தமிழ் சினிமாவிற்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று ஒரு சட்டம் நம் மாநிலத்தில் இருக்கிறது. இதை பற்றிய நிறைய ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்கள் இருக்கத்தான் செய்கிறது. என்ன தான் தமிழ் சினிமாவை வாழவைப்பதற்காக தமிழக முதல்வர் அவர்கள் செய்த பெரும் உதவி என்று திரைத்துறையினர் பாராட்டினாலும். நிஜத்தில் வரி விலக்கு என்று வரும் போது யாருக்கு அனுகூலம் ஆகியிருக்க வேண்டும்?.
வருடத்திற்கு சுமார் 50 கோடி ரூபாய் வரை அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறது இச்சட்டத்தின் மூலம். ஒரு காலத்தில் காந்தி, காமராஜ், மற்றும் தேசபக்தியை பறைசாற்றும் திரைப்படங்கள், நல்ல சமூதாய சீர்திருத்த கருத்துகள் சொல்லும் படங்களுக்கு வரிவிலக்கு கொடுப்பார்கள். அப்படி கொடுக்கப்படும் வரிவிலக்கானது பத்து ரூபாய் டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வரி என்றால் வரிவிலக்கு பெற்ற படத்தின் விலை ஒன்பது ரூபாய்க்கு மக்களுக்கு அளிக்கப்படும். அதாவது வரிவிலக்கின் முழு அனுகூலம் படம் பார்க்கும் பொது மக்களுக்கு அளிக்கப்படுவதால் மேலும் பலர் திரையரங்குக்கு வந்து படம் பார்ப்பார்கள். சிறந்த கருத்துகளும் மக்களீடையே சென்று சேரும் என்றும் தான் வரி விலக்கு கொடுக்கப்பட்டது.
ஆனால் இன்றைய கால கட்டதில் அப்படியா நடக்கிறது. தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்றவுடன் தமிழிலேயே அகராதி வைத்து புரிந்து கொள்ளும்படியான பெயர்களை வைத்துக் கொண்டு முழு வரிவிலக்கு பெற்ற படங்களின் வரி அனுகூலங்கள் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தான் போகிறதே தவிர, படம் பார்க்கு பொது மக்களாகிய நமக்கு எந்த விதமான பலனும் கிடையாது. முன்பு இருந்ததைவிட பத்து மடங்க விலை ஏறித்தான் விட்டது.
இந்த ஐம்பது கோடி வருமானம் கூட, டிசிடிஓவுக்கு ரெகுலர் கட்டிங் கொடுத்து அரைகுறையாய் கொடுத்த வரிதான். அதுவே அப்படியிருக்க.. ஒழுங்காக கட்டினால் இன்னும் பல கோடிகள் நிச்சயம் அரசுக்கு வருமானம் கிடைக்கும். வெறும் டாஸ்மாக்கை வைத்துக் கொண்டு ஜல்லியடிக்க வேண்டாம். அது எப்படி ஏமாற்றுவார்கள் என்று தெரிந்து கொள்ள வழக்கம் போல சினிமா வியாபாரம் புத்தகம் படியுங்கள்..ஹி..ஹி..
அட்லீஸ்ட் சின்ன பட்ஜெட் படங்களுக்கு வரிவிலக்கு கொடுத்தாலாவது இவர்களுக்கு படத்தை வெளியிடுவதற்கு உதவியாய் இருக்கும். மேலும் பல பார்வையாளர்களை தியேட்டரின் உள்ளே அழைத்து வர ஏதுவாகவும் இருந்திருக்கும். நூறு கோடி, இருநூறு கோடிக்கு படம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏன் வரி விலக்கு தேவை?. அப்படியே வரி விலக்கு கொடுத்தாலும் ஐம்பது ரூபாய்க்குதான் டிக்கெட் விற்க வேண்டும் என்ற சட்டத்தையே கண்டு கொள்ளாமல் எல்லா திரையரங்குளில் எல்லா நூறு, இருநூறு, ஐநூறு என்று வாய்க்கு வந்ததை விலை வைத்து விற்கிறார்கள். இதை தட்டிக் கேட்க யாருமேயில்லையா? நல்ல காலத்திலேயே யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கும் போது.. இப்போது கேட்கவா வேண்டும்.
Comments
but who cares????
Yarumae illa thala thati ketka...:(
http://sethiyathope.blogspot.com/2010/09/blog-post.html
இரண்டுமே சட்ட விரோதம் தான்.
லாஜிக்காக பார்த்தால் தியேட்டரில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் வரை திருட்டு டிவிடி குறைய வாய்ப்பில்லை.
பணக்காரர்கள் - தியேட்டரில் அதிக விலை கொடுத்து படம் பார்க்கிறார்கள்
நடுத்தரத்தினர் - திருட்டு டிவிடி. எப்போவாவது தியேட்டர் போகின்றனர்
டிவிடி பிளேயர் இல்லாத ஏழைகள் தான் பாவம்.
முதல்வர் சட்ட விரோதமாக டிக்கெட் விலை ஏற்றி விற்கும் அதிபர்களுக்கு வரி விலக்கு அளிக்கிறார். சட்ட விரோதமாக டிவிடி தயாரிக்கும் ஆட்களை குற்றவாளி என்கிறார்.
நான் திருட்டு டிவிடியை ஆதரிக்க வில்லை.ஆனால் திருட்டு டிவிடியும் அதிக விலை வைக்கும் தியேட்டர் உரிமையாளரும் ஒன்றுதான் என்பது என் கருத்து.
ஆனால் . . .குடும்பத்தினர் திரைத்தொழிலில்
இருக்கும் வரை வரிவிலக்கிற்கு விலக்கே இல்லை
என தோன்றுகிறது . . .
எல்லா கமல் ரசிகர்களுக்கும் ரஜினி பட ரிலீஸின் போது ஏற்படும் வயித்தெரிச்சல் உங்களுக்கும் வந்துருச்சு போல....
அப்றம் இந்த வருஷம் கரக்டான இன்கம் காமிச்சி டாக்ஸ் கட்னீங்களா தல