Thottal Thodarum

Dec 25, 2010

புத்தகக் கொண்டாட்டம்

ஆம் கொண்டாட்டம் தான். டிசம்பர் வந்து விட்டால் எப்படி சங்கீத சீசன் ஆரம்பித்துவிடுமோ அது போல புத்தக கண்காட்சியையொட்டி புதிய, பழைய, சமகால எழுத்தாளர்களின் புத்தகங்களும் வெளியாக ஆரம்பித்துவிடும். அவ்வகையில் வலைப்பதிவர்களின் அடுத்த கட்ட வளர்ச்சியாக அவர்களின் எழுத்து புத்தக வடிவில்  அதிகம் வெளியாவதும் இம்மாதத்தில் தான். அவ்வகையில் இம்மாதம் நம் சக பதிவர்களின் நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
சுரேகா
மிக இனிமையாக பழக்கக்கூடிய நண்பர். பல விஷயங்கள் அறிந்த சுய புத்திக்காரர். சந்தித்த மறு நிமிட மனதில் பச்சக்கென ஒட்டிக் கொள்ளும் புரிந்துணர்வு கொண்டவர். சுவாரஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர். இவரின் முதல் நூலான “நீங்கதான் சாவி” என்கிற தன்னம்பிக்கை நூலை நாகரத்னா பதிப்பக உரிமையாளரும், பதிவருமாகிய குகன் வெளியிடுகிறார். அனைவரும் வந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன். இடம்: டிஸ்கவரி புக் பேலஸ் நேரம் : 4.30 மணி, தேதி:25.12.10
For BLOGநர்சிம்
இவரை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பிரபல பதிவர், ஏற்கனவே அய்யனார் கம்மா எனும் சிறுகதை தொகுதி வெளியிட்டவர். தமிழின் பால் ஈடுபாடு கொண்டவர். நல்ல சிறுகதைகளால் அறிமுகமான இவரின் ஆர்வம் கொஞ்சம், கொஞ்சமாய் கவிதைகளின் பால் ஈர்க்கப்பட்டு ஒரு கவிதை புத்தகமே வெளியிடும் அளவிற்கு எழுத ஆரம்பித்துவிட்டவர். தேதி: 26.12.10, இடம்: எல்.எல்.ஏ.பில்டிங், அண்ணாசாலை மாலை:6.00 மணி
theekadal_final.jpg 1அகநாழிகை வாசு
என் இனிய நண்பர், பதிவர், நிறைய இலக்கிய அனுபவம் உள்ளவர். பதிப்பாளர், எழுத்தாளர், கவிஞர், வழக்கறிஞர், வாழ்க்கையை கொண்டாடுபவர், அகநாழிகை சிற்றிதழ் ஆசிரியர் என பன்முகம் கொண்டவர். இவரது முதல் கவிதை தொகுப்பு 26.12.10, எல்.எல்.ஏ.பில்டிங், அண்ணாசாலையில் மாலை ஆறு மணிக்கு உயிர்மை  வெளியாகிறது.
நிலா ரசிகன்
ஏற்கனவே இரண்டு புத்தகங்களுக்கு சொந்தக்காரர். மிகவும் இயல்பாய் பழக்கக்கூடிய நண்பர். தான் மட்டுமில்லாமல் தம்மை சுற்றியுள்ளவர்களை தன்னுடன் அழைத்துச் சொல்பவர். இவரது கவிதை நூலும் 26.12.10 எல்.எல்.ஏ பில்டிங், அண்ணாசாலையில் மாலை ஆறு மணிக்கு உயிர்மை வெளியிடுகிறது.
யாத்ராவின் மயிரு கவிதை தொகுப்பை அகநாழிகை பதிப்பகம் வெளியிடுகிறது 29ஆம் தேதியன்று மாலை 6 மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில்..
yathra_invitation எனவே பதிவர்கள், வாசக நண்பர்கள் அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்பிக்க நண்பர்கள் சார்பில் அழைக்கிறேன்.

26ஆம் தேதியன்று ஈரோட்டில் நடக்கவிருக்கும் சங்கமம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
    

டிஸ்கி: நாளையும், நாளை மறுநாளும் கும்பகோணம், தஞ்சாவூரில் இருப்பேன். பதிவுலக நண்பர்கள், வாசகர்களை சந்திக்க விருப்பம். தொடர்பு கொள்ள: 9840332666
கேபிள் சங்கர்
Post a Comment

12 comments:

Ganesan said...

வாழ்த்துக்கள் அனைத்து பதிவ எழுத்தாளருக்கும்..

Philosophy Prabhakaran said...

வாழ்த்துக்கள்... நான் புத்தக் காட்சி செய்திக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்...

குகன் said...

விழாவன்று பதிவுப் போட்டதிற்கு நன்றி !!

இன்று, கேபிளின் சிறுகதை நூல் விமர்சணமும் டிஸ்கவரி புக் பேலஸில் நடக்கவுள்ளது.

அனைவரும் வருக !!!

R. Gopi said...

பகிர்விற்கு நன்றி

அருண் said...

புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்,பகிர்விற்கு நன்றி,மேற்கூறிய புத்தக விமர்சனங்களுக்காக காத்திருக்கிறேன்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Shanmugam Rajamanickam said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

மயிறு புத்தகம் நல்ல இருக்குமா?

பா.ராஜாராம் said...

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

பகிர்விற்கு நன்றி ஜி!

க.பாலாசி said...

புத்தகம் வெளியிடும் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..

தல தளபதி said...

கேபிள் சங்கரும் தல தளபதியும்
http://thalathalapathi.blogspot.com/2010/12/blog-post_24.html

தல தளபதி said...

கேபிள் சங்கரும் தல தளபதியும்

'பரிவை' சே.குமார் said...

புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்.
பகிர்விற்கு நன்றி.