Thottal Thodarum

Sep 3, 2010

பா.வே.படங்கள் –Trade(2007)

220px-Tradeposter உலகின் புராதான தொழிலான விபச்சாரத்தை பற்றித்தான் படம். ஆனால் ஆரம்பித்த கணத்திலிருந்து முடிவு வரை பதை பதைக்க வைக்கும் லைவ்வான திரைக்கதையால்  படம் நெடுக அதிச்சியடைய வைக்கிறார்கள்.

பிரேசிலில் ஒரு ஏழ்மையான் தந்தையில்லாத குடும்பம். பதிமூணு வயது தங்கை அட்ரினா, வெளிநாட்டு டூரிஸ்டுகளிடம் செக்ஸியான பெண் வேண்டுமா என்று தனியாய் அழைத்துப் போய் பணம் பிடுங்கும் ஜேர்கே எனும் பையன். ஒரு நாள் தன் தங்கையின் பிறந்த நாளுக்காக ஒரு புத்தம் புதிய சைக்கிளை வாங்கிக் கொடுக்கிறான். தனியாக போகாதே என்று அச்சுறுத்தப்பட்ட பெண் தாயின் சொல்லை மீறி தனியாக சைக்கிள் ஒட்ட கிளம்ப, பின்னால் காரில் துரத்தி வரும் ஆட்களால் கடத்தப்படுகிறாள். அதே கும்பலால் வெரோனிகா என்கிற திருமணமாகி தனியாய் குழந்தையுடன் போலந்தில் வாழும் ஒரு பெண்ணை வேலை வாங்கித்தருவதாய் மோசடி செய்து, ஏர்போட்டிலிருந்து கடத்துகிறார்கள். இரண்டு பேர்களை மட்டுமில்லாமல் மேலும் சில சிறுமிகள் பெண்களை கடத்தி ஒரு கண்டெயினர் லாரி மூலம் வேறு இடத்திற்கு கொண்டு சென்று ஏலத்தில் விட தயாராகிரார்கள். இவர்களை தவிர ஒரு தாயலாந்து சிறுவன் ஒருவனும் இருக்கிறான்.

தன் தங்கையின் சைக்கிளை போன்றே ஒரு சிறுவன் ஓட்டி வருவதை பார்த்து அவனை பிடித்து எங்கே எடுத்தாய் என்று கேட்க, அவன் அந்த சைக்கிள் ரோட்டில் கிடந்த இடத்தை காட்ட, தன் தங்கை யாராலோ கடததப்பட்டிருகிறாள் என்று தெரிந்து கொண்டு, லோக்கல் மாப்பியாவை தன் நண்பர்கள் மூலம் தொடர்பு கொள்கிறான். அவனோ அவர்கள் பெரிய ஆட்கள் அவ்வளவு சீக்கிரம் பிடிக்க முடியாது என்றும், மாட்டினால் ஆள் காலி என்று மிரட்ட, என்ன செயவதென்று தெரியாமல். அவர்கள் எங்கு கூடுவார்கள என்று தெரிந்து அங்கே போக, அங்கே தன் தங்கையை கணடெயின்ர் லாரியில் ஏற்றுவதை பார்த்து காரில் பின் தொடர்கிறான். ஒரு இடத்தில் பார்டர் கிராஸ் செய்யும் போது அங்கிருக்கும் போலீச் காரர்கள் கண்டெயினரில் இருக்கும் பெண்களை அனுபவித்துவிட்டு காசும் வாங்கிக் கொண்டு அனுப்பிவிடுகிறார்கள். பின்பு அங்கேயே அவனுடய தங்கைக்கு கவர்ச்சியான உடைகளை போட்டுவிட்டு படமெடுத்துக் கொள்கிறார்கள். பின்பு வண்டியை அங்கிருந்து கிளப்ப, ஜேர்கேவின் கார் பெட்ரோல் காலியாகிவிட, கண்டெயினரை மிஸ் செய்கிறான். அப்போது ஒரு இடத்தில் மறைந்து கொள்ளும் போது ஒரு ஆளின் வண்டியின் டிக்கியில் படுத்துக் கொள்ள, அவர் ஒரு இன்சூரன்ஸ் ப்ராட் இன்வெஸ்டிகேட்டர். அவர் மூலம் காரில் டிக்கியில் படுத்தபடியே அமெரிக்காவை தாண்ட, அந்த பெண்களை கடத்தும் கும்பலும் அமெரிக்காவுக்கு திருட்டுதனமாய் உள்நுழைய, அவர்கள் போலீஸில் பிடிபடுகிறார்கள். திரும்பவும் அவர்கள் மெக்ஸிக்கோவுக்கு திரும்ப அனுப்பப்பட, மறுபடியும் அவர்கள் ரோடு மார்க்கமாய் அமெரிக்காவில் நுழைந்து அங்கே அந்த பெண்களை இண்டெர்நெட் மூலம் ஏலம் விடப்படுவதை கணடு பிடிக்கிறார்கள். அந்த இன்சூரஸ் பராட் ஏஜண்டின் வாழ்க்கையில் ஒரு சோகம் தன் முதல் மனைவியின் மூலம் பெற்ற பெண்ணை அவளே ப்ராததல் வீட்டில் விற்றுவிட்டு போய்விட பதது வருடங்களுக்கு மேலாக தேடிக் கொண்டிருக்க, ஜேர்கேவுக்கு உதவுகிறார்.

க்ளைமாக்ஸில் ஆட்ரினாவை ஜேர்கே கண்டுபிடித்தானா? ரே தேடிவந்து கொண்டிருக்கும் பெண் கிடைத்தாளா? என்ற போன்ற கேள்விகளுக்கு திரைப்படத்தில் விறுவிறுபபாக் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு நெகிழ்வான நிகழ்வுகளுடன்.

ஆரம்ப காட்சியில் ஏர்போர்டிலிருந்து பெண்களை நைச்சியமாய் பேசிக் கொண்டு வரும் போது, ஒருத்தி திமிற தப்பி ஓடும் போது அவளை ஒரு கார் அடித்து தள்ளிவிட, அதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல வெரோனிகாவை ஏற்றி போகும் போதும், வீட்டில் வந்து ப்ரச்சனை பண்ணும் வெரோனிகாவை கடத்தும் ஆள் எல்லோர் முன்னிலையிலும் அவளை ரேப் செய்வதும், அந்நிகழ்வு கொடுக்கும் பய அதிர்வுகள் அட்ரினாவுக்கு மட்டுமல்ல நமக்கும் தான். அதே போல் போகிற வழியில் போலீஸ்காரர்களுக்கு கன்னிப் பெண்ணாக அட்ரினாவை தவிர யாரை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளச் செய்வதும், மீண்டும் அவள் வன்புணர்வ செய்யப்படுவதும், காடுகளின் மத்தியில் டைம் க்ளாக் வைத்து பெண்களை சல்லாபத்திற்கு விடும் காட்சியும், வெறும் ப்ளோ ஜாபுக்காக அட்ரினாவை அனுப்பும் காட்சியும், ஜஸ் கத்தி ஜில்லிப்பு. சொருகல்.

வெரோனிகா, அட்ரினா, தாய் சிறுவன், மற்றும் சிலரை அமெரிக்காவுக்கு கடத்த கூட வரும் ஒரு ட்ரக் ட்ரைவரும், அந்த அஸிஸ்டெண்டும் நல்ல தேர்வு. அதிலும் கொஞ்சம இரக்கமுள்ள அந்த அஸிஸ்டெண்ட் கேரக்டர் அருமை. வெரோனிகாவை கதற,கதற ரேப் செய்யப்பட்டவுடன் தனியே வந்து அவளுக்கு பெயின் கில்லர் கொடுப்பதாகட்டும், அவள் மலை உச்சியிலிருந்து குதிக்கும் முன் “இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்” என்று சொல்லி குதிக்கும் போது அடையும் அதிர்ச்சியும், க்ளைமாக்ஸில் அட்ரினாவை காப்பாற்ற ரே அவளை ஏலத்தில் எடுக்க, அவளை அங்கேயே புணர்ந்தால்தான் அவளை அனுப்புவேன் என்று சொல்ல, என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் வேளையில் அவர்களை செக் செய்ய வரும் அஸிஸ்டென்டை ஏமாற்ற அட்ரினாவே சுயமாகவே கன்னித்தன்மையை சிதைத்து கொண்டு, பெட்டில் ரத்தத்தை தடவி, அந்த அக்காவின் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார் எனும் காட்சியெல்லாம் பார்பதற்கு நெஞ்சில் உரம் இருக்கிறவர்கள் மட்டும் ட்ரை செய்யவும்.

படத்தில் சில விஷயங்கள் பெரிதாய் விளக்கவே படவில்லை. முக்கியமாய் அந்த அமெரிக்க வீரர்கள் அவர்களை பாடர் கிராஸ் செய்த காரணத்தால் கைது செய்து மீண்டும் மெக்ஸிகோவுக்கு அனுப்பி வைக்கப்பட, எப்படி மீண்டும் உள் வந்தார்கள் என்ற தெளிவும், வெரோனிகாவும், அட்ரினாவும் ஈஸியாக தப்பிக்க கூடிய சான்ஸ் இருந்தும் மிக மொக்கையாய் மாட்டிக் கொள்ளும் இடம் போன்ற சிற்சில விஷயங்கள் தவிர ஸ்டன்னிங் பிலிம்.


டிஸ்கி: இந்த படத்தின் இன்ஸ்பிரேஷன் தான் தமிழில் “விலை” என்கிற பெயரில் வந்திருக்கும் படம். ரே கேரக்டரில் சரவணனும், அண்ணன் ஜேர்கே கேரக்டரில் நாடோடிகள் பரணியும் நடித்திருக்கிறார்கள்.
கேபிள் சங்கர்
Post a Comment

24 comments:

பிரபல பதிவர் said...

mee the first

பிரபல பதிவர் said...
This comment has been removed by the author.
Cable சங்கர் said...

யாரும் உங்கள் பின்னூடடங்களுக்கு பதிலளிக்க வில்லை என்று நினைக்காதீர்கள். இணை இயக்குனராய் வேலை பார்க்கும்படத்திலன்ஷூட்டிங் வேலைகள் ஆரம்பிக்க இருப்பதால் பதிவெழுதவே.. உன்னைபிடி என்னை பிடி என்றாகிறது..

ஸ்ரீ.கிருஷ்ணா said...

nice .........

vinu said...

me 5th again

என்னது நானு யாரா? said...

படத்தோட விமர்சணம் அருமை அண்ணா!

-------------------------------------

நண்பர்களே! மருந்தில்லா இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.

என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com

நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!

vinu said...

second paragraphukkul enter aagumpothea intha kathaiyai enageayoo keatta maathiri irukkutheaannu ninaichean neengal diskiyil thealivu paduthi viteergal


appa naama aalungalukku nijamaalumea sontha sarkkunnu onnu kidaiyaathaa

பிரபல பதிவர் said...

//இணை இயக்குனராய் வேலை பார்க்கும்படத்திலன்ஷூட்டிங் வேலைகள் ஆரம்பிக்க இருப்பதால் //

பார்க்க வேண்டிய படங்கள் பதிவு தொடரும்

-- கேபிள்

பித்தன் said...

does this has any download link

இராயர் said...

i'm downloading now
very good review

vinu said...

இராயர் அமிர்தலிங்கம் said...
i'm downloading now



linkai kodutheenganna unga kudumbam kolanthai kutti ean unga vamsamea roamba nalla irrukkum samiyoov

இராயர் said...

http://www.kickasstorrents.com/trade-2007-dvdrip-eng-fxg-t10274.html

இராயர் said...

Dear Mr.Cable,

did u see that "Taken" movie,the same story of trade.
nice movie to be watch

vinu said...

nandri sir இராயர் அமிர்தலிங்கம்

vinu said...

i have seenthe movie "taken" but athaithaan tamilil jakkubainnu net la release pannunaangaleaaaaa

ருத்ர வீணை® said...

இப்படியெல்லாம் ரணகளமா எடுத்தா நம்ம ஊர்ல ஓடாதுங்க, அப்பறம் அத B கிரேட் படமா ஆக்கிடுவாங்க நம்மளுங்க.. அருமையான விமர்சனம். இப்பவே டவுன்லோடிருறேன்..

JDK said...

In the starting of ur review u have mentioned that the story starts from "Brazil" but it should be "Mexico" coz only from Mexico u can travel to US via road.

Rishoban said...

இந்த படத்த 2008இல் பார்த்தேன்
எனக்கு ஞாபகம் இருக்கிற மாதிரி அது பிரெசில் இல்ல மெக்ஸிகோ :)

அன்பரசன் said...

விமர்சனம் அருமை

Vijayashankar said...

யு.டி.வி வேர்ல்ட் மூவிஸில் ஒரு முறை பார்த்தேன். கண் கலங்கி விட்டது.

எஸ்.கே said...

இந்த படம் பாதிக்கு மேல் போரடிக்கிற மாதிரி இருக்கும். முதலில் எனக்கு கொஞ்சம் கதை புரியவேயில்லை. உங்கள் விமர்சனம் மூலம் புரிந்து கொண்டேன்.

Ramesh said...

Good review cable, watched this movie many times and it’s not Brazil its Mexico.

'பரிவை' சே.குமார் said...

விமர்சணம் அருமை அண்ணா!

geethappriyan said...

தல,
இந்த படம் நீங்க எழுதிட்டீங்களா?
மகிழ்ச்சி,ரொம்ப நல்ல படம்.
எவ்வளவு கொடூரமான காட்சிகள் இருந்தாலும் நியூடிட்டியே இல்லாத படம்.

அந்த பெண்களின் பாடிகார்ட் தான் அமெர்ரோஸ் பெர்ரோஸில் அண்ணன் கேரகடர் செய்தது,தவிர அவனுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது ஆனாலும் கெட்டவன் தான்.

இவன் அந்த பெண்களுக்கு கொடுத்தது பார்டி டரக் பில் வகை.அது இவர்கள் கருத்தரிக்காமல் இருக்கவும்,வலிநிவாரணத்துகககவும்,முதல் நாள் என்ன நடந்தது என தெரியாமல் இருக்கவும் தான்.

மற்றபடி அந்த கோரைபுல் புதரில் டைமர் வைத்து புணரவிடப்படுவதேல்லாம் காட்சியாக்கம் அதகளம்.டீடெய்லாகாட்டுறேன்னு சிலபடத்துல துணி அவுக்குறது வரை காட்டுபவர்கள்,இதிலிருந்து கத்துக்கணும்,

===
என்னதான் பார்டர் போலீஸ் கைதான இவர்களை திரும்ப மெக்சிக்கோ கொண்டு விட்டாலும் அவர்கள் முதல்நாள் ஆற்றை கடந்து தப்பியவர்கள்,மறுநாள் மலைவழியாக தப்புகின்றனர்.
தவிர தல,இன்சூரன்ஸ் போலீஸின் முதல் மனைவிமூலம் இவர்களுக்கு குழந்தை கிடையாது,இரண்டாம் மனைவிக்கு பிறந்த மகள் தான் அந்த போட்டோவில் உள்ள விற்கப்பட்ட குழந்தை.