Thottal Thodarum

Nov 3, 2010

The Town (2010)

the townஅமெரிக்காவில் பேங்க் கொள்ளைகளுக்கு பிரசித்தி பெற்ற பாஸ்டன் நகரத்தில் உள்ள சார்லஸ் டவுன் என்கிற நகரத்தில் பேங்குகளை கொள்ளையடிக்கும் கும்பலை பற்றிய கதைதான் த டவுன். நடிகர் பென் அப்லெக் இயக்கி நடித்துள்ள படம்.
The Town டவ் மெக்ரே ஒரு பேங்க் கொள்ளைக்காரன். இதுவரை யாரிடமும் மாட்டாத ஒரு ஜகதலப்பிரதாபன். அவனுடய வலது கரமாய் விளங்கும் ஜேம்ஸ், ஆல்பர்ட், டெஸ்மெண்ட் ஆகியோருடன் சேர்ந்து கொள்ளைகளில் ஈடுபடுபவன். இவர்கள் ஒரு முறை பேங்க் கொள்ளையில் ஈடுபடும் போது சந்தர்ப்ப வசத்தால் அங்கிருக்கும் பேங்க் மேனேஜரான க்ளாரை ஹாஸ்டேஜாக வைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிக்கிறார்கள். அந்த தப்பித்தலில் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் வருகிறாள் க்ளார்.
The Town மெக்ரேவின் பிண்ணனியில் ஒரு டிரக் அடிக்ட்டான ஒரு குழந்தைக்கு தாயான பெண்ணுடனான தொடர்பும், அவனது வலது கரமான ஜேம்ஸுடனான நட்பும் இத்தொழிலை விட்டு அவன் விலக வேண்டும் என்று நினைத்தாலும் விலக முடியாமல் போராடுகிறான். அதற்கு இன்னொரு காரணம் இவர்களுக்கு ஹெட்டான லோக்கல் தாதாவான பெர்கி எனும் கிழவன். பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ வேறு வழியில்லாம என்றாவது ஒரு நாள் ஒரு பெரிய கொள்ளையுடன் இதிலிருந்து அந்த நகரத்திலிருந்து விலக வேண்டுமென்ற முடிவோடு இருக்கும் நேரத்தில்தான் அந்த பேங்க் கொள்ளையில் க்ளாரை ஹாஸ்டேஜாக வைத்து தப்பிக்கிறான். அவள் எதாவது சொல்லிவிடுவாளோ என்று அவளை தொடர, அவளும் சார்லஸ் டவுனிலேயே இருக்க, மெக்ராவுக்கு அவள் மேல் காதல் வர ஆரம்பிக்கிறது. இருவரும் நெருக்கமாகிறார்கள்.
The Town மற்ற்வர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகி தன்னை பற்றிய உண்மைகளை அவளிடம் சொல்லிவிடலாம் என்கிற வேலையில் எப்.பி.ஐ களத்தில் இறங்குகிறது. பேங்க் மேனேஜரான க்ளாருக்கும், மெக்ரேவுக்குமான உறவையும், மெக்ரே ஒரு கொள்ளைக்காரன் என்கிற உண்மையையும் க்ளாருக்கு தெரிவிக்கிறது. இதனால் அவள் மெக்ரேயை வெறுக்க ஆரம்பிக்க, தன் வலது கையான ஜேம்ஸிடம் இத்துடன் தான் இந்த தொழிலை விட்டு போகப் போவதாய் சொல்ல, அவன் மெக்ரே தனக்கு செய்யும் துரோகம் என்று சண்டையிடுகிறான். ஒரு பக்கம் போலீஸ் துரத்த, இன்னொரு பக்கம், லோக்கல் தாதா பெர்கி கடைசி முறையாய் ஒரு பெரும் கொள்ளையை ஏற்பாடு செய்ய, மெக்ரே மாட்டேன்கிறான். அதற்கு சிறையில் இருக்கும் மெக்ரேவின் அப்பாவை, அவளுடய அம்மாவை ட்ரக் அடிக்ட் ஆக்கி போதைக்காக வீட்டை விட்டு ஓடியவளை வைத்து பிரச்சனை செய்து உள்ளே வைத்தது நான் தான் என்று சொல்ல,அதே போல உன்னையும் செய்வேன் என்று மிரட்ட, வேறு வழியில்லாமல் கொள்ளையில் ஈடுபடுகிறான். கடைசியாய் அவன் செய்ய நினைத்த கொள்ளையில் அவன் ஜெயித்தானா? அவனுக்கும், க்ளாருக்குமான காதல் என்னாயிற்று? எப்.பி.ஐ என்ன செய்தது? என்பது போன்ற கேள்விகளுக்கு வெள்ளித்திரையோ. .. டாரண்டோ பதில் சொல்லும்.
The Town என்ன தான் பேங்க் கொள்ளைகள் மிக சாதாரணமாக நடக்கும் என்று சொல்லப்பட்டாலும் இவ்வளவு சாதாரணமாக நடக்கும் என்றால் நம்ப முடியவில்லை. இதை பற்றி பாஸ்டன் ஸ்ரீராம் விளக்கினால் நன்றாக இருக்கும். பென் அப்லெக்கின் நடிப்பு அடக்கம். அவருடய் ட்ரக் அடிக்ட் காதலியாய் வருபவரின் நடிப்பும் மனதில் நிற்கிறது. என்ன தான் க்ளாருக்கும், அப்லெக்குக்குமிடையே ஆன காதல் என்று உட்டாலக்கடி அடித்தாலும் நம்மூர் சினிமாவில் ரவுடியை காதலிக்கும் பணக்கார பெண் ஃபீலிங் தான் வருகிறது.. ஆங்காங்கே திரைக்கதையில் தொய்வு விழுந்து கொண்டேயிருக்கிறது.
The Town கொஞ்சம் செண்டியாக அப்லெக்கின் அப்பா, ஜெயில் போன்ற டயலாக் ப்ளாஷ் பேக்குகள் பெரியதாய் கொடுக்க வேண்டிய பாதிப்பை கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வழக்கம் போல கொள்ளைகாட்சிகளிலும், சேஸிங் காட்சிகளிலும், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியிலும் ஒளிப்பதிவும், அதை கோரியோகிராப் செய்ததில் துல்லியம்.
The Town – It’s up to you to be there are not
TorrentLink:
http://www.torrentdownloads.net/torrent/1652112795/The+Town+2010+Z9+DVD+AC3+Rip+SCR
கேபிள் சங்கர்
Post a Comment

18 comments:

க ரா said...

இம்ம்...

க ரா said...

என்ன தான் பேங்க் கொள்ளைகள் மிக சாதாரணமாக நடக்கும் என்று சொல்லப்பட்டாலும் இவ்வளவு சாதாரணமாக நடக்கும் என்றால் நம்ப முடியவில்லை. இதை பற்றி பாஸ்டன் ஸ்ரீராம் விளக்கினால் நன்றாக இருக்கும்.
---
பா.ஸ்ரீ சீக்கிரம் விளக்குங்க :)

Cable சங்கர் said...

ஆமா விளக்குங்க..

MSK / Saravana said...

எப்படி தலைவரே படம் பார்த்தீங்க?? நம்ம ஊர்ல ரிலீஸ் ஆன மாதிரி தெரியலையே ?? DVD வந்துருச்சா?
நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன், இந்த படம் பார்க்க..

சிவராம்குமார் said...

படம் பார்த்த மக்கள் எல்லாம் டிவிடிக்கு வெயிட் பண்ண சொல்லிட்டாங்க தல!

Philosophy Prabhakaran said...

// எப்படி தலைவரே படம் பார்த்தீங்க?? நம்ம ஊர்ல ரிலீஸ் ஆன மாதிரி தெரியலையே ?? DVD வந்துருச்சா?//

அதே கேள்விதான் என்னுடையதும்... ஒருவேளை வெளிநாட்டுல பாத்தீங்களா...

Raj Chandra said...

I used to work in Charlestown and that way the movie was very close to me. I loved it. Sometimes I feel Ben Affleck is better behind the camera rather than in front of it.

Movie wise, it is Ok type. Not like "Gone Baby Gone" (directed by Ben Affleck again in South Boston area).

Anyway, do you think it is ethical to give the Torrent link to this movie? Please don't give me the reason that the movie is already there and you're just providing the link.

Waiting for the Torrent link for the movie that you are involved (whether I would watch it or not is different) :)

Cable சங்கர் said...

@MSK
நம்மூரில் ஆகிவிட்டது எம்.எஸ்.கே.. எஸ்கேப்பில் பார்த்தேன்.

@சிவா
ஒரு காட்சியோ ரெண்டு காட்சியோ தான் ஓடுகிறது.

@பிலாசபி பிரபாகரன்
இல்லை தலைவா.. சென்னையில் எஸ்கேபில்.

Cable சங்கர் said...

@raj chandra
//I used to work in Charlestown and that way the movie was very close to me. I loved it. Sometimes I feel Ben Affleck is better behind the camera rather than in front of it.
//

எனக்கும் அப்படித்தான் சில காட்சிகளை பார்க்கும் போது தோன்றியது.ஆனா மொத்தமாக ஸ்கீரின் ப்ளேயில் ஆங்காங்கே சறுக்கியதால்.. பெரியதாக இம்பாக்ட் ஆகவில்லை.

//Movie wise, it is Ok type. Not like "Gone Baby Gone" (directed by Ben Affleck again in South Boston area).//

நான் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை.

//Anyway, do you think it is ethical to give the Torrent link to this movie? Please don't give me the reason that the movie is already there and you're just providing the link.
//

நிறைய பேருக்கு இங்கு ரிலீஸானதே தெரியவில்லை. தியேட்டர் கிடைககாமல் விநியோகஸ்தரும். 120 ரூபாய் டிக்கெட்டுக்கு 60 ரூபாய் பார்க்கிங் கொடுக்க முடியாமல் இருக்கும் சினிமா ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் டிவிடியில் பார்த்தால் கூட அது திருட்டு டிவிடியாக இருக்கும் போது.. நோ.. செண்டிமெண்ட்ஸ்..

Waiting for the Torrent link for the movie that you are involved (whether I would watch it or not is different) :)//

நிச்சயம் அதுவும் வரும்.. நான் கொடுக்காவிட்டாலும். வேறு யாராவது கொடுக்கத்தான் செய்வார்கள். இதையெல்லாம் தாண்டி சினிமாவும் வாழும். அதற்கு அந்த ஸ்டெபிலிட்டி இருக்கத்தான் செய்கிறது..


அப்புறம் ஒரு விஷயம்.. உங்கள் பதிவுகளைபடித்தேன். இண்ட்ரஸ்டிங்.. உங்களை சந்திக்கணுமே..:))
//

Unknown said...

//தாதாவான பெர்கி எனும் கிழவன். பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ வேறு வழியில்லாம என்றாவது ஒரு நாள் ஒரு பெரிய கொள்ளையுடன் இதிலிருந்து அந்த நகரத்திலிருந்து விலக வேண்டுமென்ற முடிவோடு//

ஆகா! இதுதானே நாங்க சின்ன வயசில காமிக்ஸ்ல இருந்து பார்கிறோமே பெய்ய கொள்ளையா அடிச்சிட்டு அப்புறம் திருந்திடறது. என்னோட நண்பன் ஒருத்தன் சொல்லுவான் நம்ம ஊர் பெண்களோட கொள்கை 'என்ன வேணாலும் பண்றது,, அப்புறம் ஒரு சவுண்ட் பார்ட்டி அ கல்யாணம் கட்டிட்டு பத்தினியாகிடுறது!'
:))
உங்க விமர்சனம் எப்போதும் போல! :)

'பரிவை' சே.குமார் said...

வழமை போல அருமையான விமர்சனம் உங்கள் பார்வையில்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Unknown said...

டோரென்சாய நமக ...

Raj Chandra said...

//Movie wise, it is Ok type. Not like "Gone Baby Gone" (directed by Ben Affleck again in South Boston area).//
>>நான் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை.

- அவசியம் கிடைத்தால் பாருங்க. Ben-ன் சகோதரர் தான் கதாநாயகன். ஐரிஷ் சமூகத்தினரிடையே (தெற்கு/கிழக்கு பாஸ்டன்) நடக்கும் கதை.

Reg. Torrent: புரிகிறது (ஒப்புக் கொள்ள முடியா விட்டாலும்).

>> அப்புறம் ஒரு விஷயம்.. உங்கள் பதிவுகளைபடித்தேன். இண்ட்ரஸ்டிங்..
எப்போதாவது எனக்கு ஜுரம் போல் உணர்ந்தால் சும்மா கிறுக்குவேன் :)

>>உங்களை சந்திக்கணுமே..:))
நிச்சயமாக. 2011-ல் இந்தியா வரும்போது சென்னை வருவேன். அப்போது Email அனுப்புகிறேன்.

vimalanperali said...

ரொம்ப நாளைக்கு முன்பாக ஆனந்த விகடனில் சினிமா பற்றிய தொடரை திரு செழியன் அவர்கள் எழுதினார்கள்.அதற்கு அப்புறமாக உங்களது எழுத்தை பார்க்க முடிகிறது.நன்றாக உள்ளது.

Anonymous said...

You better remove the torrent link. Please check yourself before giving link for torrent files with WMV extension. nowadays they are being used to advertise coral player. please read this to have an idea about coral player

http://in.answers.yahoo.com/question/index?qid=20101026013909AA6zUUs

shortfilmindia.com said...

@விமலன்
மிக்க நன்றி நண்பரே..

@Cablecsankar
எல்லாம் சரி அதென்ன என் பேரை வச்சிருக்கீங்க?:))

@கே.ஆர்.பி.செந்தில்
ம்

@ஜீ
நன்றி ஜி

San said...

Cable,
This movie was released along with endhiran hence it dint get the required slot.
This movie is a big hit in U.S.
A good movie.I liked it.

முகமூடி said...

// நான் கொடுக்காவிட்டாலும். வேறு யாராவது கொடுக்கத்தான் செய்வார்கள் // இதே மாதிரிதான் இந்த பெண்மணியும் நினைத்திருக்கக்கூடும் - Single mom can't pay $1.5M song-sharing fine

வேறு யாராவது செய்வார்களா மாட்டார்களா என்பது ப்ரச்னையல்ல.. நீங்கள் எதற்கு செய்ய வேண்டும் என்பதுதான் கேள்வி?