை ஞாபகப்படுத்தினாலும் படத்துக்கு நிறையவே உதவியிருக்கிறது. பின்னணி இசையும், பாடல்களும். மிக குறைந்த பட்ஜெட்டில் பல நண்பர்களிடமிருந்து உதவி பெற்று ஒரு இண்ட்ரஸ்டான கதையை கொடுத்திருக்கும் இக்குழுவினர்களிடமிருந்து மேலும் நல்ல படைப்புகள் வரும் என்று நம்புவோம் 
திருப்பூர் – நட்பின் அடையாளம்.
கேபிள் சங்கர்
Post a Comment

18 comments:

பித்தன் said...

me the first........ in my life history.....

சிவராம்குமார் said...

தலை! நான் கேள்வி படவே இல்லை இந்த படத்தை பற்றி! எல்லா படத்தையும் பாத்திருவீங்களா!!!!

மதுரை சரவணன் said...

திருப்பூர் இரண்டாவது பாதி அருமை என படம் முழுவதும் பார்க்க வேண்டும் என்பது போல் விமர்சனம் அருமை. உங்களை நம்பி நான் பார்த்த அத்தனை படங்களும் அருமை. விமர்சனம் எப்பொழுதும் நேர்மையாக உள்ளது பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்

Rafeek said...

பரவாயில்ல ரொம்ப ஃப்ரியா இருக்கிங்க போல..திருப்பூரை கூட பொறுமையாக பார்த்து இருகிங்க. நான் துரோகி விமர்சனம் எதிர்பார்தேன்.

'பரிவை' சே.குமார் said...

இப்படி ஒரு படம் எடுக்கப்பட்டிருப்பது குறித்து உங்கள் பதிவின் மூலம்தான் அறிந்தேன்.
நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால் படம் பார்க்கலாம் போல் தெரிகிறது.

CrazyBugger said...

indiya validhalathil mudhal muriyaaga... Thala eppidi ungalala mattum!!

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

பல புதிய திரைப்படங்கள் இப்போதெல்லாம் இப்படி சுலபமான இரண்டு வரி கதையை கொண்டு வெளிவருகிறது.. இவைகளின் வெற்றி என்பது, அந்த இரண்டு வரி கதையை எப்படி சுவரஸ்யமாக சொல்வது என்பதில்தான். திருப்பூர் அந்த ரகமாக இருக்கும் என்று உங்கள் விமர்ச்சனம் பார்த்து புரிந்து கொண்டேன்..!! அது சரி.. “பொள்ளாச்சி மாப்ள” படம் பார்த்தீர்களா..!!??

சி.பி.செந்தில்குமார் said...

கேபிள் சார்,விமர்சனம் கனகச்சிதம்

Thamira said...

திருப்பூர்னு ஒரு படமா? சொல்லவேயில்ல.. ஒரு பேப்பர் ஆட் குடுக்கக்கூட வழியில்லாத அளவு லோ பட்ஜெட் படமா? :-))

அன்பேசிவம் said...

//திருப்பூர் – நட்பின் அடையாளம்//
சூப்ப்ர் தல...:))

saro said...

madurai saravanan emanthu vidatheerkal.Ist halh 2nd half rendum waste.cable en eppadi thuthi paadukirar ena theriavillai.T.V serial parthathathu pol erunthathu. athuvum madurai sugapriya theatre tv mathiriye theriyuthu.(video audio rendum worst) madurai karan emara koodanthunga

saro said...

climax athara palasu.villan vetta varum pothu nanban kurukkey vilunthu saavathu.(entha climax almost ella directors maranthundanga,thirumba yabakapaduthuna directorkku nanri)nallavelai climax police varala.climax dialogue suth....tha waste.

saro said...

ayyayo ennoru vishayam maranthutten.startingla hero jail release-train-flashback-climax heroine waiting ellam erukkungo.cablesir in,aayirathil oruvan,kalavani varisaiyil oru thappana vimaranam

Mohan said...

//பழனியில் மெக்கானிக் கடை வைத்திருக்கும் ஆதிக்கும் ஊரில் பணக்கார பசங்களான மூன்று பேருக்கும் ஆதி.//

புரியவேயில்லை கேபிள்ஜி

குறைந்த பட்ஜெட்டில்,நன்றாக எடுத்து இருக்கும் படங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!

Madurai pandi said...

thirupoor nu oru padama? eppa vandhuchu cable ji?

vinu said...

my best wishes to the team

Cable சங்கர் said...

@பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும்

படப்பிடிப்பு காரணமாய் இரவு தான் வந்து பார்கக்வே முடிகிறது என்கிற படியால் பினூட்டமுடியவில்லை.. தொடர் ஆதரவுக்கு நன்றி..

ஜோசப் பால்ராஜ் said...

திருப்பூர் – நட்பின் அடையாளம்.

100% உண்மை. அதுலயும் அந்த பதிவர்கள், சான்ஸே இல்ல.