Thottal Thodarum

Dec 13, 2010

கொத்து பரோட்டா-13/12/10

மீண்டுமொரு முறை ஐம்பதாயிரம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி பதினெட்டு லட்சம் நோக்கி பயணிக்க வைத்த சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி...கேபிள் சங்கர்
விக்கி லீக் உரிமையாளர் அசாங்கியை கைது செய்திருக்கிறார்கள். உலகின் புராதன குற்றச்சாட்டை வைத்து. பல விதங்களில் அவர்களின் இணையதளத்தை முடக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு டொனேஷன் வருவதை தடுக்க, ஆன்லைன் கார்டு கம்பெனிகளின் ஒத்துழைப்பை, முக்கியமாய், பேபால், விசா, மாஸ்டர்கார்ட் உள்ளிட்ட இணையதளங்களை அமெரிக்க அரசு மிரட்டி பணிய வைத்திருப்பதாக செய்திகள் வருகிறது. இவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோக்களை பார்த்தால் மிக கொடுமையாக இருக்கிறது. கையில் கேமரா கொண்டு செல்லும் பத்திரிக்கையாளர்களை எல்லாம் கையில் வெப்பன் கொண்டு போவதாக கோட் வேர்ட் சொல்லி ஹெலிகாப்டரிலிருந்து கொல்லும் காட்சி கொடூரம், தேவையில்லாமல் ஒருவன் கூட உயிரோடு போய்விடக்கூடாது என்பதில் குறியாய் இருந்து கடைசி நேர உயிர் ஊசலில் இருக்கும் நபரையும் கொன்று விடுவதும், உயிரற்ற உடல்களின் மேல் வண்டியை ஓட்டி சொல்வதும். போரில் இருக்கும் மனித மனங்களின் வக்கிரங்கள் தாண்டவமாடுகின்றன. விக்கிலீக்ஸ் வெளியிடும் விஷயங்களை பற்றி மிக தமிழில் தெளிவாக எழுதிவரும் சுடுதண்ணி எனும் பதிவரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார விளம்பரம்
உங்கள் கற்பனைகள் நிஜமானால் எப்படி இருக்கும்?. இந்த விளம்பரத்தை பாருங்கள். கற்பனைகள் விஷுவலாய். மாறும் அற்புதம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மீண்டும் இளையராஜாவை பற்றி வசை பாடியிருக்கிறார் சாரு. ஒரு வருஷம் முன்புதான் இளையராஜாவுக்கு இசையமைக்கவே தெரியாதென்று சொன்னவர்,,,,நந்தலாலாவை மிஷ்கினின் வீட்டில் வீடியோவில் பார்த்துவிட்டு, உலகதரத்தில் இசை அமைத்திருக்கிறார். இளையராஜா என்று எழுதி ஒரு வருடம் கூட ஆகவில்லை. இப்போது அதே படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் தவிர மற்றதெல்லாம் மொக்கை இசையாம். கடைசி இருபது நிமிடங்கள் உலக இசையமைக்க தெரிந்தவருக்கு படம் முழுக்க இசையமைக்க தெரியாதா..? இல்லை உலக அளவில் ஒரு சிறந்த இயக்குனராக சாருவால் புகழப்படும் மிஷ்கினுக்குத்தான் அவரிடமிருந்து நல்ல இசையை வாங்க முடியாதா..? இல்லை ஒரு வேளை சாருவின் இசை அறிவு தான் ஒரு வருடத்தில் முன்னேறி விட்டதா..?  ஜேசுதாஸ் பாடியதை கிண்டலடித்திருக்கும் சாருவுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கும் படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் கம்போஸ் செய்யப்பட்டு கடைசியில் மூன்றுபாடல்கள் மட்டுமே பயன்படுத்தப் பட்டது உலகத்தரத்தில் இருக்கும் படத்தில் மொக்கை ராமராஜன் பாடல் வேண்டாம் என்று மற்ற இரண்டு பாடல்களை எடுத்தது போல இதையும் எடிட் செய்து போட்டிருக்கலாமே..? நான் இதை பற்றி எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஏனென்றால் நீங்கள் எதை எதிர்பார்த்து இதை எழுதினீர்களோ? அது நடப்பதை நான் விரும்பாவிட்டாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. கிழே உள்ள் வரிகள் சாரு அவர்கள் எழுதியது.  அது அவருக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது. 
 //ஆனால் நம் வாழ்வில் அப்படி நாம் பார்ப்பது இல்லை.  நாமேதான் ஹீரோவாகவும், வில்லனாகவும், காமெடியெனாகவும், துரோகியாகவும், காதலனாகவும், சமயங்களில் மனநிலை பிறழ்ந்தவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.//
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஒரு வழியாய் விஜய் டிவியில் நாங்கள் கலந்து கொண்ட நந்தலாலாவை கடமையே என்று போட்டு விட்டார்கள் நிறைய கட் செய்துவிட்டார்கள். நானும் மணிஜியும் பேசியதை தவிர அகநாழிகை வாசு, கே.ஆர்.பி.செந்தில், பலாப்பட்டறை பேசியதை கட் செய்துவிட்டார்கள். எடுத்தது வேஸ்டாவல.
.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வாலியின் ஆயிரம் பாடல்களை தொகுத்து புத்தகமாய் வெளியிட்ட விழாவில் வாலி, எம்.எஸ்.வி, ரஜினி, கமல் என்று எல்லா பெருசுகளும் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே இருந்தார்கள். யார் யாரை பாராட்டினாலும் மாற்றி, மாற்றி கும்பிட்டுக் கொண்டு, கை கொடுத்துக் கொண்டு, ஒருவர் கையை ஒருவர் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டு ஒரே..ஒரே செண்டிப்பா.. ஆனால் ஒரு விஷயம். மேடையில் இருந்த எல்லாரும் எம்.எஸ்.வியை தவிர மற்றவர்கள் அனைவரும் சூர்யாவோடு போட்டிப் போட்டுக் கொண்டு இன்றளவிலும் யூத்துக்களின் மனம் கவர்ந்தவர்களாய் இருப்பது தான் சுவாரஸ்யம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார தத்துவம்
நான் எடுத்த முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது. ஆனால் எடுத்த முடிவை சரியாக்க முயலுவேன் – அலக்ஸாண்டர்.

அன்பு தான் உன் பலவீனம் என்றால், உலகில் நீ தான் பலசாலி- ஷேக்ஸ்பியர்

திரும்பப் பெற முடியாத விஷயங்கள்: 1) உடலை விட்டு உயிர் 2) பேசி விட்ட வார்த்தை 3) கடந்து விட்ட நாட்கள் 4)இழந்துவிட்ட நட்பு 5)கொடுத்துவிட்ட அன்பு
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார விளம்பரம்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார ப்ளாஷ்பேக்
இந்த பாடல் 1970களில் சூப்பர் ஹிட் சிங்கிள். பிற்காலத்தில் ஸ்மோக்கி என்றொரு பேண்டாக உருவாக்கி விட்ட பாடலாகவும் ஆனது.  கொஞ்சம் தேவாவின் அகிலா அகிலா ஞாபகம் வந்தால் இவர்கள் பொறுப்பல்ல.. :))
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார குறும்படம்
மீண்டும் கார்த்திக் சுப்பாராஜின் ஒரு பழைய குறும்படம். டச்சிங்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
விஜயகாந்த் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் விருதகிரி படத்தின் போஸ்டரில் ஒரு ஓரத்தில் விஜய்காந்த இயக்கத்தில் என்று இரண்டு கையை அகல விரித்து இயக்குனர் வியூ பார்ப்பதை போல கைவிரித்து வைத்திருப்பார். அதை பார்த்தால் திடீரென பேயை பார்த்தவர் அதிர்ந்து கை விரித்து பயப்படுவது போல இருக்கும். ஒரு வேளை சிம்பாலிக்காக சொல்லுறாரோ..?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
நம் பதிவர்களுக்கு அறிமுகமான டிஸ்கவரி புக் பேலஸின் இரண்டாம் ஆண்டு விழா சிறப்பாக நடைப்பெற்றது. கடையின் உரிமையாளர் நம் பதிவர்களுக்கு சிறப்பு நன்றியை உரித்தாக்கினார். லிங்குசாமி, நா.முத்துகுமார்,ஞானி, எஸ்.ரா, புஷ்பா தங்கதுரை, போன்ற பல எழுத்தாளர்கள் வந்திருந்திருந்து சிறப்பித்தார்கள். வழக்கமாய் புழுக்கமாய் இருக்கும் கடை இப்போது முழுவதும் ஏசி செய்யப்பட்டுவிட்டதால்.. நல்ல சுகானுபவம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அடல்ட் கார்னர்
ஒரு வெள்ளைக்காரன், ஒரு கருப்பன், ஒரு சைனீஸ் மூவரும் ஒரு பாரில் உட்கார்ந்திருக்க, அப்போது அங்கே வந்த ஒரு ஹாட்டான பெண் அவர்களிடம் பெட் கட்டினாள். தன்னை யார் உச்சஸ்தாயில் அலற வைக்கும் அளவுக்கு உறவு கொள்கிறார்களோ.. அவர்களுக்கு ஒரு பெரிய தொகையை பரிசாக சொல்ல, முதலில் வெள்ளைக்காரன் போய் வந்தான், பிறகு கருப்பன் போய் வந்தான் ஒன்றும் சத்தமேயில்லை. அடுத்ததாக சைனீஸ் போனதுமே உள்ளேயிருந்து ஒரு அலறலாய் வந்து கொண்டேயிருக்க, கையில் பணத்தோடு வெளியே வந்த சைனீஸிடம் எப்படிடா? என்று கேட்க.. நான் சைனீஸ் அதனால் எனக்கு பிடித்த ஹாட் சாஸை தடவிக் கொண்டு போய்விட்டேன் என்றான்.
************************************************************************************** 
கேபிள் சங்கர்
Post a Comment

31 comments:

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

Nice Parota as usual :)

செங்கோவி said...

அடடா..அண்ணனே டென்சன் ஆயிட்டாரே..அப்போ பின்னூட்டம் களை கட்டுமே..
--செங்கோவி
நானும் ஹாலிவுட் பாலாவும்

ஷண்முகா said...

//ஒரு வேளை சிம்பாளிக்காக சொல்லுறாரோ..? //

LOL...

waiting for review of that film

a said...

சாரு............
தன்னுடைய கட்டுரை (http://www.thangameen.com/ContentDetails.aspx?tid=125)ஒன்றின் பின்னோட்டதில் யெஸ்,ராவை பற்றி ஒருவர் உப்புக்கு சப்பாணி என்று குறிப்பிட்டுள்ளதற்க்கு ஏதாவது சட்ட நடவடிக்கை
எடுக்கலாமா என்று கேட்கிறார்...

ரவி என்பவரது பின்னோட்டம்...
----------
ரவி said...
சாருவிற்கு கூட்டம் வராது, குஷ்புவிற்கு கூட்டம் வரும்.ஒரு பக்கம் திமுக அரசை திட்ட வேண்டியது.இன்னொரு பக்கம் தன் நூல் விழாவிற்கு திமுகவில் இருப்ப்பவர்களில் முக்கியமானவர்கள்,
திமுக ஆதரவு எம்.எல்.ஏயைக் கூப்பிட்டு மேடையில் இடம் தருவது. இது என்ன அரசியல் என்று சாருவிடம் கேட்டால் லத்தின் அமெரிக்கா,கேரளாவில் என் செல்வாக்கு என்று எதையாவது பேசுவார். அசோகமித்திரன்,ஞானக்கூத்தன் போன்ற இலக்கியவாதிகள் அல்லது பிறதுறைகளில் உள்ள இலக்கிய உலக தொடர்பு கொண்ட டிராட்ஸ்கி மருது போன்றவர்களை தவிர்த்து விட்டு குஷ்புவையும்,ஆளும் கட்சி ஜால்ராக்க்கள்,மற்றும் ஒரு இயக்குனர்,
உப்புக்குசப்பாணியாக ஒரு எஸ்.ரா என்று நிகழ்ச்சி நடத்துபவர் எப்படிப்பட்டவர் என்ப்து எங்களுக்கும் தெரியும்
------------

இளையராஜா இசை இவருக்கு குப்பையாக தெரிவது போல், ஜேசுதாஸின் குரல் இவருக்கு மட்டமாக தெரிவது போல், இன்னொருவருக்கு யெஸ்.ரா உப்புக்கு சப்பாணியாக
தெரிகிறார். ஆனால் அதற்க்கு அந்த அயோக்கியனின்(?) மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேணுமாம்...
http://charuonline.com/blog/?p=1361

யெஸ்,ராவை பற்றி ஒருவர் உப்புக்கு சப்பாணி என்று குறிப்பிட்டுள்ளதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடு கிடையாது. யெஸ்,ரா பத்தோடு பதினொன்றாக அழைக்கப்பட்டுருக்கிறார் என்பதை குறிப்பிடுவதற்க்காக இந்த வார்த்தை பயன்படுத்த பட்டிருக்கிறதேயன்றி அவரை குறைத்து மதிப்பிட்டு அல்ல..
ஆனால் அதற்க்கு கருத்து ரீதியாக பதில் சொல்லாமல் சட்ட நடவடிக்கைன்னு சாரு பொங்குவது அபத்தமாக இருக்கிறது.

a said...

வாலியின் ஆயிரம் பாடல்களை தொகுத்து புத்தகமாய் வெளியிட்ட விழாவில் பார்த்தவை............
வைரமுத்து விழாவிலும் பாக்கலாம்...

Philosophy Prabhakaran said...

// ஒரு வழியாய் விஜய் டிவியில் நாங்கள் கலந்து கொண்ட நந்தலாலாவை கடமையே என்று போட்டு விட்டார்கள் //

யூடியூப் இணைப்பு இருக்கிறதா...

மாணவன் said...

வழக்கம்போலவே கொத்துபரோட்டா அருமை சார்,

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

பகிர்வுக்கு நன்றி

நிகழ்காலத்தில்... said...

எல்லோரையும் என்னை நோக்கித் திரும்பிப்பார்க்க ஒரே வழி..

காறித்துப்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான், மலரைக்கண்டால்கூட

மனநோயாளி...

யாரு ந்னு மட்டும் கேட்காதீங்க.. டென்சனாயிடுவேன்ன்....

Unknown said...

http://tamil.techsatish.net/file/tamil-cinema-5/

CS. Mohan Kumar said...

Matters konjam kammi. Busy???

Unknown said...

அருமை

பகிர்வுக்கு நன்றி

கத்தார் சீனு said...

விக்கிலீக்ஸ் காணொளி உறைய வைக்கிறது.....மனிதம் எங்கே???

இதே சாரு ஒரு வருடம் முன்னாடி நந்தலாலாவில் ராஜாவின் இசை அற்புதம்னு சொன்னாரு...விடுங்க பாசு....ராஜா, கமல் விஷயத்தில் சாருவை படிக்கவே கூடாது...

கொத்து சூப்பரு கேபிள்ஜி .....

pichaikaaran said...

சாப்பாட்டுகடை இடம்பெறாததற்கு வன்மையான கண்டனங்கள்

pichaikaaran said...

சாப்பாட்டுகடை இடம்பெறாததற்கு வன்மையான கண்டனங்கள்

pichaikaaran said...

ஒரு இனிய அறிவிப்பை எதிர்பார்த்து ஏமாந்தேன் :(

அருண் said...

குறும்படம் அருமை,இசையை ரசிக்க தெரிந்தவர்கள் ராஜா சாரின் இசையை ரசிக்காமல் இருக்க மாட்டார்கள்.
வழக்கம் போல கொத்து பரோட்டா காரம்.
-அருண்-

R.Gopi said...

ஷங்கர் ஜி

கொத்து பரோட்டா படு சூடும், சுவையுமாக இருந்தது....

//மீண்டுமொரு முறை ஐம்பதாயிரம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி பதினெட்டு லட்சம் நோக்கி பயணிக்க வைத்த சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி..//

முதலில் இதற்கு வாழ்த்துக்கள்....

//இந்த வார விளம்பரம்
நிஜமாகவே உங்கள் கற்பனைகள் நிஜமானால் எப்படி இருக்கும்?. இந்த விளம்பரத்தை பாருங்கள். கற்பனைகள் விஷுவலாய். மாறும் அற்புதம்//

விவரிக்க வார்த்தையில்லை... மிக மிக அற்புதமான விஷுவல் ட்ரீட் தான்.. எதிர்காலத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்...

நந்தலாலா விமர்சனத்தில் சாரு இளையராஜா பற்றி சொன்னது பற்றி - ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல தல.. அவர் மாற்றி மாற்றி பேசுவதில் மிகவும் வல்லவர்..

//மேடையில் இருந்த எல்லாரும் எம்.எஸ்.வியை தவிர மற்றவர்கள் அனைவரும் சூர்யாவோடு போட்டிப் போட்டுக் கொண்டு இன்றளவிலும் யூத்துக்களின் மனம் கவர்ந்தவர்களாய் இருப்பது தான் சுவாரஸ்யம்.//

வாலியின் ஆயிரம் பாடல்கள் விழாவை பற்றிய செய்தியில் உங்களின் இந்த வரிகளை ரசித்தேன்.. ஆனால், அது உண்மையே!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

present sir

மாதேவி said...

அருமை. கற்பனைகள் நிஜமானால் :)

S. Senthil kumar said...

விஜய் டீவி நிகழ்ச்சியில் என்னை மிகவும் கவரந்தது உங்கள் பேச்சு தான். ஆனால் இன்னும் நிறைய நேரம் உங்களை பேச விட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. வாழ்த்துக்கள். முதல் முறையாக உங்களை ரியல் ஆக ஒரு டீவி நிகழ்ச்சியில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் நந்தலாலா விமர்சனம் அருமை. அந்த கேள்வி பதில் பதிவு (பழையது) நடுநிலையாக இருந்தது.

Balasubramaniam A.G. said...

U have just put down what in my mind abt Charu - Ilayaraja controversy. He has written Ilayaraja could not understand good cinema and give music. He has given link for Kikujiro's music in his blog. I thnk he want Ilayaraja to copy the music from Kikujiro just like his friend Myskin did with the film.

ஜி.ராஜ்மோகன் said...

சாருவுக்கு யாரையாவது திட்டலைனா தூக்கம் வராது போல இருக்கு .உலகமே இளையராஜா இசையை
ஏற்றுக்கொள்ளும் போது இவர் திட்டுவதால் மட்டும் ஒன்றும் ஆகபோவதில்லை. இது சூரியனை
பார்த்து எச்சில் துப்பும் செயல். மற்றபடி வழக்கம் போல் கொத்துபரோட்டா சூப்பர் .

Sukumar said...

கொத்து.. கெத்து பாஸ்... நிஜமாகவே சுடுதண்ணி பின்னுகிறார்... பரபரப்பான தொடர்...

'பரிவை' சே.குமார் said...

வழக்கம்போலவே கொத்துபரோட்டா அருமை.

சாருவுக்கு யாரையாவது திட்டலைனா தூக்கம் வராது போல இருக்கு...

சாஷீ said...

கொத்து பரோட்டா அருமை,, கலக்குங்க ,தொலைபேசியில் உங்களோடு பேசியது மகிழ்ச்சி ..சார்லஸ் குவைத்

KD.Ansari said...

வழக்கம் போல் பரோட்டாவை கொத்தி எடுத்துடீங்க , அருமை .
தொடர்ந்து படித்து வந்த நான் முதல் முறையாக பின்னூட்டமிடுகின்றேன்
- அன்சாரி, துபாய்

jayaramprakash said...

//ஆனால் நம் வாழ்வில் அப்படி நாம் பார்ப்பது இல்லை. நாமேதான் ஹீரோவாகவும், வில்லனாகவும், காமெடியெனாகவும், துரோகியாகவும், காதலனாகவும், சமயங்களில் மனநிலை பிறழ்ந்தவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.//
பதிவுலகை தாண்டியும் அந்த லூசு வை பற்றி அனைவரும் அறிந்துள்ளனர் ஜி.

RK நண்பன்.. said...

///ஒரு வழியாய் விஜய் டிவியில் நாங்கள் கலந்து கொண்ட நந்தலாலாவை கடமையே என்று போட்டு விட்டார்கள் நிறைய கட் செய்துவிட்டார்கள். நானும் மணிஜியும் பேசியதை தவிர அகநாழிகை வாசு, கே.ஆர்.பி.செந்தில், பலாப்பட்டறை பேசியதை கட் செய்துவிட்டார்கள். எடுத்தது வேஸ்டாவல.///

anna onga speach super... namma oor karanukku jappan padam ulaga padam, and avanukku namma oor padam ulaga padam... super..

but i really dis appointed that KRP annan speach missing...


good attempt.. & happy to see u in Vijay TV..

Keep Rocking

shortfilmindia.com said...

#கனாகாதலன்
நன்றி

2செங்கோவ்
நன்றி

@ஷண்முகா
வருது..

காரணம் ஆயிரம்™ said...

Batelco Infinity மிக நன்றாகயிருந்தது! அதன் Making இன்னும் அசத்தலாகயிருக்கும் இங்கே பார்க்கவும் -

http://www.youtube.com/watch?v=DEluA6LFw6k

அன்புடன்
கார்த்திகேயன்
காரணம் ஆயிரம்
http://kaaranam1000.blogspot.com

சுடுதண்ணி said...

தங்கள் வார்த்தைகளுக்கும், சுட்டிக்கும் மிக்க நன்றி :)