Thottal Thodarum

May 8, 2012

சாப்பாட்டுக்கடை - சேலம் ஆர்.ஆர்.பிரியாணி

முன்பெல்லாம் பிரியாணி என்பது மிலிட்டரி ஓட்டலில் மட்டுமே கிடைக்கும் ஒரு விஷயமாய் இருந்தது சமீப காலங்களில் தெருவுக்கு தெரு ஒரு பிரியாணிகடைகள் ஆரம்பிக்கப்பட்டு அதன் மேல் இருக்கும் ஓரு ஈர்ப்பையே குறைத்துவிட்டதோ என்று ஒரு புறம் நினைத்தாலும், அந்தக்கடையை தாண்டும் போது வரும் மணம் நம்மை பல சமயங்களில் உள்ளிழுத்து விடுவது தான் நிஜம். அப்படி போய் சாப்பிடும் பிரியாணி பெரும்பாலான நேரங்களில் வாசனையைத் தவிர சிறப்பாக ஏதுமில்லாமல் போகும் போது வெறுப்பாகிவிடும்.



அப்படி ஒரு நாள் வடபழனி கற்பகம் ஸ்டூடியோவை தாண்டும் போது ஒரு கடையிலிருந்து அருமையான மசாலா வாசனை தூக்க, பார்த்தால் சேலம் ஆர்.ஆர் பிரியாணி. ஏற்கனவே தாம்பரத்தில் இவர்கள் பிரபலம் என்பதாலும், கூட வந்த நண்பர் பிரியாணிக்கு நான் கேரண்டி என்று அவர் வயிற்றின் மேல் அடித்து சொன்னதாலும் சாப்பிட முடிவு செய்தோம். சிக்கன், மட்டன், முட்டை பிரியாணி வகைகள், மற்றும் சிக்கன் 65 போன்ற அயிட்டங்களை தருகிறார்கள். 
நல்ல பிரியாணி அரிசியோடு, மசாலாவில் நன்றாக ஊறிய சிக்கன், மட்டன் துண்டுகளோடு,  எண்ணெய் அதிகமில்லாமல், புளிககாத கெட்டி தயிரில் வெங்காயமும், கத்திரிக்காய் சட்னியுமாய் ப்ளேட் நிறைய தருகிறார்கள். அருமையான சுவை. லேசாய் கொஞ்சம் காரம் தூக்கலாயிருக்கிறது. மற்றபடி குறையென்று ஏதும் சொல்ல முடியவில்லை. கடையில் பிரியாணி அடிப்பவர் முட்டையை தூக்கிப் போட்டு ப்ளேட்டில் வைக்கும் அழகை ரசிப்பதற்காகவே மீண்டும் ஒரு முறை செல்ல வேண்டும்.

சேலம் R.R. பிரியாணி உணவகம்
31, A, ஆற்காடு ரோடு, சாலிகிராமம், சென்னை
9443510112
கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

Ba La said...

ஆமாம்- சிக்கன், மட்டன் பிரியாணி - குறை சொல்ல முடியாது

பறகா

Anonymous said...

You shouldn't say briyani rice. It is basmati rice.

Jaleela Kamal said...

நல்ல பகிர்வு